Friday, November 17, 2023
இலங்கை வந்துள்ள இந்திய நிதி அமைச்சர்
இலங்கை வந்துள்ள இந்திய நிதி அமைச்சர் திருகோணமலை ஆலயத்தில் வழிபாடு செய்துள்ளார்.
ஆனால் இந்த இந்து ஆலயம் கொகன்ன விகாரை மேல் உள்ளது என்று சிங்களம் உரிமை கோரி வருவதை நிதி அமைச்சர் அறிவாரா?
இதே திருமலை மண்ணில் உள்ள நீலியம்மன் சைவ கோவில் முழுமையாக சிதைக்கப்பட்டு அங்கு 'பாசன பப்பாத ராஜமஹா' என்கின்ற விகாரையை உருவாக்கி இருக்கின்றார்கள் என்பதை நிதி அமைச்சர் அறிவாரா?
அது மட்டுமல்ல, குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் அழிக்கப்பட்டு அதே இடத்தில "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் விகாரை நிர்மாணித்து இருக்கின்றார்கள் என்பதை நிதி அமைச்சர் அறிவாரா?
இதே திருமலையில் அரிசிமலையில் தமிழ் நிலங்களில் 'ஆசிரி கந்த புராண ராஜமஹா விகாரை' கட்டப்பட்டு இருப்பதை நிதி அமைச்சர் அறிவாரா?
இதே திருமலை மண்ணில் தென்னமரவடி கந்தசாமி மலை வழிபாடு தடை செய்யப்பட்டு அங்கு பௌத்த கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பதை நிதி அமைச்சர் அறிவாரா?
இதே திருமலை மண்ணில் 64ம் கட்டை (பச்சனூர் மலை) விவசாய நிலங்கள் அபகரிக்கப்பட்டு பௌத்த விகாரை கட்டுப்பட்டு வருகின்றது என்பதையாவது நிதி அமைச்சர் அறிவாரா?
பெரியகுளம் பகுதி தமிழர் நிலங்களில் பொரலுகந்த ராஜமகா விகாரை கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன என்பதை நிதி அமைச்சர் அறிவாரா?
இதே திருமலை மண்ணில் ராஜவந்தான் மலை கோவில் விக்கிரகங்கள் தோண்டியெறிப்பட்டு அங்கு விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது என்பதை நிதி அமைச்சர் அறிவாரா?
தமிழர் நிலமான திருகோணமலையில் 74 ற்கு மேற்பட்ட பிரதேசங்களை பௌத்த மதத்திற்குரிய தொல்லியல் இடங்களாக சிங்கள அரசு அடையப்படுத்தி இருக்கிறது.
திருக்கோணேஸ்வரம் கோவில் சூழல் முழுமையாக சிங்கள மயப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இங்கு வியாபாரம் செய்வதற்காக இரத்தினபுரியிலிருந்து சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கின்றார்கள்
கன்னியா , குச்சவெளி , கும்புறுப்பிட்டி , சாம்பல்தீவு , சம்பூர் மத்தளமலை, கல்லடி மலைநீலியம்மன், இலங்கைத்துறை முகத்துவாரம் என பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புகளால் திருகோணமலை மாவட்டம் சீரழிந்து வருகின்றது
இந்திய நிதி அமைச்சர் ஒரு இந்து மட்டுமல்ல தமிழரும் கூட. அவர் திருமலை மாவட்டத்தில் இந்து கோயில்கள் அழிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டப்படுவது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
ஆம். நடவடிக்கை எடுத்துள்ளார். திருமலையில் இந்திய வங்கி ஒன்றை திறந்து வைத்துள்ளார்.
No comments:
Post a Comment