"போராட்டம் மகிழ்சிகரமானது" என்றார் காரல் மார்க்ஸ்.
ஆம். அதனால்தான் போராளிகள் எப்போதும் அழகானவர்களாக இருக்கிறார்கள்.
சரி , அவர்களை போராட வைப்பது எது?
"உணர்ச்சி"யாக இருந்தால் சிறிது காலத்தில் மறைந்துவிடும்
"உணர்வு" தான் அவர்களை இறக்கும்வரை போராட வைக்கிறது.
இரண்டு கை உள்ள சிலர் எதிரியை கைகூப்பி வணங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கையை இழந்த பின்னும் இவர்களால் எப்படி போராட முடிகிறது?
இவர்கள் கைகளை இழந்தார்கள். ஆனால் தன்னம்பிக்கையை இழக்கவில்லை.
அதனால்தான் இரண்டு கால் உள்ள சிலரே அடிமையாக வீழ்ந்து கிடக்கையில் ஒரு காலை இழந்த பின்னும் இவர்களால் மீண்டும் எழுந்து நிற்க முடிகிறது
நாம்,
உயிர்களை இழந்தோம்
உடமைகளை இழந்தோம்
ஆனால் உணர்வுகளை இழக்கவில்லை.
நாம் உணர்வுகளை இழக்கவில்லை என்ற இந்த செய்திதான் எம் எதிரிகளை அச்சம் கொள்ள வைக்கிறது.
No comments:
Post a Comment