Monday, January 22, 2024
சிறு பொறி பெரு நெருப்பாக பற்றி எரியுமா?
சிறு பொறி பெரு நெருப்பாக பற்றி எரியுமா?
திருமலையில் இருந்து இந்தியா விரட்டியடிக்கப்படுமா?
திருகோண மலையில் மக்களின் நிலம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களும் இணைந்து போராடியுள்ளனர். போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சாவின் காலத்தில் சம்பூர் பிரதேசத்தில் தமிழர் நிலம் 500 ஏக்கர் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.
அப்போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் திருமலை எம்பி சம்பந்தர் ஐயாவிடம் சென்று முறையிட்டனர்.
அதற்கு “நிலத்தை கேட்டால் அப்புறம் இந்தியா தீர்வு பெற்று தராது. எனவே நான் ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறிவிட்டார்.
இதனால் அந்த மக்கள் மகிந்த அரசின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பு சென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தமக்குரிய நீதியைப் பெற்றனர்.
இப்போது மீண்டும் திருமலை துறைமுகம் உட்பட மக்களின் நிலங்கள் மற்றும் வளங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளன.
திருமலையில் மட்டுமல்ல மன்னாரிலும் இந்திய முதலாளி அதானியின் கம்பனிக்காக தமிழர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் நிலம் பலவந்தமாக இந்தியாவிற்கு வழங்கப்படுவதற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டங்கள் உருவாகும் நிலை தோன்றியுள்ளது.
ஆனால் இந்திய அரசு இதை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்iலை.
எனவே மக்கள் போராட்டங்களை குழப்புவதற்காக மீண்டும் குண்டுகள் வெடிக்க வைக்கும்.
தேவையானால் ஒரு பாரிய இனக் கலவரத்தையும் உருவாக்க இந்தியா தயங்காது.
No comments:
Post a Comment