கரவெட்டியில் இருந்து ஒருவர் தமிழரசுக்கட்சி தலைவர் பதவிக்கு சுமந்திரனை ஆதரிக்கும்படி கேட்கிறார்.
திருகோணமலையில் இருந்து ஒருவர் தமிழரசுக்கட்சி தலைவர் பதவிக்கு சிறீதரனை ஆதரிக்கும்படி கேட்கிறார்.
இவ்வாறு கேட்கும் அனைவருக்குமான எனது பதில் இதுதான்.
(1) நான் தமிழரசுக்கட்சி அங்கத்தவன் இல்லை.
(2) லண்டனில் நான் எந்த அமைப்பிலோ அல்லது பதவியிலோ இல்லை. நான் ஒரு சாதாரணமானவன்.
(3) தேர்தல் பாதையில் செல்லும் எந்தக் கட்சியையும் நான் ஆதரிப்பதில்லை. ஏனெனில் தேர்தல் பாதையில் தமிழின விடுதலை அடைய முடியாது என்ற கருத்தை கொண்டிருப்பவன் நான்.
( இரண்டு முறை எம்.பி பதவி என்னை நாடி வந்தபோதும் தேர்தல் பாதையில் நம்பிக்கையற்றபடியால்தான் அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை)
No comments:
Post a Comment