Monday, January 22, 2024
மன்னராட்சியை விட மக்களாட்சி சிறந்தது.
மன்னராட்சியை விட மக்களாட்சி சிறந்தது.
மக்களாட்சியில் இருந்துகொண்டு மன்னராட்சியை புகழ்வது தவறுதான்.
ஆனால் அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு இனத்தை எழுச்சி பெற வைப்பதற்கு ஒரு காலத்தில் நாம் நம்மை ஆண்டோம் எனக் காட்டுவதற்கு மன்னராட்சியை உதாரணம் கூறுவது தவிர்க்க முடியாதது.
ஜப்பான் ஆதிக்கத்தின் கீழ் அடிமையாக கிடந்த சீன மக்களை எழுச்சி பெற வைப்பதற்கு மாவோ சீன மன்னர்களின் ஆட்சிக்காலங்களை எடுத்துக் கூறியுள்ளார்.
அதுவும் மாவோ சரித்திர ஆசிரியர் என்பதால் புகழ் பெற்ற மன்னர் ஆட்சிகளை எடுத்துக்கூறி சீன மக்களை புரட்சிக்கு திரட்டினார்.
ஆனால் இந்தியாவில் மாவோயிசத்தை பின்பற்றுவதாக கூறும் கம்யுனிஸ்டுகள் இமயமலை மண் திட்டு என்றும் அதில் கல் எடுத்து சிலை வடித்தான் தமிழ் மன்னன் என்பது பொய் என்று கூறுகின்றனர்.
அதுவும் இன்னொருவர் இந்தோனிசியாவில் “சோழர்” என்பது கொள்ளையர் என்று அர்த்தம் என்று கூறுகின்றார்.
இவர்கள் மன்னராட்சியை இகழ்வதற்காக இதனை கூறவில்லை.
மாறாக தமிழ் மக்கள் எழுச்சி பெறாமல் தொடர்ந்தும் அடிமையாகவே கிடக்க வேண்டும் என்பதற்காகவே கூறுகின்றனர்.
அதனால்தான் ஆண்ட இனம் மீண்டும் ஆள நினைப்பதில் தவறு என்ன என்று கேட்டால் பேண்ட இனம் மீண்டும் பேள நினைக்கிறது என திமிராக கிண்டல் செய்கின்றனர்.
No comments:
Post a Comment