Tuesday, January 30, 2024
சிலர் முருகன் ஒரு இந்துக்கடவுள்
சிலர் முருகன் ஒரு இந்துக்கடவுள் எனக்கூறி தைப்பூசம் கொண்டாடுகின்றனர்.
இன்னும் சிலர் முருகன் ஒரு தமிழன். அவன் எம் முப்பாட்டன் என்றுகூறி தைப்பூசம் கொண்டாடுகின்றனர்.
முருகன் ஒரு இந்து கடவுள் என்றால் வட இந்தியாவில் ஏன் இந்துக்களால் முருகன் கொண்டாடப்படுவதில்லை?
வள்ளி இலங்கையில் கதிர்காமத்தில் வாழ்ந்தவள் என்றும் அங்குதான் முருகன் வள்ளியை திருமணம் செய்தார் என்றும் ஈழத்தில் கூறப்படுகிறது.
ராமாயணத்தில் சீதையை மீட்க ராமர் பாலம் கட்டினார் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் வள்ளியை மணம் புரிய முருகன் எப்படி இலங்கைக்கு வந்தார் என்று ஏதாவது கதை இருக்கிறதா?
ஒரு சந்தேகத்தில்தான் கேட்கிறேன். முருக பக்தர்களின் மனதை புண்படுத்துவதாக நினைக்க வேண்டாம்.
முருகன் முப்பாட்டன் எனக் கூறுவோர் அந்த முப்பாட்டனிடம் கற்றுக்கொள்ள ஒரு விடயம் இருக்கிறது.
ஆம், முருகன் ஆயுதம் ஏந்தியே எதிரியை அழித்தார். வன்முறை மூலமே தீர்வு கண்டார். தேர்தல் பாதையில் சென்று அல்ல.
No comments:
Post a Comment