Monday, January 22, 2024
மிகவும் சிறிய நாடான மாலைதீவு
மிகவும் சிறிய நாடான மாலைதீவு தன் நாட்டில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
கடந்த 35 வருடங்களாக சுமார் 77 இந்திய ராணுவத்தினர் மாலைதீவில் உள்ளனர்.
ஆனால் இதே காலப்பகுதியில் ஈழத்திற்கு வந்த ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தினர் சுமார் இரண்டு வருடத்தில் வெளியேற்றப்பட்டனர்.
எந்தவொரு தேசிய இனத்தையும் அதன் சொந்த மண்ணில் எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது.
எனவே இந்திய ராணுவமும் தோல்வியுற்று ஈழத்தில் இருந்து வெளியேறும் என்பது எதிர்பார்க்கப்பட்ட முடிவுதான்.
ஆனால் சுமார் 600 போராளிகள் ஒரு லடசத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்துடன் மோதுவது என்று எடுத்த அந்த முடிவுதான் வரலாற்று அதிசயம்.
அந்த அற்புத முடிவை எடுத்தவர்கள் உலகிற்கு தெரிவித்தது இதுதான்,
எதிரி எவ்வளவு பெரியது என்பது முக்கியம் இல்லை. எதிர்க்கும் திறன் எவ்வளவு பெரிது என்பதே முக்கியம்.
No comments:
Post a Comment