உலகில் மரணித்த போராளிகள் எல்லாம் வேதனைகளை அனுபவித்து மடிந்தவர்களே.
அவர்கள் அனுபவித்த வேதனைக்கு சற்றும்குறையாத வேதனையை அனுபவிப்பவர்கள் அவர்களைப் பெற்ற தாய்மார்கள்.
ஆனால் மரணித்த போராளிகளை தியாகிகள் என்று நினைவுகூறும் வரலாறு அத் தாய்மார்களை அப்படி நினைவுகூர்வதில்லை.
தாயின் கையால் ஒரு கவளம் சோறு தின்ன வேண்டும் என்றே சாந்தன் விரும்பினார்.
சாந்தனின் அந்த கடைசி விருப்பத்தை வாய்க்கரிசி போட்டு நாளை நிறைவேற்றப்போகிறார் தாய்.
33 வருடமாக தன் மகனைக் காண காத்திருக்கும் தாய் மகனின் உயிரற்ற உடலைக் காண நேருவது மிகப் பெரிய துயரம்.
அக் கொடுங் துயரத்தை அனுபவிக்கும் இத் தாயை நாம் என்ன சொல்லி தேற்றுவது?
No comments:
Post a Comment