Tuesday, April 30, 2024
ஒரு சர்வாதிகார நாட்டில்
ஒரு சர்வாதிகார நாட்டில் இருவர் பூங்கா ஒன்றில் அமர்ந்திருந்தார்களாம்.
அப்போது ஒருவர் பெருமூச்சு விட்டாராம். அருகில் இருந்த மற்றவர் உடனே நீண்டதொரு பெருமூச்சு விட்டாராம்.
உடனே இருவரையும் பொலிஸ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டதாம்.
இருவரும் அரசுக்கு எதிராக அரசியல் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டதாம்.
இது ஒரு சர்வாதிகார நாட்டின் கொடுமையைக் குறிக்கும் ஜோக் தான். ஆனால் இது இப்ப உண்மையில் இலங்கையில் நடக்கிறது.
சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் பெண் போராளி ஒருவர் “ முகநூலில் முன்புபோல் எழுத முடியவில்லை. புலனாய்வாளர்கள் கண்காணிக்கின்றனர்” என தெரிவித்திருந்தார்.
அடுத்து இலக்கியவாதி ஒருவர் நூல் வெளியீடு ஒன்றை செய்தமைக்காக அழைத்து விசாரிக்கப்பட்டிருந்தார்.
இதைவிட முன்னாள் போராளி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு அவர் மீண்டும் புலிகள் இயக்கத்தை கட்ட முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எல்லாவற்றையும்விட தமிழ் மக்கள் இறந்த தம் உறவுகளை நினைவுகூர இனி அனுமதிக்கப்போவதில்லை என ராணுவ தளபதி மிரட்டியுள்ளார்.
தேர்தல் வர இருக்கின்ற இந்நிலையில் அதுபற்றி கவலைப்படாமல் சிங்கள அரசு அடக்குமுறையை ஏவி விடுகின்றது.
இதற்குரிய பதிலை தமிழ் மக்கள் தமக்கே உரிய பாணியில் நிச்சயம் தெரிவிப்பார்கள்.
ஆம். எமது விடுதலைக்காக நாம் எதையும் சந்திப்போம் என்பதை எம் எதிரிக்கு புரிய வைப்போம்.
No comments:
Post a Comment