Saturday, May 25, 2024
இலங்கையில் சிங்களவர்
இலங்கையில் சிங்களவர் ஒன்றரைக்கோடி. ஆனால் உலகளவில் தமிழர் எட்டரைக் கோடி. இருந்தும் தமிழரைக் கொல்லும் தைரியம் எப்படி சிங்கள அரசுக்கு வந்தது?
கைக்கெட்டும் தூரத்தில் எட்டுகோடி தமிழர் இருக்கையில் ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொல்லும் தைரியம் மகிந்த ராஜபக்சாவுக்கு எப்படி வந்தது?
அதுவும் 1989ல் அறுபதாயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டமைக்கு ஜ.நா சென்று நீதி கோரியவர் இந்த மகிந்த ராஜபக்சா.
அதனால் அப்பாவி மக்களை கொன்றால் ஜ.நா வில் பதில் சொல்ல வேண்டி வரும் என்று தெரிந்தும் எப்படி அவர் தைரியமாக தமிழ் மக்களை கொன்றார்?
இந்த கேள்விகளுக்கான பதில் தவிர்க்க முடியாமல் அன்றைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியையே சென்றடைகிறது.
பங்களாதேஷ் பிரச்சனையின் போது மேற்கு வங்க முதல்வராக இருந்தவர்,
(1)மாநில அரசுக்கு அடுத்த நாட்டு பிரச்சனையில் தலையிட உரிமை இல்லை என்று கூறவில்லை.
(2) போர் நிறுத்தம் கோரி கடற்கரையில் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கவில்லை.
(3) தன் பிள்ளைகளுக்காக டில்லி சென்று மந்திரி பதவி கேட்கவில்லை.
அவர் காங்கிரஸ் கட்சிக்காரர்தான். இருந்தும் பிரதமர் இந்திராகாந்தியைப் பார்த்து தைரியமாக “ இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் இல்லையேல் நான் என் பொலிசை அனுப்புவேன்” என்றார்.
ஆனால் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியோ தன் பொலிசை அனுப்பி
(1) ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்தவர்களை காதல் தோல்வியில் இறந்தவர்கள் என கூற வைத்தார்.
(2) போராடிய மாணவர்களை கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு அடக்கினார்.
(3) அதையும் மீறி போராடியவர்களை சிறையில் அடைத்தார்.
எல்லாவற்றுக்கும் மேலாக தன் மகளை அனுப்பி ரத்தம் தோய்ந்த மகிந்த ராஜபக்சாவின் கைகளை குலுக்கி பரிசில் பெற வைத்தார்.
அதனால்தான் கலைஞர் கருணாநிதியின் ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாதிருந்திருந்தால் தங்களால் போரை வென்றிருக்க முடியாது என்று கோத்தபாய ராஜபக்சா கூறினார்.
No comments:
Post a Comment