Saturday, May 25, 2024
புலிகள் மீதான தடைக்கு காரணமாக
புலிகள் மீதான தடைக்கு காரணமாக வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவு ஈழத் தமிழர் இந்திய அரசு மீது வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கூறப்பட்டுள்ளது.
யார் பிரச்சாரம் செய்தது? என்ன வெறுப்பு பிரச்சாரம் செய்தது? என்பன பற்றிய விபரம் தெரியவில்லை. (யாரிடமாவது இருந்தால் தயவு செய்து எனக்கு அறிய தாருங்கள்.)
2019ல் தடை செய்யபட்டபோதும் இதே காரணம் கூறப்பட்டது. அப்போது எனது முகநூல் பதிவு ஒன்றும் தடைக்கு காரணமாக உள்ளடக்கப்பட்டிருந்தது.
எனது முகநூல் பதிவை அதுவும் ஒரு கற்பனை உரையாடல் பதிவை தடைக்கான காரணங்களில் ஒன்றாக சேர்க்கப்;பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.
தாணுவுடன் ஒரு கற்பனை உரையாடல் பதிவு அது. அதை நான் 2012 முதல் ஒவ்வொரு ஆண்டும் என் முகநூலில் பதிவு செய்து வருகிறேன்.
ஆனாலும் அப் பதிவை 2019ல் தடைக்கான காரணங்களில் ஒன்றாக ஏன் சேர்க்கப்பட்டது என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை.
அப் பதிவை கீழே தந்துள்ளேன். யாராவது படித்து அதில் என்ன தவறு இருக்கின்றது என்று எனக்கு புரிய வையுங்கள் பிளீஸ்.
நான் என் சொந்தப் பெயரில் சொந்த முகத்துடன் என் கருத்துகளை எழுதி வருகின்றேன்.
நான் எழுதுவதில் ஏதும் தவறு இருந்தால் தாராளமாக என்மீது வழக்கு போட்டு சிறையில் அடைக்கலாம்.
கடந்த வருடம் இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க டிவிட்டர் நிர்வாகம் எனது அக்கவுண்டை இந்தியாவில் தடை செய்துள்ளது.
நான் ஒரு சாதாரண தனிநபர். என் கருத்துகளை கண்டு இந்திய அரசு ஏன் அச்சம் கொள்கிறது?
No comments:
Post a Comment