வளர்ந்த மரத்தை பாதியில் தறித்து வீழ்த்திவிட்டு அது பட்டுவிட்டது என்று நினைத்திருப்பர்.
ஆனால் அதன் ஆழமான வேர்களோ தக்க தருணத்திற்காக காத்து கிடக்கும்.
சிறுதுளி ஈரம் கண்டவுடன் துளிர்த்து எழும். அதன் பிஞ்சு இலைகள் காற்றில் ஆடும்போது “வீழ்வேன் என்று நினைத்தாயோ” என கேட்பதுபோல் இருக்கும்.
தமிழர் புலம்பெயர்ந்ததை பலவீனம் என்று சிலர் கூறினார்கள். அதையே பலமாக மாற்றிக் காட்டுகின்றனர் அடுத்த சந்ததியினர்.
கனடாவுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழ்பெண் சட்டம் படித்து பட்டமளிப்பு விழாவில் தமிழின படுகொலை பற்றி பேசியிருக்கிறார்.
அடுத்த சந்ததி பேச ஆரம்பித்துவிட்டது. இனி உலகம் கேட்டுத்தான் ஆக வேண்டும்.
வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
No comments:
Post a Comment