Saturday, August 31, 2024
இந்திய தூதரும்
•இந்திய தூதரும்
கிழக்கு மாகாண தமிழரசுக்கட்சி வெங்காயங்களும்
இந்திய தூதரை சந்தித்த கிழக்கு மாகாண தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்று தரும்படி கேட்கவில்லை.
மாறாக கிழக்கு மாகாணத்தில் ஒரு இந்திய தூதராலயம் அமைக்கும்படி கேட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்கனவே கொழும்பு, கண்டி, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் என நான்கு இடத்தில் இந்திய தூதராலயம் இருக்கின்றது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதராலயத்தால் தமிழ் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.
மாறாக தமிழ்த் தேசிய செயற்பாடுகளுக்கு எதிரான சதி வேலையையே யாழ் இந்திய தூதர் மேற்கொண்டு வருகிறார்.
கல்முனையில் கலாச்சார மண்டபம் அமைத்து தருமாறு அம்பாறை எம்.பி கலையரசன் கேட்டுள்ளார்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபம் யாழ் மாகர சபையிடம் ஒப்படைக்கப்படவில்லை. சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதில் புத்த பிக்குகளே நிகழ்ச்சிகள நடத்தி வருகின்றனர்.
அப்படியிருக்க கிழக்கு மாகாணத்தில் எதற்கு கலாச்சார மண்டம்? அங்கும் பிக்குகள் நிகழ்ச்சி நடத்தவா?
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே உண்டு. அதில் தமது நிலைப்பாடு என்ன என்பதை தமிழரசுக்கட்சி இன்னும் தெரிவிக்கவில்லை.
ஆனால் இந்திய தூதரிடம் சென்று தூதராலயம் அமைக்கும்படி கோருகின்றனர். தமிழினத்தின் சாபக்கேடுகள் இவர்கள்.
No comments:
Post a Comment