பல வருடங்களாக ஈழத் தமிழரை கண்டுகொள்ளாது புறக்கணித்து வந்த இந்திய தொலைக்காட்சிகள் தற்போது வாய்ப்புகள் வழங்கி வருகின்றன.
இதற்கு இரண்டு காரணங்களை கூறலாம். முதலாவது புலம்பெயர்ந்த தமிழர்களின் சந்தை. இரண்டாவது தமிழ்நாட்டில் நாம் தமிழர் பெற்றுவரும் வளர்ச்சி என்றால் அது மிகை அல்ல.
ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது சரிகம பாடல் நிகழ்ச்சிக்கு இந்த வாரம் சிறப்பு விருந்தினராக சீமான் அவர்களை அழைத்துள்ளது.
அதில் சீமானின் தாயாரையும் வீட்டையும் காட்டியதோடு அங்கிருந்த பிரபாகரன் படத்தையும் காட்டியுள்ளனர்.
சீமான் அவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிகழ்வில் பங்குபற்றிய ஈழத்து தமிழ் சிறுமி கில்மிசா அவர்களை பாராட்டியுள்ளார்.
“நம்முடைய வலியை மறக்க பாடுங்க, நமக்கு வழி பிறக்க பாடுங்க” என்று வாழ்த்தியுள்ளார்.
அவருக்கு நன்றிகள்.
இனி இப்படித்தான்!
No comments:
Post a Comment