Wednesday, January 11, 2017

தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்கள். ஆனால் இந்தியாவுக்கு என்றால் மாவை சேனாதிராசாவுக்கு எல்லாம் ஆடும்!

•தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்கள். ஆனால்
இந்தியாவுக்கு என்றால் மாவை சேனாதிராசாவுக்கு எல்லாம் ஆடும்!
புயலினால் பாதிக்கப்பட்ட கும்மிடிப்பூண்டி முகாமில் இருக்கும் ஈழ தமிழ் அகதிகளுக்கு இந்திய அரசு இதுவரை எவ்வித உதவியும் வழங்கவில்லை.
புயலினால் பாதிக்கப்பட்ட அவ் தமிழ் அகதிகளுக்கு மின்சாரம்கூட வழங்குவதற்கு இதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்திய பிரதமர் அகதிகள் மீது அக்கறை கொள்ளவில்லை.
தமிழக முதல்வர் அகதிகள் மீது அக்கறை கொள்ளவில்லை.
தமிழக தலைவர்கள்கூட அகதிகள் மீது அக்கறை கொள்ளவில்லை
ஆனால் தமிழக மக்கள் அகதிகளை கைவிடவில்லை. தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றார்கள்
.
கௌத்தூர் மணி அவர்களின் தலைமையில் உணர்வுள்ள தமிழர்கள் நிதி சேகரித்து ஒவ்வொரு அகதி குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசி வழங்கியுள்ளனர்.
புலம்பெயர் தமிழர் மத்தியில் இருக்கும் முதலாளிகள்கூட நடிகர் சங்கத்திற்கே ஒரு கோடி ருபா நிதி வழங்கினார்கள். இந்த அகதிகளுக்கு உதவ முன்வரவில்லை.
ஆனால் தமிழக தமிழர்கள் தாம் தொப்புள்கொடி உறவுகள் என்பதை நிரூபித்துள்ளனர்.
தாமும் பாதிக்கப்பட்டிருந்தாலும், தாமும் கஸ்ட நிலையில் இருந்தாலும் தமது உணவில் ஒரு பங்கை இந்த அகதிகளுக்கு கொடுத்துள்ளனர்.
இது வெறும் 5 கிலோ அரிசி உதவி அல்ல. இது நாம் இருக்கிறோம் கவலைப்டாதீர்கள் என்னும் கைகொடுக்கும் உதவியின் அடையாளம்.
பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளுக்கு எவ்வித உதவியும் வழங்காத இந்திய அரசு இலங்கையில் தமிழர் பகுதிகளில் 100 காந்தி சிலைகளை நிறுவ முயற்சி செய்கிறது.
முல்லைத்தீவில் வைக்கப்பட்ட காந்திசிலையை உடைத்தவுடன் இது காந்தியை சுட்ட கோட்சேயைவிடக் கொடுமையானது என்று மாவை சேனாதிராசா பொங்கி எழுந்து கண்டனம் தெரிவிக்கின்றார்.
ஆனால் அகதிமுகாமில் எந்தவித உதவியும் இல்லாமல் மக்கள் கஸ்டப்படுவது குறித்து அவர் பொங்குவதில்லை.
அவர்களுக்கு சாதாரண தமிழக மக்கள் உதவும் நிலை குறித்தும் அவருக்கு கவலை இல்லை.
அவரது கவலை எல்லாம் இந்தியாவுக்காக வாழ்நாள் புராவும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே.
அதனால்தான் இந்தியாவுக்கு ஒன்று என்றால் அவருக்கும் எல்லாம் ஆடுது!

No comments:

Post a Comment