•விவசாயிகள் தற்கொலை செய்வதுதான் புதிய இந்தியாவா?
புதிய இந்தியா பிறந்துள்ளது என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஆனால் இன்று ஒரே நாளில் 8 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளனர்.
3 நாட்களில் மட்டும் 29 விவசாயிகள் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி தளபதி என பல புரட்சிகள் இருக்கின்றனர்.
ஆனால் அவர்களால் விவசாயிகள் நல் வாழ்விற்கு எதுவுமே செய்யவில்லை.
இந்தியா ஒரு விவசாய நாடு என்கிறார்கள். ஆனால் விவசாயிகள் தற்கொலை செய்வது குறித்து பிரதமர் உட்பட எந்த ஆட்சியாளர்களுக்குமே கவலை இல்லை.
முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபா கடன்களை மோடி அரசு வழங்குகிறது. பின்னர் அக் கடன்களை தள்ளுபடி செய்து முதலாளிகளுக்கு சலுகை வழங்கிறது.
விவசாயிகளுக்கு போதிய கடன் வழங்குவதில்லை. வழங்கிய கடனையும் விவசாயியை அவமானப்படுத்தி பலவந்தமாக வசூல் செய்கிறது இந்திய அரசு.
கடனை கட்ட முடியாமல் அவமானத்திற்கு அஞ்சி விவசாயி தற்கொலை செய்கிறான். ஆனால் மோடி புதிய இந்தியா பிறந்துள்ளது என்று பெருமை பொங்க அறிவிக்கிறார்.
அம்மா போனதும் சின்னம்மா சசிகலாவை முதலமைச்சராக்குவதிலேதான் அக்கறை காட்டப்படுகிறதேயொழிய பலியாகும் விவசாயிகள் குறித்து யாருக்குமே அக்கறை இல்லை.
இறப்பவன் விவசாயி என்று பார்க்காவிட்டாலும் பரவாயில்லை
இறப்பவன் தமிழன் என்று பாhக்காவிட்டாலும் பரவாயில்லை
இறப்பவன் ஒரு மனிதன் என்றாவது சக மனிதர்கள் அக்கறை காட்டவில்லையே?
தமிழகத்தில் விவசாயி வாழ முடியாமல் தற்கொலை செய்கிறான்
தமிழக மக்களிடமிருந்து வருடம்தோறும் 85ஆயிரம் கோடி ரூபாவை பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு இவர்களுக்கு நிவாரண உதவி வழங்க மறுக்கிறது.
ஆனால் 1200 கோடி ரூபா செலவில் பட்டேலுக்கு சிலை வைக்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையில் தமிழர் பகுதிகளில் 100 காந்தி சிலைகளை வைக்க முயல்கிறது.
அதேவேளை வன்னியிலும் மக்கள் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்கின்றனர்.
மக்கள் செத்தாலும் பரவாயில்லை. காந்தி சிலைகளை நிறுவியே தீருவோம் என தலைவர்கள் அடம் பிடிக்கின்றனர்.
என்னே கொடுமை இது?
என்னே கேவலம் இது?
No comments:
Post a Comment