•அரசியல்வாதிகளுக்கு வரும் இந்த புதிய நோயை
எந்த டாக்டர் கண்டு பிடிப்பார்?
எந்த டாக்டர் கண்டு பிடிப்பார்?
ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது வராத அதிசய நோய் இப்போது சிறைக்கு போகவேண்டும் என்றவுடன் சசிகலாவுக்கு வந்துவிட்டது.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் எனவே சிறைக்கு செல்ல 4 வாரம் கால அவகாசம் வேண்டும் என்றும் சசிகலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுவரை நல்ல உடல் நிலையில் இருப்பதாக தன்னைக் காட்டி வந்த சசிகலாவுக்கு சிறை என்றவுடன் திடீரென அதிசய நோய் தாக்கிவிட்டது போல் தெரிகிறது.
சசிகலாவுக்கு மட்டுமல்ல பெரும்பாலான அரசியல்வாதிகள் எல்லோருக்கும் சிறை என்றவுடன் இந்த அதிசய நோய் தாக்குகிறது.
ஜெயா அம்மையார் சிறையில் இருந்தபோது அவருக்கு சுகயீனம் என்ற காரணத்தைக் காட்டியே 21 நாட்களில் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜெயா அம்மையாருக்கு மட்டுமல்ல அவருடன் சேர்த்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும்கூட சுகயீனம் என்ற காரணத்திற்காகவே ஜாமீன் வழங்கப்பட்டது.
உண்மையிலே சுகயீனமானவர்கள் பலர் சிறையிலும் சிறப்புமுகாமிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஜாமீன் மட்டுமல்ல முறையான மருத்துவ சிகிச்சைகூட வழங்கப்படுவதில்லை.
ஆனால் அரசியல்வாதிகள் சிறை என்றவுடன் திடீரென நெஞ்சுவலி என்பதும் ஜாமீன் வரும்வரை மருத்துவ மனையில் படுப்பதும் என்றும் தப்பிக்கிறார்கள்.
அரசியல்வாதிகளை தாக்கும் இந்த அதிசய நோயக்கு முதலில் மருந்து கண்டுபிடிக்க வேண்டும். இல்லையேல் இது தொடர்கதையாகிவிடும்.
ஒன்றில் சுகயீனம் என்றாலும் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறவேண்டும் இல்லையேல் சுகயீனம் என்று கூறி ஜாமீன் பெறும் அரசியல்வாதிகள் வழக்கு முடியும்வரை அரசியலில் ஈடுபட முடியாது என்றாவது நீதிமன்றம் கூறவேண்டும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் மதுரையில் கைது செய்யப்பட்ட ஆறு தமிழ் இன உணர்வாளர்கள் 3 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறன்றனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்துவிட்ட நிலையிலும் தீர்ப்பு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகின்றனர். அதுமட்டுமன்றி 3 வருடமாக ஜாமீன்கூட வழங்காமல் வைக்கப்பட்டிருக்pன்றனர்.
இதுதானா இந்திய நியாயம்?
No comments:
Post a Comment