•“கம்பவாரிதி” ஜெயராஜ் தமிழர்தானே?
கம்பன் கழகம் அமைத்து தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதாக கம்பவாரிதி ஜெயராஜ் கூறிவருகிறார்.
அவர் அண்மையில் நடந்த கம்பன்கழக விழாவில் பாதுகாப்பு அமைச்சரை அழைத்து மாலை அணிவித்து கௌரவம் வழங்கியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சருக்கும் கம்பனுக்கும் என்ன சம்பந்தம்? அல்லது அவருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவருக்கு தமிழ் விழாவில் மரியாதை செலுத்த வேண்டும்?
கேப்பாப்பிலவு மக்களுக்கு அவர்களது சொந்த காணியை வழங்க முடியாது என்று இந்த பாதுகாப்பு அமைச்சர் கூறிவருகிறார். அதற்காகவா அவரை இந்த ஜெயராஜ் பாராட்டுகிறார்?
சிறையில் உள்ளவர்களை தன்னால் விடுதலை செய்ய முடியாது என்று இந்த பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். அதற்காகவா ஜெயராஜ் அவரை பாராட்டுகிறார்?
காணாமல் போனோரை கண்டு பிடிக்க முடியாது என்று இந்த பாதுகாப்பு அமைச்சர் கூறிவருகிறார். அதற்காகவா ஜெயராஜ் அவரை பாராட்டுகிறார்?
இனப்படுகொலையை விசாரிக்க அனுமதிக்கமாட்டேன் என இந்த பாதுகாப்பு அமைச்சர் கூறிவருகிறார். அதற்காகவா ஜெயராஜ் அவரை பாராட்டுகிறார்?
போராடும் கேப்பாபபி;லவு மக்களுக்கு கிறிஸ்தவ மதகுருமார்கள் உலர் உணவுகளை வழங்கி தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
இரவில் மின்சாரம் இன்றி கேப்பாப்பிலவு மக்கள் கஸ்டப்படுவதை அறிந்த ஒரு தொணடு அமைப்பு சிறிய ஜெனரேட்டரை அன்பளிப்பு செய்துள்ளது.
சிங்கள அமைச்சர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை போடும் ஜெயராஜ் கேப்பாபிலவு மக்களுக்கு இதுவரை எதையும் செய்யவில்லை.
கம்பவரிதி ஜெயராஜ் ஒரு தமிழர்தானே? கேப்பாப்பிலவு மக்களுக்கு உதவ வேண்டும் என்று ஏன் அவருக்கு தோன்றவில்லை?
கம்பவரிதி ஜெயராஜ் ஒரு தமிழர்தானே? கேப்பாப்பிலவில் தமிழ் மக்கள் போராடும்போது பாதுகாப்பு அமைச்சருக்கு மாலை போடுவது கேவலம் என்று ஏன் அவருக்கு தோன்றவில்லை?
No comments:
Post a Comment