இதோ மகிந்த ராஜபக்சின் மகன் இவர்.
இவர் ஒரு நடிகர் என்றே வைத்துக்கொள்வோம்.
இவர் மக்களுக்கு உதவுவதும் வெறும் நடிப்பு என்றே வைத்துக்கொள்வோம்.
ஆனால் எமது தமிழ் தலைவர்கள் இப்படி நடிப்பதற்குகூட தமிழ் மக்கள் மத்தியில் வருகிறார்கள் இல்லையே!
தமிழ் பகுதிகளிலும்,
மழை பெய்திருக்கிறது
புயல் அடித்திருக்கிறது
சுனாமி கூட வந்திருக்கிறது.
எத்தனையோ அழிவுகள் வந்திருக்கிறது.
அப்போதெல்லம் எமது தலைவர்கள் யாராவது வந்திருக்கிறார்களா?
அவர்களின் பிள்ளைகள் யாராவது வந்திருக்கிறார்களா?
மழை பெய்திருக்கிறது
புயல் அடித்திருக்கிறது
சுனாமி கூட வந்திருக்கிறது.
எத்தனையோ அழிவுகள் வந்திருக்கிறது.
அப்போதெல்லம் எமது தலைவர்கள் யாராவது வந்திருக்கிறார்களா?
அவர்களின் பிள்ளைகள் யாராவது வந்திருக்கிறார்களா?
என்ற கேள்விகள் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
இரணைதீவு மக்கள் தமது பூர்வீக நிலத்திற்கு செல்ல அனுமதி கோரி 29வது நாளாக போராடுகிறார்கள். நேற்று அவர்கள் கிளிநொச்சியில் பேரணி நடத்தியுள்ளார்கள்.
அம் மக்களின் பேரணியில் ஒரு தமிழ் தலைவர்கூட கலந்து கொள்ளவில்லை. கலந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை மாறாக இப்படி போராட்டம் எதுவும் நடத்தக்கூடாது என்று மக்களை மிரட்டுகிறார்கள்.
“மகிந்தவின் காலத்தில் பேசாமல் இருந்துவிட்டு இப்ப ஏன் இன்றைய அரசுக்கு எதிராக போராடுகின்றீர்கள்?” என தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யா கோபமாக கேட்கிறார்.
பாவம் தமிழ் மக்கள்.!
நாமல் ராஜபக்ச போல ஒரு நடிப்பு தலைவராவது தமக்கு கிடைத்திருக்கலாம் என பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
No comments:
Post a Comment