Wednesday, April 29, 2020
ஒரு விஞ்ஞானியும் ஒரு பிரதமரும்!
ஒரு விஞ்ஞானியும் ஒரு பிரதமரும்!
ஒரு விஞ்ஞானி தவளை ஒன்றின் ஒரு காலை வெட்டிவிட்டு கை தட்டினார். தவளை துள்ளி பாய்ந்தது.
இப்படி அதன் நான்கு கால்களையும் ஒவ்வொன்றாக வெட்டிவிட்டு கைதட்டினார்.
ஒவ்வொரு காலையும் வெட்டும்போது பாய்ந்த தவளை நான்கு காலையும் வெட்டிய பின்பு பாயவில்லை.
உடனே அந்த விஞ்ஞானி நான்கு காலையும் வெட்டினால் தவளைக்கு காது கேட்காது முடிவு செய்தார்.
இது ஒரு கற்பனைக் கதைதான். ஆனால் இந்தக் கதையை சொல்லும்போது குழந்தைப்பிள்ளைக்கூட “முட்டாள் விஞ்ஞானி” என்று சொல்லி கை தட்டிச் சிரிக்கும்.
இப்போது ஒரு நிஜக்கதை கூறுகின்றேன். கேளுங்கள்.
ஒரு நாட்டில் கொரோனா நோயினால் மக்கள் வருந்திக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அந்த நாட்டின் பிரதமர் மக்களை கை தட்டுங்கள் என்று முதலில் கூறினார்.
பின்பு சில நாட்கள் கழித்து வீட்டுக்குள் விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்து விளக்கை பிடியுங்கள் என்றார்.
இப்போது அந்த பிரதமர் கொரோனாவுக்கு “காது கேட்காது” “கண் தெரியாது” என்ற முடிவை எட்டியிருக்கக்கூடும்.
நன்றாக கவனியுங்கள். நான் இங்கு அந்த பிரதமர் “மோடி” என்றோ அல்லது அவரை “முட்டாள்” என்றோ கூறவில்லை.
ஆனால் எனக்கு இதுகூட சிரிப்பைத் தரவில்லை. இந்த மோடியிடம் மருந்து பொருட்களை அனுப்பி வைக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டதை நினைக்கும்போதுதான் சிரிப்பை அடக்க முடியவில்லை.
கொஞ்சம் மெழுகுதிரியும் அகல் விளக்கும் மோடி அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்?
பாவம் மக்கள்! இவனுகள் கையில மாட்டுப்பட்டுவிட்டார்களே?
Image may contain: 1 person, standing
Image may contain: 1 person, baby and close-up
No comments:
Post a Comment