Wednesday, April 29, 2020
தமிழ் தலைவர்கள் எப்போது
•தமிழ் தலைவர்கள் எப்போது
தமிழ் மக்களை நேசிக்கப் போகிறார்கள்?
இலங்கையில் உள்ள இரண்டு மக்கள் பிரதிநிதிகள் இவர்கள்.
ஒருவர் சிங்கள மக்களின் பிரதிநிதியான பாலிததெவரப்பெருமா
இன்னொருவர் தமிழ் மக்களின் பிரதிநிதியான மாவை சேனாதிராசா.
பாலித தெவரப்பெருமா தனக்கு வாக்களித்த மக்களை தேடிச் சென்று உதவி வருகின்றார்.
ஏழைத் தாய்க்கு உணவு அளித்துவிட்டு மகிழ்ச்சியுடன் அந்த தாயின் தலையை தடவிக் கொடுக்கிறார்.
ஆனால் மாவை சேனாதிராசா தன்னை தேடிவரும் தமிழ் தாயிடம்கூட பேசுவதற்கு விருப்பமின்றி இருக்கிறார்.
தனக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகளை தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கு நாலு ஆறுதல் வார்த்தையாவது கூறலாம் அல்லவா?
ஒருகாலத்தில் “ஈழத்து சேகுவாரா” என்று அழைக்கப்பட்ட இந்த மாவை சேனாதிராசா இப்போது எங்கே? என்று கேட்டால், அவர் ஜந்து லட்சம் ரூபா பணம் கொடுத்துள்ளார் என விசுவாசிகள் எழுதுகிறார்கள்.
சரி. ஜந்து லட்சம் ரூபா யாருக்கு கொடுத்தார்? அது அவருடைய சொந்த பணமா? அல்லது கட்சி பணமா? விபரங்கள் கூறுங்கள் என்று கேட்டால் இதுவரை பதில் இல்லை.
தமிழ் மக்கள் வீட்டுச்சின்னத்திற்கு வாக்கு போட்டதால் மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசாவுக்கு வீடு கட்ட முடிந்தது. சம்பந்தர் ஐயாவுக்கு இரண்டு சொகுசு வீடுகள் கிடைத்தன.
தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்தது?
Image may contain: 2 people, people sitting
Image may contain: 2 people, people standing and outdoor
No comments:
Post a Comment