Wednesday, April 29, 2020
ஆழ்ந்த இரங்கல்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில்
ஆழ்ந்த இரங்கல்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகனின் தந்தை மரணமடைந்துள்ளார்.
அவர் உயிருடன் இருக்கும்போது பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இப்போது இறந்த பின்பு இறுதிக் கிரியைகள் செய்வதற்கும்கூட அனுமதிக்கப்படவில்லை.
தந்தையை மட்டுமல்ல லண்டனில் இருக்கும் மகளைக்கூட பார்க்க முருகனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
முருகன் ஒரு இந்து. முருகனின் தந்தை ஒரு இந்து. ஆனாலும் இந்துக்களுக்காக இருப்பதாக கூறும் இந்திய பிரதமர் மோடி முருகனுக்கு இரங்க மறுக்கிறார்.
ஏனெனில் முருகன் தமிழன். அதுவும் ஈழத் தமிழன். அதனால்தான் ஈழத்து தமிழ் தலைவர் சம்பந்தர் ஐயாவும் இரங்க மறுக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்னர் முருகனின் தாயார் சிறீதரன் எம்.பி மூலம் சம்பந்தர் ஐயாவை சந்தித்து முருகன் விடுதலைக்கு உதவும்படி கேட்டார்.
ஆனால் ஒவ்வொரு வாரமும் இந்திய தூதருடன் தண்ணியடிக்கும் சம்பந்தர் ஐயா ஒருமுறைகூட முருகனுக்காக குரல் எழுப்பவில்லை.
அடுத்த தலைவராக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயாவும் இந்தியா சென்றபோது முருகனை விடுதலை செய்யும்படி கோரவில்லை.
மாறாக, கொலை மற்றும் கற்பழிப்பு குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தனது குரு பிரேமானந்த சுவாமிகளை விடுதலை செய்யும்படி கேட்டார்.
தனது இரு மகள்களுக்கும் இந்திய அரசின் மூலம் மருத்துவ கல்வி பெற்றுக்கொண்ட காசி அனந்தன் ஐயாவும் முருகனின் மகள் தந்தையை சந்திப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதைக்கூட இதுவரை கோரவில்லை.
ஆனால் கொஞ்சம்கூட கூச்சம் இன்றி இந்துத் தமிழீழம் கேட்டால் இந்துப் பிரதமர் மோடி உதவி செய்வார் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
முருகன் மட்டுமல்ல மொத்த ஈழத் தமிழர்களும் பாவம். இவர்கள் கையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.
முருகனுக்கும் அவருடைய குடும்பத்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதைத் தவிர வேறு வழி தெரியாமல் பரிதவிக்கிறோம்.
No photo description available.
Image may contain: 1 person, beard and close-up
Image may contain: 1 person, close-up
Image may contain: 1 person
No comments:
Post a Comment