Wednesday, April 29, 2020
•ஆழ்ந்த இரங்கல்கள்!
•ஆழ்ந்த இரங்கல்கள்!
இப்போதெல்லாம் முகநூலுக்கு வரவே அச்சமாக இருக்கிறது. மரணமடைந்தவர்களின் பெயர்களை படிக்கும்போது பதட்டமாக இருக்கிறது.
ஜெர்மனியில் வாழ்ந்துவந்த கரவெட்டியைச் சேர்ந்த கந்தசாமி மரணமடைந்தார் என்று செய்தி வந்துள்ளது.
எனது ஊர் நண்பர்களில் ஒருவரான கந்தசாமியை இழந்துள்ளேன். அவருடன் அத்துளு வயல்வெளிகளில் கிரிக்கட் விளையாடியது, நெல்லியடி தியேட்டரில் படம் பார்த்தது, அம்மன் கோயிலில் காத்தவராயன் கூத்து பார்த்தது எல்லாம் மறக்க முடியாத நினைவுகள்.
முக்கியமாக நாம் இருவரும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். ரசிகர்கள் என்பதைவிட வெறியர்கள் என்றே கூறலாம். எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காகவே மதுரையில் நடந்த தமிழாராய்ச்ச்p மகாநாட்டிற்கு இருவரும் சென்று வந்தோம்.
இவ்வாறு பல நினைவுகள் இருக்கிறது. ஆனால் இவ் நினைவுகளைத் தந்த கந்தசாமி இப்போது இல்லை என்பதை நினைக்கும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது.
கந்தசாமியை இழந்து தவிக்கும் குடும்பத்தவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Image may contain: 1 person, text
No comments:
Post a Comment