Thursday, December 29, 2022
வெகு தொலைவில்
வெகு தொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதி கொட்டும்
செம்மொழியாய்….
- கவிஞர் இன்குலாப்
இன்று 6வது நினைவு தினம் (01.12.2016)
பல நாடுகள் புலிகளை
“பல நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ளன. அப்படியிருந்தும் ஈழத்திலும், சர்வதேசத்திலும் தமிழர்கள் அந்த மாவீரர்களுக்காக அணிதிரள்கிறார்கள்”
- வெளிநாட்டு ஊடகத்தில் ..
மாவீரர் பின்னால் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பது வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிகிறது.
ஆனால் (200 ரூபா) உபிஸ் களுக்கு இது தெரியுதில்லையே?
#திராவிட கொடுமை
யாழ் பல்கலைகழக தமிழ்
"யாழ் பல்கலைகழக தமிழ்த்துறை மாணவர்கள் சமஸ்கிருத மொழியை கற்க வேண்டும்" - கம்பவாரிதி ஜெயராஜ்
தான் கூவித்தான் விடிகிறது என சேவல் நினைத்தால் அது எந்தளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமானது பழைய தமிழ் நூல்களை படிப்பதற்கு சமஸ்கிருதமொழி அறிவு வேண்டும் என்ற கம்பவாரிதியின் கூற்று.
காய்ந்து கருகிய புல்கூட
காய்ந்து கருகிய புல்கூட சிறு மழைத் துளி பட்டதும் துளிர்த்து எழுகிறது.
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது
மாவீரர் சிந்திய ரத்தமும்
அவர்களைப் பெற்ற தாய்மார் வடிக்கும் கண்ணீரும்
நாம் மீண்டும் எழுந்திட வைக்காதா?
ஈழத்தில் தலைவர்களின்
ஈழத்தில் தலைவர்களின் பிறந்த நாளுக்கு போஸ்டர் அடிக்கும் வழக்கம் இல்லை.
இந்நிலையில் முதன் முதலில் பிரபாகரன் பிறந்த நாளுக்கு போஸ்டர் அடித்து ஒட்டியவர் வீரமணி.
ஆனால் ஏனோ தெரியவில்லை பெரியாரின் திராவிட கருத்துகளை பிரபாகரனுக்கு பரப்ப அவர் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை.
ராஜீவ்காந்தி போர்பஸ் ஊழல்பேர்வழி என்று அவரை தூக்கில் போட வேண்டும் என்றும் பேசியவர் வீரமணி.
ஆனால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் “ஒரு சிறந்த இளம் தலைவரை இந்தியா இழந்துவிட்டது” என்று தனது விடுதலைப் பத்திரிகையில் தலையங்கம் எழுதினார்.
“நிலமிழந்துபோனால் பலமிழந்து போகும்
“நிலமிழந்துபோனால் பலமிழந்து போகும்
பலமிழந்துபோனால் இனம் அழிந்து போகும்
ஆதலால் மானுடனே
தாய் நிலத்தைக் காதலிக்க கற்றுக்கொள்”
- புதுவை இரத்தினதுரை
காணாமல் ஆக்கப்பட்ட தாயக கவிஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால்
ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்கிறார்கள். இது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால் காரல் மார்க்ஸ் சாதனைக்கு பின்னால் அவர் மனைவி ஜென்னி இருக்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
கூமுட்டைகள் குஞ்சு
கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை என்பதும்
ரணில் வழங்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை என்பதும்
தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்
எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு
எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு ஒரு பூணையை மறித்துப்பார்.அங்கு ஒரு புலியை நீ காண்பாய்
- கவிஞர் இன்குலாப்
தீப் பொறிகளின் ஒற்றை விரல் கூறும் தத்துவம் என்ன?
திருப்பி அடிக்காமல் தீர்வு இல்லை என்பதுதானே
ஒரு லட்சம் ஈழ அகதிகளை
ஒரு லட்சம் ஈழ அகதிகளை வெளியேறுங்கள் என்று கூறும் திராவிடம் இரண்டு கோடி வடஇந்தியர் தமிழ் நாட்டை ஆக்கிரமிக்கும்போது மௌனமாக இருக்கின்றார்கள்.
ஈழத்தைப் போல் தமிழ்நாட்டிலும் தன் சொந்த நிலத்தில் தமிழன் அகதியாகப் போகிறானா?
தமிழ்நாட்டில் ஆட்சியில்
தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்போர்
வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் என்ற
தமிழிசையின் குற்றச்சாட்டு உண்மைதானா?
நாளைய முதல்வர் விஜய்
நாளைய முதல்வர் விஜய் என்று ரசிகர்கள் போஸ்டர் அடித்ததால் நிஜ வாரிசு சின்னவர் உதயண்ணா கடும் கோபம்.
வாரிசு பட விநியோக உரிமை தமக்கு தரவில்லை என்றால் படம் தோற்கடிக்கப்படும் என உதயண்ணா மறைமுக மிரட்டல்.
திராவிட முதல்வர் வீட்டில்
திராவிட முதல்வர் வீட்டில் தெலுங்கு பேசுகிறார்களா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்.
மாறாக பேக் ஐடியில் வந்து திராவிட மொழியில் திட்டுவது எப்படி பதிலாக இருக்க முடியும்?
இதுவா பெரியார் தந்த திராவிட அறிவு உடன்பிறப்புகளே?
இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி பதில் சொல்லி தமிழர்களை ஏமாற்ற முடியும் என நம்புகிறீர்கள்?
திராவிட முதல்வர் அவர்களே!
திராவிட முதல்வர் அவர்களே!
1 கிலோ வெங்காயமே 80 ரூபா விற்குது
ஓடி ஓடி புலிகளையும் அகதிகளையும் அவதூறு செய்யும் உடன்பிறப்புகளுக்கு ஒரு 50 ரூபா கூட்டிக் கொடுக்கக்கூடாதா?
வெட்டுக்கிளிகளை ஓயாமல் தொடர்ந்த
வெட்டுக்கிளிகளை ஓயாமல் தொடர்ந்து விரட்டிச் சென்று அவை களைப்படைந்து விழுந்தவுடன் அடித்துக்கொல்லுங்கள் என்று விவசாயிகளுக்கு மாவோ கூறினார்.
அதேபோன்று (200ரூபா)உபிஸ் களைப்படைந்து விழும்வரை ஓயாமல் பதிவுகள் எழுதி அவர்களை கதறவிடுவது என் ஸ்டைல்.
குறிப்பு - இது என்னை அவதூறு செய்யும் உபிஸ் களுக்கான பதில் பதிவு.
குரைப்பது ,
குரைப்பது ,
கடி நாய் என்றால் கட்டிப் போடலாம்
வெறி நாய் என்றால் எட்டி உதைக்கலாம்
(200 ரூபா) உபியாக இருந்தால் கதற விடுவதைத் தவிர வேறு வழியில்லை.
இன்று 30 ஆண்டுகளுக்கு
இன்று 30 ஆண்டுகளுக்கு முன்னர் (06.12.1992) பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் ஆகும்.
பாபர் மசூதியை இடித்தவர்களை நிரபராதிகள் என்று இந்திய உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி பாபர் மசூதி தானாக இடிந்து விழுந்த நாள் இன்று ஆகும்.
இது இந்திய அதிசயம்!
ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம்
ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம் சாதியை ஒழிக்கும் என்று கருதிய திருமா அவர்கள், தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கார் சிந்தினைகளை முன்வைப்பது ஏன்? அல்லது, ஈழத்தில் சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கார் சிந்தனைகளை பின்பற்றும்படி புலிகளிடம் ஏன் வலியுறுத்தவில்லை?
வீட்டில் தெலுங்கு பேசுவோர்
"வீட்டில் தெலுங்கு பேசுவோர் தமிழனை ஆளலாம். வீட்டில் இந்தி பேசும் நாம் ஆளக்கூடாதா" என பீகாரில் இருந்து வந்த பாண்டே நாளைக்கு கேட்டால் என்ன பதில் சொல்வது?
தமிழ்நாட்டில் தமிழனுக்கு வேலை கொடு
தமிழ்நாட்டில் தமிழனுக்கு வேலை கொடு என்று தமிழன் போராட வேண்டிய நிலை.
இதுதான் தமிழக முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியா?
தை 14ல நடிகர் விஜய் “வாரிசு” ரிலீஸ் ஆகிறது.
தை 14ல நடிகர் விஜய் “வாரிசு” ரிலீஸ் ஆகிறது.
டிசெம்பர் 14 ல் சின்னவரின் “திராவிட வாரிசு” ரிலீஸ் ஆகிறதா?
எதிர்க்கட்சியாக இருக்கும்போது
எதிர்க்கட்சியாக இருக்கும்போது தூத்துக்குடி கொலைகளை கண்டித்த திராவிட முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,
ஆட்சிக்கு வந்ததும் கொலை செய்த காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய தயங்குவது ஏன்?
பலியான அப்பாவி மக்களுக்குரிய நீதியை வழங்க மறுப்பது ஏன்?
#திராவிட உருட்டு
இந்தி திணிப்பை எதிர்த்து
இந்தி திணிப்பை எதிர்த்து போராடியதில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு.
ஆனால் அந்த தமிழ்நாடு முதலமைச்சர் பெயர் இந்தியில். திராவிட முதல்வர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை?
இந்தியை திராவிடம் உண்மையாக எதிர்க்காது. தமிழ் மட்டுமே எதிர்த்து நிற்கும்.
இந்திய அரசிடம் தொடர்ந்து
இந்திய அரசிடம் தொடர்ந்து உதவி பெற்றுவரும் சிங்கள அரசு, எப்படி தைரியமாக சீன உளவு கப்பலுக்கு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது?
தமிழ் மக்கள் மாவீரர் தினம் கொண்டாடிவிடக்கூடாது என சூழ்ச்சி செய்யும் யாழ் இந்திய தூதர்கூட இது குறித்து அக்கறை இன்றி இருப்பது ஏன்?
இனி திருப்பூர் தொகுதி
இனி திருப்பூர் தொகுதி தமிழர் கையில் இல்லையா?
ஈழத்தில் மூதூர் தொகுதி பறிபோனதுபோல தமிழ்நாட்டில் திருப்பூர் தொகுதி பறிபோகின்றதா?
தொடரும் இந்திய அரசின் துரோகம்!
தொடரும் இந்திய அரசின் துரோகம்!
யாழ் மாநகர சபையின் நிலத்தில் இந்திய அரசு கட்டிய கலாச்சார மண்டபத்தை,
வாக்குறுதி அளித்தபடி யாழ் மாநகர சபையிடம் ஒப்படைக்காமல்,
சிங்கள பௌத்த கலாச்சார அமைச்சிடம் இந்திய அரசு ஒப்படைக்க முயல்கிறது.
இது குறித்து தமிழ் தலைவர்களின் மௌனம் அதிர்ச்சி அளிக்கிறது.
தொடரும் காவல்துறையின் அராஜகம்
தொடரும் காவல்துறையின் அராஜகம்
அப்பாவி விவசாயி கொலைக்கு நீதி கிடைக்க
ஒருமித்து குரல் கொடுப்போம்
எல்லா நாய்களும்
எல்லா நாய்களும் தன் வீட்டிற்குள் வீரமாக குரைக்கும்தான்.
சொந்த பெயரில் சொந்த முகம் காட்டி எழுத தைரியம் இல்லை. அதற்குள்ள எனக்கு சவாலா?
பரவாயில்லை. நான் இந்தியா வருவதற்கு தயார். ஆனால் உங்க இந்திய அரசு விசா தர மறுக்கிறது.
எனவே முடியுமாயின் எனக்கு விசா கிடைக்க வழி செய்யவும் உறவே.
அத்துடன் உயிரியல் விதிப்படி ஒருவன் பல அப்பனுக்கு பிறக்க முடியாது. ஒரு அப்பனுக்குதான் பிறக்க முடியும்.
எனவே பெரியார் தந்த திராவிட அறிவு இருப்பதாக பெருமை பேசும் நீங்கள் இனிமேல் இப்படி முட்டாள்தனமாக உளற வேண்டாம்.
பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை
பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது.
ஈழத்தமிழர் விடுதலை பெற இந்திய அரசு ஒருபோதும் உதவாது
இதை இனியாவது “இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும்” என்று கூறும் காசி ஆனந்தனும் திரு மாஸ்டரும் உணர வேண்டும்.
ராஜதந்திரம் என்பது கல்லு
ராஜதந்திரம் என்பது கல்லு கிடைக்கும்வரை நாயுடன் பேச்சுவார்த்தை செய்வது.
போராட்டம் என்பது கல்லு கிடைத்தவுடன் நாயை விரட்டி அடிப்பது
குஜராத்தில் மோடி கட்டிய
குஜராத்தில் மோடி கட்டிய பாலம் இடிந்து விழுந்ததை எழுதிய உடன்பிறப்புகள் , சென்னையில் திராவிட முதல்வர் கட்டிய பாதை உடைந்து விழுந்திருப்பது குறித்து எழுத மறுப்பது ஏன்?
இன்று மனிதவுரிமை தினமாம்?
இன்று மனிதவுரிமை தினமாம்? (10.12.2022)
போர் முடிந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன.
போர் முடிந்த பின் சரணடைந்த இவர்களுக்கு என்ன நடந்தது என்றே இன்று வரை தெரியவில்லை.
இறந்தவர்கள் பட்டியலில் சேர்ப்பதா அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதா என்றும் தெரியவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 6 வருடங்களாக போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழ் மக்களுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
பல கட்சிகள் இருக்கின்றன. பல தலைவர்கள்கூட இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களால்கூட இந்த காணாமல்
“மேயர்” என்றும் பார்க்கவில்லை
“மேயர்” என்றும் பார்க்கவில்லை
ஒரு சின்ன பொண்ணு என்றும் பார்க்கவில்லை
இப்படி தொங்க விட்டிட்டான்களே?
#திராவிட சாதனை !
நாம் தமிழர்” கட்சியினர்
“நாம் தமிழர்” கட்சியினர் பனம் விதைகளை விதைத்தபோது கிண்டல் அடித்தவர்கள்,
இப்போது தாங்களே பனம் மரங்களை நடப்போவதாக கூறுகின்றனர்.
இதுதான் காலத்தின் கட்டாயம் என்பதா?
ரத்தசாட்சி
• ரத்தசாட்சி
நக்சலைட் போராளி தோழர் அப்பு பற்றிய படம்.
காவல்துறையின் அராஜகத்தை துணிவாக காட்டியிருக்கும் இப் படக் குழுவினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
புலவர் மற்றும் தமிழரசன் போன்றவர்களின் படங்களும் இனி வரும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது.
பாரதியார்!
பாரதியார்!
ஒரு சந்தேகம்?
இன்று கவிஞர் பாரதியாரின் பிறந்த தினம்.(11.12.1882)
பாரதியார் ஒரு அற்புதமான கவிஞர் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் அவர் “சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்று பாடியது குழப்பமாய் இருக்கிறது.
ஏனெனில் இலங்கையில் அத்தீவிற்கு சொந்தமான தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பது நன்கு தெரிந்தும் எதற்காக இப்படி அவர் பாடினார்?
பாரதியாரும் ஒரு பார்ப்பணர் என்பதால்தானா ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக சிங்கள தீவு என பாடினார்?
யாராவது பதில் தாருங்களேன். பிளீஸ்!
ஈழத்தில் சிங்கள மற்றும்
ஈழத்தில் சிங்கள மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய பிரபாகரனை “பயங்கரவாதி” என்று எழுதிய மேற்கத்திய ஊடகங்கள்,
உக்ரைனில் ரஸ்சிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் செலன்ஸ்கியை “உக்ரைனின் உயிர்” என பாராட்டி எழுதுகின்றன.
இது என்ன நியாயம்?
என்னது, மராட்டிய நடிகர்
என்னது, மராட்டிய நடிகர் ரஜனி வாழும் வள்ளுவரா?
இவனுகள் தலையில இடி விழுந்து தொலைக்காதா?
சிறையில் எல்லோர்
சிறையில் எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணமாக்கி சோதனை செய்வார்கள்.
ஏன் என்று கேட்டால் உடலில் ஏதும் காயம் இருக்கிறதா என பார்க்கிறார்களாம்.
அடுத்து கையில் வைத்திருக்கும் தடியால் அடி தருவார்கள். கேட்டால் அது அட்மிசன் அடி என்பார்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இது நடக்கிறது என்கிறார்கள்.
ஆனால் விஜபி அரசியல்வாதிகளுக்கு இப்படி செய்வதில்லை.
நீட் தேர்வு ரத்து ரகசியம்
நீட் தேர்வு ரத்து ரகசியம் இருப்பதாக கூறி எம்எல்.ஏ ஆனார். இப்போது அமைச்சராகி விட்டார். எப்பதான் அந்த ரகசியத்தை கூறுவார்?
அது சரி, ஒரு கோடி உறுப்பினர் கொண்ட திமுக வில் கலைஞர் குடும்ப வாரிசு என்பதைவிட வேறு என்ன தகுதி இருக்கு உதயநிதி அமைச்சராவதற்கு?
ஒரு சந்தேகம்!
ஒரு சந்தேகம்!
வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் தமிழ்நாட்டில் அமைச்சராக முடிகிறது. முதலமைச்சராகவும் முடிகிறது.
அதேபோல் வீட்டில் தமிழ் பேசும் யாராவது ஆந்திராவில் அமைச்சராகவோ முதலமைச்சராகவோ இருக்கிறார்களா?
இல்லை எனில் ஏன் இல்லை என்பதற்கு யாராவது உபிஸ் பதில் தருவீர்களா?
இன்னொரு சந்தேகம்!
இந்தியாவில் தெலுங்கு பேசும் மக்களுக்கு மூன்று முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்.
தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு முதலமைச்சர் இருக்கக்கூடாதா என தமிழன் கேட்டால் அது தவறா?
அவ்வாறு கேட்பதை இனவெறி என்கிறார்களே?
ஸ்டாலினுக்கு பதவி கொடுக்கப்படுமா
ஸ்டாலினுக்கு பதவி கொடுக்கப்படுமா என்று கேட்டபோது திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை என்றார் கலைஞர் கருணாநிதி.
ஆனால் அந்த சங்கரமடத்தில்கூட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இப்படி பதவி கொடுப்பதில்லை.
திராவிடம் என்ற பெயரில் எப்படியெல்லாம் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர்?
பெரியார் சுயமரியாதை கற்றுத் தந்தார்
பெரியார் சுயமரியாதை கற்றுத் தந்தார் என்று சொல்லிவிட்டு கடைசியில இன்பநிதிக்கு குடை பிடிக்க வைச்சிட்டாங்களே?
ஒருவேளை இது திராவிட குடையாக இருக்குமோ?
இருவரும் அரசியல் வாரிசுகள்
இருவரும் அரசியல் வாரிசுகள்
இருவருக்கும் ஒரே துறை அமைச்சு
ஒருவரை மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள்
இன்னொருவரை மக்கள் எப்போது தூக்கி எறிவார்கள்?
நடிகை நயன்தாராவுடன் நடித்தமைக்கா
நடிகை நயன்தாராவுடன் நடித்தமைக்கா அமைச்சு பதவி என்று ஜெயா டிவி பச்சையாய் கேட்குது
நடிகைக்காக பால்டாயில் குடித்த சின்னவர் என்று குமுதம் ரிப்போட்டர் எழுதுகிறது
ஒரு இரவு முழுவதும் விளையாடிவிட்டு ஏமாற்றிவிட்டார் என்று நடிகை சிறீரெட்டி பகிரங்கமாக கூறுகிறார்.
இதற்காகவா “விளையாட்டுதுறை அமைச்சு” பதவி வழங்கப்படுகிறது சேப்பாக்கம் சேகுவாராவுக்கு?
உதயநிதி நிறுவனத்தில்
உதயநிதி நிறுவனத்தில் நபர் ஒருவர் மர்ம மரணம்
ஏன் இதுவரை எந்த ஊடகமும் இது பற்றி பேசவில்லை?
அந்தளவு பயமா?
அப்துல் ரவூப்!
• அப்துல் ரவூப்!
என்றும் நினைவில் கொள்வோம்!
1995ம் ஆண்டு மார்கழி மாதம் 15ம் திகதி. ஈழத் தமிழர்களுக்காக அப்துல் ரவூப் தன்னையே எரித்துக்கொண்ட நாள்.
சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்த துயரச் செய்தியைக் கேட்டு அப்துல் ரவூப் துடித்த நாள் அது.
அது ஜெயா அம்மையாரின் இருண்ட ஆட்சிக் காலம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காலம் அது.
அப்துல் ரவூப் மரணம்,
• ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு உண்டு என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது
• தடா சட்டத்தின் மூலம் தமிழக மக்களின் அதரவுக் குரலை நசுக்க முடியாது என்பதை காட்டியது.
• ராஜீவ் மரணத்தால் தமிழக மக்களின் ஈழ ஆதரவு நிலை மாறவில்லை என்பதைக்காட்டியது.
• எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக மரணத்தை தழுவவும் தமிழக இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இந்திய அரசுக்கு காட்டியது.
• தமக்காக குரல் கொடுக்க தாய்த் தமிழகம் இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தியது.
இத்தனை பயன் உள்ள செய்திகளையும் அப்துல் ரவூப் தன் மரணம் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூறினான்.
அதுமட்டுமன்றி சாத்வீக வழிகளில் போராடுவதால் குறிப்பாக தங்களைத் தாங்களே எரித்துக்கொள்வதால் இலங்கை இந்திய அரசுகள் மனம் இரங்கப்போவதில்லை என்பதையும் அவனது மரணம் காட்டியுள்ளது.
நாம் அப்துல் ரவூப்பையும் அவரது தியாகத்தையும் மறந்துவிட்டோம். அதனை நினைவு கூர தவறிவிட்டோம்.
அப்துல் ரவூப் இறந்தபின்பு ஜெயா அம்மையாரின் பொலிஸ் அவரது தாய் தந்தையரை மிரட்டியது.
காதல் தோல்வியில் அப்துல் ரவூப் தற்கொலை செய்தான் என்று கூறும்படி வற்புறுத்தியது.
அவ்வாறு கூறினால் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியது.
ஆனால் அந்த ஏழைப் பெற்றோர் எதற்கும் அஞ்சவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மசியவில்லை.
ஈழத் தமிழர்களுக்காக தம் மகன் உயிர் விட்டதை எண்ணிப் பெருமைப்படுவதாகவே கூறினார்கள்.
இன்றும்கூட அவர்கள் அந்த கருத்தையே கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பு- 15.12.2022 யன்று அப்துல் ரவூப் அவர்களின் 27வது நினைவு தினம்.
ஒரு அமைச்சரே இப்படி பேசினால்
ஒரு அமைச்சரே இப்படி பேசினால் (200 ரூபா) உபிகளை எப்படி குறை சொல்ல முடியும்?
தலைவர் குடும்பத்திற்கு காட்டும் விசுவாசத்தை தன் குடும்பத்து சொந்த தம்பியின் கொலையாளிகளை கண்டு பிடிக்க அமைச்சர் காட்டாதது ஏன்?
#திராவிட கொத்தடிமைகள்
காவி கலரில் உள்ளாடை
காவி கலரில் உள்ளாடை அணிந்து நடித்திருப்பது நடிகை தீபிகா படுகோன.
ஆனால் நடிகர் ஷாருக்கானின் உருவப்படத்தை எரிக்கிறார்கள்.
சங்கிகளின் அறிவை என்னவென்பது?
#மதம் ஒரு அபின் - கால் மார்க்ஸ்
கருணாநிதியிடம் உள்ள
ிறமைகளில் ஒரு பகுதி உதயநிதியிடம் உள்ளது – நடிகர் பார்த்திபன்
வாரிசு பட உரிமையை மிரட்டி வாங்கியதைதான் பார்த்திபன் கூறுகின்றாரா?
நான் பல கடைகளில் டீ குடித்திருக்கிறேன்
நான் பல கடைகளில் டீ குடித்திருக்கிறேன். ஆனால் நெல்லியடியில் “நாணா” கடையில் குடித்த டீ போல் ஒரு டீயை இன்னும் குடிக்கவில்லை.
1980களில் கரவெட்டியில் இளைஞராக இருந்தவர்களுக்கு இந்த கடை நன்கு நினைவில் இருக்கும். ( திருமகள் ஸ்டோருக்கு அருகில் இக் கடை இருந்தது)
ஒரு சிறிய பெட்டிக்கடை. நானா என்ற ஒரு முஸ்லிம்தான் கடை ஓனர். அவர்தான் டீ மாஸ்டரும்கூட.
அந்த காலத்தில் அரசியல் ஆர்வம் மிக்க இளைஞர்கள் எல்லாம் மாலை நேரத்தில் அவர் கடையடியில் கூடுவார்கள்.
அவர் கடை வடையும் பிளேன் டீ யும் பேமஸ். அதை சாப்பிட்டுக்கொண்டு அரசியல் பேசுவது எமது வழக்கம்.
அவர் டீ யில் சிறிதளவு கஞ்சா கலக்கிறார். அபின் கலக்கிறார் என்றெல்லாம்கூட சிலர் கூறினார்கள்.
நான் இவற்றை நம்பவில்லை. எனினும் இன்றுவரை அவர் டீ யின் ரகசியம் என்ன என்று எனக்கு புரியவில்லை?
பஸ் நடத்துனர் -
பஸ் நடத்துனர் - தம்பி, படியில் நின்று பயணிக்ககூடாது என்று எத்தனை தடவை சொல்லுறது. மேலே வா.
பையன் - இல்ல அண்ணே. நான ஐஏஎஸ்; படிக்கிறேன். அதற்காகத்தான் படியில் நின்று பயிற்சி எடுக்கிறேன்.
பஸ் நடத்துனர் - சரி உனக்கு பின்னாலே ஒரு பொண்ணு ஏன் தொங்கிட்டு வருகுது?
பையன் - அவங்க மேயராக பயிற்சி எடுக்கிறாங்க.
😂😂
தன் பெயரையும் கெடுக்காமல்
தன் பெயரையும் கெடுக்காமல்
ஈழத் தமிழர் பெயரையும் கெடுக்காமல்
விளையாடி வெளியேறியுள்ள ஜனனிக்கு
பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அதிக வாக்கு பெற்றிருந்தும் ஜனனியை திடீரென்று விஜய் டிவி வெளியேற்றிய மர்மம்தான் ஏன் என்று புரியவில்லை?
ஆண்டவரே!
ஆண்டவரே!
நேத்து வந்த பயல் உதயநிதி
நாலு படம் நடிச்சு எம்.எல்.ஏ வாகி
இப்ப அமைச்சராகியும் விட்டான்.
நீங்க என்னடா என்றால்
பிக்பாஸில் மாமா வேலை பார்த்துக்கொண்டிருக்கிறியள்.
வெட்கமாய் இல்ல?
கைபர்கணவாய் வழியாக புலம்பெயர்ந்தவர்கள்,
கைபர்கணவாய் வழியாக புலம்பெயர்ந்தவர்கள்,
ஒங்கோலில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள்,
ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை "அகதிகள்" என்றும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் கூறுகின்றார்கள்.
என்னே கொடுமை இது?
ஈழம் வேறு. தமிழீழம் வேறு.
ஈழம் வேறு. தமிழீழம் வேறு. இரண்டும் ஒன்றே என்று சிலர் நினைப்பது தவறு.
இலங்கையின் இன்னொரு பெயர் ஈழம். தமிழர் பிரிவினை கோரிய பகுதி தமிழீழம்.
ஈழ வேந்தன், ஈழ வாணி என்ற பெயர்கள் உண்டு. ஈழநாடு ஈழ முரசு என்று பத்திரிகைகள் வெளிவந்துள்ளன.
ஆனால் இப்போது சிங்கள அரசும் இந்திய அரசும் ஈழம் என்ற சொல்லை முற்றாக ஒழிக்க முயலுகின்றன.
நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்தால்
நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்தால் அதுக்கு இன்னும் சோறு வைக்கவில்லையோ என எண்ணத்தோன்றும்.
வைரமுத்து வரிகளை படிக்கும்போது இந்த மனிதருக்கு ஏன் இந்தளவு பசி என்று எரிச்சல் வருகிறது.
ஒருவேளை சின்மயி கேஸ் காரணமாக இருக்குமோ?
விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்
விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று சிலர் கூறுவார்கள்.
அவர்கள் விளையாட்டுக்கு பின்னால் உள்ள அரசியலை பார்க்கத் தெரியாதவர்கள்.
ஒரு வல்லரசு நாட்டின் ஜனாதிபதி தன் நாட்டு வீரரை மைதானத்திற்குள் சென்று ஆறுதல் படுத்துகிறார் எனில் அது காற்பந்து விளையாட்டின் பின்னால் உள்ள அரசியல் பலம்.
விஜய் டிவி சுப்பர் சிங்கரை
விஜய் டிவி சுப்பர் சிங்கரை விட ஜீ தமிழ் சரிகம ப நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது.
தொகுப்பாளர்கள் மகபா வும் பிரியங்காவும் நகைச்சுவை என்னும் பெயரில் செய்யும் கோமாளித்தனங்கள் எரிச்சல் தருகின்றன.
நல்லவேளை இம்முறை சுப்பர் சிங்கரில் புலம்பெயர் ஈழத் தமிழர் எவரையும் விஜய் டிவி சேர்த்துக்கொள்ளவில்லை.
எதிரிகளை என் விமர்சனம்
எதிரிகளை என் விமர்சனம் அம்பலப்படுத்தும். நண்பர்களை அரவணைக்கும்.
அதாவது நண்பர்களாக இருந்தால் பூனை தன் குட்டியை கவ்வுவது போல் இருக்கும்.
எதிரியாக இருந்தால் புலி தன் இரையை கவ்வுவது போல் இருக்கும்.
சிலர் அவர் மார்க்சிய வழியில்
சிலர் அவர் மார்க்சிய வழியில் திறனாய்வு செய்தவர் என்கிறார்கள்.
இன்னும் சிலர் அவர் பெரியாரியத்தை ஆதரித்தவர் என்கிறார்கள
இவ்வாறு இவர்கள் கூறுவது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை.
ஆனால் அவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள்.
அவர் சிறந்த தமிழ் அறிஞர் மட்டுமல்ல சிறந்த தமிழ் இன உணர்வாளரும்கூட
அதனால்தான் ஈழத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டபோது அவருக்கு வலித்தது.
ஈழப் படுகொலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தவர்கள் மீதான எனது ஆத்திரம் உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும் என்று கூறினார்.
உறக்கமில்லாமல் கழிந்த அந்த இரவுகள் திரும்ப திரும்ப நினைவுக்கு வருகின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதனால்தான் அவர் இறந்துவிட்டார் என்றதும் எமக்கு வலித்தது.
எமது குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட உணர்வைத் தந்தது.
அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகள்.
குறிப்பு - 24.12.2022யன்று தொ.பரமசிவம் அவர்களின் இரண்டாவது நினைவு தினம் ஆகும்.
ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்
ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்
18.12.2022 மகத்தான தோழர் ஸ்டாலின் பிறந்த தினமாகும்.
தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறுயாரும் இல்லை.
அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள்.
மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும்,
பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும்,
உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும்,
கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும்,
ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள்.
இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.
பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம்.
ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி.
தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது.
மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன.
(முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது.
ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல.
“ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர்.
இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர்.
ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.
தோழர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களுக்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் பதில்களை கீழ் வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2014/12/blog-post_26.html
மாபெரும் ஆசான் தோழர் மாவோ
•மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2022)
மாபெரும் மாக்சிய ஆசான்களில் ஒருவரும் சீனப்புரட்சியின் தலைவருமாகிய தோழர் மாசேதுங் அவர்களின் 129வது பிறந்த நாள் உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது.
தூங்கும் பூதம் என வர்ணிக்கப்பட்ட சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் விடிவை ஏற்படுத்திய மாபெரும் தலைவர் அவர்.
ரஸ்சியாவில் குருசேவ் கும்பலால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட ஆபத்தை சீனாவிலும் எதிர்வு கூறி அதை தடுக்கப் பல கலாச்சாரப் புரட்சிகள் நடக்க வேண்டும் எனக் கூறியவர் .
தோழர் ஸ்டாலினுக்கு எதிராக குருசேவ் கும்பல் வைத்த குற்றச்சாட்டுகளை மாபெரும் விவாதம் மூலம் தோற்கடித்து சர்வதேச ரீதியில் ஸ்டாலினையும் மாக்சியத்தையும் காப்பாற்றியவர்.
மாக்சியம் லெனிசத்தை அடுத்து மாவோ சிந்தனைகள் மூலம் மாக்சியத்தை வளர்த்தெடுத்தவர்.
சீனாவில் மாவோ மறைவுக்கு பின்னர் டெங்சியாபிங் கும்பல்களால் முதலாளித்துவம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறினாலும் அவர்களால் இன்று வரை மக்கள் மனங்களில் இருந்து மாவோ புகழை நீக்க முடியவில்லை.
சீனாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மாவோ சிந்தனைகள் வழங்கிய மகத்தான பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.
குறிப்பாக ஜரோப்பாவில் இருந்து வைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர தத்துவமாகிய பின்நவீனத்துவத்திற்கு எதிராக மாவோசிசத்தின் பங்களிப்பு மகத்தானது.
மாக்சிச லெனிசிச மாவோ சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!
ஈழத்தில் சாதிப்போராட்டம்,
ஈழத்தில் சாதிப்போராட்டம், தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டம் ஜேவிபி போராட்டம் போன்றவைகள் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தமைக்கு தோழர் சண் முன்வைத்த மாவோயிச சிந்தனைகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
தேசிய இனங்கள் பற்றியும்
தேசிய இனங்கள் பற்றியும் அவற்றின் சுயநிர்ணய உரிமை பற்றியும் உலகிற்கு தெளிவாக முன்வைத்தவர் தோழர் ஸ்டாலின்.
அவரின் நினைவாகவே கலைஞர் கருணாநிதி தன் மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தார்.
ஆனால் இன்று, “தமிழ்நாட்டு அரசியல் பேசாதே” என்று உபிஸ் எமக்கு கூறுகின்றனர்.
என்னே கொடுமை இது?
அடிமைத்தனத்திற்கு எதிராக ஆயுதம்
அடிமைத்தனத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி குருதி சிந்தினாளே, அவளையே “பேரழகி” என்று வரலாறு பதிவு செய்கிறது.
எரிக் சொல்கைம் -
எரிக் சொல்கைம் - சரணடைந்தவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்?
சம்பந்தர் ஐயா – அவர்கள் சரணடைந்தபோது அவர்களை என்ன செய்ய வேண்டும் என்று நான்தானே கோத்தபாயாவுக்கு கூறியிருந்தேன்.
எரிக்சொல்கைம் - ?????
இவர் என்ன வேலை செய்கிறார்?
இவர் என்ன வேலை செய்கிறார்?
இவரின் வருமானம் என்ன?
குறிப்பு – உடன்பிறப்புகளே! கோபம் கொள்ள வேண்டாம். சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். திராவிட மொழியில் திட்ட வேண்டாம். அது பதில் அல்ல.
தம்பி கரிகாலனுக்கு,
தம்பி கரிகாலனுக்கு,
சிறப்புமுகாம் எப்போது மூடப்படும் என்பதை கேட்காவிட்டாலும் பரவாயில்லை,
கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அந்த அகதிச் சிறுவன் எங்கே என்பதையாவது முதல்வர் ஸ்டாலினிடம் உங்களால் கேட்க முடியுமா?
அம்பேத்காரியம் - கடவுள
அம்பேத்காரியம் - கடவுளை ஏற்றுக்கொள்ளும் கருத்துமுதல்வாதம்
பெரியாரியம் - கடவுளை மறுக்கும் பொருள்முதல்வாதம்
மார்க்சியம்- இயக்கவியல் பொருள்முதல்வாதம்
ஒன்றுக்கொன்று எதிரான இந்த மூன்றையும் ஒன்றாக ஏற்றுக்கொள்வதாக கூறுபவர்களை என்னவென்று புரிந்துகொள்வது?
ஒரு எலும்புத்துண்டிற்காக நேர்மையான
“ஒரு எலும்புத்துண்டிற்காக நேர்மையான மனிதன் ஒருபோதும் தன்னை நாயாக மாற்றிக்கொள்ள மாட்டான்.” – வியட்நாமிய பழமொழி
அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக
அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக ஜான்சி ராணிக்கு முன்னரே போராடியவர் வேலுநாச்சியார்.
ஆனால் இந்திய ஆட்சியாளர் ஜான்சிராணிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேலு நாச்சியாருக்கு கொடுப்பதில்லை.
வேலுநாச்சியார் தமிழர் என்பதாலா?
எதிரி எவ்வளவு பெரியவர்
எதிரி எவ்வளவு பெரியவர் என்பது முக்கியமல்ல, எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு பெரியது என்பதே முக்கியமானது.
கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய 44 பேரை எரித்துகொலை செய்த நாயுடுவை கொன்ற அமல்ராஜ்பாண்டியன்.
தண்ணீரை திராட்சை ரசமாக
தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய தேவனும் தேவையில்லை
தண்ணீரில் நடக்கும் இறைவனும் தேவையில்லை
செங்கடலை இரண்டாக பிளந்த ரட்சகரும் தேவையில்லை
மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தெய்வமும் தேவையில்லை
தன் தேவாலயத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளையாவது செயலிழக்க வைக்கும் கடவுளே தற்போது தேவை.
எருமைக்கும் மனிதனுக்கும்
எருமைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனை எளிதாக எருமை என்று கூப்பிடலாம். ஆனால் எருமையை அவ்வளவு எளிதாக மனிதன் என்று கூப்பிட முடியாது
குறிப்பு – இது தங்களையே குறிப்பிடுவதாக (200 ரூபா) உபிஸ் தயவு செய்து நினைக்க வேண்டாம்.
கலைஞர் தத்தெடுத்து வளர்த்த
கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச் சிறுவன் எங்கே என்று கலைஞர் குடும்பத்தில் யாராவது ஒருவரிடம் கேட்கும் ஊடகவியலாளருக்கு, இந்த ஆண்டின் “சிறந்த ஊடகவியலாளர்” பட்டமும் ஒரு லட்சம் ரூபா பணமும் வழங்கப்படும்.
புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள்
புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் பல வருடங்களாக பாடி வரும் மாதுளானிக்கு ஜீ தமிழ் சரி கம ப நிகழ்வில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.
விஜய் டிவி போன்று வியாபார நலனுக்காக புலம்பெயர் ஈழத் தமிழருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதா அல்லது அவரது திறமைக்கு உரிய இடம் வழங்கப்படுமா என்பது இனித்தான் தெரியவரும்.
தமிழ்நாட்டில் ரயிலில் டிக்கட் இன்றி
தமிழ்நாட்டில் ரயிலில் டிக்கட் இன்றி பயணித்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என்று வட இந்தியர்களுக்கும் தெரிந்திருக்கிறது.
வாழ்க கலைஞர் புகழ்!
கேப்பாப்புலவு மக்கள்
கேப்பாப்புலவு மக்கள் கேட்பார் அற்ற மக்களா?
யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளாகியும் அவர்கள் நிலம் அவர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை?
இதைக்கூட பெற்றுக்கொடுக்காத தலைவர்கள் தீர்வு பெற்றுக்கொடுப்பார்கள் என எப்படி நம்புவது?
அவதூறு மூலம் தமிழ்த்தேசிய
அவதூறு மூலம் தமிழ்த்தேசிய வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிட முடியுமா?
ஒருபோதும் முடியாது என்பதை திராவிடம் விரைவில் உணர்ந்துகொள்ளும்.
அகதிகளுக்கும் இது வழங்கப்படுமா?
அகதிகளுக்கும் இது வழங்கப்படுமா?
இது குறித்து தமிழ்நாடு அரசின் அறிவித்தல் ஏதும் வந்திருக்கிறதா?
யாழ் கோட்டைக்கு விஜயம் செய்த
யாழ் கோட்டைக்கு விஜயம் செய்த சீன துணைத்தூதுவர் குழுவினர்.
யாழ் இந்திய துணை தூதரின் இந்தி திணிப்பு போன்ற போன்ற செயல்களால் யாழ் தமிழ் மக்கள் அடைந்துள்ள எரிச்சலை சீன தூதர் பயன்படுத்த முனைகிறாரா?
எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும்
எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும்
ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது”
– பிரபஞ்சன்
சங்கம் அமைத்து தமிழ்
சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையிலேயே
அன்னைத் தமிழுக்கு இடம் இல்லை என்றால்
தமிழ் இனி மெல்ல சாகும் என்பது மெய்தானா?
திருச்சி மாவட்ட ஆட்சி தலைவரின்
திருச்சி மாவட்ட ஆட்சி தலைவரின் பொறுப்பில் பல வருடங்களாக சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் சேர்ந்து புலிகள் அமைப்பை கட்ட போதைப் பொருள் கடத்துகிறார்களாம். இந்த கதை எல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது?
செம்மொழி தமிழுக்கு
செம்மொழி தமிழுக்கு வெறும் 74 கோடி ரூபா.
செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு 1488 கோடி ரூபா
அதுவும் தமிழன் வரிப் பணத்தில் ??
அவர்களின் தலைவர் எமக்காக
அவர்களின் தலைவர் எமக்காக உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் ஏன் உங்கள் தலைவர் எங்களை ஏமாற்றினார் என்று நாங்கள் கேட்டால், ஈழத் தமிழர் தமிழ்நாட்டு அரசியலை பேசக்கூடாது என்று தலைவரின் உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.
இது என்ன நியாயம்?
Wednesday, November 30, 2022
கோழிகளால் தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்க முடிகிறது?
•கோழிகளால் தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்க முடிகிறது?
தன் குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால் எதிரி எந்தளவு பெரியது என்றாலும் கோழி போராட தயங்குவதில்லை
ஏனென்றால் போராடினால் மட்டுமே உயிர் தப்ப முடியும் என்பதைத் தவிர வேறு எதுவும் அதற்கு தெரியாது.
அதுமட்டுமல்ல,
•குஞ்சுகளைக் காப்பாற்ற போராடுவது பயங்கரவாதம் என்று யாரும் அதற்கு கூறுவதில்லை.
•அகிம்சை வழியில் போராடினால் குஞ்சுகளைக் காப்பாற்றலாம் என யாரும் ஏமாற்றுவதில்லை.
•இதெல்லாம் போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவு என்று யாரும் போதிப்பதில்லை .
•எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அழிப்பது போர்க்குற்றமா? அல்லது இனப்படுகொலையா? என்று ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை.
கோழிகளால் தம் குஞ்சுகளை போராடி பாதுகாக்க முடிகிறது. ஆனால் தமிழனால் தன் இனத்தை பாதுகாக்க முடியவில்லை.
தமிழனும் ஒருவேளை கோழியாக பிறந்திருந்தால் தன் இனத்தை காக்க போராடியிருப்பானோ?
இலங்கை இந்திய அரசுகளே!
இலங்கை இந்திய அரசுகளே!
இவர்கள் வெறுமனே அழுது விட்டு ஓய்ந்து விடுவார்கள் என்றுமட்டும் நினைத்து விட வேண்டாம்.
தேவை ஏற்பட்டால் மாபெரும் கந்தக கிடங்காக மாறி வெடிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இவர்கள் நினைத்தால் அன்னைபூபதியாக மாறி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பார்கள்.
அதுவே இவர்கள் நினைத்தால் தானுவாக மாறி வெடி குண்டை வெடிக்கவைப்பார்கள்.
இவர்கள் மாவீரர்களை மட்டும் படைக்கவில்லை
இவர்கள் மாபெரும் வீர வரலாற்றையும் படைப்பவர்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
கடந்த 16 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி சிவலிங்கம் ஆரூரன் எழுதிய ஆதுரசாலை நாவலுக்கு சிறந்த தமிழ் இலக்கிய நாவல் விருது வழங்கப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரியான அவர் சிறையில் 7 தமிழ்நாவல் 1 ஆங்கில நாவல் எழுதியுள்ளார்.
யாழ் புத்தவிகாரை விழாவில்
யாழ் புத்தவிகாரை விழாவில் சிங்கள தளபதியுடன் யாழ் இந்திய தூதர்.
இந்து ஆலயங்களை இடித்து புத்தவிகாரை கட்டும் சிங்கள பௌத்த அரசுக்கு ஆதரவு அளிக்கிறார் இந்திய தூதர்.
இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என நம்புபவர்கள் இதற்கு என்ன கூறப்போகிறார்கள்?
செய்தி - யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அரசு தூதரிடம்
செய்தி - யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அரசு தூதரிடம் 400 புத்தகங்களை அன்பளிப்பு செய்துள்ளார் நடிகர் எஸ.வி.சேகர்.
ஏன் திடீரென்று ஓநாய் ஈழத்து ஆட்டுக்குட்டிகள் மீது அக்கறை கொள்கிறது?
ராம் சேது
•ராம் சேது
தன் கையால் தன் கண்ணைக் குத்துவதுபோல் தமிழன் (லைக்கா)பணத்தில் தமிழனுக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் படம் ராம் சேது.
ராமர் பாலம் கட்டினார் என்று படம் எடுத்திருக்கிறார்கள். அது மட்டுமன்றி போராளிகளையும் தேவையில்லாமல் இதில் இணைத்து கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள்.
ராமர் பாலத்தில் காணப்படும் திட்டுக்கள் போன்று பல திட்டுக்கள் மன்னார் மற்றும் ராமேஸ்வரம் கடல் பகுதிகளில் உண்டு. கச்சதீவு கூட இப்படியான் ஒரு திட்டுதான்.
திட்டுக்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது போன்றும் அவற்றில் நீரின் உயரம் 6 இஞ்ச் என்றும் காட்டுகிறார்கள். இது தவறு.
திட்டுக்களுக்கிடையே ஆழமான பகுதி மட்டுமல்ல கடுமையான நீரோட்டமும் உண்டு. எனவே படத்தில் காட்டுவது போன்று நடந்து செல்ல முடியாது.
ராமர் பாலம் என்பது மக்களின் நம்பிக்கை என்றும் அதனால் அதை உடைக்கக்கூடாது என்கிறார்கள்.
உலகம் தட்டையானது என்றுகூட மக்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அது உடைக்கப்பட்டது.
அதேபோன்று ராமர் கட்டிய பாலம் என்ற நம்பிக்கையும் விஞ்ஞானபூர்வமாக உடைக்கப்பட வேண்டும்.
ஆனால் ஆரியர்கள் அன்று ராமாயணம் என்ற இதிகாசம் மூலம் உருவாக்கிய நம்பிக்கையை இன்றும் தமிழன் பணத்தில் கட்டிக்காக்க முனைகிறார்கள்.
ஆரியர் எப்போதும் தந்திரசாலிகளாகவே இருக்கின்றனர்.
பிரிட்டனில் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமன்றி
பிரிட்டனில் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமன்றி ஒவ்வொரு மாதமும் சுமார் பத்தாயிரம் ரூபா உதவி தொகை 16 வயதுவரை வழங்கப்பட்டு வருகிறது.
இது நன்கு தெரிந்தும் எதற்காக இவர் திராவிடமாடல் கதை விடுகிறார்?
பாவம். இவருக்கும் பசிக்கும்தானே?
முதலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சுப்பக்கா
முதலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சுப்பக்கா வெளியேற்றப்பட்டார்.
இப்போது ராதாகிருஸ்ணன் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
வெகுவிரைவில் இந்நிலை சுபவீ, வீரமணி போன்றவர்களுக்கும் ஏற்படும்.
ஈழத் தமிழருக்கு எதிரான திமுக வின் சுயரூபம் விரைவில் அனைவரும் அறிவர்.
ஒன்று சேர்வோம்
ஒன்று சேர்வோம்
ஒருமித்து குரல் கொடுப்போம்
இந்தி திணிப்பை முறியடிப்போம்
எந்தவிலை கொடுத்தேனும் தாய்மொழி தமிழைக் காப்போம்
குறிப்பு - ஈழத்தில் யாழ் இந்திய தூதர் மேற்கொள்ளும் இந்தி திணிப்பை எதிர்ப்போம்.
நடந்தவற்றை மாற்ற முடியாது
நடந்தவற்றை மாற்ற முடியாது
ஆனால் மறக்க முடியும்
மறக்க முடியாதவற்றை மன்னிக்க முடியும்
ஆனால் எம்மால்
மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை
கண்ணில் முட்டும் கண்ணீரைக்கூட சிந்த முடியவில்லை
நெஞ்சில் கணன்றுகொண்டிருக்கும் அந்த பெருநெருப்பை அணைத்துவிடுமோ என்று அச்சமாய் உள்ளது.
தாய் பாதுசாம்மாள் 2வது நினைவு தினம்
•தாய் பாதுசாம்மாள் 2வது நினைவு தினம்
1987.09.01 யன்று எந்த தாயும் தன் வாழ்நாளில் கேட்க விரும்பாத செய்தியை அந்த தாய் கேட்டார்.
தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி எந்த தாயும் கேட்க விரும்பாத செய்தி மட்டுமல்ல, அது தாங்க முடியாத கொடுமையும் கூட.
மகன் இறந்து விட்டான் என்றாலே பொதுவாக எந்த தாயும் தாங்கமாட்டார். அதுவும் தனது ஒரேயொரு மகன் வங்கி கொள்ளையன் என்று அடித்துக் கொல்லப்பட்டான் என்றால் எந்த தாயால் தாங்க முடியும்?
ஆம். அந்த கொடும் துயரை 33 வருடங்களாக சுமந்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. தோழர் தமிழரசனின் தாயாரே.
தான் வறுமையில் வாடிய போதும் தன் மகன் எதிர்காலத்தில் வசதியாக வாழ வேண்டும் என்று கோவை பொறியியல் கல்லூரியில் விட்டுப் படிப்பித்தவர் இந்த தாய்.
தான் ஆசையாக பெற்று வளர்த்த மகன் போராட்ட வாழ்வை தேர்ந்தெடுத்தபோதும் அதையிட்டு அவர் ஏமாற்றம் அடையவில்லை.
மகனை தேடி வரும் பொலிசார் அவர் கிடைக்கவில்லை என்றவுடன் ஏமாற்றத்தில் தன்னை சித்திரவதை செய்தபோதும் அவர் மகன் மீது கோபம் கொண்டதில்லை.
நீண்ட சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்த மகன் மீண்டும் போராடச் சென்றபோதுகூட அவர் “போராட்டத்தை விட்டுவிடு” என்று மகனிடம் கூறியதில்லை.
அத்தகைய தாயாரிடம் வந்து “உங்க மகன் தமிழரசன் இறந்துவிட்டான்” என்று கூறியபோது அவர் எந்தளவு வேதனையை அனுபவித்திருப்பார்?
இவரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என விரும்பினேன். முடியவில்லை.
ஆனாலும் அவர் மகன் தமிழரசன் குறித்து நான் எழுதிய நூலையாவது அவரிடம் சேர்ப்பிக்க முடிந்ததையிட்டு ஆறுதல் அடைகிறேன்.
அந்த தாயாரின் இரண்டாவது நினைவு தினம் இன்று ஆகும். அவருக்கு என் அஞ்சலிகள்.
தாய் பாதுசாம்மாள்!
தாய் பாதுசாம்மாள்!
ஒரு போராளியாக இருப்பது கடினம் என்றால் அதைவிடக் கடினமானது அப் போராளியின் தாயாக இருப்பது.
அத்தகைய கடின வாழ்வையே இந்த தாய் இறுதிவரை அனுபவித்தார்.
பொதுவாக போராளியின் தியாகமே மதிக்கப்படும். அதையே வரலாறும் நினைவு கொள்ளும்.
ஆனால் அந்த போராளியை பெற்றெடுத்த தாயை வரலாறு நினைவு கூர்வதில்லை.
ஆனால் ஆச்சரியப்படும்வகையில் பெரும்திரளான தமிழ்மக்கள் இத் தாய்க்கு உரிய மரியாதையுடன் விடை கொடுத்துள்ளனர்.
ஈன்ற பொழுதைக் காட்டிலும் தன் மகனை சான்றோன் எனக் கேட்கும்போதே தாய் அதிக மகிழ்ச்சி அடைவாள் என்கிறார்கள்.
ஆனால் இந்த தாய் தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியுடன் கூடவே கொள்ளையன் என அடித்தக் கொல்லப்பட்டான் என்ற அவப் பெயரையும் சேர்த்தே கேட்டார்.
33 ஆண்டுகள் கழிந்தன. இந்த தாய் எதிர்பார்த்த அங்கீகாரத்தை வரலாறு வழங்கியது.
ஆம் தன் மகன் தமிழ்நாட்டில் தமிழ் தேசிய தலைவராக மதிக்கப்படுவதை கண்டுவிட்டே அவர் உயிர் பிரிந்துள்ளது.
இன்று அவரது இரண்டாவது நினைவு தினம் ஆகும். அவருக்கு எமது அஞ்சலிகள்.
தமிழா!
தமிழா!
கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது
வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது
காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது
முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது
நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு
கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது
நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது
அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது
தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் தமிழா! நீ அதை ஆள முடியாது!
இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல் அடிமையாகவே கிடக்கப் போகிறாய் தமிழா!
தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்
•தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்
இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்!
லக்ஸ்மன் கதிர்காமர் - இவர் ஒரு தமிழர். இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை.
இவரை நியமன எம்.பி யாக்கி இவருக்கு வெளிநாட்டு அமைச்சு பதவியை சந்திரிக்கா அரசு வழங்கியிருந்தது.
சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து செம்மணியில் புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தியை பயங்கரவாதி என்று கூசாமல் இவர் பொய் சொன்னார்.
இவர் சிங்கள அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகம் முழுவதும் சென்று நியாயப்படுத்தினார்..
அதாவது இவரை தமிழ் மக்களை அழிப்பதற்குரிய கோடரிக்காம்பாக சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக்கொண்டது.
இவர் கொல்லப்பட்டபோது இலங்கை அரசு உட்பட பல சர்வதேச நாடுகளும் கண்டித்தன. ஒரு வெளிநாட்டு அமைச்சரை கொன்றது தவறு என்று அவர்கள் கூறினார்கள்.
ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் தனது அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை அரசால் விமானம் மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார்.
தவறுதலாக தமிழ்செல்வன் மீது குண்டு போட்டுவிட்டோம் என இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவேளை “எமது இலக்கு தமிழ்செல்வனே. தெரிந்தே அவர் மீது குண்டு வீசிக் கொன்றோம்” என்று இலங்கை அரசு இறுமாப்பாக கூறியது.
இங்கு எமது நோக்கம் இவர்களின் கொலை சரியா? பிழையா? என்று ஆராய்வதல்ல.
மாறாக, கதிர்காமருக்கு ஒரு நியாயம். தமிழ் செல்வனுக்கு இன்னொரு நியாயம். இது என்ன நியாயம் ? என்று கேட்பதே.
ஏனெனில் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டபோது ஒரு வெளிநாட்டு அமைச்சரைக் கொன்றது தவறு என்று கண்டனம் தெரிவித்த எவரும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு அரசியல்துறை பொறுப்பாளரைக் கொன்றது தவறு என்று கூறவில்லை.
சிலர் “தமிழ்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராய் இருந்தாலும் அவரும் புலிதானே. எனவே அவரும் பயங்கரவாதிதான். அதனால் அவரை குண்டு வீசிக் கொன்றது சரிதான்” என்பார்கள்.
இப்படி கூறுபவர்களிடம் உரையாடுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் இவர்கள்தான் “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் பத்து வயது மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். எனவே அந்த சிறுவனைக் கொன்றதும் சரிதான்” என கூறிக் கொண்டிருப்பவர்கள்.
குறிப்பு - இன்று (02.11.2022) தமிழ்செல்வனின் நினைவுதினம் ஆகும்.
ரஜனி கன்னடர்.
ரஜனி கன்னடர். அவர் தனது இனத்திற்கு துரோகம் செய்யவில்லை. விசுவாசமாக இருக்கிறார். அதனால்தான் ஒரு கன்னட அமைச்சர் பெருமையுடன் குடை பிடிக்கிறார். ஆனால் இந்த நடிகர் ரஜனி தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தமிழன் சோற்றை சாப்பிட்டுக்கொண்டு தமிழனுக்கு எதிராக கருத்து கூறுவதுதான் எரிச்சலாக இருக்கிறது.
குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது
குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது
அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே?
குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை?
அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை.
குழந்தை- ஏன் வேலை போய்விட்டது?
அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள்.
மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது.
இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர்.
சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும்.
இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது.
இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை.
பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது.
ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும். அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள்.
எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும்.
எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்க முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார்.
உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
எட்டு வருடங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருந்த
எட்டு வருடங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ்த்தேசிய உணர்வாளர் தோழர் திருச்செல்வம் இன்று சேலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்
திராவிட முதல்வரின் இந்த திடீர் அறிவிப்பிற்கு காரணம்,
திராவிட முதல்வரின் இந்த திடீர் அறிவிப்பிற்கு காரணம், உண்மையில் மன்னர் ராஜராஜன் மீதான மதிப்பா? அல்லது “நாம் தமிழர்” சீமான் அடைந்துவரும் வளர்ச்சி கண்டு அச்சமா?
ஆழ்ந்த இரங்கல்கள்
•ஆழ்ந்த இரங்கல்கள்
தமிழ்த்தேசிய உணர்வாளர் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் மரணமடைந்துள்ளார்.
தமிழீழ விடுதலை மற்றும் தமிழ்நாடு விடுதலைக்கு ஆதரவு வழங்கியவர்.
அவருக்கு எமது அஞ்சலிகள்
நாம் தோற்றுப் போய்விட்டோமா?
நாம் தோற்றுப் போய்விட்டோமா?
குத்துச்சண்டையில் ஒருவர் விழுந்தவுடன் தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. மாறாக பத்து எண்ணுவதற்குள் மீண்டும் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி அறிவிக்கப்படும்.
அதேபோல் இனவிடுதலைப் போராட்டத்திலும் ஒரு இனம் விழுந்தவுடன் தோல்வியடைந்துவிட்டது என கருதுவதில்லை. மாறாக மீண்டும் எழுந்திருக்கவில்லை என்றால்தான் அது தோல்வி அடைந்துவிட்டதாக கருதப்படும்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் அழிவு என்பது ஒரு பின்னடைவேயொழிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான தோல்வி அல்ல.
ஏனெனில் போராட்டம் வெற்றியை தராது போகலாம். ஆனால் அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது என்பது மறுபுறத்து உண்மையாகும்.
பொதுவாகவே ஒரு மனிதன் பிறக்கும்போதே போராட்டத்துடனே பிறக்கிறான்.
அவன் பூமியில் பிறந்தவுடன் செய்யும் முதல் போராட்டமே அழுகைதான். அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும் என்கிறார்கள்.
அதுபோலவே பிறக்கும்போதே போராட்டத்துடன் பிறக்கும் மனிதன் இறக்கும்வரை போராட்டத்துடனே வாழ்கிறான்.
ஒருவன் போராட தயங்கினால் அவன் வாழ்வதற்கு உரிய தகுதியை இழந்துவிடுவான்.
எப்படி ஓடாத மான் வாழ முடியாமல் அழிந்துவிடுமோ அதுபோலவே போராடாத இனமும் வாழ முடியாமல் அழிந்துவிடும்.
எனவே தமிழ் இனமும் அழியாமல் இத்தனை காலமும் வாழ்ந்து வருகிறது என்றால் அது இத்தனை காலமும் போராடி வருகின்றது என்றே பொருள்.
எனவே இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டுமென்றால் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே அடிப்படையாகும்.
ஏடறிந்த வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தமிழ் இனம் போர்த்துக்கேயருக்கு எதிராக, ஒல்லாந்தருக்கு எதிராக ஆங்கிலேயருக்கு எதிராக எல்லாம் தொடர்ந்து போராடியதை அறிய முடியும்.
இத்தகைய வீரம் செறிந்த போராட்ட குணாம்சமே தொடர்ந்தும் இலங்கை மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் இனத்தை போராட வைக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
எனவேதான் தமிழ் மக்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளாதவரை வெற்றிவிழாக் கொண்டாடியவர்களால் வெற்றியை அனுபவிக்க முடியவில்லை.
அதனால்தான் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தோல்வியை ஒத்துக்கொள்ளும்டி தமிழ் மக்களை நிர்ப்பந்திக்கின்றனர்.
ஆனால் அவர்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் இதுவரை தோற்கவில்லை. இனியும் தோற்கப்போவதில்லை.
குறிப்பு - இதைப் படித்தவுடன் இத்தனை காலமும் போராடி கண்ட பலன் என்ன அழிவைத் தவிர என்று சிலர் மனதில் கேள்வி எழுக்கூடும். அவர்களுக்கான பதில் அடுத்த பதிவில்.
உனது நிலம் உனக்கு சொந்தம் இல்லை.
உனது நிலம் உனக்கு சொந்தம் இல்லை. ஏனெனில் நீ தமிழன்
உனது இனத்திற்கு சமவுரிமை இல்லை. ஏனெனில் நீ தமிழன்
உனது இனம் படுகொலைக்கு நீதி இல்லை. ஏனெனில் நீ தமிழன்.
உனது உறவுகள் சிறையில் இருந்து விடுதலை இல்லை. ஏனெனில் நீ தமிழன்
உனது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து எந்த பதிலும் இல்லை. ஏனெனில் நீ தமிழன்.
உனக்காக மரணித்த உனது உறவுகளை நினைவுகூரக்கூட உனக்கு அனுமதி இல்லை. ஏனெனில் நீ தமிழன்.
குறிப்பு – ஜேவிபி தமது கார்த்திகை வீரர்களை நிரைனவுகூர அனுமதி உண்டு. ஆனால் தமிழர்கள் தமக்காக இறந்தவர்களை நினைவுகூர அனுமதி மறுப்பு.
வரலாறு நல்ல மனிதர்களின் வருகைக்காக
“வரலாறு நல்ல மனிதர்களின் வருகைக்காக ஒருபோதும் காத்திருப்பதில்லை. இருப்பவர்களில் ஒருவரை தேர்வு செய்து பயணிக்கிறது” – எங்கெல்ஸ்
இந்த (அரசியல்) விவசாயி
இந்த (அரசியல்) விவசாயி இந்த வருடம் ஏதாவது விதைத்திருக்கிறாரா தமிழ் மக்கள் அறுவடை செய்வதற்கு?
என்னது , இத்தனை நாளும்
என்னது , இத்தனை நாளும் உலக தமிழின தலைவர் என்று கூறப்பட்டவர் தமிழர் இல்லையா? வீட்டில் தெலுங்கு பேசுபவரா?
அதனால்தான் ஈழத்தில் தமிழினம் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது கடற்கரையில் உண்ணாவிரத நாடகம் ஆடினாரா?
என்னே கொடுமை இது?
ரஸ்சிய புரட்சி !
• ரஸ்சிய புரட்சி !
உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என்பது விடை காணவேண்டிய வினாவாக இன்றும் இருக்கலாம்.
ஆனால் மார்க்சின் பின்னரான இந்த 150 ஆண்டு காலப் போராட்டங்களும் வென்றெடுப்புகளும் முதலாளித்துவத்திற்கான ஒரே மாற்று மார்க்சிசமும் சோசலிசமுமே என்பதை நிரூபித்துள்ளன.
மார்க்சிசம் அது தோற்றம் பெற்ற அதே இடத்தில் அப்படியே இருந்து வந்த ஒன்றல்ல. அது தனது விஞ்ஞான அடிப்படை காரணமாக வளர்ச்சியுற்றது.
மாபெரும் அக்டோபர் புரட்சி மூலமாக அது லெனினிசமாக வளர்ச்சி கண்டது.
சீனப்புரட்சியின் ஊடாக மாஓசேதுங் சிந்தனையாக அது மேலும் விரிவு கண்டது.
இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மார்க்சிசம் வளர்ச்சி பெற்று வருகின்றது.
இன்றைய உலகமயமாதல் சூழலிலே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி மார்க்சிசம் நிற்கின்றது.
அது ட்ராக்சியவாதம், சீர்திருத்தவாதம், நவீன திரிபுவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் விட்டுக்கொடுக்காத இடையறாத போராட்டத்தை நடத்தி வருகிறது.
புரட்சி நடைபெற்ற நாடுகளில் இன்று புரட்சி அரசுகள் இல்லாமல் போயிருக்கலாம்.
ஆனால் அந்த புரட்சிகளே,
•உலகில் உழைக்கும் மக்களும் நாடாள முடியும் என்பதை நிரூபித்தன.
•உலகில் உழைக்கும் மக்களும் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நிரூபித்தன
•உலகில் உள்ள தேசிய இனங்கள் அனைத்தும் சுயநிர்ண உரிமை கொண்டவை என்றன.
•உலகில் சர்வாதிகார பாசிச ஆட்சிகளை ஒன்றுதிரண்டு தூக்கியெறிய முடியும் என்பதை நிரூபித்தன.
•உலகில் இன மத சாதி மற்றும் நிற பேதங்களை கடந்து அனைவரும் சமமான மனிதர்கள் என பறைசாற்றின.
உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் நாம் இழப்பதற்கு எதுவுமேயில்லை -ஆனால் நாம் வெல்லுவதற்கு ஒரு உலகம் இருக்கிறது!
தமிழா! மடிந்த போராளிகள்
தமிழா!
மடிந்த போராளிகள்
எமக்காக ஏங்கினார்கள்
எமக்காக போராடினார்கள்
இறுதிவரை உறுதிமாறாமல்
எமக்காகவே இறந்தார்கள்
எம் தமிழ் மொழிக்காகவும்
எம் தமிழ் இனத்திற்காகவும்
எம் தமிழ் மண்ணிற்காகவும்
தொடர்ந்து இயங்கினார்களே.
இன்று நாம் இயங்க வேண்டாமா?
மயங்கியும் தயங்கியும்
அலைந்தும் குலைந்தும்
நிலையில்லாது இயங்கும் நாம்
நமக்காக
நம்மவருக்காக
நம்முடையதற்காக
இயங்க வேண்டாமா?
அதற்கென நாம் இணைய வேண்டாமா?
அதற்குரிய உறுதியை
அதற்குரிய சூழினை
இன்று நாம் எம் உள்ளத்தில்
மேற்கொள்ள வேண்டாமா?
அவ் உறுதிக்குரிய வல்லுணர்வினை
மாவீரர்களின் நினைவுகளில் இருந்து பெறுவோமாக அதன்வழி நாம் பெருமையும் உறுவோமாக
முதலில் உரிமைகளை இழந்தோம்
பின்னர் உடமைகளை இழந்தோம்
இறுதியாக உயிர்களை இழந்தோம்
ஆனால் உணர்வுகளை இழக்கவில்லையே
மீண்டும் எழுவோம்
முன்னைவிட வலிமையாக எழுவோம் என்று கூறியதும் ஓடிவந்து வேண்டாம் இன்னொரு போர் என்பர் புலிகளாலேயே முடியவில்லை என்பர்
இனி யாரால்தான் முடியும் என்றும் கேட்பர்
புலிகள்போல் மீண்டும் வரமுடியாமல் போகலாம் ஆனால் புலிகளைவிட அதிக தூரம்
நிச்சயம் எம்மால் பார்க்க முடியும்
ஏனெனில், எமக்காக மாண்டவர்கள்
தங்கள் தோள்களில் அல்லவா
எம்மை தாங்கி நிற்கின்றனர்
என்னபடி நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து கேட்டாலும்
தாம் சொன்னபடி எதுவும் தராமல் ஏமாற்றுவதையே முதற்படியாய் கொண்டுவிட்டனர் இலங்கை அரசினர் அவர்தம் காலடியை நக்கியே
நம் தலைவர்கள் அடி பணிந்து இருக்கின்றனர் -
தமிழா!
இன்னும் இன்னபடி நீ வீழ்ந்து கிடந்தால்
எப்படித்தான் மேற்படியை எட்டுவாயோ?
எத்தனை நாள்
எத்தனை ஆண்டு
எத்தனை பேர்
எத்தனை போர்
எத்தனை தோள் திரண்டு எழுவதோ
எத்தனை பேச்சு
எத்தனை பாட்டு
எத்தனைதாம் எழுதிக் குவிப்பதோ
எத்தனை நாள் நாம் பொறுப்பது
எத்தனை பேர் நாம் இறப்பது
எத்தனைநாள் இன்னும் நாம் அடிமையாக கிடப்பதோ?
எமது மொழி
எமது இனம்
எமது மண்
மீட்பதற்கு நாமே சோர்ந்து போனால்
பின் யார்தான் முன்வருவர் எமக்காக
எம் இனம் இன்று தாழ்வுற்றுக் கிடக்கிறது
சிந்தனைத் திறன் இல்லாது சீரழிந்து குலைகிறது
பிறர் இதை எடுத்துச்சொன்னாலும் உணர்வு பெறாமலே இருக்கிறது
எவ்வளவுதான் உருகி உருகி எடுத்து கூறினாலும் செயல்படாது அடிமையாய் பணிந்து கிடக்கிறது
தமிழர் தலைமையோ பதவி நலன்களுக்காக
நம் பகைவனிடம் அண்டிப் பிழைக்கின்றது அண்டிப்பிழைக்கும் தலைமையிடம்
இன் சொல்லால் சொன்னோம்
எரிச்சலுடனும் கூறியுள்ளோம்
புண் சொல்லும் வீசினோம்
புண்படவும் சொல்லிவிட்டோம்
என்னவகை சொன்னாலும் அவர் தம் உடலில் சின்னதொரு மாற்றமும் இன்னும் ஏற்படவில்லையே
தம்மை எமது தலைவர்கள் என்றார்கள்
எம் மத்தியில் வருவதற்கு அவர்களுக்கு
சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வேண்டும்
5 கோடி ரூபா சொகுசு வாகனம் வேண்டும்
கொழும்பில் சொகுசு பங்களா வேண்டும்
தேர்தலில் தம்மை தெரிவு செய்தால்
ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார்கள்
அவர்களுக்கு எல்லாம் வந்தது -
ஆனால் எமக்குத்தான் ஒரு ம- - ம் வரவில்லையே!
யுத்தம் முடிந்து 13 வருடமாச்சு
காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை
இடம்பெயர்ந்தோர் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை
அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை
ஆனால், கிழக்கில் சிங்கள குடியேற்றம்
வடக்கில் பௌத்த விகாரைகள்
நாளுக்கு நாள் அரங்கேறுது
ஒருபுறம் சிங்கள ஆக்கிரமிப்பு
மறுபுறம் இந்திய ஆக்கிரமிப்பு
தமிழன் தன் மண்ணில் நீட்டி நிமிர்ந்து
நிம்மதியாக உறங்க முடியவில்லையே
ஏய் தமிழா!
அன்று ஒரு பெரு நிலம் உனக்கிருந்தது அறிவாயோ இன்று அரைக் காணி நிலத்திற்கு வேலிச் சண்டை போடுகிறாயே
எல்லா இனமும் தாய் மொழியில் பேசும்
நீ பேசுவது மொழிகளின் தாய் மொழியில் என்பதையாவது நீ அறிவாயோ?
நீ வீழ்ந்து கிடப்பது எதிரியின் பலத்தால் அல்ல
உன் பலத்தை அறியாததால்
தன் பலம் அறியாமல் யானை
கோவில் வாசலில் பிச்சை எடுப்பதுபோல்
உன் பலம் அறியாமல் அடிமையாக வீழ்ந்து கிடக்கிறாய்
போர்த்துக்கேயரை விரட்டியவன் நீ
ஒல்லாந்தரை விரட்டியவன் நீ
ஆங்கிலேயரை விரட்டியவன் நீ
ஆக்கிரமிப்பாளர்கள் எல்லாரையும் விரட்டிய
வீரம் செறிந்த வரலாற்றைக் கொண்டவன் நீ.
ஆனால் இன்று, பல்லி சொல்லுக்கு பலன் அறிய பஞ்சாங்கத்தை தேடிக்கொண்டிருக்கிறாயே?
குட்டக் குட்டக் குனிந்துகொடுக்கும் முட்டாள் தமிழனே மூடப் பிறவியே ஒன்று கேள் நீ ஒரு ஊமைப் பிறவியல்லன் தொன்று தொட்டு தொழும் அடிமைப் பிறவியும் அல்லன் அன்று உன் கொடி உன் மண்ணில் நிமிர்ந்து பறந்ததே இன்று உன் தலை குனிந்து தாழ்ந்து கிடக்கிறதே
ஏய் தமிழா!
எந்த நிலை வரினும் ஏற்றம் தளரோம்
நாம் சோர்வுற்றபோது மாவீரரை நினைத்தெழுவோம் என்ன துயர் வரினும் ஏற்ற பணி முடிப்போம்
அன்னை தமிழ் மீது அருஞ்சூழ் உரைத் தெழுவோம் துரோகிகள் எமை தாழ்த்தி வீழ்த்திடினும்
எம் இனத்திற்கு உழைப்பதே கொள்கை என்போம்
இலங்கை அரசால் செத்தாலும்
இந்திய அரசால் செத்தாலும்
தமிழ் இன விடுதலை ஒன்றே நம் இலக்கு என்போம் வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழருக்கும் வாழ்வோம் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ் பொருட்டே ஆவோம்
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வோம் தனியேதான் நின்றாலும் எம் கொள்கையில் மாற மாட்டோம்
சூழ்ந்தாலும் தமிழ் சுற்றம் சூழ்ந்து உரிமை கேட்போம் சூழ்ச்சியினால் எம் உடலை கூறாக்கினாலும் முடிவு அந்த முடிவே
புதைத்தாலும் எரித்தாலும் அணுக்கள் எல்லாம் அதுவே!
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது
வடக்கு வாழ்கிறது
தெற்கு தேய்கிறது
இத்தனை கோடி ரூபாக்களை வரியாக செலுத்தி
தமிழ்நாடு கண்ட நன்மை என்ன?
அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள்
அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டுபேர் விடுதலை செய்யப்பட்டதில் லைகா முதலாளியின் பங்கு குறித்து விமர்சனம் இருக்கலாம்.
ஆனால் விடுதலை செய்யப்பட்ட அவ் அரசியல் கைதிகளுக்கு அவர் தலா 25 லட்சம் ரூபா வழங்கியது உண்மையில் பாராட்டுக்குரியது.
வாழ்த்துக்கள்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழில் பேசாதவர்களை கமலஹாசன் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்யும்போதே நன்கு தமிழ் பேசும் நபர்களை தெரிவு செய்திருக்கலாமே?
தமிழக முதல்வர் வீட்டில் தெலுங்கு மொழி பேசுவதாக ஆளுனர் தமிழிசை சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இன்னொருபுறம் பிக்பாஸ் வீட்டில் சிலர் மலையாளம் பேசியதை கமல் கண்டித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் தமிழ் மொழி பற்றிய இந்த விழிப்புணர்வுக்கு “நாம் தமிழர்” வளர்ச்சி காரணமாக இருக்குமா?
பூனை கறுப்பா அல்லது வெள்ளையா
பூனை கறுப்பா அல்லது வெள்ளையா என்பது பிரச்சனை இல்லை.
மாறாக அது எலி பிடிக்கிறதா இல்லையா என்பதே முக்கியம்.
அதேபோன்று நிகழ்வின் பெயர் நினைவெழுச்சிநாளா அல்லது மாவீரர் நாளா என்பது முக்கியம் இல்லை.
மாறாக அங்கு உண்மையில் எமக்காக மாண்டவர்கள் நினைவு கூரப்படுகின்றனரா என்பதே முக்கியம்.
ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்?
ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்?
ரவிராஜ் கொலைக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை?
ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடியவரா? இல்லை
ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தாரா? இல்லை
ரவிராஜ் ஏதாவது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்தவராக குற்றம் சாட்டப்பட்டாரா? இல்லை
ரவிராஜ் ஒரு தேடப்பட்ட சந்தேக நபரா? அல்லது குற்றவாளியா? இல்லை
அப்படியாயின் ரவிராஜ் ஏன் இலங்கை அரசால் கொல்லப்பட்டார்?
கொல்லப்படும் அளவிற்கு ரவிராஜ் செய்த தவறுதான் என்ன?
ரவிராஜ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
அவர் புலிகள் அமைப்பை ஆதரித்தார். புலிகள் அமைப்பை ஆதரித்தது தவறு என்றால் ஏன் மற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுடப்படவில்லை?
எல்லா தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் புலிகளின் ஆதரவுடன்தானே பதவியைப் பெற்றவர்கள்.
புலிகள்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று சொன்ன சம்பந்தர் ஐயாவையல்லவா இலங்கை அரசு முதலில் சுட்டிருக்க வேண்டும்
ரவிராஜ் கொல்லப்படுவதற்கு ஒரே காரணம் அவர் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சனையைக் கூறியதே.
ரவிராஜ் பேச்சுகள் மூலம் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நியாயங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தமையினாலே அவர் கொல்லப்பட்டார்.
இனவாதம் மூலம் ஆட்சி செய்யும் இலங்கை அரசு அந்த இனவாதத்தை இல்லாமல் செய்யும் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்காது.
இனங்களுக்கடையே நல்லிணக்கம் ஏற்படுவதை இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசும்கூட அனுமதிக்காது.
முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் பௌத்த இனவாதிகளுடன் சிங்கள மொழியில் விவாதம் செய்து அவர்களை அம்பலப்படுத்தினார்.
அதனாலேயே அஸ்ரப் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.
தன்னை சந்தித்த சிங்கள மக்களிடம் சிங்கள மொழியில் தமிழர் நியாயங்களை தான் கூறியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் சிங்களப் பகுதிகளில் வந்து அவற்றை கூறும்படி தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் மாகாணசபை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியிருந்தார்.
அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் கொல்ல வேண்டும் என்றும் இனவாதிகள் கத்தினார்கள்.
தமிழ் தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழர் பிரச்சனையை காலம் காலமாக இந்தியாவுக்கு கூறியிருக்கிறார்கள்.
அமெரிக்கா பிரிட்டனுக்கு எல்லாம் கூறியிருக்கிறார்கள். ஆனால் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் நியாயங்களை கூற அவர்கள் முயற்சி செய்யவில்லை.
ஆனால் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ ஒருவேளை தமிழ் மக்களுக்கு ஏதும் தீர்வைப் பெற்றுத்தர முன்வந்தாலும் சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
ஏனவே இனியாவது காலம் சென்ற ரவிராஜ் காட்டிய பாதையில் சிங்கள மக்களுக்கு எமது பிரச்சனைகளை எடுத்துக் கூறுவோம்.
அவர்களை இனவாத ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து வென்றெடுப்போம்.
குறிப்பு- ரவிராஜ் கொல்லப்பட்ட தினம் (10.11.2022)இன்று. ரவிராஜ்க்கு சிலை வைத்த தமிழ்தேசியகூட்டமைப்பால் அவரின் கொலைக்குரிய நீதியை இன்னும் பெறவில்லை. தமது பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைக்கு நீதி பெற முடியாதவர்கள் தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதி பெற்று தருவார்கள் என எப்படி நம்புவது?
எதை அறுவடை செய்ய விரும்புகிறாரோ
எதை அறுவடை செய்ய விரும்புகிறாரோ
அதை அவர் நன்றாகவே விதைக்கிறார்
இடி முழக்கம் கேட்கிறது
வசந்தம் வருவதை இனி யாராலும் தடுக்க முடியாது
#பிறந்தநாள் வாழ்த்துக்கள்
யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையகம் சென்று
யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையகம் சென்று மலையக மக்கள் விடுதலை முன்னணி (ULO)அமைத்து போராடியவேளை இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்டவர் தோழர் நெப்போலியன்.
ஈழப் போராளிகள் மலையக மக்கள் பற்றி அக்கறை கொள்ளவில்லை என பிரச்சாரம் செய்யும் திராவிடம் இந்த வரலாறு அறிவார்களா?
இந்திய அரசின் எற்பாட்டில் ஈழப் போராளிகள் சிங்கள அரசுடன் திம்புவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது வைத்த முதல் கோரிக்கை மலையக தமிழருக்கு பிரஜாவுரிமை வழங்க வேண்டும் என்பதே.
அதனாலேயே வேறு வழியின்றி அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனா மலையக மக்களுக்கு பிராஜாவுரிமை வழங்கினார்.
இனியாவது இந்த வரலாறுகளை அறிந்துவிட்டு (200 ரூபா) திராவிடம் பேச வேண்டும்.
ஏழு தமிழரில் முதலில் பேரறிவாளன்
ஏழு தமிழரில் முதலில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.
இப்போது மிகுதி ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்களின் விடுதலைக்கு பலர் பங்களித்திருந்தாலும் முக்கிய காரணம் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவே
.
வாழ்த்துக்கள்.
இந்திய அரசு கோபிக்கும் என்ற பயத்தில்
இந்திய அரசு கோபிக்கும் என்ற பயத்தில் ஈழத் தமிழ் தலைவர்களே விடுதலை செய்யும்படி கோராத நிலையில், இறப்பதற்கு முன் தன் மகனை ஒருமுறை நேரில் பார்த்துவிட வேண்டும் என 31 வருடமாக காத்திருக்கும் அந்த தாயின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளனர் தமிழக மக்கள். தமிழகத்திற்கு நன்றியும் வாழ்த்துகளும்.
தமிழ்நாட்டில் ஏழு தமிழர் விடுதலைக்காக
தமிழ்நாட்டில் ஏழு தமிழர் விடுதலைக்காக செங்கொடி உயிர் நீத்தார்.
ஈழத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாணவன் செந்தூரன் உயிர் நீத்தார்.
செங்கொடி விருப்பம் நிறைவேறிவிட்டது. செந்தூரன் விருப்பம் எப்போது நிறைவேறும்?
26.11.2015 யன்று மாணவன் செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தன் உயிர் நீத்தார்.
உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 4
உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 4 ஈழத்தமிழர்கள் தமிழக திராவிட அரசால் சிறையைவிடக் கொடிய சிறப்புமுகாமில் அடைப்பு.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு இந்த நாலு ஈழத் தமிழர்களையும் சிறப்புமுகாமில் அடைத்திருப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.
இந்த எழுவர் விடுதலைக்கு திமுக அரசே காரணம் என்று உரிமை கோரியவர்கள் இப்போது இந்த இந்த நால்வரையும் சிறப்புமுகாமில் அடைத்தது தமிழக திராவிட அரசு என்பதை ஏற்றுக்கொள்வார்களா?
நாடு திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகளையே சிறப்புமுகாமில் அடைக்க முடியும். ஆனால் சாந்தன் இலங்கை திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்தும் அவரை சிறப்புமுகாமில் அடைத்திருப்பது தமிழக திராவிட அரசின் வன்மத்தைக் காட்டுகிறது.
1990ம் ஆண்டு இந்த கொடிய சிறப்புமுகாமை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. இப்போது மகன் ஸ்டாலின் அந்த சிறப்புமுகாமில் தொடர்ந்து ஈழத் தமிழர்களை அடைத்து சித்திரவதை செய்கிறார்.
இதுதான் திராவிட திமுக அரசு ஈழத் தமிழர் மீது காட்டும் அக்கறை என்பதை உலகம் அறிந்து கொள்ளட்டும்.
விடுதலையான ஜெயக்குமார் மற்றும் ராபட்பயஸ்
விடுதலையான ஜெயக்குமார் மற்றும் ராபட்பயஸ் இருவருடனும் பேசவிடாது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் காவல்துறையால் தடுப்பு.
நளினி தன் கணவர் முருகனுடன் பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
திராவிட முதல்வரின் தமிழக காவல்துறை எதற்கு இந்தளவு கடும் கெடுபிடியை காட்டுகிறது?
வீட்டில் தெலுங்குபேசும் தமிழக திராவிட முதல்வர் ஈழத் தமிழர் மீது ஏன் இந்தளவு வன்மம் காட்டுகிறார்?
இப்போது புரிகிறதா சுப்பக்கா ஏன் திமுக வில்
இப்போது புரிகிறதா சுப்பக்கா ஏன் திமுக வில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார் என்று?
வீட்டில் தெலுங்கு பேசுவோரின் தலைமையில் திமுக இருக்கும்வரை உண்மை பேசும் தமிழ் உணர்வாளருக்கு அங்கு இடம் இருக்காது.
“தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா”
“தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்தது என்பதற்கு இந்த செய்தி சிறந்த உதாரணம்.
30 வருடமாக சிறையில் இருந்தவர்கள் மீது திடீரென்று எப்படி இந்த வழக்கு வந்தது?
எந்தவித வழக்கு இல்லாதவர்கள்கூட சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை தினத்தந்தி இதுவரை அறியவில்லையா?
சிறப்புமுகாம் என்னும் பெயரில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைககளை மூடி மறைக்க தமிழக அரசு கூறும் பொய் இது.
இனியாவது திராவிட அரசின் இச் சிறப்புமுகாம் கொடுமைகளை உலகம் அறியட்டும்.
சாதாரண அகதிமுகாமுக்கும் சிறப்புமுகாமுக்கும்
சாதாரண அகதிமுகாமுக்கும் சிறப்புமுகாமுக்கும் வித்தியாசம் தெரியாமல் (200 ரூபா) திராவிட உ.பிஸ் உருட்டுகிறார்கள்.
கீழ்வரும் இணைப்பில் நான் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்” நூலின் PDF பிரதி உள்ளது. இனியாவது படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://noolaham.org/.../%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0...
மதிமாறன் அவர்களே!
மதிமாறன் அவர்களே!
உண்மைதான். சிலம்பு காணாமற்போனபோதே நாம் கலைஞரை நினைத்திருக்க வேண்டும் என்கிறீர்களா ?
பாவம், உங்களுக்கும் பசிக்கும்தானே!
இந்திய தூதரின் இந்தி திணிப்பு
இந்திய தூதரின் இந்தி திணிப்பு, இந்திய ஆக்கிரமிப்பு, போதைப்பொருள் விநியோகம் என்பனவற்றால் இயல்பாக உருவான மக்கள் எதிர்ப்பின் தாக்குதலா? அல்லது, அறுவர் விடுதலையால் எரிச்சல் அடைந்துள்ள சிங்கள ராணுவ உளவுப்படையினரின் சதித் தாக்குதாலா? என்பதை ஆராய வேண்டும்.
தமிழ்நாட்டில் வீட்டில் தெலுங்கு பேசுவோர்
தமிழ்நாட்டில் வீட்டில் தெலுங்கு பேசுவோர் “நாம் எல்லாம் திராவிடர்” என்று கூறுகின்றனர். ஆனால் இவர்கள் ஆந்திரா சென்று அங்குள்ள தெலுங்கர்கள் மத்தியில் “நாம் எல்லாம் திராவிடர்”என்று சொல்வதில்லை. அது ஏன்?
ஒரு சந்தேகம்!
ஒரு சந்தேகம்!
தெலுங்கு நடிகரின் மரணத்திற்கு தமிழக திராவிட முதல்வர் இரங்கல் தெரிவிப்பது வீட்டில் தெலுங்கு பேசுவது காரணமாக இருக்குமா?
குறிப்பு – தமிழக முதல்வர் வீட்டில் தெலுங்கு பேசுகிறார்கள் என்று நான் கூறவில்லை. ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
பதவியில் இருக்கும் முதல்வர், அமைச்சர்கள்,
பதவியில் இருக்கும் முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்வரை அரசு மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு நல்ல சிகிச்சை ஒருபோதும் கிடைக்காது
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர் கொலை,
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர் கொலை, 800க்கு மேற்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு , பல கோடி ரூபா பெறுமதியான உடமைகள் அழிப்பு, இத்தனைக்கும் காரணமான குற்றவாளி ராஜீவ்காந்தியை நீங்கள் கொண்டாடுவதை என்னவென்று அழைப்பது மேடம்?
ஆட்சிக்கு வந்து இரண்டு வருடமாகிறது.
ஆட்சிக்கு வந்து இரண்டு வருடமாகிறது. இன்னும் இவர்கள் முதல் கையெழுத்து போடவில்லையா?
நீதி – மக்களை ஏமாற்ற வேண்டுமென்றால் முதலில் மக்களின் ஆசையை தூண்ட வேண்டும்.
ராஜீவ் காந்தி ஒரு சிங்களவனைக்கூட
ராஜீவ் காந்தி ஒரு சிங்களவனைக்கூட கொலை செய்யவில்லை. ஆனாலும் சிங்கள சிப்பாய் ராஜீவ் காந்தியை மண்டையில் அடித்து கொல்ல முயன்றான். அந்த சிங்களவனை சிங்கள அரசு பொதுமன்னிப்பில் விடுதலை செய்தபோது ஒரு காங்கிரஸ்காரன்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது ஏன்?
ராஜீவ் காந்தியை மண்டையில்
ராஜீவ் காந்தியை மண்டையில் அடித்து கொல்ல முயன்ற சிங்கள சிப்பாயை சிங்களவர்கள் கொண்டாடியபோது குற்றவாளியை கொண்டாடுவது தவறு என்று ஒரு காங்கிரஸ்காரன்கூட தெரிவிக்கவில்லை. அது ஏன்?
தமிழர் மத்தியில் தமிழ்த்தேசியத்தை
தமிழர் மத்தியில் தமிழ்த்தேசியத்தை உச்சரிக்காமல் இனி யாரும் அரசியல் நடத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டதுபோல், திராவிட திமுக கூட்டணியில் இருந்துகொண்டு தமிழ்த்தேசிய இலக்கை அடைய முடியாது என்பதையும் திருமா விரைவில் உணர வேண்டும்.
#இது தமிழ்த்தேசியத்தின் காலம்
பேரன் இன்பநிதி வெளிநாட்டில் காற்பந்து விளையாட சென்ற
பேரன் இன்பநிதி வெளிநாட்டில் காற்பந்து விளையாட சென்ற போது விமானநிலையம் வரை சென்று வழி அனுப்பிய திராவிட முதல்வருக்கு,
திராவிடமாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா இறப்பிற்கு ஒரு இரங்கல் செய்தி கூட சொல்ல நேரமில்லையா?
தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
•"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் பிறந்த தினம் 19.11.1967ஆகும்.
அவர் மற்றவர்கள் போல் வாழ விரும்பியிருந்தால் இன்று தன் குடும்பத்துடன் 55வது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார்.
ஆனால் தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார்.
தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின்.
தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.
தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார் .
தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார்.
தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார்.
தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.
மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும்.
தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
இந்துத் தமிழீழம் கேட்டால்
இந்துத் தமிழீழம் கேட்டால் மோடி அரசு உதவும் என்று கூறுபவர்கள் இதற்கு என்ன கூறப்போகிறார்கள்?
காங்கிரஸ் மட்டுமல்ல பாஜக வும் தமிழர் விரோத கட்சிதான் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய தருணம் இது.
இவர் டிக்கட் இன்றி ரயிலில் வரவில்லை
இவர் டிக்கட் இன்றி ரயிலில் வரவில்லை. தன் குடும்பத்திற்கு 45000கோடி ரூபா சொத்து சுருட்டவில்லை.
கோடிக்கணக்கான தன் சொத்தை தமிழ் மக்களுக்காக இழந்தார் பல வருடம் சிறையில் வாடினார்.
இவர் வீட்டில் தெலுங்கு பேசவில்லை. அதனால்தான் என்னவோ இவரை உலக தமிழின தலைவர் என்று அழைக்கவில்லை?
மெரினா கடற்கரையில் இவருக்கு 80 கோடி ரூபாவில் நினைவு சின்னம் தமிழக அரசு அமைக்கவில்லை?
குறிப்பு - இன்று (18.11.2022) கப்பல் ஓட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வஉசி சிதம்பரனாரின் 86வது நினைவுதினம்.
ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்ட
ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்ட வீரசர்வாக்கரைக் கொண்டாடும் மோடி அரசு தியாகி வஉசி யைக் கொண்டாடுவதில்லை.
இதற்கு வஉசி ஒரு தமிழர் என்பதைத் தவிர வேறு காரணம் ஏதும் உண்டா அண்ணாமலையாரே?
செய்தி – தமிழருக்காக மோடியின் இதயம் துடிக்கிறது – அண்ணாமலை
மனோ கணேசன் அமைச்சராக இருந்தபோது
மனோ கணேசன் அமைச்சராக இருந்தபோது தமிழ் அரசியல் கைதி தேவதாசன் உண்ணாவிரதம் இருந்தபொழுது சிறைக்குள் சென்று 3 நாட்களில் அவர் கோரிக்கை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
மூன்று வருடமாகிவிட்டது. இன்னும் தேவதாசன் சிறையில்தான் இருக்கிறார். தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல்வாதி மனோ கணேசன் இப்போது தமிழ் அரசியல் தலைவர்களை குறை கூறுகிறார்
எனக்கு தெரிந்து எந்த தமிழ் அரசியல் தலைவர்களும் கலைஞர் கருணாநிதி மேல் எல்லா பழியையும் போடவில்லை. அப்படியிருக்க இவ்வாறு மனோ கணேசன் கூறுவது கலைஞரும் இந்திய அரசும் தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகத்தை மறைக்க முயல்வதாகவே உள்ளது.
இந்தியா தீர்வு தர முன்வந்ததாகவும் ஆனால் தமிழ் தலைவர்கள் அதை பெற தவறிவிட்டனர் என்று மனோ கணேசன் குறை கூறுகின்றார். சரி பரவாயில்லை மனோ கணேசனும் அரசியல்வாதிதானே, அவர் இந்திய அரசு மூலம் தனது மலையக மக்களுக்கு இதுவரை பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன?
மனோ கணேசனுக்கு அமைச்சு பதவி இல்லாமல் இருப்பது கஸ்டம்தான். அவர் தாராளமாக ரணில் உடன் டீல் பேசி பதவி பெற்றுக்கொள்ளட்டும். ஆனால் அதற்காக கலைஞருக்கும் இந்திய அரசுக்கும் வெள்ளை அடிக்க முயல வேண்டாம்.
திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட ராபர்ட்பயஸ்
திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட ராபர்ட்பயஸ் மற்றும் ஜெயக்குமார் 3வது நாளாக உண்ணாவிரதம்.
ஜெயக்குமார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி என அறிய வருகிறது.
இவர்கள் கோரிக்கை என்ன? அதற்கு தமிழக திராவிட முதல்வர் பதில் என்ன?
ஏழு தமிழர் விடுதலைக்கு திராவிட முதல்வரே காரணம் என்று உரிமை கோரியவர்கள் இதற்கு பதில் தருவார்களா?
ஓ மரணித்த வீரனே!
ஓ மரணித்த வீரனே!
உன் சீருடைகள் எனக்கு வேண்டாம்
உன் காலணிகளும் எனக்கு வேண்டாம்
உன் ஆயுதங்களும் எனக்கு வேண்டாம்
உன் போட்டோ ஒன்றை மட்டும் தா
விரைவில் எலெக்சன் வரும்போல கிடக்கு
எனக்கு வயதும் 88 ஆகுது.
கண்ணும் தெரியுதில்லை
காதும் கேட்குதில்லை
ஒருவர் உதவியின்றி நடக்கவும் முடியவில்லை
அப்புறம் என்ன மயிருக்கு
பதவியில் இருக்கிறாய் என்று
நீ நினைப்பதும் எனக்கு புரியுது.
என்ன செய்வது?
பதவி இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை
இரண்டு பங்களா இல்லாமல் வாழ முடியவில்லை
சிங்கள பொலிஸ் பாதுகாப்பின்றி நடமாடுவதை
என்னால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை
நான் ஜனநாயகத்தை காக்க ஓடித் திரிவதாக
எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கினம்- ஆனால்
நான் என் பதவியைக் காக்க ஓடித் திரியிறன்
என்பது உனக்கு மட்டும்தானே புரியும்
என் பதவி தொடரும் என்று நம்பி
துபாயில் பிசினஸ் செய்த மகனும்
கொழும்பிற்கு வந்து விட்டான்.
கேரளாவில் வாழ்ந்து வந்த மகளும்
இப்ப என் கொழும்பு பங்களாவில்
நான் என் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க
எனக்கு பதவியும் பங்களாவும் வேண்டும்
மரணித்த மாவீரனே!
மாவீரர் விழாவிற்கு என்னால் வர முடியவில்லை
இந்திய தூதரின் விருந்திற்கு நான் போக வேண்டும்
தம்பி சிறீதரனை அனுப்பி வைக்கிறேன்
மறக்காமல் உன் போட்டோவை கொடுத்து அனுப்பிவிடு
அடுத்த தேர்தலிலும் வென்று பதவி பெற உதவிடு!
இப்படிக்கு
உன்னால் தொடர்ந்து பதவி பெற்றிடும்
உனது (நன்றி மறந்த) சம்பந்தர் அய்யா
நரி உனக்கு உபதேசம் செய்கிறது
நரி உனக்கு உபதேசம் செய்கிறது எனில்
நீ உன் கோழிகளை கவனித்துக்கொள்ள வேண்டும்".
போட்டோ அரசியல்!
•போட்டோ அரசியல்!
நடிகர்கள் தாராளமாக அரசியல்வாதியாகலாம்
ஆனால் அரசியல்வாதிகள் ஒருபோதும் அரசியலில் நடிக்கக்கூடாது
இன்று பத்மநாபா மற்றும் இந்திராகாந்தி
இன்று பத்மநாபா மற்றும் இந்திராகாந்தி பிறந்ததினம். இந்திரா காந்தி புகழ் பாடும் நாபாவின் தோழர்களிடம் ஒரு கேள்வி, “இந்தியாவை நாம் பயன்படுத்த நினைத்தோம் ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது” என்று நாபா கூறியது பற்றி உங்கள் கருத்து என்ன?
வழி நடத்த தலைவர் இல்லை.
வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை. ஆனாலும் எப்படி இந்த அற்புதங்கள் நிகழ்கிறது?
எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்பார்கள். அது உண்மையா இல்லையா என்று தெரியாது.
ஆனால் இரண்டு நாளில் 40 ஆயிரம் மக்களை கொன்று குவித்த பின்பும் அதில் இருந்து இவர்களால் எழுந்து நிற்க முடிகிறது.
ஆம், தமிழ் இனம் “ஆசியாவின் அதிசயம்” என்பது மிகையல்ல.
ஒரு கேள்வி, உதயண்ணா
ஒரு கேள்வி,
உதயண்ணா இப்பவும் இந்த போராட்டம் நடத்துகின்றாரா? அல்லது தமிழகத்தில் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை கிடைத்துவிட்டதா?
எதுவுமே எளிமை இல்லை.
எதுவுமே எளிமை இல்லை. ஆனால் அனைத்துமே சாத்தியம்தான்.
வெற்றியை அடையவில்லை என்பதற்காக வருத்தம் இல்லை
இன்னும் நின்றுவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது பெருமைதான்.
எத்தனை தடைகள்
எத்தனை தடைகள்
எத்தனை மிரட்டல்கள்
அத்தனையும் தாண்டி
எமக்காக மாண்டவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
சிறப்புமுகாம் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம்.
சிறப்புமுகாம் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம்.
ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்கு மாற்றுவது விடுதலை அல்ல.
கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமை அவர் மகன் ஸ்டாலினாவது மூடட்டும். அகதிகளை விடுதலை செய்யட்டும்.
சுமந்திரன் - ஆறு தமிழர் 30 வருடமாக சிறையில்
சுமந்திரன் - ஆறு தமிழர் 30 வருடமாக சிறையில் இருந்தபோது அவர்களை விடுதலை செய்யச்சொல்லி நாம் ஒருதடவைகூட கேட்கவில்லை. இப்போது அவர்களை சிறப்புமுகாமில் அடைத்திருக்கிறார்கள். இப்பவாவது ஒரு அறிக்கை விடுவமா ஐயா?
சம்பந்தர் ஐயா – விடலாம்தான். ஆனால் அப்புறம் இந்திய தூதர் கோபித்தால் என்ன செய்வது?
சுமந்திரன் - இல்லை ஐயா, அண்மையில் கொழும்பில் விடுதலையான எட்டு அரசியல் கைதிகளுக்கு லைக்கா முதலாளி உரிமை கோருகிறார். இவர்களுக்காவது நாம் ஒரு குரல் கொடுப்போம். எலெக்சன் வேற வரப்போகுது. போற போக்கைப் பார்த்தால் அடுத்த எலெக்சனில் லைக்கா முதலாளி எம்.பி யாகிவிடுவாரோ என்று பயமாய் இருக்கு.
சம்பந்தர் ஐயா – நீர் சொல்ல வார பிரச்சனை எனக்கு புரியுது. ஆனால் எங்கள் கஸ்டம் இந்திய தூதருக்கு புரியுதில்லையே? நான் என்ன செய்வது?
சுமந்திரன் - மாவீரர் தினம் வருகுது. அதற்காவது ஒரு அறிக்கை கொடுப்பமா ஐயா?
சம்பந்தா ஐயா – மாவீரர் தினத்திற்கு வெளிப்படையா அறிக்கை விட்டால் இந்திய அரசுக்கு பிடிக்காது. அதனால் நீர் ஏதாவது ஒரு மாவீரர் வீட்டுக்கு ரகசியமாக சென்று விளக்கு ஏற்றிவிட்டு வாரும்.
அமைச்சர் பதவி கொடுத்தால் உதயநிதி
அமைச்சர் பதவி கொடுத்தால் உதயநிதி நடிப்பை கைவிடுவார் எனில் தயவுசெய்து அதை கொடுத்து தொலையுங்கள். தமிழ் சினிமாவாவது தப்பி பிழைக்கட்டும்.
கலகத்தலைவன் - சகிக்க முடியல்ல
காவல்துறை செய்யும் தவறுகளை
காவல்துறை செய்யும் தவறுகளை தைரியமாக படமாக்கி வெளியிட்டுள்ள வெற்றிமாறனின் இன்னொரு படம். பாராட்டுகள்.
தாம் அரசைக் காப்பாற்றுவதால் அரசு தங்களைக் காப்பாற்றும் என்ற எண்ணம் காவல்துறையினரிடம் இருப்பதாலே அவர்கள் தைரியமாக தவறு செய்கின்றனர்.
முதலில் சீன தூதர் வந்தார்
முதலில் சீன தூதர் வந்தார்
இப்ப பாகிஸ்தான் தூதர் வந்துள்ளார்
ஆனால் யாழ் இந்திய தூதரோ மௌனமாக இருக்கிறார்.
புலிகள் இருந்தவரை வடக்கு கிழக்கில் எவரும் வரவில்லை என்பதை இனியாவது இந்திய அரசு உணர்ந்து கொள்ளட்டும்.
அன்று, இந்தியனும் நாயும் உள்ளே வர அனுமதி இல்லை
அன்று, இந்தியனும் நாயும் உள்ளே வர அனுமதி இல்லை என்று லண்டன் கடை வாசலில் போர்டு வைத்திருந்தார்கள்
இன்று , இரண்டும் லண்டன் பிரதமர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
காலம் எத்தனை ஒரு பெரிய பாடத்தை வெள்ளையர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது.
இருவரும் தமிழர்கள்
இருவரும் தமிழர்கள்
இருவரும் மத நம்பிக்கை உள்ளவர்கள்.
ஒருவர் ஆஸ்கர் பரிசு கிடைத்தபோது தமிழில் இறைவனுக்கு நன்றி என்றார்
இன்னொருவர் MP பதவி கிடைத்ததும் சமஸ்கிருதத்தில் இறைவனுக்கு பாடுகிறார்.
இப்போது புரிகிறதா தமிழன் ஏன் சங்கியை எதிர்க்க வேண்டும் என்று?
கர்நாடகாவில் கன்னடத்தில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும்
கர்நாடகாவில் கன்னடத்தில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்னும்போது மௌனமாக இருப்பவர்கள், தமிழ்நாட்டில் தமிழில் வைக்க வேண்டும் என கோரும்போது ஓடி வந்து இனவெறி என்கிறார்கள்.
தமிழா! இவர்களை விரட்டி விரட்டி உதைக்கனும் என்று தோன்றவில்லையா?
மாணவன் செந்தூரனின் 7வது நினைவு தினம்!
மாணவன் செந்தூரனின் 7வது நினைவு தினம்!
நவம்பர் 7 திகதிக்கு முன்னர் சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று 2015ல் சம்பந்தர் ஐயா கூறியிருந்தார்.
அனால் அவர் கூறியபடி கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இந்நிலையில்தான் நவம்பர் 26 ம் திகதி சிறைக் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு மாணவன் செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தான்.
சம்பந்தர் ஐயா சொன்ன நவம்பர் 7ம் திகதி ஒவ்வொரு வருடமும் வருகிறது. ஆனால் சிறைக் கைதிகள்தான் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.
சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இருக்கும் கைதிகள் செந்தூரனின் தந்தையோ அல்லது சகோதரனோ இல்லை. அல்லது அவனது நண்பர்களோ இல்லை.
செந்தூரன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. அவன் எந்தவொரு அரசியல் கட்சி தலைவனும் இல்லை.
இருப்பினும் அவர்களுக்கு இல்லாத கைதிகள் விடுதலை பற்றிய கவலை அவனுக்கு இருந்தது.
செந்தூரன் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் படித்து பட்டம் பெற்று சுக வாழ்வை வாழ்ந்திருக்கலாம்.
அல்லது வெளிநாடு சென்று வசதியாக வாழ்ந்திருக்கலாம்
அல்லது இன்று சிலர் செய்வதுபோல் நடிகர்களுக்கு 30 அடியில் கட்அவுட் கட்டி மகிழ்ந்திருக்கலாம்.
ஆனால் மாணவன் செந்தூரன் சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக தன் உயிரை கொடுத்துள்ளான்.
தன் மகன் தன்னை பிற்காலத்தில் பார்த்துக்கொள்வான் என்று செந்தூரனின் தாய் கனவு கண்டிருப்பார்.
தன் சகோதரன் தங்களை வாழவைப்பான் என்று செந்தூரனின் சகோதரிகள் நினைத்திருப்பார்கள்.
ஆனால் செந்தூரன் தன்னை பெற்று வளர்த்த தாயின் கனவை நினைக்கவில்லை.
தன் கூடப் பிறந்த சகோதரிகளின் விருப்பத்தை நினைக்கவில்லை.
அவனுடைய நினைவு எல்லாம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே.
அதற்காக அவன் தேர்ந்தெடுத்த பாதை தவறாக இருக்கலாம்.
ஆனால் இந்த சின்ன வயதில் அவன் செய்த அர்ப்பணிப்பு மகத்தானது.
செந்தூரனை நினைவு கூர்வோம்!
குறிப்பு- 26.11.2022 செந்தூரனின் 7வது நினைவு தினமாகும்.
விஜய் டிவி க்கு ஒரு வேண்டுகோள்!
விஜய் டிவி க்கு ஒரு வேண்டுகோள்!
ஈழத்தமிழ் பற்றி தரக்குறைவான கருத்துகளை தெரிவித்து ஈழத் தமிழர் மனங்களை புண்படுத்த வேண்டாம்.
வியாபார ரேட்டிங்கிற்காக ஈழத் தமிழர் உணர்வுகளை சீண்ட வேண்டாம்.
ஈழத் தமிழர்களைப் பற்றி நன்கு புரிந்துகொண்ட கமல் இதனை எப்படி அனுமதிக்கிறார்?
இவர்கள் பயங்கரவாதிகள் என்றார்கள்
இவர்கள் பயங்கரவாதிகள் என்றார்கள்
இவர்கள் இலங்கை ராணுவத்தைவிட அதிக தமிழ் மக்களை கொன்றவர்கள் என்றார்கள்
இவர்களிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம் என்றார்கள்.
இவர்களால் இப்பவும் தமக்கு ஆபத்து என்று இந்திய அரசு தடையை நீடிக்கிறது.
இவர்களை நினைவுகூரத் தடை விதிக்கின்றனர்.
இவர்களின் கல்லறைகளைக்கூட இடித்து தள்ளுகின்றனர்.
ஆனால் தமிழ் மக்கள் கொட்டும் மழையிலும் இவர்களுக்காக அஞ்சலி செலுத்துகின்றனர்.
ஏனெனில் இவர்கள் தமது உறவுகள் என்பதற்காக அல்ல,
மாறாக இவர்கள் தமக்காக மாண்டவர்கள் என்று உணர்வதாலேயே அஞ்சலி செலுத்துகின்றனர்.
அதனால்தான் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி தமிழ் மக்கள் இவர்களை நினைவு கூர்கின்றனர்.
நினைவழியா நாட்கள்
•நினைவழியா நாட்கள்
“அவ்ரோ குலம்” என்று அழைக்கப்படும் செல்லையா குலசேகரராஜசிங்கம் அவர்கள் இளமாறன் என்ற புனை பெயரில் எழுதிய நூல் “நினைவழியா நாட்கள்”
இந் நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 2022 ஒக்டோபர் 08 அன்று பிற்பகல் 15.00 மணியளவில் சுவிஸ்சில் நடைபெற்றது.
ஆரம்பகால போராட்ட வரலாற்றை அறிய விரும்புவோர் இந் நூலினை படிக்கலாம்.
இலக்கியம் என்பது போராட துணிந்தவனுக்கு உந்து சக்தியை வழங்குவதாக இருக்க வேண்டும் என மார்க்சிம் கார்க்கி கூறியிருக்கிறார்.
அதன்படி போராட்டத்தில் பங்கு பற்றியவர்கள் திரும்பி பார்த்தல் என்பது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உதவுவதாக இருக்க வேண்டும்.
2009 வரை சுவலிஸ் பொறுப்பாளராக இருந்தவர். பல விடயங்களை எழுதியிருக்கலாம். எழுதியிருக்க வேண்டும். ஆனால் ஏனோ எழுதாமல் தவிர்த்துவிட்டார்.
இந் நூல் போராட்டத்தை முன்னெடுக்க விரும்புபவர்களுக்கு ஒரு உந்து சக்தியை வழங்க தவறியிருப்பது துரதிருஸ்டவசமானதே.
அன்று கலைஞர் ஆட்சியில் சர்க்கரையை
அன்று கலைஞர் ஆட்சியில் சர்க்கரையை எறும்பு தின்றது. பைகளை கறையான் அரித்தது.
இன்று உத்தரப்பிரதேசத்தில் 581 கிலோ கஞ்சாவை எலி தின்று விட்டது.
வினோதமாக ஊழல் செய்வதில் கலைஞர் முன்னோடி என்பதில் திராவிடம் நிச்சயம் பெருமை கொள்ள முடியும்.
என்னது அக்கா தம்பியா?
என்னது அக்கா தம்பியா?
பிஜேபி யில் அக்கா தம்பிகள் இப்படித்தான் பேசிப்பாங்களா?
பீப் போட்ட ஆடியோ வேர்சனைக் கேட்டவன்கூட அக்கா தம்பி என்றால் செருப்பால் அடிப்பான்.
இவர் இழைத்த தவறுகளில்
இவர் இழைத்த தவறுகளில் இனப்படுகொலை செய்த சிங்கள அரசை ஆதரித்த இவர் தவறை யாராலும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 16 பேர் தமிழ்நாட்டில் உயிர் துறந்துள்ளனர்.
இன்னும் சிலர் ஈழத்திற்கு வந்து ஆயுதம் ஏந்தி போராடி வீர மரணம் அடைந்துள்ளனர்.
தாய்த் தமிழகம் என்பது வெறும் உச்சரிப்பு அல்ல. அது இரத்தத்தில் கலந்த உணர்வு.
நன்றியுடன் நினைவு கூர்வோம். ஒன்றிணைந்து மீண்டும் எழுவோம்
இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு
இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடுவார்கள் என்று நினைத்து விடாதீர்கள்.
என்ன மொழியில் பேசினால் உலகம் புரிந்துகொள்ளுமோ அந்த மொழியில் பேசுவார்கள்.
குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தமக்குரிய நீதியைப் பெறாமல் இவர்கள் ஓய மாட்டார்கள்.
சின்னக் குருவி நீ சினுங்கி அழக்கூடாது
சின்னக் குருவி நீ சினுங்கி அழக்கூடாது
ஏழைக் குருவி நீ ஏங்கி அழக்கூடாது
வலை என்ன பெருங் கனமா ?
அதை அறுத்திட பல வழி இருக்குது
வழியில் என்ன பெருந்தடை வந்தாலும்
அதை தகர்த்தெறிய பல வழி இருக்குது!
இரண்டு நாளில் நாற்பதாயிரம் பேரை கொன்று
இரண்டு நாளில் நாற்பதாயிரம் பேரை கொன்று புதைத்தாலும்
அடிமையாகவே வீழ்ந்து கிடந்திட மாட்டோம்
மீண்டும் முளைத்து எழுவோம் முன்பை விட பலமாய்.
இதுவே இன்றைய மாவீரர் நாளில் உலகிற்கு ஈழத் தமிழர் கூறும் செய்தி.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே
வெறும் நாற்பது லட்சம் பேர்தானே என சிங்கள அரசு நினைத்தது.
அது இனி ஒன்றிணைந்த எட்டுக்கோடியே நாற்பது லட்சம் தமிழர்களை சந்திக்க வேண்டும்.
உயிர்களை இழந்தோம்
உயிர்களை இழந்தோம்
உடமைகளை இழந்தோம்
ஆனால் உணர்வுகளை இழக்கவில்லை
எமக்காக மாண்டவர்கள் நாளில்
உறுதியாக உரத்து கூறுகின்றோம்
மீண்டும் எழுவோம் முன்பைவிட பலமாய்
இரண்டு கால் உள்ள சிலரே
இரண்டு கால் உள்ள சிலரே எழுந்து நிற்காமல் அடிமையாக வீழ்ந்து கிடக்கையில் ஒரு காலை இழந்த பின்பும் எப்படி இந்த இளைஞனால் எழுந்து நிற்க முடிகிறது? ஏனெனில் இவர் இழந்தது ஒரு காலையே ஒழிய உணர்வை அல்ல. அதனால்தான் எந்த தடுமாற்றமும் இன்றி உறுதியாக நிற்க முடிகிறது.
நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஒடும்.
நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஒடும். ஆனால் அதே கல்லை தேன் கூட்டுக்கு எறிந்தால் எறிந்தவர் ஓட வேண்டி வரும்.
தேனீக்கள் நாயைவிட பலவீனமானவைதான். ஆனால் அவை ஒன்று சேர்ந்து தாக்க வருவதால் ஓட வேண்டி வருகிறது.
தமிழர்களும் தேனீக்கள் போல் ஒன்று சேர்ந்து தாக்க முற்பட்டால் எதிரி நிச்சயம் ஓடுவான்
புலம்பெயர்ந்த தமிழர்கள்
உலகத்திற்கு சொல்லும் செய்தி இதுதான்,
“ஓட முடியவில்லை என்றால் நடந்து செல்வோம்
நடந்து செல்ல முடியவில்லை என்றால் தவழ்ந்தாவது செல்வோம்.
ஆனால் ஒருபோதும் எமது இயக்கத்தை நிறுத்திவிட மாட்டோம்”
போராளிகள் பயங்கரவாதிகள் இல்லை
“போராளிகள் பயங்கரவாதிகள் இல்லை
அவர்கள் எமக்காக மாண்ட மாவீரர்கள்”
உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் ஒன்று திரண்டு நினைவு கூர்ந்ததன்மூலம் மூலம் கூறியிருக்கும் செய்தி இதுதான்.
இனியாவது சிங்கள இந்திய அரசுகள் இதனை புரிந்துகொள்ளுமா?
சம்பந்தர் ஐயா
சம்பந்தர் ஐயா – என்ன தம்பி நேற்று மாவீரர் நிகழ்வில் பயங்கர கூட்டமாமே?
சுமந்திரன் - ஆம் ஐயா. எல்லா இடமும் சரியான கூட்டம். அதனால நான்தான் அரசிடம் பேசி இப்படி நடத்த அனுமதி பெற்றுக்கொடுத்தவன் என்று பிரச்சாரம் செய்யும்படி என்ர தம்பிகளிடம் கூறினேன். ஆனால் அதுவும் சுகாஸ் ஆமிக்காரனுடன் சண்டை பிடிக்கிற வீடியோ வந்து குழம்பிப்போச்சு.
சம்பந்தர் ஐயா – அப்ப என்ன செய்யலாம்? அடுத்த முறை இந்திய தூதரைச் சந்திக்கும்போது கோபப்படப் போகிறாரே?
சுமந்திரன் - இவர்களை கொன்றதால்தான் திருமலைக்கு சுதந்திரமாக சென்றுவர முடிகிறது என்று நீங்கள் கூறியிருக்கிறியள். நான் இவர்களின் தவறுகளையும் விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா வில் கூறியிருக்கிறேன். இதையெல்லாம் இந்திய தூதரிடம் கூறி சமாளிக்கலாம்தானே ஐயா?
சம்பந்தர் ஐயா - இந்திய தூதரைச் சமாளிக்கலாம். ஆனால் இதையே தம்பி கஜன் அடுத்த தேர்தலில் மக்களிடம் கூறினால் என்ன செய்வது?
சுமந்திரன் - தேர்தலில் கூட்டங்களில் மாவீரர் பாடல்களை ஒலிபரப்பலாம். ஜனநாயகப் போராளிகள் கட்சிகாரர்களை நம்ம வித்தியாதரன் மூலம் எங்கள் மேடையில் ஏற்றலாம். இப்படி பல திட்டம் இருக்கு ஐயா
தோழர் பிரடெரிக் எங்கெல்சின்
•தோழர் பிரடெரிக் எங்கெல்சின் 202வது பிறந்தநாள். .
தோழர் எங்கெல்ஸ் இல்லையேல் கால் மார்க்ஸ் இல்லை. மாக்சியமும் இல்லை என்று தோழர் லெனின் கூறியிருந்தார்.
ஆனால் தோழர் எங்கெல்ஸ் “அனைத்து பெருமைகளையும் தன் நண்பன் கால் மார்க்ஸ்ற்கே உரியது” என்று அடக்கத்துடன் கூறுகிறார்.
அத்தகைய மாபெரும் ஆசான் தோழர் எங்கெல்ஸ் அவர்களின் 202வது பிறந்ததினம் இன்று ஆகும்.
உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு.
கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு.
இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர்.
மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.
அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார்.
1849-இல் ஜெர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார்.
பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார்.
1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார்.
அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார்.
1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார்.
நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெய்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார்.
தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறுகிறார்.
மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார்.
தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர்.
மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது.
மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.
எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவஞானி;. எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்.
மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.
புலிகள் போதைப்பொருள் கடத்துகிறார்கள்
புலிகள் போதைப்பொருள் கடத்துகிறார்கள் என்று எழுதிய (200 ரூபா) உபிஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
மானஸ்தர்கள். ஒருவேளை தூக்கில் தொங்கியிருப்பார்களோ?
#திராவிட உருட்டு
நிருபர் - போதைப்பொருள் என்பது
நிருபர் - போதைப்பொருள் என்பது சமூக தீமை என்றீர்கள். இப்ப உங்க கட்சிக்காரரே 360 கோடி போதைப்பொருள் கடத்தியிருக்கிறாரே?
திராவிட முதல்வர் - என் உபதேசம் ஊருக்குத்தான். உடன்பிறப்புகளுக்கு அல்ல.
நிருபர் - போதைப் பொருள் பாவித்து யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவன் பலி என்ற செய்தி பற்றி
திராவிட முதல்வர் - ஈழத் தமிழர் நலன் மீது திமுக அக்கறை காட்டும்
நிருபர் - ???
Thursday, October 27, 2022
சிறுமி – அங்கிள் நீங்கள் நல்லவரா? கெட்டவரா?
சிறுமி – அங்கிள் நீங்கள் நல்லவரா? கெட்டவரா?
சுமந்திரன் - ஏன்மா அப்படி கேட்கிறே?
சிறுமி – சிறுவன் பாலச்சந்திரனை ஏன் கொன்றார்கள்?
சுமந்திரன் - அவர் அப்பா பயங்கரவாதி. எனவே மகனும் பயங்கரவாதி என்று கூறி கொன்றார்கள்.
சிறுமி - அப்படியென்றால் ஏன் பயங்கரவாதி என்று கொல்லப்பட்ட ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீராவின் பிள்ளைகளையும் பயங்கரவாதிகள் என்று சுட்டுக் கொல்லாமல் படிக்க வைத்தார்கள்?
சுமந்திரன் - ஆம் அவரது ஆறு பிள்ளைகளையும் மட்டுமன்றி மனைவியையும் பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள்.
சிறுமி – பாலச்சந்திரன் தமிழர் என்பதால் கொல்லப்பட்டார். ரோகணாவின் பிள்ளைகள் சிங்களவர் என்பதால் கொல்லப்படவில்லை. எமக்கு நடந்தது இனப்படுகொலை என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு?
சுமந்திரன் - ????
குறிப்பு - இன்று உலகம் சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடுகிறது. நாம் எப்போது கொல்லப்பட்ட எமது தமிழ் சிறுவர்களுக்குரிய நீதியை பெற்றுக்கொடுக்கப் போகிறோம்?
அதனால் என்ன?
அதனால் என்ன?
அதிமுக வாக இருந்தால் அமைச்சரின் ஓசிப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை இல்லையா?
இது சுத்த அதிகாரத் திமிர்த்தனம்.
விடியல் ஆட்சி விரைவில் முடியப்போகிறது.
எது அறுவடை செய்யப்பட வேண்டுமோ
எது அறுவடை செய்யப்பட வேண்டுமோ
அது விதைக்கப்பட வேண்டும்.
தமிழத்தேசிய விடுதலைக்காக
மாணவர்கள் மத்தியில் விதைக்கப்படுகிறது.
உஷ்! சத்தம் செய்யாதீர்கள்
உஷ்! சத்தம் செய்யாதீர்கள்
எமது தலைவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள்
மெதுவாக அவர்களுக்கு முதியோர்தின வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
எந்த மருத்துவமனைக்குள் புகுந்து
எந்த மருத்துவமனைக்குள் புகுந்து தமிழ் மக்களை இந்திய ராணுவம் கொன்றதோ அந்த யாழ் மருத்துவமனைக்கு முன்னால் காந்திசிலையை நிறுவி காந்தியின் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் இந்திய தூதர்.
அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்த திலீபனை கொன்றுவிட்டு அகிம்சையை போதித்த காந்திக்கு விழா எடுக்கும் இந்திய தூதர்.
என்னே கொடுமை இது?
இங்கிலாந்தில் இந்து ஆலயங்களை தாக்கப்பட்டபோது
இங்கிலாந்தில் இந்து ஆலயங்களை தாக்கப்பட்டபோது கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, இலங்கையில் சிங்கள அரசால் இந்து ஆலயம் அழிக்கப்படும்போது கண்டிப்பதில்லை.
இந்திய அரசின் இந்த இரட்டை இந்து முகத்தை அம்பலப்படுத்தியதால் வேறு வழியின்றி இந்திய தூதர் திருகோணமலை கோவிலுக்கு சென்று பார்வையிட்டிருக்கிறார்.
இப்போதுகூட கோவில் புனரமைப்புக்கு உதவி செய்ய தயார் என்று கூறுகின்றாரேயொழிய சிஙகள அரசைக் கண்டிக்கவில்லை.
ஏன் இந்த இரட்டை நிலை?
இந்திய அரசை எதிர்த்து திலீபன் உண்ணாவிரதம் இருக்கவில்ல
“ இந்திய அரசை எதிர்த்து திலீபன் உண்ணாவிரதம் இருக்கவில்லை. இந்திய அரசை நோக்கியே உண்ணாவிரதம் இருந்தார்” என்று இந்திய அரசின் ஏஜென்டுகள் கூறுகின்றனர்.
திலீபன் நினைவுதினத்தை குழப்ப முயன்றவர்கள் இப்போது வார்த்தை ஜாலங்களில் கிளப்கவுசில் உருட்ட முனைகின்றனர்.
இவர்கள் என்னதான் உருட்டினாலும் வரலாற்றில் திலீபன் பெயர் உச்சரிக்கப்படுகின்ற ஒவ்வொருவேளையிலும் இந்திய அரசின் துரோகம் மக்கள் மனதில் தோன்றுவதை இனி இவர்களால் ஒருபோதும் நிறுத்த முடியாது.
காந்தியின் அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததா?
•காந்தியின் அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததா?
அகிம்சை வழியில் போராடி காந்தி சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.
இதை இந்தியர்கள் எந்தளவுக்கு நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஈழத் தமிழர் பலர் நம்புகிறார்கள்.
ஏனெனில் சிறுவயது முதல் இது போதிக்கப்படுகிறது. இதுவே உண்மை என்று நம்ப வைக்கப்படுகிறது.
அதனால்தான் அகிம்சை வழியில் போராடியிருந்தால் தீர்வு பெற்றிருக்க முடியும் என்று சுமந்திரனால் தைரியமாக கூறமுடிகிறது.
ஆனால் உண்மையில் இந்தியாவில் நடந்தது என்ன?
இதுபற்றி பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவர் தன் நூலில் எழுதியிருப்பது வருமாறு, “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து எப்போதெல்லாம் மக்கள் வீதியில் இறங்கி ஆயுத புரட்சி செய்கிறார்களோ, அப்போதெல்லாம் காந்தி, தன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவார். இந்த வழியில் நாம் போராடுவது தவறு, நாம் அகிம்சையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பார். மக்கள் புரட்சியால் நிலமை கட்டுக்கடங்காமல் போய், போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில், காந்தி அகிம்சை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க தொடங்குவார். பிறகு அந்த செய்தி நாடு முழுக்க பரவும், மக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி ஆவார்கள். இப்படியே நாங்கள் இந்தியாவை மேலும் 10 ஆண்டுகள் என தொடர்ந்து ஆண்டு கொண்டிருந்தோம்”.
இதே நிலைமைதான் இலங்கையிலும் நடந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் பாதை மூலம் நடத்திய போராட்டம் யாவும் இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்களை இன அழிப்பு செய்வதற்கே உதவி வந்தது.
எனவே தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள், (1) அகிம்சை வழியில் விடுதலை பெற முடியாது (2) ஆயுத போராட்டத்தின் மூலமே விடுதலை பெற முடியும்
வெறும் 800 போராளிகள் ஒரு லட்சத்து இருபதினாயிரம் இந்திய ராணுவத்தை
வெறும் 800 போராளிகள் ஒரு லட்சத்து இருபதினாயிரம் இந்திய ராணுவத்தை எதிர்க்க எப்படி துணிந்தார்கள்?
டாங்கிகள் பீரங்கிகள் மட்டும்ல்ல நவீன போர் விமானங்கள் சகிதம் வந்தவர்கள் அமைதிப்படை அல்ல அது ஒரு அழிவுப்படை என்பதை எப்படி உணர்ந்தார்கள்?
ஆம். அதற்கு இந்த 12 போராளிகளின் மரணங்கள் ஒரு முக்கிய காரணமாக அமைந்தன.
திலீபன் மரணத்திற்கு எந்த இந்திய அரசு பொறுப்போ அதே இந்திய அரசுதான் இந்த 12 போராளிகளின் மரணத்திற்கும் பொறுப்பு ஆகும்.
இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து தமிழ் மக்கள் மீது போரைத் திணித்த இந்திய அரசு அதற்கான பழியை புலிகள் மீது போடுகிறது.
ஆம். காட்டின் வரலாற்றை சிங்கம் எழுதினால் தானாக வந்து தன் வாயில் மாட்டாமல் தப்பி ஓட முயலும் மான்கள் யாவும் தவறானவர்கள் என்றே எழுதும்.
39 வருடமாக கொடிய அகதி வாழ்க்கை
39 வருடமாக கொடிய அகதி வாழ்க்கை. இதுபோதாதென்று அதிகாரிகளின் பாலியல் தொல்லை வேற.
இந்த அப்பாவி ஈழத்தமிழ் அகதிப் பெண்களுக்காக யாருமே இரங்க மாட்டார்களா?
இந்த துயர வாழ்வுக்கு ஒரு முடிவு அவர்களுக்கு கிட்டாதா?
ராஜராஜசோழன் ஒரு இந்து என்று அடம்பிடிப்போர் இந்த இந்து பெண்கள் மீது அக்கறை காட்ட மாட்டார்களா?
திருச்சிமுகாமில் இருக்கும் ஈழ அகதிப்பெண்
திருச்சிமுகாமில் இருக்கும் ஈழ அகதிப்பெண் திருமதி.நளினிக்கு 12.08.2022 யன்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி இந்திய கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளின் இந்திய குடியுரிமை கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
"நீ காணாமல் போய்விடுவாய்" - H. ராஜா..
"நீ காணாமல் போய்விடுவாய்" - H. ராஜா..
"உனக்கு என்னப்பா நீ பைத்தியம், என்ன வேணாலும் பேசலாம்" - சீமான்
தரமான பதில். பாராட்டுகள்..
எல்லா நாடுகளிலும் குழந்தையை
எல்லா நாடுகளிலும் குழந்தையைக் காணவில்லை என்று அப்பா தேடுவார்.
ஆனால் இலங்கையில் மட்டுமே அப்பாவைக் காணவில்லை என்று குழந்தை தேடும் நிலை இருக்கிறது.
அதுவும் போர் முடிந்து பதினொரு வருடம் கழிந்த பின்பும்கூட அப்பாவைத் தேடும் அவலநிலை தமிழ் இன குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கிறது.
சமர் பல கண்ட களத்தை மறந்தோம் அதில் எமக்காக மாண்டவர்களை மறந்தோம்
நிலத்தை மறந்தோம். இனத்தை மறந்தோம்.
எதிரி விட்டெறியும் எலும்புத் துண்டிற்காக குழந்தைகள் துயர் துடைக்க மறந்தோமே
இந்தளவு கேவலமான இனமா இது?
சர்வதேச விலங்குகள் தினம்!
•சர்வதேச விலங்குகள் தினம்! ( இது அரசியல் பதிவு இல்லை)
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 4ம் திகதி சர்வதேச விலங்குகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அழிந்துவரும் விலங்குகளை பாதுகாக்கவும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
ஒருவர் தன் நாய்க்கு தமிழ் தெரியும் என்றும் தான் தமிழில் கூறுவதை அது புரிந்து செயற்படுவதற்கு 6 மாதம் எடுத்தது என்றும் கூறிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது நாய் “ இந்த மனிதனுக்கு எனது மொழி புரிய 6 மாதம் எடுத்திருக்கிறது”என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டதாம்.
இது பகிடிதான். ஆனால் இது கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.
ஏனெனில் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமே மொழி என்கிறார்கள்.
அப்படியென்றால் விலங்குகளும் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தமக்கு ஒரு மொழி வைத்திருக்கின்றனவா?
விலங்கிற்கு மொழி இருக்கிறதா இல்லையா என்பதைவிட விலங்குகளுக்கு கணக்கு தெரியுமா என்பது என் மூளையைக் குடைகிறது.
ஏனெனில் உதாரணத்திற்கு ஒரு பன்றி தன் 20 குட்டிகளை எப்படி நினைவில் கணக்கு வைத்திருக்கும்?
குறிப்பு - இங்குள்ள படங்களை பார்த்துவிட்டு நான் விலங்குகளை கேவலப்படுத்திவிட்டதாக விலங்கு ஆர்வலர்கள் தயவு செய்து என்மீது கோபம் கொள்ள வேண்டாம்.
வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள்!!
•வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள்!!
இது ஜீனியர்விகடனில் மதன் எழுதிய “வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள்” கதை அல்ல.
இது அமைதிப்படை என்று வந்து அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு சென்ற இந்திய ராணுவத்தின் கதை.
கொடுங்கோலன் என்றழைக்கப்பட்ட கிட்லர்கூட எதிரி நாட்டு மருத்துவமனைகளையோ நூலகத்தையோ தாக்கியது கிடையாது.
ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் யாழ் மருத்துவமனையைத் தாக்கி பல அப்பாவி தமிழ் மக்களை கொன்றார்கள்.
யாழ் மருத்துமனையில் மட்டும் படுகொலைகள் நிகழ்த்தப்படவில்லை. வல்வையில் நடத்தப்பட்டது. பிரம்படியில் நடத்தப்பட்டது.
வடக்கு கிழக்கு முழுவதும் சுமார் இரண்டரை வருடங்கள் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
எழுநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள்.
80 வயதுக் கிழவியைக்கூட பாலியல் வல்லுறவு செய்த பெருமை இந்திய அமைதிப்படைக்கே சேரும் என அன்றைய பிரதமர் பிரேமதாசா கூறியிருந்தார்.
புலிகள் பொதுமக்களுக்குள் இருந்து துப்பாக்கி பிரயோகம் செய்ததால் அப்பாவி பொது மக்கள் இறக்க நேரிட்டது என இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அப்படியென்றால் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டமைக்கு என்ன காரணம்? ஏன் இதுவரை ஒரு ராணுவம்கூட இதற்காக தண்டிக்கப்படவில்லை?
அதுமட்டுமன்றி, அமைதிப்படையின் முதல் குண்டு புலிகளை தாக்கவில்லை. மாறாக ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தையல்லவா தாக்கியது.
48 மணி நேரத்தில் ஒரு லட்ச்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவ வீரர்கள் அமைதிப்படை என்று வந்தார்கள்
அவர்கள் வெறும் துப்பாக்கியுடன் மட்டும் வரவில்லை. பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்களுடன் வந்தார்கள்.
ஒருபுறம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வற்புறுத்தினார்கள். மறுபுறம் புளட், டெலோ போன்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி புலிகளை அழிக்கும்படி கூறினார்கள்.
இத்தனையும் இந்திய ராணுவம் செய்தது தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக அல்ல. மாறாக இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பிற்காகவே.
இங்கு கொடுமை என்னவென்றால் இத்தனையும் செய்துவிட்டு அதற்காக இதுவரை ஒரு வருத்தம் கூட தெரிவிக்காதது மட்டுமன்றி தமிழ் மக்கள் தம் உறவுகளை நினைவு கூர்வதைக்கூட மிரட்டி தடுக்கின்றனர்.
காவல்துறையில் பணி புரியும் தன்னையே
காவல்துறையில் பணி புரியும் தன்னையே இப்படி நடத்துகிறார்கள் எனில் ராம்குமாரை எப்படி சிறையில் நடத்தியிருப்பார்கள் என்பதை இப்போது சவுக்கு சங்கர் உணர்ந்திருப்பார் என நம்புகிறேன்.
குறிப்பாக ஈழத் தமிழ் அகதிகள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்திருப்பார்.
இனியாவது வெளியில் வந்தபின் பொறுப்பாக பேசட்டும்
பொலிஸ், நீதிபதி, ஊடகம் மூன்றும்
பொலிஸ், நீதிபதி, ஊடகம் மூன்றும் அரசின் ஏவல்நாய்கள். கூட்டுக்களவாணிகள்.
நீதிபதி உத்தரவுப்படி சிறை வைக்கப்பட்ட எனக்கு மருத்துவசிகிச்சை அளிக்கும்படி நான் கோரியதை கேட்கக்கூட மறுத்துவிட்டார் அந் நீதிபதி.
தமிழக சிறையில் ஈழத் தமிழ் அகதிகள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
குறிப்பு – சவுக்கு சங்கர் கவனத்திற்கு
இந்திராகாந்தியைக் கொன்றது சீக்கியர்கள் என்றும்,
இந்திராகாந்தியைக் கொன்றது சீக்கியர்கள் என்றும்,
ராஜிவ் காந்தியைக் கொன்றது ஈழத் தமிழர்கள் என்றும் கூறுபவர்கள்,
மகாத்மா காந்தியைக் கொன்றது பிராமணர்கள் என்று ஏன் கூறுவதில்லை?
அதுமட்டுமல்ல , காந்தி கொலையில் பட்டேல் மற்றும் இந்திய அரசின் பங்கு குறித்தும் இப் படம் பேசுகிறது.
பொன்னியின் செல்வனை படமாக எடுத்து
பொன்னியின் செல்வனை படமாக எடுத்து கோடி கோடியாக சம்பாதிப்பவர்கள்
அதில் ஒரு சில கோடிகளை அவரது நினைவிடத்திற்கு செலவு செய்ய மாட்டார்களா?
75 படங்கள் கதை வசனம் எழுதி கலைஞர்
75 படங்கள் கதை வசனம் எழுதி கலைஞர் சம்பாதித்தது நாற்பத்தையாயிரம் கோடி ரூபா
ஒரு முந்திரிகை தோட்டத்தில் இருந்து ஜெயா அம்மையார் சம்பாதித்தது முப்பதாயிரம் கோடி ரூபா
ஆனால் இவர்கள் இருவரும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகம் அடைந்த மொத்த கடன் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபா
இது எப்படி ?
என் கணவர் புலவரோட
"என் கணவர் புலவரோடு நான் வாழ்ந்த காலங்கள் துயரமானதுதான். நான் மட்டுமல்ல என் ஒட்டுமொத்த குடும்பமே பிரிவு துயரம் கொடுமைகளைத்தான் அனுபவித்தது. ஆயினும் இவையனைத்தும் எங்களை மனோரீதியில் பாதிக்காத அளவிற்கு அவரின் சமூக செயல்பாடுகள் நடவடிக்கைகள் மற்றும் அதன் நியாய தன்மைகள் மீது எங்கள் அனைவருக்குமே முழு நம்பிக்கையை ஊட்டியே வளர்த்தார்" - வாலாம்பாள்
இப்ப முதல்வர் ஆண்டு முழுவதும் “அன்னதானம்” என்கிறார்.
இப்ப முதல்வர் ஆண்டு முழுவதும் “அன்னதானம்” என்கிறார்.
அப்புறம் ஒரு அமைசர் வந்து “ஓசிச்சோறு” என்று கூற மாட்டாரா?
அதற்கப்புறம் யாராவது மூதாட்டி வந்து தனக்கு ஓசிச்சோறு வேண்டாம் என்றால் அவர் மீது வழக்கு போடுவார்களே?
கரடியே காறித் துப்பிடிச்சு !!
கரடியே காறித் துப்பிடிச்சு !!
இதையே வெற்றிமாறன் கூறியபோது கதறிய எச்ச.ராசா இப்போது கமலுக்கு என்ன செய்யப்போகிறார்?
விடியல் ஆட்சியின் விசித்திரம்!
விடியல் ஆட்சியின் விசித்திரம்!
வேலூரில் அகதிகளுக்கு கட்டப்படும் வீடுகள் தரமற்ற முறையில் இருப்பதை சுட்டிக்காட்டினால் வீடுகளையல்லவா பரிசோதிக்க வேண்டும்.
மாறாக சுட்டிக்காட்டிய நாம்தமிழர் கட்சி உறவுகளை கைது செய்தால் அதன் அர்த்தம் என்ன?
ஒருவேளை கமிஷன் முதல்வர் வரை செல்கிறதா?
அகிம்சை வழி, ஆயுத வழி
அகிம்சை வழி, ஆயுத வழி என்று இரண்டு வழிகள் உண்டு.
இப்போது மூன்றாவதாக அறிவாயுதம் ஏந்துவோம் என இன்னொரு வழி கூறுகின்றார்கள்.
இப்படி ஒரு வழி இல்லை. அதுமட்டுமல்ல இது அகிம்சை வழி மற்றும் ஆயுத வழிக்கு அறிவு இல்லை எனவும் கருதுகின்றது.
இந்த அறிவாயுத வழி என்பது சாரம்சத்தில் இப்போது இருக்கின்ற சமூகத்தை பேணுவவும் அதற்கு எதிரான மக்கள் போராட்டத்தை மழுங்கடிக்கவுமே வழி செய்யும்.
இந்திய அரசு தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன்
இந்திய அரசு தமிழர்களை கொச்சைப்படுத்துவதுடன் தமிழர்களுக்கு ஒருபோதும் உதவாது என்பதை தமிழர்கள் உணர வேண்டும் என்று வவுனியாவில் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்ன பதில் கூறப்போகிறார்?
இதைவிட அதிகமாகவும் வாய் விட்டு சிரித்திருக்கிறேன்
இதைவிட அதிகமாகவும் வாய் விட்டு சிரித்திருக்கிறேன்.
உலக புன்னகை தினத்திற்கு பதிவிட தேடியபோது இந்த படம்தான் சிக்கியுள்ளது.
#உலக புன்னகை தினம் (07.10.2022)
உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்
உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று ஜெர்மனியரான காரல் மார்க்ஸ் லண்டனில் இருந்து கூறியதை ஏற்றுக்கொள்ளும் இந்த இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர், உலக தமிழர்களே ஒன்று சேருங்கள் என்று ஈழத் தமிழரான நான் லண்டனில் இருந்து கூறக்கூடாதாம். இலங்கை போய் கூற வேண்டுமாம். பாவம் மார்க்ஸ்!
புரட்சியாளர் தோழர் சேகுவாரா!
புரட்சியாளர் தோழர் சேகுவாரா!
இன்று புரட்சியாளர் தோழர் சே வின் நினைவு தினம் ஆகும்.
தன் வாழ்வின் இறுதிக் கணம்வரை உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஒரு உன்னதமான போராளியின் நினைவு தினம் ஆகும்.
துப்பாக்கி அவர் நெஞ்சை குறி பார்த்தபோதும் அவர் உயிருக்காக கெஞ்சவில்லை. “நான் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்” என்று அவர் முழங்கிய வார்த்தைகள் இன்று ஈழத் தமிழருக்கு உறுதியளிக்கிறது.
அவர் தேர்தல் பாதையை முன்வைக்கவில்லை. மாறாக ஆயுதப் போராட்ட பாதையையே முன்னெடுத்தார்.
“உலகில் எங்கு அநியாயம் காணப்படுகிறதோ அங்கு கோபமும் வெறுப்பும் கொண்டு குமுறி எழுவாய் எனில் நீ என் தோழனே” என்று கூறினார் தோழர் சே.
மதுரை சிறையில்
மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை ஜெயலலிதாவின் தூதுவர்கள் வந்து வழக்கை வாபஸ் பெறுவதுடன் பதவியும் தருவதாக கூறி கட்சி மாறும்படி கேட்டபோது அதை சுப்பக்கா மறுத்ததை நேரில் கண்டவன் நான். அவர் அரசியலில் இருந்து ஒதுங்காமல் தமிழத்தேசிய அரசியலில் பயணிக்க வேண்டும்.
மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை (
மதுரை சிறையில் நான் அடைக்கப்பட்டிருந்தவேளை (1992) கம்யுனிஸ்ட் கட்சி எம்.பி மோகன் அவர்கள் என்னை சந்தித்தார்.
அப்போது அவரிடம் ஈழத் தமிழர் போராட்டம் பற்றி அவரது கம்யுனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து எனது விமர்சனங்களை தெரிவித்தேன்.
எனது விமர்சனத்திற்கு அவர்களது இளம் தலைவர் காரத் அவர்களிடமிருந்து பதில் பெற்று தருவதாககூறி என் கடிதம் பெற்றுச் சென்றார்.
இதுவரை அதற்கான பதில் எனக்கு தரவில்லை.
நான் வெளிநாட்டில் சொகுசாக இருந்துகொண்டு தமிழ்த்தேசியம் பேசுவதாக கூறும் கம்யுனிஸட் கட்சி பெண் பிரமுகர் இதை அறிவாரா?
குறிப்பு – கீழே உள்ள படம் நான் இந்தியாவில் சொகுசாக(?) இருந்தபோது எடுத்தது.
புலம்பெயர் தமிழரின் வியாபாரத்திற்காக
புலம்பெயர் தமிழரின் வியாபாரத்திற்காக
இம்முறையும் ஈழத் தமிழ் பெண் ஒருவரை
பிக்பாஸில் இறக்கியுள்ளது விஜய் டிவி.
அக்-10, இன்று உலக மனநல தினம்
அக்-10, இன்று உலக மனநல தினம்
இந்த தினம் எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ குறிப்பாக இன்றைய நிலையில் எமது தமிழ் இனத்திற்கு இது எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ எம்மிடையே போதியளவு விழிப்புணர்வு காணப்படவில்லை.
எமது தமிழ் சமூகத்தில் மனக்கோளாறு என்பது பேசாப் பொருளாகவும் பொத்திப் பாதுகாக்கும் ரகசியமாகவும் இருந்து வருகிறது.
பைத்தியம், கிறுக்கு, விசர் என்றும் நவீன தமிழில் லூசு, மெண்டல் என்றும் தரக்குறைவாக அழைக்கப்படுகிறது.
தமிழ்படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றார்கள்.
இதனால் சிறுவர்கள் இவர்கள் மீது கல் எறிகின்ற கோர நிலை எமது சமூகத்தில் காணப்படுகிறது
மனநோயாளர்கள் என்று சமூகத்தினால் முத்திரை குத்தப்படுபவர்கள் மீது பாரபட்சமும் வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகின்றன.
குடும்பங்களிடையே இது ஒரு அவமானமாக பார்க்கப்படுகின்றது.
மனநோயாளிகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள்.
அவர்களை பாதுகாக்க வேண்டிய காப்பகங்கள்கூட அவர்களை கேவலமாக நடத்துகின்றன.
அவர்களின் மனிதவுரிமைகள் மீறப்படுகின்றன.
அவர்கள் பயங்கரமானவர்கள் , வக்கிர புத்தி கொண்டவர்கள் என்ற பயம் நிலவி வருகிறது.
இந்த கருத்துகள் மக்களிடையே சகல மட்டங்களிலும் காணப்படுகின்றது.
எனவேதான் இந்த மனநோய் பற்றி உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எற்படுத்துவதற்காக உலக மனநல தினம் கொண்டாடப்படுகின்றது.
மன நல பாதிப்பு அறிகுறிகள் தெரிந்தவுடனேயே மன நல சிகிச்சை, ஆலோசனை பெற வேண்டும் என்பதே, மன நல நாளின் நோக்கமாகக் கருதப்படுகிறது.
மன நோய்கள் என்பது உடல்நோய்கள் போல யாருக்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வரலாம்.
ஒரு நபர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மன நல மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டவராகவே உள்ளார்.
குறைந்தது 4 பேரில் ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மன நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உடல் நலத்தைப் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், மன நலத்தையும் பேணி பாதுகாப்பது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது.
இலங்கையில் நடந்து முடிந்த நீண்ட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 30வீதமான தமிழ் மக்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னேறிய நாடுகள் என கருதப்படும் ஜரோப்பிய நாடுகளில் அரசாங்கம் மனநோய் பற்றி அதிக கவனம் எடுக்கிறது. அதற்காக அதிக பணம் ஒதுக்கிறது.
ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இது குறித்து அரசு மட்டுமல்ல சமூக அக்கறை உள்ள அமைப்புகள்கூட கவனம் செலுத்தாமை துரதிருஸ்டவசமானது.
மக்கள் மத்தியில் மனநோய்கள் மனக்கோளாறுகள் குறித்து பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன.
மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
தற்போது மன நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கும் போதிலும், இன்னும் பல நேரங்களில் தாங்கள் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை ஏற்க மறுத்து மறுதலிப்பதாலும் ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பலர் தள்ளிப் போடுகின்றனர் .
இதனால், எளிதில் செய்ய வேண்டிய சிகிச்சைகளைக் கடினமாக்குவதுடன் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்படுகின்றனர்.
அதனால், மன நல நோய்க்கு ஆரம்ப நிலை சிகிச்சை என்பது கட்டாயம். தவிர்த்தால் அதுவே பின்னாளில் சிக்கலாகி விடுகின்றது.
தமிழ் உணர்வு இருந்தால்
தமிழ் உணர்வு இருந்தால் அயலானும் தமிழன் ஆகிடுவான் என்று கமலஹாசன் கூறுகின்றார். சரி. நல்லது. ஆனால் ஈழத்தில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்டபோது இந்த அயலான்களுக்கு ஏன் எந்த உணர்வும் வரவில்லை கமல் அவர்களே?
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு
யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை இடிக்கும்படி இந்திய தூதுவர் மிரட்டினார்.
ஆனால் சீன தூதுவர் இவ்வாறு எதுவும் மிரட்டவில்லை. மாறாக அதே யாழ் பல்கலைக்கழகத்திற்கு 50 லட்சம் ரூபா பெறுமதியான புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளார்.
யாழ் இந்துக்கல்லூரியில் இந்தியை திணிக்கும் இந்திய தூதர் இனி என்ன செய்யப்போகிறார்?
இந்திய படையின் பிரம்படிப் படுகொலைகள்
•இந்திய படையின் பிரம்படிப் படுகொலைகள்
1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ம் திகதி யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் 50க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்டனர்.
யாழ் மருத்துவமனை முன்னால் காந்திசிலை நிறுவி காந்தி ஜெயந்தி கொண்டாடும் இந்திய தூதர் ,பிரம்படியில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு குறைந்த பட்சம் ஒரு வருத்தம்கூட இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்திய தூதருடன் சேர்ந்து காந்திக்கு விழா எடுக்கும் எம் தலைவர்களும்கூட பிரம்படியில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதில்லை.
ஒருவேளை அஞ்சலி செலுத்தினால் இந்திய தூதர் கோபம் கொள்வாரோ என்ற அச்சமா?
என்னடா இது ஈழத் தமிழனுக்கு வந்த சோதனை?
என்னடா இது ஈழத் தமிழனுக்கு வந்த சோதனை?
ஆண்டவரே! பிளீஸ் எங்களை விட்டுவிடுங்கள்.
நாங்கள் எற்கனவே ரொம்ப நொந்துபோய் இருக்கிறோம்.
யாழ்ப்பாணத்தில் மோடியின் இந்திய தூதர்
யாழ்ப்பாணத்தில் மோடியின் இந்திய தூதர் இந்தி மொழியை திணிப்பதும் தமிழைக் காப்பாற்றவா அண்ணாமலையாரே?
“விபச்சாரி” என்ற சொல் மருவி “மீடியா”
“விபச்சாரி” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்ததாக சிலர் கூறுகின்றார்கள்.
இந்துப் பேப்பரில் வரும் செய்திகளை படிக்கும்போது அது உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
எப்படி கொஞ்சம்கூட கூச்சம் இன்றி புலிகள் குறித்து பொய் செய்திகளை பரப்புகின்றனர்?
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக தமிழர்களும் ஈழத் தமிழர்களும்
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக தமிழர்களும் ஈழத் தமிழர்களும் சேர்ந்து போராடுவதற்கு எதிரியே நகர்த்துகிறான்.
தமிழன் எல்லா நாட்டிலும் இருக்கிறான்.
“தமிழன் எல்லா நாட்டிலும் இருக்கிறான். ஆனால் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை”
“தமிழ்நாட்டில் எல்லா கட்சியிலும் தமிழன் இருக்கிறான். ஆனால் தமிழனுக்கு என்று ஒரு கட்சி இல்லை”
“வீழ்ந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கிற என் தலைவன் பிரபாகரனை பிடிக்கும்”
- பிக்பாஸ் போட்டியாளர் அசீம்
இவரது கருத்துக்களை விஜய் டிவி அனுமதிக்குமா?
காஷ்மீர் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த தலைவர்
காஷ்மீர் சுதந்திரத்திற்கு குரல் கொடுத்த தலைவர் அல்தாப் ஷா இந்திய சிறையில் மரணமடைந்துள்ளார். அவருக்கு எமது அஞ்சலிகள்.
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அவரை அடைத்து வைத்திருந்ததுடன் அவருக்கு மருத்துவ சிகிச்சைகூட அளிக்க மறுக்கப்பட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.
தனது நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கி ஆளும் இந்திய அரசு ஈழத்தில் தமிழருக்கு உதவும் என நம்புவர்களை என்னவென்று அழைப்பது?
அரசியல் லாபம் கருதி தேவர் குருபூசையில் கலந்துகொள்ளும் தலைவர்கள்,
அரசியல் லாபம் கருதி தேவர் குருபூசையில் கலந்துகொள்ளும் தலைவர்கள், மோடி இம்முறை கலந்துகொள்வதை அரசியல் லாபம் என்கின்றனர்.
நியாயமானது மட்டுமல்ல
நியாயமானது மட்டுமல்ல அவசியமான கோரிக்கையும்கூட.
ஏற்கனவே பிற மாநிலங்களில் இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது.
எனவே தமிழர் நலன் கருதி திராவிட முதல்வர் சட்டம் இயற்றுவாரா?
தன்வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா
தன்வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா
தன்வாழ்நாள் முழுவதும் தமிழ் இனத்திற்காக அயராது இயங்கிய டேவிட் அய்யா அவர்கள் 11.10.2015யன்று தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார்.
அவர் தனக்காக எந்த சொத்தும் சேர்க்கவில்லை. மாறாக தனது சொத்தை எல்லாம் தமிழ் இனத்திற்காக செலவு செய்தார்.
அவர் தனக்கு எந்த பதவியையும் தேடிக்கொள்ளவில்லை. மாறாக தமிழ் இனத்திற்காக தனது உழைப்பையெல்லாம் கொடுத்தார்.
அவர் தனது இனத்திற்கு ஒருபோதும் துரோகம் இழைத்தவர் அல்லர். மாறாக தமிழ் இனத்திற்காக தன்னையே தியாகம் செய்தவர்.
அவர் கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால் பதவிகளைப் பெற்றிருக்கலாம். சொகுசாக வாழ்ந்திருக்கலாம்.
எந்த நெருக்கடியிலும் அவர் தனது கொள்கைகளை விட்;டுக்கொடுக்கவில்லை. அதனால் அவரை கொடிய பயங்கரவாதி என்று இந்திய அரசு லிஸ்ட்டில் வைத்திருந்தது.
அவர் மீது மதிப்ப வைத்திருந்தவர்கள் பலர் புலம்பெயர்ந்த நாடுகளில் வசதியாக இருக்கின்றனர். அவர் விரும்பியிருந்தால் அவர்களிடம் உதவி பெற்று வசதியாக வாழ்ந்திருக்கமுடியும்.
அவர் இறுதிவரை எளிமையாக வாழ்ந்து மடிந்தள்ளார்.
அவருடைய தியாகம் ஒருபோதும் வீண்போகாது. வரலாறு அவரை நிச்சயம் நினைவில் கொள்ளும்.
பின்லாந்து வெளிநாட்டமைச்சரை
பின்லாந்து வெளிநாட்டமைச்சரை சந்தித்து கஜேந்திரன் எம்.பி உரையாடியுள்ளார்.
அந்தந்த நாடுகளில் அந்தந்த மொழிகளை கற்று அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு புரியும் மொழியில் பேச ஆரம்பித்துள்ளனர் புலம்பெயர் தமிழர்களின் அடுத்த சந்ததியினர்.
அவர்கள் தம் இலக்கை அடையாமல் ஓயமாட்டார்கள். இது உறுதி.
பதவியில் இருந்து விரட்டப்பட்ட
பதவியில் இருந்து விரட்டப்பட்ட இனப்படுகொலையாளியை தேடிச்சென்று கொஞ்சம்கூட கூச்சமின்றி கைகுலுக்கும் முன்னாள் நோர்வே சமாதான தூதர்.
தமிழர்கள் நம்பி ஏமாந்த மனிதர்களில் இந்த சமாதான தூதரும் (எரிக் சொல்கைம்) ஒருவர்
இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம்
இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம்
அதுவும் கம்யுனிஸ்ட்டுகள் ஆட்சியின் கீழ் உள்ள மாநிலம்.
அந்த கேரள மாநிலத்தில் நரபலி. அதுவும் தமிழ் பெண் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறார்.
நாலு சீட்டுக்கும் 25 கோடி ரூபாவுக்கும் அறிவாலயம் வாசலில் வீழ்ந்து கிடக்கும் தமிழக கம்யுனிஸ்டுகள் இதற்கு என்ன கூறப்போகிறார்கள்?
தாம் ஆட்சிக்கு வந்தால் ஏழு தமிழர்களையும்
தாம் ஆட்சிக்கு வந்தால் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தவர்கள்,
பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தவுடன் அவரை அழைத்து கட்டிப்பிடித்து அவர் விடுதலைக்கு உரிமை கோரியவர்கள்,
இப்போது அந்த ஏழு தமிழரில் இருவரின் விடுதலைக்கு தம் பொறுப்பை தட்டிக்கழிப்பது ஏன்?
டென்மார்க் சென்ற ஈழத் தமிழன்
டென்மார்க் சென்ற ஈழத் தமிழன் அங்கு குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிடவும் முடிகிறது.
ஆனால் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டை நம்பிச் சென்ற ஈழத் தமிழன் இன்றும் அகதியாகவே இருக்கின்றான்.
ஈழத் தமிழர் மீதான திராவிட அக்கறை இது?
இலங்கையில் வடக்கில் சீன ஊடுருவலால்
இலங்கையில் வடக்கில் சீன ஊடுருவலால் தமிழ்நாட்டிற்கே பெரும் ஆபத்து உண்டு. இது குறித்து மோடி அக்கறை இன்றி இருக்கலாம். ஆனால் தமிழக முதல்வர் எப்படி கவலை கொள்ளாமல் இருக்கிறார்?
தமிழ்நாடு என்று பெயர் சூட்ட கோரி
தமிழ்நாடு என்று பெயர் சூட்ட கோரி உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் சுந்தரலிங்கனார் அவர்களது நினைவைப் போற்றுவோம்...
இந்த உதவி எப்போது யாருக்கு வழங்கப்பட்டது
இந்த உதவி எப்போது யாருக்கு வழங்கப்பட்டது என்ற விபரத்தை யாராவது RSS தெரிவிப்பார்களா?
ஒருவேளை இந்துக்கோயில்களை இடிப்பதற்கு நன்றி தெரிவித்து சிங்கள பௌத்த குடும்பங்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டிருக்கிறதா?
நாங்களும் இந்துதான் என்று சொல்லிக்கொண்டு
நாங்களும் இந்துதான் என்று சொல்லிக்கொண்டு
டில்லி சென்று இந்திய அரசின் காலை நக்க முயலும்
ஈழத்து நாய்க்குட்டிகள்.
இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று
காசி ஆனந்தன் விதைத்த நச்சு விதையின் விளைச்சல் இது.
சில நாய்க்குட்டிகளை வைத்து திலீபன் நினைவு
சில நாய்க்குட்டிகளை வைத்து திலீபன் நினைவு தினத்தை குழப்ப முயன்ற யாழ் இந்திய தூதருக்கு தமிழ் மக்கள் அளித்துள்ள பதில் இது.
யாழ் பிரம்படியில் இந்திய படையால் கொல்லப்பட்ட தமது உறவுகளுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
என்னைப்பற்றி உனக்கு தெரியும்
என்னைப்பற்றி உனக்கு தெரியும்
உன்னைப் பற்றி எனக்கு தெரியும்
எங்க இரண்டு பேரைப் பற்றியும் ஊருக்கே தெரியும்
- கனிமொழி மைன்ட் வொய்ஸ்
சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் எம்.பி களை
சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் எம்.பி களை மோடிக்கு கடிதம் அனுப்ப வைத்தார் இந்திய தூதர். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.
இப்போது சில முன்னாள் போராளிகளை டில்லிக்கு அனுப்பி நாங்களும் இந்து என்று கூற வைத்துள்ளார் இந்திய தூதர்
தமிழ் மக்கள் மத்தியில் பல பிரிவுகளை உருவாக்கும் இந்திய தூதரின் சூழ்ச்சிக்கு பலியாகும் நம்மவர்கள்.
ஈழத் தமிழர்களை சிதைப்பதற்கே
ஈழத் தமிழர்களை சிதைப்பதற்கே இந்திய அரசும் அதன் தூதுவரும் இந்துத்துவாவை ஈழத்தில் விதைப்பதாக தோன்றும். ஆனால் பரஸ்பரம் ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து பயணித்தல் என்ற அடுத்த நிலைக்கு ஈழத் தமிழரும் தமிழக தமிழரும் நகர்ந்து விடுவதை தடுப்பதற்காகவே இதனை செய்கின்றனர் என்பதை காலம் உணர்த்தும்.
“குழல் இனிது யாழ் இனிது என்பர்
“குழல் இனிது யாழ் இனிது என்பர்
ஈழத் தமிழ் கேளாதவர்”
ஜனனி இன்னும் சில நாட்கள் பிக்பாஸில் நீடித்தால்
தமிழக மக்கள் பலரை “கதைக்கிறம்” சொல்ல வைத்துவிடுவார்.
வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி
வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி
இன்னொரு தோளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது!
வீரப்பன் யானைத் தந்தந்களை கடத்திய போது இந்திய அரசால் கொல்லப்படவில்லை.
வீரப்பன் சந்தன மரங்களை வெட்டியபோதும் இந்திய அரசால் கொல்லப்டவில்லை.
வீரப்பன் பொலிசாரைக் கொன்றபோதும்கூட இந்திய அரசால் கொல்லப்படவில்லை.
ஆனால் வீரப்பன் தமிழ்நாடு விடுதலையை முன்வைத்ததும் உடனடியாக இந்திய அரசால் சதி செய்து கொல்லப்பட்டார்.
தமிழ்நாடு விடுதலையை முன்வைக்கும் பலர் உயிரோடுதானே இருக்கிறார்கள். அப்படியிருக்க வீரப்பனை மட்டும் கொன்றார்கள் என்று எப்படி சொல்ல முடியும்?
உண்மைதான். நல்ல கேள்விதான். இதற்கு காரணம் வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கியே.
வீரப்பனின் துப்பாக்கி யானைகளை சுட்டுக் கொன்ற போது இந்திய அரசு கவலை கொள்ளவில்லை.
வீரப்பனின் துப்பாக்கி பொலிசாரை சுட்டுக் கொன்றபோதும்கூட இந்திய அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் வீரப்பன் துப்பாக்கி தமிழ்நாடு விடுதலைக்காக சுடப் போகிறது என்று அறிந்ததும் உடனடியாக இந்திய அரசால் கொல்லப்பட்டார்.
கொலைகாரன், கொள்ளைக்காரன், கடத்தல்காரன் என்று அழைக்கப்படும் வீரப்பன் முன் வைத்த கோரிக்கைகள் சில,
(1) 10ம் வகுப்புவரை தமிழ் வழிக் கல்வி வேண்டும்
(2) வாசாத்தியில் பாதிக்கப்ட்ட பெண்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்
(3) தடா சட்டத்தில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
(4) பெங்களுரில் மூடப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறக்க வேண்டும்
(5) காவிரி பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.
புரட்சிதலைவி என்று அழைக்கப்பட்ட ஜெயா அம்மையார் சிறையில் அடைக்கப்பட்டபோது முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு,
(1)தனக்கு சுகர், மூட்டுவலி இருப்தால் சலுகை தர வேண்டும்
(2)சிறையிலும் தன்கூட சசிகலா இருக்க அனுமதிக்க வேண்டும்
(3)வயது மூப்பு காரணமாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்
தமிழ் மக்களே! இப்போது புரிகிறதா ஏன் வீரப்பன் கொல்லப்பட்டார் என்று?
குறிப்பு – 18.10.2022 வீரப்பன் நினைவு தினத்தை முன்னிட்டு இது ஒரு மீள்பதிவு.
ஒவ்வொரு வருடமும் 85000கோடி ரூபா
ஒவ்வொரு வருடமும் 85000கோடி ரூபா தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு, 800 தமிழக மீனவர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டபோதும் கவலை கொள்ளவில்லை.
இப்போது ஈழத்தில் சீன ஊடுருவல் குறித்து தமிழ்நாட்டிற்கு ஏற்படும் ஆபத்து குறித்தும் கவலை கொள்ளவில்லை.
தமிழ்நாட்டை இந்தியாவின் ஒருபகுதியாக இந்திய அரசு கருதாதபோது எதற்காக வருடம்தோறும் 85000கோடி ரூபாவை தமிழ்நாடு இந்திய அரசுக்கு வழங்க வேண்டும்?
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா தமிழர்களை கடத்தி முதலைக்கு இரையாக்கினார் என்ற குற்றச்சாட்டு உண்டு.
கோத்தபாயாவின் உத்தரவுப்படி தமிழர்களை கடத்திய உண்மையை வெளி உலகிற்கு கூறியவரையே இப்போது கடத்தி விட்டார்கள்.
தமிழருக்கு எப்போது எப்படி நீதி கிடைக்கும்?