• நினைவஞ்சலிகள்!
சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், ஜோசப் பரராயசிங்கம். சந்திரநேரு வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசனும் கொல்லப்பட்டார்.
சிங்கள ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியரின் கிளைமோர் தாக்குதலில் 06.03.2008 யன்று சிவநேசன் கொல்லப்பட்டார்.
அவர் தன்னை தெரிவு செய்த மக்களுடன் இருந்தார். அதனாலேயே அவர் கொல்லப்பட்டார்
அவர் கொல்லப்பட்டு 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கொலைக்கு நீதி வழங்கப்படவில்லை.
தமது சக பாராளுமன்ற உறுப்பினரின் கொலைக்கே இதுவரை நீதி பெறாத தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் மக்களின் படுகொலைகளுக்கு நீதி பெற்றுத் தருவார்கள் என எப்படி நம்புவது?
No comments:
Post a Comment