Friday, March 22, 2024
முருகன் லண்டனில் உள்ள தன்
முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்.
ஆனால் தமிழக அரசு அவரை லண்டன் செல்ல அனுமதி வழங்காமல் இலங்கைக்கு அனுப்ப முயல்கிறது.
இதுதான் சட்ட நடைமுறை என்று சிலர் தமிழக அரசை நியாயப்படுத்த முயல்கின்றனர்.
அவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்
இதே ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விக்கி மற்றும் ஆதிரை.
இவர்கள் மீதான ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தபோது இவர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டனர்.
சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட இருவரும் அங்கிருந்து ஜரோப்பிய நாடொன்றுக்கு சென்று அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
எனவே ராஜீவ் வழக்கில் வைக்கப்பட்டிருந்த விக்கி ஆதிரை ஆகியோர் வெளிநாடு செல்ல சட்ட நடைமுறை அனுமதிக்கும் என்றால் முருகன் செல்ல ஏன் அனுமதிக்க முடியாது?
எல்லாவற்றுக்கும் மேலாக முருகன் ஒரு இந்து. அவர் இப்போது ஒரு சாமியார் போல் ஆகிவிட்டார்.
உலகில் உள்ள இந்துக்கள் அனைவரின் மீதும் அக்கறை கொள்வதாக கூறும் இந்திய அரசு முருகன் மீது ஏன் அக்கறை கொள்ளவில்லை?
இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் அவர்கள் "இந்து" முருகனுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?
No comments:
Post a Comment