Friday, May 31, 2013

ஒரு சிங்கள அரசியல்வாதிக்கு அஞ்சலி செலுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.

கடந்த வருடம் இதே காலப்பகுதியில் லண்டனில் ஈஸ்ட்காமில் ஆனந்தபவன் சாப்பாட்டு கடையில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தவேளையில் எனது நண்பர் ஒருவர் ஜெலத் ஜெயவர்த்தனாவை எனக்கு அறிமகப்படுத்தினார். முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பின்னர் குட்டி யாழ்பாணம் என அழைக்கப்படும் இந்த ஈஸ்ட்காம் பகுதியில் சாதாரண சிங்கள மக்களே நடமாட அச்சப்படும் இந்த வேளையில் ஒரு சிங்கள அரசியல்வாதி அதுவும் முன்னாள் அமைச்சரும, பாராளுமன்ற உறுப்பினரும் ஆகிய ஜெலத் ஜெயவர்த்தனா எவ்வித அச்சமின்றி நடமாடியது அவர் தமிழ் மக்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையை எடுத்துக்காட்டியது.

என்னை நண்பர் அறிமுகப்படுத்தியபோது எனது கையைப் பிடித்து குலுக்கியதோடு தனது விசிட்டிங்கார்ட்டை தந்து இலங்கை வரும்போது மறக்காமல் தன்னை சந்திக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் எளிமையானவர். தமிழ் மக்களுடன் நிறைய நட்புகளும் தொடர்புகளும் கொண்டிருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதற்காக யாழ் தகவல் தொழில் நுட்ப பூங்காவை மூடப்போகிறார் என பரவாலாக வதந்தி பரவியிருந்தது. இதனால் எனது பத்திரிகை நண்பர் ஒருவர் மூலம் அவ்வாறு செய்ய வேண்டாம் என அவரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்ட போது அமைச்சர் ஜெலத் ஜெயவர்த்தனா “ டக்ளஸ் எனக்கும் நல்ல நண்பர்தான். அதுமட்டுமல்ல இது தமிழ் மக்களுக்கு நன்மை தரும் ஒரு நல்ல விடயம். எனவே அதனை நான் குழப்ப மாட்டேன்” என உறுதியளித்தார். அதன்படி அவர் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்து கொண்டார்.

என்னதான் தனிப்பட்ட முறையில் ஜெலத் ஜெயவர்த்தனா நல்லவராக இருப்பினும் அவர் தமிழ் மக்கள் மீது அனுதாபம் கொண்டிருந்தாலும் அவர் அங்கம் வகித்த ஜ.தே. கட்சியானது ஒரு முதலாளித்துவ கட்சி என்பதுடன் தமிழ் மக்கள் மீது இன ஒடுக்குமுறையை மேற்கொண்ட கட்சி. அக் கட்சியின் ஆட்சிக்காலத்திலேதான் பல கலவரங்களும் கொலைகளும் நடத்தப்பட்டன. சிறைப் படுகொலை மற்றும் யாழ் நூலக எரிப்பு போன்றவை தமிழ் மக்களால் மறக்க முடியாதவை. இவரும் அக் கட்சியில் அமைச்சராக இருந்துள்ளபடியால் அதற்கு இவரும் பொறுப்பானவராகவே கருதப்படவேண்டும். இன்றும்கூட இவரது கட்சி தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்க தயாராக இல்லை என்பதே உண்மையாகும்.

ஜெலத் ஜெயவர்த்தனா நல்லவரா இல்லையா என்பதை விட அவரின் மறைவுக்கு பல தமிழ் தேசியவாளர்கள் என தம்மை கூறிக்கொள்வோர் ஆஞ்சலி செலுத்தி வருவது கவனிக்க தக்கது. தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் குறித்து நாம் பேசியபோது தமிழ் மக்கள் மீது அனுதாபம் கொண்ட ஒரு சிங்களவனைக் காட்ட முடியுமா என சவால் விட்ட இவ் தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஒரு சிங்கள அரசியல்வாதிக்கு அஞ்சலி செலுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.

Tuesday, May 28, 2013

இது பயங்கரவாதமா? அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் பதிலடியா?

• சதீஸ்ட்;கரில் நக்சலைட் தாக்குதல் - 23 பேர் பலி
இது பயங்கரவாதமா? அல்லது
பாதிக்கப்பட்ட மக்களின் பதிலடியா?

இது கருப்பு தினம் என்கிறார் பிரதமர். இது காங்கிரஸ் மீதான தாக்குதல் அல்ல ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்கிறார் ராகுல் காந்தி. அத்வானி ஓடிச் சென்று பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவரை பார்வையிடுகிறார். இவாவாறு அனைத்து ஆளும்வர்க்க தலைவர்களும் சம்பவத்தைக் கண்டிக்கிறார்களேயொழிய சம்பவத்திற்கான காரணம் குறித்து கருத்து எதுவும் கூறாமல் மௌனம் சாதிக்கின்றனர்.

காங்கிரஸ் உருவாக்கிய சல்வாஜீடும் அதன் பிதாமகர் மகேந்திரகர்மாவுமே தாக்குதல் இலக்காக இருந்திருக்கிறது. சல்வாஜீடும் என்பது என்றால் அமைதி வேட்டை என்று பொருள். இவர்களுக்கு அரசே ஆயுதம் கொடுத்தது. டாடா எஸ்ஸார் போன்ற பெருமுதலாளி குழுமங்கள் இந்த படைக்கான செலவை ஏற்றுக்கொண்டனர்.

சல்வா ஜுடும் ஊர் ஊராகச் சென்று மக்களைக் கிராமங்களிலிருந்து விரட்டியடித்தது. எண்ணற்ற கொலையையும் கணக்கிலடங்கா கற்பழிப்பிலும் ஈடுபட்டது. தண்டகாரண்யப் பகுதியில் மட்டும் 660 கிராமங்களுக்கு மேல் காலி செய்யப்பட்டன. 50,000 மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். மூன்றரை இலட்சம் மக்கள் காணாமற் போய் விட்டார்கள். இன்று வரை அவர்களைக் காணவில்லை. இதெல்லாம் அங்கே நடந்த கொடூரத்தில் பாதி தான் முழுமையாக நடந்தது இன்றுவரை யாருக்கும் தெரியாது. 2011 ஆண்டு உச்சநீதிமன்றம் சல்வா ஜுடுமை சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்து தடை செய்தது. ஆனால் அதற்குள் அங்கே எல்லாம் நாசமாகிவிட்டது. பல ஆயிரம் உயிர்களும் பல லட்சம் குடும்பங்களும் பல கோடி பெறுமானமுள்ள காடுகளும் நாசமாகிவிட்டன.

இத்தனை கொடுமைகளை செய்த சல்வா ஜுடுமை உருவாகிய மகேந்திர கர்மாவை குறிவைத்து தான் நேற்றைய தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. தங்கள் மக்களின் மிகக்கொடிய அழிவிற்கு காரணமானவர்களை அழித்திருக்கிறார்கள் அம்மண்ணின் மக்கள்.

# காங்கிரஸ் என்ற கட்சி தங்கள் அரசியல் லாபங்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யும் என்பதற்கு ஒரு சாட்சி தான் சல்வா ஜுடும்.கீழே உள்ள படத்தைப்பாருங்கள். அம் மக்களின் வலி புரியும். ஏன் இவ்வாறான சம்பவங்கள் நடக்கின்றன என்பதன் நியாயம் தெரியும்.

• “எல்லா உயிர்களிமும் அன்பு செலுத்துங்கள், தமிழனைத் தவிர”- (சிங்கள) புத்த பெருமா

• “எல்லா உயிர்களிமும் அன்பு செலுத்துங்கள், தமிழனைத் தவிர”- (சிங்கள) புத்த பெருமான்

சிங்கள பிக்கு தீக்களிப்பு

இலங்கையில் கண்டி தலதா மாளிகை- பௌத்த விகாரைக்கு முன்பாக பிக்கு ஒருவர் தீக்குளித்துக் கொண்டுள்ளார்.ஆடு, மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பிக்கு தன்மீது பெற்றோலை ஊற்றி எரித்துக்கொண்டுள்ளார்.

மோசமான எரிகாயங்களுக்கு உள்ளான அவரை அருகில் நின்றவர்கள் கண்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அவர் பின்னர் கொழும்பு தேசிய மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் மிருக பலி பூஜைகளைத் தடுக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் முன்னேஸ்வரம் இந்துக் கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
அதேபோல ஆடு, மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் சில பௌத்த அமைப்புகள் குரல் கொடுத்துவந்துள்ளன.

அங்கு, கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறிவந்துள்ளது.
பௌத்தர்களுக்கு முக்கியமான வெசாக் முழுமதி நாளான இன்று வெள்ளிக்கிழமை பௌத்த பிக்கு தீக்குளித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாயக்காலில் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது ஒரு உயிர் கொல்லப்படுகிறதே என்றோ அல்லது சித்திரவதை செய்யப்படுகிறதோ என்று ஒரு பிக்குவும் தீக்குளிக்கவில்லை. கண்டிக்கவும் இல்லை. ஆனால் இப்போது இந்து ஆலயங்களில் நடக்கும் மிருக பலிக்கும, முஸ்லிம்கள் சாப்பாட்டிற்காக மாடுகளை வெட்டுவதையும் எதிர்ப்பதற்காக உயிர்வதைகளுக்கு எதிராக தீக்குளிப்பதாக கூறுவதைப் பார்க்கும்போது ஒருவேளை புத்தர் “எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள், தமிழனையும் முஸ்லிமமையும் தவிர” என்று கூறியிருப்பாரோ என நினைக்க தோன்றுகிறது.

• மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தேவை!

• மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு தேவை!

உலகில் ஜந்தில் ஒரு பெண்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுவதாக ஒரு கணிப்பு கூறுகிறது. அதுவும் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் பெண்கள் இந்த கொடிய நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும் என்றும் ஆனால் நோய் முற்றிவிட்டால் மரணம் தவிர்க்க முடியாதது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். துரதிருஸ்டவசமாக பெண்கள் போதிய விழிப்புணர்வு இன்மையால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டறிந்து மருத்துவம் பெற தவறிவிடுவதுடன் வீணாக மரணத்தைத் தழுவுகின்றனர்.

அண்மையில் கொலிவூட் நடிகை ஏஞ்சலினா மார்பக புற்றுநோய் வரக்கூடும் என அஞ்சி தனது மார்பகங்களை அகற்றியது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு புகழ்பெற்ற நடிகை தனது சினிமா வாய்ப்பு பாதிக்கப்படுமோ என அஞ்சாது தனது மார்பகங்களை அகற்றியதுடன் அதனை மீடியாக்களுக்கும் தெரிவித்துள்ளார். அவரது தாயார் இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததால் தனக்கும் இந் நோய் வரக்கூடும் என அஞ்சிய அவர் மருத்துவர்களின் ஆலோசனையுடன் இதனைச் செய்துள்ளார்.

மார்பக புற்று நோய் வருவது பரம்பரைக் காரணம் ஜம்பது வீதம் என்றாலும் கூட அவர் அது வந்த பின் குணமாக்குவது கடினம் என்பதை புரிந்து கொண்டு முதலே மார்பகத்தை அகற்றி அந்த கொடிய நோயின் ஆபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றியுள்ளார். அவரது இந்த செயல் உலகில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. இவருக்கு 3 குழந்தைகள் உண்டு. அதுமட்டுமல்ல மேலும் 5 ஏழைக் குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கிறார். அந்த குழந்தைகள் அனாதைகள் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு தனது மார்பகங்களை அகற்றி அந்த கொடிய நோயில் இருந்து தன்னை காப்பாற்றியுள்ளார். அவர் போல் எல்லா பெண்களும் இது குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.

மார்பக புற்றுநோய் இருப்பதை தொடக்க நிலையில் கண்டறியும் “மம்மோகிரபி” என்னும் சோதனைக்கான செலவு கொஞ்சம் அதிகம்தான். அதனாலேயே வறிய பெண்கள் அந்த சோதனை செய்ய முடியாமல் உள்ளனர். எனவே அரசு இதனை இலவசமாக வழங்குவதுடன் இது குறித்து பெண்களுக்கு பாரிய பிரச்சாரம் செய்ய வேண்டும். பல்வேறு அமைப்புகள் இதனை பெண்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

லண்டனில் மனித உரிமை போராட்டங்களை முன்னெடுத்து வரும் முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் இக் கொடிய நோய் தாக்கியிருப்பதாக அறிய வருகிறது. எனவே நாளை உங்கள் தாயாருக்கோ அல்லது சகோதரிக்கோ ஏன் மனைவிக்கோ கூட வரலாம். எனவே உடனடியாக ஆரம்பத்pலேயே பரிசோதனை செய்து மருத்துவம் பெற்றுக்கொள்ள வழி செய்யுங்கள். அனைவரும் விழிப்புணர்வு பெற்றால் இந்த கொடிய நோயை எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியும்.

இதுதான் மகிந்த சிந்தனையா? அல்லது வடக்கின் வசந்தமா?

இதுதான் மகிந்த சிந்தனையா?
அல்லது வடக்கின் வசந்தமா?

தாண்டிக்குளத்தில் ஒரு பெண் வறுமைகாரணமாக தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அவருக்கு மெண்டல் என்று கூறி ஆஸ்பத்திரியில் வைத்துள்ளனர். ஏற்கனவே நியாயம் கேட்ட ஒரு மருத்துவர் மெண்டல் என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

நெடுங்கேணியில் ஏழுவயது சிறமி பாலியல் வல்லுறவுகுள்ளாக்கப்பட்டிருக்கிறார். அது குறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோல் தினமும் பல்வேறு செய்திகள் வருகின்றன. இது தமிழ் பகுதிகளில் மட்டுமன்றி சிங்களப் பகுதிகளிலும் இவ்வாறே நிகழ்கின்றன. இது தான் வடக்கின் வசந்தமா? அல்லது மகிந்த சிந்தனையா?

சர்மிளா சயித் என்ற முஸ்லிம் பெண்மனி விபச்சாரத்தை சட்ட ரீதியாக்குங்கள் என்றார். அவர் விபச்சாரத்தை விரும்புவர் அல்ல என்றாலும் அத் தொழிலை செய்யும் பெண்கள் மீது இரக்கம் கொண்டு இக் கோரிக்கையை வைத்தார். ஆனால் அடிப்படைவாதிகளின் கடும் எதிர்ப்பால் அவர் தலை மறைவாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது விபச்சாரம் செய்யும் பெண்களுக்கு அசிட் வீசப்படும் என ஒரு பௌத்த அமைப்பு நீர்கொழும்பு பகுதிகளில் சுவரொட்டி ஒட்டியுள்ளது. எந்த பெண்ணுமே விரும்பி விபச்சாரம் செய்வதில்லை. அவர்கள் அத் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். அவர்களுக்கு வாழ வழிசெய்ய முடியாத சமூகத்திற்கு தண்டனை கொடுக்க என்ன தகுதி இருக்கிறது?

பெண்கள் மீது என்றுமில்லாத ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். இது குறித்து பெண்கள் அமைப்புகள் எழுப்பும் குரல்களை அரசு மதிப்பதில்லை. வெள்ளைவானைக் காட்டி மிரட்டுகிறது.
விலைவாசி ஏறுகிறது. போதிய அபிவிருந்தி நிகழவில்லை. ஆட்சியாளர்கள் மக்கள் பணங்களை கொள்ளையடிக்கின்றனர். மாபெரும் மக்கள் போராட்டங்கள் எதிர்வரும் காலங்களில் நிகழ இருக்கின்றன. காலம் மாறும். வெள்ளை வானில் கோத்தா கும்பல் ஏற்றப்படும் நிலை நிச்சயம் தோன்றும். இது உறுதி.

ராஜீவ் காந்தி மரணம்

ராஜீவ் காந்தி மரணம்

1991ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி அதிகாலையில் வழமைக்கு மாறாக நான் அடைத்து வைக்கப்ட்டிருந்த மதுரை சிறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்ட்டிருந்தது. இது குறித்து காவல் நின்ற அதிகாரியிடம் கேட்ட போது ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டார்கள் என்றார். இதைக் கேட்ட நான் சந்தோச மிகுதியில் அந்த அதிகாரிக்கு கைகுலுக்கிவிட்டேன். இந்த தகவல் உடனடியாக உயர் அதிகாரிகள் மற்றும் உளவுத் துறையினருக்கு சென்றுவிட்டது. அதன் பலன் அடுத்தநாள் பல உயர் அதிகாரிகள் முன்னிலையில் நான் விசாரிக்கப்பட்டேன்.

அமைதிப்படை என்னும் பெயரில் வந்த இந்திய ராணுவத்தால் நான் மூன்று தடவை துன்புறுத்தப்பட்டேன். எனது ஊரில் ஒரு ஆசிரியரின் மனைவி கற்பழிக்கப்ட்டார். எனது அயல் கிராமத்தில் இருந்த ஒரு ஜயர் பெண் கற்பழிக்கப்பட்டது மட்டுமன்றி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டபோது காரினுள் வைத்து தீயிட்டு கொல்லப்பட்டார். அதுமட்டுமன்றி எமது ஊரில் அனைவருக்கும் தெரிந்த ஒரு 70 வயதான பையித்தியக்காரக் கிழவiனை சுட்டுக் கொன்றுவிட்டு மூத்த விடுதலைப் புலி உறுப்பினர் கொல்லப்பட்டதாக கூறினார்கள். இவ்வாறு என் கண் முன்னே நிகழ்ந்த இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணமான ஒருவர் கொல்லப்படும்போது நான் மகிழ்வு கொள்ளாமல் இருக்கமுடியுமா என அவ் அதிகாரிகளிடம் தெரிவித்தேன்.

ஜம்பதாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். பல கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் அழிக்கப்ட்டன. பல பெண்கள் கற்பழிக்கப்ட்டார்கள். 80வயது கிழவியைக்கூட கற்பழித்த பெருமை இந்திய அமைதிப்படையையே சேரும். ராஜீவ் காந்தியை கொன்ற தானு கூட இந்திய ராணவத்தால் கற்பழிக்கப்பட்டவர் என்று கூறுகின்றனர். ஆனால் அது எந்தளவுதூரம் உண்மை என்று அறிய முடியவில்லை. எனினும் இந்த கொலை ஒட்டு மொத்த பாதிப்படைந்த அப்பாவி மக்களின் வெளிப்பாடே என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதனால்தான் ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்றதும் யாழ்ப்பாண குடா நாடெங்கும் ஆயிரக் கணக்கான மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள். ஒருவருடைய மரணம் இனிப்பு வழங்கி மக்களால் கொண்டாடப்பட்டது என்பதை முதன் முதலாக அன்றுதான் நான் அறிந்தேன். இதிலிருந்தே அமைதிப்படை செய்த கொடூரத்தை புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.

ஒரு கம்யுனிஸ்ட் என்ற வகையில் தனி மனித கொலைகள் தீர்வாகாது என்று கருதுபவன் நான். ரஸ்சியாவில் ஜார் மன்னனை கொல்ல முயன்று மரண தண்டனைக்குள்ளான தனது சகோதரன் பாதையை தோழர் லெனின் தவறு என்று கூறியுள்ளதை நான் படித்திரக்கிறேன். ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்றதாலேயே இந்தியா எமக்கு உதவவில்லை. இல்லையேல் இந் நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் என சிலர் அப்பாவித்தனமாக தொடர்ந்து சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது என்னவெனில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருக்காவிட்டாலும் ஈழம் மலர்ந்திருக்காது. ஏனெனில் இந்திய அரசு ஒருபோதும் ஈழத்தை அங்கீகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல ராஜீவ் கொல்லப்படுவதற்கு முன்னரே புலிகள் இயக்கம் உட்பட அனைத்து இயக்கங்களையும் அழிக்கும் முயற்சியில் இந்திய உளவுப்படை “றோ” இறங்கிவிட்டதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் சிலர் கோரி வருகின்றனர். அப்படியாயின் முதலில் அமைதிப்படை என்ற பெயரில் வந்து அக்கிரமம் செய்த இந்திய ராணுவத்திற்கும் அதற்கு பொறுப்பானவர்களுக்கும் தண்டனை வழங்குங்கள். அதன் பின் ராஜிவ் கொலையை விசாரியங்கள். அதைவிடுத்து “நாம் பலமானவர்கள். நாம் அப்படித்தான் திமிர்தனமாக நடந்து கொள்வோம். நீங்கள்தான் நாம் செய்யும் அக்கிரமங்களை பொறுத்து தொடர்ந்தும் எமக்கு அடிமையாக இருக்க வேண்டும்” என்ற கருதுவீர்களாயின் ராஜீவ் கொலை போன்ற பதிலடிகள் தொடரவே செய்யும்.

இது அறியாமையா ? அல்லது பணத் திமிரா?

இது அறியாமையா ? அல்லது பணத் திமிரா?

ஒரு பெண் வயசுக்கு வந்த நிகழ்வை கெலிகொப்டரில் பறக்க வைத்து ஆடம்பரமாக கொண்டாடிய புலம் பெயர் தமிழ் குடும்பம். இதை அறியாமை என்பதா அல்லது பணத் திமிர் என்பதா?

உலகம் பூராவும் தமிழர்கள் மட்டுமன்றி மனித உரிமையாளர், உணர்வாளர்கள் என்று பல்லாயிரக் கணக்கானோர் முள்ளிவாய்க்காலில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்திவரும் இந்த நேரத்தில் தமது பெண் வயசுக்கு வந்த நிகழ்வை பெரும் ஆடம்பரமாக தமிழ் குடும்பம் ஒன்று புலம்பெயர் நாடு ஒன்றில் கொண்டாடியுள்ளது. பல லட்சம் ரூபா செலவு செய்து நடத்தப்பட்ட இந்த பொறுப்பற்ற நிகழ்வு அனைவராலும் கண்டிக்கப்பட்டிருப்பது ஆறுதல் தருகிறது. இவ்வாறு கண்டிப்பதன் மூலமே இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் இடம்பெறாமல் தடுக்க முடியும்.

நாட்டில் வாழ வழியின்றி பல பெண்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்கிறார்கள். சில முன்னாள் பெண் போராளிகள் விபச்சாரம் செய்வதாகக் கூட செய்திகள் வருகின்றன. இவ்வாறு நாட்டில் நிலைமை இருக்க அது பற்றி கொஞ்சம் கூட அக்கறை இன்றி பொறுப்பற்ற முறையில் நடைபெறும் இம்மாதிரியான நிகழ்வுகள் நிச்சயம் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறானவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டும். அப்பதான் இம்மாதிரியாக நோய் பரவுவதை தடுக்க முடியும்.

தமிழகத்தில் பலர் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறக்கின்றனர். மாணவர்கள் தங்கள் வாழ்வை பணயம் வைத்து போராடுகின்றனர். ஆனால் புலத்தில் உள்ள சிலர் கொஞ்சம் கூட பொறுப்பற்ற தனமாக செலவு செய்வது மட்டுமன்றி தமிழ் இனத்தின் போராட்டத்திற்கே களங்கம் விளைவிக்கின்றனர்.

பெண் வயசுக்கு வருவது என்பது உடலில் எற்படும் ஒரு சாதாரண மாற்றம். அதற்கு இவ்வளவு பணம் செலவு செய்து ஆடம்பரமாக நிகழ்வு நடத்த வேண்டுமா? இந்த முட்டாள்தனத்தை போக்க ஒரு பெரியார் அல்ல ஆயிரம் பெரியார் பிறந்து வந்தாலும் இவர்களை திருத்த முடியாது. ஏனெனில் இவர்கள் சாதாரண முட்டாள்கள் அல்ல , உலகிலேயே மிகவும் மோசமான அடி முட்டாள்கள்!

இந்த நிகழ்வை பார்க்க விரும்புவோர் கீழ்வரும் இணைப்பை கிளிக் செய்யவும்.

https://www.facebook.com/photo.php?v=243580605785191

தமிழக அரசின் சீமான் மீதான வழக்கை கண்டிப்போம்.

• தமிழக அரசின் சீமான் மீதான வழக்கை கண்டிப்போம்.
• ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களுடன் ஜக்கியப்படுவோம்.

நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் மீது பல விமர்சனங்கள் இருப்பினும் முக்கியமாக இரு விடயங்களுக்காக அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். முதலாவது யுத்த இறுதி கணங்களில் புலிகளின் தளபதி சூசை அவருடன் தொலை பேசியில் நிகழ்த்திய உரையாடலை வெளிப்படுத்தியது. இதன் மூலம் அக் காலத்தில் தமது தொலைபேசியை மூடிவைத்துவிட்டு பதுங்கியிருந்த சில தமிழ் தேசிய தலைவர்களை மக்கள் இனங்காண வைத்தார். இரண்டாவதாக காஸ்மீர் விடுதலை முன்னனி தலைவர் யாசின் மாலிக் அவர்களை அழைத்து வந்து கூட்டம் போட்டது. இதனை எதிர்ப்பதன் மூலம் சில போலி தமிழ் அதரவாளர்களின் தங்கள் உண்மை முகத்தை வெளிப்படுத்த வைத்துள்ளார்.

1983ல் மதுரையில் கலைஞர் டெசோ மாநாடு நடத்தினார். இதில் பி.ஜே.பி வாஜ்பாய் ,அத்வானி ஆகியோரையும் அழைத்து பேசவைத்தார். அப்போது பி.ஜே.பி பலமான அமைப்பு அல்ல. இருந்தும் இந்து அடிப்படைவாதிகளை அழைத்து பேச வைப்பதாக யாரும் கலைஞரை விமர்சிக்கவில்லை. ஆனால் இன்று காஸ்மீர் விடுதலை முன்னனி தலைவரை அழைத்து பேச வைத்ததற்காக சீமான் விமர்சிக்கப்படுகிறார். இது தமிழ் போலி ஆதரவாளர்களை இனங்காண வைத்துள்ளது.

யாசின் மாலிக் இந்திய உளவு நிறுவனத்தின் கைக்கூலி என சிலர் கூறுகின்றர். இன்னும் சிலர் அவர் சி.அய்.ஏ வின் கைக்கூலி என்கின்றனர். அவர் கைக்கூலியா அல்லது காஸ்மீர் மக்களின் பேராளியா என்பதை காலமும் காஸ்மீர் மக்களும் தீர்மானிப்பார்கள். ஆனால் அவர் ஒடுக்கப்பட்ட காஸ்மீர் மக்களின் பிரதிநிதியாக வந்து இன்னொரு ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்திற்து ஆதரவு தெரிவித்துள்ளார். எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் இந்த ஜக்கியம் குறித்து உண்மையில் மகிந்த ராஜபக்சவும் இந்திய அரசுமே கவலை கொள்ள வேண்டும். ஆனால் தாங்களும் தமிழ் ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் ஏன் கவலை கொள்கிறார்கள்?

ஒடுக்கப்பட்ட காஸ்மீர் மக்களுடன் மட்டுமல்ல இந்தியாவில் ஒடுக்கப்பட்ட அனைத்து சிறுபான்மை இனங்களுடனும் ஜக்கியப்பட வேண்டும் என தமிழ்நாடு விடுதலைப்படைத் தளபதி தோழர் தமிழரசன் கூறியுள்ளார். இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவையும் பெறவேண்டும். அவர்களுடன் ஜக்கியப்பட்டு போராட வேண்டும். இது ஒன்றே எமது வெற்றிக்கான வழியாகும். மற்றும்படி இந்திய அரசு கோவிக்கும் என்றோ அல்லது அமெரிக்கா விரும்பாது என்பதற்காகவோ ஒடுக்கப்பட்ட இனங்களுடன் ஜக்கியப்பட தயங்குவோமானால் நாம் ஒருபோதும் வெற்றியைப் பெறமுடியாது.

தாமும் தமிழ் ஆதரவாளர்கள் எனக் கூறிக்கொண்டு எமது வெற்றிக்கு தடையாக இருக்கும் போலி ஆதரவாளர்களை இனம் காண்போம். எதிரியைவிட ஆபத்தானவர்கள் இந்த போலி ஆதரவாளர்கள் என்பதை உணர்ந்து கொள்வோம்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்ததாக சொல்லி நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் மீது போடப்படும் வழக்குகளை கண்டிப்போம். தொடர்ந்தும் ஒடுக்கப்படும் அனைத்து சிறுபான்மை இனங்களுடனும் ஜக்கியப்படுவோம்.

செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் ஓ.ஏ. ராமையா காலமானார்

செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் ஓ.ஏ. ராமையா காலமானார்

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதி ஓ. ஏ. ராமையா காலமானார்.சுகவீனமுற்றிருந்த அவர், தனது 76-வது வயதில் நேற்றிரவு காலமானார்.

ஓ.ஏ. ராமையா நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938-ம் ஆண்டில் பிறந்தார்.

ஹட்டனில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல், நாளை ஹட்டன் நகரசபை மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர், மாலை நாவலபிட்டிக்கு தகனக் கிரியைக்காக கொண்டுசெல்லப்படவுள்ளது.

செங்கொடிச் சங்கத்தின் செயலாளர் ஓ.ஏ. ராமையா, 1950களின் இறுதியில் தனது தொழிற்சங்க வாழ்க்கையைத் தொடங்கினார்.
இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராகவும் பணியாற்றிய அவர், மலையக தொழிற்சங்க அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்புச் செய்துள்ளார்.

தொடரும் துக்ளக்“சோ”வின் தமிழர் விரோத கருத்துகள்

• தொடரும் துக்ளக்“சோ”வின் தமிழர் விரோத கருத்துகள்

துக்ளக் “சோ” நெடுங்காலமாக தமிழர்களுக்கு விரோதமான கருத்துகளை பரப்பி வருகின்றமை யாவரும் அறிந்ததே. அதற்கு அவருடைய பார்ப்பணிய பாசமே காரணம் என்றாலும் ஈழத்தழிழர் படுகொலையிலும் அவர் தனது விசக் கருத்துக்களை பரப்ப முனைகிறார். அண்மையில் அவரது குழுவைச் சேர்ந்த சிலர் இலங்கைக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களை பேட்டி கண்டு உண்மையை வெளிப்படுத்துவதாகக் கூறி திட்டமிட்டு பொய்களை பரப்ப முனைகிறார்கள்.

துக்ளக் செய்திகளை படிப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட 40ஆயிரம் தமிழர்களும் தாங்களே தங்களை சுட்டுக் கொன்றார்கள். அவர்கள் அவ்வாறு செய்வதற்கு புலிகளே காரணம் என்ற முடிவிற்கே வரவேண்டும். அதுமட்டுமல்ல இலங்கை ராணுவம் மிகவும் கட்டுப்பாடான நல்ல ராணுவம். அது தமிழ் மக்களுக்கு நன்மை செய்யவே அங்கு இருக்கிறது. தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற கூற்று சில பெண்களின் பையித்தியக்கார கூற்று என்றே நம்ப வேண்டும்.

தமிழ்நாட்டில் வாடிப்பட்டி என்னும் இடத்தில் எமது பயிற்சி முகாம் இருந்தது. அப்போது எமது பயிற்சியை புதினம் பார்க்க வந்த ஒரு ஆடு மேய்க்கும் சிறுவனிடம் எம்.ஜி. ஆர் இறந்துவிட்டார் என்று கூறியபோது அவன் அதை நம்பவில்லை. மாறாக தான் நேற்றும் தியேட்டரில் படத்தில் அவரைக் கண்டதாக கூறினான். எனவே அச் சிறுவனின் அறியாமைக் கூற்றை வைத்துக்கொண்டு தமிழ் நாட்டு மக்கள் இன்னும் எம்.ஜி. ஆர் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் இறந்துவிட்டார் என்பது கூட தெரியாமல் இருக்கிறாரகள் என்றும் எழுதினால் அது எந்தளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள் தனமானது இலங்கை தமிழ் மக்களின் கருத்துகள் என்று துக்ளக் பரப்பும் செய்திகள் ஆகும்.

தமிழர் பகுதிகளில் அரசின் உதவியோடு திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது என்பது யாவரும் அறிந்த வெளிப்படையான உண்மை. இதை அரசை ஆதரிக்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் துக்ளக் குழுவோ அப்படி ஒரு குடியேற்றம் நிகழவில்லை என்றும் இது புலத்தில் உள்ள புலிக் குழுக்களின் பொய்ப்பிரச்சாரம் என்று மகிந்த ராஜபக்சவிற்கு வக்காலத்து வாங்குகிறது. இதற்கு பரிகாரமாக எத்தனை பெட்டி பரிமாறப்பட்டது என்பது துக்ளக் சோ விற்கே வெளிச்சம்.

1982ல் இலங்கைக்கு விஜயம் செய்த துக்களக் சோ அவர்கள் கொழும்பில் ஜே.ஆர் ஜெயவர்த்தனவை சந்தித்து பரிசுகள் பெற்றது அனைவரும் அறிந்ததே. அன்றுமுதல் அவர் தமிழ் மக்களின் போராட்டங்களை எதிர்த்து வருவது மட்டுமல்ல காட்டிக் கொடுத்தும் வருகிறார். அவர் அப்போது கரவெட்டி என்னும் ஊருக்கு விஜயம் செய்து இதே கருத்தை தெரிவித்தபோது மக்களின் கடும் எதிர்ப்பினால் பாதியிலேயே ஓட்டம் பிடித்தார். அதன் பின் அவருக்கு மதுரையில் அசிட் வீசப்பட்டது. ஆனால் அவர் இன்னும் திருந்தவில்லை. தொடர்ந்தும் தமிழ் இனத்திற்கு விரோதமாகவே செயற்பட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தொடர்ந்தும் தமிழ் இனத்திற்கு விரோதமாக கருத்துக்களை பரப்பி வருகிறார். அரசியல் தரகு செயவதே அவரது வேலை. அதனால் ஆட்சிக்கு வரும் அரசுகள் எல்லாம் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றன. ஆனால் தனது சுயநலத்திற்காக ஒரு இனத்தை காட்டிக்கொடுக்கும் அவரது துரோகத்தை வரலாறு ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.

ஒரு தாய் தன் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தாண்டிக்குளம் என்னும் இடத்தில் ஒரு தாய் தன் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்களால் அதிர்ஸ்டவசமாக தாய் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனால் குழந்தைகள் மூன்றுபேரும் காப்பற்றப்பட முடியாமல் இறந்துவிட்டனர். தாயிடம் தற்கொலைக்குரிய காரணம் கேட்டபோது வறுமையே காரணம் எனக் கூறியுள்ளார். இது தமிழ் பகுதிகளில் மட்டுமல்ல இலங்கையில் சிங்களப் பகுதிகளிலும் இதே நிலையே இன்று காணப்படுகிறது. அங்கும் வறுமையில் பல சிங்கள மக்கள் தற்கொலை செய்கின்ற செய்திகள் நாளாந்தம் வந்த வண்ணம் இருக்கின்றன.

நாட்டின் அனைத்து துன்பங்களுக்கும் பயங்கரவாதமே காரணம் என்று கூறி புலிகளையும் 40 ஆயிரம் தமிழ் மக்களையும் அழித்தவர்கள் இன்று யுத்தம் முடிந்து 4 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையிலும் மக்களின் வறுமையை போக்காது அவர்கள் தற்கொலை செய்யும் நிலையை வேடிக்கை பார்க்கின்றனர்.

ஒருபுறம் மக்கள் வாழ வழியின்றி தற்கொலை செய்கின்றனர். இன்னொரு புறம் சொந்த மக்களையே கொன்று குவித்ததை அரசு வெற்றி விழாவாக கொண்டாடுகிறது. உலகிலேயே தனது சொந்த மக்களைக் கொன்றதை வெற்றி விழாவாக கொண்டாடும் ஒரே நாடு இலங்கையாகத்தான் இருக்கும். பயங்கரவாதத்தை அழிக்க உதவி செயகிறோம் எனக்கூறிய இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் மக்களைக் கொல்ல ஆதரவு அளித்தது மட்டுமன்றி இன்று மக்கள் வாழ வழியின்றி தற்கொலை செய்யும்போது எந்தவித உதவியும் செய்யாது கொலைகார அரசைக் கட்டிக்காத்து வருகின்றன.

மக்கள் ஒன்றினைந்து தங்களை தூக்கியெறிந்து விடுவார்கள் என்று அஞ்சிய அரசு மீண்டும் மக்கள் மத்தியில் இனவாத்தை தூண்டுகிறது. அதற்கு ஒத்துழைப்பது போல் தமிழகத்திலும் புலத்திலும் சில சக்திகள் கொஞ்சம் கூட பொறுப்பற்ற தன்மையில் உதவி வருகின்றமை வெட்கக்கேடானது.

புலிகளின் முன்னாள் தளபதிகள் கே.பி , தயா மாஸ்டர் ,தமிழினி போன்றோர் மறுவாழ்வு அளிக்கப்பட்டுளனர். ஆனால் புலிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். மறுசீரமைப்புக்கு என வெளிநாடுகளால் வழங்கப்படும் பணம் ஆட்சியில் உள்ளவர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனால் மக்களோ வாழ வழியின்றி தற்கொலை செய்கின்றனர். இது ஏன் என்று கேட்டால் “ மகிந்த சிந்தனையை ஏற்றுக்கொண்டால் தமிழர்கள் முன்னேற முடியும் “ என்று அமைச்சர் கருணா கூறுகிறார். இந்த மகிந்த சிந்தனை என்றால் என்ன என்று யாராவது புரிந்தவர்கள் தயவு செய்து விளக்குங்கள். ஏனென்றால் எனக்கு அது சுத்தமாக புரியவில்லை?

லெனின் நினைவிடத்தை ரஸ்சிய அரசு பெரும் செலவில் புனரமைத்திருப்பது மக்கள் மத்தியில் இருக்கும் லெனின் அவர்களின் அசைக்க முடியாத பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.

• லெனின் நினைவிடத்தை ரஸ்சிய அரசு பெரும் செலவில் புனரமைத்திருப்பது மக்கள் மத்தியில் இருக்கும் லெனின் அவர்களின் அசைக்க முடியாத பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.

மாஸ்கோவில் லெனினின் உடல் வைக்கப்பட்டுள்ள நினைவிடம் இதுவரையில்லாத அளவுக்கு பெரிய அளவில் மீள் சீரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.

செஞ்சதுக்கத்தில் உள்ள கிரனைட் சமாதியின் அடித்தளத்தில் நீர் கசிந்தமையால் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அடித்தளத்தில் கான்கிரீட் கலவை செலுத்தப்பட்டு அது பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்திய லெனின் 1924 இல் இறந்தார். அதன் பிறகு அவரின் உடல் பாடம் செய்யப்பட்டது.கடந்த 1930ம் ஆண்டில் இருந்து அவரின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ரஸ்சியாவில் மீண்டும் கம்யுனிசத்தின் மீதான மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதால் தற்போதைய ரஸ்சிய அரசு வேறு வழியின்றி 2ம் உலகயுத்த வெற்றி விழாவை கொண்டாடுகிறது. தோழர் லெனின் நினைவிடத்தைப் புனரமைப்பு செய்து மக்கள் பார்வைக்கு விட்டுள்ளது. தோழர் லெனின் அவர்களின் பதப்படுத்தப்பட்ட உடலை அகற்றி புதைக்க வேண்டும் என அரசில் உள்ள அமைச்சர்கள் சிலர் கோரி வந்தனர். எனினும் லெனினுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு அவ்வாறு செய்ய விடாமல் தடுத்துள்ளது. இதனால் அரசு வேறு வழியின்றி தற்போது லெனின் நினைவிடத்தைப் புனரமைப்பு செய்து மக்கள் பார்வைக்கு விட்டுள்ளது.

ரஸ்சியாவில் மீண்டும் மாக்சிய தலைவர்களான லெனின், ஸ்டாலின் ஆகியோருக்கு அதிகரித்து வரும் செல்வாக்கு மக்கள் மத்தியில் மீண்டும் கம்யுனிசத்திற்கான ஆதரவு பெருகி வருவதைக் காட்டுவதாகவும் இது குறித்து சர்வதேச முதலாளித்துவம் அச்சமடைவதாகவும் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்படாது- இந்திய தூதர் அசோக் காந்தா

• இலங்கைக்கு எதிராக இந்தியா செயற்படாது- இந்திய தூதர் அசோக் காந்தா

இலங்கையின் அரசின் விருப்பங்களுக்கு எதிரான வகையில் இந்தியா ஒருபோதும் செயற்படாது என்றும் இலங்கை அரசுடான உறவுகளில் எவ்வித விரிசலும் கிடையாது என்றும் இலங்கைக்கான இந்திய தூதர் அசோக்காந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களுக்காக ஜெயா அம்மையார் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். கலைஞர் டெசோ நடத்தலாம். மாணவர் போராடலாம். ஏன் சிலர் தீக்குளிக்கலாம். இவையெல்லாம் இலங்கை தமிழர்களுக்கு ஆறுதலாக இருக்குமேயொழிய இந்திய அரசின் போக்கில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதையே தூதரின் பேச்சு உணர்த்துகிறது.

மேலும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கையின் பெறுமதியை 10ஆயிரம் மில்லியன் டொலர்களாக அதிகரிக்க இருநாடுகளின் அரசாங்கங்களும் தீர்மானித்துள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் தெரிவிக்கிறார்.

இன்று இலங்கையில் 460 வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளன. இதில் 450 நிறுவனங்கள் இந்தியாவினுடையது. வெகுவிரைவில் முழு நிறுவனங்களும் இந்தியாவினுடையதாக மாறும் நிலையையே தூதர்களின் கூற்றுக்கள் தெரிவிக்கின்றன.

இந்திய, இலங்கை தரகு முதலாளிகளின் நலனுக்காக , இந்திய விரிவாதிக்க நலனுக்காக, இலங்கை தமிழ் மக்களின் உரிமைகள் காவு கொடுக்கப்படுகின்றன. தமிழ்நாட்டு தமிழர்களின் உணர்வுகள் புறக்கணிக்கப்படுகின்றன.

இலங்கை இனப்பிரச்சனையை இந்தியா தனது நலன்களுக்கு பயன்படுத்துகின்றது என்பது தமிழ் தலைமைகளுக்கு நன்கு தெரிந்தும் அவை தமது அற்ப சலுகைகளுக்காக மக்களுக்கு துரோகம் இழைக்கின்றன. உதாரணமாக த.தே.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன், மாவை சேனாதிராசா, அடைக்கலநாதன் முதலானோரின் குடும்பங்கள் இந்தியாவில் வைத்து பராமரிக்கப்படுகின்றன. இன்னொரு தலைவரின் மகள் டெல்லி மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல சில சிறிய அமைப்புகளின் தலைவர்களுக்கூட மாதாந்த செலவுக்கு கொழும்பு இந்திய தூதரமே பணம் வழங்குகிறது. இப்படி எலும்புத்துண்டுகளை வீசிஎறிந்து தனது விரிவாதிக்த்தை இந்திய அரசு சாதித்து கொள்கிறது.

தமிழ் சிங்கள உழைக்கும் மக்கள் ஜக்கியப்பட்டு இந்திய விரிவாதிக்கத்தை எதிர்க்காதவரை இலங்கையில் இனப்பிரச்சனை மட்டுமல்ல எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை என்பதே உண்மை.

குவாத்தமாலா முன்னாள் ஆட்சியாளருக்கு 80 வருடச் சிறை

குவாத்தமாலா முன்னாள் ஆட்சியாளருக்கு 80 வருடச் சிறை

குவாத்தமாலாவின் இரத்தக்களரியுடனான உள்நாட்டுப் போரின் போது அந்த நாட்டுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் எஃப்ரைன் றியோஸ் மொண்ட் அவர்களுக்கு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 80 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1980களின் முற்பகுதிகளில், தனது ஆட்சிக்காலத்தின் போது, லிக்ஸ்ஸின் மாயா இனக்குழுவைச் சேர்ந்த 1800 பேரை கொல்வதற்கு உத்தரவிட்டதாக ஜெனரல் றியோஸ் மொண்ட் அவர்களை அங்குள்ள நீதிமன்றம் ஒன்று குற்றங்கண்டிருக்கிறது.

அவரது தலைமையின் கீழ் இருந்த இராணுவம், பழங்குடியின மக்கள் இடதுசாரி கெரில்லாக்களுக்கு உதவியதான சந்தேகத்தின் அவர்களுக்கு தண்டனையாக பரவலான வன்முறைகள், பாலியல் வல்லுறவுகள், பட்டினி போடுதல் ஆகியவற்றை மேற்கொண்டதாக நீதிபதி கூறியுள்ளார்.

தனது சொந்த நாட்டிலேயே இனப்படுகொலையைச் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட முதலாவடு முன்னாள் தலைவர் இவராவார்.

ஹைதி நாட்டினர் பணத்தை திருப்பி தர முடியாது: பிரான்ஸ் ஜனாதிபதி

ஹைதி நாட்டினர் பணத்தை திருப்பி தர முடியாது: பிரான்ஸ் ஜனாதிபதி

பிரெஞ்சு அரசு,கடந்த 1825 முதல் 1946 வரை ஹைதி நாட்டினரை அடிமையாக்கி கொடுகோல் ஆட்சி புரிந்துள்ளது.
ஹைதி நாட்டினரின் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் அவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. அப்பொழுது அவர்களிடமிருந்து சட்டத்திற்கு விரோதமாக 21 பில்லியன் டொரை பிரான்ஸ் அரசு பறித்து விட்டது.

தற்பொழுது மிகவும் ஏழ்மை நாடாக இருக்கும் ஹைதிக்கு அந்த தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

ஆனால் இந்த வழக்கிற்கு பதிலடி கொடுத்த பிரான்ஸ் ஜனாதிபதி, ஹைதி நாட்டினருக்கு நடந்தது நடந்தது தான். அந்த வரலாற்றை அழித்து எழுத முடியாது என்று அடிமைத் தன நினைவு நாள் கூட்டத்தில் பேசியுள்ளார்.

பிரான்ஸ் அரசு, ஹைதி நாட்டினரிடமிருந்த பெற்ற தொகை அரசு வங்கியான சி.டி.சி வங்கியில் இருப்பாக வைத்துள்ளது.

ஹைதியில் அடிமை வியாபாரம் செய்த போது, கிடைத்த பணத்தை எல்லாம் பிரான்ஸ் அரசு சி.டி.சி வங்கியில் தான் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது