Saturday, July 19, 2014

• நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!

• நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!

கடந்த காலங்களில் எல்லா தரப்பினராலும் பல தவறுகள் விடப்பட்டிருக்கின்றன. அவற்றை இன்று சுட்டிக்காட்டி பட்டியல் இட்டு தொடர்ந்தும் குரோதங்களை வளர்ப்பதால் யாருக்கு இலாபம்?

ேற்றுமைகளை பெரிதுபடுத்தி எதிரிக்கு உதவுவதை விடுத்து ஒற்றுமைகளை வளர்த்து எதிரியை விரட்டுவதே புத்திசாலித்தனமாகும்.

அண்மைய முஸ்லிம் மக்கள் மீதான இனவாத தாக்குதல்கள் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுடான ஒற்றுமைக்கும் வழிகோலியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கா 'பொதுபல சேனாவை' தடைசெய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

மங்கள சமரவீர 'இது அரசின் உளவு நிறுவனங்களாலும் கோத்தபாயாவின் பின்னனியிலும் நடைபெற்ற தாக்குதல்கள்' என கூறியதோடு அதற்குரிய ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார்.

'சம உரிமை இயக்கம்' யானது தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களையும் ஒன்று திரட்டி கொழும்பு மாநகரில் 'இன்னொரு 1983 கலவரம் இடம்பெற அனுமதிக்மாட்டோம்'என்று அறிவித்துள்ளார்கள்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் 'முஸ்லிம் மக்களுக்காக போராட தயார்' என அறிவித்துள்ளார்.

இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் முதல் முறையாக முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட்டுளன. வரவேற்கப்பட வேண்டிய திருப்பு முனை இது.

• கலைஞர் கருணாநிதி முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

• விடுதலை சிறுத்தை திருமாவளவன் இலங்கை தூரகத்தை முற்றுகை செய்துள்ளார்.

• வைகோ அவர்களும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

• 'நாம் தமிழர்' சீமான் போராட்டம் அறிவித்துள்ளார்

இவற்றை விட புலம் பெயர்ந்த நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக லண்டனில் மூவின மக்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

மிகப் பெரிய மாற்றம் ஆரம்பித்துள்ளது. தமிழ் முஸ்லிம் மக்களிடையே மட்டுமல்ல சிங்கள மக்களுடனும் ஜக்கியத்திற்கான வழி திறந்துள்ளது.

இனவாத அரசின் சூழ்சிகளுக்கு இரையாகாமல் மக்கள் தொடர்ந்தும் ஜக்கியமாக செயற்பட்டு இந்த இனவெறி மக்கள் விரோத அரசை தூக்கியெறிய வேண்டும்.

Photo: • நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி
 நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!

கடந்த காலங்களில் எல்லா தரப்பினராலும் பல தவறுகள் விடப்பட்டிருக்கின்றன. அவற்றை இன்று சுட்டிக்காட்டி பட்டியல் இட்டு தொடர்ந்தும் குரோதங்களை வளர்ப்பதால் யாருக்கு இலாபம்?

வேற்றுமைகளை பெரிதுபடுத்தி எதிரிக்கு உதவுவதை விடுத்து ஒற்றுமைகளை வளர்த்து எதிரியை விரட்டுவதே புத்திசாலித்தனமாகும்.

அண்மைய முஸ்லிம் மக்கள் மீதான இனவாத தாக்குதல்கள் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுடான ஒற்றுமைக்கும் வழிகோலியுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கா 'பொதுபல சேனாவை' தடைசெய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

மங்கள சமரவீர 'இது அரசின் உளவு நிறுவனங்களாலும் கோத்தபாயாவின் பின்னனியிலும் நடைபெற்ற தாக்குதல்கள்' என கூறியதோடு அதற்குரிய ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார்.

'சம உரிமை இயக்கம்' யானது  தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களையும் ஒன்று திரட்டி கொழும்பு மாநகரில் 'இன்னொரு 1983 கலவரம் இடம்பெற அனுமதிக்மாட்டோம்'என்று அறிவித்துள்ளார்கள்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் 'முஸ்லிம் மக்களுக்காக போராட தயார்' என அறிவித்துள்ளார்.

இலங்கையில் மட்டுமல்ல தமிழகத்திலும் முதல் முறையாக முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் கண்டிக்கப்பட்டுளன. வரவேற்கப்பட வேண்டிய திருப்பு முனை இது.

• கலைஞர் கருணாநிதி  முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளார்.

• விடுதலை சிறுத்தை திருமாவளவன் இலங்கை தூரகத்தை முற்றுகை செய்துள்ளார்.

• வைகோ அவர்களும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

• 'நாம் தமிழர்' சீமான் போராட்டம் அறிவித்துள்ளார்

இவற்றை விட புலம் பெயர்ந்த நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக லண்டனில் மூவின மக்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

மிகப் பெரிய மாற்றம் ஆரம்பித்துள்ளது.  தமிழ் முஸ்லிம் மக்களிடையே மட்டுமல்ல சிங்கள மக்களுடனும் ஜக்கியத்திற்கான வழி திறந்துள்ளது. 

இனவாத அரசின் சூழ்சிகளுக்கு இரையாகாமல் மக்கள் தொடர்ந்தும் ஜக்கியமாக செயற்பட்டு இந்த இனவெறி மக்கள் விரோத அரசை தூக்கியெறிய வேண்டும்.

முஸ்லிம்கள் வந்தேறிகள். அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும்' - பொது பல சேனா

• 'முஸ்லிம்கள் வந்தேறிகள். அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும்' - பொது பல சேனா

முன்னர் மலையக தமிழரை வந்தேறிகள் என்றும் அவர்களை இலங்கையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றார்கள்.

இப்போது முஸ்லிம்களை வந்தேறிகள் என்றும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று பொதுபல சேனா கூறுகிறது.

சரி, ஒரு பேச்சுக்கு இதை ஒத்துக்கொள்வதாயின் இலங்கையின் பூர்வ குடிகள் மகியங்கனைக் காட்டில் இருக்கும் வேடுவர்கள் என கூறுகிறார்கள். அப்படியாயின் அந்த வேடுவர்கள்

• சிங்களவர்கள் எல்லாம் வந்தேறிகள் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்றால் அதை பொது பலசேனா ஏற்றுக் கொள்ளுமா?

Photo: • 'முஸ்லிம்கள் வந்தேறிகள். அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும்' - பொது பல சேனா

முன்னர் மலையக தமிழரை வந்தேறிகள் என்றும் அவர்களை இலங்கையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றார்கள்.

இப்போது முஸ்லிம்களை வந்தேறிகள் என்றும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று பொதுபல சேனா கூறுகிறது.

சரி, ஒரு பேச்சுக்கு இதை ஒத்துக்கொள்வதாயின் இலங்கையின் பூர்வ குடிகள் மகியங்கனைக் காட்டில் இருக்கும் வேடுவர்கள் என கூறுகிறார்கள். அப்படியாயின் அந்த வேடுவர்கள் 

• சிங்களவர்கள் எல்லாம் வந்தேறிகள் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்றால் அதை பொது பலசேனா ஏற்றுக் கொள்ளுமா?

• அகதி நாய்களே! தேவடியா மவனே.. சாவுங்கடா! தமிழக காவல் துறை அதிகாரியின் வீரம்

• அகதி நாய்களே! தேவடியா மவனே.. சாவுங்கடா!
தமிழக காவல் துறை அதிகாரியின் வீரம்

அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளைப் பார்த்து கேவலமாக பேசுவது மகிந்தவின் சிங்கள காவல் துறை அதிகாரி அல்ல- மாறாக ஜெயா அம்மையாரின் ஆட்சியில் உள்ள ஒரு தமிழ் காவல் துறை அதிகாரியே.!

தனது தமிழக மீனவனை சுடும்போது வராத வீரம்
தமிழ் இனம் இலங்கையில் அழிக்கப்படும்போது வராத வீரம்
கன்னடர்கள் தண்ணீர் தராது தமிழனை அடித்தபோது வராத வீரம்
மலையாளிகள் அணைகட்டுவதை தடுக்க முடியாத வீரம்
பம்பாயில் சிவசேனை தமிழனை அடித்து விரட்டிய போது வராத வீரம்
கேவலம்! ஈழ அகதியை அடைத்துவைத்துவிட்டு காட்டுவதா வீரம்.
சீ வெட்கம்!

இன்று அகதிகள் தினம்.
திருச்சி சிறப்புமுகாமில் அகதி ஒருவர் தற்கொலை முயற்சி!
விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை ஆகக்குறைந்தது கேவலமாக திட்டுவதையாவது தவிருங்கள்.

தமிழக தலைவர்களே!
இந்த கேவலமான வார்த்தைகள் தங்களுக்கு சமர்ப்பணம்
என்ன செய்யப்போகிறீர்கள்?

Photo: • அகதி நாய்களே! தேவடியா மவனே.. சாவுங்கடா! 

• தறியுடன்- நாவல் பற்றி

• தறியுடன்- நாவல் பற்றி

நக்சலைட்டுகளின் போராட்டம் குறித்து குறிப்பிடத்தக்க இலக்கிய பதிவு எதுவும் வரவில்லையே என்ற எனது நீண்டநாள் ஏக்கத்தைப் போக்கியிருக்கும் நாவல் இது. ஆம். ரஸ்சிய புரட்சியின் போது வெளிவந்த 'தாய்' , 'வீரம் விளைந்தது' போன்ற நாவல்கள் போன்று இதுவும் தமிழகத்தில் இடம்பெற்ற நக்சலைட்டுகளின் மக்கள் போராட்டங்களை நன்கு காட்டியிருக்கிறது.

இந்த 'தறியுடன்' நாவலை எழுதியிருக்கும் பாரதி நந்தன் மாக்சிய லெனிய மாவோ சிந்தனைகளை வழிகாட்டும் தத்துவமாய் ஏற்று நக்சலைட் இயக்கத்தில் அர்ப்பணிப்புடன் களப்பணி செய்தவர். அவர் தனது அந்த போராட்ட அனுபவங்களையே நாவலாக வடித்துள்ளார். அவரது படைப்பு ஒரு பாட்டாளி வர்க்க புரட்சிகர கலை இலக்கிய படைப்பாகும். அவரது பணி நிச்சயம் பாராட்டுக்குரியது.

மாக்சிய ஆசான்களின் வரிகள் சில இடங்களில் வலிந்து புகுத்தப்பட்டிருப்பது ஒரு பிரச்சார நெடியை வெளிப்படுத்தினாலும் அது ஒரு பெரிய குறையாக தெரியவில்லை. மாறாக அதுவும் இன்றைய சூழலில் அவசியமானதாகவே உள்ளது.

நீண்ட நாவல், அதிக பக்கங்கள் இருப்பினும் படிக்க சோர்வு தரவில்லை. விறு விறுப்பாகவே இருக்கிறது. இது அவரின் எழுத்தின் வெற்றியைக் குறிக்கிறது.

இந்த நாவலை வாங்கிப் படிப்பதன் மூலம் நக்சலைட்டுகளின் மக்கள் போராட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வது மட்டுமல்ல இதுபோன்ற நாவல்கள் தொடர்ந்து வருவதற்கும் ஊக்கம் அளிப்பதாக அமையும்.

Photo: • தறியுடன்- நாவல் பற்றி

(குமுதம்) நாட்டான்மை தீர்ப்பை மாத்து அல்லது எமக்கும் ஒரு தீர்ப்பு சொல்லு!

• (குமுதம்) நாட்டான்மை தீர்ப்பை மாத்து
அல்லது எமக்கும் ஒரு தீர்ப்பு சொல்லு!

குமுதம் ஆசிரியருக்கு!

லீனா மணிமேகலையின் புகாரை ஏற்று அலுவலகத்திற்கு வெளியே நடந்த ஒரு விடயத்திற்கு நாட்டான்மையாக தீர்ப்பு கூறியிருக்கிறீர்கள். நல்லது! அதேபோல் எமக்கும் ஒரு தீர்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் அல்லது காட்டுனிஸ்ட் பாலாவுக்கு வழங்கிய தீர்ப்பை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

லீனா மணிமேகலை என்ற பெண்ணை தரக் குறைவாக எழுதியிருந்தால் அது தவறுதான். அதற்கு நீங்கள் வழங்கிய தீர்ப்பும் சரி என்றே வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் இதே லீனா மணிமேகலை என்ற பெண்மனி நாம் பெரிதும் மதிப்பு வைத்திருக்கும் மாக்சிய ஆசான்களை கொச்சைப்படுத்தி தரக் குறைவாக கவிதை எழுதியிருக்கிறார். இதனால் நாமும் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறோம்.

லீனா அம்மையார் தனக்கு சட்டத்தின் மூலம் நீதி பெற செல்வாக்கு இல்லை என்று உங்களிடம் முறையிட்டதாக கூறுகிறார். அவருக்காவது உங்களிடம் முறையிட்டு நீதி பெற செல்வாக்கு இருக்கிறது. ஆனால் எமக்கு அந்த செல்வாக்கும் இல்லை. எனவே எமக்குரிய நீதியை நாம் எங்கே பெறுவது?

உங்கள் நீதி கிடைக்காவிடினும் பரவாயில்லை
உங்கள் பதிலாவது எமக்கு கிடைக்குமா?

இப்படிக்கு
லீனா மனிமேகலையின் மாக்சிய ஆசான்கள் மீதான அவதூறால்
வருத்தப்படுவோர் சங்கம்

குறிப்பு- இது குமுதம் ஆசிரியருக்கு அனுப்பப்படாத கடிதம். ஆனால் இப்படியும் ஒரு கடிதம் அனுப்ப முடியும் என்பதை லீனா மனிமேகலைக்கு உணர்த்துவதற்கு எழுதிய கடிதம் .

Photo: • (குமுதம்) நாட்டான்மை தீர்ப்பை மாத்து 

இன்று இவர்கள் 7பேர்தான். ஆனால் 7 கோடி தமிழக மக்களின் மனட்சாட்சி

• இன்று இவர்கள் 7பேர்தான். ஆனால்
7 கோடி தமிழக மக்களின் மனட்சாட்சி

இவர்களுக்கு பிரன்னவிதானகே யின் திரைப்படம் முக்கியம் அல்ல.
இவர்களுக்கு சிறப்புமுகாம் அகதிகளை விடுதலையே முக்கியம்.
இன்று இவர்கள் வெறும் 7 பேராக இருக்கலாம். ஆனால் 
நாளைய தமிழகத்தின் மனட்சாட்சி இவர்கள்.
சிறு பொறி பெரும் காட்டு தீயை மூட்டும் என்றால்
இவர்களது போராட்டம் அனைத்து மக்களையும்
நாளை பற்றிக் கொள்ளும்.
அது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை
நிச்சயம் விடுதலை செய்யும்!
இது உறுதி!

Photo: •  இன்று இவர்கள் 7பேர்தான். ஆனால் 

• பத்மநாபா விதைக்கப்பட்டாரா? அல்லது புதைக்கப்பட்டாரா?

யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் வைத்து புளட் போராளி சுந்தரம் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவே மக்கள் மத்தியில் பகிரங்கமாக நிகழ்ந்த முதலாவது சகோதரப் படுகொலை. அப்போது இதனைக் கண்டித்து செல்லப்பா நாகராசா (வாத்தி) பிரசுரம் வெளியிட்டார். இந்த பிரசுரம் வெளியிடவும் அதனை இலங்கையில் விநியோகிக்கவும் முக்கிய பங்காற்றியவர்கள்(EPRLF) நாபாவும் (NLFT)விசுவானந்ததேவனும். ஆனால் தானும் இதே புலிகளால் பின்னாளில் கொல்லப்படுவேன் என நாபா அந் நேரம் நிச்சயமாக நினைத்திருக்கமாட்டார். ஏனெனில் பின்னாளில் அதே புலிகளுடன் இந்திய உளவுப்படைகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஜக்கிய முன்னனி கட்டியவர் இதே நாபா தான்.

1983க்கு முன்னர் இந்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள புரட்சிகர சக்திகளுடன் (நக்சலைட்டுகளுடன்) கூட்டு வைத்து செயற்பட்ட நாபா பின்னர் இந்திய அரசுடன் உறவு கொண்டு உதவிகள் பெற்றார். ஆனால் அதே இந்திய (இந்திரா) அரசு இவர்கள் கடத்திய அலன் தம்பதிகளை விடுதலை செய்யுமாறு இவர்களை ஓட்டலில் வைத்து அடித்து துவைத்தபோது வேறு வழியின்றி மௌனமாக விடுதலை செய்தார்கள்.

அதன் பின்னர் இந்திய அரசு இயக்கங்களை பலவந்தமாக தனது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்க வைத்தபோது நாபாவும் அதனை ஏற்றுக்கொண்டார். ஆனால் இது பற்றி நான் அவரிடம் கேட்டபோது 'நாங்கள் இந்திய அரசை பயன்படுத்த நினைத்தோம். ஆனால் இந்திய அரசு எம்மை பயன்படுத்திவிட்டது' என்று வருத்தத்துடன் கூறினார்.

தமிழ் உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்தி புரட்சியை மேற்கொள்ளப் போவதாக கூறி சென்னையில் இருந்து இலங்கைக்கு திரும்பிய நாபா இந்திய அரசு மாகாணசபையை ஏற்குமாறு கோரியவுடன் புரட்சியை கைவிட்டுவிட்டு உடனே மாகாணசபையை ஏற்றுக்கொண்டார்.

எந்த தமிழ் மக்களுக்காக தனது வசதியான லண்டன் வாழ்க்கையை துறந்து போராட்டத்திற்கு வந்தாரோ அந்த தமிழ் மக்களை இந்திய ராணுவம் கொல்லும்போது நாபாவால் அதை தடுக்க முடியவில்லை. மாறாக வேறு வழியின்றி ஒத்துழைத்தார்.

அவரது கண் முன்னே பல தமிழ் மக்கள் கொல்லப்ட்டார்கள். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள். பல கோடி ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் உடமைகள் செதமாக்கப்ட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக பல இளைஞர்கள் கட்டாய ராணுவ சேர்ப்புக்குள்ளாகி இதனால் புலிகளால் கொல்லப்பட்டார்கள். இதனை அவரால் அப்போது தடுக்க முடியாவிடினும் இது குறித்து அவர் இறக்கும்வரை ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பது துரதிருஸடவசமானது.

போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள் எனக் கூறுவதுண்டு. ஏனெனில் அவர்களில் இருந்து ஆயிரமாயிரமாய் புதிய போராளிகள் முளைத்தெழுவார்கள். ஆனால் இன்று இத்தனை அழிவுகளுக்கும் பிறகும்கூட நாபா வின் பேரால் இந்திய அரசை ஆதரிப்பார்களேயானால் நாபாவில் இருந்து யாரும் முளைத்தெழ வேண்டாம் என்பதே தமிழ் மக்கள் விருப்பமாகும். எனவே நாபா நிரந்தரமாகவே புதைக்கப்பட்டதாக இருக்கட்டும். இதுவே தமிழ் மக்கள் நலனுக்குரியதாக இருக்கும்.

Photo: • பத்மநாபா விதைக்கப்பட்டாரா? அல்லது புதைக்கப்பட்டாரா?

அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன் இருவரையும் ஒன்றாக நினைவு கூர முடியுமா?

• அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன் இருவரையும் ஒன்றாக நினைவு கூர முடியுமா?

புளட் இயக்கமானது தனது 25வது 'வீர மக்கள் தின'த்தில் தமிழர்விடுதலைக்கூட்டனி தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் புளட் இயக்க தலைவர் உமாமகேஸ்வரன் இருவருக்கும் ஒன்றாக அஞ்சலி செலுத்தியுள்ளது.

• முதன் முதலில் தமிழீழ தனிநாட்டுக்கோரிக்கையை சுயாட்சிக்கழக நவரட்ணம் முன்வைத்தபோது அதனை தற்கொலைக்கு ஒப்பானது என்று கூறியவர் அமிர்தலிங்கம். ஆனால் அடுத்த ஆறு மாதத்தில் தான் தேர்தலில் தோற்றதும் தனது பதவி ஆசைக்காக தமிழீழ தனிநாட்டு தீர்வை அவரே முன்வைத்தார். ஆனால் உமாமகேஸ்வரன் தனது நில அளவையாளர் பதவியை உதறிவிட்டு தமிழீழ போராட்டத்திற்கு முன்வந்தவர்.

• அமிர்தலிங்கம் தமிழீழத்தை பாராளுமன்ற பாதை மூலமும் அகிம்சை போராட்டம் மூலமும் அடையலாம் என இளைஞர்களை ஏமாற்றினார். ஆனால் உமாமகேஸ்வரன் ஆயுதப் போராட்டம் மூலம் தமிழீழம் அடைவதற்காக லெபனான் வரை சென்று பயிற்சி எடுத்தவர்.

• இயக்கங்களுக்கு பயிற்சி அளிக்க இந்திராகாந்தி முடிவு செய்தபோது டில்லிவரை சென்று அதனை தடுக்க முனைந்தவர் அமிர்தலிங்கம். ஆனால் அதனை தடுக்க முடியாமற்போனதும் மதுரையில் படித்துக்கொண்டிருந்த தனது மகன் ஆரம்பித்த ஆயுத இயக்கத்திற்கு அவரும் மனைவியும் உதவி செய்தனர்.

• தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராட தூண்டிவிட்டு தனது மகனுக்கு மட்டும் மதுரை மருத்துவ பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு எம்.ஜி.ஆர் மூலம் சீட்டு வாங்கியவர் அமிர்தலிங்கம். அதுமட்டுமல்ல 1983க்கு பின்பு தமிழ் மக்கள் இந்தியாவில் அகதி முகாமில் வாடிய போது அமிர்தலிங்கம் தம்பதி எம்.எல்.ஏ விடுதியில் குளிரூட்டப்பட்ட அறையில் சொகுசாக தங்கியிருந்தார்கள். ஆனால் உமா மகேஸ்வரன் போராளிகளுடன் எளிமையாக வாழ்ந்தார்.

• அமிரும் அவர் மனைவி மங்கை அக்காவும் தமது பதவி ஆசைகளுக்காக சிங்களவனின் தோலை உரித்து செருப்பு தைத்து போட வேண்டும் என இனவாத பேச்சுக்களை பேசினார்கள். ஆனால் உமாவின் புளட் இயக்கம் சிங்களவர்களை சகோதரர்களாக நினைத்து அவர்களுக்காக சிங்களத்தில் வானொலி நடத்தியது. பல சிங்கள இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் இராணுவ உதவிகளை செய்தது.

• இந்திய இராணுவத்தின் அக்கிரமங்களை கண்டிக்க மறுத்ததுடன் இந்திய தூதுவரையும் சந்திக்க இருந்து நேரத்திலே அவரின் துரோகத்திற்காக புலிகள் இயக்கத்தால் அமிர்தலிங்கம் சுடப்பட்டார். ஆனால் உமாமகேஸ்வரன் இந்திய உளவுப்படைக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து இலங்கை வந்து கொழும்பில் தங்கியிருந்தவேளை அவரது இயக்க உறுப்பினராலேயே சுடப்பட்டார். சுட்ட அந்த உறுப்பினரை இந்திய உளவுப்படையே இறுதிவரை பாதுகாத்து வந்தது.

• அமிர்தலிங்கம் தனது போட்டியாளர்களை துரோகிகள் என முத்திரை குத்தி இளுஞர்கள் மூலம் கொன்றொழித்தார். அதேபோல் உமா மகேஸ்வரன் தலைமைக்கு எதிரானவர்களும் அவரது இயக்க புலனாய்வு மூலம் கொல்லப்பட்டார்கள். இருப்பினும் இருவரையும் ஒருபோதும் ஒன்றாக ஒப்பிட முடியாது.

Photo: • அமிர்தலிங்கம், உமா மகேஸ்வரன் இருவரையும் ஒன்றாக நினைவு கூர முடியுமா?

அன்பான சிங்கள சகோதரர்களுக்கு! உங்கள் சிந்தனைக்கு சில வரிகள்!

அன்பான சிங்கள சகோதரர்களுக்கு!
உங்கள் சிந்தனைக்கு சில வரிகள்!

• 1983ல் தமிழ் மக்கள் மத்தியில் 36 இயக்கங்கள் தோன்றின். அவை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன. ஆனால் அவற்றில் ஒன்றுகூட தமிழ் பகுதிகளை பிரித்து இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரியதில்லை.

• காஸ்மீரில் சில இயக்கங்கள் காஸ்மீரை பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் எனக் கோருகின்றன. ஆனால் இலங்கை தமிழ்மக்கள் இத்தனை அழிவுக்கு பின்பும்கூட தமது பகுதிகளை பிரித்து தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும் என கோரவில்லை.

• தமிழ்நாட்டில்கூட தமிழீழ பகுதிகளை உள்ளடக்கிய அகண்ட தமிழ்நாடு கோருவோர் உண்டு. ஆனால் இலங்கையில் அப்படி கோரிக்கை கொண்ட ஒருவர்கூட இல்லை.

• புலிகளை பயங்கரவாதிகள் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் அவர்கள் தாங்கள் அழியும் நிலையில்கூட தமது குண்டுகளை சிங்கள அப்பாவி மக்கள் மீது வீசவில்லை. லக்சபானா நீர்த்தேக்கத்திற்கு குண்டு வீசி பாரிய அழிவை ஏற்படுத்தும்படி சிலர் கோரினார்கள். ஆனாலும் புலிகள் அதைச் செய்யவில்லை. ஆனால் தன்னை ஒரு ஜனநாயக அரசு எனக் கூறும் இலங்கை அரசு அப்பாவி தமிழ்மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று அழித்தது. சரணடைந்தவர்களைக்கூட சுட்டுக்கொன்றது.

• இலங்கை அரசால் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்டு அன்று ஜே.வி.பி தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் தலைவர் விஜயவீராவின் மனைவி பிள்ளைகள் அரச பாதுகாப்புடன் வளர்க்கப்படுகின்றனர். அதேவேளை புலிகளின் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல அவரின் குடும்பத்தவர்கள் அனைவரும் கொல்லப்பட்டது ஏன்? இவர்கள் தமிழர்கள் என்பதால்தானே?

• ஜே.வி.பி உறுப்பினர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு அவர்கள் ஜனநாய நீரோட்டத்தில் இணைவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் புலி உறுப்பினர்கள் என்ற பேரில் இன்னமும் பலர் விடுதலை செய்யப்படாமல் இருப்பது ஏன்? அதுமட்டுமல்ல விஜயவீரா நினைவு தினம் அனுட்டிக்க எந்த தடையும் இல்லை. ஆனால் தமிழ் மக்கள் போரில் இறந்த தமது உறவினர்களைக்கூட நினைவு செய்ய அனுமதி மறுக்கப்புடுவது எதற்காக? தமிழர்கள் என்ற காரணம் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

• போரில் தான் வென்றுவிட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் வென்றது இந்திய அரசே. ஏனெனில் 1983க்கு முன்னர் இலங்கையில் இந்திய கம்பனிகள் வெறும் 30வீதமே. ஆனால் இன்று 91வீதம். அதுமட்டுமா இந்திய இறக்குமதி 65வீதமாக உள்ளது. மொத்தத்தில் இந்திய சுரண்டலுக்கே போர் வழி சமைத்துள்ளது.

• சிங்கள மக்களின் வறுமைக்கு புலிகளுடனான போரே காரணம் எனக்கூறப்பட்டது. ஆனால் இன்று புலிகள் அழிக்கப்பட்டு 5 வருடமாகிறது. ஆனால் சிங்கள மக்களின் வறுமை ஒழியவில்லையே? மாறாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 150 பேர் உயர் பதவிகளில் அமர்ந்து கொண்டு மொத்த நாட்டையுமே அல்லவா கொள்ளையடிக்கின்றனர். இதற்காகவா போரில் சிங்கள இளைஞர்கள் தங்கள் உயிர்களை துறந்தார்கள்?

• இன்று இலங்கையில் உள்ள ராணுவத்தின் எண்ணிக்கை 3 லட்சம். அதாவது சராசரி 60பேருக்கு ஒரு ராணுவம். மொத்த வருமானத்தில் 32 வீதம் பாதுகாப்பு செலவு. இந்த பெரும் செலவு யாரைப் பாதுகாக்க? ராஜபக்ச மகன் நடிகை அசினுடன் ஓட்டலில் அரட்டை அடிப்பதற்கும் , கார் ஓட்டப் பந்தயம் நடத்துவதற்கும் பாதுகாப்பு கொடுக்க இத்தனை செலவு கொண்ட ராணுவம் அவசியமா?

• வடபகுதியில் தமிழ் மக்களை அடக்கிய ராணுவம் இப்போது தென் இலங்கையில் முஸ்லிம்கள் மீதும் சிங்கள மக்கள் மீதும் ஏவி விடப்படுகிறது. குடி தண்ணீர் கேட்ட நீர்கொழும்பு மக்கள் மீது ராணுவம் ஏவி விடப்படுகிறது. இத்தனைக்கும் குடிதண்ணீரில் இரசாயணக் கழிவைக் கலக்கும் இந்தியக் கம்பனிக்காக சொந்த நாட்டு மக்கள் மீது ராணுவம் ஏவி விடப்படுகிறது.

• புலிகளைக் காட்டி பதவிக்கு வந்தவர்கள் இனி புலிகளைக் காட்டி முடியாது என்ற நிலையில் அடுத்த தேர்தலில் மீண்டும் பதவியைப் பிடிப்பதற்காக முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக காட்டி கலவரங்களை உருவாக்குகின்றனர்.

• ஒரு இனத்தை அடக்கும் எந்த இனமும் சுதந்திரமாக இருக்கமுடியாது என மாக்சிய ஆசான்கள் கூறுகின்றனர். எனவே சிங்கள் மக்கள் உண்மையிலே சுதந்திரத்தை அனுபவிக்க விரும்பினால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமையை வழங்க வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை.

தற்போது உலக கால்பந்து போட்டி நடக்கிறது. எனவே அந்த மொழியில் உங்களிடம் பேசுகிறேன். பந்து இப்பொழுது உங்கள் பக்கத்தில் உள்ளது. எப்படி விளையாடப் போகிறீர்கள்?

Photo: அன்பான சிங்கள சகோதரர்களுக்கு!

அவுஸ்ரேலிய அரசே! • அகதிகளை திருப்பி அனுப்பாதே! • அகதிகளை அடைத்துவைத்து துன்புறுத்தாதே!

அவுஸ்ரேலிய அரசே!

• அகதிகளை திருப்பி அனுப்பாதே!
• அகதிகளை அடைத்துவைத்து துன்புறுத்தாதே!

மனிதாபிமானமற்ற முறையில், ஜ.நா விதிகளுக்கு எதிராக அகதிகளை துன்புறுத்துவதிலும் அவர்களை திருப்பி அனுப்புவதிலும் சில நாடுகள் முயற்சி செய்கின்றன. அதில் குறிப்பாக அவுஸ்ரேலிய நாடு முதன்மை வகிக்கின்றது. தொடர்ந்தும் மிக மோசமாக ஈடுபட்டு வருகின்றது.

அவுஸ்ரேலியாவில் அண்மையில் ஒரு தமிழ் இளைஞர் தன்னை திருப்பி அனுப்ப முயற்சி செய்தபோது தற்கொலை செய்தார். இன்னொரு நபர் தற்கொலைக்கு முயற்சி செய்தார். ஆனால் அந்த நாட்டு அரசு ஈவு இரக்கமின்றி தொடர்ந்தும் அரக்கத்தனமாக செயற்படுகின்றது.

தமிழ் நாட்டில் தங்கியிருந்த பல அகதிகளே அங்கு தொடர்ந்தும் வாழ முடியாத நிலையில் அவுஸ்ரேலியா செல்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. தனது நாட்டில் இருக்கும் தமிழ் அகதிகளை பராமரிக்காத தமிழ்நாடு அரசு ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் பெற்றுக் கொடுப்பதாக அறிக்கை விடுகிறது. மேலும் அகதிகளை பிடித்து சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாமில் அடைத்து வருகிறது. இது தொடர்பாக பல மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தும்கூட தமிழ்நாடு அரசு அந்த அகதிகளை விடுதலை செய்ய மறுத்து வருகிறது.

தமிழ் அகதிகளின் இந்த துன்ப நிலை குறித்து தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் வாய் திறப்பதேயில்லை. மாகாண சபையோ தனக்கு ஆடம்பர சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதில் கவனம் செலுத்துகிறதேயொழிய இந்த அகதிகள் தொடர்பாக அக்கறை கொள்வதில்லை. புலம்பெயர்ந்த நாடடில் இருக்கும் பண பலம் பொருந்திய அமைப்புகள்கூட இந்த அகதிகள் விடயத்தில் அக்கறை கொள்வதில்லை.

இந் நிலையில் லண்டனில் “தமிழ்அகதிகளுக்கான போராட்டக்குழு” பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அவர்கள் தமிழ் அகதிகளுக்கு பல்வேறு வடிவங்களில் குரல் எழுப்பி வருகின்றமை உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. குறிப்பாக தமிழக சிறப்புமுகாம் கொடுமை தொடர்பாக கண்டனம் தெரிவித்தமை அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Photo: அவுஸ்ரேலிய அரசே!

இஸ்ரேலிய டாங்கிக்கு எதிராக பாலஸ்தீன சிறுவன் எறியும் கல் அணுகுண்டைவிட வலிமையானது!

 இஸ்ரேலிய டாங்கிக்கு எதிராக பாலஸ்தீன சிறுவன்
எறியும் கல் அணுகுண்டைவிட வலிமையானது!

“மக்கள் சக்தி மகத்தானது. அது அணுகுண்டை விட வலிமையானது” என்று மாக்சிய ஆசான் தோழர் மாசேதுங் கூறினார்.

இன்று இஸ்ரேலிய அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழும் பாலஸ்தீன சிறுவர் போராட்டம் நாளை மாபெரும் மக்கள் போராட்டமாக வெடிக்கும். அது இஸ்ரேலிய அரசை நிச்சயம் தோற்கடிக்கும்.

பயங்கரவாதிகளை ஒழிப்பதாக கூறி இலங்கை அரசு எத்தனையோ சிறுவர்களை கொன்றது. அதேபோல் இன்று இஸ்ரேலிய அரசு பயங்கரவாதிகளை அழிப்பதாக கூறி பாலஸ்தீன சிறுவர்களை கொல்கிறது.

இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை அழிக்க எந்த ஏகாதிபத்தியங்கள் ஆதரவும் உதவியும் வழங்கினவையோ அவை இன்று இஸ்ரேலுக்கு உதவுகின்றன.
ஆனால் அந்த ஏகாதிபத்தியங்கள் ஜ.நா மூலம் தீர்வு பெற்று தரும் என நம்மவர் சிலர் மக்களை நம்ப வைக்க முயலுகின்றனர்.

காஸ்மீரில் இந்திய ராணுவம் அப்பாவிகளை கொன்றபோது தமிழர்கள் காஸ்மீர் மக்களை ஆதரிக்கவில்லை. பின்னர் இந்திய ராணுவம் தமிழ் மக்களை அழித்தபோது காஸ்மீர் மக்கள் மௌனமாக இருந்தனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டபோது பாலஸ்தீனம் அதனை கண்டிக்கவில்லை. மாறாக மகிந்த ராஜபக்சவை அழைத்து வரவேற்பு கொடுத்தது. இப்போது இஸ்ரவேல் பாலஸ்தீனத்தை அழிக்கும்பொது தமிழ் மக்கள் கண்டிக்கவில்லை. மௌனம் காக்கின்றனர்.

ஏகாதிபத்தியங்கள் ஒன்று சேர்ந்து மக்களை அழிக்கின்றனர். ஆனால் மக்களோ ஒடுக்கு முறைக்கு எதிராக ஒன்று சேராமல் பிரிந்து நிற்கின்றனர்.

பாலஸ்தீன சிறுவன் எறியும் கல் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தருகிறது.
அடக்கு முறைக்கு எதிராக அனைத்து மக்களையும் ஒன்றிணைப்போம்.
இறுதி வெற்றி உறுதி எமக்கு!

Photo: • இஸ்ரேலிய டாங்கிக்கு எதிராக பாலஸ்தீன சிறுவன் 

அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பா?

• அமிர்தலிங்கம் மரணம்
தமிழ்மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பா?

இன்று அமிர்தலிங்கத்தின் 25வது நினைவு தினம். இதனை முன்னிட்டு பி.பி.சி க்கு பேட்டி கொடுத்த தலைவர் சம்பந்தன் “அமிர் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு” எனக் கூறியுள்ளார். இது உண்மையா?

(1)தமிழ் மக்களுக்கு இன உணர்வை ஊட்டியதில் அமிர்தலிங்கம் பங்கு மறுக்க முடியாதது. ஆனால் அதை அவர் தமிழ் மக்களின் நலன்களுக்காக செய்யவில்லை. மாறாக தனது பதவி நலன்களுக்காகவே செய்தார்.

(2)அமிர்தலிங்கம் ஆடம்பர வாழ்வு வாழ்ந்தவர் அல்லர். வேலை பெற்று தருவதாக கூறி யாரிடமும் பணம்(லஞ்சம்) வாங்கியவர் அல்லர். குறிப்பாக வேலை தருவதாக பெண்களை அழைத்து சென்று ஓடும் ரயிலில் சல்லாபம் செய்யவில்லை.

(3)அமிர்தலிங்கம் புகழ் பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவர். அவர் விரும்பியிருந்தால் வழக்கு பேசி நிறைய பணம் சம்பாதித்திருக்க முடியும். ஆனால் அரசியலில் அவர் தனது சொத்துகள் பலவற்றை இழந்தார்.

(4)சுயாட்சிக் கழக நவரட்ணம் தமிழீழ தனிநாட்டு தீர்வை முன்வைத்த போது அது தற்கொலைக்கு ஒப்பான தீர்வு என அமிர்தலிங்கம் சாடினார். ஆனால் அதே அமிர்தலிங்கம் தான் தேர்தலில் தோற்றதும் தனது பதவி நலனுக்காக அதே தமிழீழ தீர்வை முன்வைத்தார்.

(5)”அடைந்தால் தமிழீழம் இல்லையேல் சுடுகாடு” என இளைஞர்களை உசுப்பேற்றிவிட்ட அமிர்தலிங்கம் ஜே.ஆர் “மாவட்ட சபை” வழங்க முன்வந்தபோது அதனை ஏற்றார். பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்ட மாகாண சபையை ஏற்றார். எப்போதும் ஏதாவது ஒருவிதத்தில் தனக்கு பதவி கிடைக்கவேண்டும் என்பதில் அமிர்தலிங்கம் குறியாக இருந்தார்.

(6)வடபகுதியில் சாதிப் போராட்டம் நடைபெற்றபோது அமிர்தலிங்கம் உயர்சாதியினர் பக்கமே நின்றார். பாராளுமன்றத்தில் “சங்கானை இன்னொரு சங்காயா(சீனா) மாறுகின்றது” என தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு எதிராக பேசினார்.

(7)அமிர்தலிங்கம் அரசியலில் தன் மனைவியை ஈடுபட அனுமதித்திருந்தாலும்கூட தமிழ் பெண்களின் விடுதலைக்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. குறிப்பாக ஒரு பெண் வேட்பாளர் கூட தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

(8) தமிழரசுக்கட்சியின் சத்தியாக்கிரக போராட்டத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பெருமளவில் பங்கு பற்றியிருந்தனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் கூட அமிர்தலிங்கத்தின் மானசீக சீடனாக இருந்தவர். இப்படியிருந்த இருந்த முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களிடமிருந்து பிரிவதற்கு அமிர்தலிங்கம் முன்வைத்த தமிழீழ கோரிக்கையே காரணம் ஆகும்.

(9)தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களில் ஒருவராக (மலையக) தொண்டமான் இருந்தார். ஆனால் அமிர்தலிங்கம் தமிழீழ கோரிக்கையை முன்வைத்தபோது அதனால் தமது மக்களுக்கு பயன் இல்லை எனக் கூறி தொண்டமான் விலகி சென்றார்.

(10)ராஜதுரைக்கு தலைமைப் பதவியை வழங்கியிருந்தால் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன் மதிப்பைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அமிர்தலிங்கம் தமிழர்விடுதலைக்கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜதுரைக்கு எதிராக தமிழரசுக்கட்சி சார்பில் காசி ஆனந்தனை போட்டியிட செய்தார். இதன் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமையை குழப்பினார்.

(11)இலங்கை ராணுவம் தமிழ் மக்களை கொலை மற்றும் பாலியல் வல்லுறவு செய்தபோது அதனைக் கண்டித்த அமிர்தலிங்கம் இந்திய ராணுவம் தமிழ் மக்களைக் கொலை செய்தபோது கண்டிக்க மறுத்தார்.

(12)இலங்கை அரசு தரப்படுத்தலை அமுல்படுத்தியபோது அதற்கு எதிராக தமிழ் மாணவர்களை போராடும்படி தூண்டிய அமிர்தலிங்கம் தனது மகன் பகிரதனுக்கு மதுரை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆர் மூலம் சீட்டு பெற்றார்.

(13)இந்திரா காந்தி போராளிகளுக்கு பயிற்சி வழங்க முனைந்தபோது அதனை தடுக்க அமிர்தலிங்கம் முனைந்தார். ஆனால் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே தனது மகன் பகிரதன் ஆயுத இயக்கம் கட்டிய போது அதனை அவர் தடுக்கவில்லை.

(14)பல தமிழ் இளைஞர்களை அன்றைய ஜே.ஆர் அரசு கைது செய்தபோது அவர்களை விடுவிக்க அமிர்தலிங்கம் முனையவில்லை. ஆனால் தனது மகன் பகிரதன் கடிதத்தை கொண்டு சென்ற தனது உறவினர் ஒருவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதும் உடனே ஜே. ஆர் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுவித்தார். அந்த உறவினர் எந்த வழக்கும் இன்றி உடனே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு மலேசியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.

(15)யாழப்பாணத்தில் தேர்தலில் தோல்வியுற்ற அமிர்தலிங்கம் அம்பாறையில் இருந்து தெரிவு செய்யப்பட விரும்பினார். ஆனால் அங்கும் அவர் தோல்வியுற்றார். இவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையிலே அவர் கொல்லப்பட்டார்.

அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால்

• தமிழீழம் கிடைத்திருக்காது. ஏனெனில் அவர் தமிழீழ கோரிக்கையை எப்போதோ கைவிட்டுவிட்டார்.

• முள்ளிவாயக்கால் அவலத்தை தடுத்திருக்க முடியாது. ஏனெனில் அவர் உயிரோடு இருந்த காலத்திலே இந்திய ராணுவ அழிப்பபை தடுக்காதவர் மட்டுமல்ல அதை கண்டிக்க கூட முன்வராதவர்.

• தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைத்திருக்காது. சம்பந்தனுக்கும் தலைவர் பதவி கிடைத்திருக்காது.

எனவே
அமிர்தலிங்கம் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு அல்ல.!

Photo: • அமிர்தலிங்கம் மரணம்

லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் “மக்கள் ஜனநாயக அரங்கு” சார்பில் உரையாடலும் ஆவணத் திரையிடலும்

• கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.07.2014)யன்று மாலை 3 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் “மக்கள் ஜனநாயக அரங்கு” சார்பில் உரையாடலும் ஆவணத் திரையிடலும் நடைபெற்றது.

முதலாவது அமர்வாக கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ணா அவர்களின் உரை இடம்பெற்றது. அவர் இலங்கையில் ஜனநாயகம், இன உரிமை மற்றும் அதிகாரப் பகிர்வு என்னும் தலைப்பில் உரையாற்றினார். இவ் உரையாடல் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. உரையாடலின் இறுதியில் பார்வையாளரின் கேள்விகளுக்கு ஜெயம்பதி விக்கிரமரட்ணா பதில் அளித்தார்.

இரண்டாவது அமர்வாக “சியாம் -பர்மா , மரண ரயில்பாதை” என்னும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் திரை விமர்சகர் யமுனா ராஜேந்திரன் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது இப் படத்தின் இயக்குனர் குறிஞ்சி வேந்தன் கலந்துகொண்டு தனது கருத்துக்களை பகிர்ந்தார்.

இந்த ஆவணப்படம் இன்னொரு “பரதேசி” கதையையே எமக்கு நினைவூட்டுகிறது. ரயில்வே பாதை நிர்மானிக்க அழைத்து செல்லப்பட்ட ஆசிய தொழிலாளர்களின் குறிப்பாக எமது தமிழ் மக்களின் சோகக் கதையை இது காட்டுகிறது. வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட ஒரு கதையை காட்டியிருக்கும் இந்த இயக்குனர் உண்மையில் மிகவும் பாராட்டப்படவேண்டியவர்.

ஞாயிற்றுக்கிழமை அதுவும் உலகப்பந்தாட்டம் இறுதிப் போட்டி நடைபெற்ற நாளில் மண்டபம் நிறைந்த மக்கள் வந்து பங்குபற்றியது ஆச்சரியமும் ஆறுதலும் தருகிறது. ஒரு நல்ல நிகழ்வு இடம் பெற்றுள்ளமை தொடர்ந்தும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த உத்வேகம் தருவதாக அமைகிறது.

Photo: • கடந்த ஞாயிற்றுக்கிழமை (13.07.2014)யன்று மாலை 3 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் “மக்கள் ஜனநாயக அரங்கு” சார்பில் உரையாடலும் ஆவணத் திரையிடலும் நடைபெற்றது.

முதலாவது அமர்வாக கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரட்ணா அவர்களின் உரை இடம்பெற்றது. அவர் இலங்கையில் ஜனநாயகம், இன உரிமை மற்றும் அதிகாரப் பகிர்வு என்னும் தலைப்பில் உரையாற்றினார். இவ் உரையாடல் அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. உரையாடலின் இறுதியில் பார்வையாளரின் கேள்விகளுக்கு ஜெயம்பதி விக்கிரமரட்ணா பதில் அளித்தார்.

இரண்டாவது அமர்வாக “சியாம் -பர்மா , மரண ரயில்பாதை” என்னும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் திரை விமர்சகர் யமுனா ராஜேந்திரன் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது இப் படத்தின் இயக்குனர் குறிஞ்சி வேந்தன் கலந்துகொண்டு தனது கருத்துக்களை பகிர்ந்தார்.

இந்த ஆவணப்படம் இன்னொரு “பரதேசி” கதையையே எமக்கு நினைவூட்டுகிறது. ரயில்வே பாதை நிர்மானிக்க அழைத்து செல்லப்பட்ட ஆசிய தொழிலாளர்களின் குறிப்பாக எமது தமிழ் மக்களின் சோகக் கதையை இது காட்டுகிறது. வரலாற்றில் மறைக்கப்பட்ட அல்லது மறக்கப்பட்ட ஒரு கதையை காட்டியிருக்கும் இந்த இயக்குனர் உண்மையில் மிகவும் பாராட்டப்படவேண்டியவர்.

ஞாயிற்றுக்கிழமை அதுவும் உலகப்பந்தாட்டம் இறுதிப் போட்டி நடைபெற்ற நாளில் மண்டபம் நிறைந்த மக்கள் வந்து பங்குபற்றியது ஆச்சரியமும் ஆறுதலும் தருகிறது. ஒரு நல்ல நிகழ்வு இடம் பெற்றுள்ளமை தொடர்ந்தும் இதுபோன்ற  நிகழ்வுகளை நடத்த உத்வேகம் தருவதாக அமைகிறது.

• நக்சல்பாரிகள் தேசபக்தர்களா? தேசவிரோதிகளா?

“மக்களுக்காக போராடும் நக்சல்பாரிகள் தேச விரோதிகள் அல்லர். அவர்கள் தேசபக்தர்கள்” என்று இந்திய உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. ஆனால் “துக்ளக்” சோ, நக்சல்பாரிகள் தேசவிரோதிகள் என்றும் அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

சோ அவர்கள் (துக்ளக் 16.07.2014 , பக்-7) தர்மபுரியில் நக்சலைட்டுகள் என்னும் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு இளைஞர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். உடனே ஜெயா அம்மையாரின் அரசு அந்த இளைஞர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் போட்டு சிறையில் அடைத்துள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் செய்த குற்றம் என்ன? அவர்கள்
காஞ்சி சங்கராச்சாரியார் போன்று கூலிக்கு கொலை செய்தவர்களா?
கனிமொழி, ராசா போன்று பல்லாயிரம் கோடி ஊழல் செய்தவர்களா?
ஜெயா அம்மையார் போன்று சொத்து குவிப்பு வழக்கு உள்ளதா?

இத்தனைபேரும் வெளியில் இருக்க அந்த இளைஞர்களை மட்டும் எதற்காக சிறையில் அடைக்க வேண்டும்?

நத்தம் காலனியில் சாதிக் கலவரம் செய்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.ஆனால் அந்த சாதிக் கொடுமைக்கு எதிராக திரண்ட இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இது என்ன நியாயம்?

கைது செய்யப்பட்ட நக்சலைட்டுகள் சென்னை மெரினா கடற்கரையில் ஆயுதப் பயிற்சி எடுத்தாக பொலிஸ் கூறுகிறது. பொலிஸ் கமிசனர் அலுவலகத்திற்கு முன்பு பயிற்சி எடுப்பதாக கூறுவதை நம்புவதற்கு மக்கள் என்ன முட்டாள்களா?

இதுவரை மாவோயிஸ்டுகளுக்கு சீனா உதவுவதாக கூறியவர்கள் இப்போது ஜரோப்பாவில் இருந்து உதவி வருவதாக கதை விடுகிறார்கள்.

முன்பு தர்மபுரியில் அப்பாவி இளைஞர்கள் பலரை நக்சலைட்டுகள் என்னும் பேரில் தேவாரம் சுட்டுக்கொன்றார். அதேபோன்றும் இன்றும் பொலிசார் சுட்டுக்கொல்ல வேண்டும் என சோ கேட்கிறார்.

நடப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது சோவின் “அவாள்” ஆட்சியா?

Photo: • நக்சல்பாரிகள் தேசபக்தர்களா? தேசவிரோதிகளா?

தமிழ் பெண்கள் மீதான தொடரும் ராணுவ பாலியல் வல்லுறவுகள்!

யுத்தத்தின்போது கூட பாலியல் வல்லுறவு ஒரு ஆயுதமாக பெண்கள் மீது பாவிக்கக்கூடாது என சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. ஆனால் போர் முடிந்து நான்கு வருடமாகியும் தமிழ் பெண்கள் மீதான இலங்கை ராணுவத்தின் பாலியல் வல்லுறவுகள் தொடருகின்றன. இது குறித்து இலங்கை அரசு மட்டுமல்ல சர்வதேச நிறுவனங்கள்கூட எந்தவித அக்கறையும் இன்றி இருப்பது அதிர்ச்சி தருகிறது.

காரைநகரில் 9வயது மற்றும் 11வயது தமிழ் சிறுமிகள் இருவர் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து ஒரு வாரம் பாலியல் வல்லுறலுக்குள்ளாக்கப்பட்டமை மனித நேயம் மிக்க அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகும்.

கடந்தவருடம் நெடுங்கேனியில் ஒரு பாடசாலை மாணவி ராணுவ வீரர் ஒருவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அது குறித்து இதுவரை எந்தவித விசாரணயும் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த பாடசாலை சிறுமிகளுக்கு நடந்துள்ள கொடுமை இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது ராணுவ ஆட்சியா என கேட்கத் தூண்டுகிறது.

கடந்த நான்கு வருடங்களில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக இரண்டு லட்சத்து பத்தாயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபைத் தலைவி அனோமா திசநாயக்கா தெரிவித்துள்ளார். இதில் 25ஆயிரம் முறைப்பாடுகள் மட்டுமே விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சிறுவர் பாலியல் குற்றங்களில் இலங்கையே முதலிடம் பெற்றுள்ளது. இதுவே மகிந்த அரசின் சாதனையாக உள்ளது. போர் நடைபெற்ற காலங்களில்கூட இந்தளவு மோசமாக நிலமை இருந்ததில்லை.

தமிழ்மக்களுக்கு பல,
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
நாடுகடந்த தமிழீழ பிரதமர் இருக்கிறார்.
ஆனால் தமிழ் பெண்கள் மீதான இந்த பாலியல் வல்லுறவுகள் குறித்து குரல் கொடுக்க யாருமே இல்லையே!

Photo: • தமிழ் பெண்கள் மீதான தொடரும் ராணுவ பாலியல் வல்லுறவுகள்!