Tuesday, April 30, 2024

முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட

"முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட எழுந்து நின்று சாவது மேலானது" - சே 2 சீட்டுக்கு கட்சியை அடகு வைப்பதைவிட கொள்கைக்காக தனித்து நின்று தோற்பது மேல்.

இந்த வாரம் முருகன் , பயஸ், ஜெயக்குமார்

இந்த வாரம் முருகன் , பயஸ், ஜெயக்குமார் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மூவரும் வெளிநாடு செல்ல விரும்பியிருந்தனர். ஆனாலும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை இலங்கைக்கு இந்திய அரசு அனுப்புகிறது. வேறு வழியின்மையால் அவர்கள் இவ் வழியிலாவது விடுதலை பெறட்டும். இலங்கையில் இருந்து அவர்கள் விரும்பிய வெளிநாடு செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும். மாறாக, இந்திய அரசு மறைமுகமாக இலங்கை அரசு மூலம் அவர்களுக்கு எந்தவித இடைஞ்சலையும் கொடுக்கக்கூடாது.

ஆடு ஜீவிதம்

• ஆடு ஜீவிதம் மத்தியகிழக்கு நாட்டிற்கு வேலைக்கு சென்ற ஒருவர் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றிய படம். இப்படத்தை பார்க்கும்போது எமது நாட்டு மூதூர் சிறுமி ஒருத்தி சவூதியில் மரண தண்டனை பெற்றது நினைவுக்கு வருகிறது. இதைப்போன்று கொடுமையானது ஈழத் தமிழர்கள் ஐரோப்பிய, கனடா நாடுகளுக்கு சென்ற பயணக்கதைகள். ஏஜென்சிகளால் அழைத்துச் செல்லப்படும்போது வழியில் பனியில் உறைந்து மரணமானவர்கள், கடலில் மூழ்கி மரணமானவர்கள் என்று மறக்க முடியாத பல கதைகள் உண்டு. ஈழத் தமிழரின் இக் கதைகள் யாராவது நாவலாக எழுதுவார்களா? அது திரைப்டமாக்கப்படுமா?

முருகன், பயஸ், ஜெயக்குமார் மூவரும்

முருகன், பயஸ், ஜெயக்குமார் மூவரும் சிறப்புமுகாமில் இருந்து விடுதலை பெற்று கொழும்பை வந்தடைந்துள்ளனர். மகிழ்ச்சி மற்றும் ஆறுதல்.

எது நடக்க வேண்டும் என்று விரும்பினோமோ

எது நடக்க வேண்டும் என்று விரும்பினோமோ அது நடந்துவிட்டது. 33 வருட சிறைவாழ்வு முடிவுக்கு வந்தது. மூவரின் விடுதலைக்கும் குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி.

தோழர் புகழேந்தி. இவர் வழக்கறிஞர் மட்டுமல்ல

தோழர் புகழேந்தி. இவர் வழக்கறிஞர் மட்டுமல்ல தமிழ்த்தேசிய விடுதலையை முன்னெடுக்கும் உணர்வாளரும்கூட. அதனால்தான் சாந்தன் உடலை கொண்டு வந்து தாயாரிடம் ஒப்படைத்தார். அப்போது அவரை சந்தித்து அழுத முருகனின் தாயாரிடம் “உங்கள் மகனை கொண்டு வந்து ஒப்படைப்பேன்” என உறுதியளித்தார். உறுதியளித்தபடி முருகனை அழைத்துவந்து தாயாரிடம் ஒப்படைத்துவிட்டார். அதன்மூலம் ஒரு தாயின் 33 வருட கனவை நிறைவேற்றியுள்ளார்.

1990ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால்

1990ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் சிறப்புமுகாம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்போதுதான் தமிழ் மக்கள் பலரின் கவனத்தை சிறப்புமுகாம் பெற்றுள்ளது. அதற்கு காரணம், உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஏழு தமிழரில் நாலு ஈழத் தமிழர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டதே. அதுவும் சாந்தன் மரணம் இச் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து தமிழ் மக்கள் அறியும் வாய்ப்பை ஏற்படுத்தியது. மக்கள் மத்தியில் இருந்து பலரும் குரல் எழுப்பியதால் முருகன், பயஸ், ஜெயக்குமார் விடுதலை பெற்றுள்ளனர். ஆனாலும் சிறப்புமுகாம் மூடப்பட்டு அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவரும் விடுதலை பெற நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டியுள்ளது.