Sunday, February 16, 2014

• ஆயுதம் ஏந்தாமல் தொடர்ந்தும் மக்களை தயார் படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் புரட்சிவாதிகளா அல்லது பிழைப்புவாதிகளா?

• ஆயுதம் ஏந்தாமல் தொடர்ந்தும் மக்களை தயார் படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் புரட்சிவாதிகளா அல்லது பிழைப்புவாதிகளா?

• ஆயுதப் போராட்டபாதையை முன்னெடுக்காமல் தேர்தல் பாதையை காட்டுபவர்கள் ஆளும் வர்க்கத்திற்கு துணை செய்பவர்களா அல்லது மக்களின் விடுதலையை முன்னெடுப்பவர்களா?

1960 களில்
முதலமைச்சர்- காமராசர்
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

1970 களில்
முதலமைச்சர்- கருணாநிதி
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

1980களில்
முதலமைச்சர்- எம்.ஜி.ஆர்
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

1990களில்
முதலமைச்சர்- ஜெயலலிதா
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

2000களில்
முதலமைச்சர்- கருணாநிதி மற்றும் ஜெயலலிதா
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

2010 களில்
முதலமைச்சர்- கருணாநிதி மற்றும் ஜெயலலிதா
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.
2020 களில்
முதலமைச்சர்- ஸ்டாலின் மற்றும் அழகிரி
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

2030 களில்
முதலமைச்சர்- ஸ்டாலின் மகன் உதயநிதி மற்றும் அழகிரி மகன் தயாநிதி
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

2040 களில்
முதலமைச்சர்- உதயநிதி மகன் மற்றும் தயாநிதி மகன்
புரட்சிவாதிகள்- மக்களை தயார் படுத்த வேண்டும். அதன் பின்பே ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும்.

• மக்களை தயார் படுத்த வேண்டும் என்று காலம் பூராவும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள் புரட்சிவாதிகள் அல்லர். மாறாக அவர்கள் புலுடாவாதிகள் அல்லது பிழைப்புவாதிகள் !

• பிழைப்புவாத தலைவர்களை தூக்கியெறிவோம். மக்கள் புரட்சியை முன்னெடுப்போம்!

தமிழக மீனவர்களுக்காக பி.ஜே.பி சுஸ்மா சுவாராஜ் போராட்டம்

• தமிழக மீனவர்களுக்காக பி.ஜே.பி சுஸ்மா சுவாராஜ் போராட்டம்

• கேட்பவன் கேணையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்பார்களாம்.

மக்களை கேணையர்களாக
மக்களை முட்டாள்களாக
மக்களை ஏமாளிகளாக
சில அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள்.

தேர்தல் வருகிறது என்றதும் அவர்கள் தங்கள் சொந்த முகங்களை மறைத்து தங்களை மக்கள் காப்பாளர்களாக காட்ட முயல்கிறார்கள்.

எல்லா ஓட்டுப் பொறுக்கி அரசியல் தலைவர்களும் இப்படித்தான் என்றாலும்கூட
பிஜே.பி தலைவர் சுஸ்மா சுவராஜ் அவர்களின் தமிழக மீனவர்களுக்கான பாம்பன் போராட்டம்
மிக மோசமானது. அருவருப்பானது.

முள்ளிவாயக்காலில் பல்லாயிரம் தமிழ்மக்களைக் கொன்ற மகிந்தவின் இரத்த கரங்களை பற்றிக் குலுக்கியவர். அவர் கையால் பரிசு பெற்றவர். பாராளுமன்றத்தில் மகிந்தா இனப் படுகொலை செய்யவில்லை என்று வக்காலத்து வாங்கியவர். இப்போது எந்த முகத்தோடு தமிழக மீனவர்கள் முன் வந்து நிற்கிறார்?

மக்கள் மறதியுள்ளவர்கள்தான்.
மக்கள் தலைவர்களை நம்பி ஏமாறுபவர்கள்தான்.
ஆனால் அதற்காக பி.ஜே.பி தலைவர் சுஸ்மா சுவராஜ் அவர்களின் துரோகத்தை
மக்கள் மறந்து விடுவார்களோ என்றோ அல்லது
அவரது இந்த தமிழக மீனவர் மீதான போலி பாசத்தை நம்பிவிடுவார்களோ என்றோ
தப்பு கணக்குப் போட வேண்டாம்.

தேர்தலில் மக்கள் எல்லா கணக்கும் தீர்ப்பார்கள்.
இது உறுதி!

• சர்வதேச விசாரணை கோரி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும்- “டெசோ” வில் கலைஞர் தீர்மானம்

• சர்வதேச விசாரணை கோரி இந்தியா தீர்மானம் கொண்டு வரவேண்டும்- “டெசோ” வில் கலைஞர் தீர்மானம்

கலைஞர் அவர்களே!

உண்மையிலே ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்று விரும்பினால் நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய உதவி தயவு செய்து டெசோ அமைப்பை கலைத்து விடுங்கள். இனியாவது எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் பிழைத்துக்கொள்கிறோம். உங்கள் நலன்களுக்காக எங்களை பகடைக்காய் ஆக்காதீர்கள்.

ஆட்சியில் இருக்கும் போது உண்ணாவிரத நாடகம் போட்டு 40 ஆயிரம் தமிழர்கள் அழிவதற்கு துணை செய்து விட்டு இப்போது போர்க்குற்றம் பற்றி விசாரிக்க இந்தியா முயல வேண்டும் என கோருவது யாரை ஏமாற்றுவதற்கு?

தனது பதவி நலனுக்காகவும் , தனது குடும்ப நலனுக்காகவும் கலைஞர் தமிழினத்திற்கு செய்த துரோகங்கள் மன்னிக்க முடியாதவை. மறக்க முடியாதவை. அதுவும் ஈழத் தமிழினத்திற்கு அவர் செய்த துரோகம் ஒருபோதும் வரலாற்றில் இருந்து மறையாது. காலம் உள்ளவரை தமிழர் நெஞ்சங்களில் நிலைத்து இருக்கும்.

அவருடைய குடும்பத்தில் பிரச்சனை வரும்பொதெல்லாம் அல்லது அவர் மகள் கனிமொழி ஊழல் வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் மக்கள் கவனத்தை திருப்ப “டெசோ” நாடகம் போடும் அவரின் நரித் தனத்தை எவ்வாறு அழைப்பது?

தன்னுடைய ஆட்சியைக் காப்பதற்காக சிறப்பு முகாம்ளை உருவாக்கியவர். அதில் அப்பாவி அகதிகளை பிடித்து அடைத்தவர். அது மட்டுமல்ல விடுதலை கோரிய அகதிகளை பொலிஸ் தேவாரத்தை விட்டு அடித்து சித்திரவதை செய்தவர். இன்றும்கூட இந்த சிறப்பு முகாம்களை மூடுமாறு ஒரு அறிக்கைவிடக்கூட மனமில்லாதவர். இதை எப்படி எம்மால் மறக்க முடியும்?

ஒருவருடைய மரணம் அவரது எல்லா பாவங்களையும் மன்னிக்கும் என்பார்கள். ஆனால் அந்த மரணத்தால் கூட மன்னிக்கப்பட முடியாத நபர் ஒருவர் உள்ளார் என்றால் அவர் கலைஞர் கருணாநிதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

• ஈழத் தமிழர் பிரச்சனையில் தலையிடுமாறு ராகுல் காந்தியிடம் திருமாவளவன் கோரிக்கை

• ஈழத் தமிழர் பிரச்சனையில் தலையிடுமாறு ராகுல் காந்தியிடம் திருமாவளவன் கோரிக்கை

அன்று ராஜீவ் காந்தி தலையிட்டார். இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். பல பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். பல கோடி ருபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

இன்று ராகுல்காந்தியை தலையிடுமாறு கோரப்படுகிறது. ராகுல் காந்தி தலையிட்டால் இன்னும் எத்தனை தமிழர்கள் உயிர் பறிக்கப்படும்? இன்னும் எத்தனை தமிழ் பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள்? எத்தனை கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்படும்?

பனையால விழுந்தவனை மாடேறி மிதித்த கதை போல ஏற்கனவே அழிவுகளை சந்தித்து நொந்து போயிருக்கும் ஈழத் தமிழினம் தொடர்ந்தும் அழிவுகளை சந்திக்க வேண்டும் என்று திருமாவளன் ஏன் விரும்புகிறார்?

அன்று மூப்பனாரிடம் தேர்தல் கூட்டு என்ற பெயரில் பண பெட்டிகளை பெற்றுக் கொண்டு சொந்த சாதி மக்களையே கைவிட்டவர் திருமாவளவன். இன்று எத்தனை பெட்டி வாங்கி தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கிறார்?

தமிழீழம் பெற்றுக் கொடுப்பேன் என்று கூறியவர், யுத்த காலத்தில் புலித்தளபதிகள் பேச முயற்சி செய்த போது தொலை பேசியை அணைத்துவிட்டு பதுங்கியவர், இன்று எதற்காக ராகுல் காந்தியிம் கோரிக்கை வைக்கிறார்?

40 ஆயிரம் மக்கள் முள்ளிவாயக்காலில் கொல்லப்பட்டு அவர்கள் ரத்தம் காயுமுன்னரே கொழும்பு சென்று கொலைகார மகிந்தவின் கைளைக் குலுக்கியவர் இன்று எதற்காக கொலைகார ராகுல்காந்தியிம் கோரிக்கை வைக்கிறார்?

இலங்கையில் தமிழின அழிப்புக்கு சோனியா அரசு உதவியது யாவரும் அறிந்ததே. அப்படியிருக்க போர்க் குற்றவாளியான சோனியா குடும்பத்து ராகுல் காந்தியை தலையிடுமாறு கோருவதன் நோக்கம் என்ன?

திருமாவளவன் நோக்கம் ராகுல்காந்தி குடும்பம் தூய்மையானது என்று காட்டுவதா? அல்லது மீண்டும் ஈழத் தமிழினம் அழிய வேண்டும் என்ற விருப்பமா? எதுவாயினும் இனி ஈழத் தமிழர்கள் திருமாவளவன் போன்ற துரோகத் தலைமைகளை நம்பப் போவதில்லை.

இந்திய அரசுக்கு ஒரு நியாயம். ஈழத் தமிழர்களுக்கு இன்னொரு நியாயமா?

• இந்திய அரசுக்கு ஒரு நியாயம். ஈழத் தமிழர்களுக்கு இன்னொரு நியாயமா?

ஜாலியன்வாலாபாக்கில் 400 பேர் படுகொலை செய்தமைக்காக உதம்சிங் என்ற சீக்கியர் இங்கிலாந்து சென்று டயர் என்ற அதிகாரியை சுட்டுக்கொன்றார். அவரை பயங்கரவாதி என்று கூறி இங்கிலாந்து நீதிமன்றம் மரதண்டனை வழங்கியது. ஆனால் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அவருடைய அஸ்தியை வரவழைத்து சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்தார். உதம்சிங் மாபெரும் தியாகி என்று இந்திய அரசால் கௌரவிக்கப்பட்டார்.

அதே இந்திய அரசு இன்று ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய பயங்கரவாதம் என்றும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. 400 பேரை கொன்ற டயரை இங்கிலாந்து சென்று கொல்வது நியாயம் என்றும் அது பெரிய தியாகம் என்றும் கூறும் இந்திய அரசு 40000 அப்பாவி தமிழர்களை கொன்று பல பெண்களை கற்பழித்து பல கோடி ரூபா சொத்துக்களை அழித்த ராஜீவ் காந்தியைக் கொன்றது பயங்கரவாதம் என்கிறது.

சீக்கிய மக்கள் கொல்லப்பட்டமைக்கு உதம் சிங் பழி வாங்கியது நியாயம் என்றால் ஈழத் தமிழர்கள் தம் அழிவுக்கு காரணமானவரை பழிவாங்கியது எப்படி அநியாயம் ஆகும்?

இங்கிலாந்து சென்று டயரை கொன்றது சரி என்றால் இந்தியா சென்று ராஜீவ் காந்தியைக் கொன்றது எப்படி தவறாகும்?

இந்திராகாந்தியை கொன்றவர்களை சீக்கிய மதகுருமார் புனிதர்களாக அறிவித்துள்ளார்கள். அவர்கள் மீது இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் ராஜீவ் கொலை பற்றி பேசினாலே தமிழர்கள் மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாய்கிறது.

சீக்கியர்களுக்கு ஒரு நியாயம் தமிழர்களுக்கு இன்னொரு நியாயமா?

என்ன காரணத்திற்கு தெரியாமலே பற்றரி வாங்கி கொடுத்த ஒரு காரணத்திற்காக பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசு வாதிடுகிறது. அவர் 23 வருடங்கள் சிறையில் உல்லாசமாக இருந்ததாக வேறு உச்ச நீதிமன்றில் அது கூறுகிறது. இந்த அநியாயத்தை எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு பொறுமையாக நாம் பார்த்துக்கொண்டிருப்பது?

இன்னும் எத்தனை நாளைக்கு ராஜீவ் கொலையை காரணம் காட்டி தமிழ் இனத்தை அழிக்க அனுமதிப்பது?

• மன்னார் மனித புதைகுழியில் 54 உடல் எச்சங்கள் மீட்பு இந்திய ராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்டவையா?

• மன்னார் மனித புதைகுழியில் 54 உடல் எச்சங்கள் மீட்பு
இந்திய ராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்டவையா?

• படுகொலைகளுக்காக ராஜீவ் காந்தி அரசு விசாரிக்கபபடுமா?
பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு கிடைக்குமா?

• ராஜீவ்காந்தி கொலைக்கு தண்டனை வழங்கு முன்னர்
ராஜீவ் காந்தியால் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குவார்களா?

மன்னாரில் புகழ் பெற்ற திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 54 மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் நீதிபதி முன்னிலையில் தோண்டப் பெற்று வரும் இப் புதைகுழியில் இருந்து மேலும் பல மனித உடல்கள் கிடைக்கப் பெறலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரியுள்ளார்.

கண்டெடுக்கப்பட்ட உடல்கள் பல அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவை இந்திய ராணுவ காலத்தில் காணாமல் போனவர்களின் உடல்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளன. இவை இந்திய ராணுவத்தால் கொன்று புதைக்கபட்டவை என்று உறுதி செய்யப்படுகின்றன. இது தொடர்பாக அன்று இந்திய ராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விரைவில் விசாரிக்கப்படலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய ராணுவத்தின் கொலைகளுக்காக சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டும் விசாரிக்கப்பட முடியாது. கொலை செய்த இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் இந்திய ராணுவத்தை அனுப்பிய ராஜீவ் காந்தி எல்லாம் விசாரிக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரிக்கப்படல் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் நட்ட ஈடும் வழங்க வேண்டும். இதற்காக மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஒருமித்து குரல் எழுப்ப வேண்டும்.

நளினிக்கு பரோல் லீவு தருவதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு

• நளினிக்கு பரோல் லீவு தருவதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு

அன்று கலைஞர் ஆட்சியில் சிறை அதிகாரிகளின் அறிக்கையை வைத்து நளினிக்கு விடுதலை மறுக்கப்பட்டது.

இன்று ஜெயா அம்மையார் ஆட்சியில் சிறை அதிகாரியின் அறிக்கையை வைத்து பரோலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக 10 வருட சிறைத் தண்டனை அனுபவித்த ஆயுள்சிறைவாசிகள் அரசின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால் 23 வருடம் தண்டனை அனுபவித்த நளினிக்கு இதுவரை விடுதலை வழங்கப்படவில்லை.

ஆயுள் சிறைவாசிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 3 முறை பரோல் லீவு உண்டு. ஆனால் நளினிக்கு அந்த உரிமையைக்கூட வழங்க தமிழ்நாடு அரசு மறுக்கிறது.

கலைஞர் கருணாநிதியும் ஜெயா அம்மையாரும் இந்த விடயத்தில் ஒருமித்த கருத்தையே கொண்டு செயற்படுகின்றனர்.

• அகதிகள் லைசென்ஸ் பெறுவதற்குகூட கியு பிராஞ் பொலிஸ் தடுக்கிறது

ஆட்டோ ஓட்டிப் பிழைப்பதற்காக லைசென்ஸ் கூட பெற முடியாத நிலையில் தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் உள்ளனர். ஆனால் ஜெயா அம்மையாரோ இவ் அகதிகளுக்கு பிராஜா உரிமை வழங்குமாறு டில்லிக்கு கடிதம் போட்டுள்ளாராம்.

சிறப்புமுகாமில் உள்ள அகதிகளை விடுதலை செய்யங்கள் என்று கேட்டால் பொறுங்கள் தமிழீழம் பெற்று தருவேன் என்கிறார் ஜெயா அம்மையார்.

மக்களே! தேர்தல் வருகிறது. உங்கள் கிழிந்த செருப்புகளை தயாராக வைத்திருங்கள்.

இனியாவது இந்த பொறுக்கி அரசியல்வாதிகளை நம்பாது தூக்கியெறியுங்கள்!

• புலம்பெயர் சமவுரிமை இயக்கம் பதில் கொடுக்குமா?

• புலம்பெயர் சமவுரிமை இயக்கம் பதில் கொடுக்குமா?

சோபாசக்தி அவர்கள் பழ ரிச்சாட் அவர்களை பேட்டி கண்டிருக்கிறார். அதனை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார். அவருக்கு நன்றிகள்.

அந்த பேட்டியை படிக்க விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் படிக்கலாம்.

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1126

சோபாசக்தி அவர்கள் ஒரு புரட்சியாளர் அல்லர். அவர் ஒருபோதும் எந்தவொரு புரட்சிகர இயக்கத்திலும் இருந்தவர் அல்ல. மாறாக தன்னை ஒரு ட்ரொக்சியவாதி என்று பகிரங்கமாக அறிவித்துக்கொண்டவர்.

சோபாசக்தி அவர்கள் மாக்சிய கருத்துக்களை படிப்பதைவிட கால்மாக்ஸ் க்கு பணிப்பெண் கெலன்டெமுத் உடன் உறவு இருந்தது என்றும் அதன் மூலம் அவருக்கு ஒரு ஆண் மகன் பிறந்தது என்றும் கதை விடுவதில் ஆர்வம் உள்ளவர். இதற்குரிய ஆதாரங்களை எனக்கு தருவதாக கூறினார். ஆனால் இன்னும் தரவில்லை.

புரட்சிகர சக்திகள் குறித்து புரட்சியாளர்களே கேள்வி கேட்க முடியும் என்று இல்லை. யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். எனவே சோபாசக்தி அவர்களும் கேட்கலாம். அந்தளவில் சோபாசக்தியின் இந்த கேள்விகள் நிச்சயம் பதில் அளிக்கப்பட வேண்டியவையே.

பழ ரிச்சாட் அவர்கள் ஜே.வி.பி ஒரு இனவாதக் கட்சி என்று கூறுகிறார். ஆனால் இதை பல வருடங்களுக்கு முன்னரே தோழர் சண்முகதாசன் கூறிவிட்டார். அதுமட்டுமல்ல தோழர் சண்முகதாசன் அவர்கள் ஜே.வி.பி குறித்து தனது “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் புத்தகத்தில் தனி ஒரு அத்தியாயமே எழுதியுள்ளார். அதற்கு ஜே.வி.பி இன்னும் பதில் தரவில்லை.

பழ ரிச்சாட் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து சமவுரிமை இயக்கம் நிச்சயம் பதில் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுப்பார்கள் என நம்புகிறேன்.

பழ ரிச்சாட் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்!

நீங்கள் தற்போது சேர்ந்து செயற்படும் ஈரோஸ் இயக்கம் 1986ல் இந்திய உளவுப்படைகளின் வேண்டுகோளின்படி தோழர் நெப்போலியனை மலையகத்தில் கொலை செய்தது ஏன் என்பதை கேட்டு சொல்வீர்களா?

ஒருவேளை அதற்குரிய பதிலை உங்களால் பெற முடியாவிடினும் எதிர்வரும் காலங்களில் இந்திய உளவுப்படையின் வேண்டுகோள்படி யாரையும் கொலை செய்யமாட்டேன் என்ற உத்தரவாதத்தையாவது நீங்கள் தருவீர்களா?

365 நாட்களும் காதலர் தினமே!

• பொருளாதார ரீதியாக பெண்கள் ஆண்களை சார்ந்திருக்காத , பெண்ணடிமை முற்றாக ஒழியும் காலத்தில் உண்மையான காதல் மலரும். அப்போது பிப் 14 ம் திகதி மட்டுமல்ல 365 நாட்களும் காதலர் தினமே!

மாபெரும் மாக்சிய ஆசான் எங்கெல்ஸ் கூறுகிறார் “ஒரு புதிய தலைமுறை அதாவது தம் வாழ்நாள் முழுவதற்கும் தன்னிடம் ஒரு பெண்ணின் சரணாகதியைப் பணமோ வேறு எவ்விதமான சமூக அதிகாரமோ கொண்டு விலைக்கு வாங்காத ஆண்களினதும் உண்மையான காதலன்றி வேறு எந்தக் காரணத்ததுக்கும் தம்மை சரணளிக்காதவர்களும் பொருளாதார பின்விளைவுகளுக்கு அஞ்சி தம்மைத் தமது நேயத்திற்குரியோருக்கு அளிக்காதவர்களுமான பெண்களின் தலைமுறை வளர்ந்து வந்தபின்பு இப் பிரச்சனை தீர்வு பெறும். இத்தகைய மக்கள் உருவாகிய பின்னர் அவர்கள் என்ன செய்யலாம் என்று நாம் இன்று நினைப்பது பற்றி அவர்கள் துளியளவும் அக்கறைப்படமாட்டார்கள். அவர்கள் தமது சொந்த நடைமுறைகளையும் தங்கள் சொந்த பொது அபிப்பிராயங்களையும் உருவாக்கி ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட நடைமுறையுடன் நிறைவு காண்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் ஆண்களுடன் பூரண சமத்துவம் அனுபவிப்பர் என்பதில் ஜயமில்லை.”

• பாலுமகேந்திரா கைக்குண்டு வீசியதாக கூறும் சீமான் இதற்குரிய ஆதாரத்தை முன்வைப்பாரா?

• பாலுமகேந்திரா கைக்குண்டு வீசியதாக கூறும் சீமான் இதற்குரிய ஆதாரத்தை முன்வைப்பாரா?

இயக்குனர் பாலுமகேந்திராவின் மறைவில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் அவர்கள் காசிஆனந்தனும் பாலுமகேந்திராவும் சைக்கிளில் சென்று கைக்குண்டு வீசியதாக குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய செய்தி இதுவரை நாம் அறியவில்லை. எனவே இதற்குரிய ஆதாரத்தை சீமான் அவர்கள் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பாலுமகேந்திரா தனது திரைப்படங்களில்கூட கைக்குண்டு எறியும் காட்சிகள் வைத்ததில்லை. அப்படிப்பட்டவரை காசி ஆனந்தனுடன் சென்று கைக்குண்டு வீசியதாக குறிப்பிடுவது நம்பமுடியாமல் இருக்கிறது. அதேபோல் காசிஆனந்தன் பஸ்க்குகூட கல் எறியாதவர். அவரையும் கைக்குண்டு அதுவும் சைக்கிளில் சென்று எறிந்ததாக கூறுவதை எப்படி நம்புவது?

பாலுமகேந்திரா எப்போது எறிந்தார்? எங்கு எறிந்தார்? எந்த இயக்கத்தின் சார்பில் எறிந்தார? என்ற விபரங்களை அறிய ஆர்வமாக இருக்கிறோம் . எனவே சீமான் தயவு செய்து இந்த விபரங்களை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பாலு மகேந்திராவைப் பொறுத்தவரையில் நல்ல ஒளிப்பதிவாளர். நல்ல இயக்குனர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அதற்காக அவரை ஏதோ தமிழ் போராளி ரேஞ்சுக்கு கதை கட்ட வேண்டாம். அதற்குரிய தகுதி அவருக்கு இல்லை.

தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என்பவர் தலைமையில் இயங்கிய தமிழீழ இராணுவம் என்னும் இயக்கமே இலங்கையின் மிகப்பெரிய வங்கிக் கொள்ளையான காத்தான்குடி வங்கிக்கொள்ளையை செய்தது. அந்த வங்கிக்கொள்ளை பணத்திலேயே வீடு படம் தயாரிக்கப்பட்டது. இது பாலு மகேந்திராவுக்கும் தெரியும். ஆனால் அவர் எந்த சலுகையும் செய்யவில்லை. இந்த படம் அவருக்கு விருது வாங்கிக் கொடுத்தது. ஆனால் படம் தயாரித்தவர்களுக்கு இலாபம் கொடுக்கவில்லை. மேலும் இந்த படத்திற்காக கட்டிய வீட்டையும் பாலுமகேந்திராவே எடுத்துவிட்டார் என்று தம்பாபிள்ளை மகேஸ்வரனே வருத்தத்துடன் என்னிடம் கூறியிருக்கிறார்.

காசி ஆனந்தனும் பாலுமகேந்திராவும் கைக்குண்டு வீசிய போராளிகள் என்று சீமான் கூறியதன் மூலம் போராளிகளையும் போராட்டத்தையும் இதைவிட இனி ஒருவரால் கேவலப்படுத்த முடியாது.