Friday, July 31, 2015

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களே!

• வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களே! 
யாருடைய ம-- பிடுங்கப் போயிருந்தீர்கள்?
இதோ வறுமையின் கொடுமையில் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்ட குழந்தைகள் பாரீர். இதை உங்களால் தடுக்க முடிந்ததா? அல்லது இந்த கொடுமையை உலகின் கவனத்திற்காவது கொண்டு செல்ல முடிந்ததா?
மன்னாரில் பள்ளி மாணவி ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபோது மன்னார் ஆயர்கூட அதற்கு எதிராக குரல் கொடுக்கிறார். ஆனால் மன்னார் எம.பி எங்கு போயிருந்தார்?
புளியங்குளத்தில் பாட்டியுடன் வளர்ந்த மாணவி கூட்டு வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். அது வழக்கு கூட பதிவு செய்யாமல் பொலிசாரினால் மறைக்கப்பட்டபோது வன்னி எம்.பி எங்கு போயிருந்தார்?
நெடுங்கேணியில் ராணுவத்தால் தமிழ் மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டபோது அதற்கு எதிராக மக்கள் போராடினார்கள். ஆனால் முல்லைதீவு எம்.பி எங்கு போயிருந்தார்?
கிளிநொச்சியில் பரீட்சைக்கு பணம் கட்டுவதற்காக சிறுவன் ஒருவன் திருடியதாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டான். இதைக்கூட கவனிக்காமல் கிளிநொச்சி எம்.பி எங்கு போயிருந்தார்?
• சிறையில் இருப்பவர்களை விடுவிக்க முடியவில்லை
• காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை
• தமிழ் மாணவிகளை காப்பாற்ற முடியவில்லை.
• சிறுவர்களின் கல்விக்குகூட உதவ முடியவில்லை
• குழந்தைகள் பட்டினி சாவைக்கூட தடுக்க முடியவில்லை.
அப்புறம் என்ன ம-----டா எம்.பி பதவிக்கு போட்டி போடுகிறீர்கள்?

ஸ்டாலினால் அடிவாங்கிய இளைஞனுக்காக நியாயம் கேட்ட ஜெயா அம்மையார் ஸ்டாலினால் கொல்லப்பட்ட அகதி சிறுவனுக்காக நீதி கிடைக்க செய்வாரா?

 ஸ்டாலினால் அடிவாங்கிய இளைஞனுக்காக நியாயம் கேட்ட ஜெயா அம்மையார் ஸ்டாலினால் கொல்லப்பட்ட அகதி சிறுவனுக்காக நீதி கிடைக்க செய்வாரா?
• அடிவாங்கிய இளைஞன் ஸ்டாலின் அங்கிள் தன்னை அடிக்கவில்லை என்று கூறியபின்பும் ஸ்டாலினை ஜெயா அம்மையார் கண்டித்திருப்பது அகதி சிறுவனுக்கும் இதே பொல் நியாயம் கிடைக்க செய்வாரா என்ற கேள்வியை தோற்றுவித்தளளது.
பெறுனர்: செல்வி ஜெயலலிதா
முதலமைச்சர்
தமிழ்நாடு 
இந்தியா
மதிப்புக்குரிய முதலமைச்சர் ஜெயா அம்மையார் அவர்களுக்கு!
1983ம் ஆண்டளவில் தமிழ்நாட்டுக்கு அகதியாக வந்த ஈழத்து தமிழ் சிறுவன் ஒருவனை கலைஞர் கருணாநிதி அவர்கள் தத்தெடுத்து வளர்த்தார். அச் சிறுவனுக்கு மணி என்று பெயரும் சூட்டியிருந்தார்.
தற்போது அந்த சிறுவன் எங்கேயென்று தெரியவில்லை. சொத்தில் பங்கு கொடுக்க வேண்டிவரும் என்று எண்ணி அந்த சிறுவன் ஸ்டாலின் குடும்பத்தவர்களால் விரட்டப்பட்டதாக முன்னர் அறிந்தோம். ஆனால் அவ் அப்பாவி அகதி சிறுவன் விரட்டப்படவில்லை மாறாக கொல்லப்பட்டுவிட்டதாக தற்போது அறியவருகிறது.
ஸ்டாலினுடன் நீண்டகாலம் ஒன்றாக இருந்த பரிதி இளம்வருதி அவர்களும் தி.மு.க வை விட்டு வெளியேறிய சமயம் இந்த அகதி சிறுவன் எங்கே எனக் கேட்டிருந்தார். அவருடைய பேட்டி அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்திருந்தன. பரிதி அவர்கள் இப்போது உங்கள் கட்சியில் இருக்கின்றார்.
எனவே தயவு செய்து இந்த அப்பாவி அகதி சிறுவனுக்கு என்ன நடந்தது என்பதை விசாரித்து அறியத்தருமாறு ஈழத் தமிழர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தோழர் பாலன்
ஈழ தமிழ் அகதி
லண்டன்
03.07.2015
பி.கு- இப் பிரதி முறையே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி , டில்லி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி , மனித உரிமைக் கமிசன் தலைமை நீதிபதி அகியோருக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

சம்பந்தர் அய்யா அவர்களே!

 சம்பந்தர் அய்யா அவர்களே!
இந்திய அரசினால் பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க மாட்டீர்களா?
கிழக்கு மாகாணத்தில் 675 சதுரகிலோ மீட்டர் பரப்பு நிலம் இந்தியாவுக்கு 2006ல் வழங்கப்பட்டுள்ளது.
அதனால் சம்பூர் தமிழ் மக்கள் தங்கள் நிலங்களை இழந்துள்ளனர். இன்னும் அவர்கள் அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர்.
2012ல் சம்பூரில் அனல் மின்நிலையம் செயற்பட தொடங்கும் என இந்தியா அறிவித்தது. ஆனால் இன்னும் தொடங்கப்படவில்லை.
சம்பூரில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஒரு பகுதியை குறைந்த விலையில் இந்தியாவுக்கு வழங்க வேண்டும். பின்னர் இந்தியாவில் இருந்து அதிக விலையில் மின்சாரம் கேபிள் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் என (முட்டாள்தனமான) ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அதேவேளை சம்பூரில் ஒரு துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. சம்பூரில் இருந்து புல்மோட்டைக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு "காந்தி வீதி" என பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
புல்மோட்டையில் இருந்து இல்மனைட், ரூடைல் மொனசைட், சர்கோன் போன்ற எண்ணெய்யைவிட பெறுமதி மிக்க கனிம வளங்கள் இந்தியாவினால் கொள்ளையிடப்படுகிறது.
மன்னாரில் உள்ள 7 எண்ணெய் வயல்களும் இந்திய கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் எடுக்கப்படும் எண்ணெய் 10 வீதம் இலங்கைக்கும் மீதி 90 வீதம் இந்தியாவுக்கும் சொந்தம் என (அடிமாட்டு) ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
தமிழர் பகுதி மட்டுமல்ல சிங்களப் பகுதியான அம்பலாந்தோட்டையில் உள்ள கொடவாய என்ற கனிம வளம் நிறைந்த பிரதேசமும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஏன் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு உதவியது என்பது இப்போது புரிகிறது அல்லவா?
யுத்தத்தினால் அதிக லாபம் அடைந்தது இந்தியாதான் என்பது இப்போது உணர முடிகிறது அல்லவா!
ஆனால் இங்கு எமது கேள்வி என்னவெனில்,
• ஒரு பக்கம் சிங்கள குடியேற்றம் நடைபெறுகிறது. இன்னொரு பக்கம் இந்தியாவுக்கு நிலங்கள் வழங்கப்படுகிறது. ஈழத் தமிழன் எப்படி நிம்மதியாக வாழ முடியும்?
• சிங்கள குடியேற்றம் நடைபெறுவதை கண்டிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதைவிட அதிகமாக இந்தியாவுக்கு நிலம் வழங்குவதை கண்டிக்க தயங்குவது ஏன்?
• சிங்கள மீனவர்கள் முல்லைத்தீவில் வந்து மீன் பிடிப்பதற்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் தலைவர்கள் இந்தியா தமிழர் கனிம வளங்களை சுரண்டுவதற்கு எதிராக மௌனம் சாதிப்பது ஏன்?

இந்த அவலத்தை என்னவென்று அழைப்பது?

 இந்த அவலத்தை என்னவென்று அழைப்பது?
தமிழக மாணவர்கள் தமிழீழமே தீர்வு என்று தீர்மானம் போடுகின்றார்கள். ஆனால் ஜக்கிய இலங்கைக்கள் தீர்வு என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு கூறுகிறது.
முல்லைப்பெரியாறு அணைக்கு புலிகளால் ஆபத்து என்றதற்கு எதிராக தமிழகமே எதிர்ப்பு குரல் எழுப்புகின்றது. ஆனால் புலிகளின் எச்சங்களைக்கூட சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று சம்பந்தர் அய்யா கூறுகிறார்.
தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் புலிக்கொடி ஏந்தி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள். ஆனால் சம்பந்தர் அய்யா சிங்க கொடி ஏந்தி காட்டிக் கொடுக்கிறார்.
புலத்தில் உள்ளவர்கள் போர்க்குற்ற விசாரணை வேண்டி போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் சம்பந்தர் அய்யா போர்க்குற்றவாளிகளுடன் விருந்துண்டு கூடிக் குலாவுகின்றார்.
யுத்தத்தின் வெற்றிக்கு இந்தியாவின் உதவியே முக்கிய காரணம் என்று பசில் ராஜபக்ச கூறுகின்றார். ஆனால் தமிழ் மக்களை கொன்று குவிக்க உதவிய இந்தியாவுக்கு ஆதரவாக சம்பந்தர் அய்யா குரல் கொடுக்கின்றார்.
யுத்தம் முடிந்து 6 வருடங்களாகிவிட்டது. இன்னமும்
• கைதிகள் விடுவிக்கப்டவில்லை
• அகதிகள் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
• காணமல் போனோர் கண்டு பிடிக்கப்படவில்லை
• ராணுவத்தின் பாலியல் வல்லுறவுகள் நிறுத்தப்படவில்லை
இந்நிலையில் மீண்டும் தமக்கு வாக்களித்தால் 1 வருடத்தில்; தீர்வு பெற்று தருவோம் என எந்த முகத்துடன் சம்பந்தர் அய்யா கோருகிறார்?
1 வருடத்தில் தீர்வு பெற்று தரவில்லையாயின் தன் பதவியை இராஜினாமா செய்வேன் என எழுதி தர சம்பந்தர் அய்யா தயாரா?
எத்தனை தடவை தமிழ்தேசிய கூட்டமைக்கு வோட்டு போட்டும் 
அத்தனை தடவையும் தமிழ் மக்கள் கண்ட பயன் என்ன?

இது நடக்குமா?

 இது நடக்குமா?
(1)ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்று தருவொம் என சம்பந்தர் அய்யா கூறுகின்றார். அவ்வாறு பெற முடியாவிடின் ஒரு வருடம் முடிந்ததும் அனைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
(2)அனைத்து பேச்சுவார்த்தை விபரமும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சுமந்திரன் தன்னிச்சையாக இரகசியமாக அரசுடன் பேசுவதை தடை செய்ய வேண்டும்.
(3) தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கு முன்னர் ஆட்சியில் பங்கெடுக்க கூடாது. குறிப்பாக அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள கூடாது.
(4)கைதிகள் விடுதலை, மீள் குடியேற்றம், காணாமல் போனோர் பற்றிய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே அரசியல் தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைககு வர முடியும்; என்று முன் நிபந்தனை விதிக்க வேண்டும்.
(5)தாம் விரும்பியவர்களை எம்.பி களாக தெரிவு செய்யவும் விரும்பாத போது திரும்ப பெறவும் மக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படல் வேண்டும்.
(6)எம்.பி கள் குறைந்தது 300 நாட்களாவது தமது சொந்த தொகுதியில் இருக்க வேண்டும். அவர்களது குடும்பமும் அதே தொகுதியில் வசிக்க வேண்டும். அவர்களது சொத்து விபரம் மக்கள் முன் வைக்கப்படல் வேண்டும்.
(7)எம்.பி கள் தமது சம்பளத்தை கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். கட்சியே அவர்களது தேவைக்குரிய பணத்தை வழங்க வேண்டும். வாகன பர்மிட் மூலம் வரும் ஒரு கோடி ரூபா பணத்தையும் தொகுதி மக்களுக்கே செலவு செய்ய வேண்டும்.
(8)தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ, புளட், ஈபிஆர்எல்எவ் இயக்கங்கள் யாவும் கலைக்கப்படல் வேண்டும். அவ் அமைப்புகளின் சொத்துகள் யாவும் மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
(9)தமிழ்தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படல் வேண்டும். அதில் அனைத்து தமிழ் கட்சிகளையும் உள்; வாங்க முயற்சி செய்ய வேண்டும்.
(10)தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாவட்ட, தொகுதி, கிளைப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படல் வேண்டும். ஒருவருக்கு ஒரு பதவி என்ற ரீதியில் கட்சி பொறுப்பு வகிப்பவர்களுக்கு பாராளுமனற, மாகாண சபை பதவிகள் வழங்கக்கூடாது.
தமிழ்மக்களின் நலனுக்காகவே தாம் கட்சி நடத்தவதாக கூறும் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கண்ட மக்கள் நலன் சாhந்த விடயங்களை நிறைவேற்ற முன்வருமா?
தமிழ் மக்களே!
வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் இதனை கேளுங்கள்.
இது நடக்க முடியாத விடயங்கள் அல்ல.
மக்கள் நினைத்தால் இவை யாவும் நடக்கக்கூடியவையே!

என்னது தந்தை செல்வா இறந்துவிட்டாரா?

என்னது தந்தை செல்வா இறந்துவிட்டாரா?
யாழ் மருத்துவமனையில் கடந்த 45 வருடங்களாக கோமாவில் இருந்த நோயாளி நேற்றைய தினம் நினைவு திரும்பினார்.
மருத்துவமனை வாசல் எங்கும் காணப்பட்ட தமிழரசுக்கட்சி போஸ்டர்களை கண்டதும் "தந்தை செல்வா நலமாக இருக்கிறாரா? " என வினாவினர்.
தந்தை செல்வா இறந்துவிட்டார் என அருகில் இருந்த டாக்டர் துயரத்துடன் கூறினார்.
"என்னது தந்தை செல்வா இறந்துவிட்டாரா? " என ஆச்சரியத்துடன் கேட்ட அவ் நோயாளி "அப்ப இப்போது யார் தமிழ் மக்களுக்கு வழிகாட்டுவது? " என அக்கறையுடன் வினாவினார்.
"நாங்கள் தமிழர்விடுதலைக் கூட்டணி அமைத்து தமிழீழம் கேட்டோம். பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு அமைத்து போராடினோம். இப்ப மீண்டும் தமிழரசுக்கட்சியில் சமஸ்டி கேட்கிறோம். விரைவில் எமது தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தவுள்ளோம்" என்று பதில் அளித்தார் அந்த டாக்டர்.
"என்னது மீண்டும் முதலில் இருந்தா? அது சரி, மாவை சேனாதிராசா என்பவர் யாh? "; என்று நோயாளி அப்பாவியாக கேட்டார்.
இதைக் கேட்டதும் டாக்டர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இப்பொது டாக்டர் கோமாவில் இருப்பதாக உதயன் பெப்பர் செய்தி போட்டுள்ளது.
யாவும் கற்பனை அல்ல.
இது சிறுகதையோ அல்லது சிரிப்பு கதையோ அல்ல. 
கொஞசம் சிந்திக்கதூண்டும் முயற்சி. அவ்வளவே!

மா.செ.தமிழ்மணி அய்யாவுக்கு அஞ்சலிகள்

மா.செ.தமிழ்மணி அய்யாவுக்கு அஞ்சலிகள்
ஈழத் தமிழர்கள் மீது அன்பும் பாசமும் கொண்ட , தன் வாழ் நாள் முழுவதும் தமிழுக்காக வாழ்ந்த தமிழ்மணி அய்யா அவர்களுக்கு எமது அஞ்சலிகள்.
அவரை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். ஏனெனில் அவரது மகன்களான தமிழ் முகிலன் தமிழ்இனியன் ஆகியோர் எனது தோழர்களாக இருந்தனர் ஆனால் அவரை நேரில் காணும் வாய்ப்பு ஒரேயொரு முறைதான் எனக்கு கிடைத்தது. அது என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.
தன் பிள்ளைகள் தமிழ்முகிலன் , தமிழ் இனியன் ஆகியோர் மீதான கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கின் தீர்ப்பு நாளின் போது திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்திருந்தார். அன்று என்னையும் அவ் வழக்கிற்காக பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
அவருடைய மகன் தமிழ் முகிலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்ட்டது. நான் நிரபராதி என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தும் பொலிசார் என்னை விடுதலை செய்யாது மீண்டும் காவலுடன் சிறப்புமுகாம் கொண்டு சென்றனர்.
அப்பொது எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக மனம் வருந்தியதுடன் நான் எப்படியாவது விரைவில் விடுதலையாகி விட வேண்டும் என தமிழ்மணி அய்யா என் கரம்பற்றிக் கேட்டதும் எனக்கு ஆறுதல் கூறியதும் இப்போதும் என் நினைவில் இருக்கிறது.
தனது மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அந்த துயரமான நிலையிலும்கூடதனது மகன் அருகில் நின்று ஆறுதல் கூறாமல் எனது அருகில் வந்து எனது விடுதலைக்காக அவர் குரல் கொடுத்தது ஈழத் தமிழர்கள் மீது அவர் கொண்ட அன்புக்கு சான்றாகும்.
அவர் ஈழத் தமிழர்கள் மீது கொண்ட அன்பும் பாசமும் அளப்பரியது. அவர் எமக்கு அளித்த ஆதரவு மறக்க முடியாதது.
• ஈழத் தமிழர்கள் சார்பில் அவருக்கு எமது அஞ்சலிகளை செலுத்துகின்றோம்.
• தோழர்கள் முகிலன் இனியன் மற்றும் அவரது குடும்பத்தவர்கள் துயரில் பங்கு கொள்கிறோம்.

இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?

 இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?
அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியபோது 
அவர்களை போராளிகள் என்றார்கள்
அவர்கள் மண்ணுக்காக மரணித்தபோது 
அவர்களை மாவீரர்கள்; என்றார்கள்
அவர்கள் துப்பாக்கியை மௌனித்தபோது 
அவர்களை முன்னாள் போராளிகள் என்றார்கள்
அவர்கள் தேர்தலில் தமக்கும் சீட் கேட்டதும் 
அவர்களை அரசின் ஏஜென்டுகள் என்று
சிறீதரன் எம்.பி சொல்லுகிறார்கள்
இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?
தமக்கு எம்.பி பதவி தேவை என்றபோது 
பிரபாகரன் தேசிய தலைவர் என்றார்கள்
புலிகளே ஏக பிரதிநிதி என்றும் கூறினார்கள்
தற்போது புலிகள் இல்லை என்றவுடன்
பிரபாகரன் பயங்கரவாதி என்கிறார்கள்
புலிகளின் எச்சங்கள்கூட தேவையில்லை என்று
தலைவர் சம்பந்தர் அய்யா சொல்கிறார்கள்
இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?
தமிழர்கள் வோட்டால் ஜனாதிபதியான
மைத்திரியின் 100 நாள் ஆட்சியில்
கைதிகள் விடுதலை செய்யும்படி கோரவில்லை
மீள் குடியேற்றம் செய்யும்படி கேட்கவில்லை
காணாமல் போனோரையும் கண்டுபிடிக்கவில்லை
ஆனால் ,
சுமந்திரன் தனக்கு சொகுசு வாகனம் வாங்கியுள்ளார்
சுரேஸ் பிரேமச்சந்திரன் பணம் வாங்கியுள்ளார்
இதனை முதல்வர் விக்கி பகிரங்கமாக கூறியுள்ளார்.
ஆனந்தி மீது நடவடிக்கை எடுத்த மாவையார்
முதல்வர் விக்கி மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?

தேர்தல் திருவிழாவில் குரு அமிர்தலிங்கத்தை மறந்த சிஷ்யன் சம்பந்தர் அய்யா!

 தேர்தல் திருவிழாவில் குரு அமிர்தலிங்கத்தை மறந்த சிஷ்யன் சம்பந்தர் அய்யா!
அமிர்தலிங்கத்தால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர் சம்பந்தர் அய்யா. அமிர்தலிங்கத்தால் எம்.பி யாக்கப்பட்டவர் சம்பந்தர் அய்யா அந்த அம்ர்தலிங்கத்தையே இந்த தேர்தல் திருவிழாவில் மறந்துவிட்டார் சம்பந்தர் அய்யா!
கடந்தவருடம் அமிர்தலிங்கத்தின் நினைவு தினத்தின்போது "அமிர்தலிங்கத்தின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று அறிக்கை விட்ட சம்பந்தர் அய்யா, இந்த வருடம் (13.07.15) எந்த அறிக்கையும் விடாத மர்மம்தான் என்னவோ?
அமிர்தலிங்கம் மரணம் தமிழ்மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பா?
(1) அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்திருக்கமாட்டார். ஏனெனில் இந்திய ராணுவம் படுகொலைகள் செய்தபோதும் அவர் அதனை கண்டிக்காது ஆதரவு தெரிவித்தவர்தானே!
(2)அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் அவர் முன்வைத்த தமிழீழத்தை அவரே கைவிட்டிருப்பார். எனெனில் அவர் தமிழீழத்தை கைவிட்டு மாகாண அரசை மட்டுமல்ல மாவட்ட ஆட்சியைக்கூட கையேற்க முனைந்தவர்தானே!
(3)அமிர்தலிங்கம் உயிரோடு இருந்திருந்தால் இன்றும் அவர் தேர்தலில் போட்டியிட்டிருப்பார். அவரை மக்கள் நிராகரித்திருப்பார்கள். எனெனில் அவர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்னர் மக்களால் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவர்தானே!
(4)அமிர்தலிங்கம் உயிரோடு இருந்தபோது இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்க வேண்டாம் என்று இந்திராகாந்தியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரே பின்னர் அவரது மகன் பகிரதன் ஆயுத இயக்கம் ஆரம்பித்தபோது அதனை ஆதரித்தார்.
(5)அமிர்தலிங்கம் உயிரோடு இருந்தபோது தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராடும்படி தூண்டினார். ஆனால் தனது மகன் பகிரதனுக்கு எம்.ஜி.ஆர் மூலம் மதுரை மருத்துவ பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார்.
(6)தமிழ் மக்களின் ஒற்றுமை என தமிழர்விடுதலைக்கூட்டணி அமைத்த அமிர்தலிங்கம் அதற்கு மாறாக மட்டக்களப்பில் ராஜதுரைக்கு எதிராக காசிஆனந்தனை தேர்தலில் போட்டியிடவைத்தார்.
(7) அன்று ராஜதுரைக்கு தலைமைப்பதவி வழங்கியிருந்தால் இன்று வடக்கும் கிழக்கும் ஒன்றாக இணைந்திருக்கும். தனது சுயநலத்திற்காக பிரிவினையை விதைத்தவர் அமிர்தலிஙகமே!
எனவே அமிர்தலிங்கம் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு அல்ல.
இங்கு எமக்கு எழும் சந்தேகம் என்னவெனில் அமிர்தலிங்கத்தை சுட்டுக்கொன்றவர்கள் ஏன் சம்பந்தர் அய்யாவை விட்டு வைத்தார்கள்?

வரலாறு உன்னை விடுதலை செய்யும் !

வரலாறு உன்னை விடுதலை செய்யும் !
ஓ! பேரறிவாளனே!
எங்களை மன்னித்துவிடு. உனக்காக எங்களால் பரிதாபப்படத்தான் முடிகிறதேயொழிய இன்னும் உன்னை விடுதலை செய்ய முடியாதவர்களாகவே இருக்கிறோம்.
நீ எமக்காக இரக்கப்பட்டாய். அதற்காக உன் இளமை வாழ்வையே தொலைத்தவிட்டு நிற்கிறாய்.
நீ விரும்பியிருந்தால் மற்றவர்போல் நல்ல சம்பளத்துடன் ஒரு கம்பனியில் வேலை செய்திருக்கலாம்.
நீ விரும்பியிருந்தால் மற்றவாகள் போல் ரஜனி படத்தை விசில் அடித்து ரசித்து வாழ்க்கையை ஓட்டியிருக்கலாம்.
ஆனால் நீயோ எமக்காக இரக்கப்பட்டாய். எமக்கு உதவி செய்ய உன் வாழ்க்கையை அர்ப்பணித்தாய்.
உனக்காக குரல் கொடுக்க வேண்டிய எமது தலைவர்களோ தக்கு பதவி வேண்டி தேர்தல் போட்டியில் பிசியாக இருக்கிறார்கள். உனக்காக குரல் கொடுக்க அவர்களுக்கு தற்போது நேரம் இல்லை.
தமது பிள்ளைகளை சொகுசாக வெளிநாட்டில் வாழவைத்துவிட்டு ஊரான் பிள்ளையை போராட வைத்த இந்த தலைவர்கள் உனக்காக கவலைப்படத்தான் போகிறார்களா என்ன?
66 கொடி ஊழல் செய்த ஜெயா அம்மையாருக்கு நாலு வருடம் தண்டனை வழங்கப்ட்டபோதும் 22 நாளில் அவருக்கு ஜாமீன் விடுதலை வழங்கிய உச்ச நீதிமன்றம் 22 வருடம் கழிந்த பின்னரும் உனக்கு நீதி வழங்க மறுக்கிறது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்.
இந்திய நீதிமன்றம் உனக்குரிய நீதியை வழங்க மறுக்கலாம்.
ஆனால் மக்கள் உனக்குரிய நீதியை நிச்சயம் வழங்குவார்கள்.
ஆம். வரலாறு உன்னை விடுதலை செய்யும்.
இப்படிக்கு 
உனக்காக பரிதாப்படும்
ஒரு அப்பாவி ஈழத்து தமிழன்.

சம்பந்தர் அய்யா மேய்ப்பனாக இருக்க ஆசைப்படலாம்.

 சம்பந்தர் அய்யா மேய்ப்பனாக இருக்க ஆசைப்படலாம். ஆனால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் செம்மறி ஆடுகளாக இருக்க மாட்டார்கள்!
சம்பந்தர் அய்யாவின் மனட்சாட்சிக்கு (அப்படி ஒன்று இருந்தால்) சமர்ப்பணம்!
பிரதேச சபை தேர்தல் நடக்கும்போதும், மாகாணசபை தேர்தல் நடக்கும்பொதும், பாராளுமன்ற தேர்தல் நடக்கும்போதும், ஏன் ஜனாதிபதி தேர்தல் நடக்கும்போதும் நீங்கள் கூறும் ஓரே விடயம் "தமிழ் மக்கள் ஒற்றுமையாக கூட்டமைக்கு வாக்கு போடவேண்டும். நாங்கள் உங்களுக்கு தீர்வு பெற்று தருவோம்" என்பதே.
நீங்கள் கேட்டுக்கொண்டபடி தமிழ் மக்களும் ஒற்றுமையாக உங்களுக்கு வாக்களித்து வந்துள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு நீங்கள் இதுவரை பெற்றுக்கொடுத்தது என்ன?
ஒவ்வொரு தேர்தலுக்கும் " இந்திய பிரதமர் தொலைபேசியில் பேசினார். அமெரிக்க ஜனாபதி பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே தமிழ் மக்களே தீர்வு பெறுவதற்கு கூட்டமைப்பிற்கு வாக்கு போடுங்கள்" என்று ரீல் விட்டு வருகிறீர்கள்.
பூமி சுற்றுகிறதோ இல்லையோ ஆனால் தேர்தலில் வென்ற பின்பு நீங்களும் உங்கள் கட்சி எம்.பி களும் உலகைச் சுற்றுகிறீர்களேயொழிய தொகுதிப் பக்கம் சுற்றுவதில்லை.
தேர்தல் வந்தால்தான் தொகுதிப் பக்கம் வருகிறீர்கள். தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் வயதான பெண்களையும் கட்டிப் பிடிக்கிறீர்கள். நடிப்பில் நீங்கள் எம்.ஜி ஆரையும் மிஞ்சிவிட்டீர்கள் போங்கள்.
10 வருடமாக அகதிகளாக இருக்கும் சம்பூர் மக்களை ஒருமுறைகூட சென்று பாhக்கவில்லை. ஆனால் இப்போது நீதிமன்ற தீர்ப்பை உங்கள் வெற்றி என்று உரிமை கொண்டாடுகிறீர்கள். எப்படி அய்யா கொஞ்சம்கூட கூச்சமின்றி உங்களால் இப்படி நடந்து கொள்ள முடிகிறது?
இதோ இந்த குழந்தையை கொஞ்சம் பாருங்கள்!
இந்த குழந்தை தமிழ் இனத்தில் பிறந்ததை தவிர வேறு என்ன பாவம் செய்தது?
இந்த குழந்தைக்கு நடந்த கொடுமைக்கு என்ன நியாயம் கூறப் போகிறீர்கள்?
ஓ! கூட்டமைப்பு நியாயன்மாரே!
உரத்து கேட்கிறோம். உங்கள் காது என்ன செவிடா?
நாங்கள் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா?
நாங்கள் கேட்பதற்கு யாருமற்ற பரதேசிகளா?

விஜயகலாவுக்கு அளிக்கும் வாக்கு,

 தேர்தலில் யாருக்கு வாக்கு போட வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கலாம். ஆனால் யாருக்கு போடக்கூடாது என்பதில் தமிழ் மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டும்.
தமிழ்மக்கள் ஜ..தே.க மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றுக்கு ஒருபோதும் வாக்கு போடக்கூடாது.
மாறி மாறி ஆட்சி புரிந்த இவ்விரு கட்சிகளும் தமிழ் மக்களுக்கு எந்த தீர்வையும் வழங்காது தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வந்துள்ளன.
யாழ் மாவட்டத்தில் இம்முறை ஜ.தே.க கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கக் கூடாது. ஆம், தமிழ் மக்கள் ஜ.தே.க சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு வாக்கு போடக்கூடாது.
விஜயகலாவுக்கு அளிக்கும் வாக்கு,
(1)ஜ.தே.க யாழ் நூலகத்தை எரித்தமையை சரி என்று ஏற்றுக் கொள்வதற்கு ஒப்பாகும்
(2)ஜ.தே.க 1983ல் ஏற்படுத்திய இனக் கலவரத்தை சரி என்று ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும்.
(3)தமிழ் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தமை சரி என்று பொருள் ஆகும்
(4) சிறையில் 53 தமிழர்களை கொன்றமை சரி என்று பொருள் ஆகும்.
(5) ஜ.தே.க மேற்கொண்டு வரும் தமிழ் இன அழிப்பை ஏற்றுக்கொள்வதற்கு ஒப்பாகும்.
கடந்த 100 நாள் ஆட்சியில்,
• கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை
• காணாமல் போனோர் பிரச்சனை தீhக்கப்படவில்லை
• அகதிகள் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை
இந் நிலையில் எந்த முகத்துடன் ஜ.தே. க சார்பில் விஜயகலா மகேஸ்வரன் தமிழ்மக்களிடம் வாக்கு கேட்கிறார்?
கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கவும,; சம்பாதித்த பணத்தை கட்டிக் காக்கவுமே விஜயகலா மகேஜ்வரன் போட்டீ போடுகிறார். தமிழ் இனத்திற்கு துரோகம் இழைக்கிறார்.
எனவே தமிழ் மக்கள் இம் முறை விஜயகலா மகேஸ்வரனுக்கும் அவரது ஜ.தே. க கட்சிக்கும் சரியான பாடம் புகட்ட வேண்டும்.

சம்பந்தர் அய்யாவின் சந்தர்ப்பவாதம்!

 சம்பந்தர் அய்யாவின் சந்தர்ப்பவாதம்!
செய்தி- ஒரு வருடத்திற்குள் தீர்வு பெறப்படும்- சம்பந்தர் அய்யா வாக்குறுதி.
தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வு பெறப்படும் என சம்பந்தர் அய்யா கூறியுள்ளார்.
தேர்தல் காலங்களில் மட்டுமே தொகுதிக்கு விஜயம் செய்யும் சம்பந்தர் அய்யா இம் முறையும் தமிழ் மக்களை ஒருமித்து தமக்கு வாக்களிக்குமாறு கேட்டுள்ளார்.
வழக்கம்போல் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறுவோம் என இம்முறையும் கூறியிருக்கும் சம்பந்தர் அய்யா, ஆனால் இந்தமுறை ஒரு வருடத்திற்குள் பெறப்படும் என கால எல்லையுடன் உறுதியளித்துள்ளார்.
இங்கு நமது கேள்வி என்னவெனில்,
• கடந்த தேர்தல்களிலும் இதையே கூறி வென்றீர்கள். ஆனால் ஏன் உங்களால் தீர்வு பெறப்படவில்லை?
• இதுவரை எந்த தீர்வையும் பெற முடியாத உங்களால் இம் முறை எப்படி பெறுவீர்கள் என்பதை மக்களுக்கு தெளிவாக கூறமுடியுமா?
• குறிப்பிட்டபடி ஒரு வருடத்திற்குள் தீர்வை பெற முடியாது போனால் உங்கள் பதவிகளை இராஜினாமா செய்வீர்களா?
சம்பந்தர் அய்யா அவர்களே!
புலிகள் பயங்கரவாதிகள் என்கிறீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்கிறீர்கள். அப்படியென்றால் அவர்கள் ஏற்படுத்திய தமிழ்தேசிய கூட்டமைப்பை எப்படி பயன்படுத்துகிறீர்கள்?
மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. மக்கள் உங்களை நன்கு இனம் கண்டு கொண்டுள்ளார்கள்.
உங்களுக்கு வாக்களிபதால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அதுபோல் உங்களுக்கு வாக்களிக்காது போவதால் எந்த நட்டமும் தமிழ் மக்களுக்கு மேலதிகமாக எற்படப்போவதில்லை.
இந்த உண்மையை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துவிட்டார்கள் என்பதை தேர்தல் முடிவு வெளிவரும்போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

சோ அய்யர்!

 சோ அய்யர்!
வாழ்வின் இந்த இறுதிக் கணங்களிலாவது தனது துரோகத்தை உணர்வாரா?
கர்நாடாவில் இருந்து கொண்டு கன்னடர்களுக்கு எதிராக எழுத முடியாது.
கேரளாவில் இருந்துகொண்டு மலையாளிகளுக்கு எதிராக எழுத முடியாது.
ஆனால் தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தமிழருக்கு எதிராக எழுதி வருபவர் சோ அய்யர்.
மகிந்த ராஜபக்சவுடன் கூட்டு வைத்துக்கொண்டு ஈழத் தமிழின விடுதலைக்கு எதிராக செயற்படுபவர் சோ அய்யர்.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டபோது அதற்காக முழு உலகமே இரங்கிய போது கொஞ்சம்கூட இரக்கமின்றி மக்களை கொன்றது சரியே என்று கூறியவர் இந்த சோ அய்யர்.
சோ அய்யரும் கலைஞர் கருணாநிதியும் நல்ல நண்பர்கள். இவர்கள் இருவரும் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் கூட. ஈழத் தமிழர்களை அழிக்க துணை போனவர்கள்.
தனது வாழ்வின் இறுதிக்காலங்களில் இருக்கும் சோ அய்யர் தனது துரோகங்களை உணர்ந்து கொள்வாரா? தமிழ் மக்களிடம் தனது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பாரா?
எதிரியாக இருந்தாலும் நலமாக இருக்கிறாயா? என்று கேட்பது தமிழர் மரபு. ஆனால் சோ அய்யரின் துரோகம் அவர் இன்னும் சாகவில்லையா? என்றே கேட்க தூண்டுகிறது.
என்ன செய்வது? இவர் இழைத்த துரோகம் மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை.

தேர்தல் பாதை மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?

தேர்தல் பாதை மூலம் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
ஒரு வருடத்திற்குள் தமிழ்களுக்கு தீர்வு என்கிறார் சம்பந்தர் அய்யா.
மாற்றத்திற்காக தமக்கு வாக்களிக்குமாறு கோருகின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
.
அதிக ஆசனங்கள் தந்தால் அரசுடன் பேரம் பேசுவோம் என்கிறார் முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா.
ஆனால் இவர்கள் எல்லோராலும் இத்தனை வருடமும் எந்த தீர்வும் பெற முடியவில்லை என்பது மட்டுமல்ல இனியும் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாது என்பதே உண்மை.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இன மக்கள் பாராளுமன்ற பாதை மூலம் ஒருபோதும் தீர்வு பெற்றுவிட முடியாது.;
கம்யுனிஸ்ட் கட்சி தலைவா காலம் சென்ற தோழர் சண்முகதாசன் அவர்கள் தேர்தல் பாதை குறித்து பின்வருமாறு கூறுகிறார்.
“இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே செயற்படும். அடக்குமுறையான முதலாளித்துவ வர்க்க அரசு இயந்திரத்தை வன்முறை போராட்டத்தால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது”
பாராளுமன்ற பாதை மூலம் எந்த தீர்வையும் பெற்றுவிட முடியாது. இதுவே வரiலாறு எமக்கு கற்று தரும் பாடமாகும்.
தேர்தல் பாதையை நிராகரிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

அடக்குமுறையினால் அழித்தாலும் ஆக்கிரமிப்பை முறியடிப்போம்!

 அடக்குமுறையினால் அழித்தாலும்
ஆக்கிரமிப்பை முறியடிப்போம்!
தோழர் அழகனை நினைவில் கொள்வோம்
புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுப்போம் !!
மனித இனம் உன்னதமான ஒரு வாழ்க்கையை, பரிபூரண விடுதலையை நோக்கி முன்னேறும் இக் காலகட்டத்தில் மிருகத்தனமான- மிகக் கேவலமான முறையில் நடைபெற்ற நிகழ்வுகளில் 1983ம் ஆண்டு யூலை மாதம் வெலிக்கடை சிறையில் நடைபெற்ற படுகொலைகளும் ஒன்றாகும்.
இக் கொடூரமான வெறி கொண்ட தாக்குதலில் பலியான கொள்கை மறவர்களில் ஒருவர் தோழர் அழகன் என்று அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை சந்திரகுமார்.
தோழர் அழகன் பருத்தித்துறையில் புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். காட்லிக்கல்லூரியில் கல்வி கற்றவர். 1979ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் தன்னை முழு நேரமாக இணைத்துக்கொண்டவர்.
புலிகள் இயக்கம் உடைந்து புதிய பாதை ( புளட்) என்ற அணி உருவாகிய போது தோழர் அழகன் அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அவ்வணியும் பழைய பாதையில் போவதைக் கண்டு அதிலிருந்து விலகி "தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை" என்னும் புரட்சிகர இயக்கத்தை உருவாக்கினார்.
தோழர் அழகன் மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர். அவர் இந்திய புரட்சிகர சக்திகளுடன் ஜக்கியத்திற்கு உழைத்தார்.
அதன் நிமித்தம் இந்தியா சென்று திரும்பியபோது கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வெலிக்கடை சிறையில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
தோழர் அழகன் இறக்கும் கணம் வரை உறுதியாகவே இருந்துள்ளார். தமிழின விடுதலைக்காக அவர் சிந்திய ரத்தம் ஒருபோதும் வீணாகாது.
தோழர் அழகன் காட்டிய பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்.
அதுவே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

விஷால் அவர்களே!

விஷால் அவர்களே!
நாய்களுக்காக நீங்கள் வீதியில் இறங்கி போராடுவது கண்டு உங்கள் கருணை உணர்வு மிக்க நடிப்பு எமக்கு மெய் சிலிர்க்க வைக்கிறது.
அண்மையில் ஆந்திராவில் 18 தமிழர்கள் கொல்லப்பட்டபோது நீங்கள் ஏன் கருணை நடிப்பு காட்டவில்லை? அந்த தமிழர்கள் நாய்களை விடக் கேவலமானவர்களா? என்று நாம் கேட்கப் போவதில்லை.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்களே. அவர்களுக்காக நீங்கள் ஏன் கவலை நடிப்பு காட்டவில்லை? அவர்களும் நாய்களை விடக் கேவலமானவர்களா? என்று நாம் கேட்கப் போவதில்லை.
நாய்க்காக , மாட்டுக்காக எல்லாம் தாராளமாக நீங்கள் நன்றாக போராடுங்கள். ஆனால் மனிதர்களுக்காக எப்போது போராடப் போகிறீர்கள்? என்றும் நாம் கேட்கப் போவதில்லை.
ஆனால் உங்களிடம் ஒன்றேயொன்றுதான் நாம் தாழ்மையாக கேட்க விரும்புகிறோம். அது என்னவெனில்,
"ஈழத் தமிழனுக்கு தமிழீழம் வாங்கிக் கொடுக்காமல் ஓயமாட்டேன் என்று மட்டும் தயவு செய்து அறிக்கை விட்டுவிடாதீர்கள்".
ஏனெனில் இந்த நடிப்பை தாங்கும் சக்தி எமக்கு இல்லை. எம்மை விட்டுவிடுங்கள்.
இப்படிக்கு
அப்பாவி ஈழத்தமிழர்கள்.

சிவாஜி கணேசனுக்கு எதற்கு வீர வணக்கம்?

• சிவாஜி கணேசனுக்கு எதற்கு வீர வணக்கம்?
அன்று பாலுமகேந்திராவுக்கு வீர வணக்கம் செலுத்தியவர்கள் இன்று சிவாஜி கணேசனுக்கு வீர வணக்கம் செலுத்துகிறார்கள்.
பாலுமகேந்திராவுக்கு எதற்கு வீரவணக்கம?; என்று கேட்டபோது "அவர் காசி ஆனந்தன் சயிக்கிளில் டபுள் சென்று பாடசாலைக்கு வெடி குண்டு வீசியவர்" என்றார்கள்.
இப்போது சிவாஜி கணேசனுக்கு எதற்கு வீரவணக்கம்? என்று கேட்டால் என்ன குண்டை வீசப் போகிறார்களோ தெரியவில்லை.
1983ம் ஆண்டு இனக்கலவரத்தை அடுத்து தமிழ்நாட்டில் போராளிகளுக்கு மாபெரும் அனுதாபமும் ஆதரவும் எழுந்தது. தமிழக மக்கள் தங்களால் இயன்ற ஆதரவையும் உதவியையும் வழங்கினார்கள்.
அப்போது சிவாஜி கணேசனிடம் சென்று நிதி உதவி செய்யுமாறு கேட்ட "டெலோ" இயக்க போராளிகளிடம் தனக்கே சாப்பாட்டுக்கு காசில்லாமல் கஸ்டப்படுவதாகவும் அதனால் ஒரு சதமும் தன்னால் தரமுடியாது என்று சொல்லி அனுப்பியவர் இந்த சிவாஜி கணேசன்.
டெலோ இயக்க போராளிகளுக்கு மட்டுமல்ல எந்த போராளிகள் இயக்கத்திற்குமே ஒரு உதவியும் செய்யாதவர் இந்த சிவாஜி கணேசன்.
ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழக தமிழர்களுக்குகூட எந்த உதவியும் செய்யாத ஒரு நடிகருக்கு எதற்காக தமிழர்கள் பெயரால் வீரவணக்கம் செலுத்த வேண்டும்?
சிவாஜி கணேசன் சிறந்த நடிகர் எனபதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் தமிழருக்கான சிறந்த தலைவர் அல்ல. அதனால்தான் அவர் ஒரு தி.மு.க இளைஞனிடம் தேர்தலில் தோல்வி கண்டார்.
மக்களால் நிராகரிக்கப்பட்ட, மக்களால் தோற்கடிக்கப்பட்ட சிவாஜி கணேசனுக்கு மக்கள் பெயரால் எதற்கு சீமான் வீர வணக்கம் செலுத்துகிறார்?
சிவாஜி கணேசன் ஒரு நடிகர் மட்டுமே. அவருக்கு எதற்காக மக்கள் பணத்தில் சிலை வைக்க வேண்டும்? அவருடைய குடும்பத்தவர்கள் கோடிக் கணக்கான பணம் படைத்தவர்கள். தேவையானால் அவர்கள் தங்கள் பணத்தில் சிலை வைக்கலாம்தானே?
சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என சிலர் நடிகர்கள்; கோரிக்கை வைக்கின்றனர். அவர்கள் விரும்பினால் தங்கள் பணத்தில்; மணி மண்டபம் கட்டலாம். அதைவிடுத்து மக்கள பணத்தில் மணி மண்டபம் கட்ட வேண்டும் என எதற்காக கோரிக்கை வைக்க வேண்டும்?
யார், யாருக்கெல்லாம் சிலை வைக்கிறார்கள். மணி மண்டபம் கட்டுகிறார்கள். ஆனால் தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்த தமிழர் தோழர் தமிழரசனுக்கு இவர்கள் ஏன் சிலை வைக்கவோ அல்லது மணி மண்டபம் கட்டவோ கோருவதில்லை?
அப்படியென்றால் தமிழ் நாட்டில் தமிழனுக்காக போராடி உயிர் நீத்தவர்களுக்கு இடம் இல்லையா? அவர்கள் தியாகம் நினைவுகூரப்படத் தேவையில்லையா?

அப்துல் கலாம் மரணம்!

• அப்துல் கலாம் மரணம்!
மன்னிக்கவும். என்னால் அனுதாபம் கொள்ள முடியவில்லை.
அப்துல் கலாமிற்கு சிலர் வீர வணக்கம் செலுத்துகின்றனர். அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அப்துல் கலாமிற்கு சிலர் அஞ்சலி செலுத்துகின்றனர். என் இனத்தை அழித்த சிங்கள தலைவர்களுடன் அவர் கைகுலுக்கியதை மறந்து அஞ்சலி செலுத்தும் அளவிற்கு எனக்கு பெருந்தன்மை இல்லை.
அப்துல் கலாம் தமிழர் என்பதால் சிலர் அனுதாபம் கொள்கின்றனர். அவர் தனது பதவிக்காலத்தில் தமிழர்களுக்கு என எதுவும் செய்யவில்லை. எனவே அதை எல்லாம் மறந்து என்னால் அனுதாபம் கொள்ள முடியவில்லை.
அப்துல் கலாம் என்ற அறிவியல் மேதையை இழந்து விட்டோம் என சிலர் துடிக்கின்றனர். ஸ.டீபன் கிங் என்ற அறிவியல் மேதை லண்டனில் இருக்கிறார். அவர் தனது அறிவின் மூலம் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பரப்புரை செய்வது போல் அப்துல் கலாம் ஒருபோதும் தனது அறிவினை கடவுள் நம்பிக்கைக்கு எதிராக பரப்புரை செய்ததில்லை. எனவே அவரது இழப்பிற்காக என்னால் துடிக்க முடியவில்லை.
அப்துல் கலாம் ஒரு முஸ்லிம். ஆனால் அவர் கண் முன்னே குஜராத்தில,பம்பாயில் என பல இடங்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது இவர் மௌனமாகவே இருந்தார். அதனால்தான் இந்துமத வெறியர்களால் அவர் ஜனாதிபதியாக்கப்பட்டார்.
அப்துல் கலாமை பதவிகள் தேடி வந்தன என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அவர் பதவியை தக்க வைக்க சங்கராச்சாரியாரை தேடிச் சென்று வணங்கியதை இவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்என்று புரியவில்லை? ஒரு அறிவியல் மேதை எதற்காக கொலைகார சங்கராச்சாரியாரை தேடிச் சென்று வணங்க வேண்டும்?
அப்துல் கலாம் மனிதாபிமானம் மிக்கவர் என்கிறார்கள். அவரது இராமேஸ்வரம் மீனவர்கள் தமது குறைகளை தெரிவிக்க டில்லி சென்ற போது அவர்களை சந்திக்க மறுத்தவர். கூடங்குளம் மக்களை சந்திக்க மறுத்தது மட்டுமல்ல அந்த அணு உலை பாதுகாப்பானது என பொய் அறிக்கை கொடுத்தவர். இதுவா சிறந்த மனிதாபிமானம்?
சதீஸ்கரில் ஆதிவாசிகளை கொல்லப்படுவது குறித்து அக்கறையற்றவர்கள்
இந்தியாவில் மாடுகள் கொல்லப்படுவது குறித்து அனுதாபப்படுபவர்கள்
அப்துல் கலாம் மரணம் குறித்து அனுதாபப்படுவது வியப்பு அல்ல.
ஆனால் இவர்கள் போல் என்னால் அனுதாபப்பட முடியவில்லை.
மன்னித்துக் கொள்ளுங்கள் நண்பர்களே!

தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.

தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.
கொன்று புதைத்தால் மீண்டும் முளைத்து எழுவர்.
வெட்டி எறிந்தால் கடல் அலைபோல் மீண்டு வருவர்
- செர பண்டாயி
மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் எழுந்த விவசாசிகளின் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இந்திய துனைகண்டம் முழுவதும் பேரலைகளை எழுப்பியது.”வசந்தத்தின் இடி முழக்கம்” என்று வர்னிக்கப்பட்ட அந்த எழுச்சியின் நாயகன் தோழர் சாரு.
தோழர் சாருமஜீம்தார் அவர்களின் நினைவுகள் அழிவதில்லை.
1972ல் படுகொலை செய்யப்பட்ட தோழர் சாரு அவர்களுக்கு வீர வணக்கம்.

நாங்கள் என்ன வெங்காயங்களா?

 நாங்கள் என்ன வெங்காயங்களா?
மகிந்த ராஜபக்சவுடன் கனிமொழி கைகுலுக்கிய போது துரோகம் என்றார்கள்.
மகிந்த ராஜபக்சவுடன் திருமாவளவன் கைகுலுக்கிய போது துரோகி என்றார்கள்.
மகிந்த ராஜபக்சவுடன் சுப்பிரமணியசுவாமி கை குலுக்கியபோது துரோகி என்றார்கள்
ஆனால் மகிந்தவுடன் அப்துல் கலாம் கை குலுக்கியது ஏன் என்று கேட்டால் "தாம் தமிழா,வீர வணக்கம் செலுத்துவோம் "என்கிறார்கள்.
அப்படியென்றால் நாம் என்ன வெங்காயங்களா?
பாடகி சித்திரா பாடுவதற்கு கொழும்பு செல்லக்கூடாது என்றார்கள்
நடிகை அசின் நடிக்க கொழும்பு செல்லக்கூடாது என்றார்கள்.
விஜய் டிவி பாடகர்கள் கொழும்பு செல்லக்கூடாது என்றார்கள்.
அப்படியென்றால் கலாம் மட்டும் எப்படி கொழும்பு செல்லலாம் என்று கேட்டால்
அவர் அரசியல்வாதி இல்லை. எனவே போகலாம் என்கிறார்கள்.
அப்ப சித்திராவும் அசினும் அரசியல்வாதிகளா என்று கேட்டால்
எங்களை மனிதாபிமானம் அற்றவர்கள் என்கிறார்கள்.
என்னங்கடா நீங்களும் உங்கட நியாயமும்?