Monday, February 29, 2016

தோழர் தமிழரசன் பயங்கரவாதியா? அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் "பயங்கரவாதமா?"

•தோழர் தமிழரசன் பயங்கரவாதியா?
அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் "பயங்கரவாதமா?"

 (தோழர் பாலன் எழுதிய " ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்" நூலில் இருந்து)

தோழர் தமிழரசன் ஒரு புரட்சியாளர். அவர் மாக்சிச லெனிச மாவோயிசத்தை தத்துவ வழிகாட்டியாக கொண்டிருந்தார். இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழ்நாடு என்னும் தனிநாட்டு விடுதலையை  முன்வைத்தார். அந்த இலக்கை அடைவதற்காக ஆயுதப் போராட்டப் பாதையை முன்னெடுத்தார். அதனால் அவரை "பயங்கரவாதி" என்றும் அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை "பயங்கரவாத போராட்டம்" என்றும் மத்திய மாநில அரசுகளும் அதன் காவல் மற்றும் உளவுத்துறைகளும் கூறி வருகின்றன.

தங்களை தூக்கியெறிய முனைந்த தோழர் தமிழரசனை ஆளும்வர்க்கம் இவ்வாறு கூறியது ஆச்சரியம் இல்லை. ஆனால் தங்களைத் தாங்களே புரட்சியாளர்கள் என்று அழைத்துக்கொள்ளும் சிலரும்,  தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்போம் என்று கூறிவரும் தமிழ்தேசியர்கள் சிலரும் கூட தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்றும் அவர் முன்னெடுத்த போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்றும் கூறுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழ் இனம் விடுதலை பெறவேண்டும் என்ற இலக்கு வெற்றி பெற வேண்டுமாயின் அதனை அடைவதற்குரிய பாதை எது என்பது குறித்து நாம் தெளிவாக கண்டறிய வேண்டும். எமது பாதை தவறாக இருக்குமாயின் எமது இலக்கை ஒருபோதும் எம்மால் சென்றடைய முடியாது. எனவே  நாம் அடைய வேண்டிய இலக்கு பற்றி தீர்மானிக்கப்பட்டதும் அடுத்த முக்கியமான பணி அந்த இலக்கை அடைவதற்குரிய பாதையை தெரிவு செய்வதாகும். தோழர் மாவோ அவர்கள் ஒருமுறை சுட்டிக்காட்டியதுபோல்  நாம் ஆற்றைக் கடக்க முடிவு செய்தால் அதற்கு ஒரு பாலத்தைக் கட்ட வேண்டும். அல்லது ஒரு வள்ளத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோலவே தோழர் தமிழரசன் அவர்கள் தமிழின விடுதலை என்ற இலக்கை அடைய ஆயுதப் போராட்டப் பாதையை தெரிவு செய்தார்.

ரஸ்சியாவில் தோழர் லெனின் ஆயதப் போராட்டத்தை முன்வைத்திருக்காவிடின் ரஸ்சியப் புரட்சி வெற்றி பெற்றிருக்க முடியாது. அதுபோல் சீனாவில் தோழர் மாஓசேதுங் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருக்காவிடின் சீனப் புரட்சி வெற்றி பெற்றிருக்க முடியாது. சீனப் புரட்சி வெற்றிபெற்ற பின்பு தோழர் மாசேதுங் அவர்கள் " சீனாவில் ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டால் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு அந்தஸ்து கிடையாது. கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஒரு அந்தஸ்து கிடையாது, மக்களுக்கு ஒரு அந்தஸ்து கிடையாது, புரட்சியும் வெற்றிவாகை சூடியிருக்காது. இந்த ரத்தம் சிந்திப் பெற்ற அனுபவத்தை புரட்சி தோழர்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது" என்று கூறிய வரிகளை நினைவில் கொண்ட புரட்சியாளரான தோழர் தமிழரசன,; தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆயுதப் போராட்ட பாதையை தெரிவு செய்து அதனை தனது தலைமையில் முன்னெடுத்தார்.
மாக்சிச லெனிசிசத்தின் வளர்ச்சிக்கு தோழர் மாவோ அவர்கள் வழங்கிய மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று என்னவென்றால் மக்கள் யுத்தம் பற்றிய தத்துவத்தை அவர் வகுத்ததும்,  வர்க்க எதிரியை வெற்றி கொள்ள விரும்புபவர்கள் மக்கள்படை ஒன்றைக் கட்டியமைக்கும் அவசியம் பற்றிய அவருடைய போதனையுமாகும்.

மக்கள் யுத்தம் பற்றிய தத்துவம் ஒரு மாக்சிய லெனிய கட்சியின் தலைமையில், பொதுமக்களை புரட்சிகரமான முறையில் தட்டியெழுப்பவதை அடிப்படையாகக் கொண்ட, அதிகாரத்தை கைப்பற்றுவதை குறிக்கோளாகக் கொண்ட ஒரு தத்துவமாகும். இத் தத்துவம்  மக்களை தட்டியெழுப்புவதை விரும்புகிறது. அவர்களை ஸ்தாபனப்படுத்தி அணிதிரட்ட உதவுகிறது. ஆரம்பத்தில் வெகு பலம் வாய்ந்த எதிரியுடன் துணிந்து போராடவும் , அப் போராட்டத்தின் போக்கில் எதிரியை தீர்க்கமாகத் தோற்கடிக்கக்கூடிய பலமேம்பாடு பெறும்வரை தமது படைகளை வளர்க்கவும் போதனை அளிக்கிறது.

ஏகாதிபத்தியவாதிகள் , நிலபிரபுக்கள், முதலாளித்துவவாதிகள் ஆகியோரின் அடக்குமுறை அரசு இயந்திரம் பிரதானமாக அவற்றின் ஆயுதப்படைகள் மேலும் மேலும் ராணுவமயமாக்கப்பட்டு வருகின்றன. இலங்கை மற்றும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இதனைக் காணலாம். ராணுவத்தினரும் பொலிசாரும் படு மிலேச்சத்தனமாக கொன்று குவிக்கும் கொலைகளிலும் இதனைப் பார்க்கலாம். பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள்  தமது அடக்குமுறை அரச இயந்திரத்தை முன்னெப்போதும் கண்டிராத அசுர வேகத்தில் பலாத்கார மயமாக்கியும் ராணுவ மயமாக்கியும் வருகின்ற இச் சூழ்நிலைகளில் அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் யாது செய்யப்பட வேண்டும்?

தோழர் மாவோ அவர்கள் இந்த கேள்விக்கு சரியான பதிலை தந்துள்ளார். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும்  அவர்களுடைய அடிவருடிகள் அனைவரும் தமது கைகளில் கொடிய வாள்களை ஏந்திய வண்ணம் மக்களைக் கொல்ல நிற்கின்றனர். மக்கள் இதைப் புரிந்துகொண்டு அதேமாதிரிச் செயல்படுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். வேறு வார்த்தைகளில் இதனை சொன்னால் ஆயுத எதிர்ப்புரட்சியை ஆயுதப் புரட்சியால்தான் சமாளித்து வெற்றி கொள்ளமுடியும் என்று அவர் போதித்துள்ளார்.
"அடக்கி ஒடுக்கும் வர்க்கம் எப்பொழுதும் ஆயுதபாணியாகவே இருக்கின்றது. பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்கி முதலாளி வர்க்கத்தை நிராயுதபாணியாக்குவது என்பதே நமது சுலோகமாகும்" என்ற தோழர் லெனின் அவர்களின் வரிகளை சுட்டிக்காட்டிய தோழர் மாவோ அவர்கள் "மக்கள்படை ஒன்று இல்லாவிட்டால் மக்களுக்கு ஒன்றுமே இல்லை" என்று தெளிவாக கூறியுள்ளார்.

ஆயுத பலாத்காரத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, யுத்தத்தால் பிரச்சனைக்கு தீர்வு காண்பது, புரட்சியின் கேந்திரக் கடமையும் அதன் அதி உயர்ந்த வடிவமும் ஆகும். புரட்சி பற்றிய இந்த மாக்சிய லெனிய கோட்பாடு சீனாவுக்கு மாத்திரமல்ல  இதர நாடுகளுக்கும் சர்வ வியாபகமாகப் பொருந்திய ஒரு கோட்பாடு என்று தோழர் மாவோ அவர்கள் கூறியுள்ளார். அவர் எமக்கு பின்வருமாறு போதித்துள்ளார்."ஜக்கிய முன்னனி, ஆயுதப் போராட்டம், கட்சி அமைப்பு. இம் மூன்றும்  சீனப் புரட்சியின் எதிரிகளை தோற்கடிப்பதற்குரிய மூன்று பிரதான மந்திராயுதங்கள்"  என்றார். அவரின் விவேகமான இந்த வார்த்தைகளில் எந்நாட்டுப் புரட்சியிலும் வெற்றி பெறுவதற்கான திறவுகோலை நாம் காண முடியும்.

மாவோயிசத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியவரும், இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி தலைவருமான தோழர் சண்முகதாசன் அவர்கள் " 44 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் பாவிக்கப்பட்டும் ஒருவித பலனையும் தராத பாராளுமன்ற ஜனநாயகப்பாதையை நிராகரிக்க வேண்டும். அதற்கு பதிலாக மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனை வழிகாட்டலில் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலமாகவே புதிய ஜனநாயகப் புரட்சி இலங்கையில் வெற்றியடையும்" என்றார்.

எனவே தமிழின விடுதலையை இலக்காக கொண்ட தோழர் தமிழரசன் அதனையடைய பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்ட பாதையை முன்னெடுத்தது ஆச்சரியத்திற்குரியது அல்ல. மாறாக மாக்சிய லெனிய மாவோயிசத்தை பின்பற்றும் அவர் ஆயுதப் போராட்டப்பாதையை தெரிவு செய்திருக்காவிடில் மட்டுமே ஆச்சரியம் அடைந்திருக்க முடியும்.
இன்று இரண்டு பாதைகள் எம்முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று மாபெரும் ஆசான் மாசேதுங் முன்வைத்த, தோழர் தமிழரசன் முன்னெடுத்த, ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதை. இன்னொன்று அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையாகும். இதில் எந்தப் பாதையை தெரிவு செய்தால் தமிழ் இனம் விடுதலை பெற முடியும் என்பதே இன்று எம் முன் உள்ள கேள்வியாகும்.
ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை பலாத்கார முறையென்றும் அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையை சாத்வீக பாதையென்றும் இன்னொரு வடிவத்தில் சிலர் வரையறை செய்கிறார்கள். அத்தோடு கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்றும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்போர் ஆயுதத்தால் அழிக்கப்படுவர் என்றும் அவர்கள் மக்களை எச்சரிக்கின்றார்கள்.

புலிகள் இயக்கம் வெற்றி பெறவில்லை என்பதை வைத்து ஆயுதப் போராட்டம் பயனற்றது என இன்று சிலர் போதிக்க முற்படுகின்றனர். புலிகள் மௌனித்தது தங்களது ஆயுதங்களையே ஒழிய ஆயுதப் போராட்டத்தை அல்ல. மேலும் ஆயுதப் போராட்டம் புலிகளுக்கு முன்னரும் இருந்தது. அது புலிகளுக்கு பின்னரும் இருக்கும். எனவே புலிகள் வெற்றி பெறவில்லை என்பதால் அது ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்று பொருள் கொள்ள முடியாது.
புலிகள் பலமாக இருக்கும்வரை எந்த கருத்தையும் தெரிவிக்காத வட மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் இன்று புலிகள் இல்லை என்றவுடன் “ஆயுதப் போராட்டம் பயனற்றது” என்று பகிரங்கமாக கருத்து கூறுகிறார். அவர் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா  “மீண்டும் அகிம்சைப் போராட்டம் நடத்தப் போவதாக” அறிக்கை விடுகிறார்.

1948ம் ஆண்டு முதல் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாத நிலையில் இவர்களது இந்த தமிழரசுக்கட்சியே 1962ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது. இவர்களது இந்த அகிம்சைப் போராட்டத்தை வெகு இலகுவாக பலாத்காரத்தை பாவித்து இலங்கை அரசால் முறியடிக்க முடிந்தது. அகிம்சையை போதித்த தமிழரசுக்கட்சி தலைவர்களால் இலங்கை அரசின் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை முன்வைக்க முடியவில்லை. இருந்தபோதும் இவர்கள் பின்னால் சென்ற தமிழ் இளைஞர்கள் அந்த உண்மையைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கி அரச பலாத்காரத்திற்கு தகுந்த பதில் அளித்தார்கள். இதனை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் தமது பூரண ஆதரவை இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இவ்வாறே  இலங்கை அரசின் பலாத்காரத்திற்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பலாத்காரம் உருவாகியது.

இந்தியாவில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் தி.மு.க வும் அதிமுக வும் மாறி மாறி ஆட்சி புரிந்து வருகின்றன. அவர்கள் ஊழல் புரிந்து தமது சொத்துக்களை பெருக்கிக் கொண்டனரேயொழிய தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. குறிப்பாக ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டபோது அவர்களை காப்பாற்றவில்லை. அதுமட்டுமல்ல இலங்கை அரசுக்கு உதவி புரிந்த இந்திய மத்திய அரசையும்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. அத்துடன் தமிழக மீனவர்களை கொன்று குவித்த இலங்கை கடற்படைக்கு இந்திய மத்திய அரசு வழங்கிய பயிற்சியைக்கூட இன்றுவரை நிறுத்த முடியவில்லை. முத்துக்குமார் உட்பட மொத்தம் 16 பேர் தீ மூட்டி தற்கொலை செய்தபோதும் அவர்களது கோரிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்டு கொள்ளவேயில்லை. தமிழக மக்களின் சாத்வீக போராட்டத்திற்கு இவ் அரசுகள் எந்த மதிப்பையும் வழங்கவில்லை.

இந்திய மத்திய அரசு ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து வரியாக 85ஆயிரம் கோடி ரூபா பெற்றுக் கொள்கிறது. அண்மையில் சென்னையில் மழையின் காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு பாரிய அழிவு வந்தபோது தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் நிவாரணமாக மத்திய அரசிடம் 50 ஆயிரம் கோடி ரூபா தரும்படி கேட்டிருந்தார். ஆனால் மத்திய அரசோ வெறும் இரண்டாயிரம் கோடி ரூபாவை மட்டுமே வழங்கியது. அதேவேளை மத்திய அரசானது இலங்கைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாவை வழங்கியுள்ளது. அதுமட்டுமல்ல அதே மத்திய அரசு நேபாளத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாவும், பூட்டானுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாவும், மங்கோலியாவுக்கு 6 ஆயிரம் கோடி ருபாவும், ஆப்கானிஸ்தானுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாவும் வழங்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை அரசுக்கு தமிழக மக்களின் வரிப்பணம் மத்திய அரசினால் வழங்கப்படுகிறது. அதைக்கூட தமிழக அரசால் தடுத்த நிறுத்த முடியவில்லை.

இந்த அதிகார மற்ற தமிழக அரசை ஒரு தமிழன் கைப்பற்றுவதன் மூலம் அதாவது ஒரு தமிழன் தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தமிழக மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று சிலர் இப்போது கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கு தமிழீழத்தையும் பெற்றுக் கொடுக்க முடியும் என்கிறார்கள். இலங்கைக்கு வழங்கப்பட்ட கட்சதீவையும் ஒரே நாளில் மீட்டுக்கொள்ள முடியும் என்கிறார்கள். ஒரு தமிழன் முதலமைச்சாரானால் எப்படி அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று கேட்டால் அதற்கு உரிய பதில் தர அவர்கள் மறுக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் பதவியை பெறுவதும் மக்களை தேர்தல் பாதையில் நம்பிக்கை கொள்ள வைப்பதுமாகவே இருக்கிறது. இவர்களுடைய இச் செயலானது உணர்ச்சி மிக்க தமிழ் இளைஞர்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து இந்திய அரசின் நோக்கங்களுக்கு உதவி புரிவதாகவே இருக்கிறது.

மக்களை ஏமாற்றவும் புரட்சியின் கவனத்தில் இருந்து மக்களை திசைதிருப்பவுமே முதலாளித்துவ நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுகின்றனர். இதன்மூலம் இந் நாடுகளில் உண்மையான அதிகாரம் ஆயுதம் தாங்கிய படைகளின் கையில்தான் இருக்கின்றது என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது. பாராளுமன்ற வழி மூலம் உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வையும் போராட்ட மனப்பான்மையையும் மழுங்கச் செய்யப்படுகிறது. பாராளுமன்ற வழி மூலம் பேச்சுவாhத்தைகளினால் தீர்வு பெறும்படி கூறுவதன் மூலம் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றனர்.  இலங்கையில் பலமாக இருந்த புலிகள் இயக்கத்தை பேச்சுவாhத்தைக்கு அழைத்து பலவீனமாக்கியதை நாம் கண்முன் கண்டோம். அதேபோல் இந்தியாவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் மாவோயிஸ்டுகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி இந்திய அரசு அழைப்பதும் அவர்களது ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துவதற்காகவே.
எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கத்தை அடக்கி வைத்திருப்பது பலாத்காரத்தின் மூலமே. ஆயுதம் தாங்கிய படைகள் உள்ளடங்கிய ஒரு அரசு இயந்திரத்தை இதற்காக உருவாக்கி வைத்திருக்கின்றனர். ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கு உருவாக்கப்பட்ட இயந்திரமே அரசு எனப்படும். ஆளும் வர்க்கத்தின் காவல் நாய்களான ஆயுதப் படைகளின் கைகளில் இருக்கும் துப்பாக்கி இல்லாமல் ஒரு நிமிடமேனும் ஆளும் வர்க்கத்தால் ஆட்சி நடத்த முடியாது. அதனால்தான் “அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழாயில் இருந்து பிறக்கின்றது” என்று தோழர் மாசேதுங் கூறினார்.

இதன் அடிப்படையில்தான் ஆளும் வர்க்கத்தின் பலாத்காரத்திற்கு எதிராக ஆளப்படும் வர்க்கம் எதிர்ப் பலாத்காரத்தை பாவிக்காமல் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்று புரட்சியாளர்கள் கூறி வருகிறார்கள். அதாவது இன்றைக்கு தமிழ் மக்களை அடக்கி வரும் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் தவிடு பொடியாக்காமல் அதற்கு பதிலாக தமிழ் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயந்திரமாகிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உருவாக்காமலும்  தொழிலாளி வர்க்கத்திற்கும் அதனுடைய நேச சக்திகளுக்கும் விமோசனம் கிட்டாது. இந்த உண்மையை நாங்கள் நன்றாக கிரகித்துக் கொள்ள வேண்டும்.

போராளிகள் வன்முறை மீது காதல் கொண்ட மன நோயாளிகள் அல்லர். இரத்தம் சிந்த வேண்டும் என்பதை இலட்சிமாக கொண்டு அலைபவர்களும் அல்லர். வன்முறை இன்றியும் இரத்தம் சிந்தாமலும் எந்த இழப்பும் இன்றி விடுதலை கிடைக்குமாயின் அதையிட்டு  மகிழ்சி கொள்பவர்கள் போராளிகளைவிட யார் இருக்க முடியும்? ஆனால் அது வெறும் கனவு. அந்தப் பொய்யை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

இயற்கையின் விதிகளை கவனித்து பார்ப்போமானால் அதிலிருந்தும் பலாத்காரத்தை தவிர்க்கமுடியாது என்பதை நாம் கற்றுக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு கோழிக் குஞ்சை எடுத்துக் கொள்வோம். கோழி முட்டையை அடைவைப்பதன் மூலம் குஞ்சு உருவாகிறது. அது பருவமடைந்த பின் தான் காந்தியின் சீடன் என்றும் அகிம்சையைக் கடைப்பிடிப்பவன் என்றும் முட்டைக் கோதிற்கு எதிராக பலாத்காரம் பாவித்து கொத்தாவிடில் அதற்கு என்ன ஆகும்? அது உள்ளேயே அவிந்து அழிந்து போகும். அதற்கு பதிலாக இயற்கை விதியின்படி அக் குஞ்சு முட்டைக் கோதிற்கு எதிராக பலாத்காரம் பாவித்து அதைக் கொத்தி உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது. முட்டைக் கோதிற்கு  எதிராக பலாத்காரம் பாவிக்க வேண்டும் என்ற விதியை அக் கோழிக் குஞ்சுக்கு சொல்லிக் கொடுத்தவர் யார்? தலைவர் மாசேதுங்கா? அல்லது கால்மாக்ஸா? இல்லை. இவர்கள் இருவருக்கும் முன்பாகவே அதாவது இயற்கையாகவே கோழிக்குஞ்சு கோதைக் கொத்திக்கொண்டு வெளியே வந்திருக்கிறது.  இது ஒரு இயற்கை விதி. இதைப் போல வேறு பல உதாரணங்களையும் எடுத்துக் கூற முடியும். இதற்காகத்தான் “பழைய சமுதாயம் என்னும் கர்ப்பப் பைக்குள் உருவாகியிருக்கும் ஒவ்வொரு புதிய சமுதாயத்திற்கும்  மருத்துவச்சி பலாத்காரம்” என்று கால்மாக்ஸ் கூறினார்.

கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிவான். இது கடவுள் செயல் என்று சாத்வீக வாதிகள் போதிக்கின்றனர். ஆனால் அவர்களின் கடவுள்கள்கூட ஆயுதத்தைப் பாவித்தே அதர்மத்தை ஒழித்ததாக உள்ள கதைகளை இவர்கள் மறந்துவிடுகின்றனர். இந்துசமயப் புராணக் கதைகளை எடுத்துப் பார்த்தாலும் அதர்மத்தை அழித்து தர்மம் வெல்வதற்கு பலாத்காரமே காரணமாய் இருப்பதைக் காணலாம். அநேகமாக இந்துமத பக்தர்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளாத விடயம் ஒன்றிருக்கிறது. அது என்னவெனில் அவர்கள் வழிபடும் பெரும்பாலான தெய்வங்களின் கைகளில் பலாத்காரத்திற்கு பாவிக்கப்படும் ஆயுதங்கள் இருப்பதை அவதானிக்க முடியும். சிவன் கையில் சூலாயுதம் இருக்கிறது. கிருஸ்ணன் கையில் சக்கராயுதம் இருக்கிறது. முருகன் கையில் வேலாயுதம் இருக்கிறது. காளி கையில் கத்தி இருக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆயுதம் வைத்திருக்காத இந்து மதக் கடவுள் யாரேனும் இருக்கிறாரா என்றுகூட கேட்கலாம்.

இந்துமத புராணக் கதைகளை எடுத்துப் பாருங்கள். கந்தபுராணக் கதையின் படி முருகன் சூரர்களை வென்றது சத்தியாக்கிரக போராட்டத்தின் மூலமல்ல. மாறாக வேல் ஆயுதத்தின் மூலமாகவே. அவர் சூர சங்காரம் செய்தார். இராமாயணத்தில் இராவணைக் கொன்றது இராம பாணம். மகா பாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு வெற்றி கொடுத்தது அர்ச்சனுக்கு சிவபெருமானால் வழங்கப்பட்ட பாஸ்பதாஸ்திரம். மகாபாரதப் போர் தொடங்குவதற்கு முன்னர் பகவத் கீதையின் மூலமாக அர்ச்சுனனுக்கு கிருஸ்ணன் போதிப்பதும் அதர்மத்திற்கு எதிராக தர்மத்திற்காக போராட வேண்டிய கடமையையே.
மகாகவி பாரதியார் பாடினார் “ தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று. இதைத்தான் நாங்கள் புரட்சி என்று கூறுகிறோம்.

இன்று கம்யுனிஸ்டுகள் ஆயுதம் தாங்கி புரட்சி செய்ய தேவையில்லை. பாராளுமன்றம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என சில திரிபுவாதிகள் கூறிவருகின்றனர். ஆனால் அவர்கள் சிலியில் என்ன நடந்தது என்பதை கவனத்தில் கொள்ள மறுக்கின்றனர். சிலி நாட்டில் கம்யுனிஸ்டுகள் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் உடனே சிலி நாட்டு ராணுவத்தின் துணையுடன் சதி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்தது. இது பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு படை இல்லாமல் ஆட்சியை தக்கவைக்க முடியாது என்பதை நிரூபித்தது. அதேபோல் வியட்நாமில் கம்யுனிஸ்டுகள் 26 வருடங்கள் ஆயுதப் போராட்டம் நடத்தியே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தோற்கடித்தார்கள்.

சிலி நாட்டில் நடந்த எதிர்ப் புரட்சியின் வெற்றியில் இருந்தும் இந்தோ சீனாவில் அதன் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய ஏகாதிபத்திய வல்லரசாகிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை போரில் தோற்கடித்தலில் இருந்தும் சோசலிசத்திற்கு சமாதானப் பாதையென்று ஒன்று இல்லை என்பதை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ருஸ்சிய அக்டோபர் புரட்சியும் சீனப் புரட்சியும் இதே பாடத்தைதான் உலகிற்கு வலியுறுத்துகின்றன.

இந்தியாவில் தேர்தல் மூலம் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. இலங்கையில் மைத்திரி சிறிசேனா ஜனாதிபதியாகியுள்ளார். இது தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சியும் மகிந்த ராஜபக்சவும் தோற்கடிக்க முடியும் என்பதை காட்டியுள்ளது. இதன் அர்த்தம் என்னவெனில் தேர்தல் மூலம் ஆளும் வர்க்கத்தில் ஆட்களை மாற்ற முடியுமேயொழிய ஆளும் வர்க்கத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதே.

எம்மை அடக்கும் பிற்போக்கு சக்திகளை தேர்தல் மூலம் தூக்கியெறிய முடியாது என்பதையே கடந்த தேர்தல்கள் எமக்கு உணர்த்துகின்றன. லெனின் ஒரு தடைவ கூறியது- “பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையை பெற வேண்டும், அதற்கு பிறகுதான் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று கயவர்கள் அல்லது முட்டாள்கள்தான் சிந்திப்பார்கள். வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கத்தின் தலைமை ஆகியவற்றின் இடத்தில் பழைய முறையிலான பழைய அதிகாரமுடைய வாக்களிப்பை வைப்பது முட்டாள்தனத்தின் சிகரமாகும். மாறாக பாட்டாளி வர்க்கம் அதன் பக்கத்திற்கு மக்களை வென்றெடுக்க பூர்சுவா வர்க்கத்தை முதலில் தூக்கியெறிந்துவிட்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

பாராளுமன்ற தேர்ல்களை பகிஸ்கரிகும்படி கோரிய இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சண்முகதாசன் தமது அனுபவங்களில் இருந்து கூறியது “ இன்றுள்ள நவகாலனிச பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே அவை செயற்படும். எனவே அடக்கு முறையான பூர்சுவாவர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது” என்றார்.

"வர்க்கப் போராட்டத்தின் ஒரு சிக்கல்கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறு இல்லை" என்று மாபெரும் ஆசான் தோழர் லெனின் கூறியுள்ளார். "ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை முன்வைத்திருக்காவிடின் சீனப்புரட்சி வெற்றிவாகை சூடியிருக்கமுடியாது" என்று தோழர் மாவோ கூறியிருக்கிறார். "44 வருட பாராளுமன்ற ஜனநாயகப் பாதையால் எந்த பயனும் இல்லை. அதனை நிராகரித்து ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தபாதையை முன்னெடுப்பதன் மூலமே இலங்கையில் புதிய ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற முடியும்" என்று தோழர் சண்முகதாசன் கூறுகிறார். இவர்களை யாரும் பயங்கரவாதி என்று கூறியதில்லை. இவர்கள் முன்வைத்த ஆயுதப் போராட்ட பாதையை யாரும் பயங்கரவாதப் போராட்டம் என்றும் கூறுவதில்லை. ஆனால் இவர்களின் வழிகாட்டலில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் தமிழரசனை மட்டும் பயங்கரவாதி என்றும் அவர் முன்னெடுத்த போராட்டத்தை பயங்கரவாத போராட்டம் என்றும் குறை கூறிவருகின்றனர்.

மக்கள் யுத்தத்தின் யுத்த தந்திர, தந்திரோபாயங்கள் பற்றிய தோழர் மாவோ அவர்களின் தத்துவத்தில் நீண்டகால கொரில்லா யுத்தம் பற்றிய தத்துவம் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாகும். தோழர் மாவோ அவர்கள் கொரில்லா யுத்தத்தை யுத்ததந்திர மட்டத்திற்கு உயர்த்தினார். ஏன் என்றால் புரட்சிகர ஆயுதப்படைகள் பலமான எதிரியை தோற்கடிக்க வேண்டுமானால் தமது சக்திக்கும் எதிரியின் சக்திக்கும் இடையில் பெரும் அசமத்துவம் நிலவும்போது விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மூர்க்கத்தனமாய் போரிடக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் பாரதூரமான நஸ்டங்களால் பாதிக்கப்பட்டு புரட்சிக்கும் பெரும் பின்னடைவுகளைக் கொண்டுவருவர். கொரில்லா யுத்தம் என்பது எதிரிக்கு எதிராக மக்களின் எல்லா சக்திகளையும் அணிதிரட்டி பிரயோகிக்கக்கூடிய ஒரே ஒரு வழி. யுத்தத்தின் போக்கில் எமது சக்திகளைப் பெருக்கி எதிரியை தேய்த்து பலவீனப்படுத்தி, எதிரிக்கும் எமக்கும் இடையில் உள்ள நிலைமையை படிப்படியாக மாற்றி கொரில்லா யுத்தத்தை நடமாடும் யுத்தமாக உயர்த்தி இறுதியில் எதிரியை தோற்கடிக்கும் ஒரே வழியாகும்.

தோழர் மாவோ அவர்கள் கொரில்லா யுத்தத்தின் அடிப்படை தந்திரோபாயங்களை பின்வருமாறு வகுத்தார். " எதிரி முன்னேறும்போது நாம் பின்வாங்குவோம். எதிரி முகாமிடும்போது நாம் தொந்தரவு கொடுப்போம். எதிரி களைத்திருக்கும்போது நாம் தாக்குவோம். எதிரி பின்வாங்கும்போது நாம் துரத்துவோம்".

தோழர் தமிழரசன் "தமிழ்நாடு விடுதலைப்படை" என்னும் மக்கள் படையைக் கட்டினார். அதன்மூலம் தோழர் மாவோ அவர்கள் சுட்டிக்காட்டிய கொரில்லா தாக்குதல்களை மேற்கொண்டார். ஒரு கொரில்லா தாக்குதல் ஆயிரம் பொதுக் கூட்டங்களுக்கு சமமானது என்ற தோழர் மாவோவின் கூற்று உண்மை என்பதை தனது அனுபவத்தின் மூலம் கண்டு கொண்டார். அவர் மேற்கொண்ட  ராஜீவ்காந்தியின் வருகைக்கு எதிரான குடமுருட்டி வெடிகுண்டு தாக்குதல் அவரை தமிழ்நாட்டில்; அறிமுகம் செய்தது. அதையடுத்து அவர் மேற்கொண்ட அரியலூர் மருதையாற்று பாலத்தின் மீதான வெடிகுண்டு தாக்குதல் அவரையும் அவரது கோரிக்கையையும் முழு இந்தியாவிற்கும் அறியவைத்தது.

இந்திய மத்திய அரசு பாலஸ்தீன விடுதலையை அங்கீகரித்திருந்தது. ஆனால் தமிழீழ விடுதலையை அங்கீகரிக்கவில்லை. இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்காமல் இலங்கையில் ஆக்கிரமிப்பதற்காக தமிழர் பிரச்சனையைக் கையாள்வதை தோழர் தமிழரசன் உணர்ந்துகொண்டார். எனவேதான் இந்திய மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் மத்திய அரசுக்கு சொந்தமான ரயில் பாலத்தில் குண்டு வைத்தார். தமிழீழ விடுதலையை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அதில் வைத்தார்.

தோழர் தமிழரசன் பாலத்திற்குதான் குண்டு வைத்தார். அவர் ரயிலுக்கு குண்டு வைக்கவில்லை. ரயிலைக் கவிழ்ப்பதோ அல்லது மக்களைக் கொல்வதோ அவரது நோக்கமாக இருக்கவில்லை. எனவேதான் குண்டு வைத்துவிட்டு உடனே அதனை அருகில் இருந்த ரயில் நிலையத்திற்கும் தெரிவித்திருந்தார். அவரது நோக்கமெல்லாம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமது தமிழ்நாடு விடுதலைப்படையின் குரலை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தெரிவிப்பதே.

ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்றன. அவரது போராட்ட பாதையை பயங்கரவாதப் போராட்டம் என்று முத்திரை குத்தின. அதன்மூலம் அவர் முன்வைத்த ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கோரிக்கையை மறுத்தன. இங்கு ஆச்சரியம் என்னவெனில் வெள்ளைக்கார அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய தோழர் பகத்சிங் அவர்களை தியாகி என்று அழைப்பவர்கள் கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக ரயில் பாலத்தில் வெடிகுண்டு வைத்த தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்று அழைப்பதுதான்.

23.04.1994 யன்று தியாகி பகத்சிங் நினைவு தினத்தன்று அப்போதைய குடியரசுத் தலைவர் சர்மா அவர்கள் "தியாகியும் அவரது நண்பர்களும் குண்டு வீசியது கொல்ல வேண்டும் என்ற எண்ணத்திலான பயங்கரவாத நடவடிக்கை அல்ல. ஆனால் சுதந்திர வேட்கையின் குரல் மக்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை ஆகும்" என்று கூறினார். "பகத்சிங்கும் அவரது நண்பர்களும் தங்கள் உயிரைக் கொடுத்ததால்தான்  நாம் சுதந்திரமடைந்தோம். அவர்களது நினைவு தினத்தன்றாவது அவர்கள்  நாட்டுக்காக ஆற்றிய தியாக உணர்வு கொண்ட பெரும்பணியை  நாம் நினைவு கூர்ந்தாக வேண்டும்" என்று  குடியரசுத்தலைவர் சர்மா அவர்கள் மேலும் குறிப்பிட்டார் (ஆதாரம்- 24.03.94 தினமணி)

அன்று வெள்ளைக்கார அரசு வெடிகுண்டு வீசிய தோழர் பகத்சிங்கை பயங்கரவாதி என்றது. அவரை தூக்கில் இட்டுக்கொன்றது. ஆனால் மக்கள் அவரை தியாகி என்று போற்றி புகழ்ந்தார்கள். அதனால்தான் அவரைக் காட்டிக்கொடுத்த காங்கரஸ்கட்சி இன்று தவிர்க்கமுடியாமல் அவரது நினைவு தினத்தை கொண்டாடுகிறது. அதேபோல் இன்றைய கொள்ளைக்கார இந்திய அரசு தோழர் தமிழரசனைப் பயங்கரவாதி என்று முத்திரை குத்திக் கொன்றுள்ளது. ஆனால் எதிர்கால  வரலாறு தோழர் தமிழரசனை தமிழின விடுதலையை முன்னெடுத்த ஒரு தியாகியாகவே காட்டும் என்பது உறுதி.

ஒரு கால கட்டத்தில் ரஸ்சியாவில் போல்சிவிக் கட்சி உருவாவதற்கு முன்னர் ஜார் மன்னனை கொல்வதற்கு  சிலர் சதி செய்தனர். அவர்கள் அதில் வெற்றியும் பெற்றனர். ஆம், அவர்கள் ஜார் மன்னனை கொன்றனர். ஆனால் அவர்களால் ஜார் எதேச்சதிகாரத்தை தோற்கடிக்க முடியவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவ்விதமான ஒரு சதியில் ஈடுபட்டதற்கான மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் லெனின் சகோதரர் இலியானோவும் ஒருவர். இச்சம்பவம் லெனின் மேல் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் சகோதரரை மிகவும் நேசித்தார். அப்படியிருந்தும் அவர் திடமாக கூறினார் “ இந்த வழி எமக்கு உகந்தது அல்ல. வேறு வழிகளில் நாம் வெற்றியை தேட வேண்டும்” என்று. இதனடிப்படையில்தான் போல்சிவிக் கட்சியை கட்டியெழுப்பி அதன் மூலமாக லட்சக் கணக்கான  ரஸ்சிய மக்களை அணிதிரட்டி  பலாத்காரப் புரட்சியின் மூலமாக ஜார் எதேச்சிகாரத்தை லெனின் தோற்கடித்தார். இதுதான் பலாத்காரத்தைப்பற்றிய புரட்சியாளர்களின் கண்ணோட்டமாகும். புரட்சியாளரான தோழர் தமிழரசனின் கண்ணோட்டமும் இதுவேயாகும்.

புரட்சியாளரான தோழர் தமிழரசன் அவர்கள் ஆரம்பத்தில் வர்க்க எதிரிகளான தனி நபர்களை அழித்தொழிப்பதில் பங்குபற்றியிருந்தாலும் நாளடைவில் அதன் தவறுகளை இனம் கண்டு கொண்டார்.  தனி மனிதனை அழிப்பதன் மூலம் சமுதாயத்தை மாற்றிவிட முடியாது என்பதை அவர் நன்கு புரிந்துகொண்டார். எனவேதான் அவர் தமிழ்நாடு விடுதலைப்படையின் பாதையாக மக்கள் யுத்தப்பாதையை முன்வைத்தார்.

மாபெரும் ஆசான் மாவோ குறிப்பிட்டது போல் தோழர் தமிழரசன் “மக்கள் சக்தியே மகத்தான சக்தி” என்பதை புரிந்து ஏற்றுக்கொண்டவர். அதுமட்டுமல்ல தோழர் மாசேதுங் கூறியதுபோல் தோழர் தமிழரசன்  மக்களுடன் சேர்ந்து உணவு உண்டார். மக்களுடன் சேர்ந்து உறங்கினார். மக்களுடன் சேர்ந்து உழைத்தார். அதனால்தான் மக்கள் அவரை மிகவும் நேசித்தார்கள். மக்கள் அவரை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை. மக்களின் பெரு ஆதரவின் மூலமே எதிரியின் கையில் பிடிபடாமல் அவர் வாழ்ந்து வந்தார். இறுதியில் உளவுப்படை சதி செய்தே தோழர் தமிழரசனைக் கொல்ல முடிந்தது.

தோழர் தமிழரசனைக் கொன்றதன் மூலம் அவரது கொள்கைகளைக் கொன்றுவிட்டதாக தமிழக காவல்துறை கனவு கண்டது. ஆனால் அவரது கொள்கை இன்று மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. அதனால்தான் அவரது கொள்கைகளை முன்னெடுப்பவர்களை நசுக்குவதற்காக மத்திய மாநில அரசுகள் புலிகள் மீதான தடையை நீடித்துள்ளன. இல்லாத புலிகளுக்கு தடைவிதித்தது மட்டுமல்ல வழக்கத்திற்கு மாறாக இரண்டு வருடத்திற்கு பதிலாக ஒரேயடியாக ஜந்து வருடம் தடை நீடிக்கப்பட்டுள்ளது. அவ் தடை நீடிப்புக்கு காரணமாக மதுரையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுக்கும் போராளிகள் மீதான பைப் வெடிகுண்டு வழக்குகளை தமிழக அரசு காட்டியுள்ளது. இதிலிருந்தே தமிழக அரசு புலிகள் மீதான தடையை நீடித்திருப்பது தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்ட பாதையை முன்னெடுக்கும் தமிழ் இன உணர்வாளர்களை நசுக்குவதற்கே என்பது நன்கு புலனாகிறது.

தோழர் மாவோ அவர்கள் "எல்லா பிற்போக்குவாதிகளும் கடதாசிப் புலிகள். தோற்றத்தளவில் பிற்போக்குவாதிகள் பயங்கரமானவர்கள். ஆனால் யதார்த்தத்தில் அவ்வளவு பலமுடையவர்கள் அல்ல. நீண்டகால நோக்கில் இருந்து பார்த்தால் உண்மையில் பலமுடையவர்கள் மக்களேயாவர்" என்று தமது பிரசித்தி பெற்ற தத்துவத்தை எமக்கு தந்துள்ளார். ஏகாதிபத்தியவாதிகள் இத் தத்துவத்திற்கு அஞ்சி நடுங்கும் அதேவேளையில் நவீன திரிபுவாதிகள் இத் தத்துவம் எதிரியை குறைத்து மதிப்பீடு செய்வதாக கூறி அதனை தூற்றுகின்றனர். கடதாசிப் புலிக்கு அணு ஆயுதப் பற்கள் உண்டு என்று சொல்லி இத் தத்துவத்தை எள்ளி நகையாடுவதோடு மக்களையும் அஞ்சவைக்க முயலுகின்றனர்.

ஆனால் தோழர் மாவோ அவர்களின் "ஏகாதிபத்தியவாதிகளும் சகல பிற்போக்குவாதிகளும் கடதாசிப் புலிகளே" என்ற தத்துவம்  அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் கொடுப்பதில் சிறப்பாக இறுதி வெற்றியில் உறுதியான நம்பிக்கை ஊட்டுவதில் மகோன்னத முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதனை தோழர் தமிழரசன் நன்கு உணர்ந்திருந்தார். அவர் இதனை இலங்கை இந்திய அரசுகளுடன் ஒப்பிட்டு கூறியதை நானே பலமுறை என் காதால் கேட்டிருக்கிறேன். ஒரு லட்சத்து இருபதாயிரம் ராணுவ வீரர்களுடன் இலங்கை வந்த இந்திய படையானது 3500 போராளிகளை கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை போரில் வெல்ல முடியாது திரும்பிச் சென்றதை நான் கண்டபோது தோழர் தமிழரசன் "பிற்போக்கு இந்திய அரசு ஒரு கடதாசிப் புலி" என்று கூறியது உண்மைதான் என்று உணர்ந்து கொண்டேன்.

இறுதியாக, உறுதியாக நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புவது என்னவெனில் தோழர் தமிழரசன் பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு மகத்தான புரட்சியாளர். அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டப்பாதை பயங்கரவாதம் இல்லை. மாறாக அது மக்கள்யுத்தப் பாதையாகும்.










Sunday, February 28, 2016

•கலைஞர் திருந்தவுமில்லை. திருந்தப்போவதுமில்லை.

•கலைஞர் திருந்தவுமில்லை. திருந்தப்போவதுமில்லை.
ஈழத் தமிழர்களை அழித்ததாக குற்றம்சாட்டி எந்த காங்கிரசுடனான உறவை கலைஞர் துண்டித்தாரோ இப்போது அதே காங்கிரசுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி ஈழத் தமிழர் குறித்த கொள்கையில் எந்த மாற்றத்தையும் அறிவிக்காத நிலையில் அதே காங்கிரசுடன் கூட்டு சேர்ந்ததன்மூலம் தமிழினத்திற்கு மாபெரும் துரோகத்தினை கலைஞர் புரிந்துள்ளார்.
தமிழினம் அழிந்தாலும் பரவாயில்லை. தனக்கும் தன் குடும்பத்திற்கு பதவி வேண்டும் என்பதற்காக உலக தமிழின தலைவர் என்று தன்னை அழைத்தக்கொள்ளும் கலைஞர் இத் துரோகத்தினை செய்கிறார்.
ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்டும்கூட கலைஞர் திருந்தவில்லை. அவர் திருந்தப் போவதில்லை என்பதையே இது காட்டுகிறது.
எனவே இம்முறை யார் வெல்ல வேண்டும் என்பதிலும் பார்க்க கலைஞர் வெல்லக்கூடாது என்பதே தமிழகமக்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.
இம்முறை கலைஞர் அடையப்போகும் தோல்வி இனி எந்தவொரு தமிழ் தலைவரும் தமிழினத்திற்கு துரோகம் செய்ய முடியாத பயத்தையும் , படிப்பினையையும் கொடுக்க வேண்டும்.
கலைஞருடன் மட்டுமல்ல யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் காங்கிரஸ்கட்சி தமிழகத்தில் கட்டுக்காசுகூட பெறமுடியாத நிலையை தமிழ்மக்கள் காட்ட வேண்டும்.
ஈழத் தமிழர்களின் குருதி படிந்த கையுடன் சோனியா வருகிறார். அவரையும் அவருடைய காங்கிரஸ் கட்சியையும் தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என்பதை தேர்தலில் காட்ட வேண்டும்.
யுத்தத்தை நிறுத்துமாறு முத்தக்குமார் உட்படி 16 பேர் தங்களையே எரித்துக் கேட்டார்கள். கல்மனம் கொண்ட சோனியா இரங்கவேயில்லை.
வாக்குச்சாவடியில் ஒவ்வொரு தமிழன் மனதிலும் நினைவுக்கு வரவேண்டியது முள்ளிவாய்க்காலில் தங்களைக் காப்பாற்றுங்கள் என்று குரல் எழுப்பி மாண்ட அப்பாவி தமிழர்களின் அழுகையொலியே!

•கலைஞரின் மிஸ்ட்கால்

•கலைஞரின் மிஸ்ட்கால்
கலைஞரின் மிஸ்ட்கால் திட்டத்தை கேள்விப்பட்ட ஒரு அப்பாவி ஈழத் தமிழன் அவருக்கு போன் செய்தான். அவன் ஆவலுடன் கேட்ட கேள்விகளும் அதற்கு கலைஞர் அளித்த தெளிவான பதில்களும்.
அப்பாவி ஈழத் தமிழன்- உலகத் தமிழினத் தலைவர் அவர்களே! நாங்கள் ஜயோ என்று கத்தி அலறியது உங்கள் காதில் கேட்கவில்லையா? எங்களை ஏன் காப்பாற்றவில்லை?
கலைஞர்- என் உடன் பிறப்பே! என்னை கடலிலே தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக வந்து உனக்கு உதவுவேன்.
அப்பாவி ஈழத் தமிழன்- நீங்கள் அரம்பித்த சிறப்புமுகாம் இன்னும் மூடப்படவில்லை. இனியாவது அந்த கொடிய சிறப்புமுகாம்களை மூடி அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுதலை செய்வீர்களா?
கலைஞர்- டெசோ மாநாடு நடத்துவேன். சாவதற்குள் தமிழீழம் காண்பேன் என அதில் உரையாற்றுவேன். இது போதாதா?
அப்பாவி ஈழத் தமிழன்- ஈழத்தில் தமிழினத்தை அழித்த காங்கிரஸ் கட்சியுடன் நீங்கள் கூட்டு சேர்ந்திருப்பது துரோகம் இல்லையா கலைஞர் அவர்களே!
கலைஞர்- அதுதான் மாபெரும் 3 மணி நேர உண்ணாவிரதம் மரீனா கடற்கரையில்; நடத்தினேனே. அது போதாதா?
அப்பாவி ஈழத் தமிழன்- மருத்துவ சிகிச்சைக்காக வந்த பிரபாகரன் தாயாரை வயதான பெண் என்றும் பாராமல் திருப்பி அனுப்பினீர்களே. இது நியாயமா கலைஞர் அவர்களே?
கலைஞர்- மௌனம்.
அப்பாவி ஈழத் தமிழன்- மணி என்ற ஒரு ஈழஅகதி சிறுவனை தத்து எடுத்து வளர்த்தீர்களே. இப்போது அந்த சிறுவன் எங்கே? சொத்துக்கு பங்கு கேட்டுவிடுவான் என அஞ்சி ஸ்டாலினால் அந்த அகதி சிறுவன் அநியாயமாக கொல்லப்பட்டுவிட்டான் என்று அறிகிறோமே. அது உண்மையா கலைஞர் அவர்களே?
கலைஞர்- ரெலிபோனை துண்டித்துவிட்டு அருகில் இருந்த துரைமுருகனிடம் "ஏம்பா இந்த மிஸ்டுகோல் திட்டத்தை உடனே கான்சல் பண்ண சொல்லய்யா ஸ்டாலினிடம் என்றார்.
குறிப்பு- இது ஒரு கற்பனை உரையாடல் என்றாலும்கூட இதுதான் உண்மையும் கூட.

•கலைஞர் அவர்களே! இந்த கும்பலில் அந்த அகதி சிறுவனைக் காணவில்லையே?

•கலைஞர் அவர்களே!
இந்த கும்பலில் அந்த அகதி சிறுவனைக் காணவில்லையே?
1983ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான ஈழ தமிழ் அகதிகள் தமிழகத்திற்கு வந்தனர். அப்போது கலைஞர் கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழர்கள் மீது தான் கொண்டிருக்கும் பாசத்தை வெளிப்படுத்துமுகமாக அகதி சிறுவன் ஒருவனை தத்து எடுத்து வளர்த்தார். அந்த சிறுவனுக்கு மணி என்று பெயரும் சூட்டினார்.( ஆதாரம்- முரசொலி)
கீழே கலைஞரின் குடும்ப படம் உள்ளது. அதில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் உள்ளார்கள். ஆனால் அந்த அகதி சிறுவன் மட்டும் காணவில்லை. அந்த அகதி சிறுவன் எங்கே?
சொத்தில் பங்கு குடுக்க வேண்டிவரும் என்பதற்காக,
அந்த அகதி சிறுவனை ஸ்டாலின் குடும்பம் அடித்து விரட்டிவிட்டார்கள் என்றார்கள் முதலில்.
அந்த அப்பாவி அகதி சிறுவனை ஸ்டாலின் அடித்தே கொன்றுவிட்டார் என்கிறார்கள் இப்பொது.
ஸ்டாலினுடன் நீண்டகாலம் ஒன்றாக இருந்து வெளியேறிய பரிதி இளம்வழுதியும் அந்த சிறுவன் எங்கேயென்று கலைஞர் சொல்லட்டும் என்று சவால் விட்டிருக்கிறார்.
அவர் இப்படி சவால் விடுவதை பார்க்கும்போது அந்த சிறுவன் கொலை செய்யப்பட்டுவிட்டான் என்பது உண்மைதான் என நம்பத் தோன்றுகிறது.
கலைஞரின் ஈழப் பாச நடிப்பிற்கு ஒரு அப்பாவி சிறுவன் பலியாகிவிட்டானோ என ஒவ்வொரு ஈழத் தமிழனும் ஏங்குகிறான்.
கலைஞர் அவர்களே!
இப்பவாவது வாய் திறந்து உண்மையைக் கூறுங்கள். அந்த அப்பாவி அகதி சிறுவன் எங்கே?
குறிப்பு- சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தாக்கல் செய்து அந்த அகதி சிறுவனுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க விரும்புகிறேன். யாராவது இன உணர்வுள்ள வழக்கறிஞர்கள் உதவ முன்வருவார்களா?

•நேற்று- திலீபன் இன்று- கன்னையா குமார் நாளை- இதைப் படிக்கும் நீங்களாக இருக்கலாம்

•நேற்று- திலீபன்
இன்று- கன்னையா குமார்
நாளை- இதைப் படிக்கும் நீங்களாக இருக்கலாம்
நேற்று காவல் நிலையத்தில் வைத்து திலீபனின் கையை முறித்தவர்கள்
இன்று நீதிமன்ற வாசலில் வைத்து கன்னையா குமாரை தாக்கியுள்ளனர்.
நாளை உங்கள் வீட்டிற்கள் புகுந்து உங்களையும் தாக்குவார்கள்.
கிட்லரின் பாசிசம் மீண்டும் மோடியின் வடிவில் வருகிறது.
அனைவரும் ஒன்று திரண்டு எதிர்க்கத் தவறினால்
காவிப் பாசிசம் உங்கள் அனைவரையும் விழுங்கிவிடும்
•முஸ்லிம்களையும் கிருத்தவர்களையும் தீயிட்டு கொளுத்தியவர்கள்
•தலித்துகளை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் போனவர்கள்
•சட்டமன்றத்தில் பிட்டு(sex) படம் பார்த்தவர்கள்
•நடிகை ஹேமமாலினிக்கு 70 கோடிரூபா நிலத்தை வெறும் பத்தாயிரம் ரூபாவிற்கு கொடுத்தவர்கள்
•இறந்த ராணுவ வீரர்களுக்கு வாங்கிய சவப் பெட்டியில் ஊழல் செய்தவர்கள்
•மக்களின் 6000கோடி ரூபா பணத்தை எடுத்து அதானி சுரங்கம் தோண்ட டெப்பாசிட் கட்டியவர்கள்
•மேக் இன் இந்தியா என ஒருபுறத்தில் பேசிக்கொண்டு மறுபறத்தில் அரசு நிறுவனத்தை முதலாளி அம்பானிக்கு தாரை வார்த்தவர்கள்
•2012 வரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றாதவர்கள்
•விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து ஒரு தடவைகூட சிறைக்கு போகாதவர்கள்
மற்றவர்களுக்கு தேசவிரோத சேட்டிபிக்கேட் கொடுக்கிறார்கள்
"தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்" என்று தந்தை பெரியார் அன்றே சொன்னார்.
இந்திய நாட்டை அந்நியனுக்க விற்பவர்கள் தேச பக்தர்களாம்
இந்தியநாட்டை அந்நியனுக்கு விற்காதே என்பவர்கள் தேச விரோதிகளாம்.
குனிந்து நடப்பது தேசிய சட்டமென்றால் நிமிர்ந்து நடப்பது தேசத் துரோகம்தான்.
ஆம். நாம் நிமிர்ந்து நடப்போம். தேசத் துரோகிகளாகவே இருப்போம்.

படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில்.

•படிப்பது தேவாரம், இடிப்பது சிவன் கோவில்.
செய்தி- புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர் அனைவரும் இலங்கை திரும்பிவர ஜனாபதி மைத்திரி அழைப்பு
ஜெர்மனி சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரி அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையரை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் ஏற்கனவேயும் இதுபோன்று அழைப்பு விடுத்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் இருந்து திரும்பிச் சென்ற சோசலிசமுன்னனி தலைவர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கடந்த நான்கு மாதமாக அவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.
ஒருபுறம் இலங்கையர்கள் திரும்பி வருமாறு அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி மறுபுறம் அவ்வாறு வந்த குமார் குணரட்னத்தை சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, ஜெர்மனியில் கிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் சாமாதிகளைப் பார்த்து இரங்கியுள்ளாராம். ஆனால் இலங்கையில் பல்லாயிரம் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டது மட்டுமல்ல அவர்களுடைய நினைவு சின்னங்களும் புல்டோசர்களால் அழிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இறந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை. ஆனால் இலங்கை ஜனாதிபதி ஜெர்மனியில் இறந்த யூதர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.
இதைத்தான் படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்றார்களோ?

•ஸ்டாலின் அவர்களும் ஈழத் தமிழரும்

•ஸ்டாலின் அவர்களும் ஈழத் தமிழரும்
வருங்கால தி.மு.க தலைவரும்
வருங்கால தமிழக முதலமைச்சரும்
அதையடுத்து, வருங்கால உலகத்தமிழின தலைவருமான
ஸ்டாலின் அவர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்று கூறியுள்ளார்.
அந்த அனைத்து பிரச்சனைகளிலும் கீழ்வரும் விடயங்களும் அடங்குமா என்பதை யாராவது அவரிடம் கேட்டு சொல்லுங்களேன் பிளீஸ்!
•கலைஞரால் தொடங்கப்பட்ட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் மூடப்படுமா?
•அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படுவார்களா?
•தமிழகத்தில் 33 வருடங்களுக்கு மேலாக இருந்துவரும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுமா?
•ஈழ அகதிகள் தமிழகத்தில் உயர்கல்வி பெற அனுமதி வழங்கப்படுமா?
•ஈழ அகதிகள் கியூபிரிவு பொலிஸ் தொந்தரவு இன்றி சுதந்திரமாக திரிய அனுமதிக்கப்படுமா?
•அகதிகள் ஆட்டோ ஓட்டிப் பிழைக்கவாவது லைசென்ஸ் எடுக்க அனுமதி அளிக்கப்படுமா?
இந்த கேள்விகள் எழுவதற்குரிய காரணம், நமக்குநாமே திட்டத்தின்கீழ் பல்லாயிரம் மைல்கள் நடந்து மக்கள் பிரச்சனைகளை கேட்டதாக கூறும் ஸ்டாலின் அவர்கள், வழியில் இருந்த ஒரு அகதி முகாமுக்குகூட செல்லவில்லை. அவர்களின் பிரச்சனைகளை கேட்கவில்லை.
அகதிகளுக்கு வாக்குரிமை இல்லாதபடியால்தான் ஸ்டாலின் அவர்கள் பிரச்சனைகளை கேட்கவில்லை?
அகதிகளை தமிழர்களாக நினைக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களையும் மனிதர்களாகாவது மதித்திருக்கலாம் அல்லவா!
கடந்தகால தவறுகளுக்கு தான் மன்னிப்பு கோருவதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் அவர்களே!
கலைஞர் சிறப்புமுகாமை ஆரம்பித்து அதில் அகதிகளை அடைத்தமைக்கு மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை,
தமிழகத்தை நம்பிவந்த அகதிகளை கண்டுகொள்ளாமல் இருந்தமைக்கு மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை,
முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழ்மக்கள் அழிவதை காக்க தவறியமைக்கு மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை,
மருத்துவ சிகிச்சைக்காக வந்த பிரபாகரன் தாயாரை வயதான பெண்மணி என்றும் பாராமல் திருப்பி அனுப்பியமைக்காக மன்னிப்பு கேட்காவிட்டாலும் பரவாயில்லை,
கலைஞர் தத்து எடுத்த அகதி சிறுவனை சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக அடித்துக் கொன்றீர்களே அதற்காவது மன்னிப்பு கேளுங்கள்.

•நேற்று- வித்தியா இன்று -ஹரிஸ்ணவி நாளை- ?????

•நேற்று- வித்தியா
இன்று -ஹரிஸ்ணவி
நாளை- ?????
நேற்று வித்தியா என்ற பள்ளி மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
ஜனாதிபதி மைத்திரி வித்தியாவின் தாயாரை நேரில் சந்தித்து சிறப்பு நீதிமன்றம் அமைத்து குற்றவாளிகளை விரைவில் தண்டிப்போம் என்றார்.
அமைச்சர்கள்கூட வீதியில் இறங்கிப் போராடினார்கள்.
இன்று இன்னொரு பள்ளி மாணவி ஹரிஸ்ணவி வவுனியாவில் பாலியல் வல்லுறலு செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி வெளிநாடு சென்றுவிட்டார். இல்லையேல் இந்த பள்ளிமாணவியின் தாயாரையும் சந்தித்து விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று உறுதிமொழி கூறியிருப்பார்.
நாளை இன்னொரு மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்படுவார். அப்போதும் எமது தலைவர்கள் உறுதி மொழி கொடுத்துக்கொண்டு இருப்பார்கள்.
எமது தலைவர் சம்பந்தர் அய்யா இருக்கிறார். அவருக்கு பொலிஸ் காவல் உள்ளது.
எமது முதலமைச்சருக்கு பொலிஸ் காவல் உள்ளது.
எமது பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் பொலிஸ் காவல் உள்ளது.
ஆனால் இவர்களை வோட்டு போட்டு தெரிவு செய்த தமிழ்மக்களுக்குதான் பாதுகாப்பு இல்லை.
புலிகளை பயங்கரவாதிகள் என்றார்கள். ஆனால் அந்த பயங்கரவாதிகளின் காலத்தில் ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்படவில்லையே!
இதுகுறித்து நல்லாட்சி ஜனாதிபதி மைத்திரியும் வாழ்நாள்வீரர் சம்பந்தார் அய்யாவும் என்ன சொல்லப்போகிறார்கள்?
எயிட்ஸ் நோயாளியை ஒதுக்காமல் சமூகத்துடன் அரவணைத்து கொள்ள வேண்டும் என மருத்துவம் கூறுகிறது.
ஆனால் இலங்கையில் எயிட்ஸ் நோயால் இறந்ததாக வதந்தி பரப்பப்பட்ட ஒருவரின் 6 வயது மகனுக்கு பாடசாலையில் கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இச் சிறவனுக்கு எந்த எயிட்ஸ் நோயும் இல்லை என்று மருத்துவர்கள் உறுதிசெய்துதும்கூட எட்டு பாடசாலைகள் அனுமதி மறுத்துவிட்டன.
வேறு மாவட்டத்தில் போய் கல்வி கற்கும்படி மாவட்ட கல்வி அதிகாரியே கூறியிருக்கிறார்.
ஏழை சிறுவனும் அவன் தாயாரும் என்ன செய்ய முடியும்?
நம்புங்கள். இலங்கையில் நடப்பது நல்லாட்சியேதான்!

•தமிழக அரசு தயவு காட்டுமா? பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்குமா?

•தமிழக அரசு தயவு காட்டுமா?
பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்குமா?
பேரறிவாளனின் தந்தையார் குயில்தாசன் அவர்கள் கடும் சுகயீனமுற்றுள்ளார். அவர் தான் இறப்பதற்கு முன்னர் பேரறிவாளனை பார்வையிட விரும்புகிறார்.
பேரறிவாளனும் தனது தந்தையாரைப் பார்வையிடுவதற்காக ஒரு வார பரோல் விடுமுறை கேட்டுள்ளார்.
பேரறிவாளன் கைதான காலத்தில் இருந்து 25 வருடங்களாக இதுவரை பரோல் விடுமுறை கேட்டதேயில்லை.
ஒரு ஆயுள்தண்டனை சிறைவாசி வருடத்தில் மூன்றுமுறை மொத்தம் 60 நாட்கள் பரோல் விடுமுறை பெறமுடியும். எனவே சிறை விதிகளின்படி பேரறிவாளன் பரோல் விடுமுறை பெறமுடியும்.
பேரறிவாளனதும் அவரது தந்தையினதும் விருப்பப்படி தமிழகஅரசு தயவு காட்ட வேண்டும். பேரறிவாளனுக்கு பரோல் விடுமுறை தாமதம் இன்றி உடன் வழங்க வேண்டும்.
சிறைத் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத் சிறையில் இருந்த காலத்தைவிட பரோலில் இருந்த காலமே அதிகம்.
அதுமட்டுமல்ல சஞ்சய்தத் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டு தண்டனைக்காலம் முடியுமுன்னரே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அப்பாவியான பேரறிவாளன் உண்மையில் விடுதலை செய்யப்பட வேண்டும். தமிழக அரசு விடுதலை செய்ய முன்வாராவிடினும் அவரை பரோலில் விடுவிக்கவாவது முன்வரவேண்டும்.
இப்பொது தேர்தல் காலம். எனவே பேரறிவாளன் கோரிக்கையை தேர்தல் கண்ணோட்டத்தில் அணுகாமல் சட்டப்படியும் நியாயப்படியும் அணுக வேண்டும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றால் நடிகர் சஞ்சய்தத்தும் பேரறிவாளனும் ஒரே மாதிரியாகவே சட்டத்தின் முன் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் இந்தியாவில் சஞ்சய்தத்திற்கு ஒரு நியாயம், பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம் வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்?
உள்ளவனுக்கு ஒரு நியாயம்.
இல்லாதவனுக்கு இன்னொரு நியாயம்.
இதுதான் இந்திய நியாயமா?

தமிழ் மாணவன் ஒருவேளை ஜனாதிபதியானாலும் தமிழ் கைதிகள் ஒருபோதும் விடுதலை பெற முடியாது!

• தமிழ் மாணவன் ஒருவேளை ஜனாதிபதியானாலும்
தமிழ் கைதிகள் ஒருபோதும் விடுதலை பெற முடியாது!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சாரணர் விழாவில் பங்குபற்றிய ஜனாதிபதி மைத்திரி அவர்கள், யாழ் மாணவன் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக முடியும் என்று தெரிவித்தார்.
யாழ்மாணவன் ஒருவேளை ஜனாதிபதியானாலும் தமிழ்கைதிகள் ஒருபோதும் விடுதலை அடைமுடியாது போல் உள்ளது.
ஏனெனில் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி 15 தமிழ் அரசியல்கைதிகள் காலவரையற்ற உண்ணாவிரதம் நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளனர்.
அவர்கள் தாங்கள் இந்த உண்ணாவிரதத்தில் மரணமுற்றால் தமது உடல்களை யாழ் பல்கலைக்கழக மருத்தவபீடத்திடம் ஒப்படைக்கும்படியும், அரசியல்வாதிகளிடம் எக்காரணம்கொண்டும் ஒப்படைக்க வேண்டாம் என்றும் கோரியுள்ளனர்.
தமிழர் ஒருவர் மகாண முதலமைச்சராக இருக்கிறார்
தமிழர் ஒருவர் எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்
தமிழா சிலர்; அமைச்சர்களாக இருக்கிறார்கள்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்
தமிழ் பிரதேசபை உறுப்பினர்கள்கூட இருக்கிறார்கள்
இத்தனை தமிழ் பிரதிநிதிகள் இருந்தும் இவர்கள் யாரிடமும் தமது உடல்களை ஒப்படைக்க வேண்டாம் என்று கைதிகள் கூறுகின்றார்கள் எனில் இதைவிட கேவலம் இவர்களுக்கு என்ன இருக்கு?
தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் என்று அறிந்த அடுத்த நிமிடமே எமது "வாழ்நாள் வீரர்" சம்பந்தர் அய்யா இந்தியா எஸ்கேப் ஆகிவிடுவார்.
அவரின் வாரிசு "சின்ன கதிர்காமர்" சுமந்திரன் அவர்கள் பேச்சுவாhத்தை செய்வதாக கூறி போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பார்.
நமது "வெடிகுண்டு முருகேசன்" மாவையார் வழக்கம்போல் போராட்டம் வெடிக்கும் என்று அறிக்கைவிட்டிட்டு தூங்கப் போய்விடுவார்.
நல்லாட்சி ஜனாதிபதி மைத்திரியோ இது எதுவுமே தமக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி "தமிழன் எதிர்கால ஜனாதிபதியாகலாம்" என்று கதைவிடுவார்.
புதிதாக பதவியேற்ற ஆளுநரோ கலப்பு திருமணம் செய்தால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்று இன்னொரு கதை சொல்வார்.
பாவம் கைதிகள் மட்டுமல்ல, இவர்களை வோட்டு போட்டு தெரிவு செய்ய தமிழ் மக்களும்தான்..

•சிறப்புமுகாம்களை மூடும்படி தேர்தல் முழக்கமாக்குவோம்!

•சிறப்புமுகாம்களை மூடும்படி தேர்தல் முழக்கமாக்குவோம்!
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் யாவும் வரவுள்ள தேர்தலை முன்னிட்டு தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
எந்த ஆரசியல்கட்சியும் தமது தேர்தல் அறிக்கையில் சிறப்பு முகாம்களை மூடுவது குறித்து எதுவும் தெரிவிக்காதது ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும் கட்சிகள்கூட தான் ஆட்சிக்கு வந்தால் சிறப்புமுகாம்களை மூடுவோம் என தெரிவிக்காதது கவலையளிக்கிறது.
1990 ல் கலைஞர் கருணாநிதியினால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் இன்னும் மூடப்படவில்லை.
சிறப்புமுகாம்களை மூடும்படி வைகோ, ராமதாஸ், திருமாவளவன் மற்றும் சீமான் எல்லோரும் போராடியிருக்கின்றார்கள்.
மனிதவுரிமை அமைப்புகள் மற்றும் பல புரட்சி அமைப்புகள் கூட சிறப்புமகாமை மூடும்படி வலியுறுத்தியுள்ளன.
ஆனால் சிறையைவிடக் கொடிய முகாமாக இருக்கும் சிறப்புமுகாம் இன்னும் மூடப்படவில்லை.
அதில் அடைத்து வைக்கப்ட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இது தேர்தல் காலம். எனவே ஈழத் தமிழர் மீது அன்பும் அக்கறையும் உள்ளவர்கள் தமிழக கட்சிகளிடம் இது குறித்து வலியுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.
வாக்கு கேட்டு வரும் கட்சிகளிடம் சிறப்புமுகாமை மூடும்படி கோர வேண்டும் என தமிழக உறவுகளிடம் ஈழத் தமிழர் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
சிறப்புமுகாம் மூடப்படவேண்டும் என்பதை தேர்தல் முழக்கமாக்குவோம்.
ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் இதனை இடம்பெறச் செய்வோம்.

•இலங்கை ஏலம் விடப்படுகிறது

•இலங்கை ஏலம் விடப்படுகிறது
ஏலம்- முதலாம் தரம்
ஏலம்- இரண்டாம் தரம்
ஏலம்- மூன்றாம் தரம்
இந்தியாவை எதிர்த்து எந்த வல்லரசும் ஏலம் எடுக்க முன்வராததால் இந்தியாவுக்கே முழு இலங்கையும் ஏலம் கொடுக்கப்படுகிறது.
பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையை ஆக்கிரமித்த இந்தியா தற்போது எட்கா ஒப்பந்தம் மூலம் முழு இலங்கையையும் தனது 30 வது மாநிலமாக்க முனைகிறது.
ஏற்கனவே,
சம்பூர் கொடுக்கப்பட்டுவிட்டது
புல்மோட்டை கொடுக்கப்பட்டுவிட்டது
காங்கேசந்துறை கொடுக்கப்பட்டுவிட்டது
பலாலி விமான நிலையம் கொடுக்கப்பட்டுவிட்டது
மன்னார் எண்ணெய்வளம் கொடுக்கப்பட்டுவிட்டது
இதுபோதாதென்று சீபா ஒப்பந்தம் போட இருந்தார்கள்.
அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இப்போது எட்கா ஒப்பந்தம் போட முனைகிறார்கள்.
தமிழ் மக்களின் நலன்களுக்காக இலங்கை இனப்பிரச்சனையில் தலையிடுவதாக கூறிய இந்திய அரசு, இனப்பிரச்சனையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி முழு இலங்கையையும் ஆக்கிரமித்துள்ளது.
கண்முன்னே நடக்கும் இந்த ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாமல் இன்னமும் இந்தியாவை நம்ப வேண்டும் என்று கூறும் நம்மவர்களை என்னவென்று அழைப்பது?
இத்தனை அழிவையும் மேற்கொண்ட, இத்தனை அழிவுக்கும் காரணமான இந்திய அரசை இன்னமும் தமிழ் மக்கள் நம்ப வேண்டும் என்றால் அதன் அர்த்தம் என்ன?
சில நாய்க்குட்டிகளுக்கு பிஸ்கட் துண்டை வீசிவிட்டு மொத்த தமிழினமும் தனக்கு வாலாட்டும் என இந்திய அரசு கனவு காண்கிறது.
ஆனால் தமிழ் மக்கள் ஒருபோதும் ஆக்கிரமிப்பிற்கு துணை போக மாட்டார்கள். அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவார்கள்.
தமிழ் சிங்கள உழைக்கும் மக்கள் ஜக்கியப்பட்டு போராடுவதன் மூலமே இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை பெறமுடியும்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் மூலமே உண்மையான தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் சாத்தியமாகும்.
சிங்கள மக்கள் இந்த உண்மையை உணர வேண்டிய தருணம் இது!

•சஞ்சய்தத்திற்கு ஒரு நீதி பேரறிவாளனுக்கு இன்னொரு நீதி இதுதான் இந்திய நீதியா?

•சஞ்சய்தத்திற்கு ஒரு நீதி
பேரறிவாளனுக்கு இன்னொரு நீதி
இதுதான் இந்திய நீதியா?
செய்தி- சஞ்சய்தத் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஏ.கே 47 ஆயுதம் வைத்திருந்தமைக்காக 5 வருடம் தண்டனை பெற்ற சஞ்சய்தத் 4 வருட சிறைவாசமே அனுபவித்த நிலையில் இன்று முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பற்றரி வாங்கி கொடுத்த குற்றத்திற்காக ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் 25 வருடங்கள் கழித்துவிட்டபோதும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
சஞ்சய்தத்திற்கு பல முறை பரோல் விடுமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது அமெரிக்க காதலியுடன் சேர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டது.
ஆனால் பேரறிவாளன் தனது தந்தை கடும் சுகயீனமுற்று இருப்பதாகவும் அவரைப் பார்க்க பரோல் விடுமுறை கேட்டுள்ளார். ஆனால் இன்னமும் பரோல் விடுமுறை வழங்கப்படவில்லை.
நளினியின் தந்தையார் இறந்தமைக்காக 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டது. அதுபோல் பேரறிவாளனுக்கும் தந்தை இறந்த பின்புதான் பரோல் வழங்கப்படும்போல் தெரிகிறது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் சஞ்சய்தத்ற்கு ஒரு நீதியும் பேரறிவாளனுக்கு இன்னொரு நீதியும் வழங்கப்படுகிறது. இது என்ன நியாயம்?
உள்ளவனுக்கு ஒரு நீதி.
இல்லாதவனுக்கு இன்னொரு நீதி.
இதுதான் இந்திய நீதியா?

•இந்த ஆதிவாசிப்பெண் செய்த தவறு என்ன?

•இந்த ஆதிவாசிப்பெண் செய்த தவறு என்ன?
தனது நிலத்தை அந்நியருக்கு விற்காதே என்று கூறுவது
இந்தியாவில் அத்தனை பெரிய தவறா?
சோனி கோரி.
சதீஸ்கர் மாநிலத்தில் வாழும் ஒரு ஆதிவாசிப் பெண்.
இவரை மாவோயிஸ்ட் பயங்கரவாதி என்றார்கள்
இவரை கைது செய்து சித்திரவதை செய்தார்கள்
இவருக்கு மின்சார தாக்குதல் கொடுத்தார்கள்
இவரை பாலியல் வல்லுறவு செய்தார்கள்.
இவர் பெண் உறுப்பில் கூரிய கல்லைச் செருகினார்கள்.
இத்தனை சித்திரவதை செய்த காவல் துறை அதிகாரிக்கு குடியரசுப் பதக்கம் வழங்கினார்கள்.
ஒரு பெண்ணின் உறுப்பில் கல்லை செருகுவதன் மூலம் எப்படி மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க முடியும்? என்ற நீதிபதியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அரசு தடுமாறியது.
இறுதியாக உச்ச நிதிமன்றம் சோனி கோரியை விடுதலை செய்தது.
அதனையும் பொறுக்காமல் தற்போது சோனி கோரியின் முகத்தில் அசிட் வீசியுள்ளார்கள்.
நல்லவேளை அவர் கண்கள் பாதிக்காமல் தப்பியுள்ளன.
அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தனைக்கும் இவர் செய்த தவறு என்ன?
அரசியல்வாதிகள் போல் ஊழல் செய்தாரா?
முதலாளிகள் போல் கொள்ளையடித்தாரா?
(ஆ) சாமிகள் போல் லீலைகள் புரிந்தாரா?
நாட்டைக் காட்டிக் கொடுத்தாரா?
இவை எந்த தவறையும் அவர் செய்யவில்லையே?
அவர் கேட்டதெல்லாம் தான் வாழும் நிலத்தை அந்நிய கம்பனிகளுக்கு விற்காதே என்ற ஒன்றை மட்டும்தானே!
காப்ரேட் கம்பனிகளுக்கு நாட்டை விற்காதே என்று கேட்பது
இந்தியாவில் அத்தனை பெரிய தவறா?
காவி ஞாயம்மாரே!
இதற்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்?

•பிரித்தானிய பிரதமரும் தமிழக முதல்வரும்

•பிரித்தானிய பிரதமரும் தமிழக முதல்வரும்
பெரும் வல்லரசுகளில் ஒன்றான பிரித்தானியாவின் பிரதமர் பந்தா எதுவுமின்றி திரிகிறார். தானே கடைக்கு சென்று மீன் வாங்குகிறார். மக்களும் இதனை ஆச்சரியமாக பார்ப்பதில்லை.
ஆனால் இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல்வர் ஜெயா அம்மையார் கறுப்பு பூனை பாதுகாப்பு இன்றி வெளியே வர தயங்கிறார். இவர் "புரட்சிதலைவி" என்கிறார்கள். தமிழ் மக்களின் "அம்மா" என்கிறார்கள். அப்படியென்றால் ஏன் கறுப்பு பூனை பாதுகாப்பு?
ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஜனநாயக தலைவருக்கு இத்தனை பாதுகாப்பு என்பது வெட்கப்பட வேண்டியதொன்றல்லவா?
மக்களின் தலைவர்கள் என தங்களை அழைத்துக்கொள்ளும் இவர்கள் மக்கள் மத்தியில் வருவதற்கு ஏன் இத்தனை பாதுகாப்பு?
ஜெயா அம்மையாரின் எல்லா தவறுகளையும் சுட்டிக்காட்டும் கலைஞர் அவர்களும் இந்த கறுப்பு பூனை பாதுகாப்பை விமர்சிப்பதில்லை. ஏனென்றால் அவரும்கூட அந்த பாதுகாப்பை கொண்டிருக்கிறார்.
கலைஞர் இப்போது பதவியில் இல்லை. சட்டசபைக்கும் செல்வதில்லை. அவருக்கு எதற்கு கறுப்புபூனை பாதுகாப்பு?
கலைஞருக்கும் ஜெயா அம்மையாருக்கும் புலிகளால் உயிராபத்து என்றே பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இப்போது புலிகள் அழிந்து 7 வருடமாகிவிட்டது. இன்னும் எதற்கு இவர்களுக்கு கறுப்புபூனை பாதுகாப்பு?
இவர்கள் கறுப்பு பூனை பாதுகாப்பு வைத்திருப்பது பாதுகாப்பிற்காக அல்ல. வெறும் வெட்டிப் பந்தாவுக்காகவே.
ஒவ்வொரு தமிழன் தலையிலும் 33 ஆயிரம் ரூபா கடன் உள்ளது என்று நிதியமைச்சர் பனன|Pர்செல்வம் கூறுகிறார்.
அதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதும் 6000 பள்ளிகளில் டாய்லெட் வசதி இல்லை.
இந்த நிலையில் மக்களின் வரிப்பணத்தில் தலைவர்களுக்கு வீண் பாதுகாப்பு தேவைதானா?
தமிழக மக்கள் இந்த கேள்வியை தேர்தலில் எழுப்புவார்களா?

Monday, February 15, 2016

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் போகும். ஓடமும் ஒரு நாள் வண்டியில் போகும்

வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் போகும்.
ஓடமும் ஒரு நாள் வண்டியில் போகும்
தன் மகன் தவறு செய்திருந்தால் தண்டியுங்கள் என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
மகிந்த மனுநீதிச் சோழனும் அல்ல. அவர் தன் மகனை தேர் ஏற்றிக் கொல்லப்போவதும் இல்லை.
தன் மகனுக்கு பதிலாக தன்னை கைது செய்யுமாறு மகிந்த கண்ணீர் மல்க கூறினார்.
எத்தனை தாய்மார்கள் அவர் காலைப் பிடித்து கதறினார்கள்?
எத்தனை தந்தைமார் கண்ணீர் மல்க அவரிடம் மன்றாடினார்கள்?
எத்தனை கைதிகள் விடுதலை செய்யும்படி அவரிடம் கேட்டார்கள்?
அப்போதெல்லாம் கொஞ்சம்கூட இரக்கம் காட்டாதவர் இப்ப எந்த முகத்துடன் மக்களிடம் கெஞ்சுகிறார்?
தன் பிள்ளைக்கு வந்தால் ரத்தம். மற்றவன் பிள்ளைக்கு வந்தால் தக்காளி சட்னியா?
இவர் பதவியில் இருக்கும்போது இவருடைய மகன்மார்கள் என்ன ஆட்டமெல்லாம் போட்டார்கள்?
ஒரு இளவரசர்கள் போல் அல்லவா டாம்பீக வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
அவர்கள் சவாரி செய்ய லண்டன் பகிங்காம் மாளிகையில் இருந்து குதிரை இறக்குமதி செய்தார்கள்.
இந்த குதிரையில் சவாரி செய்ய தினமும் கெலிகப்டரில் கொழும்பில் இருந்து நுவரேலியா சென்றார்கள்.
இளம் பெண்களை மயக்க வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த கார்களை இறக்குமதி செய்தார்கள்.
அந்த இளம்பெண்களுடன் ஓட்டல்களில் குடித்து கும்மாளம் அடித்தார்கள்.
தான் விரும்பிய பெண் தன்னை விரும்பவில்லை என்பதற்காக அப் பெண் முன்னெ அவள் காதலனை சித்திரவதை செய்து கொன்றார்கள்.
அப் பெண் இதுகுறித்து வாய் திறக்கக்கூடாது என்று மிரட்டி வெளி நாட்டில் உள்ள தூதரகம் ஒன்றில் பணி செய்ய அனுப்பி வைத்தார்கள்.
இப்படிப்பட்ட மகனை கைது செய்தால் தான் தற்கொலை செய்வேன் என தாயார் சிராந்தி ராஜபக்ச மிரட்டுகிறார்.
இவர்கள் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச தனக்கு பதவி தந்தது திருப்பதி சாமி என நம்புகிறார்.
மகிந்த ராஜபக்ச தனக்கு அதிகாரம் கிடைத்தது சோதிடத்தால் என நம்புகிறார்.
மகிந்த ராஜபக்ச தனக்கு பணம் கிடைத்தது தன் கையில் போட்டிருக்கும் மோதிரங்களால் என நம்புகிறார்.
ஆனால் ,
தனக்கு பதிவி தந்தது மக்கள் என்பதை அவர் மறந்துவிட்டார்.
தனக்கு அதிகாரத்தை தந்தது மக்கள் என்பதை மறந்துவிட்டார்.
பதவியும் அதிகாரத்தையும் தந்த அதே மக்களே அவற்றை பறித்தவிட்டார்கள் என்பதை அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
திருப்பதி சாமியோ அல்லது கூட இருக்கும் சோதிடரோ அல்லது கையில் அணிந்திருக்கும் மோதிரங்களையோவிட உண்மையான மகத்தானசக்தி மக்களே.
மக்களே மகத்தான சக்தி என்பதை மகிந்த முதலில் உணர வேண்டும்.

ஜ.நா வுக்கும் பெப்பே சம்பந்தர் அய்யாவுக்கும் பெப்பே மொத்த தமிழினத்திற்கும் பெப்பெப்பே

•ஜ.நா வுக்கும் பெப்பே
சம்பந்தர் அய்யாவுக்கும் பெப்பே
மொத்த தமிழினத்திற்கும் பெப்பெப்பே
செய்தி- இலங்கை அரசியல்சாசனப்படி வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்க முடியாது- பிரதமர் ரணில் தெரிவிப்பு
முதலில் சர்வதேச விசாரணை என்றார்கள்
பின்னர் வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய உள்நாட்டு விசாரணை என்றார்கள்.
இப்போது வெளிநாட்டு நீதிபதிகள் பார்வையாளராக கலந்துகொள்ளலாம். ஆனால் தீர்ப்பு வழங்க முடியாது என்கிறார்கள்.
இனி அடுத்து வெளிநாட்டு நீதிபதிகள் பார்வையாளராகவும் கலந்துகொள்ள முடியாது என்பார்கள்.
அதன் பின்னர் இராணுவத்தின் மீது எந்த விசாரணையும் நடத்த முடியாது என்பார்கள்.
40 அயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை எப்படி சர்வசாதரண விடயமாக ஆக்கிவிட்டார்கள்?
இங்கு கவலை தரும் விடயம் என்னவெனில் சிங்கள ஆட்சியாளர்கள் ஆரம்பம் முதலே எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாது என்பதை உறுதியாக தெரிவித்து வருகிறார்கள்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரியும்கூட எந்த விசாரணையும் கிடையாது என்று கூறிவிட்டார்.
ஆனால் எமது தமிழ் தலைவர்கள்தான் அவர்களை நம்பும்படி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
"சின்ன கதிர்காமர்" சுமந்திரன் அவர்கள் நாடுநாடாக சென்று பிரச்சாரம் செய்தார்
முதலில் ,நடந்தது இனப்படுகொலைதான் ஆனால் அதற்கு ஆதாரம் இல்லாத படியால் அதை போர்க்குற்றம் என்றே கூறவேண்டும் என்றார்.
அடுத்து சர்வதேச விசாரணை தேவையில்லை. சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை போதும் என்றார்.
இனி அடுத்து என்ன கூறப்போகிறார்?
இலங்கை அரசு மட்டுமல்ல இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் எல்லாம் சேர்ந்தே தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
இவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு எமது தலைவர்களான சம்பந்தர் அய்யா, சுமந்திரன் ஆகியோர் துணை போகின்றனர்.
இலங்கை அரசு இன அழிப்பு செய்வதற்கு இந்தியா அமெரிக்கா சீனா போன்ற நாடுகள் எல்லாம் உதவி புரிந்து வந்துள்ளன.
இன்றும்கூட இந்திய அரசே இலங்கையைக் காப்பாற்றி வருகிறது.
இதை புரிந்து கொள்ளாமல் இவர்களிடமே எமக்குரிய நீதியை வழங்கும்படி கேட்கும் முட்டாள் தனத்தை என்னவென்று அழைப்பது?
இனியாவது இந்த அழிப்பு நாடுகளை நம்புவதை விடுத்து மக்களை நம்புங்கள்.