Tuesday, January 31, 2017

•பொலிஸ் மக்களின் நண்பன் அல்ல.

•பொலிஸ் மக்களின் நண்பன் அல்ல.
அது எப்போதும் அரசின் ஏவல் நாய்!
அமைதியாக போராடிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது தமிழக அரசு பொலிஸ் அடக்குமுறையை ஏவியுள்ளது.
மாணவர்களுக்கு உணவு கொடுக்க முயன்ற மீனவ பெண்கள் மீது பொலிஸ் இரக்கமின்றி தடியடி நடத்தியுள்ளது.
போராடும் மாணவர்களை கலைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் மாணவர்கள் பலாத்காரமாக அப்புறப்படுத்தப்படுகின்றனர்.
இதுவரை போராடுபவர்களை மாணவர்கள் என்று அழைத்தவர்கள் இப்போது அவர்களை கலகக்காரர்கள் என்று முத்திரை குத்துகின்றனர்.
பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்ட்ட இளைஞர்கள் மீது வேண்டுமென்றே பொலிசாரால் பொய் வழக்குகள் போடப்படுகின்றன.
உலகம் முழுவதும் தமிழர் திரண்டு ஆதரவு தெரிவித்த போராட்டம் பொலிசாரின் அராஜகத்தால் அடக்க முயற்சிக்கப்படுகிறது.
பொலிஸ் மக்களின் நண்பன் இல்லை. அது அரசின் ஏவல் நாய் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்படுகிறது.

•மக்கள் மீது வன்முறை திணிக்கப்பட்டால் அதே வன்முறையால் மக்கள் பதில் அளிப்பர்!

•மக்கள் மீது வன்முறை திணிக்கப்பட்டால்
அதே வன்முறையால் மக்கள் பதில் அளிப்பர்!
அமைதி வழியில் மக்கள் போராடும்போது அவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டால் மக்கள் அதே வன்முறையை கையில் எடுப்பர்.
மக்கள் என்ன வழியில் போராட வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பதில்லை. மாறாக மக்களை அடக்கும் அரசே தீர்மானிக்கின்றது.
இதுதான் இன்று இலங்கையில் நடந்து. இதுதான் இன்று தமிழகத்தில் நடக்கின்றது. இதுதான் உலகெங்கும் நடக்கிறது.
அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு வன்முறையை பிரயோகித்தமையினால்தான் தமிழ் இளைஞர்கள் வேறு வழியின்றி வன்முறையை தேர்ந்தெடுத்தனர்.
இதையேதான் டெலோ தலைவர் தங்கத்துரை இலஙகை நீதிமன்றத்தில் கூறினார்” நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் இல்லை “ என்று
அதுமட்டுமல்ல இன்று அனையிறவில் ராணுவம் செய்யும் வன்முறை நாளை அம்பாந்தோடடையிலும் நடக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
அதேபோல் காஸ்மீரில் பொலிஸ் என்ன செய்கிறதோ, சதீஸ்கரில் பழங்குடி மக்களுக்கு பொலிஸ் என்ன செய்கிறதோ அதையேதான் தமிழகத்திலும் பொலிஸ் செய்ய முனைகிறது.
இன்று தானே கொழுத்திவிட்டு மாணவர்களை கலகக்காரர்கள் என்று கூறும் பொலிஸ், நாளை அவர்களை சுட்டுக் கொன்று விட்டு பயங்கரவாதிகள் என்றும் கூறும்.
வன்முறையைக் காட்டி மக்களை அடக்கிவிட முடியாது. மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டால் அதே வன்முறை மூலம் மக்கள் தக்க பதில் அளிப்பார்கள்.

•தோழர் தமிழரசன் அன்று சொன்னதும் தமிழக மக்கள் இன்று உணர்ந்து கொண்டதும்!

•தோழர் தமிழரசன் அன்று சொன்னதும்
தமிழக மக்கள் இன்று உணர்ந்து கொண்டதும்!
தோழர் தமிழரசன் 33 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னது உண்மைதான் என்பதை தமிழக மக்கள் இன்று தமது அனுபவத்தில் உணர்ந்து கொண்டனர்.
அகிம்சை வழியில் தீர்வு பெறமுடியாது. அகிம்சை போராட்டத்தை பொலிஸ் அடக்கிவிடும் என்று தோழர் தமிழரசன் அன்று சுட்டிக்காட்டியதை இன்று தமிழக மக்கள் தமது அனுபவத்தின் மூலம் கண்டு கொண்டனர்.
ஆயதப் போராட்டத்தின் மூலமே தீர்வு பெறமுடியும் என்பதை தோழர் தமிழரசன் அன்று கூறினார். அதை இன்று தமிழக மக்கள் தமது அனுபவத்தில் இருந்து புரிந்து கொண்டனர்.
தோர்தல் பாதை திருடர் பாதை என்றும் அதனை மக்கள் பகிஸ்கரிக்க வேண்டும் என்றும் தோழர் தமிழரசன் கூறினார். மக்களால் தேர்;ந்தெடுக்கப்பட்ட இத்தனை பிரதிநிதிகளும் இருந்தும் தீர்விற்காக மக்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டதை அவர்கள் புரிந்துகொண்டனர்.
தமிழக மக்கள் மட்டுமல்ல உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு பொராட வேண்டும் என்று தோழர் தமிழரசன் விரும்பினார். இன்று அது நடந்து வருவதை தமிழக மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
இந்திய அரசு ஒருபோதும் தமிழக மக்களின் நலனில் அக்கறை செலுத்தாது. தமிழ்நாடு தனி நாடாக பிரிவதே தமிழக மக்களின் நலனுக்கு உகந்தது என்று தோழர் தமிழரசன் கூறினார்.
இன்றைய தமிழக மக்களின் போராட்டம் தமிழக மக்களுக்கு இந்திய அரசை இனங்காட்டியுள்ளது. தமிழ்நாடு தனிநாடாக மலர வேண்டும் என பலரும் வெளிப்படையாகவே கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்று அரசு வன்முறை மூலம் தமிழக மக்களை அடக்க முனைந்துள்ளது. இதுவரை அமைதி வழியில் போராடிய இளைஞர்கள் மீது வன்முறையை ஏவியுள்ளது.
இளைஞர்கள் இதற்கெல்லாம் பயந்துவிட மாட்டார்கள். ஒருபோதும் அடிமைத் தனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தோழர் தமிழரசன் காட்டிய வழியில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் தகுந்த பதில் அளிப்பார்கள். இது உறுதி.

இது முடிவல்ல ஆரம்பம்!

இது முடிவல்ல ஆரம்பம்!
கடல் அலை போல் பொங்கி எழுவோமேயொழிய
காக்கி சட்டைகளின் அராஜகத்திற்கு அடி பணிய மாட்டோம்!
மெரினா கடற்கரை மட்டுமல்ல
தமிழ் மக்களுக்காக போராடியவர்களும்
உலக வரலாற்றில் பெருமைக்குரிய இடத்தை பெறுகிறார்கள்!
கடல் மணலில் ஆழப் புதைக்கப்படப்போவது இந்திய அரசே யொழிய
தமிழ் மக்களின் வீரம் செறிந்த போராட்ம் அல்ல!

•மக்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

•மக்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
தலைவரோ கட்டிங் அடித்து விட்டு குப்பறப் படுத்து கிடக்கிறார்.
காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரத்ததை இன்று தொடங்கியுள்ளனர்.
தமிழ் மக்களின் வாக்கு பெற்று பதவியை பெற்ற எந்தவொரு தலைவரும் அம் மக்களை சென்று சந்திக்கவில்லை.
8 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்த எந்த எம்.பி யும் அவர்களை சென்று பார்வையிட விரும்பவில்லை.
வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் எம் தலைவர்களுக்கும்கூட வவுனியா சென்று இவர்களை சந்திக்க முயற்சி செய்யவில்லை.
மட்டக்கிளப்புக்கு சென்று பொங்கல் கொண்டாடிய சம்பந்தர் அய்யாவுக்கு இந்த மக்களை வந்து சந்திக்க விருப்பமில்லை.
யுத்தம் முடிந்து 7 வருடமாகிவிட்டது. ஏன் இன்னும் இந்த காணாமல் போனவர்களின் பிரச்சனை தீர்க்கவில்லை என்று அரசைப் பார்த்து கேட்கவும் அவருக்கு விருப்பமில்லை.
வீதிகள் தோறும் காந்தி சிலைகளை நிறுவியே தீருவேன் என்று அடம் பிடிக்கும் இந்திய தூதரும் இந்த மக்களின் பிரச்சனை குறித்து அக்கறை கொள்ளவில்லை.
இந்திய தூதருடன் குவாட்டர் கட்டிங் அடித்துவிட்டு குப்பறப் படுத்து தூங்கும் சம்பந்தர் அய்யாவுக்கு எதற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி?
ரணிலுடன் சேர்ந்து சிங்க கொடியை பறக்க விடும் சம்பந்தர் அய்யாவுக்கு எதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் பதவி?
தமிழ் மக்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். தலைவரோ கட்டிங் அடித்து விட்டு குப்பறப் படுத்து கிடக்கிறார்.
பாவம் தமிழ் மக்கள்!

இது பொலிஸ் இல்லை பொறுக்கி !

இது பொலிஸ் இல்லை பொறுக்கி !
பெண்களுக்கு தடியடி நடத்துவது
தானே வாகனங்களுக்கு தீ வைப்பது
தானே மக்களுக்கு கல் எறிவது
இத்தனையையும் செய்துவிட்டு
ஸ்கொட்லாண்டு பொலிசுக்கு இணையானது என்று பெருமை பீற்றுவது
உலகம் சிரிக்குதடா உங்க கூத்தப் பார்த்து!

•முடிந்தா என்னை தாண்டி என் பிள்ளைகள் மேல் கை வையடா பார்ப்போம்!

•முடிந்தா என்னை தாண்டி என் பிள்ளைகள் மேல் கை வையடா பார்ப்போம்!
சென்னை மெரினா கடற்கரையில் பொலிசாருக்கு சவால் விட்ட வீரத் தாய்!
ஆதி. லாரன்ஸ் என்று பிரமுகர்களை விலைக்கு வாங்கிய பொலிசாரினால் இந்த தாயை வாங்க முடியவில்லை.
ஈழத்தில் என்ன நடந்ததோ அந்த அதிசயம் இப்போது தமிழகத்தில் நடக்குது.
களத்தில் அடிவாங்கும் மாணவன் என்ன சாதி என்று இந்த தாய் பார்க்கவில்லை
காயப்பட்டு ரத்தம் சிந்தும் மாணவன் எந்த மதம் என்று இந்த தாய் கேட்கவில்லை.
தான் பெத்த பிள்ளைக்கு ஒரு இன்னல் நடந்தால் பெத்த தாய் எப்படி பொங்கியெழுவாளோ
அப்படித்தான் இந்த வயதான தாயும் பொங்கி யெழுந்தாள்.
ஆம். இந்த தாய் போராடிய மாணவனை எல்லாம் தன் மகனாகவே கண்டாள். அதனால்தான் அவர்களுக்கு ஆபத்து என்றவுடன் வீறு கொண்டு எழுந்தாள்.
மக்கள் போராட துணிந்துவிட்டால் பீரங்கியையும் கல் கொண்டு நொருக்குவார்கள் என்று பிடல் காஸ்ரோ கூறினார்.
ஆம். இத்தனை பொலிஸ் முன்னால் துணிந்து உட்கார்ந்து இருக்கும் இந்த தாய்; உண்மையிலே அணுகுண்டை விட சக்தி மிக்கவள்.
இப்படியான மனிதர்களினால்தான் போராட்ட வரலாறுகள் உருவாக்கப்படுகின்றன.

•இனி என்ன சொல்லப் போகிறார்கள்?

•இனி என்ன சொல்லப் போகிறார்கள்?
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். துப்பாக்கி ஏந்தியவன் துப்பாக்கியால் சாவான் என்கிறார்கள்.
அப்ப, மகாத்மா காந்தி துப்பாக்கியால் செத்தாரே.. அவர் என்ன துப்பாக்கி தூக்கியவரா? இல்லையே. இதற்கு என்ன பதில் தரப்போகிறார்கள்?
சரி, இப்ப நாங்கள் விடயத்திற்கு வருவோம். “ஆயுதம் போராட்டம் அழிவை தரும். அது ஒருபோதும் வெற்றியை தராது” என்றும் எனவே “அகிம்சை வழியில் போராடி விடுதலை பெறுவோம்” என்று சிலர் கூறுகின்றனர்.
முக்கியமாக சம்பந்தர் அய்யா, ஆயுதப் போராட்டத்தை தான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்று கூறினார்.
மீண்டும் அகிம்சைப் போராட்டம் வெடிக்கும் என்று மாவை சேனாதிராசா கூறுகின்றார்.
30 வருட ஆயுதப் போராட்டத்தில் சாதித்தது என்னவென்று சுமந்திரன் கேட்கிறார்.
மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வேண்டாம் என்று தமிழினி எழுதிய புத்தகம் பல பதிப்புகள் வெளியிடுகிறார்கள்.
இவர்கள் எல்லோரும் ஆயுதப் போராட்டம் வேண்டாம். அகிம்சைப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெறலாம் என்கிறார்கள்.
இலங்கையில் முதலில் அகிம்சைப் போராட்டமே நடைபெற்றது. அது இலங்கை அரசால் வன்முறை மூலம் நசுக்கப்பட்ட பின்பே இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள்.
இந்த உண்மையை மறைத்து மீண்டும் அகிம்சைப் போராட்டம் மூலம் தீர்வு பெறலாம் என இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.
அகிம்சை வழியில் போராடிய தமிழக மாணவர்களை பொலிஸ் வன்முறையை பாவித்து அடக்கியுள்ளது.
உலகில் உள்ள தமிழ் மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு அகிம்சை வழியில் போராடிய போராட்டதை ஈவு இரக்கமின்றி இந்திய அரசு அடக்கியுள்ளது.
கமராவில் படம் பிடிக்கப்படுகிறது என்று தெரிந்தும்கூட கொஞ்சம்கூட பயம் இன்றி பொலிஸ் காட்டுமிராண்டித்தனமாக மக்களை தாக்குகிறது என்றால் அதன் அர்த்தம் என்ன?
அமைதியாக போராடும் மாணவர்களை கலைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் பொலிஸ் நடநது கொண்டது எதைக் காட்டுகிறது?
காந்தி பிறந்த தேசத்திலேயே காந்தியின் அகிம்சைப் போராட்டத்தை மதிக்கவில்லை என்றால் இலங்கையில் சிங்கள அரசு அகிம்சைப் போராட்டத்தை மதிக்குமா?
அகிம்சைப் போராட்டம் பயன் தராது என்பதை இனியாவது இவர்கள் ஒத்துக்கொள்வார்களா?

•இரண்டாவது நாளாக தொடரும் சாகும் வரையிலான உண்ணாவிரதம்!

•இரண்டாவது நாளாக தொடரும் சாகும் வரையிலான உண்ணாவிரதம்!
காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் இரண்டாவது நாளாக தமது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடருகின்றனர்.
7 வருடங்களாக பொறுத்து பொறுத்து பார்த்தவர்கள் இனியும் பொறுக்க முடியாது என்பதால் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
•அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்ட வேண்டும்
•காணாமல் போனோர் பிரச்சனைக்கு முடிவு காணப்பட வேண்டும்
•பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனே நீக்க வேண்டும்
அவர்கள் முன்வைத்துள்ள மேற்கண்ட 3 கோரிக்கைளும் நியாயமானவை. எனவே அவற்றை நிறைவேற்றுமாறு குரல் கொடுக்க வேண்டியது அனைத்து தமிழ் மக்களினதும் கடமையாகும்.
சர்வதேச மன்னிப்பு சபைகூட பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசு நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது.
ஆனால் இலங்கை அரசோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மிக இலகுவாக காலம் கடத்துகிறது. அதற்கு ஜ.நா வும் மேலும் தவணை வழங்குகிறது.
தமிழ் மக்களின் வாக்கில் பதவியைப் பெற்றுள்ள அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது. அதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குகிறது.
இனியும் இந்த அயோக்கியதனம் தொடர அனுமதிக்க முடியாது. தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்.
தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபடுவார்கள் என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பார்த்தோம்.
எனவே தமிழ் மக்கள் அனைவருக்கும் இப் பிரச்சனையை கொண்டு சேர்ப்போம். அனைவரும் இதற்காக ஒன்று திரள்வோம்.

•இன்னும் எத்தனை வருடம் இந்த மக்கள் காத்திருக்க வேண்டும் என்பதையாவது சொல்லி தொலையுங்கடா!

•இன்னும் எத்தனை வருடம் இந்த மக்கள் காத்திருக்க வேண்டும் என்பதையாவது சொல்லி தொலையுங்கடா!
காணாமல் போனவர்களின் உறவுகளின் உண்ணாவிரதம் 3வது நாளாக தொடர்கிறது.
இதுவரை அரசு எந்தவித பதிலையும் கூறாமல் அசட்டையாக இருக்கிறது.
இவர்கள் தமிழீழம் கேட்டு உண்ணாவிரதம் இருக்கவில்லை. இவர்களை பிரிவினைவாதிகள் என்று ஒதுக்குவதற்கு.
இவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. இவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி ஒதுக்குவதற்கு.
இவர்கள் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தமது உறவுகளை கண்டு பிடித்து தருமாறு.
அதுவும் 7 வருடம் பொறுத்திருந்து எந்த ஆக்கபூர்வமான பதிலும் கிடைக்காத நிலையில்தான் வேறு வழியின்றி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
ஏற்கனவே அரை உயிருடன்தான் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் இந்த உண்ணாவிரதத்தில் போனபின்புதான் அரசு இவர்களுக்கு பதில் சொல்லப் போகிறதா?;
இவர்கள் தமக்கு பணம் தரும்படி கேட்கவில்லை
இவர்கள் தமக்கு வேலை தரும்படி கேட்கவில்லை
இவர்கள் தமக்கு வீடு கட்டித் தரும்படி கேட்கவில்லை
இவர்கள் இனப் பிரச்சனைக்கு தீர்வு கேட்கவில்லை.
இவர்கள் கேட்பது எல்லாம் காணாமல் போன தமது உறவுகளை கண்டு பிடித்து தரும்படி
இவர்கள் கேட்பது எல்லாம் சிறையில் இருக்கும் தமது உறவுகளை விடுதலை செய்யும்படி
இவர்கள் கேட்பது எல்லாம் கொடிய பயங்கரவாத சட்டத்தை நீக்கும்படி
இவை நியாயமான கோரிக்கைகள்தானே. தாம் ஆட்சிக்கு வந்தால் இவற்றை செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள்தானே இன்றைய ஆட்சியாளர்கள்.
அப்படியிருந்தும் ஏன் இதவரை இவற்றை செய்யவில்லை? வெறும் அலட்சியத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியை சேர்ந்த சிங்கள தலைவர்கள்கூட இந்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்.
ஆனால் இந்த மக்களின் வாக்கைப் பெற்று பதவியை அனுபவிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இந்த மக்களின் குறைகளை கேட்க கூட முன்வருவதில்லை
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவதாக சம்பந்தர் அய்யா கூறினார். அவர் கூறியபடி தீர்வு பெற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை இந்த மக்களின் குறைகளையாவது தீர்த்து வைத்திருக்கலாம்.
யுத்தம் முடிந்து 7 வருடமாகிவிட்டது. இன்னும் காணாமல் போனோர் கண்டு பிடிக்கவில்லை. சிறையில் உள்ளோர் விடுதலை செய்யப்படவில்லை என்றால் என்ன அர்த்தம்?
எப்பதான் இதை எல்லாம் செய்யப் போகிறீர்கள்? இன்னும் எத்தனை வருடம் இந்த மக்கள் காத்திருக்க வேண்டும் என்பதையாவது சொல்லி தொலையுங்கடா!

•தோழர்!

•தோழர்!
சைலேந்திரபாபு மற்றும் “தோழர்” பற்றிய என் கருத்தை பதிவிடும்படி பலர் என்னிடம் கேட்கின்றனர்.
சைலேந்திரபாவுக்கு இன்று மட்டுமல்ல நான் அறிந்தவரையில் 1993 முதல் “தோழர்” என்ற வார்த்தையும் பிடிப்பதில்லை. தோழர்களையும் பிடிப்பதில்லை.
இவர் 1993ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது வேடசந்தூர் என்னும் இடத்தில் தோழர் நாகராசன் என்னும் தமிழ்நாடுவிடுதலை போராளி ஒருவரை “போலி என்கவுண்டர்”மூலம் கொன்றிருந்தார்.
அதுமட்டுமன்றி அவர் என்னையும் கொல்வதற்காக கொடைக்கானல் நீதிமன்றதத்pற்கு வந்திருந்தார். ஆனால் இவரின் நோக்கத்தை அறிந்துகொண்ட எனது தோழர்கள் நீதிமன்றதத்pல் கூறி என்னை இவருடன் அனுப்ப விடாமல் பாதுகாத்தனர்.
அதன்பின்பு இவர் அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பின் பேரில் 30.07.2014 யன்று அமெரிக்கா போனபோது இவரிடம் கேட்பதற்காக சில வினாக்களை எழுதி அனுப்பியிருந்தேன்.
இவருக்கு தான் ஒரு சின்ன தேவாரம் என்று நினைப்பு. எப்போதும் வால்டர் தேவாரம் போலவே தன்னை காட்டிக் கொள்ள முற்படுவார்;.
வால்டர் தேவாரம் எப்படி தன் பதவிக் காலத்தில் நக்சலைட்டுகளை ஒழிப்பதாககூறி 40 க்கு மேற்பட்ட அப்பாவி மக்களை தர்மபுரி மாவட்டத்தில் கொன்றாரோ அதேபோன்று இவரும் கொல்லுவதற்கு துடிப்பவர்.
தேவாரத்திற்கு பாடம் புகட்டினால் மற்ற இவரைப் போன்ற வாலுகள் எல்லாம் தானாக அடங்கிவிடும் என்று தோழர் தமிழரசன் கூறுவார்.
விருகம்பாக்கத்தில் ராணி என்ற பெண்ணிடம் இரவு நேரங்களில் தேவாரம் வருவதை அறிந்த தோழர் தமிழரசன் அவரை பழி வாங்குவதற்காக இரண்டு முறை காத்திருந்தார்.
ஆனால் தேவாரத்தின் அதிர்ஷ்டம் போலும் அந்த இரண்டு நாளும் வராமல் தப்பிவிட்டார்.
ஒருவேளை தோழர் தமிழரசன் நினைத்தபடி தேவாரம் பழி வாங்கப்பட்டிருந்தால் இன்று சைலேந்திரபாபு நிச்சயம் இந்த தோழர் கருத்தை கூறியிருக்கமாட்டார்.
நான் ஆரம்பத்தில் தோழர் பாலன் என்ற முகநூல் கணக்கை ஆரம்பித்தேன். அதில் 5000 நண்பர்கள் சேர்ந்துவிட்டதால் பாலன் தோழர் என்ற இன்னொரு கணக்கை ஆரம்பித்தேன்.
தற்போது அதிலும் 5000 நண்பர்கள் சேர்ந்து விட்டார்கள். தொடர்ந்து பலர் நட்பு அழைப்பு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நான் கடந்த 3 வருடமாக முயன்றும் சாதிக்க முடியாததை சைலேந்திரபாபு ஒரு அறிக்கை மூலம் சாதித்து விட்டார்.
ஆம். சைலேந்திரபாபுவின் தோழர் பற்றிய அறிக்கையால் இன்று பலரும் தோழர் என்ற சொல்லை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
மிக்க மகிழ்சியாக இருக்கிறது. இது விரைவில் “தோழர்” என்ற பெயரில் இணைய தளம் ஒன்று ஆரம்பிப்பதற்கு எனக்கு ஊக்கம் தந்துள்ளது.

•இந்த சிறுமிக்கு என்ன பதில் தரப் போகிறார்கள்?

•இந்த சிறுமிக்கு என்ன பதில் தரப் போகிறார்கள்?
இந்த சிறுமி துப்பாக்கி தூக்கியிருந்தால்,
அமெரிக்கா “குழந்தைப் போராளி” என்று நீலிக் கண்ணீர் வடித்திருக்கும்
இந்தியா “ புலிப் பயங்கரவாதி” என்று தடை செய்திருக்கும்
இலங்கை “ பிரிவினைப் பயங்கரவாதி” என்று முத்திரை குத்தியிருக்கும்
ராணுவமோ வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவுடன் பாலியல் வல்லுறவு செய்து கொன்றிருக்கும்
பாடப் புத்தகங்களை தூக்கிக்கொண்டு பள்ளி செல்ல வேண்டிய சிறுமி
7 வருடமாக தன் அப்பாவை தேடி போஸ்டர் பிடித்துக் கொண்டு நிக்குது
நல்லாட்சி அரசுக்கு இது எதுவும் கண்ணுக்கு தெரியுதில்லை.
நல்லாட்சி அரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கிக்கொண்டிருக்கும் சம்பந்தர் அய்யாவுக்கு இவற்றை பார்ப்பதற்கே பிடிக்குதில்லை.
இந்த குழந்தையின் தந்தையை இப்பொது காட்டாவிட்டாலும்
எப்போதுதான் காட்டுவீர்கள் என்பதையாவது சொல்லி தொலையுங்கடா!
செய்தி- கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தவர்களில் பெண் ஒருவர் மயக்கமடைந்துள்ளார்.

•ஒன்று திரள்வோம்! ஒருமித்து குரல் கொடுப்போம்!!

•ஒன்று திரள்வோம்!
ஒருமித்து குரல் கொடுப்போம்!!
ஒருபுறம் கொட்டும் மழைக் குளிர்
மறுபுறம் புலனாய்வு அதிகாரிகளின் மிரட்டல்
இவற்றுக்கிடையில் தம் உறவுகளைத் தேடி
உண்ணாவிரதம் இருக்கும் எமது உறவுகள்.
கடந்த ஏழு வருடமாக தேடி தேடி நொந்து விட்டார்கள்.
பார்க்காத தலைவர்கள் இல்லை
கெஞ்சாத அதிகாரிகள் இல்லை
கொடுக்காத மனுக்கள் இல்லை
இருந்தும் கிடைத்தது என்னவோ ஏமாற்றம்தான்.
ஏற்கனவே நொந்து பாதி உயிரில்தான் வாழ்கிறார்கள்.
மீதி உயிரும் போகட்டும் என்று உட்கார்ந்து விட்டார்கள்
இப்போது கை கொடுக்கவில்லை என்றால்
இனி எப்பொதும் கை கொடுக்க முடியாது
ஒன்று திரள்வோம் எமது உறவுகளுக்காக
குரல் கொடுப்போம் அவர்களது நியாயமான கோரிக்கைக்;காக
தமிழகம் வழி காட்டடியிருக்கிறது
ஜல்லிக்கட்டு போராட்டம் உலக தமிழர்களை ஒன்றாக்pயுள்ளது
தொடர்ந்து பயணிப்போம் அதன் வழியில்
குறிப்பு – நல்லூர் வழிகாட்டுகிறது!
உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளுக்கு ஆதரவாக
நாளைய தினம் நல்லூரில் தமிழ் மக்கள் ஒன்று கூடுகிறார்கள்.

•ஒரு வழி அடைக்கப்பட்டால் ஒன்பது வழியை தமிழ் மக்கள் திறப்பார்கள்!

•ஒரு வழி அடைக்கப்பட்டால் ஒன்பது வழியை தமிழ் மக்கள் திறப்பார்கள்!
அமைதி வழியில் போராடிய மாணவனை அடித்தார்கள்.
உதவிக்கு ஓடி வந்த மீனவ மக்களை உதைத்தார்கள்.
பொலிஸ் அராஜகத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களை
“தோழர்” என்றும் அவர்களுடன் சேராதே என்றும் சொன்னார்கள்.
சிறுவனைக்கூட இரக்கமின்றி அடித்துவிட்டு
குடியரசு விழா கொண்டாட அழைக்கிறார்கள்.
தெரியாமத்தான் கேட்கிறேன்
குடியரசு என்றால் என்ன?
செய்தி-
•குடியரசு நாளை கறுப்பு நாளாக கொணடாட தமிழ் மக்கள் அழைப்பு.
•குப்பத்து மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பொலிஸ் அராஜகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனவரி-26 துக்கதினம் கொண்டாட மக்கள் முடிவு
•ஜனவரி -26 செத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காக போராட அழைப்பு
ஆம். மெரினாவில் போராடியவர்களை பொலிஸ் அடித்து கலைத்தது. இப்போது போராட்டம் பல வழிகளில் பல இடங்களுக்கு பரவுகிறது.

•மோடிஜி!

•மோடிஜி!
நீங்கள் கொடுக்கும் மிட்டாய்க்காக
நீங்கள் கொடுக்கும் தேசிய கொடியை பிடித்துக்கொண்டு
நீங்கள் பாடும் தேசியகீதத்தை பாடிவிட்டு
கலைந்து செல்லும் சிறுவனாக இவனை நினைக்க வேண்டாம்.
உங்கள் பொலிஸ் இவனுக்கு அடித்த காயம் மாறலாம்
ஆனால் அவன் மனதில் அடித்த காயம் இனி ஆறாது
குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
காலம் மாறும் அப்போது காட்சிகள் மாறும்
மக்களின் குடியரசு என்றால் என்ன என்பதை
இவன் உங்களுக்கு நிச்சயம் காட்டுவான்.

•இதுதான் கந்தன் கருணையா?

•இதுதான் கந்தன் கருணையா?
கந்தன் தமிழர் கடவுள் என்றார்கள். அதனால்தான் தமிழர் இருக்குமிடமெல்லாம் கந்தன் கோயில்கள் இருக்குது என்கிறார்கள்.
கந்தன் ஒரு மாம்பழத்திற்காக தன் தாய் தந்தையரான சிவன் பார்வதியை எதிர்த்து கலகம் செய்தவர் என்கிறார்கள்.
அதுமட்டுமன்றி தேவர்களைக் காப்பதற்காக சூரனை வதம் செய்தவர் என்று கந்தபுராணம் கூறுகிறது என்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மூதாட்டி ஒளவையாருக்கு சுட்ட பழம் கொடுத்து விளையாட்டுக்; காட்டியவர் என்றும் கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட கடவுள் கந்தன் குடியிருப்பதாக கூறும் நல்லூர் கந்தன் கோவிலில் தமிழ் மக்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாண மக்கள் நல்லூர் கோவில் அருகில் ஆதரவு குரல் எழுப்ப முயன்றபோதே கோவில் நிர்வாகம் இவ்வாறு தடை விதித்துள்ளது.
சிங்கள ராணுவம் சப்பாத்து கால்களுடன் வந்தபோது மௌனமாக இருந்த கோவில் நிர்வாகம் இப்போது தமிழ் மக்களை செருப்புடன் வெளி வீதியில்(ரோட்டில்) வர வேண்டாம் என அறிவித்துள்ளது.
சிங்கள ராணுவம் குண்டு போட்டபோது மௌனமாக இருந்த கோவில் நிர்வாகம் தமிழ் மக்கள் அமைதியாக கூடுவதை தடை செய்கிறது.
கடவுள் கந்தன் இப்போது இருந்தால் என்ன செய்திருப்பார்?
இந்த தமிழ் மக்களின் போராட்டத்தில் தன் வேலாயுதத்துடன் கலந்து கொண்டிருப்பாரா?
அல்லது தன் கோவில் வாசலில் குந்தியிருந்து போராட வேண்டாம் என தடை போட்டிருப்பாரா?
கந்தன் கருணை மிக்கவர் என்கிறார்கள். ஆனால் அந்த கந்தன் கோவிலில் தமிழ் மக்கள் ஒன்றுகூட தடை விதிக்கின்றார்கள்.
தமிழ் மக்கள் முதலில் தமது கடவுள் கந்தனைக் காக்க போராட வேண்டியவர்களாக இன்று இருக்கின்றார்கள்.
ஒருசிலரின் கையில் சிக்கியுள்ள நல்லூர் கந்தன் கோவிலை வடமாகாணசபை பொறுப்பேற்க வேண்டும் என தமிழ் மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.
இன்று கோயில் வருமானம் முழுவதும் ஒரு சில குடும்பங்களுக்கே செல்கிறது. அதனை மக்களுக்கே செலவு செய்ய வேண்டும் என குரல் கொடுக்க வேண்டும்.

•இதுதான் இந்தியாவா?

•இதுதான் இந்தியாவா?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள்
இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள்.
இதோ மாட்டாங்குப்பத்து இளைஞனின் முதுகில்
இந்திய அரசு எழுதியிருக்கும் ஆணவ மொழி
இதேபோல் மல்லையாக்களுக்கும் சேகர் ரெட்டிகளும்
எழுதும் துணிவு இந்திய பொலிசிற்கு உண்டா?
அல்லது இதேபோல் மோடிக்கும் பன்னீர் செல்வத்திற்கும்
எழுத இந்த இளைஞன் துணிந்தால் என்ன நடக்கும்?
புரட்சி வெடிக்கும்!

•புலம்பெயர் தமிழர்களுக்கு ஜே.வி.பி அழைப்பு!

•புலம்பெயர் தமிழர்களுக்கு ஜே.வி.பி அழைப்பு!
லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் இன்று (27.01.2017) மாலை 6 மணியளவில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உடனான சந்திப்பு உரையாடல் நடைபெற்றது.
இலங்கையில் அனைத்து மக்களுக்குமான உரிமைக்காக போராட முன்வருமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு விஜித ஹேரத் அழைப்பு விடுத்தார்.
அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தலைமையில் இவ் கலந்துரையாடல் நிகழ்வு இடம்பெற்றது. லண்டன் ஜே.வி.பி கிளை இதனை ஏற்பாடு செய்திருந்தது.
ஜே.வி.பி யின் லண்டன் பொறுப்பாளர் தமன்னே தமது உரையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடன் இவ்வாறான கலந்துரையாடல்களை செய்வதற்கு ஜே.வி.பி விரும்புகிறது என்றும் இதன் மூலம் மக்களிடையே ஒரு ஜக்கியத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தனது உரையில் அரசியல் அமைப்பு திருத்தம் பற்றியும் அதில் ஜே.வி.பி யின் நிலைப்பாடு பற்றியும் விளக்கினார். பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
சந்துரு தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பை செய்தார்.
விஜித ஹேரத்தின் உரையில் இருந்து,
•ஜே.வி.பி இனவாதக் கட்சி என்பது தவறு. அது இருதடவை ஆயுதம் ஏந்திப் போராடியிருந்தும் ஒருபோதும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமது ஆயுதத்தை பயன்படுத்தியதில்லை
•ஜே.வி.பி அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை வலியுறுத்துகின்றது. அது எந்தவொரு இனத்திற்கும் அல்லது மதத்திற்கும் விசேட முன்னுரிமை வழங்குவதை எதிர்க்கின்றது.
•13 வது திருத்தச்சட்டம் இனப் பிரச்னைக்கு தீர்வு அல்ல என்று ஜே.வி.பி கருதுகிறது. சாதாரண மக்களுக்கு உரிமைகள் சென்றடைய வேண்டும் என ஜே.வி.பி விரும்புகிறது.
•அம்பாந்தோட்டையில் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுப்பதுபோல் சம்பூரில் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜே.வி.பி குரல் கொடுக்கிறது.
•வடபகுதி மீனவர் பிரச்சனைக்கு ஜே.வி.பி உண்மையாகவே குரல் கொடுக்கிறது. அதேபோல் காணாமல் போனோர் பிரச்சனை, அரசியல் கைதிகள் விடுதலை பிரச்சனை, மீள்குடியேற்ற பிரச்சனை என்பனவற்றுக்காகவும் ஜே.வி.பி குரல் கொடுத்து வருகிறது.
•தமிழ் சிங்கள மக்களின் ஒற்றுமை இல்லையேல் எந்த வெற்றியையும் பெற முடியாது. ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது என்பதை ஜே.வி.பி நன்கு உணர்ந்துள்ளது. எனவே ஒன்றுபட்டு போராட வருமாறு தமிழ் மக்களை ஜே.வி.பி அழைக்கிறது.
அவதானிப்பு-
இனவாதம் மதவாதம் போன்ற அனைத்து பிற்போக்குவாதத்தையும் முறியடிப்தற்கு இடதுசாரிகளின் ஒற்றுமையும் பலமும் அவசியம். அதனைக் கட்டுவதற்காக ஜே.வி.பி என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பது விளக்கப்படவில்லை.
மேலும் தோழர் சண்முகதாசன் கூறுகிறார் “ தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் அவர்களுக்கு பிரிந்து போகின்ற சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும் முதலில் அங்கீகரிக்க வேண்டும். அதன்பின்பே அதனை பிரயோகிக் வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் கோர முடியும்.”
தமிழ் சிங்கள மக்களின் ஜக்கியத்தை உண்மையில் ஜே.வி.பி விரும்பினால் அது தோழர் சண்முகதாசனின் இக் கருத்தை பரிசீலனை எடுத்துக் கொள்வது அவசியம்.

•பலே பன்னீர்!

•பலே பன்னீர்!
இன்னும் நிறைய உங்ககிட்டேயிருந்து எதிர்பார்க்கிறோம்!
வாழ்நாள் பூராவும் “அம்மா” “சின்னம்மமா” என்று விழுந்து கும்பிட்டுக் கிடக்கும் உங்களுக்கு மாணவர்களின் எழுச்சியை புரிந்துகொள்வது கடினம்தான்.
அதனால்தான் மக்களை தாக்கிய பொலிசாருக்கு நிவாரணமும் தாக்கப்பட்ட மக்கள் மீது வழக்கும் போடுகிறீர்கள்.
உங்கள் பதவியை காப்பாற்றுவதற்காக, மோடி யை திருப்திபடுத்துவதற்காக அமைதி வழியில் போராடிய மாணவர்களை பின்லேடன் படம் பிடித்து போராடிய பயங்கரவாதிகள் என்று கூறியுள்ளீர்கள்.
கும்பிட கும்பிட அடிப்பவன் பயங்கரவாதியா? கும்பிட்டு கும்பிட்டு அடிவாங்குபவன் பயங்கரவாதியா?
பெண்களை அடிப்பவன் பயங்கரவாதியா? பெண்களை காப்பவன் பயங்கரவாதியா?
சொல்லுங்கள். உங்கள் பதவி நாட்கள் எண்ணப்படுகின்றன. அதற்குள் இன்னும் என்னென்ன சொல்ல முடியுமோ தாராளமாக சொல்லுங்கள்.
டில்லியில் இருந்துகொண்டு எட்டுகோடி தமிரையும் “பொறுக்கி” என்று சுப்பிரமணியசுவாமி சொல்கிறான். அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க துப்பில்லை.
ஆனால் போராடிய மாணவர்களை பயங்கரவாதிகள் என்கிறீர்களே. அவர்கள் மீது வழக்கு போடுகிறீர்கள். வெட்கமாய் இல்லை?
முடிந்தால் தாக்கிய பொலிசார்மீது வழக்கு பதிவு செய்யுங்கள். தாக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள். கைது செய்யப்பட்டுள்ள 300 பேரையும் விடுதலை செய்யுங்கள்.
இல்லையேல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய் ஊரில் ஓய்வு எடுங்கள். ஆனால் மோடியை நம்பி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.

•என்னதான் கத்தினாலும் கருணாவும் தூக்கியெறிப்பட்ட ஒரு கறிவேப்பிலைதான்!

•என்னதான் கத்தினாலும் கருணாவும்
தூக்கியெறிப்பட்ட ஒரு கறிவேப்பிலைதான்!
கறிக்கு பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் கறிவேப்பிலை போன்றே சில தமிழர்களை சிங்கள அரசு பயன்படுத்தி வருகிறது.
அதுபோன்றே மகிந்த ஆட்சி காலத்தில் பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்பட்ட கறிவேப்பிலையாக கருணாக இருக்கிறார்.
இதை சிறையில் அடைக்கப்பட்டவேளை கருணா உணர்ந்திருப்பார் என நினைத்தோம்.
ஆனால் அவர் இன்னும் உணரவில்லை என்பதையே அவரது அண்மைய பேச்சு காட்டுகின்றது.
நாட்டுக்கு விடுதலை வேண்டி தந்தவர் மகிந்த ராஜபக்ச அவரை மீண்டும் பதவியில் அமர்த்த தமிழ் மக்கள் முன்வரவேண்டும் என கருணா கேட்டுள்ளார்.
சிங்கள மக்களே மகிந்த ராஜபக்ச கும்பலை தூக்கியெறிந்து விட்டனர். அவர்கள் இழைத்த தவறுகளுக்காக கைது செயது சிறையில் தள்ள வேண்டும் என கோருகின்றனர்.
எனவே மகிந்த ராஜபக்ச இனி ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது. இதை உணர்ந்துகொள்ள முடியாத கருணா தமிழ் மக்கள் மகிந்தவை ஆதரிக்க முன்வரவேண்டும் என முட்டாள்தனமாக கேட்கின்றார்.
தனக்கு மதுவும் மாதுவும் தந்ததை நாட்டுக்கு விடுதலை பெற்று தந்ததாக கருணா நினைக்கிறார் போலும்.
ஆனால் செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதற்கு இது ஒன்றும் பாரதப் போரும் இல்லை. கருணா கர்ணனும் இல்லை.
கருணா சிங்கள அரசால் தூக்கியெறிப்பட்ட ஒரு கறிவேப்பிலையே!

•இரண்டு தமிழர்கள்

•இரண்டு தமிழர்கள்
ஒருவரால் தமிழ் இனம் பெருமை கொள்கிறது.
இன்னொருவரால் தமிழ் இனம் தலை குனிகிறது.
அமெரிக்காவில் புளொரிடா மகாணத்தில் மலைப்பாம்புகள் பெரும் தொல்லையாக இருந்து வருகிறது. அவர்கள் எத்தனையோ வழிகளில் முயற்சி செய்தும் அவற்றை பிடிக்க முடியவில்லை.
இறுதியாக அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து மாசி சடையன் என்பவரையும் அவருக்கு துணையாக வடிவேல் கோபால் என்பவரையும் வரவழைத்தனர்.
அமெரிக்கா வந்த அந்த இரு தமிழர்களும் 8 நாட்களில் 13 மலைப் பாம்புகளை பிடித்து அசத்தியுள்னர். அதில் ஒரு பாம்பு மட்டும் 16 அடி நீளமுடையதாக இருந்துள்ளது.
இந்த தமிழர்களின் திறமையைப் பார்த்து அமெரிக்க மலைப்பாம்பு வல்லுனர்களே ஆச்சரியம் அடைந்துள்ளதாக மியாமி ஹெரால்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இன்னொரு தமிழர் மேகாலய கவர்னர் சன்முகநாதன். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த பிரமச்சாரி என்கிறார்கள்.
இவர் கவர்னர் மாளிகையை தன் காமக் கிளப்பாக மாற்றி கூத்தடித்துள்ளார். இதனால் 68 வயதான இவர் இந்தியாவின் 68 வது குடியரசு தினத்தில் பதவி விலக நேர்ந்துள்ளது.
மாசி சடையனால் தலை நிமிர்ந்த தமிழ் இனம் சண்முகநாதனால் தலை குனிகிறது!