Tuesday, February 28, 2017

•முருகதாசன் மரணம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

•முருகதாசன் மரணம்
நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
போரை நிறுத்துமாறு கோரி 12.02.2009 யன்று ஜ.நா முன்றலில் முருகதாசன் தனக்குதானே தீயிட்டு மரணமடைந்தார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை.
மாறாக 40 அயிரம் அப்பாவி தமிழ் மக்கள் முள்ளிவாயக்காலில் கொல்லப்பட்டார்கள்.
போரை நிறுத்துமாறு தமிழகத்தில் முத்துக்குமார் உட்பட 16 பேர் தீயிட்டு தற்கொலை செய்தார்கள். ஆனால் இந்திய அரசு அதனை கண்டுகொள்ளவும் இல்லை. போரை நிறுத்தவும் இல்லை. மாறாக தமிழின அழிப்பிற்கு பெரும் உதவி புரிந்தது.
தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றினார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. மாறாக அதன்பின்னரே கொடிய கிளாஸ்ரர் குண்டுகள் வீசப்பட்டன. மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர்.
போரை நிறுத்தூமாறு கோரி உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ,
சாலை மறியல் செய்தார்கள்.
சங்கிலி போராட்ம் நடத்தினார்கள்.
உண்ணாவிரதம் இருந்தார்கள்.
வெளிநாட்டு அரசுகளிடம் மன்றாடினார்கள். மனிதவுரிமை அமைப்பகளிடம் கரம் கூப்பி வேண்டினார்கள்.
அனைத்து சாத்வீக வழிகளிலும் மக்கள் கேட்டார்கள். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் அழிவு தடுக்கப்படவில்லை.
ஆயுதம் தூக்கினால் அது பயங்கரவாதம் என்றவர்கள், மக்கள் ஜனநாயகவழியில் சாத்வீக முறையில் போராடிய போது கண்டு கொள்ளவில்லையே. இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன?
திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது அகிம்சையை போதித்த இந்திய அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை.
அன்னைபூபதி உண்ணாவிரதம் இருந்தபோது அவர் ஒரு பெண் என்றுகூட இந்திய அரசு இரங்கவில்லை.
மணிப்பூர் மாநிலத்தில் இரோம் சார்மிளா என்ற பெண்மணி 15 வருடமாக உண்ணாவிரதம் இருந்தார் இந்திய அரசு மட்டுமல்ல உலகில் எந்த அரசுமே கண்டுகொள்ளவில்லை.
புலிகள் ஆயுத பலத்தோடு இருந்தபோது தமிழீழம் தவிர அனைத்தையும் தருவதாக கூறிய சந்திரிக்கா பண்டாரநாயக்கா இப்பொது புலிகள் இல்லை என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும் என்று கூறகிறார். இதன் அர்த்தம் அதிகாரத்தை பெறுவதில் துப்பாக்கிகள் தீர்மானிக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன?
புலிகள் வெல்லவில்லை என்பதால் ஆயுதப் போராட்டம் வெற்றி பெறாது என்று சிலர் கூற முற்படுகிறார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்றும் கூறுகிறார்கள்.
அவர்களிடம் நாம் கேட்க விரும்புகிறோம்,
கோப்பாப்பிலவில் மக்கள் அமைதியாக அகிம்சை வழியில் தானே 12வது நாளாக போராடுகிறார்கள். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லையே?
காணாமல் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் உண்ணாவிரதம் இருந்தார்களே. அவர்களை அரசு ஏமாற்றிவிட்டதே?
அகிம்சை வழியில் தீர்வு பெற முடியும் என்பவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?
அகிம்சை வழியில் போராடி தமது சொந்த நிலத்தையே திருப்பி பெற முடியாத தமிழ் மக்களுக்கு அகிம்சை வழியில் போராடினால் சமஸ்டி தீர்வு கிடைத்துவிடுமா?
இன்று தமிழ் இனவிடுதலைக்காக சிலர் தேர்தல் பாதையை முன்வைக்கிறார்கள். அவர்கள் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என மக்களை நம்பவைக்க முயல்கிறார்கள்.
ஆனால் துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்றும் ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதை மூலமே விடுதலை அடைய முடியும் என்று மாபெரும் ஆசான் மாசேதுங் கூறியுள்ளார்.
அதுவே இன்றும்கூட பொருத்தமாக உள்ளது என்பதே உண்மையாகும்.

•13வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்!

•13வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்!
தமது சொந்த நிலங்களை திருப்பி தரக்கோரி கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் 13வது நாளாக தொடருகிறது.
அந்த மக்களின் அமைதி வழியிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மட்டுநகரில் மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.
லண்டனில் இன்று பிரதமர் இல்லம் முன்பு தமிழ் மக்கள் ஒன்றுகூடி கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. 30 மாகாண சபை உறுப்பினர்கள் உண்டு. 200 க்கு மேற்பட்ட பிரதேசபை உறுப்பினர்கள் உண்டு.
ஆனால் இதில் ஒரு உறுப்பினர்கூட அந்த மக்களுக்கு தலைமை ஏற்று போராட்டத்தில் வழி காட்ட முன்வரவில்லை.
13 இரவுகள் பெண்கள் குழந்தைகள் முகாம் வேலியோரம் படுத்து உறங்கி வருகின்றனர். இரவில் ராணுவம் மின்சாரத்தை நிறுத்தி மிரட்டுகிறது. ஆனால் ஒரு தமிழ் பிரதிநிதியும் இந்த மக்களுடன் ஒரு இரவுகூட தங்க முன்வரவில்லை.
இந்த மக்களின் வாக்கு வேண்டும். அதன் மூலம் பதவி வேண்டும். சொகுசு வாகனம் வேண்டும். ஆனால் அந்த மக்களுடன் சேர்ந்து போராட தயாரில்லை.
சிங்கள மக்கள்கூட இந்த மக்களுக்காக இரங்குகிறார்கள். நீர்கொழும்பில் சிங்கள மக்கள் இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்கள்.
ஆனால் தமிழ் பிரதிநிதிகளுக்கு இந்த மக்களுக்காக போராட இன்னும் மனம் வரவில்லை.
அடுத்த தேர்தலுக்கு எந்த முகத்துடன் இந்த மக்களிடம் வாக்கு கேட்க வருவார்கள்?

•தொடரும் போராட்டம் பெருகும் மக்கள் ஆதரவு மீண்டும் சுமந்திரன் துரோகம்!

•தொடரும் போராட்டம்
பெருகும் மக்கள் ஆதரவு
மீண்டும் சுமந்திரன் துரோகம்!
தமது சொந்த நிலத்தை ஒப்படைக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் 13வது நாளாக தொடர்கிறது.
அந்த மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக சிங்கள முஸ்லிம் மக்களும் தமது ஆதரவினை தெரிவித்து வருகிறார்கள்.
புத்தளம் முஸ்லிம் மாதர் அமைப்பினர் கேப்பாப்ப்pலவிற்கு நேரில் வந்து தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
காலியில் இருந்து சிங்கள அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்கள் விரைவில் கேப்பாப்பிலவிற்கு வந்து தமது அதரவினை தெரிவிக்கவுள்ளார்கள்.
கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் இலங்கையில் உள்ள அனைத்து இன மக்களின் ஆதரவையும் பெற்ற போராட்டமாக மாறிவருகிறது.
இந்நிலையில் “பிரதமருடன் பேசியிருந்தால் இந்த பிரச்சனை எப்பவோ தீர்ந்திருக்கும்” என்று சுமந்திரன் மட்டும் கேப்பாப்பிலவு மக்கள் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.
முதலாவது, காணாமல் போனோர் தொடர்பாக அவர்களின் உறவுகள் பிரதமருடன் பேசியும் இன்னும் பிரச்சனை தீரவில்லை. எனவே பிரதமருடன் பேசியிருந்தால் கேப்பாப்பிலவு பிரச்சனை தீர்ந்திருக்கும் என்று சுமந்திரன் எப்படி நம்புகிறார்?
இரண்டாவது, பிரதமருடன் பேசுவதற்காகத்தானே சுமந்திரனை எம்.பி யாக மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். ஏன் இதுவரை சுமந்திரன் பிரதமருடன் இது பற்றி பேசவில்லை?
தன் மீது தவறை வைத்துக்கொண்டு சுமந்திரன் எதற்காக போராடும் மக்கள் மீது குற்றம் சுமத்துகிறார்?
13 நாளாக மக்கள் போராடுகின்றனர். இதுவரை எந்தவித அக்கறையும் எடுக்காத பிரதமரை பேசியிருந்தால் தீhத்திருப்பார் என்று எதற்காக சுமந்திரன் காப்பாற்ற முயல்கிறார்?
தமது சொந்த நலன்களுக்காக இன்னும் எத்தனை மக்கள் போராட்டங்களை சுமந்திரன் இப்படி காட்டிக் கொடுக்கப் போகிறார்?
புதுக்குடியிருப்பிலும் மக்கள் போராடி வருகிறார்கள். அவர்களுக்கும் நல்லாட்சி அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
எனவே அவர்கள் இனி சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள்.
இங்கு எமக்கு எழும் கேள்வி என்னவெனில் இந்த புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு என்னத்தைக் கூறி சுமந்திரன் காட்டிக் கொடுக்கப் போகிறார் என்பதே!

•சம்பூர் மக்களால் முடியுமென்றால் கேப்பாப்பிலவு மக்களால் ஏன் முடியாது?

•சம்பூர் மக்களால் முடியுமென்றால்
கேப்பாப்பிலவு மக்களால் ஏன் முடியாது?
யுத்தம் முடிந்தும் பல வருடங்களாக சம்பூர் மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற அனுமதிக்கப்படவில்லை.
சம்பூர் மக்களின் 675 சதுர கிலோமீட்டர் பரப்பு நிலம் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவிற்கு ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்டிருந்தது.
தமது சொந்த நிலம் பறிபோவது மட்டுமன்றி அனல் மின்நிலையத்தால் சுற்று சூழல் எல்லாம் மாசு அடையப்போவதாக சம்பந்தர் அய்யாவிடம் அம் மக்கள் முறையிட்டார்கள்.
சம்பந்தர் அய்யாவோ “ இந்தியா போனால் சீனா வந்துவிடும்” என்று கூறி மக்களை கைவிட்டார். மாவை சேனாதிராசாவோ “இந்தியா மூலம் தீர்வு வரப் போகுது எனவே இந்தியாவை கோபம் கொள்ள வைக்கக்கூடாது” என்று கூறினார்.
இவ்வாறு தாம் நம்பிய தலைவர்களே தம்மை கைவிட்ட நிலையிலும்; அந்த மக்கள் மனம் தளரவில்லை. தாமே தமக்காக போராடினார்கள்.
மகிந்த ராஜபக்ச ராணுவம் மூலம் மிரட்டினார். கோத்தபாயா வெள்ளை வான் மூலம் மிரட்டினார். இந்திய ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது என்று சில புத்தி ஜீவிகள் எழுதினார்கள்.
ஆனால் சம்பூர் மக்கள் அத்தனை தடைகளையும் தாண்டி போராடினார்கள். நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஒன்று சேர்ந்து போராடினார்கள்.
சம்பூர் மக்களின் போராட்டத்திற்கு சிங்கள முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி வேடவ இன மக்களும் தமது ஆதரவினை தெரிவித்தார்கள்.
இறுதியில் மக்களின் ஒருமித்த போராட்டம் வெற்றி கண்டது. ஆம். அந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியேற அனுமதிக்கப்பட்டார்கள்.
அந்த சம்பூர் மக்கள் போன்று இன்று கேப்பாப்பிலவு மக்களும் தமது சொந்த நிலங்களில் குடியேற அனுமதிக்கப்படவில்லை.
சம்பூர் மக்களுக்கு துரோகம் செய்தது போன்று சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் கேப்பாப்புலவு மக்களுக்கும் துரோகம் செய்து வருகின்றனர்.
சம்பூர் மக்களின் போராட்டம் எப்படி சிங்கள முஸ்லிம் மக்களின் ஆதரவினைப் பெற்றதோ அதே போன்று கேப்பாப்ப்pலவு மக்களின் போராட்டமும் இன்று அனைத்து இன மக்களின் ஆதரவினைப் பெற்று வருகிறது.
சம்பூர் மக்களின் போராட்டம் எப்படி வெற்றியைப் பெற்றதோ அதே போன்று கேப்பாப்பிலவு மக்களின் போராட்டமும் நிச்சயம் வெற்றியை பெறும்.
ஆம். சம்பூர் மக்களின் போராட்டம் கேப்பாப்பிலவு மக்களுக்கு வழி காட்டுகிறது.
குறிப்பு- சம்பூரில் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் சிலர் கேப்பாப்பிலவிற்கு வந்து தமது ஆதரவினை நேரில் தெரிவிக்கவுள்ளனர்.
நீதி- மக்கள் போராட்டம் ஒரு போதும் தோல்வியடைவதில்லை

•இந்த கேப்பாப்பிலவு குழந்தை செய்த தவறு என்ன?

•இந்த கேப்பாப்பிலவு குழந்தை செய்த தவறு என்ன?
எமக்கு பிறந்து தவழ்ந்து விளையாட ஒரு சொந்த மண் இருந்தது.
ஆனால் இந்த குழந்தை தவழ்ந்து விளையாட சொந்த மண் இல்லையே?
எமக்கு ஊஞ்சல் கட்டி விளையாட எம் முற்றத்தில் ஒரு மரம் இருந்தது
ஆனால் இந்த குழந்தை ராணுவத்தின் வேலியோரத்தில் கட்டப்பட்ட தூளியில் அல்லவா தூங்க வேண்டியிருக்கிறது.
எமக்கு ஒரு கோயில் இருந்தது. எமக்கு ஒரு பாடசாலை இருந்தது. எமக்கு ஒரு சுடலையும் இருந்தது.
ஆனால் இன்று அதில் எல்லாம் ராணுவம் அல்லவா இருக்கிறது. இந்த குழந்தைக்கு எதுவும் இல்லையே?
இந்த குழந்தை செய்த தவறுதான் என்ன? தமிழ் இனத்தில் பிறந்ததைத் தவிர வேறு என்ன தவறு செய்துவிட்டது இந்த குழந்தை?
கண் முன்னே சொந்த மண் தெரிகிறது. ஆனால் அந்த மண் குழந்தைக்கு சொந்தமில்லை. ஏனென்றால் குழந்தை இப்போது அகதி.
சொந்த நாட்டில் சொந்த மண்ணில் வாழ முடியாமல் இன்னும் எத்தனை காலம் அகதியாக வாழ்வது?
எல்லா இடங்களிலும் குழந்தையை தூங்க வைக்க தாய் தலாட்டு பாடுவது வழக்கம்.
ஆனால் கேப்பாப்பிலவில் தாயை தூங்கவைக்க குழந்தைகள் பாடும் தாலாட்டு அதிசயம் நிகழும்.
ஏனெனில் அந்த குழந்தைகள் சுவாசிப்பது கேப்பாபிலவு மண்ணில் இருந்து வரும் காற்று அல்லவா.
அவர்களின் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் போராட்டத்தை சுவாசித்தது ஆகும்.
விடியல் ரொம்ப தூரம்தான். ஆனால் வெளிச்சம் இங்கு தோன்றும்.
அலைகள் எழுந்து தடுப்பினும் துணிந்து தோணி கடலைக் கிழிக்கும்.
இவர்கள் கரங்கள் எழுந்து உயரும். விடியல் நாளை சிவந்து பிறக்கும்!

•அரசியல்வாதிகளுக்கு வரும் இந்த புதிய நோயை எந்த டாக்டர் கண்டு பிடிப்பார்?

•அரசியல்வாதிகளுக்கு வரும் இந்த புதிய நோயை
எந்த டாக்டர் கண்டு பிடிப்பார்?
ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது வராத அதிசய நோய் இப்போது சிறைக்கு போகவேண்டும் என்றவுடன் சசிகலாவுக்கு வந்துவிட்டது.
தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் எனவே சிறைக்கு செல்ல 4 வாரம் கால அவகாசம் வேண்டும் என்றும் சசிகலா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுவரை நல்ல உடல் நிலையில் இருப்பதாக தன்னைக் காட்டி வந்த சசிகலாவுக்கு சிறை என்றவுடன் திடீரென அதிசய நோய் தாக்கிவிட்டது போல் தெரிகிறது.
சசிகலாவுக்கு மட்டுமல்ல பெரும்பாலான அரசியல்வாதிகள் எல்லோருக்கும் சிறை என்றவுடன் இந்த அதிசய நோய் தாக்குகிறது.
ஜெயா அம்மையார் சிறையில் இருந்தபோது அவருக்கு சுகயீனம் என்ற காரணத்தைக் காட்டியே 21 நாட்களில் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஜெயா அம்மையாருக்கு மட்டுமல்ல அவருடன் சேர்த்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும்கூட சுகயீனம் என்ற காரணத்திற்காகவே ஜாமீன் வழங்கப்பட்டது.
உண்மையிலே சுகயீனமானவர்கள் பலர் சிறையிலும் சிறப்புமுகாமிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஜாமீன் மட்டுமல்ல முறையான மருத்துவ சிகிச்சைகூட வழங்கப்படுவதில்லை.
ஆனால் அரசியல்வாதிகள் சிறை என்றவுடன் திடீரென நெஞ்சுவலி என்பதும் ஜாமீன் வரும்வரை மருத்துவ மனையில் படுப்பதும் என்றும் தப்பிக்கிறார்கள்.
அரசியல்வாதிகளை தாக்கும் இந்த அதிசய நோயக்கு முதலில் மருந்து கண்டுபிடிக்க வேண்டும். இல்லையேல் இது தொடர்கதையாகிவிடும்.
ஒன்றில் சுகயீனம் என்றாலும் ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் கூறவேண்டும் இல்லையேல் சுகயீனம் என்று கூறி ஜாமீன் பெறும் அரசியல்வாதிகள் வழக்கு முடியும்வரை அரசியலில் ஈடுபட முடியாது என்றாவது நீதிமன்றம் கூறவேண்டும்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் மதுரையில் கைது செய்யப்பட்ட ஆறு தமிழ் இன உணர்வாளர்கள் 3 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கிறன்றனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்துவிட்ட நிலையிலும் தீர்ப்பு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகின்றனர். அதுமட்டுமன்றி 3 வருடமாக ஜாமீன்கூட வழங்காமல் வைக்கப்பட்டிருக்pன்றனர்.
இதுதானா இந்திய நியாயம்?

•“கம்பவாரிதி” ஜெயராஜ் தமிழர்தானே?

•“கம்பவாரிதி” ஜெயராஜ் தமிழர்தானே?
கம்பன் கழகம் அமைத்து தமிழையும் சைவத்தையும் வளர்ப்பதாக கம்பவாரிதி ஜெயராஜ் கூறிவருகிறார்.
அவர் அண்மையில் நடந்த கம்பன்கழக விழாவில் பாதுகாப்பு அமைச்சரை அழைத்து மாலை அணிவித்து கௌரவம் வழங்கியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சருக்கும் கம்பனுக்கும் என்ன சம்பந்தம்? அல்லது அவருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக அவருக்கு தமிழ் விழாவில் மரியாதை செலுத்த வேண்டும்?
கேப்பாப்பிலவு மக்களுக்கு அவர்களது சொந்த காணியை வழங்க முடியாது என்று இந்த பாதுகாப்பு அமைச்சர் கூறிவருகிறார். அதற்காகவா அவரை இந்த ஜெயராஜ் பாராட்டுகிறார்?
சிறையில் உள்ளவர்களை தன்னால் விடுதலை செய்ய முடியாது என்று இந்த பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். அதற்காகவா ஜெயராஜ் அவரை பாராட்டுகிறார்?
காணாமல் போனோரை கண்டு பிடிக்க முடியாது என்று இந்த பாதுகாப்பு அமைச்சர் கூறிவருகிறார். அதற்காகவா ஜெயராஜ் அவரை பாராட்டுகிறார்?
இனப்படுகொலையை விசாரிக்க அனுமதிக்கமாட்டேன் என இந்த பாதுகாப்பு அமைச்சர் கூறிவருகிறார். அதற்காகவா ஜெயராஜ் அவரை பாராட்டுகிறார்?
போராடும் கேப்பாபபி;லவு மக்களுக்கு கிறிஸ்தவ மதகுருமார்கள் உலர் உணவுகளை வழங்கி தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
இரவில் மின்சாரம் இன்றி கேப்பாப்பிலவு மக்கள் கஸ்டப்படுவதை அறிந்த ஒரு தொணடு அமைப்பு சிறிய ஜெனரேட்டரை அன்பளிப்பு செய்துள்ளது.
சிங்கள அமைச்சர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலை போடும் ஜெயராஜ் கேப்பாபிலவு மக்களுக்கு இதுவரை எதையும் செய்யவில்லை.
கம்பவரிதி ஜெயராஜ் ஒரு தமிழர்தானே? கேப்பாப்பிலவு மக்களுக்கு உதவ வேண்டும் என்று ஏன் அவருக்கு தோன்றவில்லை?
கம்பவரிதி ஜெயராஜ் ஒரு தமிழர்தானே? கேப்பாப்பிலவில் தமிழ் மக்கள் போராடும்போது பாதுகாப்பு அமைச்சருக்கு மாலை போடுவது கேவலம் என்று ஏன் அவருக்கு தோன்றவில்லை?

•17வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்.

•17வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்.
தமது சொந்த நிலங்களை திருப்பி ஒப்படைக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் 17வது நாளாக தொடருகிறது.
பெண்களும் குழந்தைகளும் உறுதியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வெற்றி பெறும்வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
நாளுக்குநாள் அந்த மக்களின் போராட்டத்திற்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.
இலங்கையில் அனைத்து இன மக்களின் ஆதரவை மட்டுமல்ல உலகம் பூராவும் உள்ள தமிழ் மக்களின் ஆதரவையும் அது பெற்று வருகிறது.
இந்த மக்களின் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை தருகிறது.

•சசிகலாவுக்கு சிறை வழங்கியாயிற்று கனிமொழிக்கு எப்போது சிறை ?

•சசிகலாவுக்கு சிறை வழங்கியாயிற்று
கனிமொழிக்கு எப்போது சிறை ?
மக்கள் பணத்தை ஊழல் செய்து பல்லாயிரம் கோடி சம்பாதித்த சசிகலா கும்பலுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று 2ஜி ஊழல் பேர்வழி கனிமொழி கும்பலுக்கும் விரைவில் தண்டனை வழங்க வேண்டும்.
இவர்கள் தமது அரசியல் மற்றும் பண பலத்தை பயன்படுத்தி தண்டனையில் இருந்து தப்ப முயல்கிறார்கள்.
அதையும்மீறி சிறை செல்ல நேரிட்டால் கொஞ்சம்கூட வெட்கமின்றி ஏதோ சுதந்திர போராட்ட தியாகிகள் போல் பவனி வருகிறார்கள்.
இவர்களை சிறையில் அடைப்பது மட்டுமன்றி இவர்களின் சகல சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால்தான் மற்ற அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்ய ஒரு பயம் வரும்.

•கேப்பாப்பிலவு குழந்தை கதீசனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

•கேப்பாப்பிலவு குழந்தை கதீசனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கேப்பாப்பிலவு போராட்டத்தில் பங்கு பற்றும் குழந்தை கதீசனாவுக்கு இன்று நான்காவது பிறந்தநாள் ஆகும்.
கேப்பாப்பிலவு மக்கள் 18வது நாளாக போராடுகிறார்கள். அந்த மக்களுடன் குழந்தை கதீசனாவும் 18வது நாளாக போராடுகிறாள்.
4 வயதில் போராட்டத்தில் பங்கு பற்றுவதுடன் போராட்ட களத்தில் பிறந்தநாள் கொண்டாடும் பாக்கியம் கதீசனாவுக்கு கிடைத்திருக்கிறது.
அவள் தனது அடுத்த பிறந்தநாளை நிச்சயம் தனது சொந்த மண்ணில் கொண்டாடுவாள். ஏனெனில் அந்தளவு உறுதியுடன் அவள் தனது நிலத்திற்காக போராடுகின்றாள்.
அவள் தனக்கு மட்டுமல்ல தமிழ் இனம் முழுவதற்குமே தனது போராட்டத்தின் மூலம் பெருமை சேர்க்கிறாள்.
4 வயதில் தன்னை போராட நிர்ப்பந்தப்படுத்தியமைக்காக அவள் நல்லவாட்சி அரசு மீது மட்டுமல்ல சம்பந்தர் அய்யாவின் முகத்திலும் காறி துப்பியிருக்கிறாள்.
அவளுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நண்பர்களே!
நீங்களும் உங்கள் வாழ்த்துகளை குழந்தை கதீசனாவுக்கு தெரிவியுங்கள்.

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்- தோழர் லெனின்

•பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்- தோழர் லெனின்
பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் என்று தோழர் லெனின் சொன்னது உண்மைதான் என்பதை மீண்டும் ஒரு தடவை தமிழக சட்டமன்றம் நிரூபித்துள்ளது.
தமிழக சட்டசபை பன்றிகளின் தொழுவம் என்பது மட்டுமல்ல சட்டசபை உறுப்pனர்கள் தாங்கள் பன்றிகள்தான் என்பதையும் நிரூபித்துள்ளனர்.
ஒரு பன்றி (ஸ்டாலின்) தானே தன் சட்டையைக் கிழித்துவிட்டு ஜனநாயகம் செத்துவிட்டது என்று ஒப்பாரி வைக்கிறது.
திமுக கட்சியால் 4 வருடம் பொறுமை காக்க முடியவில்லை. குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துவிட அது முயல்கிறது.
சசிகலா என்ற ஊழல் குற்றவாளிப் பன்றி தானே முதல்வர் பதவியை பிடிக்க முயன்றது. அது முடியாமல் போனதால் தனது சார்பாக இன்னொரு பன்றி மூலம் ஆட்சியை தக்கவைக்க முயல்கிறது.
பன்னீர்செல்வம் என்ற பன்றி பா.ஜ.க கட்சியின் துணையுடன் ஆட்சியை தொடர விரும்பியது. ஆனால் பெருன்பான்மையை திரட்ட முடியாததால் பதவியை இழந்துள்ளது.
இந்த பன்றிகள் யாருக்குமே மக்கள் மீது அக்கறை எதுவும் இல்லை. எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி ஊழல் செய்து பணம் சம்பாதிக்க வேண்டுமெ என்ற நோக்கில்தான் செயற்படுகின்றன.
ஆளும் அதிமுக கட்சியானது பன்றிகள் ஒவ்வொருவருக்கும் தலா 5 கோடி ருபா சசிகலா பன்றியால் வழங்கப்படுகிறது என்ற செய்தி உண்மைதான் என்பதை சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
இதுவரை 13 முதலமைச்சர்கள் பதவி வகித்துள்ளனர். ஆனால் தமிழ்நாடு எந்த முன்னேற்றமும் அடையவில்லை.
பன்றிகளை மாற்றுவதாலோ அதாவது கட்சிகளை மாற்றுவதால் சட்டசபை புனிதமாகிவிடாது. அங்கு ஜனநாயகம் மலர்ந்துவிடாது. மக்களின் எந்த குறையும் தீர்ந்துவிடாது.
இன்றுள்ள நவகாலனிச பொருளாதார சட்டக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே செயற்படும்.
அடக்குமுறையான முதலாளித்துவ வர்க்க அரசு இயந்திரத்தை வன்முறை போராட்டத்தால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படைப் பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்று தோழர் சண்முகதாசன் கூறியுள்ளார்.
எனவேதான் பாராளுமன்ற தேர்தல் பாதைமூலம் எந்த தீர்வையும் பெறமுடியாது என்று தோழர் தமிழரசன் சுட்டிக்காட்டி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
தோழர் தமிழரசன் முன்னெடுத்த பாதை சரியென்பதை சட்சபை சம்பவங்கள் மீண்டும் ஒருதடவை நிரூபித்துள்ளன.
குறிப்பு- தாம் விரும்பும் பிரதிநிதியை வாக்களித்து தெரிவு செய்வதுபோல் அப் பிரதிநிதியின் செயற்பாடு விருப்பமில்லாதபோது திருப்பி அழைக்கும் அதிகாரத்தை இந்த பன்றிகள் மக்களுக்கு வழங்குமா?

•19வது நாளாக தொடரும் மக்களின் போராட்டமும்

•19வது நாளாக தொடரும் மக்களின் போராட்டமும்
நல்லாட்சி அரசின் பிரதமர்ரணிலின் பித்தலாட்டமும்!
அவுஸ்ரேலியா சென்ற நல்லாட்சி அரசின் பிரதமர் ரணில் “ தாம் இளைஞர்களுக்கு மன்னிப்பு அளித்துவிட்டதாகவும் எனவே தமிழர்கள் தைரியமாக இலங்கை திரும்பி வரலாம்" என அழைப்பு விடுத்துள்ளார்.
கேப்பாப்பிலவு மக்கள் தமது சொந்த நிலத்தை திருப்பி ஒப்படைக்குமாறு கோரி 19வது நாளாக போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் பிரதமர் ரணில் அவர்களுக்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.
ஆனால் அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழர்களை திரும்பி வருமாறு ரணில் அழைப்பு விடுகிறார். அதேவேளை கேப்பாப்பிலவு மக்கள் தமது சொந்த நிலதில் உட்புகுந்தால் சுடப்படுவீர் என விமான படை அறிவித்தல் செய்துள்ளது.
அந்த மக்களுக்கு காணி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அந்த நிலத்தினுள் மக்கள் உள் சென்றால் சுடப்படுவாராயின் என்ன அர்த்தம்?
மக்கள் தமது சொந்தக் காணிக்குள் செல்வது மரணதண்டனை வழங்கும் அளவிற்கு மிகப் பெரிய குற்றமா? இதுதான் நல்லாட்சி அரசா?
எதிரி நாடுகூட எல்லை தாண்டும் மக்களை கைது செய்து சிறையில்தான் அடைக்கும். ஆனால் இலங்கை அரசு தமது சொந்த நிலத்தில் உட் செல்லும் மக்களை சுட்டு கொல்லப்படும் என அறிவிப்பது என்ன நியாயம்?
உண்மையில் நல்லாட்சி அரசின் பிரதமர் அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக அவுஸ்ரேலிய அரசு தமிழ் மக்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதை தடுப்பதற்காகவே இவ்வாறு கூறியுள்ளார்.
பிரதமர் ரணிலின் நரித்தனத்தை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்களுக்கு உண்டு.
இவ்வாறு செய்வதன் மூலமே ஜ.நா வில் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதை தடுத்து நிறுத்த முடியும்.
கேப்பாப்பிலவிற்கு விஜயம் செய்த பத்தேகம சமித்த தேரர் தனது ஆதரவை வழங்கியதுடன் இம் மக்களின் நியாயமான போராட்டத்தை சிங்கள மக்களுக்கு கூறப்போவதாக தெரிவித்தள்ளார்.
கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக மிகப் பெரிய மக்கள் போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளதாகவும் அதில் பெருந்தொகையான சிங்கள மக்களும் கலந்து கொள்ளவிருப்பதாக அறிய வருகின்றனது.
தமிழ் சிங்கள மக்களை பிரித்து வைத்து இனவாதத்துடன் ஆட்சி புரிந்து வரும் இலங்கை அரசுக்கு பேரிடியாக மாறி வருகிறது கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்.
அதிகளவான மக்களின் கவனத்தையும் ஆதரவையும் பெற்றுவரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம்; வெற்றி பெறுவது உறுதி.

•லண்டனில் நடைபெற்ற தேர்தல் முறை மாற்றம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு!

•லண்டனில் நடைபெற்ற தேர்தல் முறை மாற்றம் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு!
லண்டன் ஈஸ்ட்காம் நகரில் நேற்று ( 18.02.17) மாலை 5 மணியளவில் இலங்கையில் வரவிருக்கும் தேர்தல் முறை மாற்றம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் காதர் மாஸ்டர் அவர்களின் தலைமையில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையில் இருந்து வந்திருந்த மலையகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகம் திலகராஜ் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் சட்டத்தரணி முகமட் பாயிஸ் ஆகியோர் உரையாற்றினார்கள்.
வரவிருக்கும் தேர்தல் முறை மாற்றம் பற்றியும் அதனால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதக விடயங்கள் குறித்தும் தமது கருத்துக்களை இவர்கள் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் தமிழர் தகவல் மையம்; ஏற்பாடு செய்யப்பட்டிருந்த , தேர்தல் முறைமைகள் சீரமைப்பு தொடர்பான துறையில் நிபுணரான கற்றீங்கா சில்வியா உடனான செயலமர்வுகளுக்காக லண்டன் வந்துள்ளனர்.
இறுதியாக பார்வையாளர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதில் தந்தார்கள். பௌசர் நன்றி தெரிவித்ததுடன் கலந்துரையாடல் முடிவு பெற்றது.
குறிப்பு- பேச்சாளர்கள் இருவரும் தமக்கு வழங்கப்பட்ட நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி பயன் உள்ள கருத்தகளை தெரிவித்தமை பாராட்டுக்குரியதாகும்.

•எல்லோருக்கும் வாழ்க்கையே போராட்டமென்றால் கேப்பாப்பிலவு குழந்தைகளுக்கு போராட்டமே வாழ்க்கை

•எல்லோருக்கும் வாழ்க்கையே போராட்டமென்றால்
கேப்பாப்பிலவு குழந்தைகளுக்கு போராட்டமே வாழ்க்கை
கேப்பாப்பிலவு குழந்தைகள் தமது சொந்த நிலத்தை திருப்பி தருமாறு கோரி கடந்த 20 நாட்களாக போராடி வருகிறார்கள்.
உலகில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் வாழ்க்கையே போராட்டமென்றால் கேப்பாப்pலவு குழந்தைகளுக்கு போராட்டமே வாழ்க்கையாக இருக்கிறது.
அவர்கள்,
உண்பது ஒரு துண்டு பாண்
குடிப்பது ஒரு கப் தேத்தண்ணி
உறங்குவது ராணுவ முள்கம்பி வேலியோரத்தில்
படிப்பது போராட்ட களத்தில்
பாடுவது ராணுவத்தை வெளியேறச்சொல்லி அவர்களே இயற்றிய பாடல்
அவர்களது கனவுகூட தமது சொந்த நிலம் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதே.
ராணுவம்,
இரவில் மின்சாரத்தை நிறுத்தி மிரட்டியது
உள்சென்றால் சுடப்படுவீர் என பலகை வைத்து மிரட்டியது.
போட்டோ பிடித்து மிரட்டியது
நாய்களை ஏவி விட்டு மிரட்டியது
எத்தனையோ தடைகள் வந்தபோதும் குழந்தைகள் அத்தனை தடைகளையும் எதிர்த்து நின்று போராடுகின்றனர்.
தமது நிலம் தமது கையில் கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இந்த கேப்பாப்பிலவு குழந்தைகளின் போராட்டம் கேட்பாரற்று போய்விடாது.
இவர்களின் நியாயமான போராட்டம் அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறது.
அது வெற்றி பெறுவது உறுதி. வரலாற்றில் இடம் பிடிக்கப்போவதும் உறுதி.

•அன்று ஈழ அகதிகளை அந்தமான் சிறைக்கு அனுப்ப முனைந்தவர்கள் இன்று தங்களை தமிழக சிறைக்கு மாற்ற முயல்கிறார்கள் !

•அன்று ஈழ அகதிகளை அந்தமான் சிறைக்கு அனுப்ப முனைந்தவர்கள்
இன்று தங்களை தமிழக சிறைக்கு மாற்ற முயல்கிறார்கள் !
ஜெயா அம்மையாரின் முதலாவது ஆட்சிக்காலத்தில் ஈழ அகதிகள் பல சிறப்புமுகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அப்போது வேலூர் கோட்டை சிறப்புமுகாமில் இருந்து அகதிகள் தப்பிவிட்டார்கள் என்ற காரணத்தைக் காட்டி ஈழ அகதிகள் எல்லோரையும் அந்தமானுக்கு அனுப்பும்படி ஜெயா அம்மையார் கோரினார்.
ஆனால் மத்திய அரசு அவ்வாறு செய்ய சட்டத்தில் இடமில்லை என கூறி ஜெயா அம்மையாரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
எந்தவித குற்றச்சாட்டும் அற்ற , எந்தவித தண்டனையும் பெறாத அப்பாவி அகதிகளை அந்தமானுக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரிய ஜெயா அம்மையாரின் சகோதரி சசிகலா தன்னை தமிழக சிறைக்கு மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
ஆந்திரா மற்றும் கர்நாடக சிறைகளில் பல தமிழர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவரையும் தமிழக சிறைக்கு மாற்ற முயற்சி செய்யாத ஜெயா அம்மையாரின் தமிழக அரசு இன்று சசிகலாவை சிறை மாற்ற முயற்சி செய்கிறது.
ஆட்சியில் இருக்கும்போது சிறை குறித்து எந்தவித கவனமும் செலுத்தாத இந்த அரசியல்வாதிகள் தங்களுக்கு சிறை என்றவுடன் அதில் சலுகைகள் பெற முயற்சி செய்கின்றனர்.
இனியாவது சிறப்புமுகாமில் இருக்கும் அகதிகளை விடுதலை செய்ய சசிகலாவும் அவரது கட்சியின் அரசும் முன்வரவேண்டும்.
ஆங்கிலேயர் காலத்து சிறை விதிகளே இன்றும் தமிழக சிறைகளில் நடைமுறையில் இருக்கின்றது. இனியாவது இன்றைய காலத்திற்கு ஏற்ப சிறைவிதிகளை மாற்ற தமிழக அரசு முன்வரவேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனால் இப்பவும் சிறை சுப்பிரண்டனை (கண்காணிப்பாளர்) துரை என்றே அழைக்கிறார்கள். அதையாவது முதலில் நீக்க வேண்டும்.

•போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை

•போராட்டம் ஒருபோதும் தோல்வியை தருவதில்லை
•இன்று பரவிபாஞ்சான். நாளை கேப்பாப்பிலவு!
பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. பரவிபாஞ்சான் மக்களது காணிகளை ஒப்படைக்க ராணுவம் சம்மதித்துள்ளது.
சம்பந்தர் அய்யாவின் நல்லிணக்க அரசியலால் சாதிக்க முடியாததை பரவிபாஞ்சான் மக்கள் தமது போராட்டம் மூலம் சாதித்து காட்டியுள்ளனர்.
பரவிபாஞ்சான் மக்கள் பெற்ற வெற்றி கேப்பாப்பிலவு மக்களுக்கு உற்சாகத்தையும் உறுதியையும் கொடுத்துள்ளது.
25 வது நாளாக தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டமும் நிச்சயம் வெற்றி பெறும். அம் மக்களும் தமது காணிகளை மீளப் பெறுவார்கள்.
இதேவேளை காணாமல் போனவர்களின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் 5 வது நாளாக தொடருகிறது.
இம் மக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக உலகெங்கும் உள்ள தமிழர்கள் குரல் கொடுக்கிறார்கள்.
தமிழ் மக்கள் மட்டுமன்றி முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களும் இந்த மக்கள் போராட்டங்களுக்கு தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
வாழ்க்கை போராட்டமயமானது. போராட்டம் இன்பமயமானது என்று தோழர் கால் மாக்ஸ் கூறியுள்ளார்.
அது உண்மைதான் என்பதை கேப்பாப்பிலவில் 25வது நாளாக போராடும் குழந்தைகள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர்.