Thursday, November 30, 2017

இந்திராகாந்தி இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்குமா?

•இந்திராகாந்தி இருந்திருந்தால்
தமிழீழம் கிடைத்திருக்குமா?
இந்திராகாந்தி அம்மையாரின் நினைவு தினமான நேற்று அவர் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என வழக்கம்போல் நம்மவர்கள் சிலர் எழுதியுள்ளனர்.
ஆனால் இந்திராகாந்தி அம்மையார் உயிரோடு இருந்திருந்தாலும் ராஜீவ் காந்தி செய்ததையே செய்திருப்பார் என்பதே உண்மையாகும்.
(1)பாலஸ்தீன விடுதலையை அங்கீகரித்த இந்திராகாந்தி அம்மையார் தமிழீழ விடுதலையை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை
(2)பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் அரபாத்திற்கு செங்கள வரவேற்பளித்த இந்திராகாந்தி அம்மையார் ஈழவிடுதலை இயக்கங்களை ஒருபோதும் சந்தித்ததில்லை.
(3) பாலஸ்தீன விடுதலை இயக்கம் வெளிப்படையாக இந்தியாவில் அலுவலகம் அமைத்து இயங்க அனுமதித்த இந்திராகாந்தி அம்மையார் ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழ்நாட்டில் வெளிப்படையாக இயங்க அனுமதிக்கவில்லை.
(4) இலங்கையில் அலன் தம்பதிகள் என்ற வெள்ளை இனத்தவர் இருவரைக் கடத்தி சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஈபிஆர்எல்எவ் இயக்கம் கோரியபோது ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் அதற்கு சம்மதித்தார். ஆனால் இந்திராகாந்தி அம்மையார் ஈபிஆர்எல்எவ்; தலைவர்களை பிடித்து அடித்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்வித்தார்.
(5)இந்திராகாந்தி அம்மையார் நினைத்திருந்தால் ஈழ விடுதலை இயக்கங்களை ஒன்றினைத்து பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கியிருக்க முடியும்.
(6) ஆனால் அவரோ மொத்தம் 36 இயக்கங்களில் 5 இயக்கங்களுக்கு மட்டுமே அதுவும் தனித் தனியாகவே பயிற்சி கொடுத்தார்.
(7) இந்தியாவிடம் பயிற்சி பெற்ற மொத்த போராளிகளின் எண்ணிக்கை ஜந்நூறை தாண்டாது. அதுபோல் பயிற்சி பெற்ற 10 போராளிகளுக்கு தலா ஒரு ஆயுதம் என்ற அளவிலேயே ஆயுதமும் வழங்கப்பட்டது.
(8) ஆயுதம் போதாது என்று இயக்கங்கள் கூறியபோது “ தரப்படும் ஆயுதம் தற்பாதுகாப்பிற்கேயொழிய தாக்குதலுக்கு அல்ல” என்று இந்தியா பதில் கூறியது.
(9)அதேவேளை இயக்கங்கள் தாங்களாக உலக சந்தைகளில் ஆயுதம் வாங்குவதையும் இந்தியா தடுத்தது. புளட் இயக்கம் இறக்குமதி செய்த 150 ரைபிள் துப்பாக்கிகளை இந்திய அரசு பறிமுதல் செய்தது.
(10) முழு இலங்கையையும் இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காகவே இந்திராகாந்தி அம்மையார் இயக்கங்களுக்கு சிறிதளவு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கினார்.
(11) பாகிஸ்தானை பிரித்து பலவீனப்படுத்தவே வங்க தேச விடுதலையை இந்திராகாந்தி அம்மையார் ஆதரித்தார். ஆனால் முழு இலங்கையையும் ஆக்கிரமிக்கும் நோக்கம் இருந்தமையினால் தமிழீழ விடுதலையை அவர் ஆதரிக்கவில்லை.
(12) எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழம் விடுதலை அடைந்தால் அது தமிழ்நாடு விடுதலைக்கு உத்வேகம் கொடுக்கும் என்ற அச்சம் இந்திராகாந்தி அம்மையார் உட்பட அனைத்து இந்திய தலைவர்களுக்கும் உண்டு.
(13) ஏனெனில் தமிழ்நாடு தனி நாடானால் இந்தியா சுக்கு நூறாக உடையும். எனவே இந்தியா உடைவதற்கு வழி வகுக்கும் தமிழீழ விடுதலைக்கு இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது.
எனவே இந்திராகாந்தி அம்மையார் இருந்திருந்தாலும் தமிழீழம் கிடைத்திருக்காது என்பதே உண்மையாகும்.

வோட்டு போட்ட மக்கள் போராடுகிறார்கள். பதவி பெற்ற தலைவர்கள் உறங்குகிறார்கள்!

•வோட்டு போட்ட மக்கள் போராடுகிறார்கள்.
பதவி பெற்ற தலைவர்கள் உறங்குகிறார்கள்!
இதோ கொட்டும் மழையிலும் நனைந்தபடி போராடுகின்றார்களே
இந்த மக்கள் அளித்த வோட்டில் பதவி பெற்ற தலைவர்கள்
தமது கையால் தமக்கு குடை பிடிப்பதில்லை.
இவர்களுக்கு குடை பிடிக்க இன்னொருவர் தேவை
இவர்கள் பயணம் செய்ய 5 கோடி ரூபாவில் சொகுசு வாகனம் தேவை.
இவர்கள் கொழும்பில் தங்குவதற்கு சொகுசு பங்களா தேவை.
வார இறுதியில் இந்திய தூதரின் விருந்தில் அருந்துவதற்கு மதுக் கிண்ணங்கள் தேவை
சிகிச்சை பெறுவது இந்தியாவில். அடிக்கடி உல்லாசம் செல்வது வெளிநாட்டிற்கு
பாராளுமன்றம் போவது கையெழுத்து போட்டு சம்பளம் வாங்குவதற்கு
பிடித்தமான பொழுதுபோக்கு பாராளுமன்றத்தில் குறட்டை விட்டு தூங்குவது
தங்களை தமிழ் மக்களின் தலைவர்கள் என்று அழைத்துக்கொள்வார்கள். ஆனால் மறந்தும் தமிழ் மக்களின் பிரச்சனை குறித்து பேச மாட்டார்கள்.
தீபாவளி விருந்தில் ஜனாதிபதியுடன் பங்கெடுப்பார்கள். ஆனால் அரசியல் கைதிகளின் பிரச்சனை என்றால் ஜனாதிபதியை சந்திக்க மாட்டார்கள் கடிதம் எழுதுவார்கள்.
பாவம் தமிழ் மக்கள்!
வோட்டு போட்டு இவர்களுக்கு பதவியைக் கொடுத்துவிட்டு அவர்கள் மழையில் நனைந்தபடி போராடுகிறார்கள்.

ஜனாதிபதியால் ஏமாற்றப்பட்ட மாணவர்கள் வேறு வழியின்றி போராட்டத்தை தொடர்கிறார்கள்

ஜனாதிபதியால் ஏமாற்றப்பட்ட மாணவர்கள்
வேறு வழியின்றி போராட்டத்தை தொடர்கிறார்கள்
மாணவர்களின் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து ஆதரவு தெரிவிக்க வேண்டியது அனைத்து தமிழ் மக்களினதும் கடமையாகும்.
அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக மாணவர்களிடம் உறுதியளித்த ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார்.
மாணவர்களை ஏமாற்றியது மட்டுமன்றி தற்போது போராடும் மாணவர்களை தனிமைப்படுத்தி பழி வாங்கும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுள்ளது.
மாணவர்களுடன் சேர்ந்து போராடவேண்டிய தமிழ்தேசியகூட்டமைப்பு திரைமறைவில் அரசுடன் சேர்ந்து சதி செய்கிறது.
யாழ் வந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாணவர்களை சந்திக்க மறுத்ததோடு மாணவர் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
தமது நலன்களை சாதிப்பதற்கு ஜனாதிபதியை நேரில் சந்திக்கும் சம்பந்தர் அய்யா அரசியல் கைதிகள் விடயத்தில் கடிதம் எழுதி ஏமாற்றுகிறார்.
பிரதமர் ரணில் அவர்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று நுங்கு வெட்டிக் கொடுத்த சுமந்திரன், உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்காக பிரதமரை அழைத்து செல்ல விரும்பவில்லை.
நீதி அமைச்சர் அத்துக்கோரளையுடன் ரஸ்சியா சென்ற மாவை சேனாதிராசா அவர்களுக்கு உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக அவருடன் ஒரு இரண்டு நிமிடம் பேச தோன்றவில்லை.
மாணவி வித்யா கொலையாளி சுவிஸ்குமாரை காப்பாற்ற நள்ளிரவிலும் ஓடோடிச் சென்ற அமைச்சர் விஜயகலா 35 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை சென்று சந்திக்கவில்லை.
பிரதமரையும் ஜனாதிபதியையும் அழைத்து தனது மகளின் நாட்டிய அரங்கேற்றத்தை நடத்த முடிந்த அமைச்சர் விஜயகலாவால் அரசியல் கைதிகளுக்காக அவர்களை அழைக்க விரும்பவில்லை.
தமிழ் தலைவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான் வேறு வழியின்றி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இப்போது போராடும் மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் வேலைகளில் பல்கலைக்கழக உபவேந்தர் ஈடுபடுகிறார்.
ஒருபுறம் அரசியல் கைதிகள் மரணத்தின் விழிம்பில் நிற்கிறார்கள். மறுபுறம் போராடும் மாணவர்கள் சீரழிக்கப்படும் அபாயம். இதற்கு மத்தியில் தமிழ் மக்கள் நலனில் அக்கறையற்ற தலைவர்கள்.
மாணவர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடி அகிம்சை வழியில் போராடுகிறார்கள். ஆனால் பக்கத்தில் இருக்கும் யாழ் இந்திய தூதரோ இது குறித்து வாய் திறக்க மறுக்கிறார்.
ஒருவேளை உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதி மரணமடைந்தால் அந்த இடத்தில் காந்தி சிலை நிறுவுதற்கு இந்த தூதர் காத்துக்கொண்டு இருக்கிறாரோ தெரியவில்லை.
இந்திய தூதர் பேசாவிட்டாலும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு ஒரு செய்தி அனுப்பியுள்ளது.
இலங்கை கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இரண்டு இந்திய போர்க்கப்பல்களை இந்திய அரசு அனுப்பியுள்ளது.
.

தமிழ் மக்களுக்கு தேவை இன்னொரு சம்பந்தர் அல்ல

•தமிழ் மக்களுக்கு தேவை
இன்னொரு சம்பந்தர் அல்ல
மாற்று தலைமையே தேவை!
நேற்றைய தினம் லண்டன் ஈஸ்ட்காம் நகரில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கலந்துரையாடல் நடைபெற்றது.
புதிய அரசியல் அமைப்பும் சமகால அரசியலும் என்னும் தலைப்பில் மக்கள் சந்திப்பாக நிகழ்வு நடைபெற்றது.
மண்டபம் நிரம்பிய கூட்டம். அனைவரின் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
அவர் புதிய அரசியலமைப்பு பற்றியும் சம்பந்தர் அய்யா மற்றும் சுமந்திரன் ஆகியோரின் துரோகங்கள் பற்றியும் தெளிவாக விளக்கினார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கைக்குரிய மாற்று தலைமை ஒன்று இல்லாததாலேயே தொடர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பை ஆதரித்து வருகின்றனர்.
இந்த உண்மையை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே அவர் தான் எப்படி தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு தலைமையை கொடுக்க முடியும் என்பதை விளக்கி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற முயல வேண்டும்.
ஆனால் நேற்றைய கூட்டத்திலும் அவர் தனக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை இதற்கு பயன்படுத்த தவறிவிட்டார் என்றே கூற வேண்டியிருக்கிறது.
முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டனவேயொழிய தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்று அவர் கூறினார்.
ஆனால் அதேவேளை தமிழீழம் கோருவது சட்ட விரோதம் என்பதால் தாம் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டதாக கூறினார்.
தேர்தல் பாதையில் பயணித்துக்கொண்டு வெளிநாட்டு அழுத்தங்கள் மூலம் தமிழ் மக்களுக்கான உரிமையை பெற முடியும் என சம்பந்தர் அய்யா கூறுகிறார்.
சம்பந்தர் அய்யா கூறிய வழியில் தமிழ் மக்களுக்கான உரிமையை இதுவரை பெற முடியவில்லை. எனவே மாற்று தலைமை என்பது இதற்கு மாற்றான ஒரு வழியைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பந்தர் அய்யா கூறிய அதே வழியில்தான் தானும் பயணிக்கப்போவதாக கூறுகிறார்.
அவர் மாற்றுவழி எதையும் முன்வைக்காத படியால்தான் அவரை மாற்று தலைமையாக தமிழ் மக்களால் தெரிவு செய்ய முடியவில்லை.
குறிப்பு-
(1)இலுப்பம்பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று 1977ல் வண்ணை ஆனந்தன் பேசினார். அவர் பேசியபடி வெளவால் (இந்தியா) வந்தது. அதனிடம் வாங்கிய அடியின் வலியே இன்னும் மாறவில்லை. அதற்குள் மேற்கு நாடு வரும். அதன் மூலம் தீர்வு பெறுவேன் என்று கஜேந்திரகுமார் கூறுகிறார். ஆனால் இதை நம்பி இன்னொரு முறை அடிவாங்க தமிழ் மக்கள் தயாரில்லை.
(2)சம்பந்தர் துரோகி என்பதால் அவரை அய்யா என விழிக்கமாட்டேன் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார். ஆனால் இந்த துரோகியுடன்தான் 2010 வரை இவரும் கூட இருந்தார் என்பதை மறந்துவிட்டாரா?
(3)இந்தியா குறித்து அதன் ஆக்கிரமிப்பு பற்றி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எதுவும் கூறாதது தற்செயலானதா அல்லது திட்டமிட்ட மௌனமா என்று புரியவில்லை.

•250 நாட்கள்

•250 நாட்கள்
இது நடிகர் விஜய் இன் மெர்சல் படம் அல்ல. இங்கு கட்டப்பட்டிருப்பதும் நடிகரின் 35 அடி கட்வுட்டும் அல்ல.
இது கேப்பாப்புலவு மக்களின் போராட்டம். தமது சொந்த நிலம் தமக்கு வேண்டும் என்ற அவர்களின் குரலே கட்அவுட்டாக தொங்கிறது.
250 நாட்களாக ராணுவ முகாம் முள்ளுக்கம்பி வேலி அருகே படுத்துறங்கி போராடி வருகிறார்கள்.
ஒருபுறம் கொட்டும் மழை. மறுபுறம் தூவனம். நிலம் ஊறுகிறது. இரவில் நுளம்புக்கடி தொல்லை. இத்தனைக்கும் நடுவே குழந்தைகள்கூட போராடுகின்றன.
ஆனால், இங்கே குழந்தை மழை நீரில் கிடந்து போராடுகிறது. அங்கே சம்பந்தர் அய்யா இரண்டாவது சொகுசு மாளிகைக்கு பெயிண்ட் அடிக்க 5 கோடி ரூபா அரசிடம் பெறுகிறார் என்று நான் இப்பொழுது எழுதப் போவதில்லை.
அல்லது, இங்கே மக்கள் தமது சொந்த நிலம் கேட்டு போராடுகிறார்கள். அங்கே மாவை சேனாதிராசா தமது சொந்த நிலத்தை மீட்டு சின்ன வீடு 3 கோடி ரூபா செலவில் கட்டி வருகிறார் என்றும் எழுத விரும்பவில்லை.
அல்லது, தமிழ் குழந்தை இங்கே தண்ணீரில் கிடந்து போராடுகிறது. அங்கே சுமந்திரன் பிள்ளைள் சிங்கள பொலிஸ் பாதுகாப்புடன் அரச ஜீப் வண்டியில் நீச்சல் குளம் செல்கிறார்கள் என்றும் சட்டிக்காட்ட நான் விரும்பவில்லை.
ஏனென்றால் நான் இவ்வாறு எழுதினால் சம்பந்தர் அய்யா, சுமந்திரன், மாவை சோனாதிராசாவுக்கு கோபம் வருகிறதோ இல்லையோ ஆனால் அவர்களது செம்புகளுக்கு கோபம் வருகிறது.
எனவே இம்முறை நான் அவ்வாறு எழுதாமல் உங்களின் மனட்சாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
250 நாட்களாக தமது சொந்த நிலம் கேட்டு போராடும் இந்த குழந்தைக்கு உங்கள் பதில் என்ன?

கந்துவட்டி கொலைகாரர்களை கைது செய்ய முடியாதவர்கள்

•கந்துவட்டி கொலைகாரர்களை கைது செய்ய முடியாதவர்கள்
கந்துவட்டி கொலை பற்றி கார்டூன் போட்டவரை கைது செய்கிறார்கள்
நேற்று - திருமுருகள்காந்தி, வளர்மதி, முகிலன்
இன்று – வழக்கறிஞர் செம்மணி, கார்டூனிஸ்ட் பாலா
நாளை- இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்களாக இருக்கலாம்.
தமிழ அரசு பா.ஜ.க அரசாக செயல்படுகிறது.
காவல்துறை ஏவல்துறையாக செயல்படுகிறது.
ஊடகங்கள் இதற்கு ஒத்து ஊதுகின்றன.
நாம் மௌனமாக இதை அனுமதிக்கப்போகின்றோமா அல்லது
இதற்கு எதிராக குரல் கொடுக்கப் போகின்றோமா?
இதுவே இன்னு எம் முன் உள்ள கேள்வியாகும்.
சர்வாதிகாரமாக செயற்படும் அரசை
ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என உரத்து கூறுவோம்!

•தலைவர்களை விலைக்கு வாங்கலாம்

•தலைவர்களை விலைக்கு வாங்கலாம்- ஆனால்
தம்மை ஒருபோதும் வாங்கமுடியாது என்பதை
இந்திய தூதருக்கு நிரூபித்த தமிழ் மக்கள்!
தலைவர்களை விலைக்கு வாங்கினால் தமிழ் மக்களை வாங்கிவிடலாம் என இந்திய தூதர் நினைத்தார்.
ஆனால் தலைவர்களை வாங்கினாலும் தம்மை ஒருபோதும் வாங்க முடியாது என்பதை தமிழ் மக்கள் நிரூபித்து வருகிறார்கள்.
இதனால் இந்திய தூதர் வடக்கு கிழக்கு முழுவதும் 20 காந்தி சிலை வைக்கப்படும் என்றார்.
விவசாயிகளுக்கு 200 டிறைக்ரடர் வண்டி தரப்புடும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
அதற்குமேலாக வீடு கட்டித் தரப்படும் என்று உறுதி மொழி வழங்கியும் பார்த்தார்.
ஆனால் தமிழ் மக்கள் இந்திய ராணுவம் புரிந்த படுகொலைகளை மறக்கவும் முடியாது. மன்னிக்குவம் முடியாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார்கள்.
இந்திய தூதரின் அனைத்து மிரட்டல்களையும் தாண்டி யாழ் மருத்துவமனைப் படுகொலைகளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்தார்கள்.
அடுத்து 30 வருடத்திற்கு முன்னர் பட்டிருப்பில் இந்திய ராணுவம் செய்த படுகொலைகளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்து இந்திய தூதரின் முகத்தில் கரியைப் பூசியுள்ளனர்.
பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சி தலைவருமான இராசமாணிக்கம் அவர்களின் மகன் உட்பட 11 பேரை இந்திய ராணுவம் படுகொலை செய்திருந்தது.
கிழக்குமாகாண தமிழ் மக்களால் நினைவு கூரப்பட்ட இந்த வைபவத்தில் தற்போதைய தமிழரசுக்கட்சி தலைவரோ அல்லது எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரோ கலந்துகொள்ளவில்லை.
தற்போதைய தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவின் குடும்பமும் வீடும் இந்தியாவில் சென்னையில் இருக்கின்றது.
அதனால் அவர் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வைபவங்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார்.
அற்ப சலுகைகளுக்காக தலைவர்கள் இந்திய தூதருக்கு விலை போகலாம். ஆனால் மக்கள் ஒருபோதும் விலை போக மாட்டார்கள்.
இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவு கூர்ந்ததன் மூலம் கிழக்குமாகாண தமிழ் மக்களும் தம்மை விலைக்கு வாங்கமுடியாது என்பதை காட்டியுள்ளார்கள்.
வெகுவிரைவில் வடக்கு கிழக்கில் இருந்து இந்திய தூதர் மட்டுமன்றி இந்திய ஆக்கிரமிப்பும் விரட்டியடிக்கப்படும்.
இது உறுதி.

•மாவீரர் வாரத்தில் இப்படியொரு கேளிக்கை விழா தேவையா?

•மாவீரர் வாரத்தில்
இப்படியொரு கேளிக்கை விழா தேவையா?
உலகெங்கும் தமிழ் மக்கள் மாண்டுபோன தம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும்வேளையில் பழையமாணவர் சங்கம் பெயரில் கேளிக்கை விழா தேவையா?
தமிழக மற்றும் சிங்கப்பூர் மலேசிய தமிழ் மக்கள்கூட இந்த காலங்களில் கேளிக்கை விழாக்களை தவிர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் லண்டனில் இருக்கும் இவ் பழைய மாணவர்கள் ஈழத் தமிழர்களாக இருந்தும் இந்த காலங்களில் கேளிக்கை விழாவை ஒழுங்கு செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இதுவே தாயகத்தில் யாராவது இப்படி நிகழ்வு ஒழுங்கு செய்திருப்பின் இந் நேரம் புலத்தில் இருப்பவர்கள் திட்டித் தீர்த்திருப்பார்கள்.
தாயகத்திற்கு ஓரு நியாயம். புலத்திற்கு இன்னொரு நியாயமா?
சம்பந்தப்பட்ட பழைய மாணவர் சங்கம் தயவு செய்து இதனை பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு- பழைய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஒருவரே மிகுந்த வேதனையுடன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் கேட்டுக்கொண்டபடி மக்களின் கவனத்திற்காக இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது

காலம் கனிந்தது பேரம் படிந்தது 2ஜி கோவிந்தா ஆனது?

•காலம் கனிந்தது
பேரம் படிந்தது
2ஜி கோவிந்தா ஆனது?
பல நாட்களாக தள்ளிவைக்கப்பட்ட 2 ஜி ஊழல் வழக்கு தீர்ப்பு நாளை வழங்கப்படவிருக்கிறது.
இத்தனை நாளும் திமுக வின் கரங்கள் ஊழல் கறை படிந்தவை என்று சொல்லிவந்த பிரதமர் மோடி, வீடு தேடிச்சென்று கலைஞர் கருணாநிதியின் கரங்களை பற்றியுள்ளார்.
மதவெறி பிடித்த மோடியை எதிர்ப்போம் என்று ஜக்கிய முன்னணி கட்டிவந்த திமுக வும் வேறு வழியின்றி மோடியை வரவேற்றுள்ளது.
நடக்கும் நாடகங்களைப் பார்க்கும்போது 2ஜி ஊழல் வழக்கில் பேரம் படிந்துவிட்டது. திமுக வுக்கு சாதகமான தீர்ப்பு எழுதப்படுகிறது என்றே தோன்றுகிறது.
இப்போது உள்ள கேள்வி தீர்ப்பு நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட போகிறதா அல்லது திமுக நிரபராதி என கூறப்படப்போகிறதா என்பதே.
திமுக, அதிமுக இரண்டின் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் இருக்கின்றன. அதனை காட்டி மோடி அரசு மிரட்டுகிறது.
இதனால் மோடி அரசை எதிர்த்து குரல் கொடுக்க முடியாத நிலையில் தமிழக ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இருக்கிறது.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று மோடி வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் அவர் அதை நிறைவேற்றவில்லை.
வாக்குறுதி வழங்கி ஏமாற்றியது தொடர்பாக மோடியிடம் கேட்கப்போவதாக மாணவி நந்தினி அறிவித்ததும் அவரையும் அவரது தந்தையும் பொலிஸ் கைது செய்துள்ளது.
ஒரு ஜனநாயகநாட்டில் பிரதமர் பொய் கூறலாம். அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் ஏன் பொய் கூறினீர்கள் என்று ஒரு மாணவி கேட்க முடியாது. இது என்ன ஜனநாயகம்?
கந்துவட்டிக் கொடுமையால் ஒரு குடும்பமே தீக்குளித்து இறந்துள்ளது. அதனை தடுக்க வக்கில்லை.
ஆனால் அது குறித்து காhட்டூன் வரைந்தவரை கைது செய்துள்ளது பொலிஸ். இதுதான் கந்துவட்டியை ஒழிக்கும் நடவடிக்கையா?
நள்ளிரவில் வழக்கறிஞர் செம்மணி வீட்டில் புகுந்து அவரை இழுத்துச் சென்று அடித்து காலை முறித்திருக்கிறது பொலிஸ்.
தமிழகத்தில் ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் கதி என்ன?
இந்தியாவில் இந்துவெறி காணப்படுவதாக நடிகர் கமலகாசன் கூறியதும் அவரை வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்.
ஒரு நாடறிந்த நடிகருக்கே இந்த நிலை என்றால் இனி சாதாரண மக்களால் வாய் திறந்து கருத்து கூறமுடியுமா?
இந்த சர்வாதிகார நிலை குறித்து தமிழக ஊழல் கட்சிகளால் எதிர்க்க முடியவில்லை.
எனவே ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு மக்களுக்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

மார்க்ஸ் “மூலதனம்” நூல் 150 வது ஆண்டு • லெனின் ரஸ்சிய புரட்சி 100 வது ஆண்டு

• மார்க்ஸ் “மூலதனம்” நூல் 150 வது ஆண்டு
• லெனின் ரஸ்சிய புரட்சி 100 வது ஆண்டு
உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என்பது விடை காணவேண்டிய வினாவாக இன்றும் இருக்கலாம்.
ஆனால் மார்க்சின் பின்னரான இந்த 150 ஆண்டு காலப் போராட்டங்களும் வென்றெடுப்புகளும் முதலாளித்துவத்திற்கான ஒரே மாற்று மார்க்சிசமும் சோசலிசமுமே என்பதை நிரூபித்துள்ளன.
மார்க்சிசம் அது தோற்றம் பெற்ற அதே இடத்தில் அப்படியே இருந்து வந்த ஒன்றல்ல. அது தனது விஞ்ஞான அடிப்படை காரணமாக வளர்ச்சியுற்றது.
மாபெரும் அக்டோபர் புரட்சி மூலமாக அது லெனினிசமாக வளர்ச்சி கண்டது.
சீனப்புரட்சியின் ஊடாக மாஓசேதுங் சிந்தனையாக அது மேலும் விரிவு கண்டது.
இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மார்க்சிசம் வளர்ச்சி பெற்று வருகின்றது.
இன்றைய உலகமயமாதல் சூழலிலே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி மார்க்சிசம் நிற்கின்றது.
அது ட்ராக்சியவாதம், சீர்திருத்தவாதம், நவீன திரிபுவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் விட்டுக்கொடுக்காத இடையறாத போராட்டத்தை நடத்தி வருகிறது.
புரட்சி நடைபெற்ற நாடுகளில் இன்று புரட்சி அரசுகள் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அந்த புரட்சிகளே
•உலகில் உழைக்கும்; மக்களும் நாடாள முடியும் என்பதை நிரூபித்தன.
•உலகில் உழைக்கும் மக்களும் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நிரூபித்தன
•உலகில் உள்ள தேசிய இனங்கள் அனைத்தும் சுயநிர்ண உரிமை கொண்டவை என்றன.
•உலகில் சர்வாதிகார பாசிச ஆட்சிகளை ஒன்றுதிரண்டு தூக்கியெறிய முடியும் என்பதை நிரூபித்தன.
•உலகில் இன மத சாதி மற்றும் நிற பேதங்களை கடந்து அனைவரும் சமமான மனிதர்கள் என பறைசாற்றின.
உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள்
நாம் இழப்பதற்கு எதுவுமேயில்லை -ஆனால்
நாம் வெல்லுவதற்கு ஒரு உலகம் இருக்கிறது!

கரடியே காறித் துப்பிடுச்சு!

•கரடியே காறித் துப்பிடுச்சு!
செய்தி- அதிகாரப் பகிர்வு கிடைக்கும் என்பதை காரணம்காட்டி தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குரிய தீர்வுகளை கோராது மௌனமாக இருக்க முடியாது என்பதை மூத்த அரசியல்வாதி சம்பந்தன் அய்யா ஏன் உணரவில்லை? என்று மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தமிழில் கேட்டுள்ளார்.
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும்படி தமிழ் தலைவருக்கு சிங்கள இனவாதிகள் சொல்லும் அவல நிலையே நாட்டில் இருக்கிறது.
இதற்குப் பிறகும் தமிழ் மக்களின்
• அரசியல் கைதிகள் பிரச்சனை
• காணமற்போனோர் பிரச்சனை
• மீள்குடியேற்றப் பிரச்சனை
போன்றவற்றுக்கு சம்பந்தர் அய்யா தீர்வு காணுவாரா? அல்லது வழக்கம்போல் இந்திய தூதரின் விருந்தில் தண்ணியடித்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கப்போகிறாரா?

இவர்களும் மாவீரர்கள்தான் இவர்களுடைய தியாகங்களும் மதிக்கப்படல் வேண்டும்!

•இவர்களும் மாவீரர்கள்தான்
இவர்களுடைய தியாகங்களும் மதிக்கப்படல் வேண்டும்!
தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்தவர்களை மாவீரர்களாக போற்றி ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து வருகிறோம்.
இதில் தமிழ்நாட்டில் இருந்து ஈழத் தமிழர்களுக்காக உயிர் துறந்தவர்களையும் நாம் நினைவு கூரக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஈழத் தமிழர்களுக்காக 18 தமிழக தமிழர்கள் தமிழ்நாட்டில் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். இது பலரும் அறிந்த செய்திதான்.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்துவந்து பல இளைஞர்கள் ஈழத்தில் போராடி வீர மரணம் அடைந்திருக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலேகூட பலர் அறிந்திராத செய்தி.
சாத்தூர் சிவகாசியைச் சேர்ந்த செங்கண்ணன் என்பவர் கரும்புலியாக பலாலி இராணுதளத்தை தாக்கி 11.11.93 யன்று வீர மரணம் அடைந்திருக்கிறார்.
தமிழகத்தில் இருந்து வந்து ஈழத்தில் போராடி வீரமரணம் அடைந்த மேலும் சில மாவீரர்கள் விபரம் வருமாறு,
பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற
மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2
நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில்
இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில்
சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்
இயற்பெயர்: சேதுபாணடித்தேவர்
ராமமணி சேகரன்மகாதேவர்
ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு
பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம்
படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள்
மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த
காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான
தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில்
படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட்
உட்கொண்டு வீரச்சாவு
நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில்
சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில்
வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.
நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள்
நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம்
பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது..
.
எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருந்து வந்து போராடினார்கள்? அதில் எத்தனை பேர் வீர மரணம் அடைந்தார்கள்? என்ற முழு விபரம் எனக்கு கிடைக்கவில்லை.
வேண்டுகோள்-
தமிழ்நாட்டில் இருந்துவந்து ஈழத்தில் போராடி மரணித்தவர்களின் முழு விபரம் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தல் வேண்டும்.
எமக்காக போராடி வீரமரணம் அடைந்த தமிழக இளைஞர்களை ஈழத் தமிழர்கள் வருடந்தோறும் சிறப்பாக நினைவு கூரவேண்டும்.
தமிழ்நாட்டில் மாவீரர் நினைவு நிகழ்வுகளை நடத்துவோர் தமிழ்நாட்டு மாவீரர்களையும் இனி குறிப்பிட்டு மதிப்பளிக்க வேண்டும்.

பெற்றோல் தட்டுப்பாடு காரணம் என்ன?

•பெற்றோல் தட்டுப்பாடு
காரணம் என்ன?
உலகில் பெற்றோலிய உற்பத்தி நாடுகள் தாராளமாக பெற்றோலை உற்பத்தி செய்கின்றன.
ஆனால் இலங்கையில் திடீரென பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் பெற்றோல் விநியோகத்தில் 40 வீதம் இந்திய கம்பனியான LIOC விடமே கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய கம்பனி LIOC யானது தரம் குறைந்த பெற்றோல் கொண்டு வந்தமையால் அதனை இறக்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
தரம்குறைந்த பெற்றோல் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டால் அது வாகனங்களை பாதிக்கும் என்பதாலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே ஒருமுறை இம் மாதிரி தரம்குறைந்த பெற்றோலை இறக்குமதி செய்து இவ் இந்தியன் கம்பனி LIOC விநியோகித்திருக்கிறது. சில வாகன உரிமையாளர்களுக்கு நட்டஈடும் வழங்கியிருக்கிறது.
இம்முறை மீண்டும் தரம் குறைந்த பெற்றோலை கொண்டுவந்து அதனை தடுக்கப்பட்டதும் வேண்டுமென்றே பெற்றோல் தட்டுப்பாட்டை அவ் இந்திய கம்பனி LIOC உருவாக்கியுள்ளது.
பெற்றோல் தட்டுப்பாட்டிற்கு காரணம் ஒரு இந்திய கம்பனி என்பதையோ அல்லது முக்கிய எரிபொருள் விநியோகத்தை அந்நிய நாட்டுக் கம்பனிக்கு கொடுத்தது பற்றியோ எவரும் பேசவில்லை.
மாட்டுவண்டியில் பாராளுமன்றம் வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றோல் தட்டுப்பாடு குறித்து பேசுகின்றார்களேயொழிய அதற்கு காரணம் இந்திய கம்பனி என்பதை பேசவில்லை.
இன்னும் வேடிக்கை என்னவெனில் இந்த பெற்றோல் தட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ச சயிக்கிளில் பாராளுமன்றம் வந்துள்ளார்.
ஆனால் அவருடைய காலத்தில்தான் நாட்டின் எரிபொருள் விநியோகத்தை இந்த இந்திய கம்பனிக்கு தாரை வார்த்தவர்.
இலங்கையில் எரிபொருள் விநியோகம் அரச நிறுவனமான பெற்றோலிய கூட்டுத்தாபனமே செய்ய முடியும் என்றிருந்த சட்டத்தை இந்திய கம்பனிக்காக மாற்றியவரும் இந்த மகிந்த ராஜபச்சதான்.
இங்கு கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் வெறும் 40 வீத மான நிலையிலேயே நாட்டில் ஒரு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி குழப்பத்தை இந்த இந்திய கம்பனியால் முடியும் என்றால் அந்த கம்பனி 100வீத பங்கையும் கொண்டிருந்தால் என்னவாகும்?
அதேவேளை இலங்கைக்கு 60 வருடங்களுக்கு போதுமான எண்ணெய்வளம் மன்னாரில் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இந்திய கம்பனி ஒன்றிற்கே வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டின் மின்சார விநியோகமும் இன்னொரு இந்திய கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் சம்பூரில் இருந்து உற்பத்தி செய்யப்போகும்; மின்சாரத்தை இந்திய கொண்டு செல்வார்கள். பின்னர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டு வருவார்களாம்.
இப்படியொரு கேவலம்கெட்ட முட்டாள்தனமாக ஒப்பந்தத்தையும் இந்தியாவுடன் செய்தவர் இந்த மகிந்த ராஜபக்சதான்.
ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் இலங்கை நாட்டின் எரிபொருள் விநியோகம் மட்டுமன்றி மின்சார விநியோகமும் இந்தியாவிடமே வழங்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் அத்தியாசிய விநியோகத்தை இந்தியாவிடம் கொடுத்திருப்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கும் கவலை இல்லை. இன்றைய ஜனாதிபதி மைத்திரிக்கும் கவலை இல்லை.
இவ் அரசியல்வாதிகளுக்கு தமது பதவி நலன்கள் குறித்துதான் அக்கறையேயொழிய நாடு பற்றியோ அல்லது நாட்டு மக்கள் பற்றியோ கொஞ்சம்கூட அக்கறை இல்லை.