Saturday, June 30, 2018

•தோழர் பிவிஆர் மறைவு! ஆழ்ந்த அஞ்சலிகள் !!

•தோழர் பிவிஆர் மறைவு!
ஆழ்ந்த அஞ்சலிகள் !!
பிவிஆர் என அழைக்கப்பட்ட தோழர் பொ.வே.ராமானுஜம் இன்று காலை மரணமடைந்துள்ளார்
மார்க்சிய லெனிய மாவோ சிந்தனைகளை இறுதி வரை உறுதியாக பின்பற்றிய தோழரின் மறைவு புரட்சிகர இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.
தமிழ்நாடு மார்க்சிய லெனிய கட்சியின் மூத்த தோழராக செயற்பட்டு வந்துள்ளார்.
நக்சல்பாரி இயக்கத்தில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த தோழர் பிவிஆர் தமிழ்நாடு அமைப்பு கமிட்டியில் செயற்பட்டபோது அவரை சந்தித்து பழகும் வாய்ப்பு கிடைத்தது.
TNOC தோழர் வசந்தனின் புரட்சித் திருமணத்தில் (1986) முதன் முதலில் பிவிஆர் அவர்களை சந்தித்தேன்.
அதன் பின்னர் சென்னையில் நடைபெற்ற TNOCயின் சில கூட்டங்களில் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து TNOCயினால் ஈரோட்டில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டபோதும் அவருடன் பல விடயங்கள் குறித்து உரையாட முடிந்தது.
பின்னர் 1991ல் ஜெயா அம்மையாரின் இருண்ட ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்று பிவிஆரும் அவருடன் சேர்த்து 6 தோழர்கள் தேசியபாதுகாப்பு சட்டத்தில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
நானும் அப்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் அங்கு தோழர் பிவிஆர் உடன் அதிகம் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
தோழர் சிறைக்கு வந்தவுடன் காலையில் ரீ போட்டு குடிப்பதற்காக ஒரு அடுப்பை இரகசியமாக கொடுத்திருந்தேன். அவர் விபரம் தெரியாமல் ஜெயிலர் ரவுண்ட் வரும்போது அடுப்பை பற்றவைத்து ரீ போட்டிருக்கிறார். இவர் அறையில் இருந்து புகை வருவதைக் கண்ட ஜெயிலர் ஏசியுள்ளார். சிறைக்கு வந்து ஒருநாள் கூட ஆகவில்லை அதற்குள் எப்படி உங்களுக்கு அடுப்பு கிடைத்தது என்று கேட்டிருக்கிறார். ஆனால் பிவிஆர் தனக்கு பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை. ஆனால் எனக்கு ஏதும் பிரச்சனை வரக்கூடாது என்று எண்ணி என் பெயரைக் கூறாமல் இருந்துவிட்டார்.
ஜெயிலர் அடுப்பை பறித்து சென்றுவிட்டார் என்ற விபரம் அறிந்ததும் நான் ஜெயிலரை சென்று சந்தித்து நான்தான் அடுப்பைக் கொடுத்தேன் என்று கூறினேன்.
அச்சரியமடைந்த ஜெயிலர் “ அப்படியா? நீ ஈழத் தமிழன். இவர்களோ இந்திய தமிழர்கள். நீ எதற்காக இவர்களுக்கு உதவி செய்தாய்?” என்று கேட்டார்.
“ அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காகத்தானே அவர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். எனவே ஈழத் தமிழரான நான் அவர்களுக்கு உதவ வேண்டியது கடமை அல்லவா?” என்றேன்.
அதைக் கேட்ட ஜெயிலர் சிரித்துவிட்டு “ அடுப்பை கொடுத்தது சரி. நான் வரும்போது அதனை எரிக்கக்கூடாது என்றதையாவது சொல்லிக் கொடுத்திருக்கலாம் அல்லவா” என்று கேட்டார்.
நானும் சிரித்துவிட்டு “சரி இனிமேல் அப்படி நடந்துகொள்ளும்படி அவர்களிடம் கூறுகிறேன்” என்று சொல்லிவிட்டு அடுப்பை பெற்று வந்து பிவிஆர் யிடம் கொடுத்தேன்.
இப்படி பல மறக்க முடியாத சம்பவங்கள் எமது சிறைக்காலத்தில் நடைபெற்றன. அவற்றை மீண்டும் நினைவு படுத்தியுள்ளது தோழரின் மறைவு.
ஈழத் தமிழர்கள் தமது உறுதியான ஆதரவாளர் ஒருவரை இழந்துள்ளனர். ராஜீவ் காந்தி மரணத்தையடுத்து ஏற்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத் தமிழரை ஆதரித்தவர்களில் பிவிஆரும் ஒருவர். அவருடைய பங்களிப்பு மறக்க முடியாதது.
தோழர் பிவிஆர் இன் குடும்பத்தவர்கள் மற்றும் தோழர்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

வெட்கப்பட வேண்டியது தமிழ் தலைவர்களே !

•வெட்கப்பட வேண்டியது
தமிழ் தலைவர்களே !
கிளிநொச்சி ராணுவ அதிகாரி மாற்றம் பெற்று செல்லும்போது தமிழ் மக்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்ட நிகழ்வு ஊடகங்களில் பரப்பப்படுகிறது.
எந்த ராணுவம் தமிழ் மக்களை கொன்றதோ அதே ராணுவத்திற்கு தமிழ் மக்கள் மாலை மரியாதை செய்து வரவேற்பது வெட்கப்பட வேண்டிய ஒரு செயல்தான்.
இருப்பினும் இதற்காக வெட்கப்பட வேண்டியவர்கள் தமிழ் தலைவர்களே யொழிய தமிழ் மக்கள் அல்ல.
அந்த ராணுவ அதிகாரி தன் சொந்த பணத்தில் இருந்து மக்களுக்கு உதவி செய்யவில்லை. அரச பணத்தையே வழங்கியிருக்கிறார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை இருக்கிறது. ஆனாலும் இன்றும்கூட பல பதவிகள் மற்றும் உதவிகள் ராணுவத்தினூடாகவே வழங்கப்படுகிறது.
ஒரு ராணுவஅதிகாரியை நல்லவராக காட்டுவதன் மூலம் மொத்த ராணுவத்தையும் நல்லதாக காட்ட முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் அரசின் ஏவல்நாயாக அதன் வன்முறைக் கருவியாக ராணுவம் இருக்கும்வரை அது மக்களுக்கு நல்ல ராணுவமாக ஒருபோதும் இருக்க முடியாது.
எமது தெரிவு செய்யப்பட்ட தமிழ் தலைவர்கள் மக்களுக்காக செயற்பட்டிருந்தால் மக்கள் ராணுவ அதிகாரியை வரவேற்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
இதே கிளிநொச்சி தொகுதிக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்.
இவர் தனக்கு 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் பெற்றார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் சொகுசு பங்களா வாங்கி பிள்ளைகளை படிக்க வைத்தார்.
இத்தனைக்கும் நடுவில் இவர் அரசிடம் வைத்த கோரிக்கை கிளிநொச்சியில் சாராய பார் திறக்க வேண்டும் என்பதே.
ஒரு ராணுவ அதிகாரி முன்னாள் போராளிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்கிறார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்.பி சாராயக்கடை திறக்க வேண்டும் என்கிறார்.
இப்போது சொல்லுங்கள். மக்கள் ராணுவ அதிகாரிக்கு மாலை போட்டதில் யார் வெட்கப்பட வேண்டும்?

தோழர் மணியரசன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்போம்!

தோழர் மணியரசன் மீதான தாக்குதலை
வன்மையாக கண்டிப்போம்!
தோழர் மணியரசன் மீதான தாக்குதலுக்கு தமிழக அரசே பொறுப்பாகும்.
தோழர் மணியரசன் மீதான தாக்குதல் என்பது தமிழ்தேசிய எழுச்சியை நசுக்குவதற்கான ஒரு முயற்சியே.
அனைத்து தமிழ் இன உணர்வாளர்களும் ஒருமித்து கண்டனங்களை பதிவு செய்வோம்.
இதுவே ஒரு சாதித் தலைவர் தாக்கப்ட்டிருந்தால் இந் நேரம் முப்பது பஸ் கொளுத்தப்பட்டிருக்கும்.
தமிழ்தேசிய தலைவர்கள் மீது கைவைத்தால் கேட்பதற்கு யாருமில்லை என்று அரசு நினைக்கிறது.
அதனால்தான் பலரை பிடித்து சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கிறது.
இனிமேல் அடித்தால் திருப்பி அடி விழும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
இல்லையேல் ஒவ்வொருவராக தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியேற்படும்.
எச்சரிக்கை!

•சுமந்திரனின் நடிப்பு உலகமகா நடிப்படா சாமி!

•சுமந்திரனின் நடிப்பு
உலகமகா நடிப்படா சாமி!
நடப்பது நல்லாட்சி. அதற்கு எதிராக போராடுவது தவறு என்றார்.
நல்லாட்சி அரசுக்கு எதிராக போராடுபவர்கள் மகிந்தவை மீண்டும் கொண்டு வரப் பார்க்கிறார்கள் என்றார்.
இந்த ஆட்சியை நாமே கொண்டு வந்தோம் என்று பெருமையாக உரிமை கோரினார்.
இப்போது அவரே மக்களுடன் சேர்ந்து இந்த அரசுக்கு எதிராக போராடுகிறார்.
இந்த அரசு எங்களை ஏமாற்றிவிட்டது என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்துள்ளார்.
ராஜினாமா கடிதத்தில் முக்காவாசி எழுதிவிட்டேன் என்று அறிக்கை விடுகிறார்.
ராஜினாமா கடிதம் என்ன பாரதமா? அல்லது இராமாயனமா? பக்கம் பக்கமாக எழுதுவதற்கு.
ராஜினாமா செய்வது உண்மையென்றால் இரண்டு வரியை எழுதிக் கொடுத்துவிட்டு போக வேண்டியதானே?
எதற்கு அறிக்கை விட்டு ஏமாற்ற வேண்டும்?
ராஜினாமா செய்ய வேண்டாம் என்று மக்கள் கெஞ்சுவார்கள் என்று எதிர்பார்க்கிறாரா?
அல்லது இந்த செய்தி கேட்டு தனது சீடர் யாராவது தீக்குளிப்பார்கள் என்று நினைக்கிறாரா?
நாங்கள் சிவாஜி நடிப்பு பார்த்திருக்கிறோம். கமல் நடிப்பு பார்த்திருக்கிறோம்.
ஆனால் இப்படியொரு உலக மகா நடிப்பை இதுவரை பார்த்ததில்லை.
ஆனால் இதெல்லாம் வரப் போகும் தேர்தலுக்கு போடும் நடிப்பு என்பதை உணர முடியாத அளவிற்கு தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.

பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களை என்றும் நினைவில் கொள்வோம்!

பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார் அவர்களை என்றும் நினைவில் கொள்வோம்!
இன்று அய்யா பெரும்சித்திரனார் அவர்களின் நினைவு தினமாகும். அவரை ஈழத் தமிழர்களாகிய நாம் என்றும் நினைவில் கொள்வோம்.
1983ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்பே தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் இலங்கைப் பிரச்சனை குறித்து அறிந்திருந்தனர்.
ஆனால் அதற்கு முன்னரே இதனை அறிந்து உதவி செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இருந்தனர். அவர்களுள் மிக முக்கியமானவர் பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார் அவர்கள்.
அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் இலங்கை தமிழர்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் செய்த உதவிகளும் என்றும் மறக்க முடியாதவை. அவர்களை நாம் என்றும் நினைவில் கொள்வோம்.
நான் அய்யா அவர்களுடன் அதிகம் பழக வில்லை. அவருடைய மகன் பொழிலன் அவர்களுடனே நான் அதிகம் பழகியிருக்கிறேன்.
பொழிலன் அவர்களை சந்திக்க சென்ற வேளைகளில் அய்யா அவர்களுடன் பேசியிருக்கிறேன். உணவு உட்கொண்டிருக்கிறேன். அவ்வேளைகளில் இலங்கைப் பிரச்சனை குறித்து ஆவலுடன் கேட்பார்.
அவரை மிகவும் கோபக்காரர் என்று சிலர் சொல்லியிருந்தனர். தூய தமிழில் கதைக்காவிடில் ஏசுவார் என்றெல்லாம் சிலர் என்னிடம் கூறியிருந்தனர்.
ஆனால் இது தவறான கருத்துகள் என்பதை அவருடன் பேசும்போது கண்டு கொண்டேன். ஏனெனில் அவர் என்னுடன் பேசும்போது சினங்கொள்ளாமல் மிகவும் மென்மையாகவே உரையாடினார்.
தோழர் தமிழரசன் அவர்கள் சென்னை வரும் வேளைகளில் எமது இருப்பிடத்திலேயே தங்குவார். அப்போது அவர் அய்யா அவர்களை சந்தித்த விபரங்களை என்னிடம் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு விடுதலையில் அய்யா அவர்கள் எவ்வளவு ஆர்வமாகவும் உறுதியுடனும் இருந்தார் என்பதை தோழர் தமிழரசன் அவர்களின் மறைவின் போது அவர் எழுதிய அஞ்சலிக் கவிதையில் இருந்து தெரிந்து கொண்டேன்.
இன்றும்கூட சிலர் சட்டத்திற்கும் சிறைக்கும் பயந்து தமிழ்நாடு விடுதலை பற்றியோ அல்லது தோழர் தமிழரசன் பற்றியோ பேச தயங்கும் நிலையில் அன்று இவற்றை உறுதியாக ஆதரித்து குரல் கொடுத்தவர் அய்யா பெருஞ்சித்திரனார்.
அவர் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் நிறைய சம்பாதித்திருக்கலாம். அரசியலில் பதவிகள் பெற்றிருக்கலாம் என்றெல்லாம் அவருடன் பழகிய பலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
இது எந்தளவு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் நினைத்திருந்தால் இலங்கைப் போராளிகளை வைத்து நிறைய சம்பாதித்திருக்க முடியும் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.
ஏனெனில் அவரிடம் சென்று பழகாத போராளி தலைவர்களே இல்லை என்று கூறுமளவுக்கு ஆரம்பத்தில் அனைத்து போராளிகளும் அவரிடம் பழகியுள்ளனர்.
அவரும் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகள் செய்தார் என்பதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாத உண்மைகள்.
பிரபாகரன், உமா மகேஸ்வரன் மட்டுமல்ல முதல் பெண் போராளி என்று அழைக்கப்படும் ஊர்மிளாவும் அவர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.
ஊர்மிளாவுக்கு நெருக்கடியான நேரத்தில் அய்யா அவர்களே தனது வீட்டில் நீண்ட நாட்கள் வைத்து பாதுகாத்து அனுப்பினார் என்பது மிக முக்கிய உதவியாகும்.
அய்யா அவர்கள் இலங்கை தமிழர் மீது கொண்டிருந்த அக்கறை, அனுதாபம, செய்த உதவிகள் மறக்க முடியாதவை.
ஈழத் தமிழர்கள் அய்யா அவர்களை என்றும் நினைவில் கொள்வார்கள் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

•நம்புங்கள்! இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றார்கள்

•நம்புங்கள்!
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றார்கள்
இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றார்கள்
ஆனால் எஸ.வி சேகர் மட்டும் விதிவிலக்கு என்பதை சொல்லாமல் விட்டு விட்டார்கள்.
தமிழிசையை ஒரு பெண் தரக்குறைவாக முகநூலில் ஏசி விட்டார் என்றவுடன் உடன் சென்று கைது செய்த தமிழக பொலிஸ்
பெண்களை தரக்குறைவாக எழுதிய எஸ.வி. சேகரை மட்டும் இன்னும் கைது செய்யவில்லை.
உச்சநீதிமன்றம் கூறியும்கூட 50 நாட்களாக ஏன் சேகர் கைது செய்யப்படவில்லை?
கைது செய்ய வேண்டிய பொலிஸ் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. அவர் பொலிஸ் பாதுகாப்புடன் உலா வருகிறார்.
வேல்முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டு தேசியபாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் எஸ்.வி. சேகர் மட்டும் இந்த பொலிசாரால் இன்னும் கைது செய்யப்படவில்லை.
தலைமறைவாக திரிவது எஸ்வி.சேகரா? அல்லது ஸ்கொட்லாந்து பொலிஸ் புகழ் தமிழ்நாட்டு பொலிஸா?

இன்றுடன் பேரறிவாளன் சிறை வாழ்க்கை 27 ஆண்டுகள்.

இன்றுடன் பேரறிவாளன் சிறை வாழ்க்கை 27 ஆண்டுகள்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்படாமல் இருப்பதற்கும்
எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாமல் இருப்பதற்கும்
என்ன காரணம்?
எஸ்.வி.சேகர் தோளில் பூணூல் தொங்குவதும்
பேரறிவாளன் தோளில் அது இல்லாமல்
இருப்பதும்தான் காரணமா?
இந்தியாவில்,
பேரறிவாளன் தமிழனாக பிறந்தது தவறு இல்லலை.
ஆனால் ஒரு பார்ப்பாணாக பிறக்காதது குற்றமே?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு
இங்கு அனைவரும் சட்டத்திற்கு முன் சமம் என்று
இனிமேல் சொல்லாதீங்கடா பிளீஸ்!

இந்து கலாச்சார பிரதி அமைச்சு பதவியை

 இந்து கலாச்சார பிரதி அமைச்சு பதவியை
காதர் மஸ்தானுக்கு வழங்கிய சம்பந்தர் அய்யா வாழ்க!
ஜனாதிபதி மைத்திரி- மிஸ்டர் சம்பந்தன்! டக்லஸ்க்கு அமைச்சு பதவி வழங்கலாமா?
சம்பந்தர் அய்யா- நோ! ஒரு போதும் சம்மதிக்க மாட்டோம். டக்ளஸ்க்கு பதவி வழங்கப்படாது என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். மறந்து விட்டீர்களா?
ஜனாதிபதி மைத்திரி- ஆம். எமக்கு ஆதரவு தர நீங்கள் போட்ட ஒப்பந்தம் அல்லவா. நன்றாக நினைவிருக்கிறது. அப்படியென்றால் அங்கஜன் ராமநாதனுக்கு பிரதி சபாநாயகர் பதவியை வழங்கட்டுமா?
சம்பந்தர் அய்யா- அஞ்கஜனுக்கு பதவி கொடுப்பதை எனது அன்புத் தம்பி சுமந்திரன் விரும்பவில்லை. எனவே அதையும் ஆதரிக்க முடியாது.
ஜனாதிபதி மைத்திரி- அப்படியென்றால் என்ன செய்வது? பேசாமல் உங்கள் கட்சியே அமைச்சு பதவிகளை ஏற்கலாமே?
சம்பந்தர் அய்யா- அமைச்சு பதவிகளை ஏற்பதில் எனக்கும் விருப்பம்தான். ஆனால் இப்பவே தமிழ் மக்கள் எங்களை விரட்டுகிறார்கள் என்று மாவை சேனாதிராசா கவலைப்படுகிறார். அமைச்சு பதவி எற்றால் அப்புறம் தேர்தலுக்கு மக்கள் மத்தியில் போகவே முடியாது.
ஜனாதிபதி மைத்திரி- அப்படியென்றால் நான் என்ன செய்வது, இந்து கலாச்சார பிரதி அமைச்சர் பதவியை காதர் மஸ்தானுக்கு வழங்கட்டுமா?
சம்பந்தர் அய்யா- ஆம். தாராளமாக வழங்குங்கள்.
ஜனாதிபதி மைத்திரி- இநது கலாச்சார பிரதி அமைச்சு பதவியை ஒரு முஸ்லிம்க்கு வழங்கினால் தமிழ் மக்கள் கோபப்பட மாட்டார்களா மிஸ்டர் சம்பந்தன்?
சம்பந்தர் அய்யா- உணர்வுள்ள சில தமிழர் கோபப்படத்தான் செய்வார்கள். ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ஒரு முஸ்லிம்க்கு நான் வழங்கியபோது முதலில் கோபப்பட்டுவிட்டு பின்னர் எப்படி அமைதியானார்களோ அதே மாதிரி இதற்கும் பின்னர் அமைதியாகி விடுவார்கள்.
ஜனாதிபதி மைத்திரி- புரியவில்லை மிஸ்டர் சம்பந்தன்! எப்படி தமிழ்மக்களை சமாளிக்கப் போகிறீர்கள்?
சம்பந்தர் அய்யா- “இந்துக் கலாச்சார பிரதி அமைச்சுப்பதவியை ஒரு முஸ்லிம்க்கு வழங்கி தமிழ் முஸ்லிம் நல்லிணக்கத்திற்கு வழி சமைத்த சம்பந்தர் அய்யா” என்று தம்பி சுமந்திரன் ஒரு பேட்டி கொடுப்பார். இதனை சுமந்திரனிடம் லப்டப் கம்பியூட்டர் வாங்கிய ஊடகவியலாளர்கள் நன்றியுணர்வுடன் பிரசுரிப்பார்கள். தமிழ் மக்களும் நாளடைவில் மறந்து விடுவார்கள்.
குறிப்பு-
இந்து கலாச்சார அமைச்சு பதவியை ஒரு முஸ்லிம்க்கு கொடுப்பதில் ஜனாதிபதியும் பொருட்படுத்தவில்லை
இந்துகாலாச்சார அமைச்சு பதவியை எற்பதில் முஸ்லிம் காதர் மஸ்தானும் தயக்கம் காட்டவில்லை.
இந்துகலாச்சார அமைச்சு பதவி ஒரு முஸ்லிம்க்கு வழங்குவது பற்றி சம்பந்தர் அய்யாவும் வெட்கப்படவில்லை.
எந்தவித அதிகாரமும் அற்ற இந்த பதவி யாருக்கு போனால்தான் என்னவென்று மக்களும் அக்கறை கொள்ளவில்லை.
ஆனால் ஒரேயொரு கேள்வி,
இதேபோல் பௌத்தசாசன அமைச்சு பதவியை ஒரு பௌத்தர் அல்லாதவருக்கு ஜனாபதியால் வழங்க முடியுமா?
ஆம், வழங்க முடியுமென்றால் இந்து கலாச்சார அமைச்சு பதவியை முஸ்லிக்கு வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் இருக்க முடியாது.

வைதீகம் பேசும் பார்ப்பாணை விட

வைதீகம் பேசும் பார்ப்பாணை விட
ஆபத்தானவன் பகுத்தறிவு பேசும் பார்ப்பாண்
என்று பெரியார் அன்று கூறியது இன்றும்
பார்ப்பாண் கமலுக்கு நன்றாகவே பொருந்துகிறது.
சைவப் பார்ப்பான் வைணவப் பார்ப்பான்,
வடகலை பார்ப்பான் தென்கலை பார்ப்பான்,
எப்பார்ப்பானாயினும் தமிழன் தலையைத்
தடவப் பார்ப்பான்!!
என்று பாரதிதாசன் அன்று சொன்னது
இன்றும் பொருத்தமாய் இருக்கிறதே!
கமலஹாசன், குருமூhத்தி, எஸ.வி. சேகர்,
சுப்பிரமணியசுவாமி இந்து ராம் போன்ற எல்லா பார்ப்பாணும்
தமிழினத்திற்கு எதிராகவே
எப்போதும் செயற்படுகின்றனர்!

அடி மேல் அடி அடித்தால் அம்மி நகரும்

அடி மேல் அடி அடித்தால் அம்மி நகரும்
ஆனால், எத்தனை அடி விழுந்தாலும்
சரவணபவன் எம்.பி திருந்தவேமாட்டார்!
உழைக்கும் மக்கள் தமக்கு ஒரு கஸ்டம் என்றால் எம்.பி யிடம் சென்று முறையிடுவார்கள். அந்த எம்.பி யே அவர்களிடம் திருடினால் அவர்கள் யாரிடம்தான் சென்று முறையிட முடியும்?
உதயன் பத்திரிகையில் பணிபுரியும் ஊழியர்களின் சேமலாப நிதியைக் கட்டாமல் அதன் நிறுவனர் சரவணபவன் சுருட்டியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரே அதுவும் தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழ் தொழிலாளர்களின் பணத்தை மோசடி செய்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
முன்பு சப்றா நிதி நிறுவனம் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களின் சேமிப்பு பணத்தை சுருட்டியவர் இப்போது தொழிலாளர்களின் சேமலாப நிதியை சுருட்டியுள்ளார்.
இப்போது பழியை தனது கணக்காளர் மீது போட்டு அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.
சேமலாபநிதியைக் கட்டத் தவறியமைக்கான தண்டப் பணம் செலுத்துவதாக சரவணபவன் எம்.பி சம்மதம் தெரிவித்துள்ளார்.
டக்லஸ் தேவானந்தா தொடர்ந்த அவதூறு வழக்கில் 20 மில்லியன் ரூபா மானநஷ்டஈடு செலுத்துமாறு கடந்தவாரம் நீதிமன்றம் இவருக்கு தீர்ப்பு வழங்கியிருந்தது.
இவ்வாறு எத்தனை லட்சம் ரூபா தண்டமாக செலுத்த நேரிட்டாலும் இந்த சரவணபவன் எம.பி ஒருபோதும் திருந்தமாட்டார்.
ஆனால் இங்கு எமது வருத்தம் என்னவெனில் இப்படிப்பட்டவர்களுக்கு ஏன் பாராளுமன்ற பதவிகளை தமிழ்தேசியகூட்டமைப்பு வழங்குகிறது?
இவருக்கு குடை பிடிக்க இன்னொருவர் தேவை. இவர் பவனி வர 5 கோடி ரூபா சொகுசு வாகனம் தேவை.
ஆனாலும் இவர் தமிழ் மக்களைப் பற்றி சிந்தித்ததேயில்லை. மாறாக தன் மகளுக்கு ஜனாதிபதியை அழைத்து வந்து பிறந்தநாள் கொண்டாடினார்.
அதுமட்டுமன்றி “போராட்டம்தான் இனி வழி. வேறு வழியில்லை” என்று மக்கள் மத்தியில் வந்து பேசி ஏமாற்ற முயல்கிறார்.
இப்படிப்பட்டவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும். அந்த நாள் எப்போது வரும்?

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்- இங்கே பாரும் கிம்!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்- இங்கே பாரும் கிம்! இவர்தான் இந்திய பிரதமர் மோடி. தூத்துக்குடியில் மக்கள் செத்தால் என்ன? விவசாயிகள் தற்கொலை செய்தால் என்ன? எந்தக் கவலையும் இன்றி எப்படி பிட்னஸ்சேலஞ் செய்கிறார் பாருங்கள்.
வடகொரிய ஜனாதிபதி கிம்- அதெப்படி? 150 கோடி இந்திய மக்கள் பற்றி இவர் கவலை கொள்ளாமல் இருக்கிறார்?
அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்- காப்ரேட் கம்பனிகள் இந்தியாவில் கொள்ளையடிக்க அவர் உதவி செய்கிறார். எனவே அவர் பதவியை நாம் காப்பாற்றி வருகிறோம். அதேபோல் வடகொரியாவில் காப்ரேட் கம்பனிகள் கொள்ளையடிக்க நீங்கள் உதவ வேண்டும். உங்களையும் நாங்கள் பாதுகாப்போம் அல்லவா!

பாவப்பட்ட பணத்தில் 963ரூபாவை ஆட்டயப் போட்டவன் யாரடா?

•பாவப்பட்ட பணத்தில் 963ரூபாவை
ஆட்டயப் போட்டவன் யாரடா?
முள்ளிவாயக்கால் நினைவு நிகழ்விற்கு தான் கொடுத்த 7000 ரூபாவை திருப்பி தரும்படி மாகாணசபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா கேட்டிருந்தார்.
இதையடுத்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மக்களிடம் ஒரு ரூபா வீதம் பிச்சை எடுத்து 7000 ரூபாவை தவராசாவின் வீட்டில் போட்டுள்ளனர்.
ஆனால் அதில் 6037 ரூபா மட்டுமே இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அப்படியென்றால் மீதி 963 ரூபாவை ஆட்டயப் போட்டவன் யாரடா?
ஆனாலும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
பாவப்பட்ட பணத்தை வழங்கியதன் மூலம் தவராசாவின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்கள்.
இனி தவராசா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஏனெனில் தவராசாவின் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் இனி இந்த பாவப்பட்டபணம்தான் மக்களுக்கு ஞாபகம் வரும்.
சபாஷ் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களே!

இளங்காற்றில் குருவிகள்கூட வானில் பறக்கும்-ஆனால் புயலை எதிர்த்து கழுகுகள் மட்டுமே பறக்கமுடியும்!

•இளங்காற்றில் குருவிகள்கூட வானில் பறக்கும்-ஆனால்
புயலை எதிர்த்து கழுகுகள் மட்டுமே பறக்கமுடியும்!
மோடியை எதிர்த்து பல கட்சிகள் இருக்கலாம். ஆனால் மோடியுடன் சேர்த்து இந்திய ஆளும் வர்க்கத்தையும் தூக்கியெறியக்கூடிய நம்பிக்கை சக்திகள் நக்சலைட்டுகள் மட்டுமே.
அதனால்தான் சரிந்து வரும் தன் செல்வாக்கை தூக்கி நிறுத்தவும் நக்சலைட்டுகள் மீது அடக்குமுறையை ஏவுவதற்காகவும் உயிராபத்து நாடகத்தை மோடி அரங்கேற்றியுள்ளார்.
மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய மாவோயிஸ்ட்டுடன் தொடர்புடைய தலித் தலைவர்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில்
" ராஜீவ் காந்தி பாணியில் கொலை செய்ய M4 ரக துப்பாக்கி, 4 லட்சம் ரவுண்டு குண்டுகளை வாங்குவதற்கு ரூ 8 கோடி தேவைப்படுகிறது" என்று குறிப்பிடப்படிருந்தது என்று புனே போலீஸ் கூறியுள்ளது.
புனே போலீசுக்கு 'நம்பும்படியான ஸ்கிரிப்ட்' எழுத போதிய அனுபவம் இல்லாததால் 'ஸ்கிரிப்ட்' எழுதுவதில் மரபார்ந்த சிந்தனையும் ஆழ்ந்த அனுபவமும் உள்ள தமிழக போலீசிடம் சிறப்பு பயிற்சி எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முட்டி போட்டு உயிர்வாழ்வதை விட நின்றுகொண்டே சாவது மேலானது- சேகுவாரா

•முட்டி போட்டு உயிர்வாழ்வதை விட
நின்றுகொண்டே சாவது மேலானது- சேகுவாரா
இன் று சமூகவிரோதி "சே" யின் பிறந்த தினமாகும்.
ஆம், மக்களுக்காக போராடுவது சமூக விரோதி எனில்
மக்களுக்காக போராடி உயிர் துறந்த “சே” யும் சமூகவிரோதியே.

நிருபர்: ஈராக் மீது அமெரிக்கா ஏன் போர் தொடுத்தது?

நிருபர்: ஈராக் மீது அமெரிக்கா ஏன் போர் தொடுத்தது?
ஜனாதிபதி டிரம்ப்: அவர்கள் அணு ஆயுதம் வைத்திருந்ததாக சந்தேகித்தோம்...
நிருபர் : சிரியா மீதான தாக்குதல் ஏன்?
ஜனாதிபதி டிரம்ப்: அவர்களிடமும் அணு ஆயுதம் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
நிருபர் : வடகொரியா மீது மட்டும் தாக்குதல் நடத்தாமல் பேச்சுவார்த்தை ஏன் ?
ஜனாதிபதி டிரம்ப்: யோவ் ! அவன் உண்மையிலே வச்சுருக்கான்யா.

பேரறிவாளனை கருணைக் கொலை செய்து விடுங்கள்

பேரறிவாளனை கருணைக் கொலை செய்து விடுங்கள்
- தாயார் அற்புதம்மாள் உருக்கமான கோரிக்கை.
பேரறிவாளன் உட்பட எழுவர் விடுதலையை மத்திய அரசின் வேண்டுகோளுக்கு அமைய ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
அதையடுத்து தனது மகனை விடுதலை செய்ய முடியாவிடில் கருணைக் கொலை செய்து விடுங்கள் என தாயார் அற்புதம்மாள் கோரியுள்ளார்.
ஒரு தாயார் எந்தவொரு சூழ்நிலையிpலும் தன் மகனை கருணைக் கொலை செய்யும்படி கேட்கமாட்டார்.
ஆனால் இங்கு அற்புதம்மாள் கேட்கிறார் எனில் அவர் எந்தளவுதூரம் விரக்தி அடைந்துள்ளார் என்பதை உணர முடியும்.
ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் இருபத்தியேழு ஆண்டுகள் தன் மகனின் விடுதலைக்காக அயராது உழைத்த தாய் விரக்தி அடைந்துள்ளார்.
இப்போது தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?
மாநில அரசு, மத்தியஅரசு, உச்சநீதிமன்றம் என மாறி மாறி தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
நடிகர் சஞ்சய்தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டபோது தலையிடாத மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் எழுவர் விடுதலையில் தலையிடுவது ஏன்?
இந்த எழுவரும் தமிழர் என்பதால்தானே மத்தியஅரசும் உச்சநீதிமன்றமும் நியாயம் வழங்க மறுக்கின்றன.
இப்போது இருக்கும் தமிழக அரசு மத்திய பாஜக அரசின் கைப்பொம்மை அரசாக இருக்கிறது. இது ஒருபோதும் மத்திய அரசை எதிர்த்து எழுவரையும் விடுதலை செய்ய முன்வராது.
எனவே இந்த எழுவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமெனில் தமிழ் மக்களின் ஒருமித்த போராட்டத்தினால் மட்டுமே முடியும்.

இந்த நாய் ஏன் வலிய வந்து குரைக்கிறது?

இந்த நாய் ஏன் வலிய வந்து குரைக்கிறது?
எழுவர் விடுதலையை ஜனாதிபதி மறுத்தமையை சுப்பிரமணியசுவாமி வரவேற்றுள்ளார்.
அதுமட்டுமல்ல, ராஜீவ்காந்தி கொலையின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் கடும் சுகயீனத்துடன் பதுங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மானையே.
ராஜீவ்காந்தி கொலையில் சோனியாகாந்திக்கோ அல்லது இலங்கை இந்திய அரசுக்கோ இல்லாத அக்கறை இந்த சுப்பிரமணியசுவாமிக்கு ஏன் வந்தது?
ராஜீவ்காந்தி கொலையில் இந்த சுப்பிரமணிய சுவாமிக்கும் பங்கு உள்ளது என்று இவருடன் கூட இருந்த திருச்சி வேலுச்சாமி முறையிட்டும் இவர் விசாரிக்கப்படவில்லை.
இவர் அந்தரப்படுவதைப் பார்த்தால் இவருக்கும் கொலையில் பங்கு உள்ளது என்று திருச்சி வேலுச்சாமி உண்மைதானோ என்று நம்ப வேண்டியுள்ளது.
ராஜீவ் குடும்பத்தினரே இந்த எழுவரையும் விடுதலை செய்வதில் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறியபின்பும் இவர் எதற்காக விடுதலை செய்யக்கூடாது என்று குரைக்கிறார்?
நடிகர் சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டபோது மௌனமாக இருந்தவர் எழுவர் விடுதலைக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்?
இந்த எழுவரும் தமிழர் என்பதால்தானே சுப்பிரமணியசுவாமி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இவர் தன்னை தமிழர் என்கிறார். தான் தமிழ்நாட்டில் பிறந்தவன் என்கிறார். ஆனால் இவர் எப்போதும் தமிழ் இனத்திற்கு எதிராகவே செயற்படுகிறார்.
தமிழ் இனம் விடுதலை பெற வேண்டுமெனில் முதலில் இந்த குரைக்கும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.