Thursday, October 31, 2019

•சுஜித் மரணம் கற்று தரும் பாடம் என்ன?

•சுஜித் மரணம்
கற்று தரும் பாடம் என்ன?
இரண்டு வயது சிறுவன் சுஜித் தன் மரணத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்வதற்கு ஒரு பாடத்தை தந்துவிட்டு சென்றுள்ளான்.
நாம் உண்ர்ச்சிவசப்பட்டு திட்டிக் கொண்டிருக்கிறேமேயொழிய உணர்வு பூர்வமாக சிந்திக்க தவறுகிறோம்.
அடுத்த பிரச்சனை வரும்வரை திட்டுவார்கள். அப்புறம் இதை மறந்துவிடுவார்கள் என அரசு நினைக்கிறது.
அதனால்தான் அரசும் இவை குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை.
முதலாவதாக,
தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 7 குழந்தைகள் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்துள்ளது. ஆனால் அரசிடம் விழுந்த குழந்தையை மீட்க கருவி இல்லை. அது ஏன்?
இரண்டாவதாக,
கருவி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆழ்துளைக்கிணறுகளை மூடவாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஏன் எடுக்கவில்லை?
மூன்றாவதாக,
ஆயிரம் அடிகளுக்கு மேலாக சென்று மீதேன் எடுக்க கருவி வைத்திருக்கும் அரசு வெறும் 60 அடியில் விழுந்திருந்த குழந்தையை எடுக்க கருவி இல்லை என்கிறது. அது ஏன்?
நான்காவதாக
சீனாவில் 100 அடி ஆழத்தில் விழுந்த குழந்தையை வெறும் 5 மணி நேரத்தில் மீட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 66 ஆடி ஆழத்தில் விழுந்த குழந்தையை 70 மணி நேரத்தின் பின் பிணமாக மீட்கிறார்கள். அது ஏன்?
ஏனெனில்
மீதேன் எடுத்தால் கைநிறைய காசு வரும். குழந்தையை எடுத்தால் அதுவும் ஏழைக் குழந்தையை எடுத்தால் என்ன வரும் என்று அரசு நினைக்கிறது.
இதுவரை விழுந்தது எல்லாம் ஏழைக் குழைந்தைகளே. யாராவது ஒரு அரசியல்வாதியின் குழந்தையோ அல்லது காப்ரேட்கம்பனி முதலாளியின் குழந்தையோ விழுந்திருந்தால் நிச்சயம் தேவையான கருவிகளை அரசு வாங்கியிருக்கும்.
என்ன செய்வது?
பணம் வாங்கிவிட்டு ஓட்டுப்போடும் எமக்கு பணத்தை பாராமல் சேவை செய்யும் அரசு எப்படி கிடைக்கும்?
சுஜித் மரணம் அனைவருக்கும் கவலைதான். ஆனால் இதில் ஒரு மகிழ்சியான செய்தியும் அடங்கியிருக்கிறது.
இந்த சிறுவனுக்காக ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் மக்கள் பிரார்த்தனை செய்துள்ளனர் என்ற செய்தியே அது.
2009க்கு பின்னர் தமிழக தமிழ் மக்களும் ஈழத் தமிழ்மக்களும் ஒருவருக்கொருவர் குரல் கொடுக்கிறார்கள். ஒன்றிணைகிறார்கள் என்பதை காட்டும் செய்தி இது.
சிறுவனின் மரணம் இந்திய அரசுக்கு உறைக்கிறதோ இல்லையோ ஆனால் தமிழ் மக்கள் மக்கள் ஒன்றிணைகிறார்கள் என்ற செய்தி நிச்சயம் உறைக்கும்.

இந்திய அரசு இவர்களை சாகடிக்கலாம்

இந்திய அரசு இவர்களை சாகடிக்கலாம் - ஆனால்
இவர்களுடைய போராட்டத்தை தோற்கடிக்க முடியாது!
இவர்கள் “நக்சல்பாரிகள். தேச பக்தர்கள்” என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது.
இவர்கள் “வர்க்கப்போராளிகள்” என்று உண்மையான கம்யுனிஸ்டுகள் கூறுகின்றார்கள்.
ஆனால் இவர்கள் “பயங்கரவாதிகள்” என்று கேரள போலிக்கம்யுனிஸ்ட் அரசு சுட்டுக் கொல்கின்றது.
ஒருபுறத்தில் தமிழ் மக்கள் எல்லாம் சிறுவன் சுஜித் மரணத்தில் மூழ்கியிருக்க மறுபுறத்தில் கேரள அரசு இரண்டு தமிழர்களை போலி மோதலில் சுட்டுக் கொன்றுள்ளது.
கடந்த வருடமும் இதேபோன்று இரண்டு தமிழர்களை கேரள அரசு போலி மோதலில் சுட்டுக் கொன்றது.
இவர்கள் மக்களுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்து போராடுபவர்கள். அதனால்தான் இந்திய அரசு ஈவு இரக்கம் இன்றி இவர்களை சுட்டுக் கொல்கின்றது.
ஒருபறத்தில் ஊழல் பேர்வழி சிதம்பரத்தை எய்ம்ஸ் மருத்துவ சிகிச்சை வழங்கி பாதுகாத்து வரும் இந்திய அரசு மறுபுறத்தில் மக்களுக்காக உண்மையாக போராடுபவர்களை சுட்டுக் கொல்கின்றது.
இந்திய அரசு இவர்களை சாகடிக்கலாம். ஆனால் இவர்கள் நடத்தும் போராட்டத்தை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.
குறிப்பு- இந்த மாவோயிஸ்டுகள் ஈழத் தமிழர் போராட்டத்தை உறுதியாக ஆதரிக்கின்றார்கள். எனவே அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது ஈழத் தமிழர்களாகிய எமது கடமையாகும்.

இந்த அவலம் என்று தீரும்?

இந்த அவலம் என்று தீரும்?
வடக்கு கிழக்கு இணைப்பை தவிர மற்ற அனைத்தையும் தமிழ் மக்களுக்கு தருவேன் என்று ஜேவிபி ஜனாதிபதி வேட்பாளர் அனுரா கூறுகிறார்.
தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் தருவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயா ராஜபக்சா கூறுகிறார்.
எனது தந்தையை புலிகள் கொன்றிருந்தாலும் தமிழ் மக்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. அவர்களுக்கு அனைத்தையும் தருவேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கூறுகின்றார்.
ஆனால் நெடுங்கேணியில் ஒரு தமிழ் பெண் தன் இரு பிள்ளைகளையும் கிணற்றில் வீசிக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தாய் காப்பாற்றப்பட்டுவிட்டார். ஆனால் கிணற்றில் வீசப்பட்ட நாலு வயது பெண் குழந்தையும் இரண்டு வயது ஆண் குழந்தையும் இறந்துவிட்டன.
எத்தனை பேர் வந்தாலும் சலிக்காமல் சோறு போட்ட வன்னியில் பெற்ற தாயே பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயல்வது வேதனையான விடயமாகும்.
ஆனால் எமது தமிழ் தலைவர்களோ இது பற்றி கவலையின்றி ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரிடம் எத்தனை பெட்டி வாங்குவது என்று ஆலோசிக்கிறார்களாம்.
குறிப்பு – கீழே உள்ள படம் இதே வன்னியில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இறந்த குழந்தைகள் ஆகும்.

•இப்ப நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டா?

•இப்ப நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டா?
(குறிப்பு - இது கடந்த வருடம் சொன்ன கதைதான். ஆனால் இப்பவும் இது பொருத்தமாக இருப்பதால் மீள் பதிவு செய்கிறேன். எமது தமிழ் தலைமைகள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துவிட்டதாகவும் எத்தனை பெட்டி வாங்குவது என்பதில் “டீல்” இன்னும் முடியவில்லை என்று அறிய வருகிறது)
ஒரு நாள் ஒரு தந்தை தனது மகனை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவர் ஒரு மனநல மருத்துவரை சந்தித்தார். அவர் பிரபல்யமான மருத்துவர். எந்த மெண்டல் நோயாக இருந்தாலும் குணப்படுத்துபவர் என பெயரெடுத்தவர். அவர் யாழ் பல்கலைக்கழகத்திலும் மனநலப் பிரிவு பேராசிரியராக கடமை ஆற்றுவதாக கூறுகிறார்கள்.
டாக்டர்- என்ன பிரச்சனை கூறுங்கள்?
தந்தை- டாக்டர்! இவன் என் மகன். இப்ப கொஞ்ச நாளாய் எப்ப பார்த்தாலும் மேலே விட்டத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டிருக்கிறான்.
டாக்டர்- ஓ! அப்படியா. இது சின்ன பிரச்சனை. தம்பி! இப்படி அருகில் வா. ஏன் யோசிக்கிறாய்?
மகன்- என்ன படிக்கிறது என்பதில் குழப்பமாக இருக்கிறது. அதுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
டாக்டர்- இதில் என்ன யோசிக்க இருக்கிறது? உனக்கு என்ன படிக்க விருப்பமோ அதைப் படிக்க வேண்டியதுதானே!
மகன்- அதில்தான் டாக்டர் குழப்பம். இப்ப ஒரு அசிரியரானால் மாதம் முப்பதாயிரம் ரூபா உழைக்கலாம்.
டாக்டர்- யேஸ்! அப்ப நீ ஆசிரியருக்கு படிக்க வேண்டியதுதானே?
மகன்- ஆனால் ஒரு வழக்கறிஞர் மாதம் ஜம்பதாயிரம் ரூபா உழைக்கிறார்.
டாக்டர்- ஆம். உண்மைதான். அப்ப நீ வழக்கறிஞருக்கு படிக்க வேண்டியதுதானே?
மகன்- ஆனால் ஒரு டாக்டரானால் மாதம் எழுபத்தைந்தாயிரம் ரூபா உழைக்கலாம் அல்லவா?
டாக்டர்- யேஸ்! யேஸ்! அப்ப நீ டாக்டருக்கு படிக்க வேண்டியதுதானே?
மகன்- ஆனால் எதுவும் படிக்காமல் அரசியல்வாதியானால் கோடிக்கணக்கான ரூபா உழைக்கலாம் அல்லவா?
டாக்டர்- அதெப்படி? எனக்கு புரியவில்லையே!
மகன்- இப்ப உதாரணத்திற்கு எங்கட மாவை சேனாதிராசாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கு அலவன்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு மாத சம்பளம் ஒன்றரை லட்சம் ரூபா. அதைவிட வாகன பெர்மிட் விற்று ஜந்து கோடி ரூபா. அதைவிட கனடாவில் நிதி சேகரிப்பு. அவுஸ்ரேலியாவில் நிதி சேகரிப்பு. அதையும்விட ஒவ்வொரு எலெக்சனுக்கும் இந்திய பண உதவி. இதையும்விட சுன்னாகம் பவர் கம்பனியிடம் லஞ்சம். மாவிட்டபுரத்தில் வீடு. இந்தியாவில் வீடு. கொழும்பில் அரச பங்களா. பாராளுமன்றத்தில் நித்திரை கொள்ளலாம். எல்லாவற்றையும்விட மற்ற வேலை செய்யிறவை எல்லாம் 60 வயதில் பென்சன் எடுக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதி சாகுமட்டும் பதவி வகிக்கலாம். அதையும்விட கனடாவில இருக்கிறவை கூப்பிட்டு மாலை போட்டு “வாழும் வீணர்” என்று பட்டம் கொடுப்பினம். இப்ப சொல்லுங்க டாக்டர் நான் அரசியல்வாதி ஆகட்டுமா?
“ஆமான்டா நீ அரசியல்வாதி ஆகடா” என்று சொல்ல வாயெடுத்த டாக்டர் அதனை சொல்ல முடியாமல் மேலே விட்டத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தார்.
இப்போது தந்தை மகனைப் பார்த்து “ என்னடா உனக்கு மெண்டல் என்று கூட்டி வந்தால் நீ டாக்டரை மெண்டலாக்கி விட்டாயே” என்றார். மேலும் “வாடா யாரும் வாறதுக்குள்ள நாம இங்கிருந்து ஓடிவிடலாம்” என்று சொல்லிக்கொண்டு மகனை இழுத்துக் கொண்டு அவசரம் அவசரமாக மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.
இப்போ இதைப் படிக்கிறவர்களிடம் ஒரு கேள்வி. ஒருவேளை நீங்கள் அந்த டாக்டராக இருந்தால் இந்த பையனுக்கு என்ன பதில் கூறுவீர்கள்?

•கோழியின் மூன்றாவது கால் எங்கே?

•கோழியின் மூன்றாவது கால் எங்கே?
சுமந்திரனின் பிரான்ஸ் விசிட் !
கோழிக்கு இரண்டு கால் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதையே சுமந்திரன் கூறினால் நாம் மூன்றாவது காலை தேட வேண்டும்.
ஏனெனில் சுமந்திரன் எப்போதும் தமிழ் மக்களின் நலனுக்கு எதிராகவே கருத்துகள் கூறி வருகிறார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்களின் கருத்தை கேட்பதற்காக சுமந்திரன் பிரான்ஸ் வந்ததாக கூறுகிறார்கள்.
புலம்பெயர் தமிழ் மக்களின் வோட்டில் நான் எம்.பி யாகவில்லை. புலம்பெயர் தமிழ்மக்களின் கருத்தை நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று இதுவரை இறுமாப்புடன் கூறிவந்த சுமந்திரன் இப்போது எதற்காக அவர்களின் கருத்தை கேட்க வந்திருக்கிறார்?
ஏனெனில் சுமந்திரனும் சம்பந்தரும் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்துவிட்டார்கள். அதை தமிழ் மக்களின் முடிவு என்று காட்டுவதற்காக ஆடும் நாடகமே இது.
அவர் தாராளமாக சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கட்டும். ஆனால் இம்முறை அவர் மக்களுக்கு இரண்டு உண்மைகளை கூறவேண்டும்.
முதலாவது, ஆதரவுக்கு ஏதாவது உடன்பாடுகள் காணப்பட்டிருந்தால் அவை என்ன என்பதை தமிழ் மக்களுக்கு வெளிப்படையாக கூறவேண்டும்.
இரண்டாவது, ஆதரவிற்காக எவ்வளவு பணம் பெறப்பட்டது? யாருக்கு அவை பங்கிடப்பட்டது? போன்ற கணக்கை மக்களுக்கு வெளிப்படையாக காட்ட வேண்டும்.
குறிப்பு - ஒருமுறை சுமந்திரன் ஏமாற்றினால் அது சுமந்திரன் தவறாகும். தொடர்ந்து சுமந்திரன் ஏமாற்றினால் அது ஏமாறும் மக்களின் தவறாகும். இம்முறை மக்கள் தங்கள் தவறை திருத்திக் கொள்வார்களா? அல்லது தொடர்ந்தும் சுமந்திரனிடம் ஏமாறப் போகிறார்களா?

அரசின் வன்முறைக் கருவியே அதன் பொலிசும் ராணுவமும்.

அரசின் வன்முறைக் கருவியே அதன் பொலிசும் ராணுவமும்.
அது உண்மை என்பதை இந்தோனிசிய படைகளும் நிரூபிக்கின்றன.
இந்தோனிசிய அடக்குமுறையில் இருந்து மேற்கு பப்புவகினியா மக்கள் விடுதலை பெறட்டும்.

•பாவம். இவருக்கும் பசிக்கும்ல்லே!

•பாவம். இவருக்கும் பசிக்கும்ல்லே!
ஈழ புரட்சிகர விடுதலை முன்னணி என்றார்
ஆனால் ஈழத்தை கைவிட்டார்
விடுதலையைக் கைவிட்டார்
புரட்சியையும் கைவிட்டவிட்டார்
அதனால் மாகாணசபை முதல்வர் பதவி பெற்றார்
கடைசியில் தமிழீழத்தை பிரகடனம் செய்துவிட்டு இந்தியா சென்றார்
நீண்டகாலத்தின் பின் திரும்பி வந்தார்
சுயாட்சியைக்கூட இந்தியா தர முன்வரவில்லை என்ற உண்மையைக் கூறினார்
கடந்த தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு தூது விட்டுப் பார்த்தார்
அது சரிவரவில்லை என்றவுடன் இப்போது கோத்தபாயாவை ஆதரிக்க தொடங்கிவிட்டார்.
இவரை சிலர் “இடதுசாரித் தோழர்” என்கிறார்கள்
அப்படியென்றால் குறைந்தபட்டசம் ஜேவிபியையாவது இவர் ஆதரித்திருக்கலாமே? ஏன் முடியவில்லை?
எப்படியாவது யாரையாவது ஆதரித்து
எதாவது ஒரு பதவியைப் பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறார்.
அதற்காக கோத்தபாயாவை ஆதரிக்க தொடங்கிவிட்டார்.
அதற்காக கோத்தாவின் கொலைகளை நியாயப்படுத்தவும் தொடங்கிவிட்டார்.
பாவம் அவருக்கும் பசிக்குமில்லே!

இதோ எமக்கு இன்னொரு நண்பன் கிடைத்துவிட்டான்!

இதோ
எமக்கு இன்னொரு நண்பன் கிடைத்துவிட்டான்!
நாம் தனித்து விடப்பட்டவர்கள் இல்லை.
களத்தில் நாம் சோர்ந்துவிடத் தேவையில்லை
எமது இந்திய எதிரி தனிமைப்படுகிறான்
எமக்கான நண்பர்கள் அதிகரிக்கின்றார்கள்
லண்டனில் இந்திய அரசுக்கு எதிராக
முதலில் சீக்கிய மக்கள் திரண்டார்கள்
அடுத்து காஸ்மீர் மக்கள் திரண்டார்கள்
இப்போது மணிப்பூர் மக்கள் திரண்டுள்ளார்கள்.
இவர்கள் எல்லாம் இந்திய அரசை எதிர்த்து
தமது சுதந்திரத்திற்காக போராடப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
மணிப்பூர் மக்களின் தொகை வெறும் 30 லட்சம்தான்.
ஆனால் அவர்கள் கொஞ்சம்கூட பயம் இன்றி இந்திய அரசை எதிர்க்க துணிந்தள்ளார்கள்.
ஏனெனில் சுதந்திரம் என்பது எண்ணிக்கையில் இல்லை. அது உணர்வில் உள்ளது.
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே
இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்றார் தோழர் தமிழரசன்
சீக்கிய, காஸ்மீரிய மற்றும் மணிப்பூர் மக்கள் தமது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவது
தமிழ் மக்களின் போராட்டத்திற்கு செய்யும் மிகப் பெரிய உதவியாகும்.
தமிழ் மக்களின் போராட்டம் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல
இந்திய அரசால் அடக்கப்படும் தேசிய இனங்கள் யாவற்றுக்கும்
விடுதலையை பெற்றுக் கொடுக்கப் போகின்றது.
இந்தியா இரும்பு என்றால் அதை உருக்கி நொருக்கும் நெருப்பாக நாம் மாறுவோம்
இந்தியா வல்லரசு என்றால் அதை பீஸ் பீஸாக உடைத்து சிதறவைக்கப்போகும் வெடி குண்டு தமிழ் மக்களே.
எரிமலை வெடிக்கும்வரை அது பூமிக்குள் குமுறிக்கொண்டிருப்பது கண்ணுக்கு தெரிவதில்லை.
அதுபோலவே ரஸ்சிய சமூக ஏகாதிபத்தியம் உடைந்து நொருங்கும்வரை யாரும் அதைக் கணிக்கவில்லை.
குறித்து வைத்தக்கொள்ளுங்கள்.
வெகுவிரைவில் இந்து சமுத்திரத்தில் தமிழ் மக்கள் அற்புதம் நிகழ்த்தப் போகிறார்கள்.
தமிழ் மக்களின் போராட்டம் வரலாற்று அதிசயமாக மாறப் போகிறது.

“தோழர்”

எங்கள் பெயருக்கு பின்னால் எந்த சாதிய, மத அடையாளங்களும் இல்லை.
ஆனால் எங்கள் பெயருக்கு முன்னால் அணுகுண்டைவிட வலிமையான “தோழர்” என்ற சொல் உண்டு.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்.

பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் திரும்பி வந்து தமிழீழம் பெற்று தருவார் என்று கூறுவது
இதுவரை இலங்கை இந்திய அரசுகளுக்கே உதவி வந்தது. இப்போது அது மலேசிய அரசுக்கும் உதவுகிறது.
புலிகளுக்கு உதவினார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அப்பாவி மலேசிய தமிழர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.

உலக மகா சாணக்கியம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது!

•உலக மகா சாணக்கியம்
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது!
இன்று தபால் மூல வாக்களிப்பு. ஆனால் இதுவரை தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சம்பந்தர் ஐயா கூறவில்லை.
போற போக்கைப் பார்த்தால் தேர்தல் முடிந்த பிறகுதான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர் கூறுவார் போல் இருக்கு.
இவ்வாறு அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைத்தான் “சம்பந்தரின் சாணக்கியம்” என்று சிலர் பகழ்ந்து எழுதுகிறார்கள். என்னே கொடுமை இது?
அமைச்சர் மனோ கணேசன் சஜித் பிரேமதாசாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை விபரத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ளார்.
இதன் அடிப்படையில் தமது ஆதரவு சஜித் பிரேமதாசாவுக்கு வழங்கப்படுகிறநது என்பதையும் தன் மக்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கைகளை எந்தளவு சஜித் பிரேமதாசாத நிறைவேற்றுவார் என்பது சந்தேகத்திற்கு உரியதாயினும் குறைந்தபட்சம் அவர் தமது நடவடிக்கைகளை தம் மக்களுக்கு நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளார்.
மனோகணேசனின் இந்த நேர்மையைக்கூட எமது தலைவர் சம்பந்தர் ஐயாவினால் தமிழ் மக்களிடம் வெளிப்படுத்த முடியாமல் இருப்பது வெட்கக்கேடானது.