Saturday, February 27, 2021

துணை (குறும்படம்)

துணை (குறும்படம்) ஜெர்மனியில் வசிக்கும் ஈழத் தமிழரான சபேசன் அவர்களால் “துணை” என்னும் குறும்படம் பொங்கலன்று வெளியிடப்பட்டுள்ளது. திருமண வயதில் இருக்கும் மகள் தன் விதவைத் தாய்க்கு மறுதிருமணம் செய்து வைப்பதே இக் குறும்படத்தின் கதையாகும். இக் காலத்திற்கு அவசியமான ஒரு முற்போக்கான கருத்து இது. ஏனெனில் இன்று அதிகளவான விதவைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றனர். அவர்கள் பல்வேறு கஸ்டங்களையும் வேதனைகளையும் அனுபவிக்கின்றனர். அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட இப்படியான படங்கள் வழி செய்யட்டும். கீழ்வரும் இணைப்பில் இக் குறும்படத்தை பார்வையிடலாம் https://www.youtube.com/watch?v=AWVntSeIpXU...

நாய்கள்

•நாய்கள் ஒரு வடைக்கும் பிளேன்ரீக்கும் வாலை ஆட்டுகின்றன. யாழ் இந்திய தூதரின் காலை நக்கித் தொலைக்கின்றன! சித்தார்த்தன். பாராளமன்ற உறுப்பினர். புளட் அமைப்பின் தற்போதைய தலைவர். தமிழ் தலைவர்களில் ஒருவர். யாழ் இந்திய தூதர் ஏற்பாட்டில் நடைபெற்ற காந்தி நினைவு அஞ்சலியில் கலந்துகொண்டதுடன் அதை பெருமையாக தன் முகநூலில் பகிர்ந்தும் உள்ளார். இதே காந்தி சிலைக்கு பின்னால் இருக்கும் யாழ் மருத்துவமனையில் காந்தி தேசத்தின் ராணுவம் செய்த படுகொலைகள் இவர் மனதை உறுத்தவில்லை. அதைவிட இவரின் அப்பா தர்மலிங்கத்தையும் இதே காந்தி தேசத்தின் உளவுப்படையே டெலோ இயக்கம்மூலம் கொலை செய்தது. அதுவும் இவருக்கு உறுத்தவில்லை. அத்துடன் இவரின் புளட் அமைப்பின் முன்னாள் தலைவரான உமா மகேஸ்வரனைக்கூட இதே காந்திதேசமே கொலை செய்வித்தது. அதுவும் இவருக்கு உறுத்தவில்லை. இப்பகூட இந்து மத கோவில்கள் இடிக்கப்பட்டு அதில் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. அதைக்கூட இந்த காந்திதேச தூதுவர் கண்டுகொள்வதேயில்லை. எல்லாவற்றையும்விட கடந்த நான்கு வருடங்களாக காணாமல் போனவர்களின் உறவுகள் வீதியில் உட்கார்ந்து காந்திய வழியில் போராடுகின்றனர். அதையும் இந்த காந்தி தேச தூதுவர் கண்டுகொள்ளவேயில்லை. முக்கியமாக, இந்தியாவில் காந்திதேசத்தின் இப்போதைய பிரதமர் மோடி காந்தியை சுட்ட கோட்சேக்கு சிலை நிறுவி வணங்குகிறார். ஆனால் அந்த காந்தி தேசத்தின் தூதுவர் யாழ்ப்பாணத்தில் காந்தி சிலை நிறுவி நினைவு கூர்கிறார். ஏனெனில் இங்கு காந்தி சிலை என்;பது காந்தீயத்தின் மீதான அக்கறை அல்ல. மாறாக தமிழ் மக்கள் மீதான இந்திய ஆக்கிரமிப்பின் குறியீடு. சில வருடங்களுக்கு முன்னர் இந்திய அதிகாரி ஒருவர் ஒரு பியர் போத்தலுக்காக நாட்டு ரகசியங்களை பாக்கிஸ்தான் அதிகாரிக்கு வழங்கியதாக வந்த செய்தியை படித்து கேவலம் ஒரு போத்தல் பியருக்காக நாட்டைக் காட்டிக் கொடுத்திருக்கிறாரே என சிரித்தேன். ஆனால் இப்போது நமது தலைவர்கள் கேவலம் ஒரு வடைக்காகவும் பிளேன் ரீக்காகவும் தமிழ் இனத்தை காட்டிக் கொடுப்பதை பார்க்கும்பொது சிரிக்க முடியவில்லை. வேதனையில் மனம் விம்முகிறது. இந்த கொடுமைக்கு எப்போது முடிவு வரும்?

மீண்டும் எழுவோம்!

•மீண்டும் எழுவோம்! அன்று மீண்டும் எழுந்தோம். 100 வருடம் ஆண்ட போர்த்துக்கேயரை விரட்டினோம் அல்லவா? அன்று மீண்டும் எழுந்தோம். 100 வருடம் ஆண்ட ஒல்லாந்தரை விரட்டினோம் அல்லவா? அன்று மீண்டும் எழுந்தோம். 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயரை விரட்டினோம் அல்லவா? எத்தனை முறை வீழ்ந்தபோதும் அத்தனை முறையும் மீண்டும் எழுந்தோமே. இம்முறை மட்டும் எழுந்து விடாமல் வீழ்ந்தே கிடந்துவிடுவதா? இன்று மீண்டும் எழுவோம். 73 வருடம் ஆளும் சிங்கள அரசை விரட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் எழுவோம் எந்த நீண்ட இரவுக்கும் ஒரு விடிவு உண்டு அல்லவா? தமிழனுக்கு மட்டும் ஒரு விடுதலை வராமல் போய்விடுமா? காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகின்றதே. தமிழன் மட்டும் கோதத்பாயாவின் காலடியில் அடிமையாக வீழ்ந்து கிடந்துவிடுவானா? பொங்கும் கடல் அலைபோல் மீண்டும் மீண்டும் எழுவோம் கொன்று புதைத்தால் மீண்டும் மீண்டும் முளைத்து எழுவோம் இம்முறை உலகத் தமிழன் எட்டுக் கோடியும் ஒன்றுபட்டு எழுவோம்!

இலங்கையில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது?

இலங்கையில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது? • இலங்கை முழுவதையும் ஆக்கிரமித்து சுரண்டுவதற்கு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மட்டுமன்றி அமெரிக்காவுக்கும்கூட சுதந்திரம் இருக்கிறது. • தமது பதவி நலன்களுக்காக இலங்கையை விற்பதற்கு ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. • தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ய மகிந்த குடும்பத்திற்கு சுதந்திரம் இருக்கிறது. • தமிழ் மக்களை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்யவும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கவும் கோத்தபாயாவுக்கு சுதந்திரம் இருக்கிறது. • தன் ஆசைக்கு இணங்கவில்லை என்பதற்காக பெண்ணின் காதலனை கொலை செய்ய மகிந்தவின் மகனுக்கு சுதந்திரம் இருக்கிறது. • பிரித்தானிய ராணியின் குதிரையை வாங்கி கெலிகொப்டரில் சென்று நுவரேலியாவில் குதிரைச் சவாரி செய்ய மகிந்தவின் இன்னொரு மகனுக்கு சுதந்திரம் இருக்கிறது. • அரசுக்கு எதிராக போராடும் மாணவர்களையும் தொழிலாளர்களையும் சுட்டு அடக்குவதற்கு இலங்கை படைகளுக்கு சுதந்திரம் இருக்கிறது. சிங்கள மக்களுக்கு ஒரு வேண்டுகோள்! இலங்கையில் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. எனவே இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை இலங்கை மக்கள் அனைவரும் நடத்த வேண்டியுள்ளனர். இந்தியாவில் ஜின்னா கேட்டதுபோல் இலங்கையில் தமிழ் மக்கள் 1948ல் பிரிவினை கோரவில்லை என்பதை உணர வேண்டும். அதுமட்டுமல்ல காஸ்மீரில் சில அமைப்புகள் தம்மை பாகிஸ்தானுடன் இணைக்குமாறு கோருகின்றனர். ஆனால் இன்றுவரை ஒரு தமிழ் அமைப்புகூட தம்மை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரவில்லை. இந்தளவு உணர்வுமிக்க தமிழ் மக்களை தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதிக்குமாறு கெஞச வேண்டிய நிலையில் இலங்கை ஆட்சியாளர் தள்ளியுள்ளனர். குறிப்பு - ஒரு இனத்தை அடக்கி ஆள முற்படும் எந்தவொரு இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. எனவே சிங்கள மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களின் சுதந்திரத்தை முதலில் அங்கீகரிக்க வேண்டும்.

ஒருபுறம் கொட்டும் மழை

ஒருபுறம் கொட்டும் மழை மறுபுறம் சிங்கள அரசின் பல தடைகள் அத்தனையும் தாண்டி போராட்டம் தொடர்கிறது ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது. தமிழ் இனம் தான் வாழ்வதற்காய் நடத்தும் போராட்டம் வெற்றி பெறட்டும். வாழ்த்துக்கள்.

தமிழ் மக்களின் போராட்டங்கள

தமிழ் மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேனாவே கூறும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. ஆனாலும் சிங்கள அரசு திருந்தவில்லை. மாறாக தேசியகீதம் தமிழில் பாடுவதை தடை செய்துள்ளது. வேறுவழியின்றி தமிழ் மக்கள் போராட்டம் மூலம் பதில் அளிக்க ஆரம்பித்துவிட்டார்கள். சுதந்திரநாளை கரிநாளாக அறிவித்து உண்ணாவிரத போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை போராட்டம் தொடர்கிறது. பல தடைகளைத் தாண்டி அக்கரைப்பற்றை கடந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. தாயகத்தில் நடக்கும் மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக கனடாவிலும் பிரான்சிலும் புலம்பெயர் மக்கள் போராட்டம் நடைபெற உள்ளதாகவும் அறிய வருகிறது. மக்கள் போராட்டம் தொடர்கிறது. போராட்டம் பரவுகிறது. போராட்டம் வெற்றி பெறும். ஏனெனில் போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை. செய்தி - சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அத்தினத்தைக் கரிநாளாகவும் கறுப்புப்பட்டி அணிந்தும் அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுத்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளது, இந்தக் கரிநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், இன்று (02) முதல் 6ஆம் திகதி வரையிலும் நான்கு நாள்களுக்கு, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்து.

மக்கள் என்றும் மகத்தானவர்களே!

மக்கள் என்றும் மகத்தானவர்களே! கொட்டும் பனியில் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு இவர்கள் ஜெனிவாவுக்கு சென்றபோது தாயகத்தில் இருந்து வந்திருந்த தலைவர் ஒருவர் நடந்தது இனப்படுகொலை அல்ல என்று கூறினார். இன்று அந்த தலைவரே கொட்டும் மழையில் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை பேரணியில்; பங்கெடுத்து செல்கிறார். இந்த அதிசய மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள் தமிழ் மக்களே. அவர்கள் என்றும் மகத்தானவர்களே. தமிழ் மக்கள் நடத்தும் இப் போராட்டத்திற்கு அட்டாளச்சேனையில் பெருந்திரளான முஸ்லிம் மக்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். அத்துடன் போராட்டம் நடத்தும் மக்கள் மலையக மக்களின் சம்பள உயர்வையும் வலியுறுத்தி வருகின்றனர். இவ்வாறு போராட்டம் அனைத்து தமிழ்பேசும் மக்களையும் ஒன்றிணைப்பதைக் கண்டு சிங்கள அரசு அச்சமடைகிறது. ஆனால் போராட்டத்தைக்காட்டி புலம்பெயர் நாடுகளில் அகதி அந்தஸ்து பெற்ற சிலர் “ போராட்டத்தினால் என்ன பயன்?” என்று இன்று நக்கலாக கேட்கிறார்கள். வெகுவிரைவில் தமிழ் மக்கள் இவர்களுக்கும் உரிய பதிலை வழங்குவார்கள்.

இலங்கை சுதந்திரதினம் தமிழருக்கு கரி நாளா?

•இலங்கை சுதந்திரதினம் தமிழருக்கு கரி நாளா? இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக முதன்முதலில் 1956ல் அறிவித்தவர்கள் தமிழரசுக்கட்சியினரே. அதற்கமைய நடராஜா என்பவர் திருகோணமலை கச்சேரியில் பறந்த இலங்கை தேசியக் கொடியை அகற்றிவிட்டு கறுப்பு கொடியை ஏற்றினார். அப்போது இலங்கை பொலிஸ் அவரை சுட்டுக் கொன்றது. இன்று அவரது 65வது நினைவு தினம் ஆகும். கடந்த ஆட்சியில் இலங்கை சுதந்திரதினத்தை கரிநாளாக அனுட்டிக்குமாறு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கோரினார்கள். அப்போது தமிழரசுக்கட்சி எம்.பி யான சுமந்திரன் சுதந்திரதினத்தை கரிநாள் எனக் குறிப்பிடுவது தவறு என்றார். அதுமட்டுமல்ல தன் மனைவியுடன் சென்று இலங்கை அரசின் சுதந்திpரதின வைபவத்திலும் கலந்துகொண்டார். ஆனால் இம்முறை அதே சுமந்திரன் அந்த சுதந்திரநாளில் பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை பேரணி செல்கிறார். தமிழர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பதை அறிவதற்கு சுமந்திரனுக்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது குறிப்பு – தியாகி திருமலை நடராஜனை நினைவு கூர்வோம்.

தியாகி திருமலை நடராஜன் நினைவு அஞ்சலி

•தியாகி திருமலை நடராஜன் நினைவு அஞ்சலி திருகோணமலையில் சிறிலங்கா சுதந்திர தினத்தன்று சிங்கக்கொடியை இறக்கி கறுப்புக்கொடியை ஏற்றும் முயற்சியின்போது பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகி திருமலை நடராஜனின் நினைவுநாள் இன்றாகும். 1957 ஆம் ஆண்டு பெப்ரவரி நாலாம் நாளன்று சிறிலங்காவின் ஒன்பதாம் சுதந்திர நாளன்று இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தியாகி திருமலை நடராஜனுக்கு எம் அஞ்சலி

கோத்தாவின் விசுவாசி

கோத்தாவின் விசுவாசி – பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான தமிழ் மக்களின் பேரணிக்கு நீதிமன்றம் மூலம் தடை விதித்தது சரிதான். ஏனெனில் இப் பேரணியால் கொரோனோ பரவும் ஆபத்து உள்ளது. தமிழ் மக்கள் - ஏன்டா நாயே! உன்ர கோத்தா ராணுவ அணிவகுப்பு கலாச்சார அணிவகுப்பு நடத்தி சுதந்திரதினம் கொண்டாடலாம். அப்ப கொரோனோ பரவாது. தமிழ் மக்கள் பேரணி நடத்தினால்தான் பரவுமா?

தமிழக ஆளுநர் தண்டிக்கப்பட வேண்டும்

தமிழக ஆளுநர் தண்டிக்கப்பட வேண்டும் அற்புதம் அம்மாளுக்கு நீதி கிடைக்க வேண்டும் தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தை தமிழக ஆளுநர் 3 ஆண்டுகள் கழித்து இன்று நிராகரித்துள்ளார். அவர் தீர்;மானத்தை நிராகரித்ததுகூட பிரச்சனை இல்லை. ஆனால் பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய ஜனாதிபதிக்கே அதிகாரம் உள்ளது என்று கூறியிருப்பது எரிச்சலைத் தருகிறது. ஏனெனில் இதன்மூலம் அவர் எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று கூறிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்துள்ளார். அதுமட்டுமல்ல உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தீர்மானம் நிறைவேற்றிய மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிக அரசை அவமதித்துள்ளார். எனவே நீதிமன்றத்தை தொடர்ந்து அவமதித்துவரும் தமிழக ஆளுநரை உச்சநீதிமன்றம் தண்டிக்க வேண்டும். தான் முன்பு வழங்கிய தீர்ப்பின்படி ஏழு தமிழரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கே உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் உச்சநீதிமன்றமே ஏழு தமிழரையும் உடனே விடுதலை செய்ய உத்தரவிடவேண்டும். இனியாவது அற்புதம் அம்மாளுக்கு நீதி கிடைக்க உச்சநீதிமன்றம் வழி செய்ய வேண்டும்.

நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும்

நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான். சாதாரண டிராக்டர் வண்டியில் விவசாயிகள் வருகிறார்கள் என்றதும் அதைத் தடுக்க மோடி அரசு வீதியில் ஆணிகளை பதித்து தடுப்பு கட்டியது. உடனே விவசாயிகள் ஆணிகளை நசுக்கும் இரும்பு சில்லுகளை தமது டிராக்டர் வண்டியில் பொருத்தி தயாராகியுள்ளனர். எந்த மொழியில் அரசு பேசுகிறதோ அந்த மொழியில் விவசாயிகள் பதில் அளிப்பார்கள். விவசாயிகள் போராட்டம் இந்திய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் கவனமும் ஆதரவும் பெறத் தொடங்கிவிட்டது. எனவே அவர்கள் போராட்டம் வெல்வது உறுதி. அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

இரண்டு நிகழ்வுகள்

இரண்டு நிகழ்வுகள் இரண்டும் யாழ்ப்பாணத்திலேயே நடந்துள்ளன. இரண்டிலும் தமிழர்களே பங்குபற்றியுள்ளனர். ஒன்று, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதி கோரி நடத்திய நிகழ்வு மற்றொன்று, கோத்தபாயாவுக்காக நடாத்தப்பட்ட சுதந்திரதினக் கொண்டாட்டம். யாழ்ப்பாண தமிழ் மக்கள் சுதந்திரதினம் கொண்டாடினார்கள் என்றால் கோத்தபாயாவே நம்பமாட்டார். அப்படியிருக்க இந்த கூத்தை உலகம் நம்பிவிடுமா? ராணுவ புலனாய்வை நம்பி சிங்கக்கொடி பிடித்து சென்ற அந்த நாலு தமிழருக்கும் ஒரு வேண்டுகோள்! உங்களுக்கு வேலை தருவதாகவோ அல்லது காணி தருவதாகவோ கூறி கூட்டிச் சென்றிருக்கலாம். ஆனால் தன்னை சிங்கள பௌத்தன் என்று கூறும் கோத்தாவுக்கு எதிராக அதே சிங்கள பௌத்த மாணவர்கள் இன்று கொழும்பில் கோத்தாவின் கொடும்பாவி எரித்து போராட்டம் செய்துள்ளனர். தனக்கு வோட்டு போட்ட சிங்களவர்களுக்கே ஏதும் செய்யாத கோத்தா உங்களுக்கு ஏதும் தருவாரா? கொஞ்சம் யோசியுங்கள்.

இவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்?

•இவர்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்? செய்தி - இலங்கை 73வது சுதந்திரதினத்தை கோலாகமாக கொண்டாடியது. முப்படைகள் அணிவகுக்க பீரங்கி குண்டுகள் முழங்க ஜனாதிபதி தேசியக்கொடி ஏற்றினார். ஒருபுறம் கொரோனோ பரவும் என்று தமிழ் மக்களின் பேரணிக்கு நீதிமன்றம் மூலம் தடை விதித்துவிட்டு மறுபுறத்தில் அணிவகுப்புடன் சுதந்திரதினம் கொண்டாடியுள்ளார் ஜனாதிபதி கோத்தா. ஒருபுறம் தமிழில் தேசியகீதம் பாட தடைவிதித்துவிட்டு மறுபுறத்தில் “ அனைத்து இனங்களும் சமமாக நடத்தப்படும்” என்றும் ஜனாதிபதி கோத்தா பேசியுள்ளார். சரி. பரவாயில்லை. என்னவாவது பேசிவிட்டு போகட்டும். ஆனால் புலிகளை அழித்தால் மக்கள் வாழ்வில் பாலும் தேனும் ஆறாக ஓடும் என்றீர்களே? ஏன் இன்னும் ஓடவில்லை? புலிகளை அழித்து பத்து வருடமாகிவிட்டதே. ஏன் இன்னும் இவர்களுக்கு ஒரு வீடு கிடைக்கவில்லை? நல்ல உடை உணவு கிடைக்கவில்லை? இவர்கள் ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேலாக வாரத்தில் ஏழு நாட்களும் உழைக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் தலைமீது எப்படி 58 பில்லியன் டாலர் கடன் வந்தது? இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 3 லட்சம் ரூபா கடனுடன் பிறக்கிறது என்கிறீர்களே, அப்படியென்றால் அந்த பணம் எல்லாம் எங்கே?

எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது?

•எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது? 32 பேருக்கு நீதிமன்ற தடை உத்தரவு அரசு கொடுத்தது. ஆனால் தடையை மீறி பேரணி தொடர்கிறது. முதல்நாள் பேரணியை தடுக்க முயன்ற பொலிஸ் இரண்டாம் நாள் அதே பேரணிக்கு வேறு வழியின்றி பாதுகாப்பு கொடுக்கும் நிலை. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மதகுருமார்கள் ஒன்றாக வருகிறார்கள். இதுவரை எதிர் எதிர் அரசியல் செய்த தலைவர்கள்கூட ஒன்று சேர்ந்து வருகிறார்கள். முஸ்லிம் மக்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். அனைத்து மக்களும் மலையக தமிழ் மக்களின் சம்பள உயர்வுக்கும் குரல் கொடுக்கிறார்கள். தமிழ் பேசும் மக்கள் ஒன்று சேர்ந்து தடையை மீறி பேரணி செல்வது கண்டு அரசு பெரும் கலக்கம் அடைந்துள்ளது. ஜ.நா கமிஷன் பேரணியை உற்று நோக்கிக்கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. 2021ல் இப்படி ஒரு அதிசயம் நிகழும் என்று எந்தவொரு அரசியல் ஆய்வாளரும் கூறவில்லை. எல்லோர் மனதிலும் இப்போது எழும் கேள்வி என்னவெனில் “இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது?” இது வரும் மாகாணசபைத் தேர்தலுக்காக அரசியல் தலைவர்கள் போடும் நாடகம் என்று சிலர் கூறுகிறார்கள். இது கொழும்பு துறைமுகம் கிடைக்கும்வரை இந்தியா தூண்டிவிடும் செயல் என்று வேறு சிலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மை என்னவெனில் இதற்கு காரணமானவர்கள் மக்களே. அவர்களே இதனை நிகழ்த்துகிறார்கள் சரி மக்கள் காரணம் எனில் இதன்மூலம் அவர்கள் சொல்லும் சேதி என்ன என்ற கேள்வி எழுகிறது. முதலாவது, மக்கள் போராட தயாராய் இருக்கிறார்கள். இரண்டாவுது, அவர்கள் ஒன்றிணைந்து போராட தயாராய் இருக்கிறார்கள். அவர்கள் இதனையே தெளிவாக சொல்லியுள்ளார்கள்.

தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்!

•தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்! 08.02.2021 யன்று தோழர் சண் அவர்களின் 28 வது நினைவு தினம் ஆகும். இலங்கையில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களால் மட்டுமன்றி சர்வதேச கம்யுனிச அமைப்புகளாலும் மதிக்கப்பட்ட ஒரு தலைவர் அவர். அவர் தேர்தல் பாதையை நிராகரித்து மார்க்சிய லெனிய மாவோயிச சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்தார். அவர் முன்னெடுத்த புதிய ஜனநாயகப்புரட்சியை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக அமையும். புரட்சி வரலாற்றில் அவர் பெயர் என்றும் நிலைத்து நிற்கும

வெற்றிகரமாக முடிவடைந்த மக்கள் போராட்டம்!

•வெற்றிகரமாக முடிவடைந்த மக்கள் போராட்டம்! பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையிலான மக்கள பேரணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. மக்கள் போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த கோத்தபாயா ஆட்சிக்கு வந்தால் வெள்i;ளவான் வரும் என்று மிரட்டினார்களோ அதே கோத்தபாயாவின் ஆட்சியில் மக்கள் துணிச்சலாக போராடிக் காட்டியுள்ளனர். ஆரம்பம் முதல் எத்தனை தடைகள், அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து இந்த அற்புதத்தை தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டியுள்னர். வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட இந்த சாதனைக்கு முழு சொந்தக்காரர்கள் தமிழ் மக்களே. தமிழ் மக்கள் தாம் போராடத் தயார் என்பதை மட்டுமன்றி தமக்கிடையே ஒன்றுபடவும் தயாராய் இருப்பதை உலகிற்கு காட்டியுள்னர். தமிழ் மக்களின் இந்த உணர்வை அரசியல் தலைமைகள் உணர்ந்து கொள்ள வேண்டும். மாறாக மக்களின் இந்த சாதனையை தமது பதவி நலனுக்காக பயன்படுத்த முனையக்கூடாது.

இவர்கள் கால்களை இழந்திருக்கலாம்.

இவர்கள் கால்களை இழந்திருக்கலாம். ஆனால் உணர்வுகளை இழக்கவில்லை. இவர்கள் கைகளை இழந்திருக்கலாம். ஆனால் தன்னம்பிகையை இழக்கவில்லை. அதனால்தான் இவர்கள் காத்திருந்து பேரணியில் பங்கேற்று தம் பங்கை வழங்கியிருக்கிறார்கள். “மக்கள் போராட விரும்பவில்லை. புலம் பெயர்ந்த தமிழர்தான் தூண்டுகிறார்கள்” என்று கூறியவர்களுக்கு தக்க பதிலை இவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அதுவும்; சிங்கக்கொடி ஏந்தி மகிந்தவுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற அந்த கை கால் நன்றாக உள்ளவர்களே உண்மையில் ஊனமானவர்கள் என்று இவர்கள் காட்டியிருக்கிறார்கள். மக்கள் போராட துணிந்துவிட்டால் ஓடும் விமானத்தைக்கூட கல்லால் எறிந்து விழுத்துவார்கள் என்று பிடல் காஸ்ரோ கூறினார். அவர் இத்தகைய மக்களின் உறுதியையும் உணர்வையையும் பார்த்தே அந்த வசனத்தை கூறியிருப்பார் என தோன்றுகிறது.

ராணுவ அணிவகுப்புடன் சுதந்திரதினம் கொண்டாடிக்கொண்ட

ராணுவ அணிவகுப்புடன் சுதந்திரதினம் கொண்டாடிக்கொண்டு கொரோனோவைக் காரணம் காட்டி தமிழ் மக்களின் பேரணியை தடுப்பது என்ன நியாயம் என்று கோத்தபாயாவைக் கேட்காதவர்கள், அமைதியான முறையில் அகிம்சை வழியில் தமிழ் மக்கள் பேரணி செல்வதை தடுப்பதற்காக ஒரு ஊடகவியலாளர் உட்பட 38 பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்தது என்ன நியாயம் என்று கோத்தபாயாவைக் கேட்காதவர்கள், கிளிநொச்சி நீதிமன்றம் சாவகச்சேரி நீதிமன்றம் பேரணியை அனுமதிக்கிறது. ஆனால் பருத்தித்துறை நீதிமன்றம், மல்லாகம் நீதிமன்றம் பேரணிக்கு தடை விதிக்கிறது. .இது என்ன நீதி என்று கோத்தபாயாவைக் கேட்காதவர்கள், யாழ்ப்பாணத்தானைப் பற்றி உணர்ந்துகொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் கேட்கிறார்கள். அதுவும் ஜோசப் பரராயசிங்கம், சந்திரநேரு போன்றவர்களை கொன்ற பிள்ளையான் கருணா கும்பலை ஆதரித்துக்கொண்டு யாழ்ப்பாணத்தான் சாணக்கியனை அவமதித்துவிட்டதாக புலம்புகிறார்கள். தமிழ் மக்கள் தாம் ஒன்றுபட்டு போராடுவது மட்டுமன்றி அடுத்த சந்ததிக்கும் போராட்டத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதுகூடப் புரியாமல் இவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். புலிகளை அழித்தால் வடக்கில் வசந்தம் வரும் என்றார்கள். கிழக்கில் உதயம் வரும் என்றார்கள். ஏன் இன்னும் வரவில்லை என்று மகிந்த ராஜபக்சாவிடம் இவர்களால் ஏன் கேட்க முடியவில்லை? புலிகள் குழந்தைப் போராளிகளை பயன்படுத்துகின்றனர் என்று ஜ.நா வரை சென்று நீலிக் கண்ணீர் வடித்தவர்கள் இன்று குழந்தைகள் போராட்டக் களத்திற்கு வர நேர்ந்தது குறித்து அக்கறை கொள்வார்களா?

பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை பேரணி

பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை பேரணி வெற்றிகரமாக முடிவுற்று 24 மணிநேரம்கூட ஆகவில்லை. அதற்குள் இன்னொரு முனையில் போராட்டத்தை திறந்துள்ளனர் தமிழ் மக்கள். எதிரியை ஓயவிடாமல் துரத்தி களைப்படைய வைப்பது. போன்று தொடர்ந்து பல முனையில் பல வடிவங்களில் போராடி இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்து வருகின்றனர் தமிழ் மக்கள். இதோ கொட்டும் பனியில் நடுங்க வைக்கும் குளிரில் நீதி கோரி ஜெனிவா ஜ.நா நோக்கி ஈருளிப் பயணம் ஆரம்பித்துள்ளனர். ஒள்றல்ல, இரண்டல்ல தொடர்ந்து 22வது தடவையாக பயணம் செல்கின்றனர். இதன் மூலம் போராட்ட தீயை அணைந்துவிடாமல் பாதுகாத்து வருவதோடு அதனை முன்னகர்த்தும் உந்து சக்திகளாகவும் விளங்குகின்றனர். நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, சவிற்சலாந்து நாடுகள் ஊடாக ஜ.நா செல்கிறார்கள். வழியெங்கும் மக்களையும் மனித உரிமை அமைப்புகளையும் சந்தித்து இனப்படுகொலைக்கு நீதி கோருகின்றனர். மக்களை நம்பும், மக்களை சந்திக்கும் எந்த போராட்டமும் தோல்வி அடைவதில்லை. என்பதை இவர்களது போராட்டமும் நிச்சயம் நிரூபிக்கும்.

போராடுவதால் பயன் உண்டா?

•போராடுவதால் பயன் உண்டா? நடந்தது நடந்து விட்டது. இனி நடந்ததை நினைத்து போராடுவதில் பயன் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். நாலுவகை படைகள் கட்டி போராடிய புலிகளாலேயே வெற்றி பெற முடியவில்லை. இனி எப்படி போராடி வெற்றிபெற முடியும் என்று வேறு சிலர் கேட்கிறார்கள். இதெல்லாம் கடவுள் வகுத்த விதி. எனவே கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு பேசாமல் இருப்பதே சிறந்தது என்று மேலும் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் எல்லாம் கூறுவது சாரம்சத்தில் போராடுவதால் பயன் இல்லை எனவே போராடாமல் இருக்க வேண்டும் என்பதையே. ஆனால் ஓடாத மான் எப்படி வாழ முடியாமல் இறந்துவிடுமோ அதேபோல் போராடாத இனம் இந்த உலகில் வாழ முடியாது அழிந்துவிடும் என்பதே உண்மை. எனவே தமிழ் இனம் இப்போது வரை அழியாமல் வாழ்கிறது எனில் அது கடந்த காலங்களில் போராடி வந்திருக்கிறது என்பது மட்டுமன்றி இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டும் எனில் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே உண்மை. ஒரு குழந்தை இந்த உலகில் பிறந்ததும் செய்யும் முதல் போராட்டம் அழுகை. இவ்வாறு போராட்டம் என்பது பிறப்பு முதல் இறப்புவரை ஒரு மனிதன் வாழ்வில் அத்தியாவசியமாகிவிட்ட பின்பு போராட்டத்தால் பயன் உண்டா என்ற கேள்வி அர்த்தமற்றதாகவே இருக்கும். இதோ இந்த தமிழர் தன் காணாமல் ஆக்கப்பட்ட உறவைத் தேடி போராடும் படத்தை சிலர் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இவர் போராடுவது ஆச்சரியம் இல்லை. மாறாக இவர் இப்படி போராடவில்லை என்றால்தான் ஆச்சரியம். ஏனெனில் தமிழர் உயிரை விடுவார்களேயொழிய போராட்டத்தை ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். போராட்ட உணர்வு என்பது தமிழரின் உயிருடனும் உடலுடனும் இரண்டறக் கலந்து இருப்பதால்தான் எத்தனை முறை வீழ்ந்த போதும் அத்தனை முறையும் மீண்டும் எழுந்திருக்க முடிகிறது. குறிப்பு – போராட்டம் என்றால் துப்பாக்கியை எடுத்து சுடுவது என்று நினைத்து போராட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு அடுத்த பதிவில் பதில் தருகிறேன்.

இவர்களுக்கு பின்னால் இந்திய அரசு இருக்கிறதா?

•இவர்களுக்கு பின்னால் இந்திய அரசு இருக்கிறதா? தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் பேசும்போது பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை பேரணிக்கு பின்னால் இந்தியா இருப்பதாக கூறினார். அப்படியா? ஏன் அப்படி கூறுகின்றீர்கள்? என ஆச்சரியத்துடன் நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் “கொழும்பு துறைமுக யட்டி இந்தியாவுக்கு கிடைக்கும்வரை இனி இப்படி பல போராட்டங்கள் தமிழ் பகுதிகளில் நடக்கும்” என்று கூறினார். அதேபோல் புலம்பெயர் தமிழர் என்ற பேக்ஜடியில் ஒருவர் “ எல்லாம் எழுதியுள்ளீர்கள். ஆனால் இந்த பேரணிக்கு பின்னால் இந்தியா இருப்பதை எழுதாமல் விட்டுவிட்டீர்களே” என்று எனது பதிவு ஒன்றின் கீழ் வந்து எழுதியிருந்தார். அதற்கு நான் “அப்படி நான் கருதவில்லை. உங்களிடம் இதற்கு ஆதாரம் இருந்தால் தாராளமாக முன்வையுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்’ என்றேன். அவர் ஆதாரம் எதையும் முன்வைக்கவில்லை. மாறாக அரசியல் அரிவரி தெரிந்தவர்களுக்கு இது தெரியும் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். ஆக, இந்தியா பின்னணியில் இருக்கிறது என்பது இவர்களின ஆதாரம் அற்;ற வெறும் ஊகமாகவே மட்டும் இருப்பதாக கருதவேண்டியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையில் என்ன பிரச்சனை ஏற்பட்டாலும் அதை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்த முடியும் என்றே பார்க்கும். ஆனால் அதற்காக எல்லாப் பிரச்சனைக்கும் பின்னால் இந்திய அரசே இருப்பதாக கூறிவிட முடியாது. மேலும் இலங்கை அரசை வழிக்கு கொண்டுவர பேரணியை தூண்டிவிட வேண்டும் என்றில்லை. மாறாக எதிர்வரும் ஜ.நா அமர்வில் இலங்கை அரசை காப்பாற்ற முடியாது என்று இந்தியா கூறினாலே போதும் அடுத்த நிமிடம் கோத்தா இந்தியா காலடியில் விழுந்து கிடப்பார். பேரணிக்கு பின்னால் சுமந்திரன் இருக்கிறார் என்று கூறினால் அது எப்படி தவறோ அதே போன்று பேரணிக்கு பின்னால் இந்தியா இருக்கிறது என்று கூறுவதும் தவறாகும். ஏனெனில் இது மக்களால் மக்களுக்காக நடத்தப்பட்ட பேரணி. இதன் வெற்றிக்கு மக்கள் மட்டுமே காரணம் ஆகும். எனவே பேரணியின் பின்னால் இந்தியா இருப்பதாக கூறுவது அந்த மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.

மூன்று தீவுகளில் காற்றாலை

மூன்று தீவுகளில் காற்றாலை அமைக்கவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதே தவிர மூன்று தீவுகளையும் சீனாவுக்கு வழங்கப்படவில்லை. காற்றாலை அமைப்பதால் அத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு என்ன தீமை என்று பார்த்து எதிர்;க்க வேண்டுமேயொழிய சீனாக் கம்பனிக்கு கொடுக்கப்பட்டமைக்காக எதிர்க்கக்கூடாது. 1998 ம் ஆண்டு முதல் தீவுப் பகுதிகளில் காற்றாலை அமைத்து அதன்மூலம் மின்சாரம் பெறுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது. சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் இது தொடர்பாக தமிழ்நாட்டில் தூத்துகுடிப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளை சென்று பார்வையிடவும் திட்டம் இருந்தது . இத் திட்டத்திற்கு இந்தியாவிடமே முதலில் உதவி கோரப்பட்டது. இந்தியா உதவி செய்யாத நிலையிலேயே இந்தியாவுக்கு தெரிந்தே சீனா கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. சீனாக் கம்பனிக்கு வழங்கப்பட்டது குறித்து இந்தியாவே கவலைப்படாத நிலையில் ஈழத் தமிழ் தலைமைகள் எதற்காக இந்தியாவுக்காக கவலைப்பட வேண்டும்? இதேபோன்று சம்பூரில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு இந்திய கம்பனி ஒன்றுக்கு இதே மகிந்தராஜபக்சா 2010ல் அனுமதி வழங்கியிருந்தார். அப்போது இத் திட்டத்தினால் மக்களுக்கும் சுற்றுச் சூழலுக்கும் ஆபத்து என்று மக்கள் போராடினார்கள். ஆனால் தமிழர் தலைவரான சம்பந்தர் ஐயா இத் திட்டத்தை எதிர்த்தால் இந்தியா கோபிக்கும். அதனால் தீர்வு கிடைக்காமல் போய்விடும் என்றார். எமது தமிழ் தலைவர்கள் எப்போதும் இந்தியாவின் நலனை கருத்தில் கொள்கிறார்களேயொழிய தமக்கு வோட்டு போட்டு பதவி தந்த தமிழ் மக்கள் நலனை கருத்தில் கொள்வதில்லை. குறிப்பு – மருதங்கேணியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஒரு தமிழ் தலைமை மக்களை தூண்டிவிட்டு நிறுத்தியது. இரணைமடு குளத்தில் இருந்து குடாநாட்டுக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் திட்டத்திற்கு உலகவங்கி நிதி உதவி அளிக்க முன்வந்தும் தமிழ் எம்.பி ஒருவரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது.

இறந்தவர்களின் உடல்கள

இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது . மலையக மக்களின் 1000ரூபா சம்பள உயர்வுக்கும் இலங்கை அரசு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளது. இது பொத்துவிலிருந்து பொலிகண்டி வரையிலான ஒன்றுபட்ட மக்கள் பேரணிக்கு கிடைத்த வெற்றி மக்கள் போராட்டம் வெற்றியை தருமேயொழிய அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை.

கோத்தா தோண்டிய கிணற்றில் பூதம் வந்துவிட்டது!

•கோத்தா தோண்டிய கிணற்றில் பூதம் வந்துவிட்டது! புத்தர் வருவார் என்று நினைத்து சிங்கள அரசு தோண்டிய இடத்தில் சிவலிங்கம் வந்திருப்பதாக கூறுகிறார்கள். ஒருவேளை இது புத்தரின் கட்டைவிரல் என்று இனி கூறப்போகிறார்களா தெரியவில்லை. செய்தி - முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தொல்லியல் ஆய்வில் சிவலிங்கமொன்றை ஒத்த சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முருகதாசன் மரணம்

முருகதாசன் மரணம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? போரை நிறுத்துமாறு கோரி 12.02.2009 யன்று ஜ.நா முன்றலில் முருகதாசன் தனக்குதானே தீயிட்டு மரணமடைந்தார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை.மாறாக 40 அயிரம் அப்பாவி தமிழ் மக்கள் முள்ளிவாயக்காலில் கொல்லப்பட்டார்கள். போரை நிறுத்துமாறு தமிழகத்தில் முத்துக்குமார் உட்பட 16 பேர் தீயிட்டு தற்கொலை செய்தார்கள். ஆனால் இந்திய அரசு அதனை கண்டுகொள்ளவும் இல்லை. போரை நிறுத்தவும் இல்லை. மாறாக தமிழின அழிப்பிற்கு பெரும் உதவி புரிந்தது. தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றினார். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. மாறாக அதன்பின்னரே கொடிய கிளாஸ்ரர் குண்டுகள் வீசப்பட்டன. மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். போரை நிறுத்தூமாறு கோரி உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் , சாலை மறியல் செய்தார்கள். சங்கிலி போராட்ம் நடத்தினார்கள். உண்ணாவிரதம் இருந்தார்கள். வெளிநாட்டு அரசுகளிடம் மன்றாடினார்கள். மனிதவுரிமை அமைப்பகளிடம் கரம் கூப்பி வேண்டினார்கள். அனைத்து சாத்வீக வழிகளிலும் மக்கள் கேட்டார்கள். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. தமிழ் மக்களின் அழிவு தடுக்கப்படவில்லை. ஆயுதம் தூக்கினால் அது பயங்கரவாதம் என்றவர்கள், மக்கள் ஜனநாயகவழியில் சாத்வீக முறையில் போராடிய போது கண்டு கொள்ளவில்லையே. இதில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? திலீபன் உண்ணாவிரதம் இருந்தபோது அகிம்சையை போதித்த இந்திய அரசு அதனைக் கண்டு கொள்ளவில்லை. அன்னைபூபதி உண்ணாவிரதம் இருந்தபோது அவர் ஒரு பெண் என்றுகூட இந்திய அரசு இரங்கவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் இரோம் சார்மிளா என்ற பெண்மணி 15 வருடமாக உண்ணாவிரதம் இருந்தார் இந்திய அரசு மட்டுமல்ல உலகில் எந்த அரசுமே கண்டுகொள்ளவில்லை. புலிகள் ஆயுத பலத்தோடு இருந்தபோது தமிழீழம் தவிர அனைத்தையும் தருவதாக கூறிய சந்திரிக்கா பண்டாரநாயக்கா இப்போது புலிகள் இல்லை என்பதை தமிழ் மக்கள் உணர வேண்டும் என்று கூறுகிறார். இதன் அர்த்தம் அதிகாரத்தை பெறுவதில் துப்பாக்கிகள் தீர்மானிக்கிறது என்பதைத் தவிர வேறு என்ன? புலிகள் வெல்லவில்லை என்பதால் ஆயுதப் போராட்டம் வெற்றி பெறாது என்று சிலர் கூற முற்படுகிறார்கள். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்றும் கூறுகிறார்கள். அவர்களிடம் நாம் கேட்க விரும்புகிறோம், கோப்பாப்பிலவில் மக்கள் அமைதியாக அகிம்சை வழியில் தானே போராடுகிறார்கள். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லையே? காணாமல் போனவர்களின் உறவுகள் அமைதியாக அகிம்சை வழியில் தானே 1200 நாளாக போராடுகிறார்கள். அவர்களை அரசு கண்டு கொள்ளவில்லையே? அகிம்சை வழியில் தீர்வு பெற முடியும் என்பவர்கள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? அகிம்சை வழியில் போராடி தமது சொந்த நிலத்தையே திருப்பி பெற முடியாத தமிழ் மக்களுக்கு அகிம்சை வழியில் போராடினால் சமஸ்டி தீர்வு கிடைத்துவிடுமா? இன்று தமிழ் இனவிடுதலைக்காக சிலர் தேர்தல் பாதையை முன்வைக்கிறார்கள். அவர்கள் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என மக்களை நம்பவைக்க முயல்கிறார்கள். ஆனால் "துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது" என்றும் "ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதை மூலமே விடுதலை அடைய முடியும்" என்று மாபெரும் ஆசான் மாசேதுங் கூறியுள்ளார். அதுவே இன்றும்கூட பொருத்தமாக உள்ளது என்பதே உண்மையாகும்.

நான்காவது நாளாக தொடரும் ஈருளிப் பயணம்!

நான்காவது நாளாக தொடரும் ஈருளிப் பயணம்! ஒருபுறம் கொரோனோ மறுபுறம் கடும் குளிர். ஆனாலும் இனப்படுகொலைக்கு நீதிகோரும் பயணம் தொடர்கிறது. கடந்த 40 வருடங்களில் இல்லாத குளிர் ஜரோப்பிய நாடுகளை வாட்டுகிறது. ஆனாலும் இவர்களின் பயணம் 22வது தடவையாக நிகழ்கிறது. இவர்கள் நீதி கோரும் போராட்டத்திற்காக உயிரை விடுவார்களேயொழிய போராட்டத்தை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். ஏனெனில் போராட்டத்தை தவிர வேறு வழியில்லை என்பதை மட்டுமல்ல போராட்டம் நிச்சயம் வெற்றி தரும் என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள். புலம் பெயர் தமிழர் பணம் அனுப்பி பொத்துவில் இருந்து பொலிகண்டி வரை பேரணியை நடத்தியதாக சிங்கள ராணுவ தளபதி கூறுகிறார். ஆனால் உண்மையில் புலம்பெயர் தமிழர்கள் அனுப்புவது பணம் இல்ல. இத்தகையவர்களின் உந்து சக்தியே தாயகத்தில் உள்ளவர்களை போராட வைக்கிறது.

நல்லது நடந்தால் கடவுள் செயல்.

நல்லது நடந்தால் கடவுள் செயல். கெட்டது நடந்தால் விதி எனில் மனிதனுக்கு மூளை எதற்கு? மனித மூளையில் உள்ள மயலின் நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176000 கிலோ மீற்றர் என்கிறார்கள். மனித மூளையில் உள்ள 60 பில்லியன் நரம்பணுக்களில் சுமார் 10 பில்லியன் புறணிக் கோபுர உயிரணுக்கள். இவை தமக்குள் சமிக்கைகளை அனுப்பிக்கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் நரம்பிணைப்புகளை பயன்படுத்துகின்றன. நல்லது நடந்தால் கடவுள் செயல் , கெட்டது நடந்தால் அது விதி எனில் இத்தகைய சிறப்பான மூளை மனிதனுக்கு எதற்கு? பூசை செய்யவா? சிவன் என் முப்பாட்டன் என்று முகநூலில் படம் போடுற பயலுகள் எல்லாம் ரோட்டைக் கடக்கும்போது சிவனை நம்புவதில்லை. மாறாக எதிரில் இருக்கும் சிக்னல் லைட்டையே நம்பி கடக்கின்றனர். உலகம் உருண்டை என்று கூறிய விஞ்ஞானியை கொன்ற பாப்பரசர்கள்; எல்லாம் இப்போது அப்பிள் போனில் கூகிளில்தான் இயேசுவை தேடுகின்ற நிலைமை. ஆம். கடவுள் இருக்கிறார் என்று கூறும் கருத்துமுதல்வாதிகள் எல்லாம் நடைமுறையில் கடவுள் இல்லை என்னும் பொருள்முதல்வாதிகளாகவே வாழுகின்றனர். உலப் புகழ்பெற்ற அறிஞர் ஸ்டீபன் கேவாக்கிங் கேட்கிறார் “கடவுள் தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லைப் படைக்க முடியுமா?” பக்தர்களே உங்கள் பதில் என்ன?

காதலர் தினம்!

• காதலர் தினம்! மாபெரும் மாக்சிய ஆசான் எங்கெல்ஸ் கூறுகிறார் “ஒரு புதிய தலைமுறை அதாவது தம் வாழ்நாள் முழுவதற்கும் தன்னிடம் ஒரு பெண்ணின் சரணாகதியைப் பணமோ வேறு எவ்விதமான சமூக அதிகாரமோ கொண்டு விலைக்கு வாங்காத ஆண்களினதும் உண்மையான காதலன்றி வேறு எந்தக் காரணத்ததுக்கும் தம்மை சரணளிக்காதவர்களும் பொருளாதார பின்விளைவுகளுக்கு அஞ்சி தம்மைத் தமது நேயத்திற்குரியோருக்கு அளிக்காதவர்களுமான பெண்களின் தலைமுறை வளர்ந்து வந்தபின்பு இப் பிரச்சனை தீர்வு பெறும். இத்தகைய மக்கள் உருவாகிய பின்னர் அவர்கள் என்ன செய்யலாம் என்று நாம் இன்று நினைப்பது பற்றி அவர்கள் துளியளவும் அக்கறைப்படமாட்டார்கள். அவர்கள் தமது சொந்த நடைமுறைகளையும் தங்கள் சொந்த பொது அபிப்பிராயங்களையும் உருவாக்கி ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட நடைமுறையுடன் நிறைவு காண்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் ஆண்களுடன் பூரண சமத்துவம் அனுபவிப்பர் என்பதில் ஜயமில்லை.”

ஈழத் தமிழர்களால் வரலாற்றில்

ஈழத் தமிழர்களால் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பெயர் சுபா. முத்துக்குமார் ஈழத் தமிழருக்கு ஆதரவாக 16 தமிழக தமிழர்கள் தீக்குளித்து மரணமடைந்தார்கள். ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் தோழர்கள் தமிழரசன், சுந்தரம், லெனின் , மாறன் போன்றவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். தமிழக இளைஞர்கள் சிலர் ஈழம் வந்து ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்தார்கள். அந்த சிலரில் சுபா.முத்துக்குமாரும் ஒருவர். அவருடைய தியாகம் மறக்க முடியாதது. சுபா. முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக மட்டுமன்றி தமிழக மக்களுக்காகவும் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர். •5 ஆண்டுகள் புலிகள் அமைப்புடன் சேர்ந்து தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம். •5 ஆண்டுகள் வீரப்பனுடன் சேர்ந்து தமிழ்நாடு விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் •6 ஆண்டுகள் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தமைக்காக தலைமறைவு வாழ்க்கை •10 ஆண்டுகளுக்கு மேலாக சிறை வாழ்க்கை •4 ஆண்டுகளுக்கு மேலாக நாம்தமிழர் இயக்கத்தை தோற்றுவித்து அரசியல் வாழ்க்கை. இவ்வாறு போராட்டமே வாழ்கையாக கொண்ட சுபா. முத்துக்குமாரின் 10 வது நினைவு தினம் 15.02.2021 ஆகும். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக அஞ்சலியை செலுத்துவதுடன் அவரை என்றும் நன்றியுடன் நினைவு கூறுவோம்.

இவர் யார் என்று தெரிகிறதா?

•இவர் யார் என்று தெரிகிறதா? இவர் தர்பார் நடித்த சிவாஜிராவ் கெய்வாட் (ரஜனி) இல்லை. இவர் இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ கலிலி இன்று இவரது பிறந்த தினம் ஆகும். இவர் இத்தாலியின் பிசா நகரில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பிறந்தார். 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி இறந்தார். வானவியல் அறிஞர், இவர் வேதியியல் வல்லுநர், கணிதவியலாளர், தத்துவஞானி, கண்டுபிடிப்பாளர் என பன்முக ஆற்றல் பெற்றவர். தொலைநோக்கி, காம்பஸ், தெர்மாமீட்டர் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை. இயற்பியலின் தந்தை, நவீன அறிவியலின் தந்தை, நவீன வானியலின் தந்தை என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். இன்று விஞ்ஞானிகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கிறது। அரசு மரியாதை செய்கிறது। அறிவியல் உலகத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்யும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கூடக் கிடைக்கிறது। 16-17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் நிலைமை இவ்வளவு இனிமையாக இல்லை. அவர்களது கண்டுபிடிப்புகள் மதநம்பிக்கைகளுக்கு விரோதமானதாகக் கருதப்பட்டால் கண்டு பிடிப்புகளை அவர்கள் வெளியிட முடியாது. மீறி வெளியிட்டால், அவர்களது உயிருக்கே கூட ஆபத்து காத்திருந்தது. இப்படிப்பட்ட சிக்கலை இந்த உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானி கலிலியோ தன் வாழ்நாளில் சந்தித்தார். பல நூற்றாண்டுகளாக பூமி நடுவில் இருப்பதாகவும் சூரியன் உள்ளிட்ட மற்ற எல்லா கோள்களும் பூமியைச் சுற்றி வருவதாகவும் நம்பப்பட்டது. ஆனால், கலிலியோ, ஆய்வுகள் முதன்முறையாக சூரியனை நடுநாயகமாகக் கொண்டு பூமி உள்ளிட்ட கோள்கள் சுற்றி வருவதாக நிரூபித்தன. இது, கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கைக்கு எதிரானது என்று கூறி கலிலியோவை கிறிஸ்தவ தலைமையகம் தண்டித்தது. அவருடைய பல கருத்துக்களை திரும்பப் பெறும்படி வற்புறுத்தியது. சாகும்வரை வீட்டுச் சிறையில் அடைத்து வைத்தது. 1992-இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து-கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப்பாண்டவர் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார். அறிவியல் உண்மைகள் அவை வெளியிடப்படும் காலத்தில் ஏற்கப்படாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் ஏற்கப்படும் என்பதற்கு கலிலியோவின் வாழ்க்கை ஓர் உதாரணம். இங்கு வேதனை என்னவென்றால் கலிலியோ தன் உயிரைப் பணயம் வைத்து பூமியே சூரியனை சுற்றி வருகிறது என்ற உண்மையை உலகிற்கு கூறினார். ஆனால் நம்மவர்கள் இப்பவும் காலையில் சூரியன் உதிக்கிறது. மாலையில் மறைகிறது என்று எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா - சீனா

இந்தியா - சீனா ஈழத் தமிழர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள்! (1) இலங்கை அரசு இன்று மட்டுமல்ல 1960 களிலேயே சீனாவுடன் ரப்பர் அரிசி ஒப்பந்தம் செய்தது. அப்போது யாரும் அதனை எதிர்க்கவில்லை. (2) 1971ல் ஜேவிபி புரட்சி செய்தபோது இந்தியாவின் இந்திரா காந்தி அரசு இந்திய படைகளை அனுப்பி இலங்கை அரசுக்கு உதவியது. சீனா ஆயுத தளவாடங்களை கொடுத்து உதவியது. (3) 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டபோது அதனை முதலில் ஆதரித்த நாடு இந்தியாவின் எதிரி நாடு எனக் கூறப்படும் சீனாவே. (4) இந்தியா அமைதிப்படை என்னும் பெயரில் வந்து பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களை கொன்றது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லறவு செய்தது. கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்தது. ஆனால் சீனா இதனைக் கண்டிக்கவில்லை. (5) சீனா ஒருபோதும் தன் படைகளை இலங்கைக்கு அனுப்பியதில்லை.. ஆனால் இலங்கை அரசுக்கு ஆயுத தளவாடங்களை கொடுத்து உதவி வருகிறது. (6) இந்திய ராணுவத்துடன் புலிகள் போர் புரிந்த காலத்தில்கூட இந்தியாவின் எதிரி நாடு எனக் கூறப்படும் சீனா புலிகளையும் தமிழ் மக்களையும் ஆதரிக்கவில்லை. (7) 2001ல் புலிகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முய்ன்றபோது இந்தியாவின் வாஜ்பேய் அரசே அதைத் தடுத்து இலங்கை ராணுவத்தை காப்பாற்றியது. இந்தியாவின் இத் தலையீட்டை சீனா எதிர்க்கவில்லை (8) 2009 போரின் போதும் புலிகளுக்கு வந்த ஆயுதக் கப்பல்களை அழிக்க இந்தியா உதவியது. தனது ராடர் கருவிகளையும் அதனை இயக்க ராணுவ வீரர்களையும் கொடுத்து உதவியது. சீனா ஆயுத தளவாடங்களை கொடுத்து உதவியது. (9) இன்று ஜநா வில் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை இந்தியாவும் சீனாவும் சேர்ந்தே பாதுகாக்கின்றன. (10) இந்தியாவின் இன்றைய மோடி அரசும் இலங்கை அரசுக்கு போர்க்கப்பல் இலவசமாக கொடுத்து உதவியுள்ளது. இலங்கை படைவீரர்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறது. சீனாவும் இலங்கை அரசுக்கே உதவி வருகிறது. (11) இலங்கை அரசு இதுவரை 600 க்கு மேற்பட்ட தமிழக மீனவர்களை கொன்றுள்ளது. ஆனாலும் இந்திய அரசு தொடர்ந்தும் புலிகள்; இயக்கத்தை தடை செய்து வருவதோடு இலங்கை அரசுக்கே உதவி வருகிறது. சீனாவும் இலங்கை அரசுக்கே உதவி வருகிறது. இவ்வாறு ஆரம்பம் முதல் இந்தியாவும் சீனாவும் சேர்ந்தே இலங்கையை ஆக்கிரமித்து வருகின்றன. இன்று இலங்கையில் சீனாவின் முதலீடுகளைவிட இந்தியாவின் முதலீடுகளே அதிகமாக உள்ளது. இன்று வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் 90 வீதமான ஆக்கிரமிப்பு இந்தியாவே செய்திருக்கிறது. இலங்கையில் நான்கு தூதராலயங்களை வைத்துக்கொண்டு தமிழ் மக்களின் விடுதலை உணர்வை இந்தியாவே நசுக்கி வருகிறது. ஆனால் எமது அரசியல் ஆய்வாளர்களோ சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்தியா தமிழ் மக்களுக்கு உதவப் போகிறது என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பு – தோழர் சண்முகதாசன் சீனாவை ஆதரித்தார். எனவே நாமும் ஆதரிக்க வேண்டும் என அண்மையில் ஒருவர் எழுதியிருந்தார். இது தவறு. மாசேதுங் உயிருடன் இருக்கும்போதே 1971ல் இலங்கை அரசுக்கு சீனா ஆயுத உதவி செய்தபோது தோழர் சண்முகதாசன் சீனாவைக் கண்டித்துள்ளார். மாசேதுங் மறைவுக்கு பின்னர் சீனா கம்யுனிஸ்ட்; நாடு இல்லை என்றும் அது முதலாளித்துவத்திற்கு திரும்புகின்றது என்றும அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பாதையில் பயணிப்பவர்களின்

தேர்தல் பாதையில் பயணிப்பவர்களின் தவிர்க்க முடியாத கோலம் இது. ஆனால் கொல்லப்பட்ட தமிழர்களின் பிணக் குவியலில் இருந்து தோன்றியவர்கள் நாம். எமக்கு மாலை மரியாதை ஒரு கேடா என்று கட்சி ஆரம்பிக்கும்போது கேட்டவர் இன்று இந்த கோலத்தில் இருப்பது என்ன நியாயம்?

அமிர்த்ஷாவுக்கு ஒரு வேண்டுகோள்!

அமிர்த்ஷாவுக்கு ஒரு வேண்டுகோள்! செய்தி - இலங்கையில் இருக்கும் இந்துக்களின் நலனுக்காக பாஜக வின் கிளை இலங்கையில் ஆரம்பிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமிர்த்ஷா தெரிவித்துள்ளார். சரி. நல்லது. நீங்களும் உங்கள் பாஜக கட்சியும் உண்மையில் ஈழத்து இந்துக்களின் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால் முதலில், •தமிழ்நாட்டில் 37 வருடமாக அகதியாக இருக்கும் இந்து ஈழத் தமிழருக்கு குடியுரிமை வழங்குங்கள் •தமிழ்நாட்டில் அகதியாக இருக்கும் இந்து ஈழத் தமிழ் மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை வழங்குங்கள் •தமிழ்நாட்டில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்து ஈழ தமிழ் அகதிகளை உடனே விடுதலை செய்யுங்கள். •தாயகம் திரும்ப விருப்பமுள்ள ஈழ இந்து அகதிகளுக்கு கப்பல் சேவையை ஆரம்பி;த்து உதவுங்கள். இவற்;றை எல்லாம் செய்து காட்டிவிட்டு அப்புறம் தாராளமாக இலங்கை வாருங்கள். என்ன செய்தாலும் இந்திய அரசை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் சில தமிழ் தலைவர்கள் இந்திய ஆளும் கட்சியையும் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வர நினைக்கிறீர்கள். ஆனால் ஈழத் தமிழர்கள் வெறும்"Go back Modi" (மோடி திரும்பிப் போ) என்று சொல்லிவிட்டு பேசாமல் இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். தேவையானால் சோனியா காந்தியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தலைவர்களால் மறக்கப்பட்ட சிறப்புமுகாம் அகதிகள்!

•தலைவர்களால் மறக்கப்பட்ட சிறப்புமுகாம் அகதிகள்! இந்தியாவில் தீபெத் உட்பட பல நாட்டு அகதிகள் இருக்கின்றனர். ஆனால் ஈழ அகதிகள் மட்டுமே சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமில் அடைக்கப்படுகின்றனர். 1990ல் கலைஞர் கருணாநிதி தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இச் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமை வேலூர் கோட்டையில் ஆரம்பித்தார். இப்போது அதனை ஆரம்பித்த கலைஞர் கருணாநிதிகூட இறந்துவிட்டார். ஆனால் அவரால் ஆரம்பிக்கப்பட்ட இச் சிறப்புமுகாம் இன்னும் திருச்சியில் இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் பல தமிழக தலைவர்கள் இச் சிறப்புமுகாம் மூடப்பட வேண்டும் என்றும் அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தனர். ஆனால் தற்போது அத் தலைவர்கள்கூட இது தொடர்பாக குரல் கொடுப்பதை கைவிட்டுள்ளனர். அல்லது மறந்துவிட்டனர் என்று கூறலாம். இதில் தமிழக தலைவர்களையும் பெரிதாக குறை கூறமுடியாது. ஏனெனில் குரல் கொடுக்க வேண்டிய ஈழத் தமிழ்தலைவர்கள்கூட குரல் கொடுப்பதில்லை. அண்மையில் நடத்தப்பட்ட பொத்துவில் இருந்து பொலிகண்டி பேரணியில்கூட இலங்கையில் சிறைவைக்கப்பட்டவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கப்பட்டது. ஆனால் இச் சிறப்புமுகாம் அகதிகளின் விடுதலை தொடர்பாக குரல் எழுப்பப்படவில்லை. இலங்கை சிறையில் உள்ளவர்கள் மீது வழக்குகள் உண்டு. இருந்தும் அவர்களுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என கோரப்படுகிறது. ஆனால் எந்த வழக்கும் இன்றி சிறப்புமுகாமில் அகதிகள் அடைக்கப்பட்டுள்னர். அவர்களின் விடுதலைக்கு குரல் எழுப்ப இந்த தலைவர்கள் தயங்குகின்றனர். இந ;நிலையில் சிறப்புமுகாமில் அகதிகள் துன்புறுத்தப்படுவது தொடர்பாக தமிழர் கட்சி இன்று ஆராய்கிறது. அவர்கள் முயற்சியாவது இந்த அப்பாவி அகதிகளின் விடுதலைக்கு வழி சமைக்கட்டும்.

கச்சதீவு இலங்கைக்கும் சொந்தமில்லை.

கச்சதீவு இலங்கைக்கும் சொந்தமில்லை. இந்தியாவுக்கும் சொந்தமில்லை. அது தமிழ் மக்களுக்கு சொந்தமானது. இலங்கை இந்தியா என்ற இரண்டு நாடுகளும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்ட்டது. ஆனால் அதற்கு முன்னரே கச்சதீவு ஈழத் தமிழர்களாலும் தமிழக தமிழர்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் கருணாநிதி பணம் வாங்கிக்கொண்டு கச்சதீவை தாரை வார்த்துவிட்டதாக இப்போது சுப்பிரமணியசுவாமி கூறுவது ஆதாரமற்ற அவதூறு ஆகும். அதேபோன்று தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு கச்சதீவை மீட்க வேண்டும் என்று சில அரசியல்வாதிகள் இந்தியாவில் கூறுவதும் தவறாகும். ஏனெனில் கச்சதீவையும் தாண்டி பல மைல்கள் கடந்து முல்லைத்தீவு கடல்வரை தமிழக ரோலர் படகுகள் வருகின்றன. எனவே இங்கு கச்சதீவு பிரச்சனை இல்லை.

புளட்’ தலைவர் உமா மகேஸ்வரன்!

“புளட்’ தலைவர் உமா மகேஸ்வரன்! இந்தியாவில் இருந்துகொண்டு இந்திய உளவுப்படைகளின் சதிகளுக்கு ஒத்துழைத்திருந்தால் இன்று தனது 76 வது பிறந்தநாளை கொண்டாடியிருப்பார். ஆனால் இந்திய சதிகளுக்கு இணங்க மறுத்து இந்தியாவை விட்டு வெளியேறியதால் இந்திய உளவுப்படையின் கைக்கூலிகளால் 16.07.1989 யன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மீது பல விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் சிறந்த படிப்பு , நல்ல உத்தியோகம், வசதியான வாழ்வு அனைத்தையும் துறந்து தன் இனத்திற்காக அவர் போராட வந்தமை மதிக்கப்பட வேண்டியது. அவர் தன் கையால் யாரையும் கொலை செய்ததாக தெரியவில்லை. ஆனால் அவர் பெயரால் கொலை செய்தவர்கள் இன்று இந்திய உளவுப்படையின் அரவணைப்பில் இருந்துகொண்டு அவரை கொலைகாரன் என்று விமர்சிப்பது காலக் கொடுமை.

தமிழ்நாட்டில் மலர முடியாத தாமரை

•தமிழ்நாட்டில் மலர முடியாத தாமரை ஈழத்தமிழர் மத்தியில் மலர முடியுமா? ஆம். மலர முடியும் என நம்புகிறார் இந்திய உளவுப்படைகளால் அனுப்பி வைக்கப்பட்ட ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம். இத்தனை நாளும் சிவசேனை என்னும் பெயரில் இயங்கி ஒரு பிரதேசபை உறுப்பினரைக்கூட பெற முடியாதவர் இனி பாஜக பெயரில் இயங்க விரும்புகிறார். நக்கிற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கம் என்ன? என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல நக்குவது என முடிவெடுத்துவிட்ட சச்சிதானந்தத்திற்கு சிவசேனை என்ன? பாஜக என்ன? எல்லாம் ஒன்றுதான். அவர் தாரளமாக யாரை வேண்டுமானாலும் நக்கட்டும். ஆனால் அதற்காக ஈழத்து இந்துக்கள் விரும்புவதாக பொய் கூற வேண்டாம்

மதவெறியர்களால் கொல்லப்பட்ட தத்துவவியலாளர் புரூணோ

•மதவெறியர்களால் கொல்லப்பட்ட தத்துவவியலாளர் புரூணோ புரூணோவின் அண்டவியல் பார்வைகள் தமது மதக் கருத்துகளுக்கு எதிராக இருக்கிறது எனக்கூறி கிருத்தவ மதவாதிகளால் புரூணோ எரித்துக் கொல்லப்பட்டநாள் ( 17.02.1600) இன்று ஆகும். அவரை எரித்துக் கொன்றவர்களின் பெயர் வரலாற்றின் குப்பைத் தொட்டியில்கூட இல்லை. ஆனால் தத்துவவியலாளர் புரூணோ சுதந்திரமான சிந்தனை மற்றும் வளர்ந்து வரும் அறிவியலின் வரலாற்றில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறார்.

தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழரின்

“தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டத்திற்கு உதவ வேண்டியது எமது கடமை. அதை நாம் இனியும் செய்வோம்” என்று அற்புதம்மாள் ஈழத் தமிழர்களுக்கு தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து இயங்கும் ஆதவன் வானொலிக்காக ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா அவர்கள் அற்புதம்மாளை தொடர்பு கொண்டு புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என கேட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஈழத் தமிழர்களுக்கு உதவியதற்காகவே பேரறிவாளன் 28 வருடங்களாக சிறையில வைக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் அத் தாய் மனம் மாறவில்லை. இனியும் ஈழத் தமிழருக்கு உதவி செய்வோம் என உறுதியாக கூறியுள்ளார். அதேபோல் எழு தமிழர்களில் ஒருவரான சாந்தனின் வயதான தாயாரும் தான் இறப்பதற்குள் மகனை பார்க்க விரும்புவதாக கூறியதையும் ஆதவன் வானொலி ஒலிபரப்பியுள்ளது. இந்த 28 வருடத்தில் முதன்முதலாக ஒரு புலம்பெயர் வானொலி அற்புதம்மாளின் குரலை ஒலிபரப்பியது நிச்சயம் பாராட்டுக்குரியது. குறிப்பு - 18.02.2019 யள்று செய்யப்பட்ட இப்பதிவை மீள் பதிவு செய்கிறேன்

ராகுல் காந்தி அவர்களே!

ராகுல் காந்தி அவர்களே! நீங்கள் உண்மையில் மனப்பூர்வமாக மன்னித்துவிட்டீர்கள் என்றால் எதற்காக 2009ல் இலங்கை அரசுடன் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்தீர்கள்? சரி. பரவாயில்லை. இப்பகூட நாம் ஆட்சிக்கு வந்தால் சிறையில் இருக்கும் ஏழு தமிழர்களை உடனே விடுதலை செய்வோம் என ஏன் உங்களால் கூற முடியவில்லை? எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியவிடயம் என்னவெனில் நீங்கள் மன்னிப்பு கேட்க வேணடியவர். தமிழ் மக்கள்தான் உங்களை மன்னிக்க வேண்டியவர்கள். எனவே உங்கள் தந்தை அமைதிப்படையை அனுப்பி செய்த படுகொலைகளுக்காக காலம் தாழ்த்தாது தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள். அதைவிடுத்து தமிழக தேர்தல் வந்தால் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன் என்று நீங்கள் கூறுவதையும் மோடி ஒவ்வொரு மேடையிலும் தமிழில் திருக்குறள் சொல்லுவதையும் தமிழ் மக்கள் நம்பமாட்டார்கள்.

சர்வதேச தாய் மொழி தினம்! (21.02.2021)

•சர்வதேச தாய் மொழி தினம்! (21.02.2021) எல்லோருக்கும் அவர்களது தாய்மொழி பெருமை மிக்கதுதான். ஆனால் மொழிகளின் தாய் மொழி என்ற பெருமை எமது தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழியாலேதான் நாம் தமிழ் இனம் ஆனோம். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பார்கள். அதனால்தான் தமிழர்கள் தம் உயிரைக் கொடுத்தேனும் தமிழ் மொழியை காத்து வருகிறார்கள். மொழி என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் வெறும் ஊடகம்தானே, அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சிலர் கேட்கலாம். உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து விட்டன. தமிழும் இனி மெல்ல சாகும் என சிலர் கூறலாம். ஆனால் வரலாற்றில் எத்தனை படையெடுப்புகள். அத்தனையும் தாண்டி தமிழ் மொழி எப்படி நிமிர்ந்து நிற்கிறது? போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்கள் 350 வருடங்களுக்கு மேலாக ஆண்டபோதும் அவர்களின் சில சொற்களை தமிழ் உள்வாங்கியதேயொழிய தமிழ் அழிந்து விடவில்லை. இனியும்கூட எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தமிழ் அழிந்துவிடப் போவதில்லை. அது நிமிர்ந்து நிற்கும். ஏனெனில் தமிழர்கள் தம் தாய்க்காக மட்டுமன்றி தாய்மொழி தாய்நிலத்திற்காகவும் உயிர் துறக்கக்கூடியவர்கள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்புகள் இருக்கும்வரை தமிழ் மொழியையும் தமிழர்களையும் யாராலும் அழித்துவிட முடியாது. தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் இந்தியா முழுவதும் பேசப்படும் மொழி சமஸ்கிருதம் என்றும் அதனை தமிழர்கள் எற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். நாற்பதாயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழியை தமிழ் மொழி பேசும் எட்டுக்கோடிப் பேர் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஏனெனில் தமிழனை அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவனின் தமிழ் மொழியை அழிக்க வேண்டும் என்று எதிரி நன்கு தெரிந்து வைத்திருக்கிறான். கைபர் கணவாய் வழியாக வந்த இல.கணேசன் கும்பல்களுக்கு சமஸ்கிருதம் புனித மொழியாக இருக்கலாம். ஆனால் அதற்காக செத்த மொழியான சமஸ்கிருதத்தை தமிழர்கள் ஒருபோதும் எற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தீ பரவட்டும்!

தீ பரவட்டும்! தேக்கு மரம் உயர்ந்து வளர்ந்த மரம்தான். தீக்குச்சி சிறிதுதான். ஆனால் உரசினால் அந்த தேக்கு மரத்தையே எரித்து சாம்பலாக்கிவிடும். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏந்தும் தீச்சட்டி இனப்படுகொலையாளிகளை எரித்து பொசுக்க வேண்டும். தீ பரவட்டும். இவர்களுக்கு நீதி பெற்று தரட்டும்.

பிரபாகரன் பயங்கரவாதி.

பிரபாகரன் பயங்கரவாதி. எனவே பிரபாகரனைப்பெற்ற இவரும் பயங்கரவாதி என்று மகிந்த ராஜபக்சா கூறினார். ஆனாலும் கொஞ்சம் இரக்கம்காட்டி இவர் இந்தியா சென்று சிகிச்சை பெற அனுமதித்தார். ராஜபக்சாவுக்கு இருந்த இரக்கம்கூட உலகத்தமிழினத் தலைவர் என்று கூறப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு இருக்கவில்லை. அதனால் கொஞ்சம்கூட மனிதாபிமானம் அற்று இவரை உள்ளே விட மறுத்தார். விமானநிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பினார். ஒரு தமிழ் பெண்ணை அதுவும் வயதான நோய்வாய்ப்பட்டவரை இப்படி திருப்பி அனுப்புவது நியாயமா என பலரும் கேட்டார்கள். அதற்கு , வைகோ மூலம் வந்ததால்தான் கலைஞர் அனுமதிக்கவில்லை என சிலர் கூறினார்கள். கலைஞர் என்ன செய்ய முடியும். மத்திய அரசுதான் திருப்பி அனுப்பியது என்று வேறு சிலர் கூறினார்கள். அந்த வைகோ, மத்திய அரசாக இருந்த காங்கிரஸ், யாவும் இப்போது திமுக வுடன் கூட்டணியாக இருக்கின்றன. அவர்கள் பார்வதியம்மாளை மறந்திருக்கலாம். ஆனால் தமிழ் மக்களால் அந்த கொடுமையை மறக்க முடியவில்லையே. பாவம். இந்த தாயார். இவர் தமிழ் இனத்தில் பிறந்ததைத்தவிர வேறு என்ன தவறு செய்தார்?

பச்சைப் பொய்!

பச்சைப் பொய்! தமிழக சட்டசபைச் தேர்தல் வருகின்றது என்றவுடன் இந்திய பிரதமர் மோடியும் அவரது கட்சியும் ஈழத் தமிழர் மீது அக்கறை கொண்டவர்களாக காட்ட முயலுகின்றனர். அவர்கள் கூறிவரும் பொய்களில் ஒன்றே “ எங்களை இந்தியாவுடன் இணைத்து விடுங்கள் என தமிழ் எம்.பிகள் கோரிக்கை “ என்று கூறுவது. “இந்துக்களை முன்னிலைப்படுத்தி கட்சி உருவாக்குவதில் என்ன தவறு?” என்று பாராளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்கூட தமிழ் பகுதிகளை இந்தியாவுடன் இணையுங்கள் என்று கோரியதில்லை. பிரிக்கப்படாத நாட்டுக்குள் தமிழருக்கு கௌரவமான தீர்வு வேண்டும் என்றே தமிழ்தேசியகூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் நேற்று கூறியிருக்கிறார். ஆனால் நாட்டைப்பிரித்து இந்தியாவுடன் இணைக்குமாறு தமிழ் எம் பிக்கள் கோரியதாக கூறுகின்றனர் பாஜக கட்சியினர். இதை இவர்கள் ஈழத் தமிழரின் நலனுக்காக கூறவில்லை. மாறாக கோத்தபாயாவின் இனவாத தீ க்கு கொள்ளிக்கட்டை எடுத்துக் கொடுத்து உதவுகிறார்கள். அண்மையில் நடந்த பொத்துவிலில் இருந்து பொலிகண்டி பேரணியில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராடியதை இந்திய உளவுப்படைகளால் சகித்தக்கொள்ள முடியவில்லை. எனவேதான் தமிழ் மக்களின் ஜக்கியத்தை குழப்பி கோத்தாவின் இனவாத அரசுக்கு உதவ இவ்வாறு சதிகள் மேற்கொள்கின்றன.

இப்போது சுரேஸ் என்ன கூறப்போகிறார்?

இப்போது சுரேஸ் என்ன கூறப்போகிறார்? சுமார் 45 திட்டங்களுக்காக 10 பில்லியன் டாலர் சீன முதலீட்டை அனுமதிக்கப்போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் மின்சார திட்டத்திற்காக சீனக் கம்பனியை அனுமதித்தது இந்திய பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று கூறிவரும் சுரேஸ் பிரேமச்சந்திரன் இப்போது என்ன கூறப்போகிறார்? ஏற்கனவே இலங்கையில் பல திட்டங்களுக்கு சீன கம்பனிகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றினால் இந்தியாவுக்கு எந்த ஆபத்தும் இதுவரை வராத நிலையில் மூன்று தீவுகளில் சீனக் கம்பனியை அனுமதித்ததால் இந்தியாவுக்கு ஆபத்து என்று ஏன் கூறுகின்றார் என்று புரியவில்லை. அதுமட்டுமன்றி இலங்கையில் சீனா செய்த முதலீட்டைவிட அதிக முதலீட்டை இந்தியாவில் செய்துள்ளது. மேலும் செய்து வருகிறது. அப்படியிருக்க யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகளில் காற்றாலை மின் திட்டத்திற்கு சீனக் கம்பனி முதலீடு செய்வது எப்படி இந்தியாவுக்கு ஆபத்தாகும் என சுரேஸ கருதுகிறார் என்றும் புரியவில்லை. அதுவும் சீன முதலீடு குறித்து இந்தியாவே கவலைப்படாத நிலையில் சுரேஸ் எதற்காக இந்தியாவுக்காக கவலைப் படுகின்றார் என புரியவில்லை. டில்லி மருத்தவ கல்லூரியில் தன் மகளுக்கு படிக்க சீட் வழங்கியமைக்காக இந்திய அரசுக்கு நன்றிக்கடன் பட்டவராக சுரேஸ் இருக்கலாம். ஆனால் அதற்காக பத்து கட்சிகளை சேர்த்து இந்தியாவுக்காக குரல் கொடுக்க வேண்டியதில்லை. இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பை இனியாவது சுரேஸ் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா போன்று ஈழத்திலும் இந்துக்கட்சி ஆரம்பித்தால் என்ன பயன் கிட்டும்?

இந்தியா போன்று ஈழத்திலும் இந்துக்கட்சி ஆரம்பித்தால் என்ன பயன் கிட்டும்? (1) மாட்டு மூத்திரம் குடிக்கவேண்டி வரும் (2) மாட்டு இறைச்சி சாப்பிட்டதாக சிலர் அடித்துக் கொல்லப்படுவார்கள் (3) முஸ்லிம் கடையில் பொருட்கள் வாங்க வேண்டாம் என்பார்கள். ஆனால் முஸ்லிம் நாட்டில் இருந்து பெற்றோல் வாங்குவார்கள். (4) பசு மாடு எல்லோருக்கும் தாய் என்பார்கள். அப்படியென்றால் காளை மாடு தந்தையா என்று கேட்டால் “தேசவிரோதி” என்பார்கள். கேள்வி - சரி. இந்துக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காதா? பதில் - இந்துக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. ஆனால் ஒருசிலருக்கு பதவி கிடைக்கும். குறிப்பு - இந்துக்கட்சி ஆரம்பிப்பதால் இலங்கையில் தமிழ்பேசும் கிருத்தவ இஸ்லாமிய மக்களின் ஆதரவை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் இழக்க வேண்டி வரும்.

தமிழர் வாழ்வுரிமை மாநாடு வெற்றி பெறட்டும்!

•தமிழர் வாழ்வுரிமை மாநாடு வெற்றி பெறட்டும்! தமிழ்நாட்டில் வேலைகளில் தமிழருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோருகிறார்கள். இது நியாயமான கோரிக்கை. அவசியமான கோரிக்கை. இவர்களது இக் கோரிக்கை வெற்றிபெற வேண்டும். வேல்முருகன் அவர்களது தேர்தல் பாதையில் எமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவர் மாநாட்டு திடலுக்கு தோழர் தமிழரசன் பெயரை சூட்டியிருப்பதை நிச்சயம் பாராட்ட வேண்டும். காவல்துறை நெருக்கடிகளுக்கு அஞ்சாமல் தோழர் தமிழரசன் பெயரை தொடர்ந்து உச்சரித்து வரும் தலைவர்களில் இவரும் ஒருவர். அவர் உணர்வை பாராட்டுவதோடு அவர் மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

எது சாதனை ?

• எது சாதனை ? ஒரு சிறந்த இயக்குனர் ஒரு சிறந்த அரசியல் அறிவாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு சிறந்த உதாரணம் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அது அவரது உரிமை. ஆனால் தான் சந்தித்த சசிகலாவை சாதனை தமிழிச்சி என்று கூறுவதைத்தான் ஏற்க முடியவில்லை. சசிகலா தமிழராக இருக்கலாம். ஆனால் அவர் தமிழ் இன விடுதலைக்காக சிறை சென்று திரும்பவில்லை. மாறாக ஜெயா அம்மையாருடன் சேர்ந்து ஊழல் செய்தமைக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். ஆனால் நல்லவேளை பாரதிராஜா அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு சசிகலாவை சிங்கப்பெண் என்று குறிப்பிடவில்லை. அந்தளவில் ஆறுதல் கொள்ளலாம்.

இருவரும் பெண்கள். அதுமட்டுமல்ல இருவரும் மாணவிகள்.

இருவரும் பெண்கள். அதுமட்டுமல்ல இருவரும் மாணவிகள். ஒருவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சோபியா கோல். மற்றவர் இந்திய நாட்டைச் சேர்ந்த திஷா ரவி. ஜெர்மனி போரில் இருந்து ஒதுங்க வேண்டும் என்று வெள்ளை ரோஜா என்ற டூல்கிட் மூலம் மாணவி சோபியா கோரினார். 78 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (22.02.1943) சோபியா கைது செய்யப்பட்டார். தேசத்துரோக குற்றச்சாட்டில் அவர் தலை வெட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். இறப்பதற்கு முன்னர் சோபியா இறுதியாக பேசிய வரிகள் “எங்கள் நடவடிக்கை மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபடும்போது எமது மரணம் ஒரு பொருட்டல்ல” என்றார். இன்று மாணவி திஷா டூல்கிட் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக மோடி அரசினால் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது குற்றம் என்றால் அதற்காக நான் சந்தோசமாக சிறையில் இருப்பேன் என மாணவி திஷா ரவி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நல்லவேளையாக தில்லி நீதிமன்றம் “ விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது தேசத்துரோகம் இல்லை” எனக்கூறி திஷா ரவியை ஜாமீனில் விடுதலை செய்துள்ளது. மோடி அரசு பொய் வழக்கு போட்டது மட்டுமன்றி ஒரு பெண் கைது செய்யப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைக்கூட மாணவி திஷா ரவியைக் கைது செய்யும்போது கடைப்பிடிக்கவில்லை. சர்வாதிகாரி ஹிட்லர் தோற்கடிக்கப்ட்டதுபோன்று சர்வாதிகார மோடியும் நிச்சயம் இந்திய மக்களால் தோற்கடிக்கப்படுவார். ஆனானப்பட்ட இந்திரா காந்தியையே தோற்கடித்து திகார் சிறையில் களி தின்ன வைத்தவர்கள் இந்திய மக்கள். இந்த வரலாறு மோடிக்கும் பொருந்தும்.

1947 லேயே அனைத்து முஸ்லிம்களையும்

1947 லேயே அனைத்து முஸ்லிம்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார். நல்லது. அதேபோன்று கைபர் கணவாய் மூலம் வந்தவர்களையும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் கூறலாம் அல்லவா? அப்படி தமிழர்கள் கூறினால் அதை மத்திய அமைச்சர் ஏற்றுக்கொள்வாரா?

இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண்!

•இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண்! இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இதுவரை எந்தப் பெண்ணும் தூக்கில் இடப்பட்டதில்லை. இந்தக் காரணத்தை காட்டியே ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு மன்னிப்பு கிடைக்க அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி வழிவகுத்தார் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் இப்போது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷப்னம் அலி என்ற பெண் தூக்கில் இடப்படப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன இரண்டு எம்.ஏ படிப்பை படித்த ஷப்னம் அலி 6ம் வகுப்பு படித்த சலீம் என்ற இளைஞரைக் காதலித்தார். ஆனால் அவரது காதலை குடும்பத்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஷம்னம் அலி 14.04.2008 யன்று தனது காதலனுடன்; சேர்ந்து தன் குடும்பத்தவர்களுக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து அவர்களை வெட்டிக் கொன்றுள்ளார். இவ்வாறு அவர் தனது குடும்பத்தவர்கள் மொத்தம் ஏழுபேரைக் கொன்றுள்ளார். இதனால் அவருக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. உச்சநீதிமன்றமும் மரணதண்டனையை உறுதி செய்துள்ளது. ஜனாதிபதியும் அவரது கருணை மனுவை நிராகரித்துள்ளார். இதனால் அவர் எந்நேரமும் தூக்கில் இடப்பட்லாம் என்றும் அதற்குரிய ஆயத்தவேலைகளை செய்துவருவதாக சிறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷப்னம் அலி இதுவரை 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். அவருக்கு சிறையில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரின் பிள்ளைக்கு இப்போது 12வயதாகிவிட்டது. அவரும் தன் தாய்க்கு மன்னிப்பு அளிக்குமாறு கோரியதை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. மரண தண்டனை ஒருபோதும் தீர்வாகாது. எனவே இந்திய அரசு ஷப்னம் அலியை தூக்கில் இடுவதை நிறுத்த வேண்டும். அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும்.

வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ் ஆண்டு மலையகத்தை சேர்ந்த செல்வி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இழந்தது கால்களையே யொழிய

இழந்தது கால்களையே யொழிய தன்னம்பிக்கையை அல்ல. அதனால்தான் பல்கலைக்கழக உப வேந்தரையே முழந்தாழிட்டு பட்டமளிக்கச் செய்திருக்கிறது. வாழ்த்துகள்.

இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின்

இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் முதலில் தமிழ் தரப்பினர் ஒருமித்து செயற்பட முன்வரவேண்டும். •தனித் தனியாக லாபி செய்வதன் மூலம் எதையும் பெற முடியாது என்பதை உணர வேண்டும்.

குறளிவித்தை காட்டித்தான் குரங்கு கைதட்டு பெற முடியும்.

குறளிவித்தை காட்டித்தான் குரங்கு கைதட்டு பெற முடியும். ஆனால் சிங்கம் நடந்தாலே கைதட்டு கிடைக்கும். மக்களுக்கு உண்மையாக உழைக்கும் அரசியல்வாதி படுத்துக்கொண்டே ஜெயிக்கலாம். ஆனால் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள்தான் கடலில் குளித்துக் காட்ட வேண்டும். சிறுமியை கட்டிப்பிடித்து போட்டே;hவுக்கு போஸ் கொடுக்க வேண்டும் ஏழைகளுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் குறைந்தது ஒரு திருக்குறளாவது மேடையில் கூற வேண்டும். ராகுல்ஜி! நீங்கள் குளிக்கும் நீரில் ஒரு மிடறு குடித்து பாருங்கள். கரிக்கும். அதற்கு காரணம் உப்பு மட்டுமல்ல 600 க்கு மேற்பட்ட தமிழக மீனவன் சிந்திய ரத்தம்.