Thursday, April 29, 2021

ஏப்ரல் -1

• ஏப்ரல் -1 இது முட்டாள் தின செய்தி – ஆனால் முட்டாள் தனமான செய்தி அல்ல. ஏப்பிரல் -1 யன்று ஒரு பக்தன் பாப்பரசரிடம் “இயேசு மீண்டும் வந்து விட்டார் “ என்று கூறினான். அதற்கு பாப்பரசர் சிரித்து கொண்டே “ இன்று ஏப்ரல் -1 . என்னை முட்டாள் ஆக்க முடியாது” என்றாராம். ஆம். பாப்பரசருக்கு இயேசு மீண்டும் வரமாட்டார் என்பது நன்கு தெரியும். எனவே தான் அவர் முட்டாள் தினத்திற்காகக் கூட அதை நம்ப தயாராக இல்லை. எனினும் அவர் ஒவ்வொரு நாள் பூசையின் போதும் “இயேசு சீக்கிரம் வருகிறார்” என பக்தர்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறார். “இயேசு இறந்தாராம். அவர் மீண்டும் 3 நாளில் உயிர்த்தாராம். பின் மீண்டும் அவர் சீக்கிரம் வருவாராம்” என்று பாப்பரசர்கள் சொல்கிறார்கள். ஆனால் இரண்டாயிரம் வருடம் ஆகியும் இன்னும் அவர் வரவில்லை. ஒருவேளை சீக்கிரம் என்றால் அவர்கள் அகராதியில் இருபதினாயிரம் வருடமாக இருக்குமோ? இவர்கள் கூறும் இயேசு உண்மையா? அவர் திரும்பி வருவார் என்பது உண்மையா? என்பது ஒருபுறம் இருக்க அப்படி அவர் பிறந்து வந்தால் தயவு செய்து ஈழத்தமிழனாக பிறக்க வேண்டாம். அப்படி பிறந்தாலும் தப்பி தவறியும் தமிழ்நாட்டிற்கு அகதியாக வரவேண்டாம் . ஏனெனில் அவ்வாறு வந்தால் என்ன நடக்கும் என்பதை சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அகதி ஒருவர் எழுதிய கவிதை வரிகளை படியுங்கள். தெரிந்து கொள்ளலாம். ஓ இயேசுவே! நீ மீண்டும் பிறந்து வருவதானால் ஈழத்தமிழனாக மட்டும் பிறந்துவிடாதே! அப்படி பிறந்தாலும் அகதியாக தமிழ்நாட்டிற்கு வந்துவிடாதே ஏனெனில் இம்முறை சிலுவையை விடக் கொடிய சிறப்பு முகாமில் அடைக்கப்படுவாய்! நண்பர்களே! சிறப்பு முகாம் கொடுமையை விளக்க இதைவிட சிறப்பான என்ன வரி வேண்டும்? எனவே இதனை உணர்ந்து இந்த கொடிய சிறப்பு முகாமை மூடுவதற்கு குரல் கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் பாதை திருடர் பாதை!

• தேர்தல் பாதை திருடர் பாதை! தேர்தல் பாதை திருடர் பாதை என்றால் யாருக்கு கோபம் வருகிறதோ இல்லையோ இந்த (போலி)கம்யுனிஸ்ட்டுகளுக்கு பயங்கர கோபம் வந்துவிடும். உடனே ஓடி வந்து “ தோழர் லெனின் இந்த புத்தகத்தில் இத்தனையாம் பக்கத்தில் தேர்தலில் பங்கெடுக்க வேண்டும் சொல்லியிருக்கிறார்” என்பார்கள். ஆனால் பாருங்கள் இந்த கம்யுனிஸ்டுகளுக்கு வந்த நிலையை, கடந்த பாhராளுமன்ற தேர்தலின்போது, கேரளாவில் காங்கிரஸ் ராகுலை தோற்கடிப்போம் என்றார்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸ் ராகுலை பிரதமர் ஆக்குவோம் என்றார்கள். இப்போது சட்டமன்ற தேர்தலின்போது, பாஜக பாசிசம் வந்திடும் என்றுகூறி தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றார்கள். ஆனால் கேரளாவில் அதே காங்கிரஸ் பாஜகவுடன் இரகசிய கூட்டு என்று குற்றம் சுமத்துகிறார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க இவர்கள் பாஜக வுடன் இரகசிய கூட்டு என்கிறார்கள். இந்த பித்தலாட்டத்தை “திருடர் பாதை” என்று அழைக்காமல் வேறு எப்படி அழைக்க முடியும்?

ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் வைத்து கோத்தபாயா ராஜபக்சா கூறினார். 12000 புலிக் கைதிகளை விடுதலை செய்த எனக்கு 70 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாதா? என்னை நம்புங்கள். நாம் பதவிக்கு வந்ததும் சகலரையும் விடுதலை செய்வோம் என்றார் மகிந்த ராஜபக்சா தமிழ் அரசியல் கைதி ஒருவரின் குடும்பத்திற்கு என் சொந்த செலவில் வீடு கட்டிக் கொடுத்திருக்கிறேன். நாம் ஆட்சிக்கு வந்ததும் சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்ய நிச்சயம் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று நாமல் ராஜபக்சா கூறினார். கோத்தபாயா ஜனாதிபதியானதும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. காரணம் கேட்டபோது பாராளுமன்ற தேர்தல் முடிந்தபின் விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்கள். பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்பும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. மாறாக தமிழ் மக்களை கொன்ற சிங்கள ராணுவ வுPரர் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இப்போது இவர்களின் நீதி அமைச்சர் கூறுகிறார் தமிழ் அரசியல் கைதிகள் ஒருபோதும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று. மகிந்த ராஜபக்சா கும்பல் பதவிக்கு வர ஆதரவு அளித்த தமிழ் தரப்பினர் இதற்கு என்ன கூறப்போகிறார்கள்? இனியாவது சிங்கள அரசை இவர்கள் புரிந்து கொள்வார்களா?

ஆழ்ந்த இரங்கல்கள்!

ஆழ்ந்த இரங்கல்கள்! மன்னார் பேராயராக இருந்த ராயப்பு ஜோசப் அவர்கள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கோரினார். அப்போது கொழும்பு பேராயராக இருந்த மால்கம் பெர்ணாந்து அவர்கள் அதனைக் கண்டித்தார். இப்போது அதே கொழும்பு பேராயர் ஈஸ்டர் படுகொலைகளுக்;கு சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கோருகிறார். தமிழினப் படுகொலைக்கு இலங்கை அரசிடம் இருந்து நீதி கிடைக்காது என்ற ஆண்டகை ராயப்பு ஜோசப் அவர்களின் கருத்து சரியானது என்பதை காலம் நிரூபித்துள்ளது. அவரின் இழப்பு தமிழ் மக்களுக்கு உண்மையில் பேரிழப்பாகும்.

இது ஒரு அரசியல் விருது!

•இது ஒரு அரசியல் விருது! தமிழக தேர்தல் நடைபெறும் இந் நேரத்தில் நடிகர் ரஜனிக்கு “தாதா சாகேப் பால்கே” விருது வழங்கப்பட்டுள்ளது. இது அவரின் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவதற்கான அரசியல் நோக்கம் கொண்டது என்பதால் வன்மையான கண்டனங்கள்.

இன்று மியான்மர்

•இன்று மியான்மர் நாளை சிறீலங்கா ?? மியான்மரில் சிறுபான்மை இனமான ரோஹிங்கியாக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது பெரும்பான்மை இனத்தவர்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து அமைதி காத்தனர். ஆனால் இப்போது அந்த பெரும்பான்மை இனத்தவரையே ராணுவம் வேட்டையாடுகிறது. ஒரே நாளில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் சுட்டு வீதியோரங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று சிறீலங்காவிலும் தமிழ் மக்களை ராணுவம் படுகொலை செய்தபோது பெரும்பான்மை இனமான சிங்கள இனம் தமக்கு பிரச்சனை இல்லை என்று நினைத்தது. ஆனால் பர்மாவில் நடைபெற்றதுபோன்று சிறீலங்காவிலும் விரைவில் ராணுவத்தின் துப்பாக்கிகள் சிங்கள மக்களை நோக்கி திரும்பும். பாசிச அரசுகள் இப்படித்தான் செய்யும். குறிப்பு - 1971 மற்றும 1989 களில் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்;டார்கள்.

ஜேவிபி யின் ஏப்ரல் கிளர்ச்சி!

•ஜேவிபி யின் ஏப்ரல் கிளர்ச்சி! 1971ம் ஆண்டு ஜேவிபி அமைப்பு இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. பல கிராமங்களை சில மாதங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில் இந்தியாவின் இந்திரா காந்தி அரசு இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்தது. அப்போது இலங்கை இந்திய ராணுவத்தால் 6000 ற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியாவை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற அதே சிங்கள ராணுவம்தான் 1971ல் மன்னம்பெரி என்ற சிங்கள யுவதியை பாலியல் வல்லுறவு செய்து கொன்றது. கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமன்றி அவரை நிர்வாணப்படுத்தி ரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கொன்றனர். ஜேவிபி மீண்டும் 1989ல் ஆயுதப் போராட்டம் முன்னெடுத்தது. அப்போது இதே சிங்கள ராணுவம் அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களை கொன்றது. வேடிக்கை என்னவெனில் அப்போது இந்த படுகொலைகளுக்கு நீதிகோரி ஜ.நா சென்றவர் இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சாவே. அதே மகிந்த ராஜபக்சாவே பின்னர் முள்ளிவாயக்காலில் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்தார்.

தமிழக தலைவர்கள் கோமாளிகளா?

•தமிழக தலைவர்கள் கோமாளிகளா? தமிழக அரசியல் தலைவர்கள் “கோமாளிகள்” என்று சிங்கள ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத்பொன்சேகா கூறியிருந்தார். உண்மையில் தமிழக தலைவர்கள் கோமாளிகள் இல்லை. அவர்கள் அடிமைகள் அவர்களிடம் மத்திய அரசுக்கு எதிராக செயற்படும் எந்த அதிகாரமும் இல்லை. இந்த உண்மையை நன்கு உணர்ந்தமையினால்தான் எந்தவொரு சிங்கள தலைவர்களும் தமிழக தலைவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதும் இல்லை. தமிழக தலைவர்களுக்கு அஞ்சுவதும் இல்லை. தமிழகத்தில் ஒவ்வொருவர் தலை மீதும் மூன்று லட்சம் ரூபா கடன் உள்ளது. மதுரை ரயில் வேலை வாய்ப்பில் தமிழருக்கு இடம் இல்லை. முழுவதும் வட நாட்டவருக்கு வழங்கப்படுகிறது. செம்மொழி தமிழுக்கு நிதி இல்லை. ஆனால் செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இப்படியான தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து எந்தவொரு கட்சியும் தேர்தல் வாக்குறுதியில் பேசவில்லை. மாறாக அனைத்து தமிழக கட்சிகளும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக தேர்தல் வாக்குறுதிகள் வழங்கியுள்ளன. இருந்தும் இது குறித்து பிரதமர் மோடியும் அச்சப்படவில்லை. சிங்கள அரசும் அச்சப்படவில்லை. அதனால்தான் ஜ.நாவில் தமிழருக்கு துரோகம் இழைத்துவிட்டு மோடியால் தைரியமாக தமிழகம் வர முடிகிறது. எப்போது தமிழக கட்சிகள் தமது அடிமைத்தனத்திற்கு எதிராக போராட ஆரம்பிக்கின்றவோ அப்போதுதான் மோடி மட்டுமல்ல மகிந்த ராஜபக்சாவும் தமிழ் மக்கள் குறித்து அச்சம் கொள்வார்கள். சிங்களவர்கள் உலகில் வெறும் ஒன்றரைக் கோடி. ஆனால் தமிழ் மக்கள் எட்டுக் கோடி. இருந்தும் சிங்கள அரசால் எப்படி கொஞ்சம்கூட அச்சமின்றி தமிழ் மக்களை கொல்ல முடிகிறது? சிந்தியுங்கள் தமிழ் மக்களே.

1991ம் ஆண்டு சட்ட அமைச்சராக

1991ம் ஆண்டு சட்ட அமைச்சராக பதவியேற்ற கே.ஏ.கிருஸ்ணசுவாமி அவர்கள் மதுரை சிறைக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது அவர் சிறைக் கைதிகளை பார்வையிட்டுக்கொண்டு வரும்போது என்னை ஒரு ஈழப் போராளி என்று தெரிந்ததும் “ இனி உங்களுக்கு தமிழகத்தில் ஆதரவு கிடையாது. நெடுமாறனிடமும் கூறுங்கள்” என்றார். அதாவது ராஜீவ் காந்தி கொலைக்கு பின்னர் தமிழக மக்களின் ஆதரவு ஈழத் தமிழருக்கு இல்லை என்பதே அவர் கருத்தாக இருந்தது. அவர் கூறுவது தவறு என்று எனக்கு நன்கு தெரியும். ஆனால் அப்போதைய நிலையில் அவரை எதிர்த்து என்னால் கருத்து தெரிவிக்க முடியவில்லை. ஆனால் அவரது தலைவியான ஜெயா அம்மையாரே ஈழத் தமிழருக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு காலம் மாறியது. இன்று கிருஸ்ணசுவாமி உயிருடன் இல்லை. ஆனால் தமிழக கட்சிகள் யாவும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக தேர்தல் வாக்குறுதினள் அளித்துள்ளமையை என்னால் காண முடிகிறது. அதுவும் நேற்று கட்சி தொடங்கிய கமலஹாசனே “விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். ஈழ தேசம் அமைய வேண்டும்” என கூற வேண்டிய அளவிற்கு நிலமை உள்ளது. 2009ல் அமைச்சராக இருந்து முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு உதவிய ப.சிதம்பரம்கூட “ஜ.நாவில் மோடி தமிழருக்கு துரோகம் இழைத்து விட்டார்” என்று நீலிக் கண்ணீர் வடிக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறார். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? சீமான்தான் இந்த மாற்றத்தை நிகழ்த்தினார் என்று நான் கூற வரவில்லை. மாறாக ஈழத் தமிழருக்கு ஆதரவான தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தியதில் சீமானுக்கும் அவரது நாம் தமிழர் தம்பிகளுக்கும் பங்கு உண்டு அல்லவா. அதை மறுக்க முடியுமா?

இவர்கள் இன வெறியர்களாம்

இவர்கள் இன வெறியர்களாம் இவாகள்; தமிழ் ஆர்எஸ்எஸ் காரர்களாம் இவர்களை ஈழத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டுமாம் இவர்கள் மகிந்த ராஜபக்சாவின் தமிழினப் படுகொலைக்கு உதவவில்லை இவர்கள் தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சாவின் கைகளை குலுக்கி பரிசில்கள் பெற்றதில்லை ஆனாலும் இத்தனையும் செய்தவர்களை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள் “ஈழத் தமிழர்கள் இவர்களை புரிந்துகொள்ள வேண்டும்” என்று இவர்கள் இதுவரை வென்றதில்லை. இம்முறையும் இவர்கள் வெல்லப்போவதில்லை ஆனாலும் இவர்கள் மீது ஏன் இத்தனை எதிர்ப்பு? நாம் தமிழர் என்று உணர்வு பெறுவதாலா?

இன்று ஜேவிபி யின் 50 வது ஏப்பரல் நினைவு தினம்

இன்று ஜேவிபி யின் 50 வது ஏப்பரல் நினைவு தினம் ஆகும். 1971ம் ஆண்டு ஏப்பரல் மாதம் ஜேவிபி அமைப்பினர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அரசின் உதவியுடன் அவர்களது போராட்டம் நசுக்கப்பட்டது. அதில் சுமார் 6000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் 1989ம் ஆண்டு ஜேவிபி அமைப்பினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதன் தலைவர் ரோகண விஜேயவீரா உட்பட சுமார் 60000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இன்று ஜேவிபி அமைப்பு பலம் பொருந்திய பெரிய அமைப்பாக மீண்டும் வளர்ந்து இருக்கிறது. இதில் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டியது என்ன? முதலாவது, ஜேவியால் மீண்டும் எழ முடியுமாயின் தமிழ் மக்களால் ஏன் மீண்டும் எழ முடியாது? இரண்டாவது, ஜேவிபி இன்று தேர்தல் பாதையை பயன்படுத்தினாலும் அவர்கள் இதுவரை ஆயுதப் போராட்டம் தவறு என்றோ அல்லது அதை தாம் கைவிட்டதாகவோ அறிவிக்கவில்லை. மூன்றாவதாக, தமது தலைவர் ரோகண விஜயவீரா எப்படி இறந்தார் என்பது தெரியாத நிலையிலும் அவர் உயிருடன் இல்லை என்ற உண்மையை மக்களுக்கு உடன் தெரிவித்தார்கள். நான்காவதாக, தமது தலைவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற முழு உண்மைகளையும் கண்டறிந்தார்கள். அவற்றை ஆதாரங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள். ஜந்தாவதாக ஜேவிபி அமைப்பும் “பயங்கரவாதிகள்” என்று குறிப்பிட்டே இலங்கை அரசு கொன்றது. ஆனால் அவர்கள் அதற்காக பயந்து அடங்கி இருக்கவில்லை. மாறாக தமது கொல்லப்பட்ட மாவீரர்களுக்காக வருடம்தோறும் பகிரங்கமாக நினைவு அஞ்சலி செய்கிறார்கள். தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் சிங்கள மக்கள் மத்தியிலும் அரசுக்கு எதிராக போராடி இழப்புகளை சந்தித்து மீண்டும் எழுந்து நிற்கும் ஒரு அமைப்பு உள்ளது என்பதே.

கீழ்வேளுரில் யார் வெல்ல வேண்டும் என்பதைவிட

•கீழ்வேளுரில் யார் வெல்ல வேண்டும் என்பதைவிட வடிவேல் ராவணன் தோற்க வேண்டும் என்பதே முக்கியம். கீழ்வேளுர் (தனி) தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளராக வடிவேல் ராவணன் அவர்கள் போட்டியிடுகிறார். வடிவேல் ராவணன் ஏற்கனவே பலமுறை மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இம்முறையும் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும். கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கில் அப்புரூவராக மாறி காட்டிக் கொடுத்தவர் இந்த வடிவேல் ராவணன். 1994ம் ஆண்டு டாக்டர் ராமதாஸ் அவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அப்ரூவராக மாறிய வடிவேல் ராவணன் அவரது கட்சியில் சேர்க்கப்பட்டிருப்பதை நான் சுட்டிக் காட்டினேன்;. அதற்கு ராமதாஸ் அவர்கள் “ அவர் அப்ரூவராக மாறியது தவறுதான். ஆனால் வழக்கு விசாரணைக்கு வரும்போது அவர் வாக்குமூலத்தை மாற்றி கூறுவார்” என என்னிடம் உறுதியளித்தார். அதேபோன்று மதுரை சிறையில் என்னை சந்தித்த வடிவேல் ராவணணும் “ பொலிசாரின் ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்துவிட்டேன். வழக்கு விசாரணைக்கு வரும்போது நிச்சயம் யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டேன் “ என உறுதியளித்திருந்தார். ஆனால் 1997ல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது வடிவேல் ராவணன் அப்ரூவராக சாட்சியம் அளித்தார். அவர் பொலிசாருக்கு விசுவாசமாக நடந்து கொண்டார். அவர் காட்டிக் கொடுத்தமையினால் தோழர்கள் பொழிலன், முகிலன், இளங்கோ போன்றவர்களுக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இவ்வாறு அப்ரூவராக மாறி தமிழ் தேசிய உணர்வாளர்களை காட்டிக் கொடுத்த வடிவேல் ராவணனை தொடர்ந்தும் கட்சியில் வைத்திருப்பது மட்டுமன்றி அவருக்கு தேர்தலில் சீட்டும் வழங்கியுள்ளார் ராமதாஸ். எனவே வடிவேல் ராவணன் தோற்கடிக்கப்படுவது காட்டிக் கொடுப்பவர்களுக்கும் அவர்களுக்கு சீட் வழங்குபவர்களுக்கும் படிப்பினையாக இருக்க வேண்டும்

கண்ணீர் அஞ்சலிகள்!

•கண்ணீர் அஞ்சலிகள்! பெரியார் பெருந்தொண்டர் ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தனது 96வது வயதில் மாரடைப்பால் காலமானார். நான் சிறை மற்றும் சிறப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை தொடர்ந்து எட்டு வருடங்களாக தனது சிந்தனையாளன் இதழை இலவசமாக அனுப்பி உதவினார். அதுமட்டுமன்றி அவ் இதழில் சிறப்புமுகாமில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பிரசுரித்து அம்பலப்படுத்தியிருந்தார். நான் அவரை ஒருமுறை நேரில் சந்தித்தபோது தனக்கு “யாழ்ப்பாணம் தேசவழமைச்சட்டம்” நூல் வேண்டும் எனக் கேட்டிருந்தார். அது மிகவும் பழைய நூல் என்பதால் யாழ்ப்பாணத்தில் பிரதி எதுவும் அப்போது கிடைக்கவில்லை இந்நிலையில் கொழும்பு தேசிய சுவடிகள் கூட்டுத்தாபனத்தில் இருந்த பிரதியின் போட்டோ கொப்பி அவருக்கு கொடுத்தேன். அப் பிரதியைக் கண்டதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த நூலைப் பெறுவதற்கு தான் நீண்ட நாட்கள் முயற்சி செய்து வந்ததாக கூறினார். அவர் எந்தளவு தூரம் ஈழத் தமிழர்கள் குறித்து தேடல்களை செய்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று ஆகும். இறுதிவரை உறுதியான ஆதரவை ஈழத் தமிழர்களுக்கு வழங்கிய ஐயா ஆனைமுத்து அவர்களை இழந்துள்ளோம். ஈழத் தமிழர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலிகளும்.

யார் இந்த இந்திய பிரஜை?

•யார் இந்த இந்திய பிரஜை? இவரின் மரண மர்மம் வெளிவருமா? இலங்கையில் குளியாப்பிட்டி பிரதேசத்தில் புத்தர் சிலைகளை சேதப்படுத்தியமை தொடர்பாக கடந்த மாதம் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த அவ் இந்திய பிரஜை திடீரென மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ் இந்திய பிரஜையின் மரணம் குறித்து ஜே.வி.பி தலைவர் அனுரா திசநாயக்கா சந்தேகம் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி தலைவர் குறிப்பிட்டது போன்று இவ் மரணத்துடன் பல முக்கியமான தகவல்கள்களும் மறைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. இவ் விடயம் தொடர்பாக எழும் கேள்விகள், (1) கொல்லப்பட்ட இந்திய பிரஜை சாதாரண நபரா? அல்லது இந்திய உளவுப்படையைச் சேர்ந்தவரா? (2) உளவுப்படையைச் சேர்ந்தவராயின் இலங்கையில் தமிழ் சிஙகள மக்களிடையே ஒரு கலவரத்தை எற்படுத்த இந்திய உளவுப்படைகள் முயற்சிக்கின்றனவா? (3) மரணமடைந்த இந்திய பிரஜை விசாரணையில் வெளியிட்ட முக்கியமான தகவல்கள் என்ன? அவர் எதற்காக கொல்லப்பட வேண்டும்? (4) ஒரு இந்திய பிரஜை காவலில் மரணமடைந்துள்ளார். ஆனால் இந்திய அரசோ அல்லது இந்திய தூதரோ இது குறித்து எந்த அக்கறையும் கொள்ளாதது ஏன்? குறிப்பு - இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த மைத்திரி அவர்கள் இந்திய உளவுப்படை தன்னைக் கொல்ல சதி செய்வதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு இந்திய பிரஜை(மலையாளி) கைது செய்யப்பட்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறி இந்திய தூதரால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட இந்திய பிரஜை எதற்காக, எப்படி கொழும்பில் தங்கியிருந்தார்? அவருக்கு இலங்கை அரசு ஏன் விசா கொடுத்தது? என்பது குறித்து இதுவரை யாரும் பதில் அளிக்கவில்லை.

வன்மையான கண்டனங்கள்!

•வன்மையான கண்டனங்கள்! யாழ் மேயர் மணிவண்ணன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனக் குரல் எழுப்ப வேண்டும். தமிழ் மக்களை மிரட்டி எப்போதும் ஒரு அச்ச நிலையில் வைப்பதற்காகவே இக் கைது நடைபெற்றுள்ளது. எனவே இதற்கு எதிராக கட்சிபேதமின்றி அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். சிங்கள மக்கள் அரசுக்கு எதிராக போராட ஆரம்பித்துவிட்டார்கள். எனவே அவர்களின் கவனத்தை திருப்ப அரசு வேறுவழியின்றி இனவாதத்தை கையில் எடுத்துள்ளது. யாழ் மேயர் செய்தது தவறு என்றால் அவரிடம் ஆளுநர் கடிதமூலம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். மாறாக அவரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது தவறாகும். யாழ் மேயர் செய்தது போன்றே கொழும்பு மேயரும் செய்திருக்கிறார். ஆனால் கொழும்பு மேயர் கைது செய்யப்படாதது மட்டுமன்றி அது குறித்து ஒரு கேள்விகூட கேட்கப்படவில்லை. முதலில் புலத்தில் சட்டரீதியாக இயங்கிவரும் தமிழ் அமைப்புகளை எந்த விசாரணையும் இன்றி தடை செய்தார்கள். அடுத்து நாட்டில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் உட்பட பல அமைப்புகளை தடை செய்ய முடிவு செய்துள்ளார்கள். இப்போது யாழ் மேயரையே கைது செய்து அடைத்து மக்களை மிரட்ட முனைந்துள்ளார்கள்.. எனவே அனைவரும் ஒன்றுபட்டு அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதன் மூ

கொழும்பு மேயர்

கொழும்பு மேயர் என்ன செய்தாரோ அதையே யாழ் மேயரும் செய்திருக்கிறார். ஆனால் யாழ் மேயர் மட்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில் இருந்து என்ன தெரிகிறது? ஒரு மாநகரசபையில்கூட தமிழர் அதிகாரத்தை பயன்படுத்துவதை ராஜபக்சாக்களின் அரசு விரும்பவில்லை. இந்நிலையில் இந்த ராஜபக்சாக்களிடமிருந்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் கொண்ட மாகாணசபையை இந்தியா பெற்றுத் தரப் போகிறதாம். நம்பும்படியாகவா இருக்கிறது?

யாழ் மேயர் (பிணையில்) விடுதலை!

•யாழ் மேயர் (பிணையில்) விடுதலை! பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதை செய்து வாக்குமூலம் பெறப்படும். அப்புறம் அந்த வாக்குமூலத்தை வைத்து தண்டனை வழங்கப்படும். அத்தகைய கொடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ் மேயர் வழக்கத்திற்கு மாறாக பிணையில் உடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதிசயம். ஆனால் உண்மை. இது எப்படி நிகழ்ந்தது? சிலர் இது சுமந்திரனின் வாதத்திறமையால் நிகழ்ந்த விடுதலை என்று கூறலாம். இன்னும் சிலர் இது அமைச்சர் டக்ளஸ் அவர்கள் ஜனாதிபதியுடன் பேசியதால் நிகழ்ந்தது என்று கூறலாம். வேறு சிலர் இது ஒரு நாடகம் என்றுகூட கூற முனையலாம். ஆனால் இதெல்லாம் உண்மை இல்லை என்பது இவர்களுக்கே நன்கு தெரியும். கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் உடனடியாக மேயர் கைதைக் கண்டித்தார்கள். தமிழ்நாடு. கனடா நாடுகளில் உள்ள தலைவர்கள்கூட கண்டித்தார்கள். சுமந்திரனுடன் 25 வழக்கறிஞர்கள் மேயருக்காக நீதிமன்றில் ஆஜரானார்கள். வழக்கத்திற்கு மாறாக அமெரிக்க தூதுவர்கூட தனது டிவீட்டர் பதிவில் இக் கைதைக் கண்டித்தார். இதனால்தான் வேறு வழியின்றி மேயரை உடனடியாக பிணையில் விடுதலை செய்ய அரசு முன்வந்தது. இதற்கெல்லாம் உண்மையான காரணம் மக்களே. மக்களால்தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. ஜனாதிபதி அவர்களே! புலி வருகுது புலி வருகுது என்று பூச்சாண்டி காட்ட வேண்டாம். அப்புறம் உண்மையாகவே புலி வந்திடும்.

இன்று டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்

இன்று டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.(10.04.1898) என்றும் அவரை நினைவில் கொள்வோம்! இலங்கையில் டாக்டர் கோவூர் அவர்களின் பணி மிகவும் போற்றத்தக்கது. என்றும் நினைவில் கொள்ள வேண்டியது. டாக்டர் கோவூர் அவர்களை நான் 1975களில் நெல்லியடி மத்திய மாகாவித்தியாலய மைதானத்தில் நடந்த “மனோ இரவு” என்னும் நிகழ்வில் கண்டேன். மேடையில் நின்ற அவர் ஏதோ சில வார்த்தைகளை கூறினார். அப்போது கீழே நிகழ்வு பார்த்தக்கொண்டிருந்த சிலர் மயங்கினார்கள். அவர்களை மேடைக்கு அழைத்து மயக்க நிலையிலேயே அவர்கள் ஆடவும் பாடவும் செய்தார். பின்னர் அவர்களின் மயக்க நிலையை போக்கினார். இதன் மூலம் “கிப்னோடிச” முறையை அவர் எமக்கு அறிமுகப்படுத்தினார். அவரது இந்த செய்கை அவரைப் பற்றி அறியும் ஆர்வத்தை எனக்கு கொடுத்தது. அப்போது அவர் இந்தியாவில் சாய்பாபாவின் புட்டபர்த்திக்கே சென்று சவால் விட்டவர் என்று எனது தந்தையார் கூறியது எனக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. சாய்பாபாவின் புட்டபர்த்தி வாசலில் நின்று அங்கு வந்த பக்தர்களுக்கு பாபா போன்று விபூதி எடுத்துக் கொடுத்தாராம் கோவூர் அவர்கள். அப்பாவி பக்தர்கள் இவர் இன்னொரு பாபா என்று நினைத்து அவரை வழிபட்டார்களாம். அவர்களிடம் கோவூர் தான் செய்தது மந்திரம் அல்ல, வெறும் தந்திரமே என்றும் பாபாவும் இதையே செய்வதாகக் கூறினாராம். பக்தர்களுக்கு தனது மோசடிகள் தெரிந்துவிடுமோ என அஞ்சிய பாபா தனது செல்வாக்கு மூலம் பொலிசாரைக் கொண்டு கோவூரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினாராம். மந்திரத்தால் தாலி வரவழைக்கும் பாபா மந்திரத்தால் “கொண்டா” மோட்டார் சைக்கிள் வரவழைத்துக் காட்டுவாரா? என்பதே கோவூர் பாபாவுக்கு விட்ட சவால். அதை பாபா ஒருபோதும் நிறைவேற்றவில்லை. கோவூர் பற்றி மேலும் அறியும் எனது ஆர்வம் அவரது “மனக் கோலங்கள்”, “கோர இரவுகள்” என்னும் புத்தகங்களைப் படிக்க வைத்தன. இவை வீரகேசரி பிரசுரமாக அன்று வெளியிடப்பட்டவை. அதிக அளவில் விற்கப்பட்டவை. இதில் அவர் தான் சிகிச்சை அளித்த நோயாளிகளின் கதைகளைக் கூறியிருக்கிறார். பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நோயாளிகளை அவர் தனது கிப்னோடிச சிகிச்சை மூலம் சுகப்படுத்தியிருக்கிறார். இந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் அயராது பகுத்தறிவு பிரச்சாரம் செய்திருக்கிறார். இன்றும் இலங்கையில் மட்டுமல்ல எம்மவர்களுக்கு லண்டன், கனடாவிலும் பேய் பிசாசு பிடிக்கிறதாம். இங்கும் பில்லி சூனிய கூத்துகள் அரங்கேறுகின்றன. எனவே இதற்கு எதிராக ஆயிரம் கோவூர்களின் பணி அவசியமாகிறது.

மண்டேலா

மண்டேலா இது படம் அல்ல. பாடம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவுக்கு தேர்தல் கூத்துக்களை கிழித்து தொங்க விட்டிருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் இரண்டு வேட்பாளர்கள் ஒரு வோட்டைப் பெறுவதற்காக செய்யும் கூத்துகளை நகைச்சுவையாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் வேதனை என்னவெனில் படத்தில் நகைச்சுவையாக காட்டியதைவிட நிஜத்தில் நடக்கும் கூத்துகள் அதிக மோசமாக இருக்கிறது. தேர்தல் நேரத்தில் வந்திருப்பதால் நிஜத்துடன் ஒப்பிட்டு ரசிக்க முடிகிறது. படத்தில் சுப்பர் ஸ்டார்கள் இல்லை. பறந்து பறந்து சண்டை இல்லை. வெளிநாட்டில் டூயட் பாட்டு இல்லை. ஆனாலும் சலிப்பு இன்றி ரசித்து பார்க்க முடிகிறது. இவ்வாறான படங்களை பார்த்து ஆதரவளிப்பதன் மூலமே தொடர்ந்தும் இவ்வாறான படங்கள் வெளிவருவதற்கு உதவ முடியும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இத்தாலி கடற்படையை

இத்தாலி கடற்படையை நீதிமன்றில் நிறுத்த முடியுமாயின் இலங்கை கடற்படையை ஏன் நீதிமன்றில் நிறுத்த முடியாது? கேரளாவின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012 பிப்ரவரி 15-ம் தேதி விசைப்படகில் 11 இந்திய மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற 'என்ரிகா லாக்ஸி' என்ற இத்தாலிய சரக்கு கப்பலின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இத்தாலி கடற்படையை சேர்ந்த மசிமிலி யானோ லதோர், சல்வடோர் கிரானே ஆகியோர் இந்திய மீனவர்களை சுட்டனர். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஜீஸ் பிங்க், ஜெலஸ்டின் உயிரிழந்தனர். உடன் இருந்த 9 மீனவர்கள் காயமடைந்தனர். இந்த வழக்கில் இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு கடந்த 2013-ம் ஆண்டில் அவர்கள் இத்தாலி திரும்பினர். இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், "இந்திய மீனவர்களை இத்தாலி வீரர்கள் சுட்டுக் கொன்றது குற்றம். இதற்கான இழப்பீட்டை இத்தாலி அரசு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டது. இத்தாலி அரசு இதுவரை ரூ.2.17 கோடி வழங்கி உள்ளது. தற்போது இத்தாலி அரசு வழங்கும் மேலும் ரூ.10 கோடி இழப்பீட்டை பெற்று கொள்ள பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இப்போது எழும் கேள்வி என்னவெனில் இரண்டு மீனவர்களை கொன்றமைக்காக இத்தாலிய கடற்படையை நீதிமன்றத்தில் நிறுத்த முடியுமாயின் 825 தமிழக மீனவர்களை கொன்றமைக்காக இலங்கை கடற்படையை ஏன் நிறுத்த முடியாது? ஏனெனில் கேரளா கடலில் கொல்லப்பட்டவர்களை இந்திய மீனவர்களாக கருதும் இந்திய அரசு தமிழக கடலில் கொல்லப்படுபவர்களை இந்திய மீனவராக கருதாமல் தமிழக மீனவராகவே கருதுகிறது. இந்திய அரசு தமிழரை இந்தியராக கருதவில்லை எனில் தமிழர் மட்டும் தம்மை ஏன் இந்தியராக கருத வேண்டும்?

தோழர் மாறனை நினைவு கூருவோம்!

•தோழர் மாறனை நினைவு கூருவோம்! 11.04.2021 தோழர் மாறனின் 33 வது ஆண்டு நினைவு தினம் ஆகும். தோழர் மாறன் ஒரு பட்டதாரி. அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல வேலை பெற்று வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தமிழ் இன விடுதலைக்காக தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் படையில் செயற்பட்டார். இறுதியில் அவர் தமிழ் மக்களுக்காக 11.04.1988 யன்று மரணம் அடைந்தார். 1987ல் இலங்கை சென்ற இந்திய இரணுவம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தது. தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசமாக்கியது. இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களை அமைதிப் பணி என இந்திய தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்தது. தோழர் தமிழரசன் அமைத்த தமிழ்நாடு விடுதலைப்படையானது இந்திய அரசின் பொய்ப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்து முகமாகவும் இந்திய ராணுவத்தை வாபஸ் பெறக் கோரியும் கொடைக்கானல் டி.வி டவருக்கு வெடி குண்டு வைத்தது. அந்த சம்பவத்திலேதான் தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார். தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் மாறன் ஈழத் தமிழர்கள் மீது பேரன்பு கொண்டவர். ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இறுதியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குண்டு வைத்த போது வீர மரணம் அடைந்தார். இவ்வாறு தன் உயிரை ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்த தோழர் மாறன் நினைவுகள் ஈழப் போராட்ட வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும். தோழர் மாறன் அவர்களுடன் நான் பழகிய நாட்கள் குறைவு. இருப்பினும் அந்த இறுதி நாட்களில் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. அவருடைய தோழமையான உறவு என்றும் மனதில் இருப்பவை. அவை மறக்க முடியாதவை. தியாகி முத்துக்குமாரை அறிந்த அளவிற்கு தோழர் மாறனை ஈழத் தமிழர்கள் அறியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விடயமே. . இனிமேலாவது தோழர் மாறன் அவர்களின் அர்ப்பணிப்பை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். தோழர் மாறன் நினைவை போற்றுவோம். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது அஞ்சலிகளை செலுத்துகிறோம். I

இங்கிலாந்து வருத்தம் தெரிவிக்க முடியுமென்றால்

•இங்கிலாந்து வருத்தம் தெரிவிக்க முடியுமென்றால் இந்தியா ஏன் வருத்தம் தெரிவிக்க முடியாது? ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்காக இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். முழு இந்தியர்களும் குறிப்பாக சீக்கியர்கள் உறுதியாக இருந்தமையினால் வேறு வழியின்றி இங்கிலாந்து வருத்தம் தெரிவித்துள்ளது. இப்போது எம் மத்தியில் எழும் கேள்வி என்னவெனில் இதேபோல் ஈழத் தமிழர்களை இந்திய ராணுவம் படுகொலை செய்தமைக்காக இந்தியா வருத்தம் தெரிவிக்குமா என்பதே. இந்தியா தெரிவிக்குதோ இல்லையோ ஆனால் எம்மவர்களே சிலர் ஓடிவந்து “ராஜீவ் காந்தியைக் கொன்றதை மறந்து இந்தியா எப்படி வருத்தம் தெரிவிக்கும்?” என்று எழுதுவார்கள். இவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம். ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை செய்த ஆங்கிலேய அதிகாரியை; இங்கிலாந்துக்கே சென்று ஒரு சீக்கியர் படுகொலை செய்தார். அந்த சீக்கியருக்கு இங்கிலாந்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அந்த சீக்கியரின் அஸ்தியை இந்தியாவுக்கு எடுத்து வந்து அவரை “தியாகி” என்று கௌரவப்படுத்தினார். ஆங்கிலேய அதிகாரி கொல்லப்பட்டிருந்தும்கூட இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருந்தாலும் அதனைக் காரணம் காட்டாமல் இந்திய பிரதமரும் ஈழத் தமிழர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். எப்படி இந்திய மக்கள் உறுதியாக இருந்தது இங்கிலாந்து பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைத்ததோ அதேபோன்று தமிழ் மக்களும் உறுதியாக இருந்து இந்திய பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைக்க வேண்டும். தமிழ் மக்கள் உறுதியாக இருக்க வேண்டிய அதே நேரத்தில் செய்ய வேண்டிய இன்னொரு விடயம் ராஜீவ் காந்தியைக் கொன்ற தானுவின் அஸ்தியை எடுத்து வந்து அவரை “தியாகி” என்று கௌரவப்படுத்த வேண்டும். இந்திராகாந்தி எப்படி ஆங்கிலேய அதிகாரியைக் கொன்ற சீக்கியரை கௌரவப்படுத்தினாரோ அதே போன்று தமிழ் மக்களும் தானுவைக் கௌரவப்படுத்த வேண்டும் குறிப்பு - இப் பதிவு இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது. இன்றும் பொருத்தமாகவும் தேவையாகவும் இருப்பதால் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தம்பி ஐயன் கார்த்திகேயன்!

தம்பி ஐயன் கார்த்திகேயன்! சீமான் ஆமைக்கறிக் கதையை ஆனந்தி சசிதரனிடம் கேட்ட உங்களால் கனிமொழியுடன் பேசிவிட்டே தன் கணவர் ராணுவத்திடம் சரணடைந்தார் என்று அனந்தி கூறியது பற்றி ஏன் கேட்கத் தோன்றவில்லை? வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களின் படுகொலையில் திமுக வின் பங்கு பற்றிய குற்றச்சாட்டைவிட சீமான் பேசும் விடயங்கள்தான் முக்கியமாக உங்களுக்கு தோன்றுகிறதா? சரி. பரவாயில்லை. நீங்கள் உண்மையில் ஈழத் தமிழர் நலனில் அக்கறை உள்ளவர் என்றால் கலைஞர் கருணாநிதி 1990ல் ஆரம்பித்து வைத்த சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமை மூடுவாரா என ஸ்டாலினிடம் கேட்க முடியுமா? அல்லது, கலைஞர் தத்து எடுத்து வளர்த்த அகதிச் சிறுவன் மணி எங்கே என்பதையாவது ஸ்டாலினிடம் கேட்டு கூறுவீர்களா? இப்படிக்கு, உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் ஒரு அப்பாவி ஈழத் தமிழன்.

யார் இந்த தோழர் தமிழரசன்?

•யார் இந்த தோழர் தமிழரசன்? 14.04.1945 யன்று பிறந்த தோழர் தமிழரசன் 01.09.1987 யன்று தனது 42வது வயதில் தமிழக உளவுப்படையினரால் கொல்லப்பட்டார். அவர் உயிரோடு இருந்திருந்தால் 14.04.2021 யன்று தனது 76 பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். பொறியியல் படிப்பை படித்த தமிழரசன் விரும்பியிருந்தால் மற்றவர்கள் போல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரோ மக்களுக்கான போராட்ட வாழ்வை விரும்பி ஏற்றார். அதனாலேயே அவர் அடித்துக் கொல்லப்பட்டார். தன் உயிர் பிரியும் அந்த இறுதிக் கணத்தில்கூட அவர் மக்களை நேசித்தார். அதனாலேயே அவர் தன் கையில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தாமல் மௌனித்தார். அவர் விரும்பியிருந்தால் கையில் இருந்த கிரினைட் குண்டை வீசி தப்பிச் சென்றிருக்க முடியும். அவர் நினைத்திருந்தால் கையில் இருந்த சப் மிசின்கன் மூலம் பலரை சுட்டுக் கொன்றிருக்க முடியும். தன் இறுதிக்கணம்வரை மக்களை நேசித்த அத் தமிழரசனை, சதி செய்து கொன்றவர்கள் அவரை “பயங்கரவாதி” என்றார்கள். தோழர் தமிழரசனைக் கொன்றதன் மூலம் அவர் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையை நசுக்கிவிட முடியும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் 30 ஆண்டுக்குள் தமிழக மக்களே தோழர் தமிழரசனையும் அவர் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையையும் உணர்ந்து கொள்வார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கமாட்டார்கள். இன்று இந்திய அரசுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு தமிழக இளைஞனும் தன்னை தோழர் தமிழரசனாகவே நினைத்துக்கொள்கிறான். இன்று யாரும் தோழர் தமிழரசனை மறுத்து விட்டு தமிழ்த் தேசியம் பேசிவிட முடியாது. இதுதான் தோழர் தமிழரசனுக்கு கிடைத்த வெற்றியாகும். இன்று சிலர் தேர்தல் பாதை மூலம் தமிழ்த் தேசிய விடுதலை அடைய முடியும் என நம்புகிறார்கள். வெகுவிரைவில் இவர்களும் தோழர் தமிழரசன் முன்வைத்த ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதை மட்டுமே தமிழ்த்தேசிய விடுதலையை பெற்றுத் தரும் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

நான் திருமாவை ஆதரிக்க முடியாது

நான் திருமாவை ஆதரிக்க முடியாது ஆனால் திருமா முதலமைச்சராக ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். தாம் படித்தவர்கள் என்றும் திருமாவை ஆதரிப்பதாகவும் கூறி பதிவு போடுவோர் எத்தனை பேர் திருமா முதலமைச்சராவதை ஆதரிப்பார்கள்? ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். திருமா முதலமைச்சராவதை அன்புமணி ராமதாஸ் ஒருவேளை ஏற்றுக்கொண்டாலும் திமுக கலைஞர் குடும்பம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. திருமா முன்னர் கலைஞர் முதல்வராவதற்கு உழைத்தார். திருமா இப்போது ஸ்டாலின் முதல்வராவதற்கு உழைக்கிறார் திருமா அடுத்து உதயநிதி முதல்வராவதற்கு உழைக்க வேண்டும் அதற்கப்புறம் உயிரோடு இருந்தால் உதயநிதி மகன் இன்பநிதி முதல்வராவதற்கு உழைக்க வேண்டும். இந்த உண்மையை தம்மை படித்தவர்கள் என்று பதிவு போடுவோரால் மறுக்க முடியுமா?

இந்திய அரசு ஏன் தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது?

•இந்திய அரசு ஏன் தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது? தோழர் தமிழரசன் தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைய வேண்டும் என்று கூறியதால் இந்திய அரசு அஞ்சுகிறது என்கிறார்கள். அப்படியென்றால், வேறு பலர் தமிழ்த் தனிநாடு கேட்டிருக்கும்போது தமிழரசன் மீது மட்டும் ஏன் அஞ்சுகிறது? என்று கேட்டால் தமிழரசன் தனிநாடு கேட்டது மட்டுமன்றி அதை அடைய ஆயுதப் போராட்ட பாதையை தேர்ந்தெடுத்தமையே காரணம் என்று பதில் தருகிறார்கள். அப்படியென்றால,; பல கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறிவரும்போது ஏன் தமிழரசன் மீது மட்டும் அஞ்ச வேண்டும்? என்று கேட்டால், மற்ற கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறினாலும் அவர்கள் தேர்தல் பாதையில் பயணிக்கின்றனர். ஆனால் தமிழரசன் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தை நடைமுறையில் கொண்டிருந்தார். இதுவே தமிழரசன் மீது மத்திய மாநில அரசுகள் அஞ்சுவதற்கு காரணம் என்கிறார்கள். ஆம். உண்மைதான். அதனால்தான் இந்திய அரசு தனது உளவுப்படைகள் மூலம் சதி செய்து தோழர் தமிழரசனைக் கொன்றது. ஆனாலும் தமிழரசன் இறந்து 30 வருடங்களுக்கு பின்னரும் இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது. தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுப்பவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது. சிறையில் அடைத்தவர்களுக்கு 5 வருடங்களாகியும் ஜாமீன்கூட வழங்க மறுத்து வருகிறது. தோழர் தமிழரசன் போஸ்டர் ஒட்டினால் பொலிசை விட்டு கிழிக்கிறது. கூட்டம் போட அனுமதி கேட்டால் தர மறுக்கிறது. தோழர் தமிழரசன் பற்றி புத்தகம் எழுதினால் மிரட்டுகிறது. புத்தகத்தை வெளியிடுபவர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது. தமிழ்நாடு விடுதலைப்படைப் போராளி காலம்சென்ற தோழர் பசுபதி வீட்டுக்குச்;சென்று அவரின் வயதான தாயாரைக்கூட பொலிசார் மிரட்டியுள்ளனர். தோழர் தமிழரசனுக்கு சிலை வைக்க நிலம் வழங்கக்கூடாதென்று அந்த வயதான தாயாரிடம் மிரட்டி கையொப்பம் வாங்கியுள்ளனர். ஏன் இந்தளவு தூரத்திற்கு இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது? ஏனெனில் தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அவரிலிருந்து ஆயிரக் கணக்கான தமிழரசன்கள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே இந்திய அரசு அஞ்சுவதற்கு காரணமாகும்!

வவுனியா தாலிக்குளம் பகுதிய

வவுனியா தாலிக்குளம் பகுதியை சேர்ந்த சந்தணம் ராகவன் (வயது 65) என்பவர் உயிரிழந்துள்ளார். இவரது தனது காணாமல் ஆக்கப்பட்ட மகன் ராஜ்குமாரை இத்தனை நாளும் தேடி வந்தார். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்ட 87 பேர் இதுவரை இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இறப்பதற்கு முன்னராவது ஒரு பதிலைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழக ஊடகவியலாளர்களுக்கு ஏனோ தோன்றுதில்லை. அண்மையில் தமிழக ஊடகவியலாளர் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்ட தன் கணவனுக்காக குரல் கொடுத்து வரும் அனந்தியை தொடர்பு கொண்டு சீமான் ஆமைக்கறி சாப்பிட்ட கதை பற்றி அக்ககறையுடன் கேட்டார். அந்த ஊடகவியலாளரிடம் “அனந்தியின் கணவர் காணாமல் ஆக்கப்பட்டதில் கனிமொழி பங்கு என்ன என்பது பற்றியும் கேட்டிருக்கலாமே?” என்று கேட்டேன். உடனே சிலர் ஓடிவந்து நான் சீமான் ஆதரவாளர் என்று முத்திரை குத்துகின்றனர். இனப்படுகொலையில் திமுக வின் பங்கை விமர்சிப்பவர்கள் சீமானின் ஆதரவாளர்களாகத்தான் இருக்க வேண்டுமா? ஏன் ஒரு புரட்சியாளனாக இருக்கக்கூடாதா? என்ன கொடுமை இது? காணாமல் ஆக்கப்பட்ட தன் மகனைத் தேடி அலைந்த சந்தணம் ராகவன் அவர்களின் மறைவிற்கு அஞ்சலிப் பதிவு எழுதவே அச்சமாக இருக்கிறது. இதையும் சீமானுக்காகவே எழுதுவதாக முத்திரை குத்தப் போகிறார்களே என்பதே அந்த அச்சம்.

1983ல் நான் பெண்ணாடத்தில்

1983ல் நான் பெண்ணாடத்தில் தோழர் தமிழரசனுடன் சயிக்கிளில் சென்ற காலத்தில் இந்த தம்பி பிறந்திருப்பாரா என்று தெரியவில்லை. ஏன் இவரின் தலைவர்கூட அப்போது அரசியலுக்கு வரவில்லை. “அகதி நாயே” என்பது எனக்கு புதிது அல்ல. நான் எட்டு வருடமாக சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவேளை பல தடவை தமிழக பொலிசார் இவ்வாறு ஏசியிருக்கின்றனர். இந்த பதிவை தலைவர் திருமாவளவனுக்கு சமர்ப்பிக்கிறேன். அவர் தனது தொண்டர்களுக்கு “அகதி என்பது இழிவு இல்லை.. அகதிகளுக்கு விமர்சன உரிமை தகுதி எல்லாம் உண்டு” என்பதை புரிய வைக்க வேண்டும் என விரும்புகிறேன். குறிப்பு – சம்பந்தப்பட்ட நபரை கண்டித்த தமிழக உறவுகளுக்கு நன்றி.

“மாமனிதர்” தோழர் தமிழரசன் !

•“மாமனிதர்” தோழர் தமிழரசன் ! தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன். ஆனால் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன் என்றார் மாமேதை காரல் மாக்ஸ் அதேபோன்று, தனகென்று வாழாமல் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர் தனக்கென்று உழைக்காமல் தமிழ் மக்களுக்காக உழைத்தவர் இறுதியில் தமிழ் மக்களுக்காவே தன் உயிரை அர்ப்பணித்தவர் ஆம். அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன் மூன்று மீற்றர் கயிற்றில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்து பத்து மீற்றர் கயிற்றில் கட்டிவிட்டு போனான் ஒருவன். மாடு மா, மா என்று கத்தியது , தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று. தமிழக மாடுகளும் மன்னிக்கவும் மக்களும் தமக்கு கிடைத்த சட்டசபையை வைத்துக்கொண்டு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கற்பனையில் மிதக்கிறார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட வரித்தொகை ஒரு வருடத்தில் சுமார் 350 கோடி ரூபா. ஆனால் தற்போது கொள்ளைக்கார இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வசூலிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா. வெள்ளைக்காரன் 350 கோடி ரூபாவை வசூலித்தபோது தம்மை அடிமைகளாக உணர்ந்து விடுதலைக்கு போராடிய தமிழ் இனம் இப்போது 85000 கோடி ரூபா வசூலிக்கப்படும்போது தான் சுதந்திரமாக இருப்பதாக கருதுகிறது. ஆனால் தாங்கள் அடிமையாக இருப்பதால்தான் ஈழத் தமிழின அழிவை தடுக்க முடியவில்லை என்பதை மட்டுமல்ல, தமது காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியவில்லை என்பதையும் அவர்களால் உணர முடியவில்லை. எனவேதான் "ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்" என்று தோழர் தமிழரசன் கூறினார். தமிழக மக்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்று கூறியதாலேயே தோழர் தமிழரசன் தமிழக காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டார். தமிழக அரசின் இன்றைய கடன் 5.21லட்சம் கோடி ரூபா. ஒவ்வொரு தமிழன் தலையிலும் 3 லட்சம் ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சம்பளம் 50 ஆயிரம் ரூபா. மாதாந்த சம்பளம் 50 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்ட கலைஞர் கருணாநிதியின் குடும்ப சொத்தின் பெறுமதி 45 ஆயிரம் கோடி ரூபாக்கள். மாதாந்த சம்பளம் 1 ரூபா மட்டுமே பெற்றுவந்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாக்கள். இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் இந்த இருவரும் எப்படி கோடிக் கணக்கான ரூபா சொத்துக்கள் சேர்த்தார்கள்? ஏன் இவர்களின் வருமானத்திற்கு மேலான சொத்தை இதுவரை பறிமுதல் செய்ய முடியவில்லை? அப்படியாயின் இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? இந்திய அரசின் கைப் பொம்மைகளாக இவர்கள் செயற்படுவதற்கு சலுகையாகவே இவர்களது ஊழல் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது. 85000கோடி ரூபா வரியாக வசூலிக்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே. இந்திய மத்திய அரசு, நேபாளத்திற்கு 14000 கோடி ருபாவையும், பூட்டானுக்கு 8000 கோடி ரூபாவையும், இலங்கைக்கு 10000கோடி ரூபாவையும், மங்கோலியாவுக்கு 6000 கோடி ரூபாவையும் வழங்கியுள்ளது. ஆனால் 85000கோடி ரூபாவை வரியாக வழங்கும் தமிழ்நாட்டிற்கு மழை வந்தபோது வழங்கிய உதவி தொகை வெறும் 1940 கோடி ரூபா மட்டுமே. புயல் வந்தபோது வழங்கிய தொகை வெறும் 350 கோடி ருபா மட்டுமே. தமிழ்நாடு தனக்குரிய உதவியை பெற முடியாதது மட்டுமல்ல தன்னிடமிருந்து பெறப்படும் பணத்தை இலங்கைக்கு வழங்குவதைக்கூட தடுக்க முடியாத அடிமை நிலையில் உள்ளது. தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தில்தான்; தமிழக மீனவனைக் கொல்லும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இலங்கை கடற்படைக்கு யுத்த கப்பல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலைக்கும் உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக தமிழன் அடிமை நிலையில் இருப்பதையும், இந்திய அரசால் தமிழ்நாடு சுரண்டப்படுவதையும் உணர்ந்து சுட்டிக்காட்டியவர் தோழர் தமிழரசன் அவர் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என விரும்பினார். தமிழக தமிழன் தன் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே ஈழத் தமிழனின் விடுதலைக்கும் உதவ முடியும் என நம்பினார். இவ்வாறு அவர் சிந்தித்து, உணர்ந்து செயற்பட்டமையினாலே அவர் இந்திய அரசின் உளவுப்படைகளால் அடித்துக் கொல்லப்பட்டார் (மீள் பதிவு)

சபாஷ் உதயநிதி அவர்களே!

சபாஷ் உதயநிதி அவர்களே! உங்கள் உணர்வை பாராட்டுகிறேன். இதற்கு பதிலடியாக கலைஞர் ஆட்சியில் 2009ல் நடந்த முள்ளிவாய்க்காலில் படுகொலையை ஜெயா அம்மையார் ஆட்சியில் நடந்தது என்று ஏன் ஒரு படம் எடுத்து விடக்கூடாது? பரவாயில்லை. ஆண்டு வித்தியாசத்தை சுட்டிக்காட்டி உங்களால் இரண்டு நாளில் மாற்ற வைக்க முடிகிறது. ஆனால் எங்களால் எங்களைப் பற்றி எடுப்பனவற்றுக்கு எதிராக முணுமுணுக்கக்கூட முடியவில்லையே. மணி ரத்தினம் அவர்கள் ஒரு படத்தில் வன்னியில் உள்ள மாங்குளம் கிராமம் என்று உயர்ந்த மலைகளைக் காட்டினார். மாங்குளத்தில் எங்கேயடா மலைகள் இருக்கிறது என்று எங்களால்; கேட்க முடியவில்லை. அப்புறம் கமலஹாசன் ஒரு படத்தில் ஈழத் தமிழ் என்று ஒரு மொழி பேசி நடித்தார். சத்தியமாய் ஈழத் தமிழரான எங்களுக்கே அவர் பேசியது புரியவில்லை. இன்றும்கூட ஈழத் தமிழன் என்றால் பாஸ்போர்ட் மோசடி செய்பவன், கிரிமினல் பேர்வழி, சட்டவிரோதமாக செயற்படுவன் என்ற அர்த்தத்தில்தானே படங்களில் காட்டி வருகிறார்கள். ஈழத் தமிழனும் சக மனிதன்தான். அவனுக்கு ஒரு வீரம் செறிந்த போராட்ட வரலாறு சொந்தமாக இருக்கிறது என்பதை எப்போதூன் காட்டுவார்கள்? அடுத்தது உங்கள் ஆட்சி என்கிறார்கள். அப்படியென்றால் உங்கள் ஆட்சியில் முள்ளிவாயக்கால் படுகொலைகளை படமாக எடுக்க அனுமதி கிடைக்குமா?

முள்ளிவாய்க்கால் அவலம்!

•முள்ளிவாய்க்கால் அவலம்! பசியை போக்க உயிரை பணயம் வைத்து கஞ்சிக்காக வரிசையில் காத்திருந்த காலம் அது. கஞ்சிக்காக வரிசையில் காத்து நின்ற போது வெடித்து சிதறிய எறிகணையில் சிதறி வீழ்ந்தவர் போக மிஞ்சியவர் எஞ்சிய கஞ்சிக்காக மீண்டும் வரிசையில் நின்ற காலம் அது.

ஜனாதிபதி கோத்தபாயா ஹிட்லராக மாறுவார்

செய்தி - ஜனாதிபதி கோத்தபாயா ஹிட்லராக மாறுவார் - அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு அமைச்சர் அவர்களே ! உங்கள் ஜனாதிபதி ஹிட்லராக மாறினால் ஹிட்லருக்கு என்ன முடிவு ஏற்பட்டதோ அந்த முடிவை மக்கள் கோத்தாவுக்கு தருவார்கள். அதாவது ஹிட்லர் தன் காதலியுடன் நிலவறையில் தற்கொலை செய்துகொண்டதுபோல் உங்கள் ஜனாதிபதியும் தற்கொலை செய்ய வேண்டி வரும். பரவாயில்லையா?

இரயில் விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட

“இரயில் விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட போதும் உறவினர்கள் எல்லோரும் வெளிநாட்டிற்கு அழைத்தபோதும் பல்கலைக்கழக கல்வியை முடிக்கவேண்மென்ற ஆர்வத்தில் எங்களுடன் தொடர்ந்த விமலேஸ் அக்கா. ஒருநாள் வீதியில் வரும்போது அவரது கைப்பையில் இருந்த பணத்தை பறிப்பதற்காக இந்திய அமைதிப்படையால் வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டார். பின்னர் அவரது செயற்கை கால் கொக்குவில் பிரதேசத்தில் உள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது” தன்னை மிகவும் பாதித்த பதிவு என நண்பர் ஒருவர் இப் பதிவை எனக்கு அனுப்பி வைத்தார். ஆம். உண்மைதான். இப்படி ஆயிரக்கணக்கானவர்களின் மரணத்திற்கு இதுவரை எந்த விசாரணையும் இல்லை. எந்த நீதியும் வழங்கப்படவில்லை. சீக்கியர்களின் படுகொலைக்கு மன்னிப்பு கேட்ட இந்திய பிரதமர் ஏன் தமிழினப் படுகொலைக்கு இதுவரை வருத்தம்கூட தெரிவிக்கவில்லை என்று கேட்டால், இந்திய பிரதமர் பதில் சொல்லுகிறாரோ இல்லையோ ஆனால் அதற்குள் சம்பந்தர் ஐயா ஓடிவந்து “அப்படி கேட்கக்கூடாது;. கேட்டால் அப்புறம் இந்தியா தீர்வு பெற்றுத் தராமல் விட்டிடும்” என்கிறார். இதுகூட பரவாயில்லை. தமிழகத்தில் சில திமுக கூட்டணி ஆதரவாளர்கள் இதை இனி நினைவு கூராக்கூடாதாம். மறந்து விடும்படி மறைமுகமாக கூறுகின்றனர். ஏன் என்று கேட்டால், இல்லையென்றால் பாஜக பாசிசம் வந்திடும் என்று மிரட்டுகிறார்கள்.

வாழ்த்துக்கள்!

•வாழ்த்துக்கள்! குக் வித் கோமாளிகள் நிகழ்ச்சியில் முதற் பரிசு பெற்ற கனி அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை அவர் தமிழக உணவு வகைகளையே சமைத்தார். அதனால் அவர் “காரக் குழம்பு கனி அக்கா” என கேலி செய்யப்பட்டார். ஆனாலும் அவர் இறுதியில் தமிழக உணவுகளுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார். பாராட்டுகள். தனது வெற்றியானது தன்னைப்போல் வீட்டில் சமைத்துவிட்டு அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் அனைத்து பெண்களுக்குமானது என்று அவர் கூறியிருக்கிறார். பிக்பாஸ் போன்று அதிக செலவு இல்லை. கமலஹாசன் போன்று பிரபல தொகுப்பாளர் இல்லை. ஆனாலும் பிக்பாஸை விட அதிக புகழ் பெற்றுள்ளது இந்த நிகழ்ச்சி. ஒரு சமையல் நிகழ்ச்சி இந்தளவு பிரபலம் பெற முடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த நிகழ்வில் பங்குபற்றிய கோமாளி ஒருவருக்கு நிகழ்ச்சி முடிவதற்குள் ஏழு சினிமாபட வாய்ப்பு வந்துவிட்டது. போறபோக்கைப் பார்த்தால் அடுத்த குக் வித் கோமாளியில் கமலஹாசன் ஒரு சமையல்காரராக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜனாதிபதியால் தன் உயிருக்கு ஆபத்த

ஜனாதிபதியால் தன் உயிருக்கு ஆபத்து என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இப்படி ஒரு அவலம் இலங்கை வரலாற்றில் முன் எப்போதுமே நடந்ததில்லை. கடந்த ஆட்சியில் நீதி அமைச்சராக இருந்து ராஜபக்சா குடும்பத்தை சட்டத்தின் பிடியில் இருந்து யார் காப்பாற்றினாரோ அவருக்கே இப்போது கோத்தபாயா ராஜபக்சாவால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண தமிழ் மக்களின் நிலை என்ன என்பதை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில் கொழும்பில் துறைமுகம் நகர் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப் பிரதேசத்தில் இலங்கை சட்டம் எதுவும் செல்லுபடியாகாது. அந்தளவு அதிகாரம் கொண்ட பிரதேசம் சீனாவுக்கு வழங்கப்படுகிறது. என்ன கொடுமை இது?

ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஆழ்ந்த அனுதாபங்கள்! அவர் நகைச்சுவை நடிகர்தான். ஆனாலும் சமூகத்திற்கு தேவையான சீர்திருத்த கருத்துகளை நகைச்சுவையாக கூறினார். மூன்று மில்லியனுக்கு மேலான மரங்கள் நடுவதற்கு காரணமாக இருந்தார். அவர் மறைந்தாலும் அவர் நட்ட மரங்கள் மூலம் வாழ்வார்.

அன்னை பூபதியின் மரணம்!

அன்னை பூபதியின் மரணம்! நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? அன்னை பூபதி தனது 56 வயதில் 19.03.1988 யன்று உண்ணாவிரதம் ஆரம்பித்தார். சரியாக ஒரு மாதம் கழித்து 19.04.1988 யன்று அவர் மரணமடைந்தார். அன்னைபூபதி ஒரு சாதாரண தமிழ்பெண். அவர் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடினார். ஆனாலும் காந்தி தேசம் என்று கூறப்பட்ட இந்திய அரசு அவரின் போராட்டத்தை கொஞ்சம்கூட மதிக்கவில்லை. மாறாக அவரின் கணவர் மற்றும் பிள்ளைகளை கைது செய்து மிரட்டியது. இவ்வாறு அன்னை பூபதியைக் கொன்றவர்கள் இப்போது கொஞ்சம்கூட வெட்கம் இன்றி வடக்கு கிழக்கில் 20 காந்தி சிலைகளை நிறுவுகிறார்கள். ஆனால், அன்னை பூபதி தன் மரணத்தின் மூலம் எமக்கு இரண்டு பாடங்களை கற்பித்துள்ளார். முதலாவது, இந்திய அரசை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்பக்கூடாது. இரண்டாவது, அகிம்சை போராட்டம் தீர்வை பெற்று தராது என்பது. இந்த இரண்டு பாடங்களையும் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. எப்போதும் நினைவில் கொள்ளல் வேண்டும். இதுவே அன்னை பூபதிக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும். குறிப்பு - இன்று (19.04.2021) அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் ஆகும்

பூமியின் உருவாக்கத்திற்கு

• பூமியின் உருவாக்கத்திற்கு தேவையான பெருவெடிப்பிற்கு கடவுள் காரணமல்ல. பேராசிரியர்- ஸ்டீபன் கேவ்கிங். 2013 ல் அமெரிக்காவில் “கல்ரெக்” பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்; ஸ்டீபன் உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்க மாணவர்கள் 12 மணி நேரம் வரிசையில் காத்து இருந்தனர். மண்டபத்தில் இடம் போதாமல் வெளியில் நின்று கொண்டும் அவரது பேச்சை செவிமடுத்தனர். உலகில் பல மதங்களும், அவற்றின் கடவுள்களும் இருக்கின்றன. இவை பல இருந்தாலும் அவை எல்லாம் ஒருமித்த குரலில் கூறுவது “கடவுள் பூமியைப் படைத்தார்” என்பதே. ஆனால் ஸ்டீபன் அவர்கள் பெரு வெடிப்பின் மூலமே பூமி உருவானது என்றும் அந்த பெரு வெடிப்பிற்கு கடவுள் தேவையில்லை என்றும் விளக்கியுள்ளார். இது பற்றிய விபரம் அறிய விரும்புவோர் கீழ்வரும் லிங்கை பார்க்கவும். https://www.dailymail.co.uk/.../Stephen-Hawking-says-The... அறியாமையின் இருப்பிடமே கடவுள். அறிவு வளர வளர கடவுள் சுருங்கி வருகிறார். இன்று இல்லா விடினும் என்றாவது ஒரு நாள் அறிவின் வளர்ச்சியானது கடவுளை முற்றாக நீக்கிவிடும் என்பதை வரலாறு காட்டுகிறது. இலங்கை, இந்திய நாடுகளில் பாடசாலைகளைவிட கோயில்களின் எண்ணிக்கை அதிகம். பல்கலைக்கழகங்களைவிட கடவுள்களின் எண்ணிக்கை அதிகம். இதுவே மக்களின் அறியாமைக்கும் மதங்களினது ஆதிக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது. மக்கள் பகுத்தறிவு பெற வைப்பதே இந்த அறியாமையிலிருந்து விடுபட ஒரே வழியாகும்.

இவர் இதை இப்போது மட்டுமல்ல

இவர் இதை இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் கூறியிருக்கிறார். எப்போது கூறினாலும் இதை இவர் தமிழர் நலனுக்காக கூறியதில்லை. தன் மகனை எப்படியாவது முதலமைச்சராக்கிவிட வேண்டும் என்பதற்காகவே கூறி வருகிறார். எந்தவொரு அதிகாரமும் அற்ற மாநிலம் மூன்றாக பிரிந்தால் என்ன அல்லது முப்பதாக பிரிந்தால் என்ன , மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிந்தால் தமிழ் இனம் முன்னேற முடியும். ஆனால் தமிழ்நாடு பிரிவதை இந்த டாக்டர் ஐயா ஒருபோதும் கோர மாட்டார்.

கருணாகரன் அடிகளார் என்னும் கிளி சேர் !

•கருணாகரன் அடிகளார் என்னும் கிளி சேர் ! கருணாகரன் அடிகளார் ஒரு கிருத்தவ பாதிரியார் என்பதும் அவர் இறுதிக் காலங்களில் வன்னியில் மனிதவுரிமை பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்பதும் அனைவரும் அறிந்த விடயமே. இன்று அவருடைய நினைவு தினம் ஆகும். 20.04.2008 யன்று ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் இவர் கொல்லப்பட்டார் என்பதும்கூட யாவரும் அறிந்த விடயமே. இங்கு நான் அனைவரும் அறிந்த கருணாகரன் அடிகளார் பற்றி எழுதப் போவதில்லை. பலரும் அறிந்திராத அவரது இன்னொரு பக்கமான கிளி சேர் பற்றியே எழுதப் போகிறேன். கிளி சேர் எனது கரவெட்டி கிராமத்தை சேர்ந்தவர். எனது அண்ணாவுடன் படித்தவர். அண்ணாவின் நண்பர். அதனால் அவரை எனக்கு சிறுவயது முதல் தெரியும் . 1977 தேர்தலின்போது கிளி சேர் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரித்தார். அவர்களுக்காக மும்முரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவருக்கு பின்னர் பருத்தித்துறை இலங்கை வங்கியில் வேலை கிடைத்தது. அவர் ஊரில் லீலாரட்ணம் மாஸ்டரின் ரியூசன் சென்டரில் ஆசிரியராகவும் இருந்தார். அப்போது அவரிடம் ஆங்கிலம் பயின்றேன். அதனால்தான் நாம் அவரை “கிளி சேர்” என்று அழைத்தோம். உண்மையில் பழகுவதற்கு இனிமையானவர். வயது வித்தியாசம் பாராமல் எல்லோருடனும் பழகுவார். அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வார். நாம் கிரிக்கட் விளையாடும்போதெல்லாம் அவர்தான் எமக்கு அம்பயராக (நடுவராக) இருப்பார். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் அவர் தன் வங்கி வேலையையும் விட்டிட்டு கிருத்தவ பாதிரியாவதற்கு படிக்க சென்று விட்டார் என்ற செய்தி அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் அவருடைய தம்பி ஞானம் என்பவர் ஏற்கனவே அவர்களுடைய வீட்டில் இருந்து கிருத்தவ பாதிரியாவதற்கு சென்றிருந்தார். ஒரே வீட்டில் இன்னொருவர் அதுவும் கிளி சேர் சென்றது உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வேளையில் ஒருநாள் இராணுவம் யாழ் நகர வீதியில் சென்ற பலரை சுட்டுக் கொன்றது. அதில் கிளி சேரும் எதிர்பாராத விதமாக சுடப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களின் உடலை ராணுவம் தன் வண்டியில் எடுத்துச் சென்று முகாமில் எரிக்க திட்டம் போட்டிருந்தது. அவ்வாறு எடுத்துச் செல்லும்போது கிளி சேர் உடலில் உயிர் இருப்பதைக் கண்ட ராணுவ வீரன் ஒருவன் அவர் கழுத்தில் தொங்கிய சிலுவை மாலையை கண்டு ( ஒருவேளை அவ் ராணுவ வீரனும் கிருத்தவராக இருக்கக்கூடும்) அவரை இழுத்து வீதியில் எறிந்து விட்டு சென்று விட்டான். கழுத்தில் சூடுபட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த கிளி சேரை ஊர் மக்கள் எடுத்துச் சென்று யாழ் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது இதையறிந்த நான் மருத்துமனை சென்று அவரை பார்வையிட்டேன். தான் கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டதாக அவர் கூறினார். கழுத்தில் சூடு பட்டதால் அவரால் சரியாக பேச முடியவில்லை. மிகவும் கஸ்டப்பட்டே பேசினார். ஆனாலும் அவர் பேசினார். ஏனெனில் நான் அப்போது இயக்கத்தில் சேர்ந்து விட்டதை அவர் அறிந்திருந்தார். அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு “ உனக்கு இயக்கம் வேண்டாம். நீ போராட வேண்டாம். நீ படி. படிப்பை விட்டுவிடாதே” என்று கேட்டார். நான் அவர் மனது வேதனைப்படக்கூடாது என்பதால் “சரி பார்க்கலாம்” என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். ஆனால் இதுதான் எனக்கும் அவருக்குமான கடைசி சந்திப்பாக இருக்கப் போகிறது என்று நான் அப்போது நினைக்கவில்லை. அதன் பிறகு அவரை நான் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவர் வன்னியில் போராட்டத்திற்கு ஆதரவாக மனிதவுரிமை பணிகளில் ஈடுபடுவதாக அறிந்தேன். எனக்கு அவரது பணி ஆச்சரியம் தரவில்லை. எனெனில் அவரது சுபாவமே அதுதான். யாராவது அவர் கண் முன்னால் வேதனைப் பட்டால் அவரால் பொறுக்க முடியாது. அத்தகையவரை ராணுவம் கண்ணிவெடி வைத்து கொன்று விட்டதை அறிந்தபோது உண்மையிலே மிகவும் கவலை அடைந்தேன். எனக்கு அவரிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருந்தது. ஒருவேளை இறுதிக் காலங்களில் அவரை நான் சந்தித்திருந்தால் நான் போராட புறப்பட்டது பற்றி என்ன கூறியிருப்பார்? “சரிதான்” என்று ஒத்துக் கொண்டிருப்பார் என்றே நம்புகிறேன். ( மீள் பதிவு )

கிராய் பிள்ளையாரும் இலங்கை ராணுவமும்

கிராய் பிள்ளையாரும் இலங்கை ராணுவமும் கரவெட்டியில் சோனப்புவெளிக்கு அருகில் இருக்கும் கோவிலே “கிராய் பிள்ளையார் கோவில்” ஆகும். இது கரவெட்டியில் ஒரு பழமையான பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். அதன் வருடாந்த திருவிழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனக்கு சிறுவயது முதல் பிள்ளையாரைப் பிடிப்பதில்லை. ஏனெனில் எனது தாயார் கோயிலுக்கு என்னை அழைத்தச் செல்லும்போதெல்லாம் எனக்கு கடலை வாங்க பத்துச் சதம்தான் தருவார். ஆனால் பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்ய 25 சதம் கொடுப்பார். இதனால் கோபம் கொள்ளும் நான் “நான் உன் பிள்ளையா? அல்லது பிள்ளையார் உன் பிள்ளையா? என்று என் தாயாருடன் சண்டை பிடிப்பேன். அவர் சிரித்து விட்டு செல்வார். ஆனால் அந்த 25 சதத்தை ஒருபோதும் அவர் எனக்கு தந்ததில்லை. சரி இப்போது விடயத்திற்கு வருகிறேன். 1983 ம்ஆண்டு இறுதிப் பகுதியில் முதன் முதலாக இலங்கை ராணுவம் கரவெட்டியை சுற்றி வளைத்து தேடுதல் செய்தது. தேடுதல் என்றால் நள்ளிரவில் வந்து ஊரைச் சுற்றி வளைத்து நிற்பார்கள். விடிந்ததும் ஊருக்குள் வந்து ஒவ்வொரு வீடு வீடாக தேடி இளைஞர்களை பிடிப்பார்கள். கரவெட்டியில் அதிகாலையில் பெண்கள் நல்ல தண்ணி எடுக்க அத்துளு வயல் கிணற்றுக்கு செல்வார்கள். அப்படி சென்ற பெண்கள் ராணுவத்தை கண்டதும் ஓடி வந்து எங்களுக்கு சொன்னதால் நாம் எல்லாம் முடக்காடு தோட்ட வெளிக்கு தப்பி சென்று விட்டோம். மாலைநேரம் தேடுதல் முடித்த ராணுவம் மீண்டும் பலாலி ராணுவ முகாமுக்கு புறப்பட ஆயத்தமானது. அப்போது அவர்களின் இரு கவச வாகனம் எதிர்பாராத விதமாக சோனப்பு வெளியில் புதைந்து விட்டது. அவர்கள் எவ்வளவோ முயன்றும் கவச வாகனத்தை எடுக்க முடியவில்லை. எனவே வேறு வழியின்றி ஊரில் வந்து உதவி கேட்டார்கள். அப்போது ஊர்ப் பெரியர்கள் சிலர் “ நீங்கள் சப்பாத்து கால்களுடன் கோயிலுக்கள் சென்று விட்டீர்கள். அதனால்தான் பிள்ளையார் கோபத்தில் உங்கள் வாகனத்தை புதைத்து விட்டார்” என்று கூறியிருக்கிறார்கள். சிங்கள ராணுவ வீரர்கள் பெரும்பாலும் பௌத்த மதத்தினராக இருந்தாலும் அவர்களுக்கு இந்து கடவுகள்மீதும் நம்பிக்கை உண்டு. அதனால் பயத்தில் “என்ன செய்யலாம்?” என்று கேட்டார்கள். அதன்பின் ஊர்ப் பெரியவர்கள் கூறியபடி கைகால் கழுவி கோயில் வாசலில் பயபக்தியுடன் கற்பூரம் கொளுத்தி கும்பிட்டார்கள். பின்னர் ஊர்ப் பெரியவர்கள் கேட்டுக் கொண்டதால் நாம் இளைஞர்கள் எல்லோரும் சென்று கவச வாகனத்தை எடுப்பதற்கு ராணுவத்திற்கு உதவினோம். எங்களைக் கண்ட ராணுவத்தினர் ஆச்சரியத்துடன் “ நாங்கள் ஊருக்குள் வந்தபோது உங்களை யெல்லாம் காணவில்லையே? நீங்கள் எல்லாம் இந்த ஊர்க்காரர்கள்தானா? என்று கேட்டனர். நாங்களும் சிரித்துவிட்டு கவச வாகனத்தை மீட்டுக் கொடுத்தோம். அவர்கள் எமக்கு நன்றி சொல்லி விட்டு மீண்டும் கிராய் பிள்ளையாரை வணங்கிச் சென்றார்கள். அது சரி, உண்மையில் கிராய் பிள்ளையார் சக்தி உள்ளவரா? ஏனெனில் இந்திய ராணுவம் இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஒருநாள் பிள்ளையார் வெளி வீதி உலா வந்து கொண்டிருந்தபோது திடீரென இந்திய ராணுவம் ஊருக்குள் வந்துவிட்டது. சுவாமியைக் காவி வந்த பக்தர்கள் இந்திய ராணுவம் வந்துவிட்டது என்பதை அறிந்து பயத்தில் சுவாமியை அப்படியே வீதியில் வைத்துவிட்டு ஓடிவிட்டார்கள். கோயிலுக்குள் வந்த இந்திய ராணுவத்தினர் சாமி நடுவீதியில் இருப்பதைக் கண்டு பய பக்த்தியுடன் சுவாமியை காவிச் சென்று கோவிலினுள் வைத்துவிட்டு சென்று விட்டார்கள். இங்கு எழும் கேள்வி என்னவெனில் கடவுள் தம்மை இந்திய ராணுவத்திடம் இருந்து காப்பாற்றுவார் என அந்த பக்தர்களால் ஏன் நம்பி நிற்க முடியவில்லை? குறிப்பு – என்னதான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ஆபத்து என்று வரும்போது பக்தர்கள் நடைமுறையில் கடவுளை நம்பி சும்மா நிற்பதில்லை. ( மீள் பதிவு )

இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க

•இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க நாம் உரத்து குரல் எழுப்புவோம்! என்ன செய்தாலும் இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்பது உண்மைதான். குறைந்த பட்சம் அவர்களுக்கான நீதியையாவது நாம் பெற்றுக் கொடுக்க வேண்டும். குண்டுகள் வெடித்து இரண்டு வருடங்களாகிவிட்டன. ஆனால் அதில் கொல்லப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. யாருடைய தலைமையில் குண்டு வெடிப்புகள் நடந்தது என்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடி மருந்து எங்கிருந்து வந்தது என்று அறியப்படவில்லை. ஆக மொத்தத்தில் இந்த குண்டு வெடிப்பிற்கான காரணம் என்ன என்பதுகூட இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்பதே மிக வேதனையான விடயம் ஆகும். இது மத பின்புலம் கொண்ட குண்டு வெடிப்பு அல்ல. இது அரசியல் பின்புலம் அதுவும் சர்வதேச அரசியல் பின்புலம் கொண்ட குண்டு வெடிப்பு என்கிறார் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் டிபர்ணாந்து அவர்கள். அவர் இங்கு சர்வதேச அரசியல் பின்புலம் என்று கூறுவது இந்தியாவையே. அதாவது மோடி பதவிக்கு வருவதற்காக இந்திய புலனாய்வு அமைப்புகள் நடத்திய குண்டு வெடிப்பு என்பதே அவரது கருத்தாக இருக்கிறது. இந்த கருத்து கிருத்தவ பேராயருக்கு மட்டுமல்ல பல அரசியல்வாதிகளுக்கும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் நேரிடையாகவே இந்தியாவை குற்றம் சாட்டியிருந்தார். இவர்கள் கூறவது உண்மைதானோ என்று நம்ப வேண்டியிருக்கிறது. ஏனெனில் இது வெறும் மத நோக்கத்திற்காக செய்யப்பட்ட கண்டு வெடிப்பு எனில் இந் நேரம் விசாரணை மூலம் உண்மைகளை பொலிஸ் அதிகாரிகள் கொண்டு வந்திருப்பர். இது இந்தியா சம்பந்தப்பட்ட குண்டு வெடிப்பு என்பதால்தான் இன்னமும் உண்மைகள் வெளிவரவில்லை. இனியும்கூட இது குறித்த உண்மைகள் வெளிவருமா என்பது சந்தேகமே. இந்நிலையில் கொழும்பு ஆயர் இது குறித்து சர்வதேச விசாரணை கோரப்போவதாக அறிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்து மன்னார் ஆயர் ராயப்பு அவர்கள் சர்வதேச விசாரணை கோரியபோது அதனைக் கண்டித்தவர் இந்த கொழும்பு ஆயர். கொல்லப்பட்டவர்கள் கத்தோலிக்க கிருத்தவர்கள் மட்டுமல்ல அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். அதனால்தான் இன்னும் அவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை.

நிறவெறிக் கொலையாளி

நிறவெறிக் கொலையாளி குற்றவாளி என தீர்ப்பு. நீதிக்காக போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி இது. நாமும் தொடர்ந்து குரல் கொடுப்போம். இனப்படுகொலையாளிகள் குற்றவாளிகள் என்ற தீர்ப்பு கிட்டும்வரை.

மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்கள் பிறந்த தினம்!

•மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்கள் பிறந்த தினம்! மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்களின் பிறந்த தினம் ஆகும். (22.04.1870) நூலகங்களில் உறங்கி கிடந்த மாக்சியத்தை ருஸ்சியப் புரட்சி மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டியவர்; தோழர் லெனின் ருஸ்சிய பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமைதாங்கி ருஸ்சிய புரட்சியை வென்றெடுத்து உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தந்தவர் தோழர் லெனின் முதலாளி வர்க்க கொடுமைகளை ஒழிக்க பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப்பிடிக்க ஆயுதப் போராட்டத்தின் மூலமான புரட்சி அவசியம் என நிரூபித்தவர் தோழர் லெனின் தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று உலகப்புரட்சி பேசிய ரொக்ட்சியை தத்துவார்த்த ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் தோற்கடித்தவர் தோழர் லெனின் தன் வாழ்நாள் முழுவதும் திரிபுவாதிகளை அம்பலப்படுத்தியவர் தோழர் லெனின். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகப் பாட்டாளிவர்க்க ஜக்கியத்திற்கு வழி அமைத்தவர் தோழர் லெனின் தேசிய இனப்பிரச்சனைக்கு சுயநிர்ணய உரிமையை தீர்வாக முன்வைத்து சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவர் தோழர் லெனின் இறந்தும்கூட எதிரிகளுக்கு சிம்ம சொப்பனாக விளங்குகிறார் தோழர் லெனின். அதனால்தான் ருஸ்சிய அருங்காட்சியத்தில் இருக்கும் அவர் உடலை அழித்து புதைக்க வேண்டும் என்று எதிரிகள் கோருகிறார்கள். உலகம் உள்ளவரை தோழர் லெனின் பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமன்றி தேசிய இனங்களினாலும் நன்றியுடன் நினைவு கூரப்படுவார். மாபெரும் ஆசான் தோழர் லெனின் முன்வைத்த புரட்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

பாவம் மக்கள்!

•பாவம் மக்கள்! நேற்றைய தினம் மட்டும் இலங்கையில் 357 கொரோனோ நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். இதில் 70 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். கொழும்பில் மட்டும் அதிகபட்சமாக 63 பேர். கொரோனோவை சமாளிக்க முடியாமல் இலங்கை அரசு திண்டாடுகிறது. இந்நிலையில் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சாராய கடைகளை நள்ளிரவு 1.00 மணி திறந்து வைக்கும்படி கேட்டிருக்கிறார். சஜித் பிரேமதாசவின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே அவர்கள் "மதுபான சாலைகள் அதிகாலை 1.00 மணி வரையில் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கவும்..."என கேட்டிருக்கிறார். ஏற்கனவே மதுபானக்கடைகள் நள்ளிரவு 11.00 மணிவரை திறந்திருக்கின்றன. அது போதாதென்று இந்த அம்மையார் அதிகாலை 1.00 மணி வரை திறந்துவைக்கும்படி கேட்டிருக்கிறார். ஏற்கனவே கஞ்சா வளர்க்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரியவர் இப்போது சாராய கடைகளை அதிகாலை வரை திறந்து வைக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். மக்கள் நலனில் அக்கறை அற்று இவர்களால் எப்படி முட்டாள்தனமாக இப்படி பேச முடிகிறது என்று யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். ஏனெனில் 90 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சாராயக்கடைக்கான லைசென்ஸ் இருக்கிறது. இந்த அம்மையாரிடமும் எத்தனை லைசென்ஸ் இருக்கிறது என்று தெரியவில்லை. பிரிட்டிஸ் பிராஜாவுரிமையை மறைத்தது தொடர்பாக இவ் அம்மையார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இருந்து தப்புவதற்காக ஆளும் கட்சிக்கு ஆதரவாக மாறியுள்ளார் என தெரியவருகிறது. உண்மையில் மக்கள் பாவம்தான். இவர்களை எல்லாம் எம.பி களாக எப்படி தெரிவு செய்கிறார்கள்?

இந்தியா ஈழத்; தமிழர்களுக்கு நண்பன் இல்லை

“இந்தியா ஈழத்; தமிழர்களுக்கு நண்பன் இல்லை என்று சொன்னவர் தோழர் தமிழரசன்” “இந்தியா என்பது பல தேசிய இனங்களின் சிறை கூடம் என்று சொன்னவர் தோழர் தமிழரசன்” “தமிழ் நாட்டு இளைஞர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற வேண்டும்; என்று சொன்னவர் தோழர் தமிழரசன். “இந்தியா அரசே ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி என்று மருதை ஆற்றில் குண்டு வைத்தவர் தோழர் தமிழரசன்” “தோழர் தமிழரசன் தோற்றுவித்த தமிழ்நாடு விடுதலைப் படை வலிமை பெற்று இருந்தால் ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்கி இருக்க முடியுமா?” இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியிருக்கிறார். தேர்தல் பாதையில் பயணிப்பவர்தான் சீமான். ஆனாலும் அவர் தோழர் தமிழரசன் பெயரை தைரியமாக உச்சரித்திருக்கிறார். இதேபோன்று ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் போன்றவர்களால் ஏன் தோழர் தமிழரசன் பெயரை உச்சரிக்க முடியவில்லை? குறிப்பு - சீமான் அவர்களின் வீடியோ கீழே பின்னூட்டத்தில் உள்ளது.

என்னது? சுபவீ அவர்கள் தமிழ்நாட்டின் விடுதலைப் புலியா?

என்னது? சுபவீ அவர்கள் தமிழ்நாட்டின் விடுதலைப் புலியா? வன்னியரசு அவர்களே! நீங்கள் காமடி கீமடி எதுவும் பண்ணல்லயே? வேண்டுமானால் சுபவீ அவர்களை தமிழ்நாட்டின் இன்றைய பெரியார் என்று கூறுங்கள் அல்லது வேண்டுமானால் தமிழ்நாட்டு அம்பேத்கார் என்றுகூட கூறிக் கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து தமிழ்நாட்டின் விடுதலைப்புலி என்று கூறி விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தாதீர்கள். விடுதலைப்புலிகளைப் பார்த்து விடுதலைக் குயில்கள் என்னும் அமைப்பை சுபவீ அவர்கள் ஆரம்பித்தது உண்மைதான். அவரை நம்பி சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவருடன் செயற்பட்டார்கள் என்பதும் உண்மைதான். அவ் இளைஞர்கள் அமைப்பிற்காக கொள்ளையிட முயன்றபோது பொலிசில் பிடிபட்டுவிட்டார்கள். ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண கொள்ளை என நினைத்த பொலிஸ் விசாரணையில் இது விடுதலைக்குயில் அமைப்பிற்காக நடத்தப்பட்ட கொள்ளை என்பதை அறிந்தார்கள். இதனால் விடுதலைக்குயில்கள் அமைப்பின் தலைவர் சுபவீயை பொலிஸ் கைது செய்ய முயன்றது. அப்போது கலைஞர் கருணாநிதியின் கால்களில் விழுந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார் சுபவீ அவர்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வயதான தாயார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது ஈவு இரக்கமின்றி திருப்பி அனுப்பிய கலைஞர் கருணாநிதியை நியாயப்படுத்தியவர் இந்த சுபவீ அவர்கள் அத்தகைய சுபவீ அவர்களை தமிழ்நாட்டின் விடுதலைப்புலி என எவ்வாறு அழைக்க முடியும்?

பொலிஸ் - என்னய்யா பிரச்சனை உங்களுக்கு?

பொலிஸ் - என்னய்யா பிரச்சனை உங்களுக்கு? மக்கள் - ஐயா! இங்கிருந்த தரமுயர்த்தப்பட்ட கல்முனை பிரதேச செயலகத்தை காணவில்லை. பொலிஸ் - என்னது பிரதேச செயலகத்தை காணவில்லையா? மக்கள் - ஆமாய்யா. நாங்கள் சொல்வது பொய் என்றால் தரமுயர்த்தப்பட்ட பிரதேச சபைக்கு கணக்காய்வாளரை நியமித்த சுமந்திரனிடம் கேட்டுப் பாருங்கள். பொலிஸ் - சரி இப்ப அந்த கணக்காய்வாளர் எங்கே? மக்கள் - அவரையும் காணவில்லை ஐயா. பொலிஸ் - என்னது கணக்காய்வாளரையும் காணவில்லையா? என்ன விளையாடிறீங்களா? மக்கள் - ஐயா ! நாங்கள் சொல்வது பொய் என்றால் வியாளேந்திரன் சேரிடம் கேட்டுப்பாருங்கள். பொலிஸ் - அவரிடம் என்னத்தைக் கேட்பது? மக்கள் - கோத்தபாயா பதவி ஏற்றதும் மூன்று நாளில் கல்முனை பிரதேசசபை தர முயர்த்தப்படும் என்று சேர் எங்களுக்கு கூறியிருக்கிறார். இப்ப கோத்தபாயா பதவி ஏற்று ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. அப்ப பிரதேச சபை வந்திருக்கும்தானே ஐயா? பொலிஸ் - ?????

தோழர் லெனினும் பிரதமர் மோடியும்

•தோழர் லெனினும் பிரதமர் மோடியும் ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனினை சந்திப்பதற்கு அமெரிக்க பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றிருந்தார். பிரதமர் அலுவலகத்தில் காத்திருந்த ரைஸ் வில்லியமுக்கு அவருக்கான சந்திப்பு நேரம் வந்திருந்தபோதும் கதவு திறக்கப்படவில்லை. இது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நேரம் தவறாமையில் மிகவும் கறாராக இருப்பவர் தோழர் லெனின். சரி, யாரோ மிக மிக முக்கிய பிரமுகர் லெனினுடம் விவாதித்து கொண்டிருக்கிறார் என்று அந்த அமெரிக்க பத்திரிகையாளர் நினைத்தார். அரைமணி, ஒரு மணி, ஒன்றரை மணி ஆயிற்று. கதவு திறக்கவில்லை. லெனினுடன் இவ்வளவு நீண்ட பேட்டிக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் முழு அதிகாரம் பெற்ற அந்த தூதர் யாரோ? என்பதே அப் பத்திரிகையாளரின் கேள்வியாக இருந்தது. கடைசியில் கதவு திறந்தது. அவரது அறையில் இருந்து வெளியே வந்தவரைப் பார்த்ததும் அனைவரும் அசந்து போய்விட்டார்கள். ஏனெனில் வெளியே வந்தவர் பரட்டைத் தலையும் அழுக்கு உடையும் கொண்ட ஒரு ஏழை விவசாயி. லெனினுடைய அறைக்குள் பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றார். அவரிடம் லெனின் சொன்னார், " உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஏழை விவசாயி தம்போவ் பகுதியை சேர்ந்தவர். மின்சாரமயமாக்கல், கூட்டு பண்ணை அமைப்பு, புதிய பொருளாதாரக் கொள்கை ஆகியவை பற்றி அவருடைய கருத்துகளை கேட்டேன். உரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. இதனால் நேரத்தை மறந்துவிட்டேன்." என்று சொன்னார் இவர்தான் ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனின். அதேவேளை இந்திய பிரதமராக இருக்கும் மோடியையும் நினைத்து பார்க்கிறேன். கடந்த நான்கு மாதமாக டில்லியில் விவசாயிகள் போராடுகிறார்கள். அதில் என்பதுக்கு மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். ஆனாலும் பிரதமர் மோடியின் மனம் இரங்கவில்லை. இதுவரை விவசாயிகளை சந்திப்பதற்குகூட அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை. நடிகைகளுக்கு நேரம் ஒதுக்கி சந்திக்க முடிந்த மோடியால் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லை என்பது கொடுமைதான். முதலாளிகளுக்காக அயராது பாடுபடும் பிரதமர் மோடி விவசாயிகளுக்காக பாடுபடுவார் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்தான். ஆனாலும் லெனின் காட்டிய வழி விவசாயிகளுக்கு இருக்கிறது. அவர்கள் அதில் பயணம் செய்து மோடிகளை தூக்கி எறிவார்கள். இது நிச்சயம்.

இன்று உலக புத்தக தினம் (23.04.2021)

•இன்று உலக புத்தக தினம் (23.04.2021) “புரட்சியில் துப்பாக்கிகளைவிடப் பெரிய ஆயுதம் புத்தகங்களே” என்று ரஸ்சிய புரட்சியை மேற்கொண்ட தோழர் லெனின் கூறினார். உண்மைதான். வாசிப்பதன் மூலமே ஒரு மனிதன் பூரணத்துவம் பெறுகின்றான். எனவே அதற்கு புத்தகங்கள் மிகவும் அவசியமாகின்றன. எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் என்றார் தோழர் சே குவாரா அதுவும் உண்மைதான் என்பதை ஈழத்தில் கண்டோம். முதலில் யாழ்ப்பாணம் நூலகம் இலங்கை அரசால் எரிக்கப்பட்டது. பின்னர் தமிழர்கள் எரிக்கப்பட்டார்கள். எமது தமிழ் சமூகத்தில் புத்தகங்களுக்கும் வாசிப்பிற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் புத்தகதினம் வரும்போது இந்த புத்தக வாசிப்பிற்காக நாம் சிறப்புமுகாமில்; நடத்திய போராட்டங்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களுக்கு பத்திரிகை வழங்கப்படுகிறது. றேடியோ கேட்க அனுமதிக்கப்படுகிறது. ரிவி பார்க்க அனுமதிக்கப் படுகிறது. புத்தகம் படிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் துறையூரில் இருந்த சிறப்புமுகாமில் இவை எதுவுமே எமக்கு அனுமதிக்கப்படவில்லை. அன்றைய தமிழக அரசு சிறப்புமுகாமில் இவற்றை தராதது மட்டுமன்றி எமது சொந்த செலவில் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளிக்க மறுத்தது . நாம் வேறு வழியின்றி எமக்கு சாப்பாடு பார்சல் கட்டி வரும் பேப்பர்களை படித்தோம். இதனை அறிந்த கியூபிராஞ் அதிகாரிகள் உடனே எமக்கு புரியாத மலையாள பத்திரிகைகளில் சாப்பாடு கட்டி தர ஏற்பாடு செய்தார்கள். இதனால் வேறு வழியின்றி பத்திரிகை படிக்க அனுமதிக்குமாறு கோரி 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அதன் பின்னரே அனுமதி தரப்பட்டது. எமது சொந்த செலவில் புத்தகம் படிப்பதற்கே 14 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தமையை இன்றும் நினைத்து பார்க்கிறேன். ஆனாலும் புத்தகம் படிக்கும் ஆர்வம் மட்டும் இன்னும் குறையவே இல்லை. எமது இளைஞர்கள் மத்தியில் இந்த புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறதோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது. நூல்கள் வெளிவருவது குறைந்து வருகிறது. வெளிவரும் நூல்களும் மிகக் குறைந்தளவே அச்சிடப்படுகின்றது. நூல் வெளியீட்டு விழாக்களிலும்கூட சுமார் இருபது முப்பது பேர்களே கலந்து கொள்கின்றனர். அதுகூட வடையும் தேநீரும் வழங்கியே அழைக்க வேண்டியிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி புத்தகங்களின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது போல் தோன்றுகிறது. எதுவானாலும் வாசிக்கும் பழக்கத்தை நாம் எம் மக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் வாசிப்பதன் மூலமே மனிதன் பூரணத்துவம் அடைகிறான்.

மாணவர்கள் நிகழ்த்திய அற்புதம்!

•மாணவர்கள் நிகழ்த்திய அற்புதம்! உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் நிமிர்ந்து நிற்கிறது முள்ளிவாய்க்கால் நினைவு தூபி. இதற்காக போராடிய மாணவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக நின்ற மக்களையும் வரலாறு நிச்சயம் குறித்து வைத்துக் கொள்ளும்.

ரிசாத் அவர்களை கைது செய்த

ரிசாத் அவர்களை கைது செய்த முறைதான் தவறேயொழிய அவர் கைது செய்யப்பட்டது தவறு அல்ல. நள்ளிரவில் வீட்டை உடைத்து கைது செய்வது அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இப்படி கைது செய்திருப்பது தவறு ஆகும். சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்தவும் சிங்கள மக்களை ஏமாற்றவும் செய்யப்பட்ட நாடகமாகவே இக் கைது இருக்கிறது. பக்கத்துவீடு தீப்பற்றி எரியும்போது எந்த ஒரு மனிதனும் தீயை அணைக்கவே முயல்வான். ஆனால் தமிழர்கள் எரிக்கப்பட்டபோது எரித்தவர்களுக்கு கொள்ளிக்கட்டை கொடுத்து உதவிய பக்கத்து வீட்டக்காரர் இந்த ரிசாத். இப்போது அதே கொள்ளிக்கட்டை தன்னை எரிக்க முயலும்போது தான் அப்பாவி என்றும் தன்னை காப்பாற்றும்படியும் ஓங்கி குரல் எழுப்புகிறார். டூ லேட் ரிசாத் அவர்களே. சிறை அனுபவம் தமிழ் மக்களின் வலியை உங்களுக்கு உணர வைக்கும் என நம்புகிறோம்.

கண் முன்னே உறவுகள்

கண் முன்னே உறவுகள் செத்து மடியும்போது ஏதும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிற நிலை இதைவிடக் கொடிய நிலை உலகில் வேறு ஏது? மருத்துவமனையில் இடம் இல்லை. இடம் கிடைத்தால் ஒச்சிசன் சிலிண்டர் இல்லை. இறந்தால் எரிப்பதற்கு மயானத்தில்கூட இடம் இல்லை. உலகமே இந்தியாவை பார்த்து இரங்குகிறது. ஆனால் கதிரையில் ஏறி உட்கார்ந்த கழுதை மட்டும் இரங்கவும் மறுக்கிறது. இறங்கவும் மறுக்கிறது.

பட்டேல் சிலை -3000 கோடி

பட்டேல் சிலை -3000 கோடி மோடி ஸ்டேடியம் -800 கோடி ராமர் கோவில் -5000 கோடி பாராளுமன்ற கட்டிடம் -971 கோடி உபி பசு பாதுகாப்பு -600 கோடி மத்தியரசு பசு பாதுகாப்பு -750 கோடி கோமியம்,சாணி ஆராய்ச்சி -500 கோடி சமஸ்கிருதத்துக்கு -643 கோடி இதையெல்லாம் செய்தவர்களுக்கு ஆக்சிசன் வசதி செய்து தர வக்கில்லை கொரோனோ வந்தபோது கைதட்டுங்கள், விளக்கு பிடியுங்கள் என்ற பிரதமர் ஆக்சிசன் இல்லை என்றதும் மூச்சு பயிற்சி செய்யுங்கள் என்கிறார். நல்லவேளை ஆக்சிசன் தட்டுப்பாட்டிற்கு நேருவின் ஆட்சியே காரணம் என்று கூறவில்லை. காஸ்மீர் மாநிலத்தில் 3900 மக்களுக்கு ஒரு டாக்டர் 71000 மக்களுக்கு ஒரு வெண்டிலேட்டர் ஆனால் 9 மக்களுக்கு ஒரு இந்திய ராணுவம் உள்ளது. ஒரு மாநிலத்தில் சிறை இருக்கும் ஆனால் ஒரு மாநிலமே சிறையாக இருப்பது இந்தியாவில் மட்டுமே. நம்புங்கள் இந்தியா ஓரே நாடு ஓரே தேசம். ஜெய் ஹிந்த்!!

இலங்கை அரசு சுதந்திரதினம் கொண்டாடுகிறத

இலங்கை அரசு சுதந்திரதினம் கொண்டாடுகிறது. ஆனால் தமிழ் மக்கள் தமது இறந்தவர்களை நினைவு கூர்வதை கொரோனோவை காரணம் காட்டி தடுக்கிறது. இப்போதும் கொரோனோவை காரணம் காட்டி மே தின கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் தடையை மீறி தாம் மேதினத்தை கொண்டாடப்போவதாக ஜேவிபி கட்சியினர் அறிவித்துள்ளனர். அதுமட்டுமல்ல முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரவும் தமிழ் மக்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஆம். உழைக்கும் மக்களின் உரிமை நாளாம் மே தினம் நிச்சயம் கொண்டாடப்பட வேண்டும். அதேபோன்று தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்வதற்கு ஆதரவாக ஜேவிபி குரல் கொடுத்தமை வரவேற்கப்பட வேண்டியதே. சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ள ஒரு கட்சி தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது நல்லதொரு மாற்றமே. ஜேவிபி க்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

மீண்டும் எழுவோம்!

•மீண்டும் எழுவோம்! தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த இனம் இன்று அடிமையாய் வீழ்ந்து கிடக்கின்றதே வந்தாரை வாழ வைத்த எமது இனம் இன்று தான் வாழ முடியாமல் தவிக்கிறதே ஆயிரம் ஆயிரமாய் மாண்ட மாவீரர்களே மீண்டும் எழுவோம் உமது கல்லறைகளின் சாட்சியாய் எழுவோம் எழுவோம் எழுவோமெல்லோ மாண்டவர் நினைவாய் மீண்டும் எழுவோமெல்லோ எத்தனை முறைகள் வீழ்ந்தோமெல்லோ அத்தனை முறையும் மீண்டும் எழுந்தோமெல்லோ அத்தனை முறையும் எழுந்ததை எண்ணியெல்லோ இந்தமுறையும் மீண்டும் எழுவோமெல்லோ வெலிக்கடை படுகொலைகளை எண்ணியல்லோ மீண்டும் மீண்டும் எழுவோமெல்லோ முள்ளிவாயக்கால் படுகொலைகளை எண்ணியெல்லோ மீண்டும் மீண்டும் எழுவோமெல்லோ கொக்கட்டிச்சோலை கொலைகளை எண்ணியெல்லோ மீண்டும் மீண்டும் எழுவோமெல்லோ ஆயிர ஆயிரமாய் புதைத்ததை எண்ணியல்லோ மீண்டும் மீண்டும் முளைத்து எழுவோமெல்லோ துண்டு துண்டாய் வெட்டி வீசியதை எண்ணியல்லோ கடல்அலைபோல் மீண்டும் மீண்டும் எழுவோமெல்லோ

மணி அண்ணைக்கு ஒரு பதில் !

•மணி அண்ணைக்கு ஒரு பதில் ! 2009 ற்கு முன்னர் தமிழக போராட்டங்களுக்கு ஆதரவு தரும்படி புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் நேரிடையாகவே நீங்கள் கேட்டிருக்க முடியும். கேட்டிருக்க வேண்டும். அப்போது பேசாமல் இருந்துவிட்டு ஏன் ஆதரவு தரவில்லை என்று இப்போது அதுவும் ஒரு அகதியிடம் கேட்கிறீர்கள். 2009 ற்கு பின்னர் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஈழத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்தனர். அடுத்து நடைபெற்ற ஸ்ரெட்டலைட் போராட்டத்திற்கும் ஈழத் தமிழர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆணவக் கொலைக்கு எதிராக நீங்கள் போராட்டம் நடத்தினால் அதற்கும் நிச்சயம் ஈழத் தமிழர்கள் ஆதரவு தருவார்கள். நீங்கள் குறிப்பிடும் சாதிப் பிரச்னைக்கும் சேர்த்து தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து 1983ல் தோழர் தமிழரசன் போராடியபோது அதற்கு நாம் உதவி செய்தோம். அதன்பிறகு தோழர் பொழிலன் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தபோது அதற்கும் நாம் உதவினோம். இதனாலேயே நான் எட்டு வருடம் தமிழக சிறையில் அடைக்கப்பட்டேன். அப்போது சென்னை சிறையில் இருந்த நீங்கள் இது குறித்து என்னுடன் பேசியிருக்கிறீர்கள். பெரியாரிய இயக்க இளைஞர்கள் தமிழதேசிய மீட்பு படை ஆரம்பித்தபோது அவர்களுக்கு பயிற்சி , ஆயுதம் எல்லாம் வழங்கி உதவியவர்கள் புலிகள். இதெல்லாம் தெரிந்த நீங்கள் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். பரவாயில்லை. இனியாவது பரஸ்பரம் ஆதரவு என்ற நிலையில் இருந்து சேர்ந்து செயற்படுதல் என்ற நிலைக்கு நகர்வோம். அதற்கு உங்கள் கேள்வி உதவி புரியட்டும்.

கர்ணன் !

•கர்ணன் ! அசுரன் , கர்ணன் இரண்டும் சாதிப் பிரச்சனைகளை பேசும் படங்கள். ஆனாலும் அசுரனைக் தூக்கிக் கொண்டாடிய அளவிற்கு புத்திஜீவிகள் கர்ணனைக் கொண்டாடவில்லை. ஏனெனில் அசுரனில் படிக்கும்படி தீர்வு கூறப்படுகிறது. கர்ணனில் திருப்பி அடிக்கும்படி கூறப்படுகிறது. வன்முறை பாவிக்கப்பட்டால் அதற்கு வன்முறை மூலமே பதில் அளிக்க வேண்டும் என்பதை கர்ணன் தெளிவாக கூறுகிறது. எப்படி இப்படி ஒரு படத்தை மாரி செல்வராஜ் அவர்களால் எடுக்க முடிந்தது? ஏனெனில் அவரும் இந்த வலியை அனுபவித்தவர். ஈழத்தில் துரையப்பாவைச் சுட்ட தோட்டாவே முதல் வன்முறை என பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதற்கு முன்னரே சாதீய தீண்டாமைக்கு எதிராக வன்முறை மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. கத்தி வாள்கள் மட்டுமன்றி துப்பாக்கிகள் கைக்குண்டுகள் எல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் பலர் இறந்தும் இருக்கின்றனர். தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியினர் அடிக்கு அடி என்னும் தத்தவத்தை கூறி தலைமை தாங்கினர். இதனாலேயே ஈழத்தில் பெரியாரியம் அம்பேத்காரியம் போன்ற சீர்திருத்தக் கருத்துக்கள் செல்வாக்கு பெறவில்லை.

சந்தனக்காடு ! (பகுதி -1)

•சந்தனக்காடு ! (பகுதி -1) இயக்குனர் கௌதமன் வெளியிட்ட வீரப்பன் கதை தொடர். மக்கள் தொலைக்காட்சியில் 170 தொடர்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கடந்த வருடம் பிரான்சில் வசிக்கும் எனது ஊரைச் சேர்ந்த நண்பர் ஒருவர் இத் தொடரில் வீரப்பனை பிடிக்க புலி உறுப்பினர் உதவியதாக காட்டப்படுகிறது என்றும் இது தொடர்பாக என் கருத்தை கேட்டார். அப்போது இத் தொடர் முழுவதையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காததால் எனது கருத்தை தெரிவிக்க முடியாமற் போய்விட்டது. ஆனால் கடந்த மாதம் இத்தாலியில் வசிக்கும் நண்பர் ஒருவர் முழு தொடரையும் அனுப்பி என்னை கட்டாயம் பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். நான் சிறையில் இருந்தபோது வீரப்பனுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டவர்களுடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. அவர்கள் மூலம் பல கதைகளை கேட்டிருக்கிறேன். இப்போது இத் தொடரை பார்க்கும்போது மீண்டும் அந்த இடத்திற்குள் சென்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. உண்மையில் கௌதமன் நன்றாக படமாக்கியுள்ளார். இதில் இலங்கைத் தமிழ் பேசும் ஒரு பொலிஸ்காரரை காட்டுக்குள் அனுப்புவதாகவே காட்டப்படுகிறது. வீரப்பனை பிடிக்க புலி உறுப்பினர் உதவியதாக எங்குமே காட்டப்படவில்லை. 1992ல் சென்னை சிறையில் இருந்த புலிகளின் பொறுப்பாளர் கிருபன் என்பவர் வேலுர் சிறப்பு முகாமில் இருந்த புலிப் போராளிகளை பார்வையிட பொலிஸ் காவலுடன் வந்தார். அப்போது அங்கிருந்த என்னை அழைத்து தான் சிறையில் இருந்து தப்பப் போவதாகவும் தனக்கு வீரப்பன் தொடர்பு பெற்றுத்தர முடியுமா எனக் கேட்டார். அதன்பின்னர் வேலுர் சிறப்புமுகாமில் இருந்து சுரங்கம் தோண்டி தப்பிய புலிப் போராளிகளில் சிலர் வீரப்பன் காட்டுக்கு சென்று வீரப்பன் ஆட்கள் என நினைத்து பொலிசிடமே பிடிபட்டதாகவும் அறிந்திருக்கிறேன். நான் அறிந்தவரையில் புலிகளுக்கு வீரப்பனுடன் நேரிடையாக தொடர்பு இருக்கவில்லை. அத்துடன் இத் தொடரிலும் வீரப்பனை கைது செய்ய புலி உறுப்பினர் ஒருவர் உதவினார் என்றும் காட்டப்படவில்லை. குறிப்பு – தொடர் முழுவதையும் பார்க்க விரும்புபவர்கள் பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது.

சந்தனக்காடு (பகுதி -2)

•சந்தனக்காடு (பகுதி -2) இத் தொடரில் நான் மிகவும் பார்த்து வியந்திருப்பது முன்னாள் பொலிஸ் டிஜிபி தேவாரத்தை அம்பலப்படுத்தியிருப்பதே. தேவாரத்தை திருவாசகம் என பெயர் மாற்றம் செய்திருந்தாலும் பார்ப்பவர்கள் அனைவரும் இலகுவில் இனங் கண்டு புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ளது. தேவாரத்தை தைரியமாக அம்பலப்படுத்திய இயக்குனர் கௌதமன் அவர்களுக்கும் அதை ஒளிபரப்பிய மக்கள் தொலைக்காட்சியினருக்கும் பாராட்டுகள். இந்த தேவாரம்தான் தர்மபுரியில் நக்சலைட்டுகள் என்றுகூறி 40க்கு மேற்பட்ட மக்களை கொன்றவன். அதனால் இவனுக்கு தண்டனை வழங்குவதற்காக தோழர் தமிழரசன் இரண்டுமுறை சென்னை வந்தார். சென்னை விருகம்பாக்கத்தில் இவனுக்கு ஒரு பெண்ணுடன் இரகசிய பாலியல் தொடர்பு இருந்தது. இதையறிந்த தோழர் தமிழரசன் துப்பாக்கியுடன் வந்து காத்து நின்றார். ஆனால் தப்பி விட்டான். இந்த தேவாரம்தான் வேலுர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு அப்பாவி ஈழ அகதிகளை சுட்டுக் கொன்றவன். இந்த தேவாரம்தான் வீரப்பனை தேடுவதாக கூறி பல அப்பாவி பெண்களை பாலியல் வல்லுறவு செய்தவன். பல அப்பாவி இளைஞர்களை போலி மோதலில் கொன்றவன். இதை இயக்குனர் கௌதமன் அவர்கள் ஆதாரங்களுடன் நன்கு அம்பலப்படுத்தியுள்ளார். இனி தேவாரம் மட்டுமல்ல தேவாரத்தின் குடும்பத்தில் ஒருவர்கூட தேவாரத்தின் பெயரை பெருமையுடன் உச்சரிக்க முடியாது.

சந்தனக்காடு (பகுதி -3)

•சந்தனக்காடு (பகுதி -3) இந்த வீரப்பன் பற்றிய தொடர் அற்புதமாக எடுத்துள்ளார்கள் என்பது உண்மைதான். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். ஆனால் இந்த தொடரில் மூன்று விடயங்கள் குறித்து விபரங்கள் எதிர்பார்த்தேன். அவை இல்லாததால் சிறது ஏமாற்றம் அடைந்தேன். (1) வீரப்பன் யானைகளை சுட்டு தந்தம் எடுத்தார். சந்தன மரங்களை வெட்டி விற்றார் என்று அனைத்து பத்திரிகைகளும் தொடர்ந்து எழுதி வருகின்றன. ஆனால் ஒரு பத்திரிகைகூட காட்டுக்குள் இருந்த வீரப்பனிடம் இவற்றை வாங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த அந்த மான்புமிகு நபர்கள் யார் என்பதை எழுதியதில்லை. (2) பூலான்தேவி போன்று வீரப்பனை சரணடைய வைக்க அரசும் பொலிஸ் அதிகாரிகளும் ஏன் முயற்சி செய்யவில்லை? வீரப்பன்கூட சரணடைய விரும்பியதாக தகவல்கள் உண்டு. (3) நடிகர் ராஜ்குமார் கடத்தலின்போது பணம் கொடுக்கப்பட்டதாக அறிய வருகிறது. எத்தனை கோடி ரூபா பணம் வழங்கப்பட்டது? இது யார் பணம்? அந்த பணத்தில் கூட இருந்த தமிழ்தேசிய போராளிகளுக்கு எத்தனை கோடி ரூபா வீரப்பன் கொடுத்தார்? மேற்கண்ட மூன்று விடயங்கள் குறித்து விபரங்கள் எதிர் பார்த்தேன். இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் , வீரப்பன் தந்தம் கடத்தியபோது கொல்லப்படவில்லை வீரப்பன் சந்தன மரம் வெட்டிய போது கொல்லப்படவில்லை வீரப்பன் பொலிசாரைக் கொன்றபோதும்கூட கொல்லப்படவில்லை. ஆனால் தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்று கூறியதும் சுட்டுக் கொல்லப்பட்டார். குறிப்பு – சந்தனக்காடு எடுத்த கௌதமன் தோழர் தமிழரசன் பற்றி முந்திரிக்காடு எடுக்க முயல வேண்டும்.