Saturday, April 30, 2022
மே தின வாழ்த்துகள்.
•மே தின வாழ்த்துகள்.
உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது - கால் மார்க்ஸ்
காத்துவாக்கில இரண்டு காதல்
*காத்துவாக்கில இரண்டு காதல் !
எனக்கென்னவோ படம் முடியும்வரை அந்த தலைவரே நினைவுக்கு வந்து கொண்டிருந்தார்.
மனைவி துணைவி என்று இரண்டு பேரை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒருவனுக்கு ஒருத்தியே தமிழர் பண்பாடு என்று தைரியமாக பேச அந்த தலைவரால் மட்டுமே முடியும்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
சிங்கள அரசின் கையிருப்பு வெறும் 112 கோடி டாலர்
சிங்கள அரசின் கையிருப்பு வெறும் 112 கோடி டாலர் மாத்திரமே. இது 3 நாட்களுக்கு தேவையான இறக்குமதிக்கே போதுமானது.
இந்நிலையில் திராவிட முதல்வர் சிங்கள அரசுக்கு உதவி செய்கிறார். பாராட்டுகள்.
ஆனால் இந்த நிலையில்கூட தமிழருக்கு தீர்வு வழங்குங்கள் என்று அவரால் ஏன் வலியுறுத்த முடியவில்லை?
இலங்கையின் ஒருநாள் தேவை 6500 டன் அரிசி. சீனா 2000 மெட்ரிக் டன் அரிசி அனுப்புகிறது.
அதாவது ஒரு நாளைக்கு ஒருவேளை உணவை மட்டுமே அனுப்புகிறது.
ஆனால் திராவிட முதல்வர் 6 நாட்களுக்கு போதுமான 40000 டன் அரிசியை அனுப்புகிறார்.
சிங்கள அரசை காப்பாற்றுவதில் சீனாவைவிட திராவிட முதல்வர் அக்கறை காட்டுகிறார்
டிஜிபி – சார்! மீண்டும் ஒரு லாக்கப் கொலை நடந்திடுச்சு
டிஜிபி – சார்! மீண்டும் ஒரு லாக்கப் கொலை நடந்திடுச்சு
முதல்வர் - அப்படியா? சரி ஒரு பத்து லட்சம் கொடுத்திட்டு பைலை மூடுங்க.
டிஜிபி – சார்! மக்கள் கொஞ்சம் கோபமாய் இருக்காங்க
முதல்வர் - உதயநிதி கிட்ட சொல்லி இளையராசாவுக்கு எதிராக ஒரு அறிக்கை விடச் சொல்லுங்க. மக்கள் கொலை மேட்டரை மறந்திடுவாங்க.
டிஜிபி - ????
Wednesday, April 27, 2022
பல வழிகளிலும் என்னை தொடர்பு கொண்டு
பல வழிகளிலும் என்னை தொடர்பு கொண்டு விசாரித்த அனைவருக்கும் முதலில் என் நன்றிகள்.
கடந்த ஏழு நாட்கள் முகநூல் நிர்வாகம் விதித்த தடை காரணமாகவே என்னால் பதிவுகள் போட முடியவில்லை.
ஒருபுறம் முகநூலில் எழுத முடியவில்லை என்ற வருத்தம் இருப்பினும் மறுபுறம் இந்த இடைவெளியில் டிவிட்டரில் 200 ரூபா உடன்பிறப்புகளுக்கு தகுந்த பதிலடி கொடுத்தது நிறைவாக உள்ளது.
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். இனி வழக்கம்போல் முகநூலில் தொடர்வோம்.
"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் 28ம் ஆண்டு நினவு நாள் 29.03.2022 ஆகும்.
19.11.1967 ல் பிறந்த தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார்.
தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின்.
தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்.
தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார்.
தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார்.
தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார்.
தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார்.
தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.
மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும்.
தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!
குறிப்பு- தமிழ்தேசமக்கள் கட்சி சார்பில் தோழர் செந்தமிழ் குமரன் அவர்களால் தோழர் லெனின் வாழ்கை வரலாறு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது . இந்த நூலுக்கு ஒரு சிறிய அணிந்துரையை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் எழுதிய அணிந்தரையை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2016/03/blog-post_33.html
கொழும்பில் வெடித்த மக்கள் போராட்டம்
•கொழும்பில் வெடித்த மக்கள் போராட்டம்
ஜனாதிபதி கோத்தாவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
எங்கள் வீடுகளுக்கு மின் விளக்குகள் இல்லை உங்கள் வீட்டில் எப்படி மின் விளக்குகள் எரிகின்றன என ஆர்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பல அமைச்சர்களின் வீடுகளுக்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போராட்டம் பரவும் என்ற அச்சத்தில் கொழும்பு நகரில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
எந்த மக்கள் கோத்தாவை தெரிவு செய்தார்களோ
எந்த மக்கள் கோத்தாவை தெரிவு செய்தார்களோ அந்த மக்களே இன்று அவரை விரட்டியடிக்க போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த வேளையில் இவர் எதற்கு புலம் பெயர் தமிழருக்கும் கோத்தாவுக்கும் பாலம் அமைக்க முயல்கிறார்?
இவரே புலம்பெயர் தமிழர் முன் வரமுடியாமல் ஒளித்து திரிகிறார். அப்புறம் இவர் எப்படி பாலம் அமைக்கப் போகிறார்?
ஜனாதிபதி அவர்களுக்கு!
ஜனாதிபதி அவர்களுக்கு!
இதனால் நம்ம சுமந்திரன் சேர் கட்டும் பாலத்திற்கு ஏதும் இடைஞ்சல் வருமா?
முக்கியமாக, சம்பந்தர் ஐயாவின் சொகுசு மாளிகைக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். அவர் ஏ.சி இல்லாமல் இருக்கமாட்டார்.
அரசியலில் இருந்து சுமந்திரன்
அரசியலில் இருந்து சுமந்திரன் வெளியேறினால் தமிழ் மக்கள் மிக்க சந்தோசமடைவார்கள்.
தமிழ் மக்களில் பலரின் எதிர்பார்ப்பு இது
இந்த கும்பல் மக்கள் கைகளில் சிக்கப்போகுதா
இந்த கும்பல் மக்கள் கைகளில் சிக்கப்போகுதா
அல்லது இந்திய அரசு காப்பாற்றப் போகிறதா?
ஹிட்லர் தற்கொலை செய்யும்
ஹிட்லர் தற்கொலை செய்யும் அந்தக் கணம்வரை தான் வெற்றியின் விளிம்பில் நிற்பதாகவே சொல்லிக்கொண்டிருந்தான்.
எந்த சர்வாதிகாரியும் தான் அழியும்வரை தனது தோல்வியை ஏற்றுக்கொள்வதில்லை
ஆனால் வரலாற்றில் மற்ற சர்வாதிகாரிகளுக்கு என்ன முடிவு ஏற்பட்டதோ அதே முடிவு மகிந்தவுக்கும் நிச்சயம் ஏற்படும்.
மியான்மரில் சிறுபான்மை
மியான்மரில் சிறுபான்மை இனமான ரோஹிங்கியாக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது பெரும்பான்மை இனத்தவர்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து அமைதி காத்தனர்.
ஆனால் இப்போது அந்த பெரும்பான்மை இனத்தவரையே ராணுவம் வேட்டையாடுகிறது. ஒரே நாளில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் சுட்டு வீதியோரங்களில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று சிறீலங்காவிலும் தமிழ் மக்களை ராணுவம் படுகொலை செய்தபோது பெரும்பான்மை இனமான சிங்கள இனம் தமக்கு பிரச்சனை இல்லை என்று நினைத்தது.
ஆனால் இப்போது சிங்கள இனத்தின் மீது ராணுவத்தின் துப்பாக்கி திரும்பியுள்ளது.
பாசிச அரசுகள் இப்படித்தான் செய்யும்.
ஒரு நாயைக் காப்பாற்ற
ஒரு நாயைக் காப்பாற்ற இத்தனை பொலிசார் பாடுபடுகிறார்களா?
நான் நாயைத்தான் கூறினேன். ஆனால் உங்களுக்கு அது கோத்தபாயாக புரிந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
மகிந்தவின் மனைவி சிராந்தி
மகிந்தவின் மனைவி சிராந்தி கலந்துகொண்ட நிகழ்வு மக்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மகிந்தவின் மகன் பங்கு பற்றும் ரக்பி போட்டி மக்கள் எதிர்ப்பின் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தவர்கள்கூட நடமாடமுடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் நாளை நாடுதழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டதால் அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் படுத்தியுள்ளது.
போராட்ட செய்திகளை முகநூலில் எழுதி வந்த சிங்கள ஊடகவியலாரை கைது செய்துள்ளது அரசு.
மக்கள் போராட்டங்களை திசைதிருப்ப இந்திய ராணுவம் வந்துள்ளது என அரசே வதந்தியை பரப்புகிறது.
பொது மக்களின் நடமாட்டத்தை
பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்திவிட்டு தல குடும்பத்தோட தப்பி ஓடப் போகிறாரோ?
ஜேவிபி யின் ஏப்ரல் கிளர்ச்சி!
•ஜேவிபி யின் ஏப்ரல் கிளர்ச்சி!
1971ம் ஆண்டு ஜேவிபி அமைப்பு இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது.
பல கிராமங்களை சில மாதங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
ஏனெனில் இந்தியாவின் இந்திரா காந்தி அரசு இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்தது.
அப்போது இலங்கை இந்திய ராணுவத்தால் 6000 ற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியாவை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற அதே சிங்கள ராணுவம்தான் 1971ல் மன்னம்பெரி என்ற சிங்கள யுவதியை பாலியல் வல்லுறவு செய்து கொன்றது.
கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமன்றி அவரை நிர்வாணப்படுத்தி ரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கொன்றனர்.
ஜேவிபி மீண்டும் 1989ல் ஆயுதப் போராட்டம் முன்னெடுத்தது. அப்போது இதே சிங்கள ராணுவம் அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களை கொன்றது.
வேடிக்கை என்னவெனில் அப்போது இந்த படுகொலைகளுக்கு நீதிகோரி ஜ.நா சென்றவர் இன்றைய பிரதமர் மகிந்த ராஜபக்சாவே.
அதே மகிந்த ராஜபக்சாவே பின்னர் முள்ளிவாயக்காலில் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்தார்.
முதலில் அவர்கள் தமிழர்களை குறிவைத்தார்கள்
"முதலில் அவர்கள் தமிழர்களை குறிவைத்தார்கள். அப்போது நான் குரல் கொடுக்கவில்லை. ஏனென்றால் நான் தமிழர் இல்லை.
இஸ்லாமியர்களை குறிவைத்தார்கள். அப்போதும் குரல் கொடுக்கவில்லை. ஏனென்றால் நான் இஸ்லாமியர் இல்லை.
இப்போது என்னை குறிவைக்கிறார்கள். ஆனால், தற்போது எனக்காக பேச எவரும் இல்லை."
- ஒரு சிங்கள யுவதியின் குரல்
ஆழ்ந்த இரங்கல்
•ஆழ்ந்த இரங்கல்
தமிழ்ப் பேராசிரியர் சந்திரசேகரன் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
கல்வித்துறையில் மட்டுமல்ல ஏனைய சமூக விஞ்ஞானத்துறைகளிலும் அவரின் பங்களிப்பு அளப்பரியது.
மலைநாட்டுத் தமிழ் உறவுகளின் இன்றைய வளர்ச்சிநிலைகள் பலவற்றுக்கு முன்னோடியும் வழிகாட்டியுமானவர்.
மகிந்த கும்பல உலகில் எந்த மூலைக்கு
மகிந்த கும்பல உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் வசம் இருக்கும் மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
இன்று ஜேவிபி யின் 51 வது ஏப்பரல் நினைவு தினம்
இன்று ஜேவிபி யின் 51 வது ஏப்பரல் நினைவு தினம் ஆகும்.
1971ம் ஆண்டு ஏப்பரல் மாதம் ஜேவிபி அமைப்பினர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இந்திய அரசின் உதவியுடன் அவர்களது போராட்டம் நசுக்கப்பட்டது. அதில் சுமார் 6000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர் 1989ம் ஆண்டு ஜேவிபி அமைப்பினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதன் தலைவர் ரோகண விஜேயவீரா உட்பட சுமார் 60000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
இன்று ஜேவிபி அமைப்பு பலம் பொருந்திய பெரிய அமைப்பாக மீண்டும் வளர்ந்து இருக்கிறது.
இதில் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டியது என்ன?
முதலாவது,
ஜேவியால் மீண்டும் எழ முடியுமாயின் தமிழ் மக்களால் ஏன் மீண்டும் எழ முடியாது?
இரண்டாவது,
ஜேவிபி இன்று தேர்தல் பாதையை பயன்படுத்தினாலும் அவர்கள் இதுவரை ஆயுதப் போராட்டம் தவறு என்றோ அல்லது அதை தாம் கைவிட்டதாகவோ அறிவிக்கவில்லை.
மூன்றாவதாக,
தமது தலைவர் ரோகண விஜயவீரா எப்படி இறந்தார் என்பது தெரியாத நிலையிலும் அவர் உயிருடன் இல்லை என்ற உண்மையை மக்களுக்கு உடன் தெரிவித்தார்கள்.
நான்காவதாக,
தமது தலைவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற முழு உண்மைகளையும் கண்டறிந்தார்கள். அவற்றை ஆதாரங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள்.
ஜந்தாவதாக
ஜேவிபி அமைப்பும் “பயங்கரவாதிகள்” என்று குறிப்பிட்டே இலங்கை அரசு கொன்றது. ஆனால் அவர்கள் அதற்காக பயந்து அடங்கி இருக்கவில்லை. மாறாக தமது கொல்லப்பட்ட மாவீரர்களுக்காக வருடம்தோறும் பகிரங்கமாக நினைவு அஞ்சலி செய்கிறார்கள்.
தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் சிங்கள மக்கள் மத்தியிலும் அரசுக்கு எதிராக போராடி இழப்புகளை சந்தித்து மீண்டும் எழுந்து நிற்கும் ஒரு அமைப்பு உள்ளது என்பதே.
நாடெங்கும் மக்கள் முற்றுகை
நாடெங்கும் மக்கள் முற்றுகைப் போராட்டம் பரவுகிறது.
அமைச்சர்கள் மற்றும் எம்.பி களின் வீடுகளை மக்கள் முற்றுகை இடுகிறார்கள்.
அடுத்த ஜனாதிபதி என கூறப்பட்ட மகிந்தவின் புதல்வர் நாமல் நாட்டை விட்டு ஓட்டம்.
மகிந்த கும்பலின் நெருங்கிய பிரமுகர் அவுன்காட் நிறுவன தலைவர் குடும்பத்துடன் ஓட்டம்.
சம்பந்தர் ஐயா - தம்பி சுமந்திரன்!
சம்பந்தர் ஐயா - தம்பி சுமந்திரன்! இந்த கோத்தாவை வீட்டுக்கு போ என்கிறமாதிரி என்னையும் யாரும் சொல்வார்களா?
சுமந்திரன் - ஏன் ஐயா அப்படி பயப்படுகிறீர்கள்?
சம்பந்தர் ஐயா - இல்லை தம்பி , என் சொகுசு மாளிகைக்கும் தடையற்ற மின்சாரம் வருகிறது. அதுதான்.
சுமந்திரன் - இந்திய தூதரிடம் ஒருக்கா பேசிப் பார்க்கட்டுமா ஐயா?
சம்பந்தர் ஐயா – உமக்கு தெரியும்தானே தம்பி. இந்த வயசான காலத்தில் திருகோணமலைக்கு போய் சொந்த வீட்டில கரண்ட் இல்லாமல் இருக்க முடியுமா?
சுமந்திரன் - சரி சரி எனக்கு புரியுது ஐயா. நான் ஆகவேண்டியதைப் பார்க்கிறேன்.
கோத்தா பதவிக்கு வந்தால் மீண்டும்
கோத்தா பதவிக்கு வந்தால் மீண்டும் வெள்ளைவான் வரும். தமிழ் மக்கள் நடமாடமுடியாத நிலை வரும் என்றார் சுமந்திரன்.
இப்போது கோத்தாவை சிங்கள மக்களே விரட்டுகின்ற நிலையில் கோத்தாவுக்கும் புலம்பெயர்தமிழருக்கும் பாலம் கட்டுவேன் என்கிறார்.
தீர்வு 13ஐக் கேட்டு ரெலோவுடன் சேர்ந்து இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினார். கேட்டதற்கு ஒற்றுமை முக்கியம் என்பதால் சேர்ந்து செயற்பட்டதாக கூறினார்.
ஆனால் இப்போது அதே ரெலோ வெளியேறினால் தமிழரசுக்கட்சியில் பலர் சந்தோசம் அடைவார்கள் என்கிறார்.
முதல்நாள் சம்பந்தர் ஐயாவுடன் சேர்ந்து சென்று கோத்தாவின் கைகளைக் குலுக்கிறார்.
அடுத்தநாள் சஜித் பிரேமதாசாவுடன் சேர்ந்து கோத்தா வீட்டுக்கு போக வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
இதை சுமந்திரன் சுத்துமாத்து அரசியல் என்கிறார்கள் தமிழ் மக்கள். ஆனால் அவரின் செம்புகள் இதை சுமந்திரன் சேரின் சாணக்கியம் என்கின்றனர்.
போர்க்குற்றவாளி கோத்தபாயா
போர்க்குற்றவாளி கோத்தபாயா ராஜபக்சாவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சிங்கள மக்கள் கோர ஆரம்பித்துவிட்டார்கள்.
நடந்தது இனப்படுகொலை என்பதை சிங்கள மக்களே ஏற்றுக்கொண்டாலும் சுமந்திரன் ஏற்றுக்கொள்ள மாட்டார்.
ஒருவேளை சுமந்திரன் ஏற்றுக்கொண்டாலும் இந்திய அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இதனை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பசில் ராஜபக்சாவின் மகள்
பசில் ராஜபக்சாவின் மகள் இந்திய உளவு றோ அதிகாரியின் மகனை திருமணம் செய்திருப்பதாக விமல்வீரவம்ச கூறுகிறார்.
இது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்த நெருக்கடியான நேரத்தில் மகிந்த கும்பலை சீனா காப்பாற்றவில்லை.
இந்திய அரசுதான் வலிந்து வலிந்து உதவி செய்து மகிந்த கும்பலை காப்பாற்றுகிறது.
ஆனால் இந்த நிலையில்கூட தமிழருக்கு தீர்வு வழங்கும்படி இந்திய அரசு மகிந்த கும்பலை வலியுறுத்தவில்லை.
இந்நிலையில் சீனா வரும். எனவே இந்திய அரசு தமிழருக்கு உதவும் என்று நம்பி இலவு காத்த கிளி போல் காத்துக்கொண்டிருக்கும் தமிழ் தலைவர்களை என்னவென்று அழைப்பது?
உக்ரைனில் புச்சா நகரில்
உக்ரைனில் புச்சா நகரில் பல அப்பாவி மக்கள் ரஸ்சிய படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 360 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நடந்திருப்பது இனப்படுகொலை என்றும் இது குறித்து ஜ.நா விசாரணை செய்ய வேண்டும் என்றும் உக்ரைன் ஜனாதிபதி கோரியுள்ளார்.
இங்கு ஆச்சரியம் என்னவெனில் இந்திய அரசும் இப் படுகொலைகளை கண்டித்திருப்பதோடு இது குறித்த ஐ.நா விசாரணைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இங்கு எமது கேள்வி என்னவெனில் 360 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து விசாரணைக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் இந்திய அரசு, ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர் கொல்லப்பட்டதை கண்டித்து விசாரணை செய்ய ஆதரவு தெரிவிக்காதது ஏன்?
அதுமட்டுமல்ல இன்றுவரை இனப்படுகொலை செய்த மகிந்த ராஜபக்சா கும்பலை ஜ.நா விசாரணையில் இருந்து இந்திய அரசே காப்பாற்றி வருகிறது.
உக்ரைன் மக்களுக்கு ஒரு நீதி. ஈழத் தமிழ் மக்களுக்கு இன்னொரு நீதி. இதுதானா இந்திய அரசின் நீதி?
போராட்டம் மகத்தானது.
போராட்டம் மகத்தானது.
அது அற்புதமான பாடங்களை கற்றுத் தருகிறது.
தமிழினப்படுகொலையை சிங்கள மக்களும் உணர வைக்கிறது.
கலைஞர் தத்தெடுத்து வளர்த்த ஈழ அகதிச் சிறுவன் எங்கே?
• கலைஞர் தத்தெடுத்து வளர்த்த ஈழ அகதிச் சிறுவன் எங்கே?
எம்.ஜி.ஆர் மலையாளி என்றும் அவருக்கு ஈழத் தமிழர் மீது அக்கறை இல்லை என்றும் தனக்கு மட்டுமே ஈழத் தமிழர் மீது அக்கறை என்று காட்டுவதற்காக கலைஞர் ஒரு ஈழ அகதிச் சிறுவளை 1984ம் ஆண்டு தத்தெடுத்தார்.
அச் சிறுவனுக்கு மணி என்று பெயர் சூட்டினார். கனிமொழிக்கு தம்பி இல்லை என்ற குறை நீங்கிவிட்டதாகவும் அப்போது கூறினார்.
இப்போது இந்த அகதிச் சிறுவன் எங்கே என கேட்டு டிவிட்டரில் பதிவு இட்டிருந்தேன். அதற்கு நான் கலைஞர் மீது அபாண்டமாக பொய் கூறுவதாக உ.பிஸ் கள் பதில் இட்டனர்.
எனவே நான் இந்த அகதிச் சிறுவன் எங்கே என்று கேட்டு பரிதிஇளம்வழுதி ஆனந்த விகடனுக்கு வழங்கிய பேட்டியை ஆதாரமாக காட்டினேன்.
அதற்கு “ஏன் இத்தனை நாளாக கேட்கவில்லை. இப்போது ஸ்டாலின் பதவிக்கு வந்ததும் அவருக்கு இழுக்கு வருவதற்காக கேட்கிறீர்களா?” என கேட்கின்றனர்.
அதற்கு நான் “ இல்லை. கலைஞர் உயிருடன் இருக்கும்போதே கேட்டிருக்கிறேன். இதோ இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பிய என் மனு” என்று 03.07.2015 யன்று அனுப்பிய மின்னஞ்சலைக் காட்டினேன்.
அதற்கு பதில் அளிக்காமல் நான் முதல்வர் ஸ்டாலின் மீது கொலைக் குற்றச்சாட்டு வைப்பதாகவும் என்னை கைது செய்ய வேண்டும் என்றும் அந்த உ.பிஸ் என்னை மிரட்டுகிறார்கள்.
இதற்கு நான் “தாராளமாக என்னை கைது செய்யுங்கள். அப்படியாவது அந்த அகதிச் சிறுவன் எங்கே என்ற என் கேள்விக்கு நீதிமன்றத்திலாவது பதில் கிடைக்கட்டும்;” என்று அவர்களுக்கு கூறியுள்ளேன்.
சென்னையில் இருந்து மூத்த பத்திரிகையாளர் டி.வி.சோமு என்னிடம் பேட்டி காண முயன்றபோது இந்த அகதிச் சிறுவன் தத்தெடுத்த விடயம் பற்றி எழுதும்படி கூறினேன்.
அப்புறம் அவரே பரிதிஇளம்வழுதியின் கைத்தொலைபேசி இலக்கம் தந்தார். பரிதியுடன் இரண்டுமுறை இது தொடர்பாக பேசினேன்.
அப்போதுதான் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டி வரும் என்பதற்காக அச் சிறுவன் கொல்லப்பட்டுவிட்டதாக அவர் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
( ஆதாரங்கள் கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது)
நிருபர் - சார் ! சிறப்புமுகாமை எப்போது மூடுவீர்கள்?
நிருபர் - சார் ! சிறப்புமுகாமை எப்போது மூடுவீர்கள்?
தமிழக முதல்வர் - அகதிகள் இனி ஏதிலிகள் என்று அழைக்கப்படுவர்
நிருபர் - சார்! சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை எப்போது விடுதலை செய்வீர்கள்?
தமிழக முதல்வர் - அகதிகள் முகாம் இனி ஏதிலிகள் மறுவாழ்வு முகாம் என்று அழைக்கப்படும்.
நிருபர் - யோவ் நீ என்ன லூசா?
மகிந்த அரசுக்கு தொடர்ந்தும்
மகிந்த அரசுக்கு தொடர்ந்தும் உதவப் போவதாக இந்திய அரசு தெரிவிப்பு
திருப்பதி பெருமாள் கைவிட்டாலும்
இந்திய அரசு மகிந்த கும்பலை கைவிடாது.
வோட்டு போட்ட மக்களே மகிந்த அரசு வேண்டாம் என்று போராட்டம் நடத்துகின்றனர்.
இந்திய அரசு மட்டும் ஏன் வலிந்து வலிந்து சென்று உதவுகிறது?
இன்று டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.(10.04.1898)
இன்று டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.(10.04.1898)
இலங்கையில் டாக்டர் கோவூர் அவர்களின் பணி மிகவும் போற்றத்தக்கது. என்றும் நினைவில் கொள்ள வேண்டியது.
டாக்டர் கோவூர் அவர்களை நான் 1975களில் நெல்லியடி மத்திய மாகாவித்தியாலய மைதானத்தில் நடந்த “மனோ இரவு” என்னும் நிகழ்வில் கண்டேன்.
மேடையில் நின்ற அவர் ஏதோ சில வார்த்தைகளை கூறினார். அப்போது கீழே நிகழ்வு பார்த்தக்கொண்டிருந்த சிலர் மயங்கினார்கள்.
அவர்களை மேடைக்கு அழைத்து மயக்க நிலையிலேயே அவர்கள் ஆடவும் பாடவும் செய்தார். பின்னர் அவர்களின் மயக்க நிலையை போக்கினார்.
இதன் மூலம் “கிப்னோடிச” முறையை அவர் எமக்கு அறிமுகப்படுத்தினார்.
அவரது இந்த செய்கை அவரைப் பற்றி அறியும் ஆர்வத்தை எனக்கு கொடுத்தது.
அவர் இந்தியாவில் சாய்பாபாவின் புட்டபர்த்திக்கே சென்று சவால் விட்டவர் என்று எனது தந்தையார் கூறியது எனக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
சாய்பாபாவின் புட்டபர்த்தி வாசலில் நின்று அங்கு வந்த பக்தர்களுக்கு பாபா போன்று விபூதி எடுத்துக் கொடுத்தாராம் கோவூர் அவர்கள்.
அப்பாவி பக்தர்கள் இவர் இன்னொரு பாபா என்று நினைத்து அவரை வழிபட்டார்களாம்.
அவர்களிடம் கோவூர் தான் செய்தது மந்திரம் அல்ல, வெறும் தந்திரமே என்றும் பாபாவும் இதையே செய்வதாகக் கூறினாராம்.
பக்தர்களுக்கு தனது மோசடிகள் தெரிந்துவிடுமோ என அஞ்சிய பாபா தனது செல்வாக்கு மூலம் பொலிசாரைக் கொண்டு கோவூரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினாராம்.
மந்திரத்தால் தாலி வரவழைக்கும் பாபா மந்திரத்தால் “கொண்டா” மோட்டார் சைக்கிள் வரவழைத்துக் காட்டுவாரா? என்பதே கோவூர் பாபாவுக்கு விட்ட சவால்.
அதை பாபா ஒருபோதும் நிறைவேற்றவில்லை.
கோவூர் பற்றி மேலும் அறியும் எனது ஆர்வம் அவரது “மனக் கோலங்கள்”, “கோர இரவுகள்” என்னும் புத்தகங்களைப் படிக்க வைத்தன.
இவை வீரகேசரி பிரசுரமாக அன்று வெளியிடப்பட்டவை. அதிக அளவில் விற்கப்பட்டவை.
இதில் அவர் தான் சிகிச்சை அளித்த நோயாளிகளின் கதைகளைக் கூறியிருக்கிறார்.
பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நோயாளிகளை அவர் தனது கிப்னோடிச சிகிச்சை மூலம் சுகப்படுத்தியிருக்கிறார்.
இந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் அயராது பகுத்தறிவு பிரச்சாரம் செய்திருக்கிறார்.
இன்றும் இலங்கையில் மட்டுமல்ல எம்மவர்களுக்கு லண்டன், கனடாவிலும் பேய் பிசாசு பிடிக்கிறதாம்.
இங்கும் பில்லி சூனிய கூத்துகள் அரங்கேறுகின்றன. எனவே இதற்கு எதிராக ஆயிரம் கோவூர்களின் பணி அவசியமாகிறது
மார்க்ஸ் !
மார்க்ஸ் !
நீங்கள் உயிரோடு
இருந்த போது ஊர் ஊராக
துரத்தப்பட்டீர்
நாடு நாடாக கடத்தப்பட்டீர்
இன்று
ஒரு புயலைப் போல வெளிப்படையாகவும்
ஒரு பூகம்பத்தை போல
தலைமறைவாகவும்
நீங்கள் கடந்து செல்லாத
ஊரேது? நாடேது?
- மக்கள் பாவலர் இன்குலாப்.
தோழர் மாறனை நினைவு கூருவோம்!
•தோழர் மாறனை நினைவு கூருவோம்!
11.04.2022 தோழர் மாறனின் 34 வது ஆண்டு நினைவு தினம் ஆகும்.
தோழர் மாறன் சென்னையில் பிறந்தவர். அவர் ஒரு பட்டதாரி. அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல வேலை பெற்று வசதியாக வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் அவர் தமிழ் இன விடுதலைக்காக தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் படையில் செயற்பட்டார்.
இறுதியில் தமிழ் மக்களுக்காக 11.04.1988 யன்று மரணம் அடைந்தார்.
1987ல் இலங்கை சென்ற இந்திய இரணுவம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தது.
தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசமாக்கியது.
இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களை அமைதிப் பணி என இந்திய தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்தது.
தோழர் தமிழரசன் அமைத்த தமிழ்நாடு விடுதலைப்படையானது இந்திய அரசின் பொயப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்து முகமாகவும் இலங்கையில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறக் கோரியும் கொடைக்கானல் டி.வி டவருக்கு வெடி குண்டு வைத்தது.
அந்த சம்பவத்திலேதான் தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார்.
தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் மாறன் ஈழத் தமிழர்கள் மீது பேரன்பு கொண்டவர்.
ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.
இறுதியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குண்டு வைத்த போது வீர மரணம் அடைந்தார்.
இவ்வாறு தன் உயிரை ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்த தோழர் மாறன் நினைவுகள் ஈழப் போராட்ட வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும்.
தோழர் மாறன் அவர்களுடன் நான் பழகிய நாட்கள் குறைவு. இருப்பினும் அந்த இறுதி நாட்களில் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது.
அவருடைய தோழமையான உறவு என்றும் மனதில் இருப்பவை. அவை மறக்க முடியாதவை.
தியாகி முத்துக்குமாரை அறிந்த அளவிற்கு தோழர் மாறனை ஈழத் தமிழர்கள் அறியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விடயமே.
.இனிமேலாவது தோழர் மாறன் அவர்களின் அர்ப்பணிப்பை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.
தோழர் மாறன் நினைவை போற்றுவோம்.
அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது அஞ்சலிகளை செலுத்துகிறோம்
இவர் சிங்கள இனத்தை சேர்ந்தவர்
இவர் சிங்கள இனத்தை சேர்ந்தவர். கடந்த வருடம் தனது மனைவி பிள்ளைகளின் பசியை போக்குவதற்காக பத்து தேங்காயை திருடியதற்காக போஸ்ற்றில் கட்டப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
மக்கள் பணத்தை திருடிய மகிந்த கும்பலை எதில் கட்டி வைத்து தண்டிப்பது?
குறிப்பு - 2020வருடம் இதே நாளில்
குறிப்பு - 2020வருடம் இதே நாளில் இப் பதிவை எழுதியிருந்தேன். இது இப்போதும் பொருத்தமாக இருப்பதால் மீள்பதிவு செய்கிறேன்.
•இங்கிலாந்து வருத்தம் தெரிவிக்க முடியுமென்றால்
இந்தியா ஏன் வருத்தம் தெரிவிக்க முடியாது?
ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்காக இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
முழு இந்தியர்களும் குறிப்பாக சீக்கியர்கள் உறுதியாக இருந்தமையினால் வேறு வழியின்றி இங்கிலாந்து வருத்தம் தெரிவித்துள்ளது.
இப்போது எம் மத்தியில் எழும் கேள்வி என்னவெனில் இதேபோல் ஈழத் தமிழர்களை இந்திய ராணுவம் படுகொலை செய்தமைக்காக இந்தியா வருத்தம் தெரிவிக்குமா என்பதே.
இந்தியா தெரிவிக்குதோ இல்லையோ ஆனால் எம்மவர்களே சிலர் ஓடிவந்து “ராஜீவ் காந்தியைக் கொன்றதை மறந்து இந்தியா எப்படி வருத்தம் தெரிவிக்கும் என்று எழுதுவார்கள்.
இவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம். ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை செய்த ஆங்கிலேய அதிகாரியை; இங்கிலாந்துக்கே சென்று ஒரு சீக்கியா படுகொலை செய்தார்.
அந்த சீக்கியருக்கு இங்கிலாந்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் பின்னர் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அந்த சீக்கியரின் அஸ்தியை இந்தியாவுக்கு எடுத்து வந்து அவரை “தியாகி” என்று கௌரவப்படுத்தினார்.
ஆங்கிலேய அதிகாரி கொல்லப்பட்டிருந்தும்கூட இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
எனவே ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருந்தாலும் அதனைக் காரணம் காட்டாமல் இந்திய பிரதமரும் ஈழத் தமிழர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
எப்படி இந்திய மக்கள் உறுதியாக இருந்தது இங்கிலாந்து பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைத்ததோ அதேபோன்று தமிழ் மக்களும் உறுதியாக இருந்து இந்திய பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைக்க வேண்டும்.
தமிழ் மக்கள் உறுதியாக இருக்க வேண்டிய அதே நேரத்தில் செய்ய வேண்டிய இன்னொரு விடயம் ராஜீவ் காந்தியைக் கொன்ற தானுவின் அஸ்தியை எடுத்து வந்து அவரைக் “தியாகி” என்று கௌரவப்படுத்த வேண்டும்.
இந்திராகாந்தி எப்படி ஆங்கிலேய அதிகாரியைக் கொன்ற சீக்கியரை கௌரவப்படுத்தினாரோ அதே போன்று தமிழ் மக்களும் தானுவைக் கௌரவப்படுத்த வேண்டும்.
தமிழ்த்தேசிய விடுதலைக்காக
தமிழ்த்தேசிய விடுதலைக்காக குரல் மட்டும் கொடுக்கவில்லை.
தன் உயிரையும் கொடுத்த தமிழக உறவு
ஈடு செய்ய முடியாத இழப்பு இல்லை.
ஈடு செய்தேயாக வேண்டிய இழப்பு.
இன்று 34வது நினைவு தினம்.
தமிழ்நாட்டிற்கு செல்லும் தமிழ் அகதியை
தமிழ்நாட்டிற்கு செல்லும் தமிழ் அகதியை கைது செய்து பாஸ்போர்ட் கேஸ் போடுகிறார் தமிழக முதல்வர்.
அதைப் பற்றி கவலைப்படாமல் சிங்கள மக்களுக்கும் உதவ வேண்டும் என்று கோரிய அந்த தமிழ்தேசிய கூட்டமைப்புகாரன் யார்?
அவன் நல்லவன் இல்லை. ரொம்பவும் நல்லவனாக இருக்கிறான்.
யார் இந்த தோழர் தமிழரசன்?
•யார் இந்த தோழர் தமிழரசன்?
14.04.1945 யன்று பிறந்த தோழர் தமிழரசன் 01.09.1987 யன்று தனது 42வது வயதில் தமிழக உளவுப்படையினரால் கொல்லப்பட்டார்.
அவர் உயிரோடு இருந்திருந்தால் 14.04.2022 யன்று தனது 77 பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார்.
பொறியியல் படிப்பை படித்த தமிழரசன் விரும்பியிருந்தால் மற்றவர்கள் போல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் அவரோ மக்களுக்கான போராட்ட வாழ்வை விரும்பி ஏற்றார். அதனாலேயே அவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
தன் உயிர் பிரியும் அந்த இறுதிக் கணத்தில்கூட அவர் மக்களை நேசித்தார். அதனாலேயே அவர் தன் கையில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தாமல் மௌனித்தார்.
அவர் விரும்பியிருந்தால் கையில் இருந்த கிரினைட் குண்டை வீசி தப்பிச் சென்றிருக்க முடியும்.
அவர் நினைத்திருந்தால் கையில் இருந்த சப் மிசின்கன் மூலம் பலரை சுட்டுக் கொன்றிருக்க முடியும்.
தன் இறுதிக்கணம்வரை மக்களை நேசித்த அத் தமிழரசனை, சதி செய்து கொன்றவர்கள் அவரை “பயங்கரவாதி” என்றார்கள்.
தோழர் தமிழரசனைக் கொன்றதன் மூலம் அவர் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையை நசுக்கிவிட முடியும் என அவர்கள் நினைத்தார்கள்.
இன்று இந்திய அரசுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு தமிழக இளைஞனும் தன்னை தோழர் தமிழரசனாகவே நினைத்துக்கொள்கிறான்.
இன்று யாரும் தோழர் தமிழரசனை மறுத்து விட்டு தமிழ்த் தேசியம் பேசிவிட முடியாது. இதுதான் தோழர் தமிழரசனுக்கு கிடைத்த வெற்றியாகும்.
இன்று சிலர் தேர்தல் பாதை மூலம் தமிழ்த் தேசிய விடுதலை அடைய முடியும் என நம்புகிறார்கள்.
வெகுவிரைவில் இவர்களும் தோழர் தமிழரசன் முன்வைத்த ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதை மட்டுமே தமிழ்த்தேசிய விடுதலையை பெற்றுத் தரும் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.
இந்திய அரசு ஏன் தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது?
•இந்திய அரசு ஏன் தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது?
தோழர் தமிழரசன் தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைய வேண்டும் என்று கூறியதால் இந்திய அரசு அஞ்சுகிறது என்கிறார்கள்.
அப்படியென்றால், வேறு பலர் தமிழ்த் தனிநாடு கேட்டிருக்கும்போது தமிழரசன் மீது மட்டும் ஏன் அஞ்சுகிறது? என்று கேட்டால்
தமிழரசன் தனிநாடு கேட்டது மட்டுமன்றி அதை அடைய ஆயுதப் போராட்ட பாதையை தேர்ந்தெடுத்தமையே காரணம் என்று பதில் தருகிறார்கள்.
அப்படியென்றால பல கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறிவரும்போது ஏன் தமிழரசன் மீது மட்டும் அஞ்ச வேண்டும்? என்று கேட்டால்,
மற்ற கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறினாலும் அவர்கள் தேர்தல் பாதையில் பயணிக்கின்றனர்.
ஆனால் தமிழரசன் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தை நடைமுறையில் கொண்டிருந்தார். இதுவே தமிழரசன் மீது மத்திய மாநில அரசுகள் அஞ்சுவதற்கு காரணம் என்கிறார்கள்.
ஆம். உண்மைதான். அதனால்தான் இந்திய அரசு தனது உளவுப்படைகள் மூலம் சதி செய்து தோழர் தமிழரசனைக் கொன்றது.
ஆனாலும் தமிழரசன் இறந்து 35 வருடங்களுக்கு பின்னரும் இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது.
தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுப்பவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது.
சிறையில் அடைத்தவர்களுக்கு ஜாமீன்கூட வழங்க மறுத்து வருகிறது.
தோழர் தமிழரசன் போஸ்டர் ஒட்டினால் பொலிசை விட்டு கிழிக்கிறது. கூட்டம் போட அனுமதி கேட்டால் தர மறுக்கிறது.
தோழர் தமிழரசன் பற்றி புத்தகம் எழுதினால் மிரட்டுகிறது. புத்தகத்தை வெளியிடுபவர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது.
தமிழ்நாடு விடுதலைப்படைப் போராளி காலம்சென்ற தோழர் பசுபதி வீட்டுக்குச்;சென்று அவரின் வயதான தாயாரைக்கூட பொலிசார் மிரட்டியுள்ளனர்.
தோழர் தமிழரசனுக்கு சிலை வைக்க நிலம் வழங்கக்கூடாதென்று அந்த வயதான தாயாரிடம் மிரட்டி கையொப்பம் வாங்கியுள்ளனர்.
ஏன் இந்தளவு தூரத்திற்கு இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது?
ஏனெனில் தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அவரிலிருந்து ஆயிரக் கணக்கான தமிழரசன்கள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவே இந்திய அரசு அஞ்சுவதற்கு காரணமாகும்!
போராட்டம் இன்பமயமானத
போராட்டம் இன்பமயமானது – காரல் மார்க்ஸ்
திருமணம் முடித்த கையோடு கோத்தாவை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தில் கலந்துகொண்ட புதுமணத் தம்பதிகள்.
கனடா உணருகிறது. இந்தியா உணருமா?
•கனடா உணருகிறது. இந்தியா உணருமா?
கனடாவின் கொன்செர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் பிராம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுண் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்க வேண்டும் எனவும் "தமிழருக்கு இன அழிப்பு யுத்தம் இடம்பெற்ற போது கனடா ஒரு பிழையான பக்கத்தில் இருந்தது. இதற்கு நான் தமிழ் மக்களிடன் மன்னிப்பும் கேட்பேன்” எனவும் கூறியுள்ளார்.
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் - தோழர் தமிழரசன்
தமிழக தமிழர்கள் தமது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே ஈழத் தமிழர் போராட்டத்திற்கு செய்யும் உதவியாகும்.
அன்பான தமிழ் மக்களே!
அன்பான தமிழ் மக்களே!
சித்திரையல்ல தமிழர் புத்தாண்டு.
தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு.
இதையே இனி வழக்கமாக்கி கொள்வோம்.
மாமனிதர்” தோழர் தமிழரசன்
“மாமனிதர்” தோழர் தமிழரசன் !
தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன். ஆனால் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன் என்றார் மாமேதை காரல் மாக்ஸ்
அதேபோன்று,
தனகென்று வாழாமல் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர்
தனக்கென்று உழைக்காமல் தமிழ் மக்களுக்காக உழைத்தவர்
இறுதியில் தமிழ் மக்களுக்காவே தன் உயிரை அர்ப்பணித்தவர்
ஆம். அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன்
மூன்று மீற்றர் கயிற்றில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்து பத்து மீற்றர் கயிற்றில் கட்டிவிட்டு போனான் ஒருவன். மாடு மா, மா என்று கத்தியது , தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று.
தமிழக மாடுகளும் மன்னிக்கவும் மக்களும் தமக்கு கிடைத்த சட்டசபையை வைத்துக்கொண்டு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கற்பனையில் மிதக்கிறார்கள்.
வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட வரித்தொகை ஒரு வருடத்தில் சுமார் 350 கோடி ரூபா.
ஆனால் தற்போது கொள்ளைக்கார இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வசூலிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா.
வெள்ளைக்காரன் 350 கோடி ரூபாவை வசூலித்தபோது தம்மை அடிமைகளாக உணர்ந்து விடுதலைக்கு போராடிய தமிழ் இனம் இப்போது 85000 கோடி ரூபா வசூலிக்கப்படும்போது தான் சுதந்திரமாக இருப்பதாக கருதுகிறது.
ஆனால் தாங்கள் அடிமையாக இருப்பதால்தான் ஈழத் தமிழின அழிவை தடுக்க முடியவில்லை என்பதை மட்டுமல்ல, தமது காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியவில்லை என்பதையும் அவர்களால் உணர முடியவில்லை.
எனவேதான் "ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்" என்று தோழர் தமிழரசன் கூறினார்.
தமிழக மக்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்று கூறியதாலேயே தோழர் தமிழரசன் தமிழக காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டார்.
தமிழக அரசின் இன்றைய கடன் 5.21லட்சம் கோடி ரூபா. ஒவ்வொரு தமிழன் தலையிலும் 3 லட்சம் ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சம்பளம் 50 ஆயிரம் ரூபா. மாதாந்த சம்பளம் 50 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்ட கலைஞர் கருணாநிதியின் குடும்ப சொத்தின் பெறுமதி 45 ஆயிரம் கோடி ரூபாக்கள்.
மாதாந்த சம்பளம் 1 ரூபா மட்டுமே பெற்றுவந்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாக்கள்.
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் இந்த இருவரும் எப்படி கோடிக் கணக்கான ரூபா சொத்துக்கள் சேர்த்தார்கள்?
ஏன் இவர்களின் வருமானத்திற்கு மேலான சொத்தை இதுவரை பறிமுதல் செய்ய முடியவில்லை?
அப்படியாயின் இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?
இந்திய அரசின் கைப் பொம்மைகளாக இவர்கள் செயற்படுவதற்கு சலுகையாகவே இவர்களது ஊழல் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது.
85000கோடி ரூபா வரியாக வசூலிக்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே.
இந்திய மத்திய அரசு, நேபாளத்திற்கு 14000 கோடி ருபாவையும், பூட்டானுக்கு 8000 கோடி ரூபாவையும், இலங்கைக்கு 10000கோடி ரூபாவையும், மங்கோலியாவுக்கு 6000 கோடி ரூபாவையும் வழங்கியுள்ளது.
ஆனால் 85000கோடி ரூபாவை வரியாக வழங்கும் தமிழ்நாட்டிற்கு மழை வந்தபோது வழங்கிய உதவி தொகை வெறும் 1940 கோடி ரூபா மட்டுமே. புயல் வந்தபோது வழங்கிய தொகை வெறும் 350 கோடி ருபா மட்டுமே.
தமிழ்நாடு தனக்குரிய உதவியை பெற முடியாதது மட்டுமல்ல தன்னிடமிருந்து பெறப்படும் பணத்தை இலங்கைக்கு வழங்குவதைக்கூட தடுக்க முடியாத அடிமை நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தில்தான்; தமிழக மீனவனைக் கொல்லும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இலங்கை கடற்படைக்கு யுத்த கப்பல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலைக்கும் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக தமிழன் அடிமை நிலையில் இருப்பதையும், இந்திய அரசால் தமிழ்நாடு சுரண்டப்படுவதையும் உணர்ந்து சுட்டிக்காட்டியவர் தோழர் தமிழரசன்
அவர் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என விரும்பினார். தமிழக தமிழன் தன் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே ஈழத் தமிழனின் விடுதலைக்கும் உதவ முடியும் என நம்பினார்.
இவ்வாறு அவர் சிந்தித்து, உணர்ந்து செயற்பட்டமையினாலே அவர் இந்திய அரசின் உளவுப்படைகளால் அடித்துக் கொல்லப்பட்டார்
(மீள் பதிவு)
தமிழ் இனம் தனிநாடு கேட்டதே
தமிழ் இனம் தனிநாடு கேட்டதே இன்றைய நெருக்கடிக்கு காரணம் என்று முஸ்லிம் எம்.பி ரிசாத் கூறுகிறார்.
ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழித்தால் இன்றைய பிரச்சனை தீரும் என்கிறார் சுமந்திரன் எம்.பி
ஆனால், தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரிக்காதவரை சிங்கள மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்ற உண்மையை எந்தவொரு தலைவரும் கூறவில்லை.
இரயில் விபத்தில் கால்கள்
“இரயில் விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட போதும் உறவினர்கள் எல்லோரும் வெளிநாட்டிற்கு அழைத்தபோதும் பல்கலைக்கழக கல்வியை முடிக்கவேண்மென்ற ஆர்வத்தில் எங்களுடன் தொடர்ந்த விமலேஸ் அக்கா.
ஒருநாள் வீதியில் வரும்போது அவரது கைப்பையில் இருந்த பணத்தை பறிப்பதற்காக இந்திய அமைதிப்படையால் வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்டார்.
பின்னர் அவரது செயற்கை கால் கொக்குவில் பிரதேசத்தில் உள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது”
தன்னை மிகவும் பாதித்த பதிவு என நண்பர் ஒருவர் இப் பதிவை எனக்கு அனுப்பி வைத்தார்.
ஆம். உண்மைதான். இப்படி ஆயிரக்கணக்கானவர்களின் மரணத்திற்கு இதுவரை எந்த விசாரணையும் இல்லை. எந்த நீதியும் வழங்கப்படவில்லை.
சீக்கியர்களின் படுகொலைக்கு மன்னிப்பு கேட்ட இந்திய பிரதமர் ஏன் தமிழினப் படுகொலைக்கு இதுவரை வருத்தம்கூட தெரிவிக்கவில்லை என்று கேட்டால்,
இந்திய பிரதமர் பதில் சொல்லுகிறாரோ இல்லையோ ஆனால் அதற்குள் சம்பந்தர் ஐயா ஓடிவந்து “அப்படி கேட்கக்கூடாது;. கேட்டால் அப்புறம் இந்தியா தீர்வு பெற்றுத் தராமல் விட்டிடும்” என்கிறார்.
இதுகூட பரவாயில்லை. தமிழகத்தில் சில திமுக கூட்டணி ஆதரவாளர்கள் இதை இனி நினைவு கூராக்கூடாதாம். மறந்து விடும்படி மறைமுகமாக கூறுகின்றனர்.
ஏன் என்று கேட்டால், இல்லையென்றால் பாஜக பாசிசம் வந்திடும் என்று மிரட்டுகிறார்கள்.
தமிழ்நாடு விடுதலைக்காக புறப்பட்டு
தமிழ்நாடு விடுதலைக்காக புறப்பட்டு தனது 42வது வயதில் கொல்லப்பட்ட மகன்.
தனது மகன் கொல்லப்பட்டுவிட்டான் என்பதை அறியாமல் அவன் திரும்பி வருவான் என தன் வாழ்நாள் முழுவதும் காத்திருந்த தாய்.
தமிழத்தேசிய வரலாற்றின் மகத்தான பக்கங்கள் இவை.
குறிப்பு - இன்று தோழர் தமிழரசன் 77வது பிறந்த தினம்.
இந்தியாவை யாரும் உரிமை கொண்டாட முடியாது
இந்தியாவை யாரும் உரிமை கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம். அப்படி, உரிமை கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வக்குடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாட முடியும்.
- அண்ணல் அம்பேத்கர்
டாணாக்காரன்
•டாணாக்காரன்
அரசின் வன்முறைக்கருவியான காவல்துறையின் இன்னொரு பக்கத்தை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் காட்டியிருக்கிறார்கள்.
ஆங்கிலேயர் காலத்தில் எப்படி அரசின் ஏவல் நாய்களாக காவல்துறை கட்டப்பட்டதோ அதே முறையில்தான் இப்பவும் கட்டப்படுகிறது என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள்.
இவ்வாறான திரைப்படங்களை பார்த்து ஆதரித்து வெற்றிபெற வைப்பதன் மூலம் இதுபோன்ற திரைப்படங்கள் வெளிவருவதற்கு வழி வகுக்கலாம்.
சென்னையில் உள்ள ஒரு மாலில்
சென்னையில் உள்ள ஒரு மாலில் தீவிரவாதிகள் பணயம் வைக்கிறாங்க.
இதில் பிரதமரில் இருந்து உள்துறை அமைச்சர் றோ எல்லாம் வராங்க.
ஆனால் தமிழக முதல்வரை மட்டும் எங்குமே காணல.
ஒருவேளை முதல்வர் துபாய் போனப்ப இந்த சம்பவம் நடந்திருக்குமோ?
அல்லது தயாரிப்பாளர் விநியோகிஸ்தர் எல்லாம் திமுக என்பதால் முதல்வர் கதையில வராமல் தவிர்த்துவிட்டார்களோ?
மகிந்த ராஜபக்சா கும்பலை
மகிந்த ராஜபக்சா கும்பலை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டம் 6வது நாளாக தொடர்கிறது.
கொட்டும் மழையிலும் மக்கள் விடாது போராடுகின்றனர்.
ஆனால் இந்திய அரசு மீண்டும் 15200 கோடி ரூபா உதவி வழங்கி மகிந்த கும்பலைக் காப்பாற்ற முன்வந்துள்ளது.
ஆனால் இந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று சிங்கள அரசை இந்திய அரசு வலியுறுத்தவில்லை.
தமிழக முதல்வர் இந்திய அரசை வலியுறுத்துவாரா?
ஒரு எலும்பிற்காக எந்தவொரு நேர்மையான
ஒரு எலும்பிற்காக எந்தவொரு நேர்மையான மனிதனும் தன்னை நாயாக்கிக் கொள்ள மாட்டான் - வியட்நாமிய பழமொழி
குரங்குகளால் ஏன் காரை ஓட்ட முடியவில்லை
குரங்குகளால் ஏன் காரை ஓட்ட முடியவில்லை என்பதல்ல கேள்வி
குரங்குகளின் கையில் காரை யார் ஒப்படைத்தார்கள் என்பதே கேள்வி.
குறிப்பு - இது அரசியல் பதிவு இல்லை. எனவே இதைப் படித்ததும் உங்களுக்கு மகிந்த கும்பல் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பு அல்ல.
இந்த இரண்டு நிலைக்கும்
இந்த இரண்டு நிலைக்கும் ஒரு கும்பலே காரணம்.
அந்த மகிந்த கும்பலை விரட்டியடிக்க வேண்டும்.
அக் கும்பல் சுருட்டி வைத்திருக்கும் மக்கள் பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் 2000வது நாளாக நடைபெறுகிறது.
தற்போது கொழும்பில் 6வது நாளாக போராட்டம் செய்யும் எவரும் இவர்களின் போராட்டத்தில் ஒருநாள்கூட கலந்துகொள்ளவில்லை என்பதைவிட,
தாம் அமைக்கவிருக்கும் புதிய அரசில் இவ் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்கு உடன் தீர்வு காணப்படும் என்ற உறுதிமொழியைக்கூட இதுவரை கொடுக்காமைக்கு என்ன காரணம்?
தமிழ் மக்களின் ஆதரவற்ற சிங்கள மக்களின் போராட்டமும் ,
தமிழ் மக்களின் ஆதரவற்ற சிங்கள மக்களின் போராட்டமும் , சிங்கள மக்களின் ஆதரவற்ற தமிழ் மக்களின் போராட்டமும் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை.
எனவே தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து போராடுவதற்கு தமிழ் மக்களின் உரிமைகளை சிங்கள மக்கள் அங்கீகரிப்பது முன்நிபந்தனையாகும்.
இதனை தமிழ் தலைமைகள் சிங்கள மக்களுக்கு சொல்ல வேண்டிய தருணம் இது.
மக்களின் போராட்டமும் , சிங்கள மக்களின் ஆதரவற்ற தமிழ் மக்களின் போராட்டமும் ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை.
எனவே தமிழ் மற்றும் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து போராடுவதற்கு தமிழ் மக்களின் உரிமைகளை சிங்கள மக்கள் அங்கீகரிப்பது முன்நிபந்தனையாகும்.
இதனை தமிழ் தலைமைகள் சிங்கள மக்களுக்கு சொல்ல வேண்டிய தருணம் இது.
மாவை சேனாதிராசா - ஐயா!
மாவை சேனாதிராசா - ஐயா! சுமந்திரன் நள்ளிரவில் பிரதமரைச் சந்தித்து ஆலோசனை கூறுகிறார். அப்புறம் இளைஞர்களை போராட்டத்தில் பங்குபற்றும்படி பத்திரிகையில் அறிக்கை விடுகிறார். நம்ம உண்மையான நிலைப்பாடு என்ன?
சம்பந்தர் ஐயா – ஏன் தம்பி சுமந்திரன் அப்படி செய்கிறீர்?
சுமந்திரன் - அது வந்து ஐயா, போறபோக்கைப் பார்த்தால் சஜித் ஆட்சி அமைப்பார்போல கிடக்கு. அதுதான் அவருக்கு சார்பாய் ஒரு அறிக்கை விட்டிருக்கிறன்.
சம்பந்தர் ஐயா – எதுவானாலும் இந்திய தூதர் என்ன சொல்கிறாரோ அப்படியே செய்துகொள்ளும் தம்பி. அப்புறம் என் சொகுசு பங்களாவுக்கும் பிரச்சனை இல்லாமல் பார்த்துக்கொள்ளும். சரிதானே?
கடந்தமுறை கடன்கொடுத்துவிட்டு
கடந்தமுறை கடன்கொடுத்துவிட்டு திருமலை எண்ணெய்குதத்தை பெற்றுக்கொண்ட இந்திய அரசு இந்த முறை கடன்கொடுத்துவிட்டு எதைப் பெற்றுக்கொள்ளப்போகிறது?
தமிழர் வளங்களை பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு தமிழருக்கு தீர்வு வழங்குங்கள் என்று சிங்கள அரசை வற்புறுத்தாதது ஏன்?
சேர்! நள்ளிரவில போய்
சேர்!
நள்ளிரவில போய் மகிந்தவுக்கு ஆலோசனை சொல்லுறீங்க. அப்புறம் இளைஞர்களை போராட்டத்தில் கலந்துகொள்ளச் சொல்லுறீங்க.
நாங்க போராட்டத்தை ஆதரிக்கிறதா வேணாமா? உறுதியாக சொல்லுங்க சேர். எத்தனை தரம் மாத்தி மாத்தி எழுதுறது?
#சுமந்திரன் தம்பிகளின் புலம்பல்
சுமந்திரன் - வடை சுடுவாயா?
சுமந்திரன் - வடை சுடுவாயா?
கடைகாரர் - ஆமா, நல்லாய் சுடுவேன் சேர்
சுமந்திரன் - எண்ணெய் , சட்டி இல்லாம சுடுவாயா?
கடைகாரர் - அது எப்படி சேர் முடியும்?
சுமந்திரன் - நான் சுடுவேனே. சந்தேகம் இருந்தால் என் தம்பிகளிடம் கேட்டுப் பார்.
கடைகாரர் - ??????
நள்ளிரவில் பிரதமர் மகிந்தவை
நள்ளிரவில் பிரதமர் மகிந்தவை சந்தித்து ஆலோசனை கூறிய சுமந்திரனே மக்களுடன் சேர்ந்து போராடும் நிலை வந்துள்ளது.
அதுவும் கையில் தீப்பந்தம் ஏந்தி போராடும் நிலைக்கு வந்துள்ளார்.
போராட்டம் பல அதிசயங்களை நிகழ்த்துகிறது.
அது மகிந்த கும்பலுக்கு மட்டுமல்ல சுமந்திரன்களுக்கும் அற்புதமான பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.
அன்னை பூபதியின் மரணம்!
•அன்னை பூபதியின் மரணம்!
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?
அன்னை பூபதி தனது 56 வயதில் 19.03.1988 யன்று உண்ணாவிரதம் ஆரம்பித்தார்.
சரியாக ஒரு மாதம் கழித்து 19.04.1988 யன்று அவர் மரணமடைந்தார்.
அன்னைபூபதி ஒரு சாதாரண தமிழ்பெண். அவர் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடினார்.
ஆனாலும் காந்தி தேசம் என்று கூறப்பட்ட இந்திய அரசு அவரின் போராட்டத்தை கொஞ்சம்கூட மதிக்கவில்லை.
மாறாக அவரின் கணவர் மற்றும் பிள்ளைகளை கைது செய்து மிரட்டியது.
இவ்வாறு அன்னை பூபதியைக் கொன்றவர்கள் இப்போது கொஞ்சம்கூட வெட்கம் இன்றி வடக்கு கிழக்கில் 20 காந்தி சிலைகளை நிறுவுகிறார்கள்.
ஆனால், அன்னை பூபதி தன் மரணத்தின் மூலம் எமக்கு இரண்டு பாடங்களை கற்பித்துள்ளார்.
முதலாவது, இந்திய அரசை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்பக்கூடாது.
இரண்டாவது, அகிம்சை போராட்டம் தீர்வை பெற்று தராது என்பது.
இந்த இரண்டு பாடங்களையும் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. எப்போதும் நினைவில் கொள்ளல் வேண்டும்.
இதுவே அன்னை பூபதிக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.
குறிப்பு - இன்று (19.04.2022) அன்னை பூபதியின் 34வது நினைவு தினம் ஆகும்
கோத்தபாயாவை விரட்டியடிக்கும்
கோத்தபாயாவை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தமிழ் மக்கள் கலந்துகொள்ள தேவையில்லை என்று கூறுவது மறைமுகமாக கோத்தபாயா ஆட்சிக்கே உதவுகிறது என்பதை உணர வேண்டும். தமது எதிரியை தோற்கடிப்பதற்குரிய எந்தவொரு வாய்ப்பையும் தமிழ் மக்கள் தவற விடக்கூடாது.
எப்போதும் இப்படி தமிழர் நலனுக்காக
எப்போதும் இப்படி தமிழர் நலனுக்காக குரல் கொடுப்பதால்தானா ஆரியமும் திராவிடமும் மட்டுமன்றி சுமந்திரன் தம்பிகளும் சீமானை திட்டித் தீர்க்கின்றனர்?
இவர் பிரச்சனையை சரியாக
இவர் பிரச்சனையை சரியாக இனங்காண்கிறார். ஆனால் அதை தலைகீழாக சொல்கிறார்.
சிங்கள இனவாதம் வலிமை பெற்றதால்தான் தமிழ் இனவாதம் வளர்ச்சி பெற்றது.
இந்த உண்மையை சரியாக உணராதவரை இவர்களால் ஒருபோதும் இனவாதத்தை ஒழிக்க முடியாது.
தலையணைகளை மாற்றுவதன்
தலையணைகளை மாற்றுவதன் மூலம் தலைவலியை குணப்படுத்த முடியாது.
அமைச்சர்களை மாற்றுவதன் மூலம் நெருக்கடியை தீர்க்க முடியாது.
பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாபெரும் மக்கள் பேரணி கொழும்பு நகருக்குள் புகுந்துள்ளது.
எருமைகளுக்குகூட புரிய
எருமைகளுக்குகூட புரிய வைத்துவிடலாம். ஆனால் இந்த 200 ரூபா உடன்பிறப்புகளுக்கும் சுமந்திரன் தம்பிகளுக்கும் ஒருபோதும் புரியவைக்கவே முடியாது.
அமைதி வழியில் போராடிய
அமைதி வழியில் போராடிய மக்கள் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு
ஒருவர் மரணம். 24பேர் காயம்.
அரசு வன்முறை மூலம் மக்கள் போராட்டத்தை அடக்க முனைகிறது.
ஆனால் இம்முறை மக்கள் அரசுக்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.
பொலிஸ் - என்னய்யா பிரச்சனை உங்களுக்கு?
பொலிஸ் - என்னய்யா பிரச்சனை உங்களுக்கு?
மக்கள் - ஐயா! இங்கிருந்த தரமுயர்த்தப்பட்ட கல்முனை பிரதேச செயலகத்தை காணவில்லை.
பொலிஸ் - என்னது பிரதேச செயலகத்தை காணவில்லையா?
மக்கள் - ஆமாய்யா. நாங்கள் சொல்வது பொய் என்றால் தரமுயர்த்தப்பட்ட பிரதேச சபைக்கு கணக்காய்வாளரை நியமித்த சுமந்திரனிடம் கேட்டுப் பாருங்கள்.
பொலிஸ் - சரி இப்ப அந்த கணக்காய்வாளர் எங்கே?
மக்கள் - அவரையும் காணவில்லை ஐயா.
பொலிஸ் - என்னது கணக்காய்வாளரையும் காணவில்லையா? என்ன விளையாடிறீங்களா?
மக்கள் - ஐயா ! நாங்கள் சொல்வது பொய் என்றால் வியாளேந்திரன் சேரிடம் கேட்டுப்பாருங்கள்.
பொலிஸ் - அவரிடம் என்னத்தைக் கேட்பது?
மக்கள் - கோத்தபாயா பதவி ஏற்றதும் மூன்று நாளில் கல்முனை பிரதேசசபை தர முயர்த்தப்படும் என்று சேர் எங்களுக்கு கூறியிருக்கிறார். இப்ப கோத்தபாயா பதவி ஏற்று 2 வருடத்திற்கு மேலாகிவிட்டது. அப்ப பிரதேச சபை வந்திருக்கும்தானே ஐயா?
பொலிஸ் - ?????
இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க
•இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க நாம் உரத்து குரல் எழுப்புவோம்!
என்ன செய்தாலும் இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்பது உண்மைதான்.
குறைந்த பட்சம் அவர்களுக்கான நீதியையாவது நாம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
குண்டுகள் வெடித்து இரண்டு வருடங்களாகிவிட்டன. ஆனால் அதில் கொல்லப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை.
யாருடைய தலைமையில் குண்டு வெடிப்புகள் நடந்தது என்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடி மருந்து எங்கிருந்து வந்தது என்று அறியப்படவில்லை.
ஆக மொத்தத்தில் இந்த குண்டு வெடிப்பிற்கான காரணம் என்ன என்பதுகூட இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை .
"இது மத பின்புலம் கொண்ட குண்டு வெடிப்பு அல்ல. இது அரசியல் பின்புலம் அதுவும் சர்வதேச அரசியல் பின்புலம் கொண்ட குண்டு வெடிப்பு" என்கிறார் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் டிபர்ணாந்து .
அவர் இங்கு சர்வதேச அரசியல் பின்புலம் என்று கூறுவது இந்தியாவையே.
இந்த கருத்து கிருத்தவ பேராயருக்கு மட்டுமல்ல பல அரசியல்வாதிகளுக்கும் இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் நேரிடையாகவே இந்தியாவை குற்றம் சாட்டியிருந்தார்.
இவர்கள் கூறுவது உண்மைதானோ என்று நம்ப வேண்டியிருக்கிறது.
ஏனெனில் இது வெறும் மத நோக்கத்திற்காக செய்யப்பட்ட குண்டு வெடிப்பு எனில் இந் நேரம் விசாரணை மூலம் உண்மைகளை பொலிஸ் அதிகாரிகள் கொண்டு வந்திருப்பர்.
இது இந்தியா சம்பந்தப்பட்ட குண்டு வெடிப்பு என்பதால்தான் இன்னமும் உண்மைகள் வெளிவரவில்லை.
இனியும்கூட இது குறித்த உண்மைகள் வெளிவருமா என்பது சந்தேகமே.
இந்நிலையில் கொழும்பு ஆயர் இது குறித்து சர்வதேச விசாரணை கோரப்போவதாக அறிவித்துள்ளார்.
கொல்லப்பட்டவர்கள் கத்தோலிக்க கிருத்தவர்கள் மட்டுமல்ல அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். அதனால்தான் இன்னும் அவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை
தமிழினப்படுகொலைகளைத் திரட்டும்
தமிழினப்படுகொலைகளைத் திரட்டும் பணியில் முன்னின்று செயற்பட்ட அருட்தந்தை கருணாரட்ணம் அவர்கள் சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்தார்.
பொலிஸ் மற்றும் ராணுவம்
பொலிஸ் மற்றும் ராணுவம் அரசின் வன்முறைக் கருவிகள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
இதுவரை தமிழ் மக்களை எந்த பொலிஸ் மற்றும் ராணுவம் சுட்டதோ அதே பொலிஸ் ராணுவம்தான் இப்போது ரம்புக்னவில் சிங்களவர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளது.
1971ல் ஏழாயிரம் சிங்கள இளைஞர்களையும் 1989ல் அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களையும் கொன்ற அதே பொலிஸ் மற்றும் ராணுவம்தான் இப்போதும் சிங்கள மக்களை கொல்கிறது.
அப்பாவி தமிழ் மக்களை சுட்டுக் கொன்றுவிட்டு பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய சிங்கள அரசு இப்போது இந்த அப்பாவி சிங்கள மக்கள் மீது என்ன முத்திரை குத்தப் போகிறது?
சிங்கள தலைவர்களுடன்
சிங்கள தலைவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொள்ளும் சுமந்திரன் “ தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்காமல் சிங்கள மக்கள் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது” என்ற உண்மையை உரத்து கூற வேண்டும்.
சிங்கள மக்களே புலிகள
சிங்கள மக்களே புலிகளை பாராட்ட தொடங்கிவிட்டார்கள். இந்த 200 ரூபா உ.பிஸ் எப்போது உணரப் போகிறார்கள்?
அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு
அடுத்த சந்ததி வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடும் என்று நினைத்துவிடாதீர்கள்.
அது தனக்குரிய நீதியைப் பெறாமல் ஓயாது.
மாபெரும் ஆசான் தோழர் லெனின்
•மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்கள் பிறந்த தினம்!
மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்களின் பிறந்த தினம் 22.04.1870
நூலகங்களில் உறங்கி கிடந்த மாக்சியத்தை ருஸ்சியப் புரட்சி மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் தோழர் லெனின்
ருஸ்சிய பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமைதாங்கி ருஸ்சிய புரட்சியை வென்றெடுத்து உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தந்தவர் தோழர் லெனின்
முதலாளி வர்க்க கொடுமைகளை ஒழிக்க பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப்பிடிக்க ஆயுதப் போராட்டத்தின் மூலமான புரட்சி அவசியம் என நிரூபித்தவர் தோழர் லெனின்
தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று உலகப்புரட்சி பேசிய ரொக்ட்சியை தத்துவார்த்த ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் தோற்கடித்தவர் தோழர் லெனின்
தன் வாழ்நாள் முழுவதும் திரிபுவாதிகளை அம்பலப்படுத்தியவர் தோழர் லெனின்.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகப் பாட்டாளிவர்க்க ஜக்கியத்திற்கு வழி அமைத்தவர் தோழர் லெனின்
தேசிய இனப்பிரச்சனைக்கு சுயநிர்ணய உரிமையை தீர்வாக முன்வைத்து சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவர் தோழர் லெனின்
இறந்தும்கூட எதிரிகளுக்கு சிம்ம சொப்பனாக விளங்குகிறார் தோழர் லெனின்.
அதனால்தான் ருஸ்சிய அருங்காட்சியத்தில் இருக்கும் அவர் உடலை அழித்து புதைக்க வேண்டும் என்று எதிரிகள் கோருகிறார்கள்.
உலகம் உள்ளவரை தோழர் லெனின் பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமன்றி தேசிய இனங்களினாலும் நன்றியுடன் நினைவு கூரப்படுவார்.
மாபெரும் ஆசான் தோழர் லெனின் முன்வைத்த புரட்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
விடுதலைப் புலிகளைப் பார்த்து
விடுதலைப் புலிகளைப் பார்த்து தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய விடுதலைக்காக விடுதலைக்குயில்கள் இயக்கம் கண்டவர்.
பணப் பறிப்பு நடவடிக்கையில் காவல்துறை கைது செய்யப்போகிறது என்றவுடன் கலைஞர் காலில் ஓடிப் போய் விழுந்தவர்.
இன்று திராவிடத்திற்காக குரல் கொடுப்பதைப் பார்த்தால் மன்னிக்கவும் பிறந்தநாள் வாழ்த்து கூற முடியவில்லை.
இன்று உலக புத்தக தினம் (23.04.2022)
•இன்று உலக புத்தக தினம் (23.04.2022)
“புரட்சியில் துப்பாக்கிகளைவிடப் பெரிய ஆயுதம் புத்தகங்களே” என்று ரஸ்சிய புரட்சியை மேற்கொண்ட தோழர் லெனின் கூறினார்.
உண்மைதான். வாசிப்பதன் மூலமே ஒரு மனிதன் பூரணத்துவம் பெறுகின்றான். எனவே அதற்கு புத்தகங்கள் மிகவும் அவசியமாகின்றன.
எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் என்றார் தோழர் சே குவாரா
அதுவும் உண்மைதான் என்பதை ஈழத்தில் கண்டோம்.
முதலில் யாழ்ப்பாணம் நூலகம் இலங்கை அரசால் எரிக்கப்பட்டது. பின்னர் தமிழர்கள் எரிக்கப்பட்டார்கள்.
எமது தமிழ் சமூகத்தில் புத்தகங்களுக்கும் வாசிப்பிற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவாகவே இருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் புத்தகதினம் வரும்போது இந்த புத்தக வாசிப்பிற்காக நாம் சிறப்புமுகாமில்; நடத்திய போராட்டங்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களுக்கு பத்திரிகை வழங்கப்படுகிறது. றேடியோ கேட்க அனுமதிக்கப்படுகிறது. ரிவி பார்க்க அனுமதிக்கப் படுகிறது. புத்தகம் படிக்க அனுமதிக்கப்படுகிறது.
ஆனால் துறையூரில் இருந்த சிறப்புமுகாமில் இவை எதுவுமே எமக்கு அனுமதிக்கப்படவில்லை.
அன்றைய தமிழக அரசு சிறப்புமுகாமில் இவற்றை தராதது மட்டுமன்றி எமது சொந்த செலவில் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளிக்க மறுத்தது .
நாம் வேறு வழியின்றி எமக்கு சாப்பாடு பார்சல் கட்டி வரும் பேப்பர்களை படித்தோம்.
இதனை அறிந்த கியூபிராஞ் அதிகாரிகள் உடனே எமக்கு புரியாத மலையாள பத்திரிகைகளில் சாப்பாடு கட்டி தர ஏற்பாடு செய்தார்கள்.
இதனால் வேறு வழியின்றி பத்திரிகை படிக்க அனுமதிக்குமாறு கோரி 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அதன் பின்னரே அனுமதி தரப்பட்டது.
எமது சொந்த செலவில் புத்தகம் படிப்பதற்கே 14 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தமையை இன்றும் நினைத்து பார்க்கிறேன்.
ஆனாலும் புத்தகம் படிக்கும் ஆர்வம் மட்டும் இன்னும் குறையவே இல்லை.
எமது இளைஞர்கள் மத்தியில் இந்த புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறதோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது.
நூல்கள் வெளிவருவது குறைந்து வருகிறது. வெளிவரும் நூல்களும் மிகக் குறைந்தளவே அச்சிடப்படுகின்றது.
நூல் வெளியீட்டு விழாக்களிலும்கூட சுமார் இருபது முப்பது பேர்களே கலந்து கொள்கின்றனர். அதுகூட வடையும் தேநீரும் வழங்கியே அழைக்க வேண்டியிருக்கிறது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி புத்தகங்களின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது போல் தோன்றுகிறது.
எதுவானாலும் வாசிக்கும் பழக்கத்தை நாம் எம் மக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் வாசிப்பதன் மூலமே மனிதன் பூரணத்துவம் அடைகிறான்.
(கீழே உள்ள எனது படம் 1995ம் ஆண்டு துறையூர் சிறப்புமுகாமில் எடுக்கப்பட்டது.)
தோழர் லெனினும் பிரதமர் மோடியும்
•தோழர் லெனினும் பிரதமர் மோடியும்
ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனினை சந்திப்பதற்கு அமெரிக்க பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றிருந்தார்.
பிரதமர் அலுவலகத்தில் காத்திருந்த ரைஸ் வில்லியமுக்கு அவருக்கான சந்திப்பு நேரம் வந்திருந்தபோதும் கதவு திறக்கப்படவில்லை.
இது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நேரம் தவறாமையில் மிகவும் கறாராக இருப்பவர் தோழர் லெனின்.
சரி, யாரோ மிக மிக முக்கிய பிரமுகர் லெனினுடம் விவாதித்து கொண்டிருக்கிறார் என்று அந்த அமெரிக்க பத்திரிகையாளர் நினைத்தார்.
அரைமணி, ஒரு மணி, ஒன்றரை மணி ஆயிற்று. கதவு திறக்கவில்லை. லெனினுடன் இவ்வளவு நீண்ட பேட்டிக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் முழு அதிகாரம் பெற்ற அந்த தூதர் யாரோ? என்பதே அப் பத்திரிகையாளரின் கேள்வியாக இருந்தது.
கடைசியில் கதவு திறந்தது. அவரது அறையில் இருந்து வெளியே வந்தவரைப் பார்த்ததும் அனைவரும் அசந்து போய்விட்டார்கள்.
ஏனெனில் வெளியே வந்தவர் பரட்டைத் தலையும் அழுக்கு உடையும் கொண்ட ஒரு ஏழை விவசாயி.
லெனினுடைய அறைக்குள் பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றார். அவரிடம் லெனின் சொன்னார், " உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஏழை விவசாயி தம்போவ் பகுதியை சேர்ந்தவர். மின்சாரமயமாக்கல், கூட்டு பண்ணை அமைப்பு, புதிய பொருளாதாரக் கொள்கை ஆகியவை பற்றி அவருடைய கருத்துகளை கேட்டேன். உரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. இதனால் நேரத்தை மறந்துவிட்டேன்." என்று சொன்னார் இவர்தான் ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனின்.
அதேவேளை இந்திய பிரதமராக இருக்கும் மோடியையும் நினைத்து பார்க்கிறேன்.
கடந்த வருடம் பல மாதமாக டில்லியில் விவசாயிகள் போராடினார்கள். அதில் என்பதுக்கு மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள்.
ஆனாலும் பிரதமர் மோடியின் மனம் இரங்கவில்லை. விவசாயிகளை சந்திப்பதற்கு அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை.
நடிகைகளுக்கு நேரம் ஒதுக்கி சந்திக்க முடிந்த மோடியால் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லை என்பது கொடுமைதான்.
முதலாளிகளுக்காக அயராது பாடுபடும் பிரதமர் மோடி விவசாயிகளுக்காக பாடுபடுவார் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்தான்.
ஆனாலும் லெனின் காட்டிய வழி விவசாயிகளுக்கு இருக்கிறது. அவர்கள் அதில் பயணம் செய்து மோடிகளை தூக்கி எறிவார்கள். இது நிச்சயம்.
இந்தியா ஈழத் தமிழர்களுக்கு நண்பன் இல்லை
“இந்தியா ஈழத் தமிழர்களுக்கு நண்பன் இல்லை என்று சொன்னவர் தோழர் தமிழரசன்”
“இந்தியா என்பது பல தேசிய இனங்களின் சிறை கூடம் என்று சொன்னவர் தோழர் தமிழரசன்”
“தமிழ் நாட்டு இளைஞர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற வேண்டும்; என்று சொன்னவர் தோழர் தமிழரசன்.
“இந்தியா அரசே ஈழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி என்று மருதை ஆற்றில் குண்டு வைத்தவர் தோழர் தமிழரசன்”
“தோழர் தமிழரசன் தோற்றுவித்த தமிழ்நாடு விடுதலைப் படை வலிமை பெற்று இருந்தால் ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்கி இருக்க முடியுமா?”
இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியிருக்கிறார்.
தேர்தல் பாதையில் பயணிப்பவர்தான் சீமான். ஆனாலும் அவர் தோழர் தமிழரசன் பெயரை தைரியமாக உச்சரித்திருக்கிறார்.
இதேபோன்று ஸ்டாலின், வைகோ, ராமதாஸ் போன்றவர்களால் ஏன் தோழர் தமிழரசன் பெயரை உச்சரிக்க முடியவில்லை?
வெடிகுண்டு கூட ஒருமுறை தான் வெடிக்கும்
"வெடிகுண்டு கூட ஒருமுறை தான் வெடிக்கும்,
புத்தகம் படிக்கும் போதெல்லாம் வெடிக்கும்...
ஒருபுறம் பொலிஸ் காவலில்
ஒருபுறம் பொலிஸ் காவலில் பொதுமகன் பலி.
மறுபுறம் பெண் சப் இன்ஸ்பெக்டர் கழுத்தில் கத்திக் குத்து.
நம்புங்கள். இத்தனைக்கும் பொலிஸ் அமைச்சர் திராவிட முதல்வரே!
இனி இதற்கு 200 ரூபா உ.பிஸ் எப்படி உருட்டப் போறாங்க?
மகிந்த கும்பலை விரட்டியடிக்கும்
மகிந்த கும்பலை விரட்டியடிக்கும் போராட்டத்தில் மாணவர்களும் குதித்துள்ளனர்.
எத்தனை தடைகள். அத்தனையும் உடைத்தெறிந்து பல்கலைக்கழக மாணவர்கள் காலிமுகத்திடலை அடைந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகருகின்றது.
வன்மையான கண்டனம்
•வன்மையான கண்டனம்
பதூசு அம்மாள் அவர்கள் புதைக்கப்பட்ட அவரது சொந்த நிலத்தில் அவர் புதைக்கப்பட்ட இடத்தைச் சுற்றி சுற்றுவேலி அமைக்க முயன்றதை காவல்துறை தடுத்து வேலியை பிடுங்கி எறிந்துள்ளது.
பதூசு அம்மாள் தோழர் தமிழரசனின் தாயார் என்பதால் காவல்துறை இந்த அராஜகத்தை செய்துள்ளது.
இன்றும்கூட தோழர் தமிழரசனுக்கு இந்திய அரசு அச்சம் கொள்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இவர்கள் ஏன் தமது பதவியை
இவர்கள் ஏன் தமது பதவியை இளையவர்களுக்கு வழங்க மறுக்கின்றனர்?
கட்டையில் போகும்வரை பதவியில் ஒட்டியிருக்க ஏன் விரும்புகின்றனர்?
என்ன மொழியில் பேசினால்
என்ன மொழியில் பேசினால் உலகம் புரிந்துகொள்ளுமோ அந்த மொழியில் பேச ஆரம்பித்துவிட்டனர் எமது அடுத்த சந்ததியினர்.
அவர்கள் தமக்கான நீதியைப் பெறும்வரை ஓய்ந்து விட மாட்டார்கள்.
தமிழர் புலம்பெயர்ந்ததை பலவீனம் என்று சிலர் கூறினார்கள். அதையே பலமாக மாற்றிக் காட்டுகின்றனர் அடுத்த சந்ததியினர்.
ஆம். அதுபோல அன்று திருவாரூரில் இருந்த
ஆம். அதுபோல அன்று திருவாரூரில் இருந்து வந்த ரயிலில் டிக்கட் பரிசோதகர் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் இன்று இருக்கும் பல பிரச்சனைகள் இல்லாமல் இருந்திருக்கும்?
ராஜபக்சே ஒரு தெலுங்கு
ராஜபக்சே ஒரு தெலுங்கு வம்சாவளிதான் - காமாட்சிநாயுடு
ஆரியமும் திராவிடமும் ராஜபக்சே அரசைக் காப்பாற்றி வருவதற்கு இதுதான் காரணமா 200 ரூபா உடன்பிறப்புகளே?
தந்தை செல்வா தந்தை பெரியாரை
தந்தை செல்வா தந்தை பெரியாரை சந்தித்து ஈழத் தமிழருக்கு ஆதரவு தருமாறு கோரியபோது தன்னால் முடியாது என்று கூறிவிட்டார்.
பெரியார் பரவாயில்லை முகத்திற்கு நேரே மறுத்து விட்டார். ஆனால் கலைஞர் ஆதரவு தருவதாக கூறிவிட்டு 2009ல் முதுகில் குத்திவிட்டார்.
தமிழ்நாட்டில் எப்போதும்
தமிழ்நாட்டில் எப்போதும் சங்கிகளின் B டீம் திமுக என்கிறார் வானதி. அப்படியா 200 ரூபா உடன்பிறப்புகளே?
நாம் ஊமையாக இருக்கும்வரை
நாம் ஊமையாக இருக்கும்வரை
உலகம் செவிடாகவே இருக்கும்
இனி நாம் உரத்து குரல் கொடுப்போம்
உலகம் எமக்குரிய நீதியை தந்தேயாக வேண்டும்.
“Continuing Cycles of Violence and Genocide in Sri Lanka” என்னும் ஆவண திரைப்படம் நாளை (27/04/2022) மாலை 6:30 மணியளவில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் வெளியிடப்படவுள்ளது.
ஈழத் தமிழர்களால் மறக்க முடியாத நாள்
ஈழத் தமிழர்களால் மறக்க முடியாத நாள் (27.04.2009)
கடற்கரையில் மனைவி மற்றும் துணைவி சகிதம் கலைஞர் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த நாள்.
போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று அவர் அறிவித்த பின்னரே நாற்பதாயிரம் ஈழத் தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.
மக்கள் தொடர்ந்தும் படுகொலை செய்யப்படுவது பற்றி கேட்டபோது மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார்.
தன்னை கடலில் தூக்கி எறிந்தால் கட்டுமரமாகி வந்து காப்பேன் என்றார் அந்த உலகத் தமிழின தலைவர்.
அவர் காப்பாற்ற வரவில்லை. மாறாக டில்லி சென்று தன் பிள்ளைகளுக்கு அமைச்சு பதவி பெற்றார்.
இது பற்றி கேட்டபோது சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் மரண ஓலம் கேட்டால் இன்னொரு வீட்டில் மங்கல ஒலி கேட்கும் என்றார்.
இத்தகைய மனிதர்களால்தான்
இத்தகைய மனிதர்களால்தான் வரலாறு முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.
தனக்கு தண்டனை வந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து தமிழினத்தின் உரிமைக்காக ஜெர்மன் நீதிமன்றில் உரத்து குரல் கொடுத்திருக்கிறார்.
நாதன் தம்பி உணர்வுகள் பாராட்டுக்குரியவை. வாழ்த்துக்கள்.
இன்று எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள்
இன்று எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள். இதே நாளில்தான் ஈழ பிரச்சினையை ஒட்டி மு.கருணாநிதி இடைவேளை உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த உண்ணாவிரதத்தை குறித்து எள்ளலுடன் பிரபஞ்சன் "இரண்டு உணவு இடைவெளிக்குள் ஒருவர் உண்ணாவிரதத்தை கடைபிடிக்கிறாரென்றால் இந்தியாவில் அனைவரும் ஒவ்வொரு நாளும் உண்ணாவிரதமிருக்கின்றனர்." என்றார்
எழுத்தாளர்கள், தங்களுக்கான குறுகிய எல்லைவட்டத்திலிருந்து வெளியே வந்து, சமுதாயத்தில் மக்களின் துயர்நீக்க ,அதில் பங்கு கொண்டு குரல்கொடுக்கவேண்டும் என்று கூறிய பிரபஞ்சன் அவர்கள்,
தன் இறுதிகாலம் வரை தமிழ்நாட்டின் உரிமைகள், மற்றும் ஈழதமிழ் உறவுகளின் விடுதலைப்போராட்டத்தின் நியாயங்களை ஆதரித்து பேசியும் எழுதியும் விழிப்புணர்வை ஏற்படுத்திய மக்களின் எழுத்தாளர்.
பிரபஞ்சன் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்.
Subscribe to:
Posts (Atom)