Wednesday, June 29, 2022
அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார்
அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார் ஆனால் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது அது இன்னொரு நாட்டு விடயம் என்றார்.
அவர் தன்னை கடலில் வீசி எறிந்தால் கட்டுமரமாகி வந்து தமிழனுக்கு உதவுவேன் என்றார். ஆனால் ஈழத்தில் தமிழன் தத்தளித்தபோது கட்டு மரமாகி வந்து உதவுவார் என நம்பினோம். கடைசிவரை அவர் வரவேவில்லை.
3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்றார். ஆனால் அதன் பின்பும் தமிழர் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார்.
பொதுவாக பதவி கொடுக்காதவர்களுக்கு தன் இதயத்தில் இடம் கொடுப்பதாக கூறுவார். ஆனால் தத்தெடுத்த அகதிச் சிறுவன் மணிக்கு அந்த இதயத்திலும் இடங்கொடுக்காமல் கொன்று விட்டார்.
பக்கத்தில் மனைவி, துணைவி என்று இரண்டு பேரை வைத்துக் கொண்டு கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழன் பண்பாடு என்று பேசுவார்.
ஈழத்தில் பல்லாயிரம் தமிழர் மாண்டிருக்க உங்கள் பிள்ளைகளின் பதவி எற்பு விழா தேவையா என்று கேட்டால் சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் செத்தவீடு நடக்கும்போது பக்கத்து வீட்டில் கலியாணம் நடந்தது என்பார்.
வரலாறு அவரை பகுத்தறிவு பகலவன் என்று கூட எழுதிச் செல்லலாம். ஆனால் ஈழத்தமிழர் அவரது துரோகத்தை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
என்ன அவர் இறந்த பின்பும் திட்டுகிறீர்களே என யாராவது கேட்கக்கூடும். என்னசெய்வது மழை விட்டும் தூவானம் விடவில்லையே.
குறிப்பு - கலைஞர் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதனால் நாமும் அதிகமாக எழுதமால் சுருக்கமாக திட்டியுள்ளோம்.
இனப் படுகொலையில் கலைஞர் பங்கு என்ன?
இனப் படுகொலையில் கலைஞர் பங்கு என்ன?
கலைஞர் வெறும் மாநில முதலமைச்சர்தான். அவருக்கு இன்னொரு நாட்டில் நடக்கும் யுத்தத்தை நிறுத்தும் அதிகாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றார்கள்.
இன்னும் சிலர், கலைஞர் மட்டுமல்ல இந்திய அரசே நினைத்தாலும் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது என்கிறார்கள்.
ஆனால், இந்தியாவுக்காகவே யுத்தத்தை நடத்தினோம் என்று மகிந்த ராஜபக்சா கூறிய போது இந்திய அரசோ அல்லது இந்த இவர்களோ ஏன் அதை மறுக்கவில்லை?
சரி. பரவாயில்லை. இந்தியாவின் உதவி இல்லையேல் எம்மால் யுத்தத்தில் வென்றிருக்க முடியாது என்று கோத்தபாயா கூறினாரே. அப்போது அதை ஏன் இந்திய அரசோ அல்லது இவர்களோ மறுக்கவில்லை?
சரி. பரவாயில்லை. யுத்தத்தை நிறுத்த இந்தியா விரும்பவில்லை. புலிகள் அழியும்வரை யுத்தம் தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக இருந்தது என்று ராணுவ தளபதி சரத்பொன்சேகா கூறியிருக்கிறாரே. இதற்கு இவர்கள் என்ன கூறப் போகிறார்கள்?
சரி. அதெல்லாவற்றையும் விடுவோம். நாராயணனும் சிவசங்கர்மேனனும் ஒவ்வொரு முறையும் கொழும்பு சென்று திரும்பும்போது சென்னை வந்து கலைஞர் கருணாநிதியை எதற்காக சந்தித்தனர்?
எந்த அதிகாரமும் இல்லாத முதலமைச்சரிடம் இவர்கள் சந்தித்து என்ன பேசினார்கள்? கலைஞரிடம் திருக்குறளுக்கு விளக்கம் கேட்க சந்தித்தார்கள் என்று கூறப்போகிறார்களா?
பிரபாகரனை கைது செய்யும்போது கௌரவமாக நடத்த வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி அறிக்கை விட்டிருந்தார். பிரபாகரனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படப்போகின்றது என்பது எந்தவித அதிகாரமும் இல்லாத முதலமைச்சரான கலைஞருக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது?
இறுதி நேரத்தில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கலைஞருடன் பேசக் கேட்டபோது “பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் கூறுங்கள்” என்று கனிமொழி கூறினாரே.
அப்போதாவது கலைஞர் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று நடேசனிடம் கூறியிருக்கலாமே ? மாறாக கனிமொழி மூலம் வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு சரண்அடையும்படி எந்த அதிகாரமும் இல்லாத கலைஞர் ஏன் எற்பாடு செய்தார்?
குறைந்தபட்சம் சரணடையும்போது கொல்லப்படப் பொகிறீர்கள் என்பதையாவது இந்த எந்த அதிகாரமும் இல்லாத முதலமைச்சர் நடேசனிடம் கூறியிருக்கலாமே?
மத்திய அரசுடன் சேர்ந்து இனப்படுகொலைக்கு துணை போனதுடன் தமிழகத்தில் எழுந்த ஈழத் தமிழருக்கான ஆதரவு நிலையினையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியவர் எந்த அதிகாரமும் இல்லாத இந்த முதலமைச்சர் கருணாநிதி.
இந்த விபரங்களை தெரியாத தமிழக அப்பாவி உடன்பிறப்புகள் கலைஞரை ஆதரிப்பது புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் நன்கு விபரம் தெரிந்த சில ஈழத் தமிழர் கலைஞரை நியாயப்படுத்துவதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை
தியாகி சிவகுமாரன் 48வது நினைவு தினம்.
•தியாகி சிவகுமாரன் 48வது நினைவு தினம். (05.06.1974)
போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள்.
அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம்.
ஆம். அவரது மரணம் பல தமிழ் இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடவைத்தது.
சிவகுமாரன் தமிழீழத்திற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்.
அதற்காக களப்பலியான முதல் வீரர் எனக் குறிப்பிடக்கூடியவர்.
சிவகுமாரன் நம்பிய த.வி.கூட்டனி தலைவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராடும்படி தூண்டினார்கள்.
ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள்.
சிவகுமாரன் விரும்பியிருந்தால் நன்கு படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும்.
அல்லது மற்றவர்கள் போல் வெளிநாட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்திருக்க முடியும்.
ஆனால் அவரோ ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக போராடி மரணித்தார்.
எனவேதான் அவர் தியாகி சிவகுமாரன் என அழைக்கப்படுகிறார்.
பொலிசாரின் நெருக்கடியை அடுத்து சிவகுமாரன் சிலகாலம் இந்தியா தப்பிச் செல்ல விரும்பினார் என்றும் ஆனால் வள்ளம் ஓட்டிகள் கேட்ட பணம் கொடுப்பதற்கு அவரிடம் வசதி இருக்கவில்லை என அறியவருகிறது.
அவர் நம்பிய த.வி.கூ தலைவர்கள் கூட அவருக்கு இந்த பணத்தை கொடுத்து உதவவில்லை.
எனவேதான் அவர் வேறு வழியின்றி வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தார் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது.
வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது பொலிசார் சுற்றி வளைத்துவிட்டார்கள்.
தப்பிக்க முடியாத நிலையில் வேறு வழியின்றி அவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
எமது போராட்டத்தில் களப்பலியான முதல் போராளி என்ற பெருமை அவருக்கே சாரும்.
சிவகுமாரனுக்கு உதவி செய்யாமல் யார் ஏமாற்றினார்களோ அதே தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியினர் அவர் தியாகத்தை கொஞ்சம்கூட வெட்கம் இன்றி தமது பிரச்சாரத்திற்கு நன்கு பயன் படுத்திக்கொண்டனர்.
தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றனர். பதவி பெற்றபின் சிவகுமாரின் பெயரை மறந்துவிட்டனர்.
ஆனால் வரலாறு அவர் பெயரை பொறித்து நிற்கிறது.
தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
17 தமிழ் அகதிகள் 16வது நாளாக
17 தமிழ் அகதிகள் 16வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
ஆனால் இதுவரை ஒரு அதிகாரி சென்று பார்வையிடவும் இல்லை. அவர்கள் கோரிக்கைக்கு பதில் அளிக்கவும் இல்லை.
இக் கொடுமை வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் தமிழக அரசின் கீழ் உள்ள சிறப்புமுகாமில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு நடக்கிறது.
முள்ளிவாய்க்கால் சென்ற
முள்ளிவாய்க்கால் சென்று வந்து ஈழக் காவியம் எழுதப் போவதாக கூறினார்.
இப்ப அந்த முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு உதவியவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்கிறார்.
இப்படி கலைஞர் புகழ் பாடித்தான் வாழ வேண்டும் என்றால் அதைவிட செத்து விடு கவிஞரே
கனடா சென்ற இரு ஈழத் தமிழர்கள்
கனடா சென்ற இரு ஈழத் தமிழர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.
இந்தியா சென்ற 17 ஈழத் தமிழர் தம்மை விடுதலை செய்யுமாறு 16வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இந்தியா ஈழத் தமிழருக்கு உதவும் என்று 39 வருடமாக சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு இச் செய்தி சமர்ப்பணம்.
சிறப்புமுகாம் என்பது சிறை அல்ல.
சிறப்புமுகாம் என்பது சிறை அல்ல.
அங்கு அடைக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் இல்லை.
3, 2 (E ) சட்டப்படி ஒருவருடைய நடமாட்டத்தை மட்டுமே கட்டுப்படுத்துவது.
மற்றப்படி வெளியில் உள்ளவர்கள் வாழ்வதுபோல் வாழ்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையும் சட்டப்படி உண்டு.
இதுகூடத் தெரியாமல் இவர்கள் எல்லாம் எப்படி ஜேர்னலிஸ்றாக இருக்கிறார்கள்?
இதுதான் சிறப்புமுகாமில் அடைக்கப்படும்
இதுதான் சிறப்புமுகாமில் அடைக்கப்படும் அகதிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் உத்தரவு.
இதில் எங்கேயாவது அடைக்கப்படுபவர்கள் கிரிமினல் குற்றவாளிகள் என்று கூறப்பட்டுள்ளதா?
தொலைபேசி டவர் இல்லாத இடத்தில் அகதிகளை அடைக்க வேண்டும் என்று கூறும் கூமுட்டைகள் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?
மலையாள நடிகை நயன்தாராவை
மலையாள நடிகை நயன்தாராவை சந்திக்க நேரம் ஒதுக்கி அக்கறை எடுத்துக்கொண்ட திராவிட முதல்வரால் 17வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் ஈழத் தமிழ்அகதிகள் குறித்து இதுவரை நேரம் ஒதுக்கி அக்கறை காட்டவில்லை.
“ஐயோ என்னைக் கொல்றாங்க காப்பாத்துங்க”
“ஐயோ என்னைக் கொல்றாங்க காப்பாத்துங்க” என்று ஒப்பாரி வைத்த தலைவர் அல்ல இவர்.
“மீண்டும் பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்” என்று மரணத்தின்போதும் உறுதியாக கூறிய போராளி இவர்.
தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்
வீட்டில் கரப்பான் பூச்சிய
வீட்டில் கரப்பான் பூச்சியை அடிப்பதற்கு அண்ணாவைக் கூப்பிட்டவர்கள்
களத்தில் சக தோழியை காப்பாற்ற சுமந்து செல்லும் வலிமை மிக்கவர்களாக அவர்களை மாற்றியது "போராட்டம்"
ஆம். போராட்டம் மகத்தானது.
தோசை தமிழரின் உணவு இல்லை
தோசை தமிழரின் உணவு இல்லை என்று சிலர் கூறுகின்றார்கள். ஆனாலும் பல தமிழர்களின் பிடித்த உணவாக தோசை இருக்கிறது.
எனக்கு பிடித்து 3 உணவு எவை எனில் முதலாவது தோசை, இரண்டாவது தோசை மூன்றாவதும் தோசையே. அந்தளவுக்கு எனக்கு தோசை பிடிக்கும்.
நான் பல நாடுகளில் பல கடைகளில் தோசை சாப்பிட்டிருக்கிறேன்.
ஆனாலும் பருத்தித்துறையில் வட்டப்பாறை கடலில் குளித்துவிட்டு சிவன்கோவிலடியில் உள்ள அந்த வயதான பெண்ணின் கடையில் சாப்பிட்ட தோசைபோல் ருசியான தோசை இன்னும் சாப்பிடவில்லை.
பச்சை, சிவப்பு மஞ்சள் என்ற கலரில்; விதம்விதமான சம்பலுடன் சுடச்சுட சாப்பிட்ட அந்த தோசையின் ருசி இன்னும் நாக்கில் இருக்கிறது.
எனது பலவீனம் - தோசை
2003ல் அகதியாக கனடா சென்ற
2003ல் அகதியாக கனடா சென்ற பாலஸ்தீன குழந்தை பொருளியலில் பட்டம் பெற்று இன்று பேராசிரியராக கடமை ஆற்றுகிறார்.
இந்தியாவை நம்பி சென்ற ஈழ அகதிக் குழந்தை சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட தந்தையை பார்ப்பதற்காக தாயுடன் சேர்ந்து முகாம் வாசலில் உண்ணாவிரதம்.
ஈழ அகதிகளை இந்தியா நன்கு பராமரிக்கிறது என்று சொன்னவன் எவனடா?
சிறையைவிடக் கொடிய
சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாக சிறப்புமுகாம் இருக்கிறது. அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் 18வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இதற்கு யாராவது ஒரு ஜெய்பீம் படம் எடுத்துவிட்டால்தான் திராவிட முதல்வர் கவனிப்பாரா?
தமிழ்நாட்டில் தமிழத்தேசிய விடுதலைக்காக
தமிழ்நாட்டில் தமிழத்தேசிய விடுதலைக்காக போராடியதால் சுட்டுக்கொல்லப்பட்டவர்.
ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உறுதியான ஆதரவை வழங்கியவர்.
தமிழர் போராட்ட வரலாற்றில் என்றும் நினைவு கூரப்படுவார்.
சைலேந்திரபாபு திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது தமிழ்த்தேசிய போராளி நாகராசனை போலி என்கவுண்டர் மோதலில் சுட்டுக்கொன்றார்.
அடுத்தவாரம் என்னை கொடைக்கானல் நீதிமன்றக் காவலுக்கு அழைத்து சென்றபோது அதைக்கூறி என்னை மிரட்டினார். இதனை நான் நீதிமன்றில்கூறி பாதுகாப்பு பெற்றேன்.
தியாகி சிவகுமாரனே!
தியாகி சிவகுமாரனே!
மீண்டும் வந்து பிறந்துவிடாதே பிறந்தாலும் தமிழ் இனத்திற்காக போராடிவிடாதே
ஏனெனில் இது தியாகிகள் துரோகிகளாகவும் துரோகிகள் தியாகிகளாகவும் மாறும் காலம்
நீ கொல்ல முயன்ற துரையப்பா நல்லவராம் அவரைக் கொன்றவர்கள்; வன்முறையாளர்களாம்.
துரையப்பாவை துரோகி என்று யார் உனக்கு சொல்லி தந்தார்களோ அவர்களே இப்ப கூறுகிறார்கள் துரையப்பாவை சுட்டது தவறாம்.
தமிழாராய்ச்சி மாநாட்டில் மக்கள் இறப்பதற்கு யார் காரணம் என்று என்று நீ கோவப்பட்டாயோ அவர்களுடன் சேர்ந்து வாழ்வது தான் செய்த பாக்கியம் என்று கூறுபவரே இப்போது தமிழினத்தின் தலைவராக இருக்கிறார்.
யார் உனது போட்டோவைக் காட்டி தேர்தலில் வென்றார்களோ அவர்களே இப்போது கூறுகிறார்கள் தாங்கள் ஒரு போதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லையாம்.
எனவே தயவு செய்து மீண்டும் பிறந்துவர எண்ணிவிடாதே
திருச்சி சிறப்புமுகாமில்
திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறுகோரி 19வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குரல் கொடுத்துள்ளார்.
ஆனால் சிங்களவர்கள் மீது இரக்கம் காட்டி அவர்களுக்கும் உணவு அனுப்புமாறு திராவிட முதல்வரிடம் கேட்ட சுமந்திரன் இந்த தமிழ் அகதிகள் மீது இரக்கம் காட்டுமாறு ஏன் கேட்கவில்லை?
தமக்கு வோட்டு போட்டு பதவி கொடுத்த தமிழ் மக்களுக்காக சுமந்திரன் குரல் கொடுக்க மாட்டாரா?
தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க!
•தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க!
09.06.2022 தோழர் சுந்தரம் அவர்களின் 5வது நினைவு தினம் ஆகும்.
தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன்! தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன் -மாமேதை காரல் மார்க்ஸ்
ஆம். மறைந்த தோழர் சுந்தரம் அவர்களும் ஒரு மாமனிதர்தான்.
அவர் தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைத்தவர் அல்ல.
மாறாக, இறக்கும் வரையில் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையையும் மக்களுக்காக முழுமையாக அர்ப்பணித்த ஒரு புரட்சியாளர்.
தோழர் சுந்தரம் மாக்சிய லெனிய மாசேதுங் சிந்தனைகளை தனது வழிகாட்டியாக கொண்டவர்.
அவர் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுத்த ஒரு புரட்சியாளர்.
தோழர் தமிழரசன் மறைவுக்கு பின்னர் தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்நாடு விடுதலைப்படைக்கு தலைமை ஏற்று பரந்து பட்ட மக்களை அணிதிரட்ட அயராது பாடுபட்டவர்.
32 வருட தலைமறைவு வாழ்க்கை. அதில் சுமார் பத்து வருடங்கள் சிறை வாழ்க்கை.
எத்தனையோ வழக்குகள். சித்திரவதைகள். இத்தனைக்கும் மத்தியில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமின்றி இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் தோழர் சுந்தரம்.
தோழர் சுந்தரம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஈழத் தமிழர்களை உறுதியாக ஆதரித்தவர்.
நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத் தமிழருக்கான தமிழக மக்களின் ஆதரவை வெளிப்படுத்தியவர்.
அத்தகைய தோழர் சுந்தரத்தின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.
அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது அஞ்சலிகளையும் செவ் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் சுந்தரம் மரணமடைந்தபோது நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம்.
http://tholarbalan.blogspot.com/2017/06/blog-post_25.html
இவர்கள் இந்திய விசுவாசத் தலைவர்கள்
இவர்கள் இந்திய விசுவாசத் தலைவர்கள்
இந்தியா ஈழத் தமிழருக்கு உதவும் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்.
இந்திய தூதருடன் வாரா வாரம் விருந்துண்டு மகிழ்பவர்கள்
இவர்கள் ஏன் 20 வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் அகதிகளை விடுதலை செய்யும்படி இந்திய அரசிடம் கோர முடியவில்லை?
சிறப்புமுகாமில் 20வது நாளாக
சிறப்புமுகாமில் 20வது நாளாக ஈழத் தமிழ் அகதிகள் உண்ணாவிரதம்.
காவலில் தமிழக தமிழன் இறந்தால் தமிழகஅரசு பத்து லட்சம் ரூபா வழங்கும்.ஆனால் ஈழத் தமிழன் இறந்தால் பாடியைக்கூட தர மாட்டாங்களே?
சிறையில் இருக்கும் ஈழத் தமிழரை தமிழக தமிழர் சென்று பார்வையிடலாம். உ+ம் - சாந்தன் முருகன் போன்றவர்களை சீமான் பார்வையிடலாம்.
ஆனால் சிறப்புமுகாமில் இருக்கும் ஈழத் தமிழரை தமிழக தமிழர் எவரும் பார்வையிட முடியாது.
விசாரணைக் காலங்களில் சிறையில் இருந்தால் அந்த நாட்கள் தண்டனையில் கழிக்கப்படும்.
ஆனால் சிறப்புமுகாமில் இருக்கும் நாட்கள் தண்டனையில் கழிக்கப்படாது.
(முன்பு கழிக்கப்பட்டது. இப்போது திராவிட முதல்வர் அதனை நீக்கிவிட்டார்)
சிறையில் நீண்டகால சிறைவாசிகளுக்கு பரோல் விடுமுறை உண்டு. அவர்கள் பரோலில் சென்று குடும்பத்தினருடன் தங்கலாம். சிகிச்சை பெறலாம்
ஆனால் சிறப்புமுகாமில் உள்ளவர்களுக்கு பரோல் விடுமுறை இல்லை. அவர்கள் குடும்பத்தினருடன் தங்க முடியாது. சிகிச்சை பெற முடியாது.
தண்டனைக்காலம் குறிப்பிட்டு சிறையில் அடைக்கப்படுவதால் தாம் எப்போது விடுதலை பெறுவோம் என்பது சிறைவாசிகளுக்கு தெரியும்.
ஆனால் சிறப்புமுகாமில் அடைக்கப்படுபவர்களுக்கு விடுதலை அடையும்வரை தாம் எப்போது விடுதலை பெறுவோம் என்பது தெரியாது.
ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனைக்காலத்தைவிட அதிகமாக சிறையில் இருந்தால் அவரை உடனடியாக நீதிமன்றம் விடுதலை செய்யும்.
ஆனால் 6 மாதம் தண்டனை வழங்கப்படும் பாஸ்போர்ட் குற்றத்திற்காக 3 வருடங்களுக்கு மேலாக சிறப்புமுகாமில் வாடுகின்றனர் பல அகதிகள்
#சிறையைவிடக்கொடியசித்திரவதைமுகாம்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
•பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை என்றும் நினைவில் கொள்வோம்!
11.06.2022 ஜயா பெரும்சித்திரனார் அவர்களின் 27வது நினைவு தினமாகும்.
1983ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்பே தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் ஈழப் பிரச்சனை குறித்து அறிந்திருந்தனர்.
ஆனால் அதற்கு முன்னரே இதனை அறிந்து உதவி செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இருந்தனர்.
அவர்களுள் மிக முக்கியமானவர் பாவலர் ஜயா பெருஞ்சித்திரனார் அவர்கள்.
அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் ஈழத்தமிழர்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் செய்த உதவிகளும் என்றும் மறக்க முடியாதவை.
நான் ஜயா அவர்களுடன் அதிகம் பழகவில்லை. அவருடைய மகன் தோழர் பொழிலன் அவர்களுடனே அதிகம் பழகியிருக்கிறேன்.
பொழிலன் அவர்களை சந்திக்க சென்ற வேளைகளில் ஜயா அவர்களுடன் பேசியிருக்கிறேன். உணவு உட்கொண்டிருக்கிறேன்.
அவ்வேளைகளில் ஈழப் பிரச்சனை குறித்து ஆவலுடன் கேட்பார்.
அவரை மிகவும் கோபக்காரர் என்று சிலர் சொல்லியிருந்தனர். தூய தமிழில் கதைக்காவிடில் ஏசுவார் என்றெல்லாம் சிலர் என்னிடம் கூறியிருந்தனர்.
ஆனால் இது தவறான கருத்துகள் என்பதை அவருடன் பேசும்போது கண்டு கொண்டேன்.
ஏனெனில் அவர் என்னுடன் பேசும்போது சினங்கொள்ளாமல் மிகவும் மென்மையாகவே உரையாடினார்.
தோழர் தமிழரசன் அவர்கள் சென்னை வரும் வேளைகளில் எமது இருப்பிடத்திலேயே தங்குவார்.
அப்போது அவர் ஜயா அவர்களை சந்தித்த விபரங்களை என்னிடம் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு விடுதலையில் ஜயா அவர்கள் எவ்வளவு ஆர்வமாகவும் உறுதியுடனும் இருந்தார் என்பதை தோழர் தமிழரசன் அவர்களின் மறைவின் போது அவர் எழுதிய அஞ்சலிக் கவிதையில் இருந்து தெரிந்து கொண்டேன்.
இன்றும்கூட சிலர் சட்டத்திற்கும் சிறைக்கும் பயந்து தமிழ்நாடு விடுதலை பற்றியோ அல்லது தோழர் தமிழரசன் பற்றியோ பேச தயங்கும் நிலையில் அன்று உறுதியாக ஆதரித்து குரல் கொடுத்தவர் ஜயா பெருஞ்சித்திரனார்.
அவரிடம் சென்று பழகாத ஈழப்போராளி தலைவர்களே இல்லை என்று கூறுமளவுக்கு ஆரம்பத்தில் அனைத்து போராளிகளும் அவரிடம் பழகியுள்ளனர்.
அவரும் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகள் செய்தார் என்பதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாத உண்மைகள்.
முதல் பெண் போராளி ஊர்மிளாவுக்கு நெருக்கடியான நேரத்தில் ஜயா அவர்களே தனது வீட்டில் நீண்ட நாட்கள் வைத்து பாதுகாத்து அனுப்பினார்.
ஜயா அவர்கள் ஈழத் தமிழர் மீது கொண்டிருந்த அக்கறை, அனுதாபம, செய்த உதவிகள் மறக்க முடியாதவை.
ஈழத் தமிழர்கள் ஜயா அவர்களை என்றும் நினைவில் கொள்வார்கள்
இதுதான் திராவிட ஜனநாயகம்
இதுதான் திராவிட ஜனநாயகம்
இதுதான் மாற்றுக் கருத்துக்கு திராவிடம் வழங்கும் மதிப்பு
சங்கியைக் கண்டால் பயந்து பதுங்கும் திராவிடம் தமிழத் தேசியம் என்றால் ஏறி மிதிக்கும்.
அடிக்கு அடி என்ற தத்துவத்தை தமிழத்தேசியம் பின்பற்றவில்லை என்றால் இது தொடர்ந்துகொண்டே இருக்கும்.
ஆறு தமிழரும் உடனடியாக விடுதலை
ஆறு தமிழரும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அல்லது நீண்டநாள் பரோலிலாவது செல்ல வழி செய்ய வேண்டும்.
அவுஸ்ரேலியாவில் பிலோயலா கிராமத்தில்
அவுஸ்ரேலியாவில் பிலோயலா கிராமத்தில் வாழ்ந்த தமிழ் குடும்பத்தை கைது செய்து நாடு கடத்த முயன்றது அவுஸ்ரேலிய அரசு.
ஆனால் அக் கிராம மக்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக தொடர் போராட்டம் செய்து அத் தமிழ் குடும்பத்தை மீண்டும் தங்கள் கிராமத்தில் வாழ வழி செய்துள்ளார்கள்.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில் இத் தமிழ் குடும்பத்திற்காக போராடிய அந்த அவுஸ்ரேலிய கிராம மக்கள் தமிழ் மொழி பேசுபவர்கள் அல்ல. இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல.
ஆனால் இந்தியாவில் தமிழ் மொழி பேசும் தமிழ்நாட்டில் இந்து மதத்திற்காக பாடுபடுவதாக கூறுபவர்களின் ஆட்சியின் கீழ் ஈழ தமிழ் அகதிகள் 23 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
யாருமே கண்டு கொள்ளவில்லை. என்னே கொடுமை இது?
இந்த பொருளாதார நெருக்கடியிலும்
இந்த பொருளாதார நெருக்கடியிலும் தமிழரின் குருந்தூர் மலையில் விகாரை கட்டி அதில் புத்தர் சிலை வைக்கிறது சிங்கள அரசு.
தமிழரின் வட்டுவாக்கால் நிலம் கடற்படைக்கு கையகப்படுத்த முயற்சி செய்கிறது.
சிங்கள அரசுக்கு உதவும் திராவிட முதல்வரும் இந்திய பிரதமரும் இதை கண்டிக்க மாட்டார்களா?
1997 கலைஞர் ஆட்சியில்
1997 கலைஞர் ஆட்சியில் அகதியாக வந்த குடும்பம் பிரிக்கப்பட்டு கணவன் வேலூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார். ஒரு கால் இல்லாத மனைவியும் மகனும் மேலூர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் லண்டனில் குடியுரிமை பெற்று குடும்பமாக வாழ்கிறார்கள்.
#லண்டன் அரசு திராவிட அரசு இல்லை
சிறப்புமுகாமில் 24வது நாளாக
சிறப்புமுகாமில் 24வது நாளாக அகதிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் வீட்டு திருமணத்திற்கு செல்ல நேரம் இருக்கும் திராவிட முதல்வருக்கு அகதிகள் குறித்து முடிவு எடுக்க நேரம் இல்லை.
தேர்தல் காலத்தில் ஈழத் தமிழர் நலன் காக்கப்படும் என வாக்குறுதி கொடுத்த முதல்வர்?
இவர்கள் இருவரும் எதிர் எதிர் தலைவர்களாக இருந்தாலும்
இவர்கள் இருவரும் எதிர் எதிர் தலைவர்களாக இருந்தாலும்
ஈழத் தமிழ் அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து சித்திரவதை செய்வதில்
ஒன்றாகவே ஒருமித்து செயற்பட்டார்கள்.
காத்திருப்பு நீள்கிறத
காத்திருப்பு நீள்கிறது
தவிப்பு தொடர்கிறது
எப்போது விடுதலை ஆவார்கள் ஆறு தமிழர்?
ஆறு தமிழரும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும். அல்லது நீண்ட பரோல் விடுமுறையில் செல்ல வழி செய்ய வேண்டும்.
ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்திச்ச
“ஒரு ஈ என்னையே சுத்தி சுத்தி வந்திச்சு
என்னோட பழைய காதலனாக இருக்குமோன்னு கணவரிடம் சொன்னேன் ,,,
மிதிச்சே கொன்னுட்டார்”
அப்படின்னு பெண்கள் எழுத வேண்டும்.
குறிப்பு – சந்தேகம் வேண்டாம். கணவர் மிதித்து கொன்றது ஈயைத்தான்.😀😀
முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட
முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட எழுந்து நின்று சாவது மேலானது- சேகுவாரா
14.06.22 தோழர் "சே" யின் பிறந்த தினமாகும்.
அவர் கையில் கிட்டார் இருந்தபோதும் சரி அவர் கையில் துப்பாக்கி இருந்தபோதும் சரி அவை எப்போதும் மக்களுக்காகவே இயங்கின.
அவர் பல கருத்துக்களை கூறியிருந்தபோதும் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான கருத்து “ அடிமையாக விழுந்து கிடப்பதைவிட எழுந்து நின்று போராடி மடிவதே மேல்” என்பதாகும்.
எமக்கு என்று ஒரு தொன்மையான மொழி உண்டு
எமக்கு என்று ஒரு கலை கலாச்சாரம் மற்றும் பண்பாடு உண்டு
எமக்கு என்று நாம் செறிந்து வாழும் ஒரு நிலப் பரப்பு உண்டு
எமக் கென்று பொருளாதார வளமும் இயற்கை வளமும் கூட உண்டு
இருந்தும் எம்மை நாமே தீர்மானிக்கும் ஆட்சி எம்மிடம் இல்லை
ஏனெனில் நாம் அடிமையாக வீழ்ந்து கிடக்கிறோம்.
போர்த்துக்கேயரை எதிர்த்து போராடிய நாம்
ஒல்லாந்தரை எதிர்த்து போராடிய நாம்
ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய நாம்
இன்று ஏன் போராடாமல் வீழ்ந்து கிடக்கிறோம்?
ஏனெனில் நாம் “அடிமை” என்பதை உணராமல் இருக்கிறோம்.
எமக்கு தேவை அடுத்த வருடம் தீர்வு வரும் என்று ஏமாற்றும் தலைவர் அல்ல
எமக்கு தேவை இந்தியாவின் உதவியுடன் தீர்வு வரும் என்று கூறும் தலைவர் அல்ல.
எமக்கு தேவை அடிமையாக கிடக்கிறாய். எழுந்து நின்று போராடு என்று கூறும் ஒரு தோழர் சே
ஒருவர் “ஈழத்து சே” என்று அழைக்கப்பட்ட
ஒருவர் “ஈழத்து சே” என்று அழைக்கப்பட்ட மாவை சேனாதிராசா
இன்னொருவர் “சேப்பாக்கும் சே” என்று அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலின்
நல்லவேளை உண்மையான சே உயிரோடு இல்லை இந்த கொடுமைகளைப் பார்க்க.
45000கோடி ரூபா சொத்து எப்படி வந்தது
45000கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கலைஞரிடம் கேட்காதவர்கள்,
30000கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று ஜெயா அம்மையாரிடம் கேட்காதவர்கள்,
இட்லிக்குள் கறி எப்படி வந்தது என்று சீமானிடம் கேட்கிறார்கள்?
நாடு திரும்ப விரும்புபவர்களை
நாடு திரும்ப விரும்புபவர்களை அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
ஆனால் நாடு திரும்ப விரும்பும் 50 க்கு மேற்பட்ட அகதிகளை சட்ட விரோதமாக அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு.
திராவிட முதல்வர் இதைக் கவனிப்பாரா?
#சிறப்புமுகாமில் 26வது நாளாக அகதிகள் உண்ணாவிரதம்
திருச்சி சிறப்புமுகாமில் உண்ணாவிரதம் இருக்கும்
திருச்சி சிறப்புமுகாமில் உண்ணாவிரதம் இருக்கும் அகதிகளை கிரிமினல்கள் என்ற திராவிட அரசு,
மண்டபம் அகதிமுகாமில் உண்ணாவிரதம் இருக்கும் அகதிகளை என்ன சொல்லப் போகிறது?
திராவிட அரசு ஈழத் தமிழர் நலன் காக்கும் என்று சொன்னவன் எவனடா?
தன்னை "தமிழின தலைவர்" என்றவர்
தன்னை "தமிழின தலைவர்" என்றவர் ஈழத் தமிழர் அழிந்தபோது நடித்தார்.
ஆனால் ஒரு நடிகர் ஈழத் தமிழர் விடயத்தில் நடிக்கவில்லை.
மாறாக தான் இறந்தபின்பு தன் உடலில் புலிக்கொடி போர்த்தப்பட வேண்டும் என விரும்பினார்.
கோமியம் (மாட்டு மூத்திரம்)
கோமியம் (மாட்டு மூத்திரம்) குடிக்காதீங்கடா என்று சொன்னா கேட்டால்தானே?
இப்ப பாரு அண்ணாமலையை “ராம அவதாரம்” என்கிறான்
இளங்காற்றில் குருவிகள்கூட
இளங்காற்றில் குருவிகள்கூட வானில் பறக்கும்-ஆனால் புயலை எதிர்த்து கழுகுகள் மட்டுமே பறக்கமுடியும்!
தேர்தல் காலங்களில் பல திராவிட ஆரிய கட்சிகள் வரும். ஈழத் தமிழர் நலன் காக்கப்படும் என வாக்குறுதி தரும்.
ஆனால் விடுதலைக்காக ஈழத் தமிழ் அகதிகள் உண்ணாவிரதம் இருக்கும்போது அவை வருவதில்லை.
எம் தலைவர்கள் உறக்கத்தில் இருந்து
எம் தலைவர்கள் உறக்கத்தில் இருந்து விழித்துக்கொள்வார்களா?
சிறப்புமுகாமில் உண்ணாவிரதம் இருக்கும் அகதிகளுக்காக குரல் கொடுப்பார்களா?
சம்பந்தர் ஐயா - மேடம்! இந்த சிறப்புமுகாம் அகதிகளை
சம்பந்தர் ஐயா - மேடம்! இந்த சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுங்களேன்.
இந்திய தூதர் - மிஸ்டர் சம்பந்தன்! இன்னொரு குவாட்டர் தரட்டுமா?
யார் எழுத்தாளர்?
• யார் எழுத்தாளர்?
எழுத்தாளன் என்பவன் தான் எழுதுவதைவிட சிறந்தவனாக இருக்க வேண்டும் என்றார் ரஸ்சிய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி.
ஆம். அவர் அப்படி இருந்தமையினால்தான் இன்று உலகம் போற்றும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
இன்று மார்க்சிம் கார்க்கியின் நினைவு தினமாகும்(18.06.1936).
இவர்தான் உலகில் அதிக மொழிகளில் வெளியிடப்பட்ட புரட்சிகர “தாய்” நாவலை எழுதியவர்.
அன்றைய ரஸ்சிய ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி சுமார் இரண்டாயிரம் மக்கள் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர்.
ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்கியும் ஒருவர்.
அந்த நிகழ்ச்சி கார்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.
தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.
இந்நிலையில் ரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு கார்க்கிக்கு ஏற்பட்டது.
இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சிக்கு நிதி சேகரிக்க வேண்டி கார்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார்.
அங்கு தான் உலகப் புகழ்பெற்ற தாய் நாவலை அவர் எழுதினார்.
இன்று ரஸ்சிய பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்கி பள்ளிக்கூடமே சென்றதில்லை.
நார்வேயில் நடந்த குரூப் செஸ்
நார்வேயில் நடந்த குரூப் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். வாழ்த்துக்கள்.
1991ம் ஆண்டு மதுரை சிறையில் “புரட்சிமணி” என்ற ஆயுள்சிறைவாசி எனக்கு செஸ் கற்றுத் தந்தார். அவருக்கு என் நன்றிகள்.
இது என்ன நியாயம்?
•இது என்ன நியாயம்?
வாஞ்சிநாதன் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற தினமான ஜூன் 17ம் நாள் வீரவணக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிறையில்.அடைக்கப்பட்டார்.
அவரை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் அப்போதைய நெல்லை கலெக்டர் ஆஷ்துரை துப்பாக்கிக்சூடு நடத்த உத்தரவிட்டார்.
இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட வாஞ்சிநாதனும், சாவடி அருணச்சல பிள்ளையும் சேர்ந்து ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல திட்டமிட்டனர்.
அதன்படி 1911ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா புறப்பட்ட கலெக்டர் ஆஷ்துரையையும், அவரது மனைவியையும் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றார்.
பின்னர் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு களமரணம் அடைந்தார்.
வாஞ்சிநாதன் மரணம் அடைந்த ஜூன் 17ம் தேதியில் ஆண்டுதோறும் செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் நடுக்கல்லுக்கு வீரவணக்கம் செலுத்தும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
1987ம் ஆண்டு இலங்கை வந்த இந்திய ராணுவம் 10000ற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை சுட்டுக் கொன்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வல்லுறவு செய்தனர்.
கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான சொத்துக்களை சேதமாக்கினர்.
இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களுக்கு உத்தரவிட்ட பிரதமர் ராஜீவ்காந்தியை தானு என்ற தமிழ் பெண் வெடி குண்டு மூலம் கொன்றார். தானும் அதில் மரணமடைந்தார்.
ஆனால், நாலு பேர் இறப்புக்கு காரணமான ஆஷ்துரையை கொன்ற வாஞ்சிநாதனை தியாகி என்று கொண்டாடும் இந்திய அரசு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் இறப்புக்கு காரணமான ராஜீவ்காந்தியை கொன்ற தானுவை பயங்கரவாதி என்கிறது.
இது என்ன நியாயம்?
உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காழி சட்னியா?
சர்வதேசம் 20ம் திகதி உலக அகதிகள் தினம்
சர்வதேசம் 20ம் திகதி உலக அகதிகள் தினம் கொண்டாடுகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் அகதிகள் 30வது நாளாக உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
ஆரியமும் திராவிடமும் ஈழத் தமிழருக்கு ஒருபோதும் இரங்காது. உதவாது.
தந்தையர் தினத்தை முன்னிட்டு !
தந்தையர் தினத்தை முன்னிட்டு !
இன்று என்னிடம் விலை உயர்ந்த கைத் தொலைபேசி உண்டு. பல கமராக்கள் உண்டு.
ஆனால் என்னுடன் சேர்ந்து நின்று படம் எடுக்க அப்பா உயிருடன் இல்லை.
தந்தையர் உயிருடன் இருக்கும்போது அவர்களின் அருமை தெரிவதில்லை.
அவர்களின் அருமை உணரும்போது அவர்கள் உயிருடன் இருப்பதில்லை.
தந்தையருக்குரிய சாபம் இது?
எதுக்கு அண்ணே இவனை அடிக்கிறீங்க?”
“எதுக்கு அண்ணே இவனை அடிக்கிறீங்க?”
“வடை வாங்கிட்டு வரச் சொன்னா சுமந்திரன் சேர் சுட்டதா, சம்பந்தர் ஐயா சுட்டதா, என்று கேட்கிறான்”
குறிப்பு - சிங்கள மக்களுக்கும் இரங்கி உணவு அனுப்பும்படி திராவிட முதல்வரிடம் கேட்ட சுமந்திரன், 30வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் சிறப்புமுகாம் அகதிகளுக்கும் இரங்கும்படி திராவிட முதல்வரிடம் கேட்க மாட்டாரா?
இறப்பதற்கு முன் ஒருமுறையாவது
இறப்பதற்கு முன் ஒருமுறையாவது தன் மகனை பார்த்துவிட வேண்டும் என காத்திருந்து ஏமாற்றத்துடன் இறந்த தாய்.
26 வருடங்களின் பின் மரணித்த தாயின் உடலையே காண நேர்ந்த அரசியல் கைதி மகன்.
இந்த கொடுமைகளுக்கு எப்போது முடிவு வரும்?
பத்மநாபா !
பத்மநாபா !
பத்மநாபா எளிமையானவர் , பத்மநாபா நல்லவர் என்றெல்லாம் எழுதி நாபாவை தெரிய வைப்பதில் எந்த பயனும் இல்லை.
மாறாக, நாபாவை தமிழ் மக்கள் எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே எழுத வேண்டும்.
பத்மநாபா விடுதலையை விரும்பினார் பத்மநாபா புரட்சியை விரும்பினார் பத்மநாபா ஈழத்தை விரும்பினார்
ஆதனால்தான் அவர் “ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி”யை நிறுவி போராடினார்.
ஆனால், நாபா முன்வைத்த விடுதலையை கைவிட்டவர்கள் நாபா முன்னெடுத்த புரட்சியை கைவிட்டவர்கள் நாபா முன்வைத்த ஈழத்தை கைவிட்டவர்கள் இன்று அவருக்கு நினைவு தினம் கொண்டாடுகிறார்கள்.
இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஏனெனில் நாபாவே தன் இறுதிக் காலத்தில் தான் உச்சரித்த புரட்சியை கைவிட்டார்.
தான் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார்
இந்திய உளவு நிறுவனங்களின் வழிகாட்டலில் தேர்தல் பாதையில் பயணித்தார்.
தமிழ் மக்களுக்கு எதிரான இந்திய அரசை ஆதரித்தார். அதன் மூலம் அவரை நம்பிய தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தார்.
இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்களுக்கு துணை போனார். அதனால் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு துரோகியானார்.
பத்மநாபா புதைக்கப்பட்டார். அவருடைய எலும்புகளை தோண்டியெடுத்து சிலர் ரத்தம் பாய்ச்சுகிறார்கள் அவர் உயிர்த்தெழுவார் என்று
ஆனால் அவர்கள் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை.
எனினும் பத்மநாபா தன் இறுதிக் காலத்தில் கூறிய ஒரு வரியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
“இந்தியாவை பயன்படுத்த நாம் நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது”என்று அவர் கூறினார்.
எனவே தயவு செய்து இனியாவது இந்திய அரசுக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ளுங்கள்
அற்புதம்மாவுக்கு பேரறிவாளனை
அற்புதம்மாவுக்கு பேரறிவாளனை சிறையில் சென்று பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்தது
ஆனால் சாந்தனின் தாயாருக்கு அந்த வாய்ப்பும்கூட கடந்த 28 வருடங்களாக கிடைக்கவில்லை.
இறப்பதற்கு முன் ஒருமுறையாவது தன் மகன் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்ற அந்த தாயின் விருப்பத்தை தமிழக முதல்வர் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
லெனின் இனவாதியா?
•லெனின் இனவாதியா?
தமது தேசிய இனத்திற்காக போராடுபவர்களை இனவாதிகளாக சித்தரிக்கும் சாபக்கேடு தமிழ் தேசிய இனத்தில் மட்டுமே உண்டு.
அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் கொல்லப்பட்டதை நிறப் படுகொலை என கண்டிக்கும் சில தமிழ் கம்யுனிஸ்டுகள் முள்ளிவாய்க்காலில் தமிழர் கொல்லப்பட்டதை இனப்படுகொலை என கண்டிக்க மறுக்கின்றனர்.
“தேசியம் ஒரு கற்பிதம்” என்று புத்தகம் எழுதியவரே கீழடி ஆய்வை சுமந்து தமிழ் தேசியம் பேசுகிறார். அது தெரியாமல் புலத்தில் இருக்கும் இந்த புரட்டுவாதிகள் தமிழ் தேசியம் பேசுவோரை “தமிழ் இனவாதிகள்” என்கின்றனர்.
லெனின் இப்போது தமிழனாக பிறந்து வந்தால் அவரையும் இனவாதி என கூற இந்த போலிக் கம்யுனிஸ்டுகள் தயங்கமாட்டார்கள்.
ஒரு போரை நிறுத்த தேவையான பொருட்கள்
ஒரு போரை நிறுத்த தேவையான பொருட்கள்
இரண்டு கூலர்
ஒரு கட்டில்
ஒரு மனைவி
ஒரு துணைவி
ஒரு கடற்கரை
ஒரு திராவிட தலைவர்
முக்கியமாக இதெல்லாம் உண்மை என்று நம்பி 200 ரூபாவுக்கு பதிவு போடும் திராவிட மனசு.
சிறப்புமுகாமில் ஈழ அகதிகள்
சிறப்புமுகாமில் ஈழ அகதிகள் 34 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை. அதிகாரிகள் எவரும் சென்று பார்வையிடவும் இல்லை.
இதனால் அகதி ஒருவர் இன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திராவிட முதல்வர் எப்போது இந்த அகதிகள் மீது இரக்கம் காட்டுவார்?
பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக
பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
- ஹிருணிகா பிரேமச்சந்திர
அவர் மீதும் அவர் அரசியல் மீதும் ஆயிரம் விமர்சனம் இருக்கலாம்.
ஆனால் மக்களுக்கான போராட்டத்தில் பங்குபற்றியவேளை தெரிந்த அவர் மார்பகத்தை கேலி செய்வது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இருவரும் ஈழத் தமிழர்.
இருவரும் ஈழத் தமிழர்.
ஒருவர் அகதியாக கனடா சென்றதால் அங்கு குடியுரிமை பெற்று எம்.பி யாகி உள்ளார்.
மற்றவர் அகதியாக தமிழ்நாடு சென்றதால் விடுதலை கேட்டு தீக்குளித்துள்ளார்.
ஏனெனில் கனடாவை ஆள்பவர் திராவிட முதல்வர் இல்லை.
செய்தி – தற்கொலைக்கு முயற்சி செய்த அகதிகள்
செய்தி – தற்கொலைக்கு முயற்சி செய்த அகதிகள் மீது தாக்குதல் நடத்தி வழக்கு பதிவு செய்ய முயற்சித்த பொலிசார்.
நிருபர் - சார்! சிறப்புமுகாமில் அகதிகள் தற்கொலை முயற்சி பற்றி ?
திராவிட முதல்வர் - ஆம். உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன்
நிருபர் - என்ன நடவடிக்கை சார்?
திராவிட முதல்வர் - தற்கொலை முயற்சி வழக்கு அவர்கள் மீது போடும்படி கூறியிருக்கிறேன்.
நிருபர் - கடந்த 35 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்காமைக்கு என்ன காரணம் சார் ?
திராவிட முதல்வர் - அதுதான் எமது மகிந்த ராஜபக்சாவின் சிங்கள அரசுக்கு உணவு அனுப்பியுள்ளேனே.
நிருபர் - ஈழத் தமிழர் எமது ரத்தம் என்று தேர்தலில் பேசினீர்களே?
திராவிட முதல்வர் - அதெப்படி தமிழர் எனது ரத்தம் ஆக முடியும்? எலெக்சனுக்காக பேசுவதை எல்லாம் உண்மை என்று நம்புவதா?
ஆரியமும் (மத்திய அரசும்) திராவிடமும் (மாநில அரசும்)
ஆரியமும் (மத்திய அரசும்) திராவிடமும் (மாநில அரசும்)சிங்கள அரசுக்கு உதவுமேயொழிய ஈழத் தமிழருக்கு ஒருபோதும் உதவாது.
இந்த உண்மையை ஈழத் தமிழர்கள் உணராதவரை ஒருபோதும் விடுதலையை பெற முடியாது.
சீ ...வெட்கம்!
சீ ...வெட்கம்!
இந்த கொடுமை சிங்கள அரசின் கீழ் சிங்கள நாட்டில் நடக்கவில்லை.
தமிழ்நாட்டில் தமிழக அரசின் கீழ் ஈழத் தமிழ் அகதிகளுக்கு நடந்துள்ளது.
சம்பந்தர் ஐயா – மேடம்! தீர்வு தரவில்லை என்றால்
சம்பந்தர் ஐயா – மேடம்! தீர்வு தரவில்லை என்றால் மீண்டும் ஆயுதம் தூக்குவோம்
சந்திரிக்கா – மிஸ்டர் சம்பந்தன்! தண்ணி அடிச்சா போய் குப்பற படுக்க வேண்டும். சும்மா தீர்வு அது இது என்று உளறக்கூடாது.
மறக்கப்போவதுமில்லை
மறக்கப்போவதுமில்லை
மன்னிக்கப்போவதுமில்லை
இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும்வரை ஓயப்போவதுமில்லை.
ஒன்றுகூடுவோம் ஒருமித்து குரல் கொடுப்போம்
எருமைக்கும் 200 ரூபா உடன்பிறப்புகளுக்கும்
எருமைக்கும் 200 ரூபா உடன்பிறப்புகளுக்கும் என்ன வித்தியாசம்?
200 ரூபா உடன்பிறப்புகளை எளிதாக எருமை என்று கூப்பிடலாம்.
ஆனால் எருமையை அவ்வளவு எளிதாக 200 ரூபா உடன்பிறப்பு என்று கூப்பிட முடியாது.
மீண்டும் ஒரு லாக்கப் மரணம்.
மீண்டும் ஒரு லாக்கப் மரணம்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்ற இளைஞன் பொலிசாரால் அடித்துக் கொலை.
தனது சொந்த மக்களையே அடித்துக் கொலை செய்யும் தமிழக காவல்துறை சிறப்புமகாமில் கேட்பதற்கு யாருமற்ற அப்பாவி ஈழ அகதிகளை எப்படி நடத்தும் என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள் உறவுகளே.
ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கி எறியும் பலாத்கார நிகழ்வே புரட்சி
ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கி எறியும் பலாத்கார நிகழ்வே புரட்சி என்றார் காரல் மார்க்ஸ்
தேர்தல் பாதை மூலம் விடுதலை பெறலாம் என சே கூறவில்லை. மாறாக போராடியே எதையும் பெற முடியும் என்றார்.
கோழிக்குஞ்சு கூட வன்முறையை பாவித்தே முட்டையை உடைத்து வெளியே வருகிறது.
கடவுள் கந்தன்கூட அகிம்சை மூலம் சூரனை அழிக்கவில்லை. வன்முறை மூலமே அழித்தார்.
கையில் வேல், வாள், சூலம் போன்ற ஆயுதங்களை வைத்திருக்கும் கடவுள்களை பயங்கரவாதிகள் என்று கூறுவதில்லை.
ஆனால் எமது விடுதலைக்காக துப்பாக்கி ஏந்தினால் எம்மை பயங்கரவாதிகள் என்று சம்பந்தர் ஐயா கூறுகிறார்
தன் சொந்த நாட்டு தமிழர்களுக்கே எதுவும் செய்யாத பிரதமர் மோடி ஈழத் தமிழர்களுக்கு உதவப் போகிறார் என்று சம்பந்தர் ஐயா கூறுகிறார்.
தேர்தல்பாதை மூலம் சம்பந்தர் ஐயாவுக்கு பதவி பங்களா கிடைக்கலாம். ஆனால் தமிழர்களுக்கு ஒரு ம - - ம் கிடைக்காது.
அதுமட்டுமல்ல சம்பந்தர் ஐயா கூறுவதுபோல் இந்தியா மூலமும் எந்த தீர்வும் தமிழர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.
மாறாக தோழர் சே கூறியதுபோல் போராடியே எந்த தீர்வையும் தமிழ் மக்கள் பெறமுடியும்.
தமிழக உணர்வாளர்களின் போராட்டம்
தமிழக உணர்வாளர்களின் போராட்டம் வெற்றி பெறட்டும்.
சிறப்புமுகாம் ஈழத் தமிழ் அகதிகள் விடுதலை பெறட்டும்.
ஆடுகள் எப்போதும் ஓநாயைத்தானே நம்புகின்றன !
•ஆடுகள் எப்போதும் ஓநாயைத்தானே நம்புகின்றன !
ஒரு காலத்தில் எம்மிடம் ஒரு அழகான நாடு இருந்தது
ஒரு காலத்தில் எமக்கு வீரம் செறிந்த வரலாறும் இருந்தது.
இலுப்பம்பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று எமது (செம்மறி) தலைவர்கள் கூறினார்கள்.
ஆனால் வந்தது வெளவால் அல்ல ஓநாய் என்பது இப்போதுதானே புரிகிறது.
அந்த ஓநாய் வானில் வந்து உணவுப் பொட்டலத்தை வீசியது.
ஓநாய் வீசிய உணவுப் பொட்டலம் எமது கைக்கு வந்தது
எமது கையில் இருந்த எமது அழகிய தேசம் ஓநாய் கைக்கு சென்று விட்டது.
எமது கையில் இருந்த பலாலி விமான நிலையம்
எமது கையில் இருந்த திருகோணமலை துறைமுகம்
எமது கையில் இருந்த மன்னார் எண்ணெய் வளம்
எமது கையில் இருந்த புல்மோட்டை இல்மனைற் வளம்
எமது கையில் இருந்த 650 ஏக்கர் சம்பூர் மக்களின் நிலம்
எல்லாமே இன்று ஓநாய் கையில் சென்று விட்டது.
ஆனால,;
எமது (செம்மறி) ஆட்டு தலைவர்களோ உரத்து கூறுகிறார்கள்
அந்த ஓநாய் ஆடுகள் மீது மிகவும் இரக்கம் கொண்டதாம்.
ஓநாய் விரைவில் தீர்வு தரப் போவதால்
எமது அழகிய தேசத்தை தா என்று கேட்கக் கூடாதாம்.
என்ன செய்வது?
இந்த (செம்மறி)ஆடுகள் எப்போதும் ஓநாயைத்தானே நம்புகின்றன!
கைபர் கணவாய் இல்லாமல் இருந்திருந்தால்
கைபர் கணவாய் இல்லாமல் இருந்திருந்தால்
இந்தியாவின் இன்றைய பல பிரச்சனைகள் இல்லாமல் இருந்திருக்கும்.
அதுபோல் அன்று திருவாரூரில் இருந்து வந்த ரயிலில் ஒரு டிக்கட் பரிசோதகர் இருந்திருந்தால்,
தமிழகத்தின் இன்றைய பல பிரச்சனைகள் இல்லாமல் இருந்திருக்குமோ?
உதயநிதி ஸ்டாலின் “சின்னவர்” என்றால்
உதயநிதி ஸ்டாலின் “சின்னவர்” என்றால்
அவர் மகன் இன்பநிதியை எப்படி அழைப்பது?
“மிக சின்னவர்” என்றா?
என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை?
இலங்கையில் பிரிந்து செல்வதற்கான
இலங்கையில் பிரிந்து செல்வதற்கான உரிமை மாகாணசபைக்கு இல்லை.
அதுபோல் இந்தியாவில் பிரிந்து செல்வதற்கான உரிமை மாநிலங்களுக்கு இல்லை.
எனவே இந்த ஒன்றிணைப்பு சுதந்திரமானது இல்லை என்று லெனின் கூறுகின்றார்.
ஆனால் இதையே தமிழ்த்தேசியவாதிகள் கூறினால் அவர்களை பிரிவினைவாதிகள் என்று இலங்கை இந்தியாவில் இருக்கும் (போலி)கம்யுனிஸ்டுகள் கூறுகின்றனர்.
தனக்கு வயதாகிவிட்டது.
தனக்கு வயதாகிவிட்டது. அதனால் அரசியலுக்கு வரவில்லை என்று 70 வயது ரஜனி கூறுகின்றார்.
ஆனால் “விரைவில் தீர்வு வரும்” என்ற வெறும் மூன்று சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு 90 வயதிலும் அரசியலை விடாமல் இருக்கிறார் சம்பந்தர் ஐயா.
பாவம் தமிழ் மக்கள்
Subscribe to:
Posts (Atom)