Wednesday, August 31, 2022
பாலகுமார் எங்கே?
•பாலகுமார் எங்கே?
பாலகுமார் முள்ளிவாய்க்காலில் தன் மகனுடன் சரணடைந்தார். அவர் உயிரோடு வைக்கப்பட்டிருந்த படங்களும் வெளிவந்துள்ளன.
ஆனால் பாலகுமார் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. தற்போது அவர் பெயரும் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இங்கு கொடுமை என்னவெனில் சமாதான காலத்தில் வன்னி சென்று பாலகுமாரோடு படம் பிடித்தவர்கள பலர் இன்று எம்.பி களாகவும் தலைவர்களாகவும் இருக்கின்றனர்.
இவர்களில் ஒருவர்கூட பாலகுமார் எங்கே என்று இலங்கைஅரசை இதுவரை கேட்கவில்லை.
குறிப்பு- “சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்” 30.08.2022ஆகும்.
முதலில் இந்திய தூதரும்
முதலில் இந்திய தூதரும் தூதராலயமும் யாழ்ப்பாணம் வந்தார்கள்
அடுத்து அவர்கள் இந்தியாவில் இருந்து சிவசேனை என்று மறவன்புலவு சச்சிதானத்தை கொண்டு வந்தார்கள்.
இப்போது இந்தி மொழியை யாழ் இந்துக் கல்லூரியில் புகுத்தியுள்ளார்கள்.
வடையும் தேத்தண்ணியும் கொடுக்கிறார்கள் என்றாலே நம்மாளுகள் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு ஓடுவாங்கள்.
இந்திய தூதர் தண்ணியும் பணமும் கொடுத்தால் சும்மா இருப்பார்களா? இனத்தையே தூக்கி கொடுக்கிறாங்களே!
வந்தார்கள்
வந்தார்கள்
கொன்றார்கள்
ஏறி குந்தியும் விட்டார்கள் நிரந்தரமாக!
அவர்கள் வந்தார்கள்.
முதலில் வானில் இருந்து உணவுப் பொட்டலம் போட்டார்கள்
பின்னர் துப்பாக்கி டாங்கிகளுடன் வந்தார்கள்
எமது மீட்பர்கள் வருகிறார்கள் என்று நம்பினோம்.
திடீரென மருத்துவ மனையில் சுட்டார்கள்
பத்திரிகை அலுவலத்தில் சுட்டார்கள்
ஊரையே சுற்றி வழைத்து சுட்டார்கள்
ஏன் என்று கேட்டதற்கு
“ நாங்கள் அமைதிப்படை. அமைதியை நிலை நாட்டுகிறோம்” என்றார்கள்.
அவர்களது அமைதி நிலைநாட்டலில் நாம்
12000 தமிழர்களின் உயிர்களை இழந்தோம்
800 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டோம்
பல கோடி ரூபா பெறுமதியான உடமைகளை இழந்தோம்.
நல்லவேளை
இரண்டு வருடத்தில் திரும்பிச் சென்றார்கள்
இல்லையேல் என்ன நடந்திருக்கும் என்று
நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ஆனால் மீண்டும் வந்தார்கள்
இம் முறை “பயங்கரவாத ஒழிப்பு” என்று கூறிக்கொண்டு
மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து வந்தார்கள்
புலிகளைத்தானே அழிக்கிறார்கள் என்று நாங்களும் சும்மா இருந்தோம்
ஆனால் அவர்கள் புலிகளை அழித்தது
தமது ஆக்கிரமிப்புக்காகவே என்பதை இப்போதுதான் உணர்கிறோம்
இந்தியாவுக்காகவே யுத்தம் செய்தோம் என்று
ராஜபக்சாக்கள் கூறியதன் அர்த்தத்தையும்
இப்போதுதான் நாம் உணர்கிறோம்
ஆபிரிக்க நாடுகளை ஆக்கிரமித்தவர்கள்
துப்பாக்கிகளுடன் கிருத்தவ மதத்தையும் கொண்டு சென்றார்கள்
அதனால்தான் ஒரு கவிஞன் எழுதினான்
“அவர்கள் வருமுன்னர் நாடு எமது கையில் இருந்தது
பைபிள் அவர்கள் கையில் இருந்தது.
இப்போது பைபிள் எமது கையில் இருக்கிறது
அவர்கள் கையில் எமது நாடு இருக்கிறது”
இதே கதைதான் எமது நாட்டிலும் நடந்துள்ளது.
ஆனால் இதை எழுத எமக்கு ஒரு கவிஞன் இல்லை
அவர்கள் இம்முறை இந்து மதத்தையும் இந்தி மொழியையும் கொண்டு வந்துள்ளார்கள்
அதனால் இப்போது நாம் கிளிநொச்சியில்
சர்வதேச இந்து மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம்
யாழ் இந்துக் கல்லூரியில் இந்தி மொழி படித்துக்கொண்டிருக்கிறோம்
ஆனால் அவர்கள் கையில்
காங்கேசன்துறை துறைமுகம் போய்விட்டது
கூடவே அதன் சீமெந்து ஆவையும் போய்விட்டது
பலாலி விமான நிலையம் போய்விட்டது
திருகோணமலை துறைமுகம் போய்விட்டது
சம்பூர் 500 எக்கர் நிலமும் போய்விட்டது
கூடவே அனல்மின் நிலையமும் போய்விட்டது
புல்மோட்டை கனிவளமும் போய்விட்டது
மன்னாரில் எண்ணெய் வளமும் போய்விட்டது.
இதென்ன நியாயம் என்று கேட்டால்
கவலைப்படாதீர்கள் வடக்கு கிழக்கு முழுவதும்
20 காந்திசிலைகளை நிறுவித் தருகிறேன் என்று
யாழ் இந்திய தூதர் சிரித்தக் கொண்டே கூறுகிறார்.
ஆனாலும் இந்திய தூதர் கொஞ்சம் நல்லவர்தான்
ஏனெனில்,
20 ராஜீவ் காந்தி சிலைகளை நிறுவப் போகிறேன்
என்று கூறியிருந்தால் என்னாவது?
ஆனாலும் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை
ஏனெனில்
ராஜீவ் காந்தி இருந்திருந்தால்
ஈழம் பெற்று தந்திருப்பார் என்று
எழுதுவதற்கு நம் மத்தியில் நாலு பேர்
அப்போதும் இருப்பார்கள்தானே?
எத்தனை அடக்குமுறைகளை மேற்கொண்டாலும்
•எத்தனை அடக்குமுறைகளை மேற்கொண்டாலும்
அத்தனையையும் தாண்டி பரவும் தோழர் தமிழரசன் புகழ்!
35 ஆண்டுகளுக்கு முன் அவரை கொன்று விட்டார்கள்.
ஆனால் இன்றும்கூட
அவரை நினைவு கூர்வதை தடுக்கிறார்கள்.
அவருக்கு சிலை வைக்க தடுக்கிறார்கள்
கூட்டம் நடத்த அனுமதி மறுக்கிறார்கள்
புத்தகம் வெளியிட இடைஞ்சல் கொடுக்கிறார்கள்
போஸ்டர் ஒட்டினால் இரவிரவாக கிழிக்கிறார்கள்
அவர் பெயரை உச்சரிப்பவர்களை பின்தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்
அதையும் மீறி செயற்பட்டால் கைது செய்து பொய் வழக்கு போடுகிறார்கள்
சிறையில் அடைத்தால் வழக்கை விரைந்து விசாரிக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள்
சரி ஜாமீனாவது கொடுங்கள் என்றால் அதையும் மறுக்கிறார்கள்.
வேடிக்கை என்னவெனில் ஜாமீன் கோரினால் அதை தள்ளுபடி செய்வதாக ஒற்றைவரி எழுதுவதற்குகூட நீதிபதி 6 மாதம் எடுத்துக்கொள்கிறார்.
ஏன் இத்தனை அராஜகம்?
எதற்காக அரசு அவரைக் கண்டு அஞ்சுகிறது?
அவர் இறந்து 35 ஆண்டு ஆகியும்கூட அரசு ஏன் அவர் பெயரைக் கேட்டால் பதட்டமடைகிறது?
ஒரே ஒரு காரணம்தான்.
இந்த ஒற்றைப் பெயர் அணுகுண்டைவிட ஆபத்தானது என்று நினைக்கிறார்கள்.
இந்தப் பெயரே தங்களை தகர்த்து எறியப் போகிறது என்று உணர்கிறார்கள்.
அதனால்தானே அந்தப் பெயருக்கு அரசு அஞ்சுகிறது.
ஆம். அந்த பெயர் “ தோழர்.தமிழரசன்
ஒரு மகனாக தந்தையைப்பற்றி
ஒரு மகனாக தந்தையைப்பற்றி இதைக்கூட சொல்லவில்லை என்றால் எப்படி?
தயவு செய்து சிரித்துவிட்டு கடந்து செல்லுங்கள். சீரியஸாக எடுக்க வேண்டாம்.
இந்தியாவில் நீதி வழங்கப்படுவதில்லை.
இந்தியாவில் நீதி வழங்கப்படுவதில்லை. வாங்கப்படுவது.
அது ஏன் என்று இப்போது புரிகிறதா?
“என் மார்பை பிளந்து பார்த்தால் கலைஞர் தான் இருப்பார்” - வைகோ
“என் மார்பை பிளந்து பார்த்தால் கலைஞர் தான் இருப்பார்” - வைகோ உருக்கம்
பசி எவ்வளவு கொடுமையானது?
தோழர் தமிழரசனைக் கொல்வதன்
தோழர் தமிழரசனைக் கொல்வதன் மூலம் தமிழ்நாடு விடுதலைப் படையை நசுக்கலாம். அதன் மூலம் தமிழ்நாடு விடுதலையை தடுக்கலாம் என இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் திட்டம்போட்டு சதி மூலம் தோழர் தமிழரசனையும் அவரது தோழர்கள் 4 பேரையும் 1987ம் ஆண்டு பொன்பரப்பியில் கொன்றனர்.
ஆனால் அவர்கள் கனவு பலிக்கவில்லை. படுகொலை செய்யப்பட்ட தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டுள்ளார். அவரில் இருந்து பல தமிழரசன்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.
வெகுவிரைவில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழும். அது வெற்றிவாகை சூடுவது தவிர்க்க முடியாதது.
தோழர் தமிழரசன் அவர்கள் பாதையில் தொடர்ந்து செல்வதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும். அவரை என்றும் நினைவில் கொள்வோம்.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்ததுபோன்று ஈழ விடுதலை இயக்கங்களையும் இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றுகோரி மருதையாற்று பாலத்திற்கு தோழர் தமிழரசன் குண்டு வைத்தார்.
அவர் கோரியபடி எல்லா தமிழக கட்சிகளும் ஒன்று சேர்ந்து அன்று இந்திய அரசை வலியுறுத்தியிருந்தால் இன்று வரலாறு வேறு மாதிரி அமைந்திருக்கும்.
பத்தாயிரம் தமிழக இளைஞர்களாவது ஈழம் சென்று ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்ற வேண்டும் என்று தோழர் தமிழரசன் விரும்பினார்.
அது மட்டுமன்றி அதற்காக அவர் ஈழம் வருவதற்கு வேதாரணியம் கடற்கரையில் வந்து இரண்டு முறை காத்து நின்றார்.
அன்று அவரது விருப்பம் நிறைவேறியிருந்தால் இன்று வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும்.
செப்-1 தோழர் தமிழரசன் 35வது நினைவு தினம்
அமைதி வழியில் போராடிய
அமைதி வழியில் போராடிய தமிழ் இளைஞர் ராஜீவ்காந்த் கைது செய்யப்பட்டமைக்கு வன்மையான கண்டனங்கள்.
சிங்கள அரசே!
உடனடியாக ராஜீவ்காந்தை விடுதலை செய்!
சிறப்புமுகாமில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு
சிறப்புமுகாமில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் சீமானின் குரல் ஒலிக்கிறது.
சீமானை ஆதரிக்க வேண்டாம் என்று ஈழத் தமிழருக்கு கூறுபவர்கள் ஏன் இப்படி ஈழத் தமிழருக்காக ஒலிப்பதில்லை?
35 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர
35 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரை நினைவுகூர்ந்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிடும் என திராவிட முதல்வரின் காவல்துறை தடை விதிக்கிறது.
தோழர் தமிழரசனையும் அவர் முன்வைத்த தமிழத்தேசியத்தையும் கண்டு இந்திய அரசு இப்போதும் ஏன் அச்சமடைகிறது?
செப் - 1 தோழர் தமிழரசன் 35வது நினைவு தினம்
செப் - 1 தோழர் தமிழரசன் 35வது நினைவு தினம்
தோழர் தமிழரசன் பற்றி அறிந்துகொள்ள விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூலின் PDF பிரதி பெற்றுக் கொள்ளலாம்.
https://noolaham.org/.../%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0...
Sunday, August 28, 2022
செப்-1 தோழர் தமிழரசன்
செப்-1 தோழர் தமிழரசன் 35வது நினைவு தினம்.
தமிழரசனைக் கொன்று புதைத்துவிட்டால் தமிழத்தேசியம் மலர்வதை தடுத்துவிட முடியும் என நினைத்தார்கள்.
ஆனால் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டுள்ளார் என்பதை வளர்ந்துவரும் தமிழத்தேசியம் மூலம் வரலாறு நிரூபிக்கின்றது.
கடந்த வருடம் மலையாளத்தில் வந்த படம்
கடந்த வருடம் மலையாளத்தில் வந்த படம். டப் செய்து தமிழில் இப்போது வெளியிட்டுள்ளார்கள்.
கிருத்தவ மதத்தை வைத்து வியாபாரம் செய்யும் காப்ரேட் கம்பனிகளை கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.
இப்படி ஒரு படம் இந்து மதம் அல்லது இஸ்லாமிய மதம் பற்றி எடுக்க முடியுமா? எடுத்தால் இந் நேரம் இந்தியாவே பற்றி எரிந்திருக்காதா?
தன்னை நம்பிய ஈழத் தமிழருக்கு துரோகம் செய்ததுபோல்
தன்னை நம்பிய ஈழத் தமிழருக்கு துரோகம் செய்ததுபோல் தன்னை நம்பிய இஸ்லாமிய மக்களுக்கும் திமுக தலைமை துரோகம் செய்யும் என்பது தெரிந்த விடயம்தான்.
ஆனால் பாஜக வந்திடும் என்றுகூறி திமுக வை ஆதரித்த அந்த 32 முற்போக்கு அமைப்புகளும் இதற்கு எப்படி உருட்டப் போகிறார்கள்?
கடலில் தமிழ் மீனவர்கள் கொல்லப்படும்போது
கடலில் தமிழ் மீனவர்கள் கொல்லப்படும்போது அதை தடுக்காமல் மௌனமாக இருந்தவருக்கு
அந்த கடலில் நினைவு சின்னம் வைக்க எந்த அருகதையும் இல்லை.
கேரளாவில் கம்யுனிஸ்டாக இருந்தாலும்
கேரளாவில் கம்யுனிஸ்டாக இருந்தாலும் மலையாளி தன்னை மலையாளியாக உணர்கிறான்.
அவன் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்று அறைகூவல் விட்டுக்கொண்டு மறுபுறம் அருகில் இருக்கும் தமிழ் தொழிலாளிக்கு தண்ணி கொடுக்க மறுக்கிறான்.
கர்நாடகாவில் பிஜே.பி யாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரசாக இருந்தாலும் சரி கன்னடன் தன்னை கன்னடனாகவே உணர்கிறான்.
அதனால்தான் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு காவிரி தண்ணி கொடுக்க அவன் மறுக்கிறான்.
ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் தன்னை தமிழனாக உணர வேண்டும் என்றால் ஒருத்தன் “இல்லை, திராவிடனாக உணர வேண்டும்” என்கிறான்.
இன்னொருத்தன் “சாதி”யாக உணர வேண்டும் என்கிறான்.
இதையும்மீறி யாராவது தமிழன் தன்னை தமிழானாக உணர்ந்தால் உடனே அவனை “தமிழ் இன வெறியன்” என்கிறார்கள்.
மலையாளி தன்னை மலையாளியாக உணர்வதை “மலையாள இனவெறி” என்று கூறாதவர்கள்,
கன்னடன் தன்னை கன்னடனாக உணர்வதை “கன்னட இனவெறி” என்று கூறாதவர்கள்,
தமிழன் தன்னை தமிழனாக உணர்வதை மட்டும் “தமிழ் இனவெறி” என்று கூறுகிறார்கள்.
கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலை வாயப்பு என சட்டம் இயற்றுகிறார்கள்.
நாகலாந்தில் அம் மாநிலத்தவருக்கே வேலையில் முன்னுரிமை என சட்டம் இயற்றியுள்ளார்கள்.
குஜராத் உட்பட பல மாநிலங்களில் இப்படி சட்டம் இயற்றி செயற்படுத்துகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் திருச்சி ரயில்வேயில் 90 வீதமான வேலை வாய்ப்பு வட இந்தியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழனுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குங்கள் என்றால் தமிழன் என்றால் யார் என்று நக்கலாக கேட்கிறார்கள்
தமிழன் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை குறித்து அக்கறை கொள்ளவில்லை. மாறாக தோனி கிரிக்கட்டில் இருந்து விலகியதற்காக கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறான்.
என்னே அவலம்? ஒரேயொருமுறை தமிழன் தன்னை தமிழனாக உணர்ந்தால் போதும். அது எப்போது நிகழும்?
மரணம் ஒருவரின் தவறுகளை மன்னித்துவிடுமா?
•மரணம் ஒருவரின் தவறுகளை மன்னித்துவிடுமா?
எந்தளவுதான் அயோக்கியனாக இருந்தாலும் அவன் மரணமடைந்துவிட்டால் அவனது அயோக்கியத்தனத்தை விமர்சிக்க கூடாது என்று ஒரு மரபு எம்மத்தியில் இருக்கிறது.
இது தொடர்பாக கவிஞர் தாமரை கூறிய கருத்துகள் கவனிக்கத்தக்கவை. பாராட்டுக்குரியவை.
“சாவதினாலேயே ஒருவர் 'புனித'ராகி விடமாட்டார். செத்தவர்களை விமர்சிப்பதில்லை என்பது தமிழர் நன்மரபு ! எனினும் மரபுகளுக்கும் காலாவதி உண்டு ; காலத்துக்கேற்ற மாற்றம் உண்டு. செத்தாலும் அயோக்கியன் அயோக்கியனே என்று சொல்லப் பழகுவோம். செத்தாலும் அயோக்கியன் புனிதனாக முடியாது என்பதைப் புது மரபாக்குவோம்” என்று கவிஞர் தாமரை கூறியுள்ளார்.
2009ல் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோது
2009ல் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோது “ சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் மரண ஓலம் கேட்டபோது இன்னொரு வீட்டில் மங்கள ஒலி கேட்டது என்று கூறினார் கலைஞர்.
அதேபோல் 07.08.2018ல் கலைஞர் இறந்தபோது மங்கள ஒலி கேட்டது என்று நாம் கூறியிருக்க முடியும். ஆனால் நாம் அவ்வாறு கூறவில்லை,
ஏனெனில் நாம் தமிழர்
இன்று வல்வை படுகொலையின் 33வது நினைவுதினம்
இன்று வல்வை படுகொலையின் 33வது நினைவுதினம்
இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட இந்த அப்பாவி மக்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை.
ஏனெனில் இவர்கள் தமிழர்கள்.
ராஜீவ் கொலைக்கு நீதி கோருவோர் வல்லைப் படுகொலைக்கு ஏன் நீதி கோருவதில்லை?
ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் ராஜீவுக்கு போனால் உயிர். தமிழனுக்கு போனால் மயிர்.
அப்படித்தானே?
“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்!
•“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்!
1968 மார்ச் 16 யன்று அமெரிக்க ராணுவம் வியட்நாமில் 347 அப்பாவி வியட்நாம் மக்களை சுட்டுக் கொன்றது. இது மைலாய் படுகொலைகள் (My Lai Massacre ) என அழைக்கப்படுகிறது.
1989 ஆகஸ்ட் 2 யன்று வல்வெட்டித்துறையில் அமைதிப்படை என வந்த இந்திய ராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்தது. இப் படுகொலைகள் “இந்தியன் மைலாய்” என அழைக்கப்படுகிறது.
•64 பொது மக்கள் கொல்லப்பட்டனர்
•100 க்கு மேற்பட்டோர் காய மடைந்தனர்
•50 க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர்.
•சுமார் 200 வீடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன.
•40 க்கு மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன
.•150 க்கு மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் சேதமாக்கப்பட்டன.
•வல்வை நூலகம் முற்றாக எரித்து சேதமாக்கப்பட்டது.
இத் தாக்குதல்கள் ஆகஸ்ட் 2, 3. 4 திகதிகளில் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது.
இறந்தவர்களின் உடல்களை எடுத்து அடக்கம் செய்யக்கூட இந்திய ராணுவம் அனுமதிக்கவில்லை.
வியட்நாம் கொலைகளுக்காக 26 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்கு தாக்கல் செய்தது.
அதில் ஒரு அதிகாரிக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
வல்வெட்டித்துறையில் படுகொலை செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
இந்த வல்வைப் படுகொலைகளுக்காக எந்தவொரு இந்திய ராணுவ அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.
சீக்கிய படுகொலைகளுக்காக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி, வல்வை படுகொலைகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை.
வியட்நாம் படுகொலைக்காக அனுதாபப்பட்ட சர்வதேசம்கூட வல்வைப் படுகொலைகளையிட்டு கவனம் கொள்ளவில்லை
நாம் என்ன ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்
நாம் என்ன ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்
தோழர் பிரடெரிக் எங்கெல்சின் நினைவு நாள்
தோழர் பிரடெரிக் எங்கெல்சின் நினைவு நாள்
தோழர் எங்கெல்ஸ் இல்லையேல் கால் மார்க்ஸ் இல்லை. மாக்சியமும் இல்லை என்று தோழர் லெனின் கூறியிருந்தார்.
ஆனால் தோழர் எங்கெல்ஸ் “அனைத்து பெருமைகளையும் தன் நண்பன் கால் மார்க்ஸ்ற்கே உரியது” என்று அடக்கத்துடன் கூறுகிறார்.
அத்தகைய மாபெரும் ஆசான் தோழர் எங்கெல்ஸ் நினைவு தினம் இன்று ஆகும். (05.08.2022)
உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு.
இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர்.
மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.
அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார்.
1849-இல் ஜெர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார்.
பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார்.
1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார்.
அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார்.
1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார்.
நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெய்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார்.
தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறுகிறார்.
மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார்.
தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர்.
மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது.
மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.
எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவஞானி;. எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்.
மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.
தமிழ்நாட்டில் தமிழில் பெயர் பலகை
தமிழ்நாட்டில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் எனக் கோரும் சீமானை “இனவெறியர்” என்போர்,
கர்நாடாவில் கன்னடத்தில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்போரை இனவெறியர் என்று ஏன் கூறுவதில்லை?
கன்னடத்திற்கு ஒரு நியாயம். தமிழுக்கு இன்னொரு நியாயமா?
வன்னியர் சங்கம் உருவாகியிருக்காவிடில்
வன்னியர் சங்கம் உருவாகியிருக்காவிடில் வன்னிய இளைஞர்கள் தமிழரசனின் தமிழ்நாடு விடுதலைப்படையில் சேர்ந்திருப்பார்கள் - காடுவெட்டி குரு
இப்போது புரிகிறதா இந்திய அரசு தமிழ்நாட்டில் ஏன் சாதி சங்கங்களை உருவாக்கி வளர்த்து வருகிறது என்று?
கனடா சென்ற ஈழத் தமிழர் குலசிங்கம்
கனடா சென்ற ஈழத் தமிழர் குலசிங்கம் அவர்கள் புலம்பெயர்ந்தோர் விருது பெற்றுள்ளார். அவர் அங்கு மருத்துவராக சேவை புரிகிறார். வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்ற ஈழத் தமிழ் மாணவி நந்தினி உரிய புள்ளிகள் பெற்றும் அகதி என்பதால் மருத்துவ கல்வி மறுக்கப்பட்டுள்ளது.
என் முகநூலில் எனது பதிவு ஒன்றின் கீழ்தான்
என் முகநூலில் எனது பதிவு ஒன்றின் கீழ்தான் கவிஞர் தாமரை இந்த கருத்தை பதிவு செய்திருந்தார்
அவர் பொதுவாக கூறிய கருத்தை கருணாநிதிக்கு கூறிய கருத்தாக நினைத்து உடன்பிறப்புகள் திராவிட மொழியில் திட்டித் தீர்க்கின்றனர்.
தொப்பி கலைஞருக்கு அளவாக இருப்பதற்கு கவிஞர் தாமரை என்ன செய்ய முடியும்?
சாதி ஒழிப்பிற்கு பெரியாரை படியுங்கள்,
சாதி ஒழிப்பிற்கு பெரியாரை படியுங்கள், அம்பேத்காரை படியுங்கள் என்பவர்கள்,
தோழர் தமிழரசன் முன்வைத்த “சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்” என்னும் மீன்சுருட்டி அறிக்கையை ஏன் படிப்பதில்லை?
சீமான் தமிழ்த்தேசியம் பேசுவதால்
சீமான் தமிழ்த்தேசியம் பேசுவதால் தமிழ்த்தேசியத்தை எதிர்க்கிறார்களா அல்லது தமிழத்தேசியம் பேசுவதால் சீமானை எதிர்க்கிறார்களா?
யார் தமிழ்த்தேசியம் பேசினாலும் அவர்களை ஆரியமும் திராவிடமும் எதிர்க்கும்.
ஏனெனில் ஆரியமும் திராவிடமும் எதிர்ப்பது தமிழ்த்தேசியத்தையே.
பெரியாரியம் அம்பேத்காரியம் இரண்டும்
பெரியாரியம் அம்பேத்காரியம் இரண்டும் சீர்திருத்தக் கருத்துகளே யொழிய புரட்சிகர கருத்துகள் இல்லை.
அதாவது இருக்கின்ற சுவரை பேணிக்கொண்டு அதில் உள்ள பிளவை கொத்துப்பூச்சு செய்வது.
ஆனால் சாதி ஒழிப்பிற்கு பாழடைந்த சுவரை அகற்றிவிட்டு புதிய சுவர் எழுப்பும் புரட்சிகர கருத்துகள் தேவை.
இனப்படுகொலை செய்தவர்களை
இனப்படுகொலை செய்தவர்களை கைது செய்ய இந்திய அரசு ஆதரவு அளிக்குமா? அல்லது வழக்கம்போல் அவர்களை காப்பாற்றப் போகிறதா? திராவிட முதல்வர் ஸ்டாலின் நிலை என்ன?
ஈழப் போராளிகள் கஞ்சா கடத்துகிறார்கள்
ஈழப் போராளிகள் கஞ்சா கடத்துகிறார்கள் என்று கிளப்கவுசில் ஓயாமல் கத்திக்கொண்டிருக்கும் அந்த 200 ரூபா உடன்பிறப்புகள் எங்கே? மானஸ்தர்கள் விஷம் குடித்து செத்துவிட்டார்களா?
செப் -1 தோழர் தமிழரசன் 35வது நினைவு தினம்
செப் -1 தோழர் தமிழரசன் 35வது நினைவு தினம்
தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய விடுதலைக்காக போராடி மரணித்த மாவீரர்கள் அனைவரையும் நினைவு கூர்வோம்
அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து தமிழ்த்தேசிய விடுதலையை வென்றெடுப்போம்
நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின்
நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூல் குறித்த திறனாய்வுகளை தோழர் தமிழ்நேயன் தொகுத்து வெளியிட்டுள்ளார். இந் நூலில் என் நூல் பற்றியும் தோழர் தமிழரசன் குறித்தும் பலரது கருத்துகளும் அனுபவங்களும் இடம்பெற்றுள்ளன.
இணைந்த வட கிழக்கு மாகாண சபையை
இணைந்த வட கிழக்கு மாகாண சபையை இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு மாறாக தனித் தனியாக இலங்கை அரசு பிரித்தபோதே இந்திய அரசு தலையிட்டு ஒப்பந்தத்தை காப்பாற்றியிருந்தால் இன்று அவ் ஒப்பந்தத்தை மீறி சீனா போர்க்கப்பல் வருவதற்கு சிங்கள அரசு அனுமதித்திருக்குமா?
சீன போர்க்கப்பலை சிங்கள அரசு அனுமதிப்பதால் இனி இந்திய அரசு ஈழத் தமிழர்களை ஆதரிக்குமா?
நிச்சயமாக இல்லை. இனியும்கூட இந்திய அரசு சிங்கள அரசுக்கு உதவிகள் வழங்குமேயொழிய ஒருபோதும் ஈழத் தமிழர்களை ஆதரிக்காது.
இந்த உண்மையை இந்திய அரசை ஆதரிக்கும் காசி அனந்தன் ஐயா போன்றவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
உலகில் எல்லா இடங்களிலும்
உலகில் எல்லா இடங்களிலும் அம்புலன்ஸ் வண்டிக்கு மற்ற எல்லா வாகனங்களும் வழிவிடும்.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் திராவிட அமைச்சரின் வாகன அணிக்கு அந்த அம்புலன்ஸ் வண்டியும் காத்து நின்று வழி விட வேண்டும்.
விடியல் அரசின் கொடுமை?
மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்!
• மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்!
தோழர்மாஓ சேதுங் சிந்தனையை கற்றுத் தந்த தோழர் தமிழரசன்!
1984ல் தமிழ்நாட்டில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்தார்.
அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் எமது சில தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார்.
அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அவர்களது இடத்திற்கு அழைத்து சென்றார்.
உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் குளத்தில் குளிக்கலாம் என்று தோழர் தமிழரசன் கூறினார்.
இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள்.
மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஒடியவர்கள் குளிக்காமல் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவினார்.
எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள்.
எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் இருக்கவே செய்தது.
அந்த குளம் குட்டையாகவே இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது.
அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. இன்னொரு புறத்தில் பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன.
இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினர்.
இதைப் பரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார்.
மாவோ வின் வரிகளைக் கேட்தும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எமது தோழர்கள் “புரட்சி ஓங்குக” என்று உரத்துக் கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர்.
பின்பு சாப்பிடுவதற்காக அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது.
எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை.
இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார். தோழர்கள் புரிந்து கொண்டனர்.
இம்முறை தோழர் தமிழரசன் கூறுமுன்னரே எமது தோழர்கள் “மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள்.
என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கியவர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள்.
உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள்.
இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள். அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார்.
குறிப்பு- செப்-1 திகதி தோழர் தமிழரசன் நினைவு தினத்தை முன்னிட்டு இது ஒரு மீள் பதிவு ஆகும்
இறப்பதற்கு முன் அவரை ஒருமுறையாவது
இறப்பதற்கு முன் அவரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என விரும்பினேன். ஆனால் முடியவில்லை.
எனினும் அவர் மகன் பற்றி நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலையாவது அவர் கையில் சேர்ப்பிக்க முடிந்தது ஆறுதல்.
# செப்-1 தோழர் தமிழரசன் 35வது நினைவுதினம்
நான் எழுதிய “ஓரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்”
நான் எழுதிய “ஓரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலை, புலவர் கலியபெருமாள் அவர்களின் மகன் தோழர் அருள்நம்பியார் சீமான் அவர்களிடம் கையளித்தபோது.
செப்-1 தோழர் தமிழரசன் 35வது நினைவு தினம்
1984ம் ஆண்டு அலன்தம்பதிகள்
1984ம் ஆண்டு அலன்தம்பதிகள் என்னும் வெள்ளை இனத்தவரை கடத்தி சிறையில் இருக்கும் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யும்படி EPRLF இயக்கம் கோரியது.
ஜனாதிபதி ஜே.ஆர் இளைஞர்களை விடுதலை செய்ய முன்வந்தார். ஆனால் இந்திரா காந்தி EPRLF தலைவர் நாபாவை உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்ய வைத்தார்.
இந்திய அரசை இறுதிவரை ஆதரித்த EPRLF தலைவர் பத்மநாபா என்னிடம் கூறிய வார்த்தை, “நாங்கள் இந்தியாவை பயன்படுத்த நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது”.
எனவே புலிகளால்தான் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவவில்லை என யாரும் இங்கு வந்து உருட்ட வேண்டாம்.
முதலில் மாலைதீவுக்கு ஓடினார்.
முதலில் மாலைதீவுக்கு ஓடினார். அப்புறம் சிங்கப்பூருக்கு ஓடினார். இப்போது தாய்லாந்துக்கு தப்பி ஓடியுள்ளார் என அறிய வருகிறது.
இன்னும் எத்தனை நாளைக்கு எத்தனை நாடுகளுக்கு ஓடப்போகிறார்?
எங்கு ஓடினாலும் இனப்படுகொலை குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டே தீருவார்.
2000வது நாளாக போராட்டம்
•2000வது நாளாக போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் 2000வது நாளாக தொடர்கிறது.
இலங்கையில் எந்த ஆட்சி வந்தாலும் இவ் உறவுகளின் போராட்டத்திற்கு தீர்வு வழங்க முன்வருவதில்லை.
இந்த கொடுமை இன்னும் எத்தனை நாளைக்கு தொடரப் போகிறது?
செஞ்சோலையில் குண்டு வீசி
செஞ்சோலையில் குண்டு வீசி 61 அப்பாவி தமிழ் மாணவிகளை சிங்கள அரசு கொன்றது.
புலிகளிடமும் விமானம் இருந்தது. வீசுவதற்கு குண்டும் இருந்தது.
ஆனால் அவர்கள் ஏன் சிங்கள மாணவிகள் மீது குண்டு வீசவில்லை என்பதை சிங்களம் எப்போது உணர்ந்து கொள்ளும்?
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே என்று
பாரத் மாதாகிக்கே ஜே!
நம்மை ஆளும் அவர்கள் எல்லாம்
நம்மை ஆளும் அவர்கள் எல்லாம் நம் நாட்டின் எல்லை வழியாக நுழையவில்லை. எறும்புபோல் அவர்கள் ஊர்ந்து வந்ததெல்லாம் நம் குறைகள் வழியாகத்தான்.
புலிகள் இருந்தவரை
புலிகள் இருந்தவரை இந்தியாவுக்கு எதிரான எந்த கப்பலும் வரவில்லை.
இந்தியாவுக்கு ஆபத்தென்றால் முதலில் பாதிக்கப்படபோவது தமிழ்நாடுதான்.
எனவே புலிகள் மீதான தடையை நீக்கி அவர்களை மீண்டும் இயங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஏன் இந்திய அரசிடம் கோரக்கூடாது?
செஞ்சோலைவயில் குண்டு வீசி 61 அப்பாவி மாணவிகள
செஞ்சோலைவயில் குண்டு வீசி 61 அப்பாவி மாணவிகளை கொன்ற நினைவு நாளில் சிங்கள அரசுக்கு ஒரு விமானத்தை பரிசளித்துள்ளது இந்திய அரசு.
750 தமிழக மீனவர்களை கொன்ற சிங்கள கடற்படைக்கு இரண்டு போர்க் கப்பல்களை வழங்கிய இந்திய அரசு இப்போது விமானம் வழங்கியுள்ளது.
தமிழனைக் கொல்வதற்கு தமிழன் வரிப்பணத்தை இந்திய அரசு வழங்குகிறது.
இது புரியாமல் பாரத் மாதாக்கி ஜே என முழங்குகிறான் அப்பாவி தமிழன்.
என்னே கொடுமை இது?
ஈழத் தமிழருக்கு சீனா உதவுமா?
ஈழத் தமிழருக்கு சீனா உதவுமா?
விக்னேஸ்வரனை ஈழத்து தாய்லாமாக பயன்படுத்தி இந்திய உதவியை பெற வேண்டும் என ஒரு ஆய்வாளர் கூறினார்.
அதற்கு பதிலடியாக சிலர் “ஈழத் தமிழர்கள் இனி சீனாவுடன் பேச வேண்டும். சீனாவின் உதவியை பெற வேண்டும்” என எழுதுகின்றனர்.
இரண்டுமே தவறான கருத்துகள். ஏனெனில் இந்தியாவும் சீனாவும் இலங்கையில் ஒருமித்தே செயற்படுகின்றன.
இரண்டுமே ஈழத் தமிழருக்கு எதிராகவே செயற்படுகின்றன.
1971ல் ஜே.விபி புரட்சி செய்தபோது அதனை அடக்க இந்தியா ராணுவத்தை அனுப்பியது. சீனா ராணுவ தளபாடங்களை வழங்கி உதவியது.
அதன்பின்னர் இந்திய அரசு 1987ல் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்தபோது அதனை ஆதரித்து கருத்து வெளியிட்ட முதல் நாடு சீனா ஆகும்.
அதன் பின்னர் இந்திய ராணுவத்துடன் புலிகள் யுத்தம் செய்த வேளையில்கூட சீனா புலிகளுக்கு உதவவில்லை. மாறாக இலங்கை அரசுக்கே உதவி செய்தது.
அதன் பின்னர் 2009ல் இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்து தமிழ் மக்களையும் புலிகளையும் அழித்தபோதும் சீனா இலங்கை அரசுக்கே உதவி செய்தது.
அதுமட்டுமல்ல இன்றுவரை ஜ.நா வில் இலங்கை அரசை இந்திய அரசு மட்டுமல்ல சீனா அரசும் சேர்ந்தே காப்பாற்றி வருகின்றன.
இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் முதலில் இந்தியாவிடமே கேட்கப்பட்டது. இந்தியா வேண்டாம் என்ற பிறகே இந்திய அனுமதியுடனே சீனாவுக்கு வழங்கப்பட்டது.
அதே அம்பாந்தோட்டையில் இந்திய தூதரகம் அமைய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அம்பாந்தோட்டை விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் ஒருபகுதி கடன் அடிப்படையில் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்போது அக் கடனுக்குரிய வட்டியைக்கூட கட்ட முடியாமல் இந்திய அரசிடம் இலங்கை அரசு உதவி கோருகிறது.
எல்லாவற்றையும்விட இதுவரை இலங்கையில் சீனா செய்த முதலீட்டைவிட இந்தியாவிலேதான் அதிக முதலீட்டை செய்துள்ளது.
எனவே இலங்கைக்காக இந்தியாவுடன் சீனா ஒருபோதும் முரண்படாது என்ற நிலையில் அதுவும் ஈழத் தமிழருக்கு சீனா உதவும் என நம்புவது முட்டாள்தனம் ஆகும்.
எனவே சீனாவின் உதவியை ஈழத் தமிழர் பெற வேண்டும் என்று கூறுவதால் ஈழத் தமிழருக்கு எந்த நன்மையும் பயக்காது.
மாறாக ஈழத் தமிழரை சீனாவின் கைக்கூலிகள் என்று ஒதுக்குவதற்கே இந்திய அரசுக்கு உதவும்.
எல்லாவற்றையும்விட உருவாகி வரும் ஈழ மற்றும் தமிழக தமிழர்களின் ஜக்கியத்தைக் குழப்புவதற்கே இது இந்திய அரசுக்கு பெரிதும் உதவும்.
காட்டில் ஒருநாள் சாராயம் குடித்துக்கொண்டிருந்த
காட்டில் ஒருநாள் சாராயம் குடித்துக்கொண்டிருந்த சிங்கத்திடம் சென்று ஒரு எலி “சாராயம் குடித்து உடம்பை கெடுக்க வேண்டாம். அழகிய சொர்க்கத்தை காட்டுகிறேன்” என்றது.
இதைக் கேட்ட சிங்கம் அந்த எலியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது.
இதைக் கண்ட அருகில் நின்ற எருமை “ஏன் எலிக்கு அடிக்கிறீர்கள்? நல்லதுதானே சொல்கிறது” என்று சிங்கத்திடம் கேட்டது.
சிங்கம் சொன்னது "இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே சொல்லி நேத்து என்னை இந்த காடு பூராவும் நடக்க வெச்சான். டெய்லி இவனுக்கு இதான் வேலையே"
குறிப்பு - இந்த கதைக்கும் கீழே உள்ள படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?
தமிழத்தேசிய உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான
தமிழத்தேசிய உணர்வாளரும் திரைப்பட இயக்குனருமான மு.களஞ்சியம் அவர்கள் நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூலை பெற்றுக்கொண்ட போது
குறிப்பு – செப் -1 தோழர் தமிழரசன் 35வது நினைவு தினம்.
தமிழ் இனம் விடுதலை பெறவேண்டும்
தமிழ் இனம் விடுதலை பெறவேண்டும் என்ற எமது இலக்கு வெற்றி பெற வேண்டுமாயின் அதனை அடைவதற்குரிய பாதை எது என்பது குறித்தும் நாம் தெளிவாக கண்டறிய வேண்டும்.
இன்று இரண்டு பாதைகள் எம்முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதை. இன்னொன்று அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையாகும்.
ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை பலாத்கார முறையென்றும் அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையை சாத்வீக பாதையென்றும் இன்னொரு வடிவத்தில் சிலர் வரையறை செய்கிறார்கள்.
புலிகள் இயக்கம் வெற்றி பெறவில்லை என்பதை வைத்து ஆயுதப் போராட்டம் பயனற்றது என இன்று சிலர் போதிக்க முற்படுகின்றனர்.
புலிகள் மௌனித்தது தங்களது ஆயுதங்களையே ஒழிய ஆயுதப் போராட்டத்தை அல்ல.
1948ம் ஆண்டு முதல் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாத நிலையில் தமிழரசுக்கட்சி 1962ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது.
இந்த அகிம்சைப் போராட்டத்தை வெகு இலகுவாக பலாத்காரத்தை பாவித்து இலங்கை அரசால் முறியடிக்க முடிந்தது.
அகிம்சையை போதித்த தமிழரசுக்கட்சி தலைவர்களால் இலங்கை அரசின் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை முன்வைக்க முடியவில்லை.
இருந்தபோதும் இவர்கள் பின்னால் சென்ற தமிழ் இளைஞர்கள் அந்த உண்மையைக் கண்டு கொண்டார்கள்.
அவர்கள் ஆயுதம் தாங்கி அரச பலாத்காரத்திற்கு தகுந்த பதில் அளித்தார்கள். இதனை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
மக்கள் தமது பூரண ஆதரவை இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இவ்வாறே இலங்கை அரசின் பலாத்காரத்திற்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பலாத்காரம் உருவாகியது.
மக்களை ஏமாற்றவும் புரட்சியின் கவனத்தில் இருந்து மக்களை திசைதிருப்பவுமே முதலாளித்துவ நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுகின்றனர்.
இதன்மூலம் இந் நாடுகளில் உண்மையான அதிகாரம் ஆயுதம் தாங்கிய படைகளின் கையில்தான் இருக்கின்றது என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது.
பாராளுமன்ற வழி மூலம் பேச்சுவாhத்தைகளினால் தீர்வு பெறும்படி கூறுவதன் மூலம் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றனர்.
எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கத்தை அடக்கிவைத்திருப்பது பலாத்காரத்தின் மூலமே.
ஆயுதம் தாங்கிய படைகள் உள்ளடங்கிய ஒரு அரசு இயந்திரத்தை இதற்காக உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
ஆளும் வர்க்கத்தின் காவல் நாய்களான ஆயுதப் படைகளின் கைகளில் இருக்கும் துப்பாக்கி இல்லாமல் ஒரு நிமிடமேனும் ஆளும் வர்க்கத்தால் ஆட்சி நடத்த முடியாது.
அதனால்தான் “அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழாயில் இருந்து பிறக்கின்றது” என்று தோழர் மாசேதுங் கூறினார்.
இதன் அடிப்படையில்தான் ஆளும் வர்க்கத்தின் பலாத்காரத்திற்கு எதிராக ஆளப்படும் வர்க்கம் எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்காமல் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்று புரட்சியாளர்கள் கூறிவருகிறார்கள்.
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிவான். இது கடவுள் செயல் என்று சாத்வீக வாதிகள் போதிக்கின்றனர்.
ஆனால் அவர்களின் கடவுள்கள்கூட ஆயுதத்தைப் பாவித்தே அதர்மத்தை ஒழித்ததாக உள்ள கதைகளை இவர்கள் மறந்துவிடுகின்றனர்.
இந்துசமயப் புராணக் கதைகளை எடுத்துப் பார்த்தாலும் அதர்மத்தை அழித்து தர்மம் வெல்வதற்கு பலாத்காரமே காரணமாய் இருப்பதைக் காணலாம்.
இந்துமத சிவன் கையில் சூலாயுதம் இருக்கிறது. கிருஸ்ணன் கையில் சக்கராயுதம் இருக்கிறது. முருகன் கையில் வேலாயுதம் இருக்கிறது. காளி கையில் கத்தி இருக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
கடந்த 71 வருட தேர்தல் வரலாற்றில் இருந்து நாம் தெரிந்துகொண்டது தேர்தல் மூலம் ஆளும் வர்க்கத்தில் ஆட்களை மாற்ற முடியுமேயொழிய ஆளும் வர்க்கத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதே.
இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சண்முகதாசன் தமது அனுபவங்களில் இருந்து கூறியது “ இன்றுள்ள நவகாலனிச பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே அவை செயற்படும். எனவே அடக்கு முறையான பூர்சுவாவர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது”.
அபிவிருத்தி என்றால் என்ன?
•அபிவிருத்தி என்றால் என்ன?
எம்.பி யாகி அமைச்சுப் பதவி பெறுவதன் மூலம் அபிவிருத்தி அடைய முடியுமென்றால் இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களாக சிங்களப்; பிரதேசங்கள் இருந்திருக்க வேண்டும்.
ஏனெனில் சிங்கள பிரதிநிதிகளே அதிகளவு அமைச்சு பதவிகளை இதுவரை கொண்டிருக்கிறார்கள். இனியும் கொண்டிருப்பார்கள்.
ஆனால் அவர்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை என்பதே உண்மை.
உண்மை இவ்வாறு இருக்கும்போது அமைச்சு பதவி பெறுவதால் எப்படி தமிழ் பிரதேசம் அபிவிருத்தி அடைய முடியும் என சிலர் நம்புகிறார்கள்?
றோட்டு போடுவது, சிலருக்கு வேலை வாய்ப்பு பெறுவதுதான் அபிவிருத்தி என்றால் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இவை எல்லாம் கிடைத்தனவே. பேசாமல் அவர்களின் கீழ் அடிமையாக இருந்திருக்கலாமே?
அபிவிருத்தி முக்கியமே. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகாரம் வேண்டும். எனவே அதிகாரப் பரவலாக்கம் செய்யாதவரை தமிழ் பிரதேசம் ஒருபோதும் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாது.
1948வரை ஆங்கிலேயர் மட்டுமே எம்மை ஆக்கிரமித்து சுரண்டினார்கள். இப்போது வடக்கு கிழக்கில் இந்தியா சுரண்டுகிறது. தெற்கில் சீனா சுரண்டுகிறது. இதற்கிடையில் தன்னுடன் ஒப்பந்தம் செய் என்று அமெரிக்கா மிரட்டுகிறது.
கடன் சுமையோ வருடா வருடம் அதிகரிக்கிறது. பெற்ற கடனுக்குரிய வட்டியைக் கட்டுவதற்கே கடன் வாங்க வேண்டிய நிலையில் இலங்கை அரசு இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கை அரசுடன் சேர்ந்தால் அபிவிருத்தி அடைய முடியும் என பதவி வெறி பிடித்த சுயநலவாதிகளைவிட வேறு யார் நினைப்பார்கள்?
சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!
• சுதந்திரதின வாழ்த்து தெரிவிப்போரின் சிந்தனைக்கு!
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம். இங்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எல்லாம் இருக்கிறது என்று நம்புவர்களின் சிந்தனைக்கு சில வினாக்கள்.
இந்தியாவில் யாருக்கு இருக்கிறது சுதந்திரம்?
• தாங்கள் வாழும் காட்டை அழிக்க வேண்டாம் எனக் கோரிய மலைவாழ் மக்களை எந்தவித விசாரணையும் இன்றி சுட்டுக்கொல்வதற்கு பொலிசாருக்கு சுதந்திரம் உண்டு.
• கருப்பு சட்டத்தை நீக்கு எனக் கோரும் மணிப்பூர் பெண்களை கற்பழிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு.
• காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம்களை கொல்வதற்கு இந்தியபடையினருக்கு சுதந்திரம் உண்டு.
• தமிழக மீனவர்களைக் கொல்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு சுதந்திரம் உண்டு. அந்த கடற்படையினருக்கு பயிற்சி வழங்க இந்திய ஆட்சியாளர்களுக்கு சுதந்திரம் உண்டு.
• தமிழர்களுக்கு எதிராக குரல் கொடுக்க சுப்பிரமணியசுவாமிக்கு சுதந்திரம் உண்டு. அவருக்கு பொலிஸ் காவலும் உண்டு. ஆனால் அவருக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுத்தால் அவர்களை பிடித்து அடைக்க தமிழக பொலிசுக்கு சுதந்திரம் உண்டு.
• கூலிப்படையை ஏவி கொலை செய்ய காஞ்சி சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அவரை விடுதலை செய்யவும், அப்பாவி பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதிக்கவும் இந்திய நீதிதுறைக்கு சுதந்திரம் உண்டு.
• கோடிக்கணக்கில் ஊழல் செய்யவும் வெளியில் சுதந்திரமாக திரியவும் ராசா, கனிமொழி வகையறாக்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் பல வருடங்களாக சிறையில் வாடும் அப்பாவிகளுக்கு விடுதலை இல்லை.
• தீபெத் அகதிகள் சுதந்திரமாக இந்தியாவில் நடமாடலாம். ஆனால் தமிழ் அகதிகளை மட்டும் கொடிய சிறப்பு முகாமில் அடைத்து வைக்க தமிழக அரசுக்கு முழு சுதந்திரம் உண்டு.
தமிழா! நீ அடிமையாக இருக்கிறாயா? சுதந்திரமாக இருக்கிறாயா?
(மீள் பதிவு)
6 comments
1995ம் ஆண்டு அகஸ்டு 15ம் திகதியன்று
1995ம் ஆண்டு அகஸ்டு 15ம் திகதியன்று நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த துறையூர் சிறப்புமுகாம் திருச்சி காவல் கண்காணிப்பாளாரால் சோதனை செய்யப்பட்டது.
இவ்வாறான சோதனை வழக்கமாக மாதக் கடைசியில் நடைபெறுவதுதான் வழக்கம். மாறாக திடீரென இடையில் சோதனை செய்யப்பட்டால் எங்கேயோ ஏதோ பெரிய பிரச்சனை நடந்துவிட்டது என்று அர்த்தம்.
ஆம். அன்றும் ஜெயா அம்மையாரின் ஆட்சியையே ஆட்டம்காண வைத்த சிறையுடைப்பு சம்பவம் ஒன்று நடந்து விட்டது.
அதாவது வேலூர் கோட்டை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகள் தப்பி விட்டார்கள் என்பதே அந்த சம்பவம்.
பல நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய பொலிசாரின் 24 மணிநேரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த புலிகள் தப்பிவிட்டனர் என்பது ஆச்சரியம் எனில் அதைவிட ஆச்சரியம் அவர்கள் சுரங்கம் தோண்டி தப்பிவிட்டனர் என்ற செய்தியாகும்.
கியூ பிரிவு உயர் அதிகாரி ஒருவர் சென்னையில் இருந்து சென்று சுரங்கத்தை வீடியோ எடுத்து காண்பிக்கும்வரை யாருமே அதை நம்பாமல் இருந்தனர்.
எனக்கும்கூட எப்படி சுரங்கம் தோண்டியிருப்பார்கள்? எப்படி தப்பியிருப்பார்கள்? யார் யார் தப்பினார்கள்? என்ற கேள்விகள் தோன்றின.
அதேவேளை இவ்வாறு தப்பிய புலிகளில் இருவர் சென்னையில் பொலிசார் மறித்து சோதனை செய்தபோது சயனைட் அருந்தி இறந்துவிட்டனர் என்ற செய்தியும் பத்திரிகையில் வந்திருந்தது.
நானும் வேலூர் கோட்டையில் ஒரு வருடம் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். எனவே எனக்கு அந்த முகாம் சூழல் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்தவர்கள் பலரை எல்லாம் தெரியும்.
ஆனால் நான் எவ்வளவோ முயன்றும் சிறையுடைப்பு பற்றிய மேலதிக விபரங்களை அப்போது அறிய முடியவில்லை.
இந்நிலையில் சிறப்புமுகாம் பற்றிய என் முகநூல் பதிவுகளை படித்துவரும் ஒருவர் ஸ்கொட்லாந்தில் இருந்து என்னுடன் தொடர்பு கொண்டார்.
அவர் தன் உறவினர் பற்றி அறிவதற்காக என்னுடன் தொடர்பு கொணடார். ஆனால் நல்லவேளையாக அவர் மூலமே நான் பல செய்திகளை அறிய முடிந்தது.
சென்னையில் பொலிசார் சோதனை செய்தபோது சயனைட் அருந்தி இறந்த இருவரில் ஒருவர் சங்கர். இன்னொருவர் பஞ்சன் என்ற விபரத்தை அவரே கூறினார்.
இந்த சங்கர் என்பவர் வேலூர் சிறப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு பொறுப்பாக இருந்தவர்.
இவருக்கு முன்னர் மன்னாரைச் சேர்ந்த அண்ணை என்பவர் இருந்தார்.
சங்கர் மிகவும் கட்டுப்பாடு நிறைந்தவர். ஆனால் நகைச்சுவை உணர்வு கொண்டவர். எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டு அல்லது எழுதிக் கொண்டிருப்பார்.
காயம்பட்ட தனது சக போராளிகளின் மருத்துவ சிகிச்சை தொடர்பாக என்னுடன் அடிக்கடி உரையாடியிருந்தார்.
அவருடன் நான் பழகிய நாட்கள் மிகவும் குறைவு. ஆனாலும் மறக்கமுடியாத இனிய நினைவுகள் அவை.
மேஜர் தாகூர் / சங்கர் (அழகரட்ணம் இரவீந்திரன் ) அவர்களின் 27ம் ஆண்டு நினைவுதினம் 15.08.2022 அன்று ஆகும்.
குறிப்பு – தென்னிந்திய திரைப்படத்துறையினர் மயிர்கூச்செறியும் மர்மங்கள் நிறைந்த வேலுர் சிறையுடைப்பை ஏன் இன்னும் படமாக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது
தோழர் தமிழரசனுக்கு ஆதரவாகவும் உதவிகரமாகவும்
தோழர் தமிழரசனுக்கு ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருந்த தமிழத்தேசிய உணர்வாளர் நெய்வேலி தோழர் காசிம்பாய் அவர்கள் மரணமடைந்துள்ளார். அவருக்கு எமது அஞ்சலிகளும் ஆழ்ந்த இரங்கல்களும்.
செய்தி - இலங்கையில் தமிழர் பகுதியான மன்னார்
செய்தி - இலங்கையில் தமிழர் பகுதியான மன்னார் மற்றும் பூநகரி இந்திய முதலாளி அதானிக்கு சிங்கள அரசு வழங்கியுள்ளது.
தயாராவோம் ஆர்ப்பரித்து எழுவோம்
தயாராவோம்
ஆர்ப்பரித்து எழுவோம்
மாண்டவர்கள் நினைவாக உறுதி கொள்வோம்
செப் -1 தோழர் தமிழரசன் 35வது நினைவு தினம்
அப்பாவி ஈழத் தமிழ் அகதிகளை
அப்பாவி ஈழத் தமிழ் அகதிகளை பிடித்து புலிகள் என்று முத்திரை குத்தி சிறப்புமுகாமில் அடைக்கும் இந்திய புலனாய்வு அமைப்புகள் இலங்கைக்கு வந்திருக்கும் சீன கப்பலை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனவாம்.
செய்தி – யாழ் இந்து கல்லூரியில் இந்தி மொழி கற்பிப்பு
செய்தி – யாழ் இந்து கல்லூரியில் இந்தி மொழி கற்பிப்பு
தமிழ்நாட்டில் விரட்டியடிக்கப்பட்ட இந்தி எதற்காக ஈழத்தில் திணிக்கப்படுகிறது?
தீர்வு பெற்று தரும் என இந்தியாவை நம்பியதற்கு தரப்பட்ட பரிசா இது?
இதற்காவது தமிழக திராவிட முதல்வர் குரல் கொடுப்பாரா?
எமது தலைவர்கள் உறக்கத்தில் இருப்பதாக கருத வேண்டாம்.
எமது தலைவர்கள் உறக்கத்தில் இருப்பதாக கருத வேண்டாம்.
அவர்கள் யாழ் இந்துக்கல்லாரி சென்று இந்தி படிக்கலாமா அல்லது 30நாளில் இந்தி கற்றுக்கொள்வது புத்தகத்தை வாங்கி இந்தி படிக்கலாமா என்று சிந்திக்கிறார்கள்.
சிறிய இலங்கைதீவில்
சிறிய இலங்கைதீவில் 4 இந்திய தூதராலயங்கள் (கொழும்பு, கண்டி, யாழ், அம்பாந்தோட்டை) உண்டு.
இதில் யாழ்ப்பாணத்தில் மட்டும் ஏன் இந்தியதூதர் இந்திமொழியை திணிக்கிறார்?
ஏனெனில் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அதன் மொழியை முதலில் அழிக்க வேண்டும் என்பதை தூதர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்.
இந்திக்காரன் தமிழ்நாட்டில்
இந்திக்காரன் தமிழ்நாட்டில் வந்து தமிழில் பானிப்பூரி விக்கிறான்.
ஆனால் இந்தி படித்தால் முன்னேறலாம் என யாழ் இந்திய தூதர் கூறுகிறார்.
இந்தியை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தில் வந்து குந்தி இருக்கும் இந்திய தூதரையும் சேர்த்து விரட்டியடிப்போம்.
இவர் யார் என்று தெரிகிறதா?
இவர் யார் என்று தெரிகிறதா?
இவர்தான் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து வைத்த ஈழத்தமிழர் சிவானந்தம் அடிகள்.
இன்று இந்தி ஈழத்திற்கு வந்துள்ளது. ஆனால் எதிர்ப்பதற்கு ஒரு சிவானந்தம் அடிகள் எம் மத்தியில் இல்லையே?
இப்போது புரிகிறதா
இப்போது புரிகிறதா ஏன் ஆரியமும் திராவிடமும் சீமானை எந்நேரமும் விமர்சிக்கின்றன என்று?
சீமான் மட்டுமல்ல யார் தமிழர் நலனுக்காக குரல் கொடுத்தாலும் அவர்களை இவர்கள் அவதூறு செய்துகொண்டே இருப்பார்கள்.
ஏனெனில் தமிழத் தேசியத்தை கண்டு ஆரியமும் திராவிடமும் அஞ்சுகின்றன.
வாஜ்பேய் நல்லவரா?
•வாஜ்பேய் நல்லவரா?
(16.08.22 வாஜ்பேயின் 4 ம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.)
வாஜ்பேய் நல்லவர். ஆனால் தவறான கட்சியில் இருந்தார் என்கிறார்கள்.
ஒரு நல்லவர் எப்படி தவறான கட்சியில் இருக்க முடியும்? என்று கேட்டால் அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்கிறார்கள்.
காட்டிக் கொடுத்தவர் எப்படியடா சுதந்திர போராட்ட வீரர் என்று அழைக்கலாம்? என்று கேட்டால் பதில் சொல்லாமல் முழிக்கிறார்கள்.
இதோ நீதிமன்றத்தில் வாஜ்பாய் கொடுத்த வாக்குமூலம்,
"எனது தந்தை பெயர் கவுரிசங்கர். நான் குவாலியர் கல்லூரியில் படித்துள்ளேன்.
நான் பிராமண சமூகத்தை சேர்ந்தவன்.ஆக்ரா மாவட்டம் பட்டேஸ்வர் கிராமத்தை சேர்ந்தவன்.
1942 ஆகஸ்ட் 27ம் தேதி மதியம் 2 மணி இருக்கும். காகு,மகுன் என்ற இருவரும் ஊர்ச்சாவடி அருகில் வந்தனர்
வனத்துறை அலுவலகத்தை உடைக்கவேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இருநூறுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
நானும், எனது தம்பியும் பின் தொடர்ந்து சென்றோம். பாதி தூரம் சென்றதும் நின்று கொண்டோம்.
வனத்துறை அலுவலகம் இடிக்கப்பட்டது .உடைந்த செங்கல்கள் விழுவதைப் பார்த்தோம்.ஆடு,மாடுகளை அவிழ்த்துவிட்டனர். தடுப்புகள் உடைக்கப்பட்டது.
நாங்கள் அருகில் செல்லவில்லை. காகு,மகுன் மற்றும் ஊர் மக்கள்தான் இதற்குக் காரணம்."
இந்த வாக்குமூலத்திற்குப்பிறகு அந்த ஊர் என்ன கதியானது தெரியுமா?
வாஜ்பாய் நீதிமன்றத்தில் ஊர் மக்களைக் காட்டிக்கொடுத்து வாக்குமூலம் கொடுத்தவுடன் பட்டேஸ்வர் கிராமத்தை போலீஸ்
சுற்றி வளைத்தது.
263 வீடுகள் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டது. காகு,மகுன் ஆகிய இருவரும் இரும்புச்சங்கிலியால் கட்டி இழுத்துச்செல்லப்பட்டனர்.
300 க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டுசித்தரவதை
செய்யப்பட்டனர்.
காகு,மகுனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.ஊருக்கு 10,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
65 ஆண்டுகளுக்கு முன்பு அந்தத்தொகை மிகப்பெரியது. ஊர் மக்களால் கட்ட முடியவில்லை.
எனவே பொதுமக்கள் மேலும் சித்ரவதை செய்யப்பட்டனர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ஊரில் முஸ்லிம் களோ, கிறிஸ்தவர்களோ யாரும் இல்லை. முற்றிலும் இந்து மக்கள் தான்.
அந்த இந்து மக்களை காட்டிக் கொடுத்தவர்தான் இந்து தலைவர் வாஜ்பேய். காட்டிக் கொடுத்ததற்கு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தமிழ்நாட்டில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். கூட இருந்தவர்களை காட்டித் தரும்படி அவருக்கு சித்திரவதை செய்யப்பட்டது.
அவரது மீசை மயிர்கள் தீயினால் சுடப்பட்டது. ஆனாலும் அவர் சிறைவாசத்தை அனுபவித்தார்.
அந்த இளைஞர் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு. அவருக்கு பாரத ரத்னா விருதும் இல்லை.
அவர் இன்றைக்கும் அரச மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுகிறார்.
தமிழா! கட்சத்தீவு உன்னுடையது
தமிழா!
கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது
வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது
காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது
முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது
நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு
கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது
நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது
அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது
உனது ரயில்வேயில் உனக்கு வேலை இல்லை. 90% வேலை வட மாநிலத்தவருக்கு.
காஸ்மீர் எல்லையில் காவலுக்கு சென்று நீ சாக வேண்டும். ஆனால் கடலில் உன் மீனவனைக் காக்க யாரும் வருவதில்லை.
வருடம் 85 ஆயிரம் கோடி ரூபா வரி நீ கட்ட வேண்டும். ஆனால் கொரோனோவுக்கு காசு கேட்டு நீ கையேந்தினாலும் உதவி கிடைப்பதில்லை.
தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் நீ அதை ஆள முடியாது!
உன் கைக்கு எட்டும் தூரத்தில் 2 லட்சம் தமிழர் உன் கண்முன் கொல்லப்படும்போதும் உன்னால் காப்பாற்ற முடியாது. ஏனெனில் நீ அடிமையாக இருக்கிறாய்
தமிழா! இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல் கிடக்கப் போகிறாய்
தமிழா! மூவாயிரம் ஆண்டுக்கு மேலான வரலாறு உனக்கு உண்டு.
ஆனால் அதை உணராமல் கைபர் கணவாய் வழியே ஆடு மாடு மேய்த்து வந்தவனிடம் அடிமையாகக் கிடக்கிறாயே.
நீ எட்டுக் கோடி தமிழா. ஆனால் இரண்டு கோடி சிங்களவன் எப்படி உன் தொப்புள் கொடி உறவுகளை தைரியமாக கொல்ல முடிந்தது?
ஏனெனில் அவன் இரண்டு கோடியாக இருந்தாலும் அவனுக்கு தனி நாடு இருக்கிறது. அவனுக்கு ஒரு அரசும் இருக்கிறது.
உனக்கும் ஒரு நாடும் அதில் உன் அரசும் இருந்தால் நீயும் தலை நிமிர்ந்து வாழ முடியும் அல்லவா?
உன்னைவிட வரலாறும் சனத் தொகையும் குறைந்த பிரான்ஸ் இன்று வல்லரசு. பிரிட்டன் இன்று வல்லரசு.
ஆனால் நீ மட்டும் இதை உணராமல் அடிமையாகக் கிடக்கிறாயே?
நீ அடிமையாக கிடப்பது கேவலம் அல்ல. மாறாக நீ அடிமையாக கிடக்கிறாய் என்பதை உணராமல் இருக்கிறாயே அதுதான் கேவலம்.
உன் அடிமைத்தனத்தை உணர்ந்துகொள் உன் பலத்தை அறிந்துகொள்
அதன் பின்னர் கிழக்காசியாவில் ஒரு அதிசயம் நிகழ்வதை நீ காண்பாய்.
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும். தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவதே ஈழத்தமிழருக்கு செய்யும் உதவியாகும். – தோழர் தமிழரசன்.
9ம் ஆண்டு நினைவஞ்சலி!
•9ம் ஆண்டு நினைவஞ்சலி!
பெயர் - தோழர் உத்ராபதி
தாய் தந்தையர் - ரங்கநாதன் , சரசுவதியம்மாள்
இடம் - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் சிலுவைச்சேரி கிராமம்.
அமைப்பு - தமிழ்நாடு விடுதலைப்படை
வழக்குகள் -
குள்ளஞ்சாவடி காவல் நிலைய தாக்குதல்,
பூம்புகார் ராம் இறால் பண்ணை மீதான தாக்குதல்,
மயிலாடுதுறை டிவி டவருக்கு குண்டு வைத்தது,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் டவருக்கு குண்டு வைத்தது,
ஆண்டிமடம் காவல்நிலையத்தை தாக்கி ஆயுதங்களை சூறையாடியது
சிறை வாழ்க்கை - 10 ஆண்டுகள்
மறைவு - 24.08.2013
இருவரும் தமிழர்கள் அதுவும் ஈழத் தமிழர்கள்
இருவரும் தமிழர்கள் அதுவும் ஈழத் தமிழர்கள்
ஒருவர், ஈழத்தில் இருந்து தமிழ்நாடு சென்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்திய ஈழத்து சிவானந்தம் அடிகள்
இன்னொருவர், ஈழத்தில் இந்திய தூதரின் இந்தி திணிப்புக்கு துணை போகும் யாழ் இந்துக்கல்லூரி அதிபர்.
என்னே கொடுமை இது?
ஏழை மக்களுக்கு வழங்கும் இலவசங்கள் பற்றி
ஏழை மக்களுக்கு வழங்கும் இலவசங்கள் பற்றி எரிச்சல் அடையும் பிரதமர் மோடி, முதலாளிகளுக்கு வழங்கும் பணம் குறித்து ஏன் பேசுவதில்லை?
கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை.
கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை.
இஸ்ரோ அனுப்பும் செய்மதிகள் ஏன் இடையில் எரிந்து விழுகின்றன என்று இப்போது புரிகிறதா?
சீனக் கப்பல் வந்ததற்கு இந்திய
சீனக் கப்பல் வந்ததற்கு இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது
என்ன சீனக் கப்பலை மூழ்கடித்துவிட்டதா அல்லது சிங்கள அரசுடன் உறவை துண்டித்துவிட்டதா?
இல்லை. சிறப்புமுகாமில் புகுந்து அகதிகளின் கைத்தொலைபேசிகளை பறித்துள்ளது.
????
ஒன்று ஆரியம். இன்னொன்று திராவிடம்.
ஒன்று ஆரியம். இன்னொன்று திராவிடம்.
இரண்டுக்கும் இடையில் ஆறு வித்தியாசம் கண்டு பிடிக்கும் அப்பாவித் தமிழனுக்கு தகுந்த பரிசு வழங்கப்படும்.
அலுவல் நேரத்தில் நடிகைகளை சந்தித்து போஸ் கொடுப்பது. அப்புறம் பயண நேரத்தில் அலுவல் பார்ப்பதுபோல் நடிப்பது.
இந்த போட்டோ அரசியலை இன்னும் எத்தனை நாளைக்கு சகித்துக்கொண்டிருப்பது?
இவர்கள் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?
இவர்கள் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?
போராட்டம் நடந்த நாடுகளில் எல்லாம் அந்நாட்டுப் பெண்கள் எப்படி பங்கு பற்றினார்களோ அதே மாதிரித்தான் ஈழப் போராட்டத்திலும் பெண்களின் பங்கு இருக்கிறது. எனவே இதில் பெருமை கொள்ள என்ன இருக்கிறது என கேட்க தோன்றலாம்.
ஆம். உண்மைதான். இப்போதும்கூட குர்திஸ் பெண்கள் ஒரு கையில் குழந்தையை ஏந்திக் கொண்டு மறு கையில் துப்பாக்கி ஏந்தி போராடுகிறார்கள்தான்.
அப்படியென்றால் ஈழத்து தமிழ் பெண்கள் எப்படி இவர்களைவிட பெருமை கொள்ள முடியும்?
ஈழத்து பெண்கள் சாதித்தது ஆச்சரியம் இல்லை. அவர்கள் அதனை எத்தகைய சமூக சூழலில் இருந்துவந்து சாதித்தார்கள் என்பதே ஆச்சரியம்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கேட்ட காலத்தில் எங்களால் படிக்க மட்டுமல்ல துப்பாக்கி ஏந்தி போராடவும் முடியும் என நிரூபித்துக் காட்டியவர்கள்.
பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்தவர்கள் இவர்கள் என்ற கருத்து கொண்ட சமூகத்தில் அதனை உடைத்து ஆண்களே வியக்கும் வண்ணம் சாதித்துக் காட்டியவர்கள்.
மாதவிடாய் வந்தால் வீட்டின் மூலையில் குந்த வைக்கப்பட்டவர்கள் இவர்கள் ஆனால் போர்க்களத்தில் அதே மாதவிடாயுடன் சாதனை செய்து காட்டியவர்கள்.
பெண் சயிக்கிள் ஓடினாலே ஆச்சரிமாய் பார்த்த சமூகத்தில் கனரக வாகனங்களை மட்டுமல்ல போர் இயந்திரங்களையே லாவகமாக ஓட்டிக் காட்டியவர்கள்.
புறநானூற்றில் கூறப்பட்ட பெண்ணின் வீரம் கற்பனை அல்ல அது நிஜம்தான் என்பதை இன்றைய காலத்தில் நேரில் நிரூபித்து காட்டியவர்கள் இவர்கள்.
எல்லாவற்றையும்விட துரோகி லிஸ்ட்டில் மாத்தையா கருணா என்று ஆண்களின் பெயர்கள்தான் இருக்கிறது. ஆனால் ஒரு பெண் பெயர்கூட இவ்வாறு இடம்பெறவில்லை.
அதைவிட யுத்தத்தின் பின்னர்கூட ஆண் போராளிகளைவிட பெண் போராளிகளே அதிக சிரமப்படுகின்றனர்.
ஆனாலும் இதுவரை ஒரு முன்னாள் பெண் போராளிகூட போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேட்டி கொடுத்ததில்லை.
இன்னுமொரு நூறு வருடம் கழித்து இவர்கள் வீரம்கூட கற்பனை என்று கருதும் சமூகம் இருக்கக்கூடும்.
ஆனாலும் இன்று இவர்கள் தாராளமாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்.
ஆம். அவர்கள் ஒரு மகத்தான வீரம் செறிந்த வரலாற்றின் சொந்தக்காரர்கள்தான்.
உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம்
உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு தீப்பொறியில் இருந்தே ஆரம்பமானது
ஈழத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் மூட்டும் தீப்பொறி பெரு நெருப்பாக பற்றி எரியப்போகிறதா?
எதுவாயினும் விளைவுகளுக்கு இந்திய தூதரும் இந்துக்கல்லூரி அதிபருமே பொறுப்பு.
தோழர் தமிழரசனும் கொஞ்சம் தந்திரமாக
தோழர் தமிழரசனும் கொஞ்சம் தந்திரமாக கம்யுனிசம் பேசியிருந்தால் இன்று திமுக விடம் நாலு சீட்டும் 25 கோடி ரூபா பணமும் பெற்று வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் பாவம் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு உண்மையாகவே கம்யுனிசம் பேசியதால் கொன்னுட்டாங்க.
செப் -1 தோழர் தமிழரசன் 35வது நினைவு தினம்
ஈழத்தில் இந்தி திணிப்புக்கு
ஈழத்தில் இந்தி திணிப்புக்கு துணை போகும் யாழ் இந்துக்கல்லூரி அதிபருக்கு,
இந்திய ராணுவம் பாதுகாப்பு வழங்கப் போகிறதா? அல்லது
சுமந்திரன் போன்று சிங்கள அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப் போகிறதா?
சுமந்திரன் - இந்த இந்தி திணிப்புக்கு எதிராக
சுமந்திரன் - இந்த இந்தி திணிப்புக்கு எதிராக போராட மாணவர்கள் அழைப்பு விட்டிருக்கிறார்கள். அதனால பயமாக இருக்கிறது ஐயா.
சம்பந்தர் - அதற்கு ஏன் தம்பி பயப்படுகிறீங்க? அதை நம்ம தூதுவர் பார்த்துப்பார்தானே?
சுமந்திரன் - இல்லை கொழும்பில நடந்த மாதிரி எங்க வீடுகளை கொளுத்திடுகிற போராட்டமாக மாறிடுமோன்னுதான்?
சம்பந்தர் - சம்பூரில் 500 எக்கர் நிலம் இந்தியாவுக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரித்து தமிழ் மக்கள் என்னிடம் வந்து கேட்டபோது நான் என்ன கூறினேன்?
சுமந்திரன் - நிலம் வழங்கவதை எதிர்த்தால் அப்புறம் இந்திய அரசு தீர்வு பெற்று தராது என்று கூறினீர்கள்.
சம்பந்தர் - அதே மாதிரி இப்பவும் இந்தியை எதிர்த்தால் அப்புறம் இந்திய அரசு தீர்வு பெற்று தராமல் இருந்திடும் என்று கூறுங்கள்
சுமந்திரன் - இப்படி எத்தனை நாளைக்கு தமிழ் மக்களை ஏமாற்றுவது ஐயா?
சம்பந்தர் - தீபாவளிக்கு தீர்வு என்று நான் கூறினேன். இப்ப யாராவது அது எங்கே என்று கேட்கிறார்களா? அதுபோல் இந்தி பிரச்சனையும் மக்கள் மறந்துவிடுவார்கள். பயப்படாதீர்கள்.
சம்பந்தர் ஐயா – மேடம்! இந்த இந்தி திணிப்பை
சம்பந்தர் ஐயா – மேடம்! இந்த இந்தி திணிப்பை கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைத்தால் என்ன?
இந்திய தூதுவர் - மிஸ்டர் சம்பந்தன்! இன்னுமொரு குவாட்டர் ஊத்தட்டுமா அல்லது போதுமா?
தலைவர்களை விலைக்கு வாங்கலாம்.
தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது – சேகுவாரா
தம்மை ஒருபோதும் விலைக்கு வாங்க முடியாது என்பதை யாழ் இந்திய தூதருக்கு ஈழத் தமிழர்கள் காட்ட வேண்டிய தருணம் இது.
விலைபோன தலைவர்கள் மௌனமாக இருக்கலாம். ஆனால் இந்தி திணிப்புக்கு ஈழத் தமிழர்கள் ஒருபோதும் மௌனமாக இருக்க மாட்டார்கள்.
கிளர்ந்தெழுவோம்
ஒருமித்து குரல் கொடுப்போம்
இந்தி திணிப்பை விரட்டி அடிப்போம்
இந் நூலை எழுதிய முனைவர்
இந் நூலை எழுதிய முனைவர் பாலசுப்பிரமணியத்திற்கு பிடல் காஸ்ரோவின் வரிகளை சமர்ப்பிக்கிறேன்.
“ஒருத்தன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை புனிதப்படுத்த நினைப்பவர்கள் ஆகச் சிறந்த அயோக்கியர்கள்”- பிடல் காஸ்ரோ
தமிழ் மக்களுக்காக போராடி
தமிழ் மக்களுக்காக போராடி எட்டு ஆண்டுகள் சிறைக் கொடுமையை அனுபவித்து விடுதலை பெற்ற தமிழத் தேசிய உணர்வாளர் தோழர் கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மார்க்சைப் படி
மார்க்சைப் படி
பெரியாரைப் படி
அம்பேத்காரை படி
கடைசியில் திமுக ஸ்டாலினுக்கு விளக்கு பிடி
ஸ்டாலினுக்கு விளக்கு பிடித்து
4 சீட்டும் 25 கோடி ரூபாவும் வாங்குவதுதான் லட்சியம் என்றால்
அதற்கு ஏன் மார்க்ஸ் பெரியார் அம்பேத்கார் எல்லாம் படிக்க வேண்டும்?
மார்க்சிசம் படித்து
உண்மையாகவே அதற்காக வாழ்ந்து
உயிரை விட்ட உன்னதமான தலைவர்
தோழர் தமிழரசன் , செப் -1 அவரது 35 வது நினைவு தினம்.
செய்தி – சிங்கள ஜனாதிபதி சிங்களவரான ரஞ்சனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை.
செய்தி – சிங்கள ஜனாதிபதி சிங்களவரான ரஞ்சனை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை.
ஜனாதிபதி அங்கிளுக்கு,
எனது அப்பாவை எப்போது விடுதலை செய்வீர்கள்?
மைத்திரி அங்கிள விடுவதாக சொன்னார். ஆனால் ஏமாற்றிவிட்டார்.
நீங்களாவது நான் என் அப்பாவுடன் சேர்ந்து வாழ வழி செய்வீர்களா?
இப்படிக்கு
தமிழ் அரசியல் கைதியின் அப்பாவி மகள்.
செங்கொடியை நினைவில் கொள்வோம்!
•செங்கொடியை நினைவில் கொள்வோம்!
இவர், தேர்ந்தெடுத்த பாதை குறித்து விமர்சனம் இருக்கலாம் ஆனால் இவரின் அர்ப்பணிப்பு குறித்து யாருக்கும் விமர்சனம் இருக்க முடியாது.
மூன்று தமிழர் உயிர் காக்க தன் உயிரைக் கொடு;த்தவர் வாழ வேண்டி வயதில் சாவை விரும்பி ஏற்றவர்.
தன் உடல் கருகி உயிர் போகும் நேரத்தில்கூட தன்னைக் காப்பாற்றும்படி அவர் கோரவில்லை தன் உடலை வைத்து 3 பேரின் உயிரையும் காப்பாற்றும்படியே கேட்டார்.
அவர் அர்ப்பணிப்பு மகத்தானது. உலகில் தமிழ் இனம் உள்ளவரை வரலாற்றில் அவர் பெயர் நிலைத்து நிற்கும். இது உறுதி!
குறிப்பு - செங்கொடியின் 11 வது நினைவு தினம் 28.08.2022
இவர் யார்?
இவர் யார்?
இவரை ஏன் தமிழர்கள்; நினைவு கூர வேண்டும்?
“பிஎம் கேர் நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாயாவது கொடுத்தீர்களா? தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்க எந்த திட்டமும் கொண்டு வரமாட்டீங்க, தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவுமே தர மாட்டீங்க” என்று கூறியிருப்பது சீமானோ அல்லது மணியரசனோ அல்ல.
அகில இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் தமிழக தலைவர்களில் ஒருவரான பாலபாரதி அவர்களே இப்படி கூறியிருக்கிறார்.
இதையே தமிழ்நாட்டில் 35 வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கூறினார். அவர்தான் தோழர் தமிழரசன்.
அவர் இதனை கூறியபோது அவரை பயங்கரவாதி என்று கூறி கொன்றார்கள்.
அதுமட்டுமல்ல, “இந்திய அரசை நம்பாதீர்கள். அது ஒருபோதும் உங்களுக்கு உதவாது. மாறாக உங்களை கொன்று அழிக்கும்” என்று தோழர் தமிழரசன் ஈழத் தமிழர்களுக்கு கூறினார்.
அவர் கூறியது உண்மைதான் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.
எதிர்வரும் செப் -1 யன்று அவரது 35 வது நினைவு தினமாகும். அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம். I
உழைத்து உழைத்து
உழைத்து உழைத்து
உருக்குலைந்து போன மக்களை
மேலெழும்ப விடாமல்
அழுத்தி வைத்திருக்கும்
ஆபத்தான ஆயுதங்களே
மதங்களும் அவற்றின் கடவுள்களும்.
- தோழர் லெனின்
குறிப்பு – நல்லூர் முருகன் திருவிழா படங்களை போட்டு "தமிழன் கெத்து" என எழுதுவோருக்கு லெனின் கூறிய வரிகளின் அர்த்தம் புரியுமா?
கடவுள் கந்தன் கற்றுக் கொடுக்கும்
கடவுள் கந்தன் கற்றுக் கொடுக்கும் முக்கிய விடயம் என்னவெனில் ஆயுதத்தின் மூலமே தீர்வு பெற முடியும் எனபதுதான்.
கடவுள் கந்தன் எப்போதும் கையில் வேலாயுதத்துடனே காட்சியளிக்கிறார்.
அவர் சூரனை அகிம்சை முறையில் தோற்கடிக்கவில்லை. மாறாக தனது வேலாயுத்தின் மூலமே வதம் செய்தார் என்று புராணம் கூறுகிறது.
எனவே கடவுள் கந்தன் காட்டிய வழியில் தமிழ் மக்களும் தீர்வு பெற வேண்டுமாயின் ஆயுதப் போராட்டமே ஒரே வழியாகும்.
சம்பந்தர் அய்யா ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை பயங்கரவாதிகள் என்றார்.
அப்படியென்றால் அவர் தினமும் வணங்கும் கடவுள் கந்தனே முதல் பயங்கரவாதியாகும்.
Subscribe to:
Posts (Atom)