Thursday, September 29, 2022
நீட் தேர்வை ரத்து
நீட் தேர்வை ரத்து பண்ணுவதாக கூறி பதவிக்கு வந்தவர்கள் இன்னும் ரத்து செய்யவில்லை. அவர்கள் அனிதாவையே மறந்து விட்டார்கள்.
நீட் தேர்வு ரத்து ரகசியம் தன்னிடம் இருப்பதாக கூறிய உதயநிதி ஸ்டாலினும் அனிதாவை மறந்து சினிமாபட விநியோகத்தில் மும்முரமாக இருக்கிறார்.
என்னே கொடுமை இது?
இரு பெண்கள்
இரு பெண்கள்
ஒருவர் ஸ்டாலின் மனைவி துர்க்கா
இன்னொருவர் சீமான் மனைவி கயல்விழி
கடவுள் இல்லை என்னும் பெரியாரின் கொள்கையை கொண்டிருப்பதாக கூறும் ஸ்டாலின் தன் மனைவியை கோயில் கோயிலாக அனுப்புகிறார்.
பெண்கள் படிக்க வேண்டும் சம உரிமை பெற வேண்டும் என்று கூறும் சீமான் தன் மனைவியை வழக்கறிஞராக உயர்நீதிமன்றத்திற்கு அனுப்புகிறார்.
இதில் யார் தமது கொள்கைக்கு விசுவாசமாக இருக்கிறார்?
சிங்கள அரசால் கைது செய்யப்பட்ட
சிங்கள அரசால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் ராஜீவ்காந்த் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
அவருடைய விடுதலைக்கு தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்களும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
அவரை கைது செய்வதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நியாயங்களை எடுத்துக்கூறுவோரை மிரட்ட முனைகிறது சிங்கள அரசு.
ஏனெனில் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நியாயங்களை புரிந்துகொள்வதை சிங்கள அரசுகள் ஒருபோதும் விரும்புவதில்லை.
எலிசபத் மகாராணியார் தனது 96 வயதில்
எலிசபத் மகாராணியார் தனது 96 வயதில் இன்று மரணமடைந்துள்ளார்.
இனியாவது பிரிட்டனில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வருமா?
மங்கோலிய புத்த பிக்குவும் ஈழத்து சம்பந்தர் ஐயாவும்!
•மங்கோலிய புத்த பிக்குவும் ஈழத்து சம்பந்தர் ஐயாவும்!
மங்கோலியா நாட்டில் 200 வருடங்களுக்கு முன்னர் உயிர் நீத்த புத்த பிக்கு ஒருவரின் உடலை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
நின்ற நிலையிலேயே ஆழ்ந்த தியானத்தில் உயிர் துறந்த பிக்குவின் உடல் இத்தனை வருடங்களாக கெட்டுப் போகாமல் இருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.
அந்த நாட்டின் காலநிலை மற்றும் உடலில் பூசப்பட்டிருக்கும் ஒருவகை வாசனைத் திரவியம் என்பன உடல் கெட்டுப் போகாமைக்கு காரணமாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
ஆனால் அந் நாட்டு மக்கள் அவர் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதாகவும் வேளை வரும்போது கண்களை திறப்பார் எனவும் நம்புகிறார்கள்.
இவரது உடலுக்கு அருகில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. அது தமிழ் மொழியில் காணப்படுவதால் சோழ மன்னன் கல்வெட்டாக இருக்குமோ என சந்தேகம் உருவாகியுள்ளது.
அந்த கல்வெட்டில் “ ஈழத் தமிழருக்கு சம்பந்தர் ஐயா தீர்வு பெற்றுக் கொடுத்த பின்பு என்னை எழுப்பிவிடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.
உடனே மங்கோலிய நாட்டு அரசு “சம்பந்தர் ஐயா எப்போது தீர்வு பெற்றுக்கொடுப்பார்?” என்று கூகுளில் தேடியது.
“அடுத்த தீபாவளிக்கு தீர்வு கிடைக்கும்” என்று சம்பந்தர் ஐயா கூறியதாக உதயன் பத்திரிகை வெளியிட்ட செய்தி கூகுளில் கண்ட மங்கோலியர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
ஈழத்து தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ ஆனால் இப்போது மங்கோலிய மக்கள் அடுத்த தீபாவளி எப்போது வரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பு- படித்து முடிந்ததும் சிரித்துவிட்டு கடந்து செல்லுங்கள். இது வெறும் நகைச்சுவைக்கான பதிவு மட்டுமே. (மீள் பதிவு)
•போராடும் புலம்பெயர் தமிழர்கள்!
•போராடும் புலம்பெயர் தமிழர்கள்!
நான்கு புலம் பெயர் தமிழர்கள் நீதிகோரி பத்தாவது நாளாக ஐநா நோக்கி சயிக்கிளில் சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஒருபுறம் உக்ரைன் போர் நெருக்கடி மறுபுறம் காலநிலை மற்றும் பல்வேறு நெருக்கடி. அத்தனைக்கும் நடுவில் புலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி போராடுகிறார்கள்.
இவர்களின் இந்த போராட்டம் இரண்டு பயன்களை தருகிறது.
முதலாவது, இவர்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து நீதி கோருகிறார்கள். எனவே இது சர்வதேச கவனத்தையும் ஆதரவையும் பெறுகிறது.
இரண்டாவது,தாயகத்தில் இருக்கும் மக்களுக்கு இந்த செய்தி நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கிறது.
இவற்றின் விளைவாக ஏற்படும் முக்கிய மாற்றம் என்னவெனில் தாயகத்திலும் புலத்திலும் ஈழத் தமிழர்கள் மீண்டும் எழந்துவிட்டார்கள் என்ற செய்தி தாய்த்தமிழகத்தில் இருக்கும் உறவுகளுக்கு செல்கிறது.
எனவே இதன் மூலம் உலகத் தமிழினம் ஒன்றுபட்டு போராடும் வாய்ப்பு கனியப் போகிறது.
சரி. உலகத் தமிழினம் ஒன்றுபட்டால் என்ன நடந்துவிடப் போகிறது?
உலகெங்குமுள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே நம் இனப் பகைவர் எங்கோ மறைவார். இது உறுதி!
• செப்-12 தியாகிகள் தினம்.
• செப்-12 தியாகிகள் தினம்.
தோழர்கள் அப்பு, பாலன் ஆகியோருக்கு வீர வணக்கம்!
நக்சல்பாரி புரட்சியாளர்கள் நினைவு நீடூழி வாழ்க! வசந்தத்தின் இடி முழக்கம் தூரத்தில் கேட்கிறது என்று தோழர் மாவோ சேதுங் அவர்களால் வர்ணிக்கப்பட்ட நக்சல்பாரி எழுச்சியை தமிழகத்தில் தோற்றுவித்த தியாகிகளை நினைவு கூர்வோம்.
நக்சல்பாரி புரட்சித் தோழர்கள் அப்பு மற்றும் பாலன் நினைவுகள் நீடூழி வாழ்க.
புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களில் இருந்து எண்ணற்ற புரட்சியாளர்கள் முளைக்கிறார்கள்.
ஆம், தோழர்கள் அப்பு பாலன் வரிசையில் தோழர்கள் தமிழரசன் புலவர் கலியபெருமாள் என பல புரட்சியாளர்கள் தோன்றினார்கள்.
இனியும் தோன்றிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் புரட்சி என்னும் இலட்சியக் கனவு நிறைவேறும்வரை உருவாகுவார்கள். இது உறுதி.
நாம் இழப்பதற்கு எதுவுமில்லை உயிரைத் தவிர. ஆனால் நாம் வெல்வதற்கு ஒரு உலகம் காத்து இருக்கிறது.
இறுதி வெற்றி உறுதி எமக்கு!
இலங்கை தீவில் ஈழத் தமிழர்கள்
இலங்கை தீவில் ஈழத் தமிழர்கள் பூர்வ குடிகளாக வாழ்கிறார்கள் என்பதை நன்கு தெரிந்திருந்தும் சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்று பாரதி பாடியது ஏன்?
அதாவது இலங்கைத் தீவை சிங்களத் தீவு என்று ஏன் அவர் குறிப்பிட்டார்?
•திலீபன் மரணம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?
•திலீபன் மரணம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன?
திலீபன் ஆயுதம் ஏந்திய போராளி. அவர் ஆயுதப் போராட்டத்தில் மரணித்திருந்தால் மடிந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் ஒருவராக இருந்திருப்பார்.
ஆனால் அவர் அகிம்சைப் போராட்டத்தில் மரணித்தார். அதனால் அவரது மரணம் எமக்கு சில பாடங்களை கற்றுக் கொடுக்கிறது.
எல்லா போராளிகளின் மரணங்களும் ஏதோ ஒரு வகையில் எமக்கு வரலாற்றுப் பாடங்கள்தான். ஆனால் திலீபன் மரணம் கூடவே சில படிப்பினைகளையும் கற்றுத் தந்திருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் திலீபன் பெயர் உச்சரிக்கப்படும்போதும் பின்வரும் விடயங்களையும் நாம் கற்றுக்கொள்ளதான் போகிறோம்.
• அகிம்சைப் போராட்டதின் மூலம் எந்த தீர்வையும் பெற முடியாது.
• அகிம்சைப் போராட்டத்தை இலங்கை அரசு மட்டுமல்ல காந்தியின் தேசம்கூட மதிக்காது.
• இந்திய அரசை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்பக்கூடாது.
• இந்தியாவில் இருந்து வந்தது அமைதிப்படை இல்லை. அது ஆக்கிரமிப்பு படை.
திலீபன் ஒரு புலி உறுப்பினர். அதனால்தான் இந்திய அரசு அவரது அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என சிலர் காரணம் கூறுகிறார்கள்.
அவர்களிடம் நாம் கேட்க விரும்புவது “ அப்படியென்றால் அன்னை பூபதி யின் அகிம்சைப் போராட்டத்தை ஏன் இந்திய அரசு மதிக்கவில்லை?”
ஆக திலீபன் தன் மரணத்தின் மூலம் எமக்கு எதை கற்றுத் தந்தாரோ அதையே அன்னை பூபதியும் உறுதிப் படுத்தியுள்ளார்.
ஆம். அகிம்சைப் போராட்டம் மூலம் எதையும் நாம் பெற முடியாது.
அகிம்சைப் போராட்டத்தை இந்திய அரசும் மதிக்காது
திருச்சி சிறப்புமுகாமில் இருந்து
திருச்சி சிறப்புமுகாமில் இருந்து நேற்று 8 ஈழத்தமிழ் அகதிகள் விடுவிக்கப்பட்டு இலங்கை திரும்பினர், மேலும் இன்று 8 பேரும், நாளை 7 பேரும் விடுவிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுகின்றனர் என அறியவருகிறது.
இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
மின் கட்டண உயர்வுக்கு எதிராக
மின் கட்டண உயர்வுக்கு எதிராக
ஏன் இவர்கள் வாய் திறக்க மறுக்கிறது?
திறந்தால் பாஜக உள்ளே வந்திடும் என்பார்களா?
•திலீபனுக்கு அஞ்சலி செலுத்த உரிமை இல்லையா?
•திலீபனுக்கு அஞ்சலி செலுத்த உரிமை இல்லையா?
திலீபன் பயங்கரவாதி என்றும் அதனால் அவரை நினைவுர்வதை தடை செய்ய வேண்டும் என சரத்வீரசேகர எம்.பி கோரியுள்ளார்.
திலீபன் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து இறந்தாலும் அவர் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் என்பதால் அவரை நினைவுகூர அனுமதிக்கக்கூடாது என அவர் கூறுகின்றார்.
இலங்கையில் இறந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க முடியாது என்று சட்டம் கூறுகிறது. இருந்தும் தடுக்கும்படி அவர் கோருகின்றார்.
சரி. பரவாயில்லை. ஆனால் ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீராவும் பயங்கரவாதி என்றுதான் இலங்கை அரசு சுட்டுக் கொன்றது.
ஆனால் ரோகன விஜேயவீராவுக்கு சிலை எழுப்பவும் வருடம்தோறும் அஞ்சலி செலுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.
திலீபனுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரும் சரத்வீரசேகர ரோகன விஜேயவீராவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோருவதில்லை.
ஏனெனில் ரோகண விஜேயவீரா சிங்கள இனத்தை சேர்ந்தவர். திலீபன் தமிழ் இனத்தை சேர்ந்தவர். இதைவிட வேறு என்ன காரணம் இருக்கிறது?
இறந்தவர்களை நினைவுகூர்வதையும்கூட இனவாதக் கண்ணோட்டத்துடனேயே அணுகும் இவர்களிடமிருந்து இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என எப்படி நம்புவது?
இதனை சுட்டிக்காட்டி கண்டிக்க வக்கற்ற சிலர் திலீபனை கொலைகாரன் என்று எழுதி இலங்கை அரசுக்கு கூட்டிக் கொடுக்கும் வேலையை செய்கின்றனர்.
புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை
புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காகவே யுத்தம் செய்தோம் என்றார்கள்.
தமிழ் மக்களுக்காகவே பல்லாயிரக்கணக்கான சிங்கள ராணுவ வீரர்கள் தம் உயிரை அர்ப்பணித்தார்கள் என்றார்கள்.
அப்படியென்றால் தமிழ் மக்கள் சிங்கள ராணுவ வீரர்களை அல்லவா நினைவு கூர வேண்டும். ஏன் திலீபனை நினைவு கூர்கிறார்கள்
காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர்
காவிரி நதிநீர் உரிமைக்காக தன்னுயிர் ஈந்த
பா.விக்னேசு அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
பாலைவன சிங்கம் ஒமர் முக்தார்
பாலைவன சிங்கம் ஒமர் முக்தார் தூக்கில் இடப்பட்ட நாள் 16.09.1931
“இரண்டு உயர்ந்த நிலைகளில் ஏதாவது ஒன்றை அடையாமல் நான் இங்கிருந்து போக மாட்டேன். ஒன்று வெற்றி. மற்றது வீரமரணம்” - லிபிய நாட்டு விடுதலை வீரர் ஒமர் முக்தார்
•பெரியார் !
•பெரியார் !
“பெரியாரியம்” புரட்சிகர கருத்து இல்லை. ஆனாலும் தமிழ்நாட்டில் புரட்சிவாதிகள் சாதித்ததைவிட அதிகமாக அவர் சாதித்தார்.
அதனால்தான் புரட்சிவாதிகளைவிட பெரியாரே அதிகமான மக்கள் மனங்களில் இருக்கிறார்.
ஒருவேளை புரட்சிவாதிகள் புரட்சியை மேற்கொண்டிருந்தால் பெரியாரியம் தோன்றியிருக்காது. ஏன் பெரியார்கூட ஒரு புரட்சிவாதியாக இருந்திருக்க கூடும்.
தமிழக மக்களைப் பொறுத்தவரையில் பெரியாரை பாராட்ட பல விடயங்கள் இருப்பதுபோல் அவரை திட்டி தீர்ப்பதற்கும் சில விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் பெரியாரை நினைவு கூர ஒரு முக்கியமான விடயம் உண்டு.
தந்தை செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் பெரியாரை சந்தித்து ஈழத் தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டபோது “ நாமே இங்கு அடிமையாக இருக்கிறோம். உங்களுக்கு எப்படி ஆதரவு தருவது?” என்று அவர் கேட்டார்.
கலைஞர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது தமிழீழத்தை ஆதரிப்பார். ஆனால் ஆட்சியில் இருக்கும்போது மத்திய அரசின் நிலைப்பாடே தனது நிலைப்பாடு என்று ஏமாற்றுவார்.
ஆனால் பெரியார் அவ்வாறு ஈழத் தமிழர்களை ஏமாற்றவில்லை. அவர் உண்மையைக் கூறினார்.
பெரியார் தந்தை செல்வா அமிர்தலிங்கம் ஆகியோரிடம் மட்டும் இதைக் கூறவில்லை. தான் சந்தித்தபோதும் தன்னிடமும் இதையே கூறினார் என்று மாணவர் பேரவைத் தலைவர் சத்தியசீலன் என்னிடம் கூறினார்.
நாம் அறிந்தவரையில் பெரியாருக்கு பிறகு இந்த உண்மையை கூறிய இன்னொரு தலைவர் தோழர் தமிழரசன்தான்.
ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்று அவர் தெளிவாக கூறினார்.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
சென்னையில் நடைபெற்ற சங்கத் தமிழிசை விழா முழுமையாக பார்த்தேன். ரசித்தேன். நன்றாக இருந்தது.
நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்தவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ராசாவின் கருத்துக்கு ஆதரவாக
ராசாவின் கருத்துக்கு ஆதரவாக சீமான் கருத்து தெரிவித்திருப்பது சிறந்த முன்னுதாரணம்.
கட்சி அரசியலை தாண்டி கருத்து அரசியலை நோக்கி தமிழ் சமூகம் நகர வேண்டும்.
ஆர்.ராசாவை மட்டுமன்றி கருணாநிதி
ஆர்.ராசாவை மட்டுமன்றி கருணாநிதி குடும்பத்தவர்களையும் மிக இழிவாக சங்கிகள் ஏசுகின்றனர்.
நாம் தமிழர் மேடையில் ஏறி சண்டித்தனம் செய்த அந்த தாத்தா காலத்து திமுக வினர் எந்த பொந்துக்குள் பதுங்கி இருக்கின்றனர்?
ஈழத் தமிழ் அகதிகளை அநாகரிகமாக பேசி வீரம் காட்டிய அந்த 200 ரூபா உடன்பிறப்புகள் எங்கே?
•சுப்புலட்சுமி ஜெகதீசன்
•சுப்புலட்சுமி ஜெகதீசன்
வெறும் உதட்டளவில் இல்லாமல் உளமாறாக ஈழத் தமிழரை ஆதரித்தவர்.
அதனால் பத்து மாதங்களுக்கு மேலாக தடா சிறைக் கொடுமையை அனுபவித்தவர்.
மதுரை சிறையில் எமக்காக எம்முடன் சேர்ந்து அவர் உண்ணாவிரதம் இருந்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
அவர் அரசியலில் இருந்து விலகுவது வருத்தம் அளிக்கிறது.
லைக்கா முதலாளி ரணிலை சந்தித்த
லைக்கா முதலாளி ரணிலை சந்தித்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பேசியுள்ளாராம். நல்லது. பாராட்டுகள்.
ஆனால் கொடுமை என்னவெனில் அரசியல் கைதிகள் விபரம் தருமாறு ரணில் கேட்டிருக்கிறாராம். அப்படியென்றால்
(1) தமது கட்டுப்பாட்டில் இருக்கும் கைதிகள் விபரம் உண்மையில் ரணிலுக்கு தெரியாதா?
(2) இதுவரை ரணிலை சந்தித்த தமிழ் அரசியல் தலைவர்கள் யாரும் விபரம் கொடுக்கவில்லையா?
இங்கிலாந்தில் இந்து கோயில்
இங்கிலாந்தில் இந்து கோயில் தாக்கி சேதப்படுத்தப்பட்டமைக்கு இந்திய அரசும் அதன் தூதரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை ஈழத்தில் இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்படுவதை இதுவரை இந்திய அரசு கண்டிக்கவில்லை.
ஒன்றல்ல நான்கு இந்திய தூதர் இலங்கையில் இருக்கின்றனர். இதுவரை ஒரு இந்திய தூதர்கூட இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
மாறாக சிங்கள அரசுக்கு மேலும் உதவிகள் வழங்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதான் இந்திய அரசின் இந்து முகம் ?
நீங்கள் மலர்களை நசுக்கலாம்.
நீங்கள் மலர்களை நசுக்கலாம்.
ஆனால் வசந்தம் வருவதை தடுக்க முடியாது!
குறிப்பு - நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் 21 பேர் சிங்கள அரசின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 27ஆவது ஆண்டு நினைவு நாள்
ராவணன் கட்டுக்கதை
ராவணன் கட்டுக்கதை என்று கூறி புகழ் பெற்ற திருகோணமலை ஆலயத்தை அழிக்க சிங்கள அரசு முனைகிறது.
ராமராஜ்யம் அமைப்போம் எனக் கூறும் இந்திய பிரதமர் மோடி இதனை கண்டிப்பாரா? அல்லது வழக்கம்போல் சிங்கள அரசுக்கு மேலும் உதவிகள் வழங்கப் போகிறாரா?
சம்பந்தர் ஐயாவும் லைக்கா முதலாளியும்
•சம்பந்தர் ஐயாவும் லைக்கா முதலாளியும்
நிருபர் - லைக்கா முதலாளி ரணிலை சந்தித்து தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பேசியிருக்கிறாராம். அது பற்றி உங்கள் கருத்து என்ன ஐயா?
சம்பந்தர் ஐயா – அந்த தம்பிக்கு ஏன் இந்த வேலை? நாம் எப்பவாவது அவர் பிசினஸ் பற்றி பேசியிருக்கிறோமா? அதுபோல அந்த தம்பி எதற்கு நம்ம அரசியல் பேசுது?
நிருபர் - லைக்கா முதலாளிக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் ஐயா?
சம்பந்தர் ஐயா – அவர் எடுத்த பொன்னியின் செல்வன் படம் வெற்றியடைய வாழ்த்துகள். அதேபோல ராவணன் பற்றியும் என்னுடைய திருகோணமலை பற்றியும் அவர் ஒரு படம் எடுக்க வேண்டும்.
நிருபர் - ?????
உங்கள் நிறைவேறாத ஆசை என்ன
உங்கள் நிறைவேறாத ஆசை என்ன என்று சில்க் சுமிதாவிடம் கேட்டபோது “நான் நக்சலைட் போராளியாக விரும்பினேன். அந்த ஆசை நிறைவேறவில்லை” என்றார்.
இதை அவர் புகழின் உச்சியில் இருந்த போது கூறினார்.
ஒருவேளை அவர் விரும்பியபடி நக்சலைட் போராளியாகியிருந்தால் அவரது தற்கொலை முடிவு நிகழ்ந்திருக்காதோ?
இன்று சிலக் சுமிதாவின் நினைவு தினம்.
•பபூன்
•பபூன்
படத்தின் கதாநாயாகி ஒரு ஈழத் தமிழ் அகதியாக காட்டியுள்ளார்கள்.
அதன் மூலம் தமிழ்நாட்டில் ஈழ அகதிகளுக்கு நடக்கும் கொடுமைகளையும் அவர்களில் சிலர் அவுஸ்ரேலியா செல்ல முயற்சிப்பதையும் கூறியுள்ளார்கள்.
இப்போதைய தமிழ் திரைப்படங்களில் ஈழத் தமிழர் பற்றிய உரையாடல்கள் இடம்பெறுவது வரவேற்கத்தக்க மாற்றமே
ஈழத் தமிழரான லைக்கா முதலாளி
ஈழத் தமிழரான லைக்கா முதலாளி தயாரிப்பில் வெளிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஈழம் மறைக்கப்பட்டிருப்பது குறித்து ஈழத் தமிழர் ஒருவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
தமிழர் உணர்வுகளுக்கு லைக்கா முதலாளி மதிப்பளிப்பாரா? அல்லது இயக்குனர் மணி ரத்தினம் சூழ்ச்சிக்கு பலியாகப் போகிறாரா?
திராவிடம், பெரியார் மண், வெங்காயம் என்றெல்லாம்
திராவிடம், பெரியார் மண், வெங்காயம் என்றெல்லாம் இதுவரை உருட்டி வந்த திராவிட முதல்வர் இப்போது தமிழ் மொழி என்று பேச ஆரம்பித்திருக்கிறார்.
1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும்
1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும் கிராமத்தில் இந்திய ராணுவம் வீடு வீடாக சென்று சோதனையிட்டது.
அப்போது ஒரு வீட்டில் பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். அப் பெண்ணுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் குழந்தை பிறந்திருந்தது.
அவர் குழந்தையுடன் வீட்டில் இருந்தபோது நான்கு சீக்கிய ராணுவத்தினர் சென்றுள்ளனர். இனி அதை அந்த பெண் கூறுவதை படியுங்கள்.
ஜயோ பிள்ளையாரப்பா!
குறுக்கால போவார், தொலைவார்
இன்னைக்கு பகல்ல வந்துட்டான்களே
இந்நேரம் என்ர மனுசனும் இல்லையே
யாரைத்தான் இப்ப அனுப்ப முடியும்
உடனே அவரைக் கூட்டி வா என்று
வழக்கமாக மதவடியில் இருக்கும்
பொடியன்களையும் காணவில்லையே
பாவம், அவங்களும் எத்தனை தரம்தான்
பூவரசம் கதியால அடி வாங்குவது?
சப்பாத்தி வாசம் வரும் முன்னே
இந்தியன் ஆர்மி வரும் பின்னே
ஒழுங்கையால யார் போனாலும்
வீரமாக குரைக்கும் நாயும்கூட
இந்தியன் ஆர்மி என்றவுடன்
குண்டிக்குள் வாலைச் செருகிக்கொண்டு
ஓடி வந்து வீட்டுக்குள் பதுங்குதே.
வீட்டை சுற்றி விறைப்பாக நிக்கிறாங்க
தலையிலே துண்டு கட்டியிருக்கிறாங்க
இவங்கதான் சீக்கிய ஆர்மி போல இருக்கு
முன்னால படலை இறுக்கி கட்டியிருக்கு
பின்னால வேலியில் கண்டாயம் வைச்சு வந்திட்டாங்களே
அத்துளு அம்மாளாத்தையே
இந்த சண்டாளப் பயலுகளிடமிருந்து
நீதான் என்னைக் காப்பாத்தனும்
அடுத்த திங்கட்கிழமை கட்டாயம்
உனக்கு பொங்கல் வைக்கிறேன் அம்மா!
ஒருத்தன் கிணத்தடியில் இருந்த தென்னையில்
தேங்காய் பறித்து தின்கிறான்
இன்னொருத்தன் வீட்டு வாசலில் இருந்த மாமரத்தில்
மாங்காய் ஆய்ஞ்சு தின்கிறான்
வேறு ஒருத்தன் பேப்பரால் சுத்திக் கட்டிய மாதுளம்பழத்தை
பறித்து பாக்கெட்டுக்குள் செருகுகிறான்
கடைசியாக ஒருத்தன வீட்டுக்கள் எட்டிப் பார்க்கிறானே?
ஜயோ! உள்ளே வந்துவிடுவானா?
பொல்லாத கனவுதான் ராத்திரி கண்டேனே
வெள்ளாட்டுக் காம்பில் விஷம் வடியக் கண்டேனே
ஓடை எல்லாம் ரத்தம் ஓடிவரக் கண்டேனே
காத்து கறுப்பாச்சே கண்ட கனா பலிச்சிடிச்சே
என் மேலேயே இடி வந்து விழுந்திடுச்சே!
பள்ளிக்கு போயிருக்கும் மனுசன் இன்னும் வரல்லையே
அப்பு வீட்டுக்குபோன என் மகனையும் காணல்லையே
ஒத்தையிலே நான் பச்சை உடம்போடு படுத்து இருக்கையில்
துப்பாக்கியோடு வந்து வாசற்பக்கம் எட்டிப் பார்க்கிறானே!
கொல்லையில என் மகன்தான் மல்லிகை நட்டிருக்கான்
நீர் பிடிச்ச கொடி இப்ப வேர் பிடிச்சு வளர்ந்திருக்கு
பொத்தி வளர்த்த கொடி பூ பூக்கும் முன்னால
பூட்ஸ் காலால மிதிச்சு சிதைக்கிறாங்களே
ஆசையில வச்ச கொடியை இரக்கமின்றி அழிக்கிறாங்களே
இவங்களுக்கு “அமைதிப்படை” என்று பெயர் வைச்சவன் எவன்டா?
பல வருசமாய் நெல்லியடி சந்தியில திரிஞ்ச
“மெண்டல்” பத்மநாதனை சுட்டுக் கொன்றுவிட்டு
புலித் தளபதியை சுட்டுவிட்டதாக அறிக்கை விட்டவன்கள்
என்னையும் கொன்றுவிட்டு அதுபோல் அறிக்கை விடுவாங்களோ?
சீ, இருக்காது.
என்ன இருந்தாலும் பச்சை உடம்புக்காரி என்று
கொஞ்சம் இரக்கம் காட்டாமலா விடுவாங்கள்?
எட்டிப் பார்த்தவன் எத்தி உதைத்தான்
பூட்டிய கதவு திறப்பு போடாமலே திறந்தது
மாங்காய் தேங்காய் திருடி தின்னவும்
பூட்டிய வீட்டை உதைத்து திறக்கவும்
நன்கு பயிற்சி பெற்று வந்திருக்கிறாங்கள்
இதுக்குத்தான் டாங்கி, பீரங்கி சகிதம்
“அமைதிப்படை” என்று பெயர் கூடி வந்தாங்களா?
நான் பட்டபாடு நாய்படுமா பேய்படுமா
கடையும் தயிர் படுமா இல்லை தறி படுமா
புதுசா கட்டின வீட்டுக்கு ஓடு போட
அப்பு தந்த சங்கிலியை அடகு வைச்சேன்
கதவு ஜன்னல் போடுவதற்கு
அத்துளுவில் வெங்காயம் செய்து வித்தேன்
பிள்ளைத்தாச்சி வயிறோடு கிடுகு பின்னி
வீட்டைச் சுற்றி வேலி போட்டேன்
அத்தனையும் ஒரு நொடியில் நாசமாக்கி விடுவாங்களோ
நாசமாய் போவான்கள், என்ன செய்யப் போறானுகளோ?
வீட்டுக்குள் வந்தவன்
சுவரில் தொங்கிய நாஷனல் பன்சோனிக் ரேடியோவை
எடுத்து தன் தோளில் தொங்க விட்டான்
கீரை வித்த காசில் அப்பு தன் பேரனுக்கு
ஆசையாக வாங்கிக் கொடுத்த ரேடியோ இது
பள்ளியால வந்து தன் ரேடியோ எங்கே என்று
என் மகன் கேட்டால் என்ன சொல்வேன்?
பிறந்து மூனு நாளே ஆன குழந்தை
அருகில் படுத்து இருக்கு
பச்சை உடம்புக்காரி என்று
பக்கத்துவீட்டு மாமி அரைச்சு தந்த
சரக்கு தண்ணி தலை மாட்டில இருக்கு
இவனுகளைக் கண்டதும் பயத்தில
பசியும் மறந்து போயிடுச்சே!
ரேடியோவை திருடியவன்
அறைக்குள் வருகிறானே
ஜயோ என்ன செய்வேன்?
அறைக்குள் வந்தவன் காலைப்பிடித்து
விட்டுடுங்கய்யா, என்னை விட்டுடுங்கய்யா
என்று கெஞ்சியதுமட்டும் நினைவிருக்கு
அழுதாலும் ஏழை சொல்லு அம்பலத்தில் ஏறாது
அருகம்புல்லு புத்தி சொல்லி அருவாள் கேட்காது
கண்ணாடி கடைக்குள் காட்டு யானை புகுந்தது போல்
எல்லாத்தையும் சிதைச்சிட்டு போயிட்டாங்களே
கடைசில ஒண்ணு மட்டுமே கூற விரும்புகிறேன்
அத்துளு அம்மாள் சக்தி உள்ள கடவள்தான்
அவள் நிச்சயம் எனக்கு பதில் சொல்வாள்!
குறிப்பு-
கொஞ்சம்கூட இரக்கமின்றி அந்த பெண்ணை நாலு சீக்கிய ராணுவத்தினரும் மாறி மாறி பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அதிகளவு ரத்தம் வெளியேறி மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை அயலவர்கள் மந்திகை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
அங்கு கடமையில் இருந்த செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த பிரஞ்சு பெண் டாக்டர் ஒருவர் அப் பெண்ணை சிகிச்சை கொடுத்து காப்பாற்றியதோடு இதனை இந்திய ராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
அதையடுத்து அப் பெண் அந்த நாலு ராணுவத்தினரையும் அடையானம் காட்டினார். ஆனால் அவர்களுக்கு இதுவரை இந்திய அரசால் எத்தகைய தண்டனையும் வழங்கப்படவில்லை.
ஆனால் பச்சை வயிற்றுக்காரியை ராணுவம் பாலியல் வல்லறவு செய்ய காரணமான ராஜீவ்காந்தி வயிறு வெடித்து சாவதற்கு அத்துளு அம்மாள் கோபம்தான் காரணம் என்று சிலர் கரவெட்டியில் நம்புகின்றனர்.
(இது ஒரு மீள் பதிவு.)
திலீபனை அவதார புருஷராக சித்தரித்து
திலீபனை அவதார புருஷராக சித்தரித்து காவடி தூக்கி வழிபடுதல் என்பது இன்னொரு திலீபன் உருவாவதை தடுத்துவிடும். திலீபன் கோரிய மக்கள புரட்சி வெடிக்கட்டும் என்பதையும் தடுத்து விடும். எனவே இப்போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
இறந்தவர்களை நினைவு கூர்வது அழுது புரள்வதற்காக அல்ல. மீண்டும் எழுவதற்காக.
திலீபன் நினைவு நாளில் அரசியல் பேச வேண்டாம் எனக் கூறுவது அகிம்சை வழியையும் இந்திய துரோகத்தையும் அம்பலப்படுத்திய திலீபனின் அரசியலை பேசக்கூடாது என்று அர்த்தமாகும். இது இந்திய தூதரின் விருப்பத்தை நிறைவேற்றும் எண்ணம் கொண்டதாகும்.
நாகலாந்து முன்னாள் உள்துறை அமைச்சரும்,
நாகலாந்து முன்னாள் உள்துறை அமைச்சரும், ஜோர்ஜ் பெர்ணான்டஸ் கட்சியின் முதன்மை பொதுச்செயலாளர் இருவரும் ஈழம் சென்று திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். முதன் முறையாக வட இந்திய கட்சிப் பிரமுகர்கள் ஈழம் சென்று தமிழருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சென்ற நாகலாந்து மாநில
யாழ்ப்பாணம் சென்ற நாகலாந்து மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
ஆனால் யாழ்ப்பாணம் சென்ற பாஜக அண்ணாமலை இறந்தவர்களை நினைவு கூரவும் இல்லை. அஞ்சலி செலுத்தவும் இல்லை.
இப்போது கூறுங்கள் இதில் யார் தமிழர்களுக்கானவர்?
மகிந்த ராஜபக்சாவுடன் கைகுலுக்கி
மகிந்த ராஜபக்சாவுடன் கைகுலுக்கி பரிசில்கள் பெற்றது,
காங்கிரசுடன் என் பிணம்கூட கூட்டணி வைக்காது என்று கூறியது ,
போன்றவை படத்தில் இடம்பெறுமா?
வைகோ பாஜக கூட்டணியில் இருந்து கூறியபோதே
வைகோ பாஜக கூட்டணியில் இருந்து கூறியபோதே மோடி கேட்கவில்லை. இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கூறும்போது மோடி கேட்பாரா? நிச்சயமாக மாட்டார்
.
எனவே வைகோ அவர்கள் தன் கூட்டணி திராவிட முதல்வர் மூலம் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
பூனைகளைவிட புலிகள் பலமானவை என்பதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.
கேள்வி – கிளப்கவுசில் நேற்று திலீபன் தியாகத்தை கொச்சைப்படுத்திய (200 ரூபா) உடன்பிறப்புகள் பற்றி?
பதில் - பூனைகளைவிட புலிகள் பலமானவை என்பதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.
தோழர் பாலன் என்பவர் மதுரையில்
தோழர் பாலன் என்பவர் மதுரையில் ஒரு வீதிக்கு “திலீபன்தெரு” என்ற பெயர் வரக் காரணமாக இருந்தார் என்ற செய்தியை படிக்கும் பலர், ஒவ்வொரு வருடமும் “அந்த தோழர் பாலன் நீங்களா?” என்று என்னிடம் கேட்கின்றனர். மன்னிக்கவும். அது நான் இல்லை. நானும் அவரை அறிய ஆவலாக இருக்கிறேன்.
தோழர் பகத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம்!
• தோழர் பகத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம்!
ஓ! மரணித்த வீரனே!
நீ விரும்பிய சுதந்திர இந்தியா மலர்ந்தது
வெள்ளையர் ஆட்சி போயிற்று – ஆனால்
கொள்ளையர் ஆட்சி வந்துவிட்டது.
வெள்ளையரை விரட்ட நீ குண்டெறிந்தபோது
உன்னை தியாகி என்றழைத்தவர்கள்
கொள்ளையரை விரட்ட தமிழரசன் எறிந்தபோது
பயங்கரவாதி என்கிறார்கள்.
இந்த கொள்ளையர் ஆட்சியில்
கல்லெறியும் காஸ்மீர் சிறுவன் ஜிகாத் பயங்கரவாதி
சதீஸ்கரில் ஆதிவாசி மாவோயிஸ்ட் பயங்கரவாதி
தமிழகத்தில் ஈழ அகதிகள் புலிப் பயங்கரவாதிகள்
தலைநகர் டில்லியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால்
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு
அன்று முஸ்லிம்களும் சேர்ந்து சுதந்திர இந்தியாவுக்கு போராடினார்கள்.
இன்று முஸ்லிம்களை கொன்று குவித்தவர் மாண்புமிகு பிரதமர்.
வெள்ளையர் உன்னை பயங்கரவாதி என்றனர்.
ஆனால் சுதந்திர இந்தியா உன்னை தியாகி என்றது.
இன்று கொள்ளையர் எம்மை பயங்கரவாதி என்கின்றனர்.
நாளைய விடுதலை எம்மை போராளிகள் என்றழைக்கும்.
தோழனே!
நீ எறிந்த குண்டை கொடு
கொள்ளையரை விரட்ட
குறிப்பு - இன்று தியாகி பகத் சிங் அவர்களின் பிறந்த தினம். (28.09.1907)
பாராட்டுகளும் வாழ்த்துகளும் இயக்குனர் ரஞ்சித் அவர்களுக்கு
“ஒருபோதும் அடிபணிந்து போகாதே,எதிர்த்து நின்று அவர்கள் அடிப்பதிலும் பார்க்க கடுமையாக அடி, அவர்கள் படிப்பினையைப் பெற்றதும் விசயங்கள் வித்தியாசமாக இருக்கும்”
பாராட்டுகளும் வாழ்த்துகளும் இயக்குனர் ரஞ்சித் அவர்களுக்கு
எந்த நீண்ட இரவுக்கும் ஒரு விடிவு உண்டு
எந்த நீண்ட இரவுக்கும் ஒரு விடிவு உண்டு
இந்த கொடியவர்களுக்கும் ஒரு முடிவு உண்டு
செய்தி – பதவி இழந்த மகிந்த ராஜபக்சா சுப்ரமணியசுவாமியை அழைத்து நவராத்திரி கொண்டாடினார்.
Subscribe to:
Posts (Atom)