Thursday, December 29, 2022

வெகு தொலைவில்

வெகு தொலைவில் முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் உண்மையான தாய்மொழி குருதி கொட்டும் செம்மொழியாய்…. - கவிஞர் இன்குலாப் இன்று 6வது நினைவு தினம் (01.12.2016)

பல நாடுகள் புலிகளை

“பல நாடுகள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ளன. அப்படியிருந்தும் ஈழத்திலும், சர்வதேசத்திலும் தமிழர்கள் அந்த மாவீரர்களுக்காக அணிதிரள்கிறார்கள்” - வெளிநாட்டு ஊடகத்தில் .. மாவீரர் பின்னால் தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பது வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிகிறது. ஆனால் (200 ரூபா) உபிஸ் களுக்கு இது தெரியுதில்லையே? #திராவிட கொடுமை

யாழ் பல்கலைகழக தமிழ்

"யாழ் பல்கலைகழக தமிழ்த்துறை மாணவர்கள் சமஸ்கிருத மொழியை கற்க வேண்டும்" - கம்பவாரிதி ஜெயராஜ் தான் கூவித்தான் விடிகிறது என சேவல் நினைத்தால் அது எந்தளவு முட்டாள்தனமோ அதைவிட முட்டாள்தனமானது பழைய தமிழ் நூல்களை படிப்பதற்கு சமஸ்கிருதமொழி அறிவு வேண்டும் என்ற கம்பவாரிதியின் கூற்று.

காய்ந்து கருகிய புல்கூட

காய்ந்து கருகிய புல்கூட சிறு மழைத் துளி பட்டதும் துளிர்த்து எழுகிறது. காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது மாவீரர் சிந்திய ரத்தமும் அவர்களைப் பெற்ற தாய்மார் வடிக்கும் கண்ணீரும் நாம் மீண்டும் எழுந்திட வைக்காதா?

ஈழத்தில் தலைவர்களின்

ஈழத்தில் தலைவர்களின் பிறந்த நாளுக்கு போஸ்டர் அடிக்கும் வழக்கம் இல்லை. இந்நிலையில் முதன் முதலில் பிரபாகரன் பிறந்த நாளுக்கு போஸ்டர் அடித்து ஒட்டியவர் வீரமணி. ஆனால் ஏனோ தெரியவில்லை பெரியாரின் திராவிட கருத்துகளை பிரபாகரனுக்கு பரப்ப அவர் ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. ராஜீவ்காந்தி போர்பஸ் ஊழல்பேர்வழி என்று அவரை தூக்கில் போட வேண்டும் என்றும் பேசியவர் வீரமணி. ஆனால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் “ஒரு சிறந்த இளம் தலைவரை இந்தியா இழந்துவிட்டது” என்று தனது விடுதலைப் பத்திரிகையில் தலையங்கம் எழுதினார்.

“நிலமிழந்துபோனால் பலமிழந்து போகும்

“நிலமிழந்துபோனால் பலமிழந்து போகும் பலமிழந்துபோனால் இனம் அழிந்து போகும் ஆதலால் மானுடனே தாய் நிலத்தைக் காதலிக்க கற்றுக்கொள்” - புதுவை இரத்தினதுரை காணாமல் ஆக்கப்பட்ட தாயக கவிஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால்

ஒரு ஆணின் வெற்றிக்குப்பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்கிறார்கள். இது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் காரல் மார்க்ஸ் சாதனைக்கு பின்னால் அவர் மனைவி ஜென்னி இருக்கிறார் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

கூமுட்டைகள் குஞ்சு

கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை என்பதும் ரணில் வழங்கும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில்லை என்பதும் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள்

எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு

எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு ஒரு பூணையை மறித்துப்பார்.அங்கு ஒரு புலியை நீ காண்பாய் - கவிஞர் இன்குலாப் தீப் பொறிகளின் ஒற்றை விரல் கூறும் தத்துவம் என்ன? திருப்பி அடிக்காமல் தீர்வு இல்லை என்பதுதானே

ஒரு லட்சம் ஈழ அகதிகளை

ஒரு லட்சம் ஈழ அகதிகளை வெளியேறுங்கள் என்று கூறும் திராவிடம் இரண்டு கோடி வடஇந்தியர் தமிழ் நாட்டை ஆக்கிரமிக்கும்போது மௌனமாக இருக்கின்றார்கள். ஈழத்தைப் போல் தமிழ்நாட்டிலும் தன் சொந்த நிலத்தில் தமிழன் அகதியாகப் போகிறானா?

தமிழ்நாட்டில் ஆட்சியில்

தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்போர் வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் என்ற தமிழிசையின் குற்றச்சாட்டு உண்மைதானா?

நாளைய முதல்வர் விஜய்

நாளைய முதல்வர் விஜய் என்று ரசிகர்கள் போஸ்டர் அடித்ததால் நிஜ வாரிசு சின்னவர் உதயண்ணா கடும் கோபம். வாரிசு பட விநியோக உரிமை தமக்கு தரவில்லை என்றால் படம் தோற்கடிக்கப்படும் என உதயண்ணா மறைமுக மிரட்டல்.

திராவிட முதல்வர் வீட்டில்

திராவிட முதல்வர் வீட்டில் தெலுங்கு பேசுகிறார்களா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும். மாறாக பேக் ஐடியில் வந்து திராவிட மொழியில் திட்டுவது எப்படி பதிலாக இருக்க முடியும்? இதுவா பெரியார் தந்த திராவிட அறிவு உடன்பிறப்புகளே? இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி பதில் சொல்லி தமிழர்களை ஏமாற்ற முடியும் என நம்புகிறீர்கள்?

திராவிட முதல்வர் அவர்களே!

திராவிட முதல்வர் அவர்களே! 1 கிலோ வெங்காயமே 80 ரூபா விற்குது ஓடி ஓடி புலிகளையும் அகதிகளையும் அவதூறு செய்யும் உடன்பிறப்புகளுக்கு ஒரு 50 ரூபா கூட்டிக் கொடுக்கக்கூடாதா?

வெட்டுக்கிளிகளை ஓயாமல் தொடர்ந்த

வெட்டுக்கிளிகளை ஓயாமல் தொடர்ந்து விரட்டிச் சென்று அவை களைப்படைந்து விழுந்தவுடன் அடித்துக்கொல்லுங்கள் என்று விவசாயிகளுக்கு மாவோ கூறினார். அதேபோன்று (200ரூபா)உபிஸ் களைப்படைந்து விழும்வரை ஓயாமல் பதிவுகள் எழுதி அவர்களை கதறவிடுவது என் ஸ்டைல். குறிப்பு - இது என்னை அவதூறு செய்யும் உபிஸ் களுக்கான பதில் பதிவு.

குரைப்பது ,

குரைப்பது , கடி நாய் என்றால் கட்டிப் போடலாம் வெறி நாய் என்றால் எட்டி உதைக்கலாம் (200 ரூபா) உபியாக இருந்தால் கதற விடுவதைத் தவிர வேறு வழியில்லை.

இன்று 30 ஆண்டுகளுக்கு

இன்று 30 ஆண்டுகளுக்கு முன்னர் (06.12.1992) பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் ஆகும். பாபர் மசூதியை இடித்தவர்களை நிரபராதிகள் என்று இந்திய உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனவே நீதிமன்ற தீர்ப்பின்படி பாபர் மசூதி தானாக இடிந்து விழுந்த நாள் இன்று ஆகும். இது இந்திய அதிசயம்!

ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம்

ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டம் சாதியை ஒழிக்கும் என்று கருதிய திருமா அவர்கள், தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கார் சிந்தினைகளை முன்வைப்பது ஏன்? அல்லது, ஈழத்தில் சாதி ஒழிப்பிற்கு அம்பேத்கார் சிந்தனைகளை பின்பற்றும்படி புலிகளிடம் ஏன் வலியுறுத்தவில்லை?

வீட்டில் தெலுங்கு பேசுவோர்

"வீட்டில் தெலுங்கு பேசுவோர் தமிழனை ஆளலாம். வீட்டில் இந்தி பேசும் நாம் ஆளக்கூடாதா" என பீகாரில் இருந்து வந்த பாண்டே நாளைக்கு கேட்டால் என்ன பதில் சொல்வது?

தமிழ்நாட்டில் தமிழனுக்கு வேலை கொடு

தமிழ்நாட்டில் தமிழனுக்கு வேலை கொடு என்று தமிழன் போராட வேண்டிய நிலை. இதுதான் தமிழக முதல்வரின் திராவிட மாடல் ஆட்சியா?

எது நடக்கும் என்று அச்சப்பட்டோமோ

எது நடக்கும் என்று அச்சப்பட்டோமோ அது நடக்க ஆரம்பித்து விட்டதா?

தை 14ல நடிகர் விஜய் “வாரிசு” ரிலீஸ் ஆகிறது.

தை 14ல நடிகர் விஜய் “வாரிசு” ரிலீஸ் ஆகிறது. டிசெம்பர் 14 ல் சின்னவரின் “திராவிட வாரிசு” ரிலீஸ் ஆகிறதா?

எதிர்க்கட்சியாக இருக்கும்போது

எதிர்க்கட்சியாக இருக்கும்போது தூத்துக்குடி கொலைகளை கண்டித்த திராவிட முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ஆட்சிக்கு வந்ததும் கொலை செய்த காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய தயங்குவது ஏன்? பலியான அப்பாவி மக்களுக்குரிய நீதியை வழங்க மறுப்பது ஏன்? #திராவிட உருட்டு

இந்தி திணிப்பை எதிர்த்து

இந்தி திணிப்பை எதிர்த்து போராடியதில் முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. ஆனால் அந்த தமிழ்நாடு முதலமைச்சர் பெயர் இந்தியில். திராவிட முதல்வர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை? இந்தியை திராவிடம் உண்மையாக எதிர்க்காது. தமிழ் மட்டுமே எதிர்த்து நிற்கும்.

இந்திய அரசிடம் தொடர்ந்து

இந்திய அரசிடம் தொடர்ந்து உதவி பெற்றுவரும் சிங்கள அரசு, எப்படி தைரியமாக சீன உளவு கப்பலுக்கு தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது? தமிழ் மக்கள் மாவீரர் தினம் கொண்டாடிவிடக்கூடாது என சூழ்ச்சி செய்யும் யாழ் இந்திய தூதர்கூட இது குறித்து அக்கறை இன்றி இருப்பது ஏன்?

இனி திருப்பூர் தொகுதி

இனி திருப்பூர் தொகுதி தமிழர் கையில் இல்லையா? ஈழத்தில் மூதூர் தொகுதி பறிபோனதுபோல தமிழ்நாட்டில் திருப்பூர் தொகுதி பறிபோகின்றதா?

திராவிடம் என்றாலே பித்தலாட்டம்தானே?

திராவிடம் என்றாலே பித்தலாட்டம்தானே?

தொடரும் இந்திய அரசின் துரோகம்!

தொடரும் இந்திய அரசின் துரோகம்! யாழ் மாநகர சபையின் நிலத்தில் இந்திய அரசு கட்டிய கலாச்சார மண்டபத்தை, வாக்குறுதி அளித்தபடி யாழ் மாநகர சபையிடம் ஒப்படைக்காமல், சிங்கள பௌத்த கலாச்சார அமைச்சிடம் இந்திய அரசு ஒப்படைக்க முயல்கிறது. இது குறித்து தமிழ் தலைவர்களின் மௌனம் அதிர்ச்சி அளிக்கிறது.

தொடரும் காவல்துறையின் அராஜகம்

தொடரும் காவல்துறையின் அராஜகம் அப்பாவி விவசாயி கொலைக்கு நீதி கிடைக்க ஒருமித்து குரல் கொடுப்போம்

எல்லா நாய்களும்

எல்லா நாய்களும் தன் வீட்டிற்குள் வீரமாக குரைக்கும்தான். சொந்த பெயரில் சொந்த முகம் காட்டி எழுத தைரியம் இல்லை. அதற்குள்ள எனக்கு சவாலா? பரவாயில்லை. நான் இந்தியா வருவதற்கு தயார். ஆனால் உங்க இந்திய அரசு விசா தர மறுக்கிறது. எனவே முடியுமாயின் எனக்கு விசா கிடைக்க வழி செய்யவும் உறவே. அத்துடன் உயிரியல் விதிப்படி ஒருவன் பல அப்பனுக்கு பிறக்க முடியாது. ஒரு அப்பனுக்குதான் பிறக்க முடியும். எனவே பெரியார் தந்த திராவிட அறிவு இருப்பதாக பெருமை பேசும் நீங்கள் இனிமேல் இப்படி முட்டாள்தனமாக உளற வேண்டாம்.

பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை

பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது. ஈழத்தமிழர் விடுதலை பெற இந்திய அரசு ஒருபோதும் உதவாது இதை இனியாவது “இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும்” என்று கூறும் காசி ஆனந்தனும் திரு மாஸ்டரும் உணர வேண்டும்.

ராஜதந்திரம் என்பது கல்லு

ராஜதந்திரம் என்பது கல்லு கிடைக்கும்வரை நாயுடன் பேச்சுவார்த்தை செய்வது. போராட்டம் என்பது கல்லு கிடைத்தவுடன் நாயை விரட்டி அடிப்பது

குஜராத்தில் மோடி கட்டிய

குஜராத்தில் மோடி கட்டிய பாலம் இடிந்து விழுந்ததை எழுதிய உடன்பிறப்புகள் , சென்னையில் திராவிட முதல்வர் கட்டிய பாதை உடைந்து விழுந்திருப்பது குறித்து எழுத மறுப்பது ஏன்?

இன்று மனிதவுரிமை தினமாம்?

இன்று மனிதவுரிமை தினமாம்? (10.12.2022) போர் முடிந்து 13 வருடங்கள் ஆகிவிட்டன. போர் முடிந்த பின் சரணடைந்த இவர்களுக்கு என்ன நடந்தது என்றே இன்று வரை தெரியவில்லை. இறந்தவர்கள் பட்டியலில் சேர்ப்பதா அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதா என்றும் தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 6 வருடங்களாக போராட்டம் நடத்துகின்றனர். தமிழ் மக்களுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பல கட்சிகள் இருக்கின்றன. பல தலைவர்கள்கூட இருக்கிறார்கள். ஆனால் இவர்களால்கூட இந்த காணாமல்

“மேயர்” என்றும் பார்க்கவில்லை

“மேயர்” என்றும் பார்க்கவில்லை ஒரு சின்ன பொண்ணு என்றும் பார்க்கவில்லை இப்படி தொங்க விட்டிட்டான்களே? #திராவிட சாதனை !

நாம் தமிழர்” கட்சியினர்

“நாம் தமிழர்” கட்சியினர் பனம் விதைகளை விதைத்தபோது கிண்டல் அடித்தவர்கள், இப்போது தாங்களே பனம் மரங்களை நடப்போவதாக கூறுகின்றனர். இதுதான் காலத்தின் கட்டாயம் என்பதா?

ரத்தசாட்சி

• ரத்தசாட்சி நக்சலைட் போராளி தோழர் அப்பு பற்றிய படம். காவல்துறையின் அராஜகத்தை துணிவாக காட்டியிருக்கும் இப் படக் குழுவினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். புலவர் மற்றும் தமிழரசன் போன்றவர்களின் படங்களும் இனி வரும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது.

நாம் பெருமூச்சு விடுவதைத்தவிர வேறு வழி இல்லை!

நாம் பெருமூச்சு விடுவதைத்தவிர வேறு வழி இல்லை!

பாரதியார்!

பாரதியார்! ஒரு சந்தேகம்? இன்று கவிஞர் பாரதியாரின் பிறந்த தினம்.(11.12.1882) பாரதியார் ஒரு அற்புதமான கவிஞர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் “சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்” என்று பாடியது குழப்பமாய் இருக்கிறது. ஏனெனில் இலங்கையில் அத்தீவிற்கு சொந்தமான தமிழ் மக்கள் இருக்கிறார்கள் என்பது நன்கு தெரிந்தும் எதற்காக இப்படி அவர் பாடினார்? பாரதியாரும் ஒரு பார்ப்பணர் என்பதால்தானா ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக சிங்கள தீவு என பாடினார்? யாராவது பதில் தாருங்களேன். பிளீஸ்!

ஈழத்தில் சிங்கள மற்றும்

ஈழத்தில் சிங்கள மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய பிரபாகரனை “பயங்கரவாதி” என்று எழுதிய மேற்கத்திய ஊடகங்கள், உக்ரைனில் ரஸ்சிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் செலன்ஸ்கியை “உக்ரைனின் உயிர்” என பாராட்டி எழுதுகின்றன. இது என்ன நியாயம்?

என்னது, மராட்டிய நடிகர்

என்னது, மராட்டிய நடிகர் ரஜனி வாழும் வள்ளுவரா? இவனுகள் தலையில இடி விழுந்து தொலைக்காதா?

படுகொலை செய்யப்பட்ட

படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு தேவை கூடுதல் நிதி அல்ல, நீதிமன்ற நீதியே.

சிறையில் எல்லோர்

சிறையில் எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணமாக்கி சோதனை செய்வார்கள். ஏன் என்று கேட்டால் உடலில் ஏதும் காயம் இருக்கிறதா என பார்க்கிறார்களாம். அடுத்து கையில் வைத்திருக்கும் தடியால் அடி தருவார்கள். கேட்டால் அது அட்மிசன் அடி என்பார்கள். ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இது நடக்கிறது என்கிறார்கள். ஆனால் விஜபி அரசியல்வாதிகளுக்கு இப்படி செய்வதில்லை.

நீட் தேர்வு ரத்து ரகசியம்

நீட் தேர்வு ரத்து ரகசியம் இருப்பதாக கூறி எம்எல்.ஏ ஆனார். இப்போது அமைச்சராகி விட்டார். எப்பதான் அந்த ரகசியத்தை கூறுவார்? அது சரி, ஒரு கோடி உறுப்பினர் கொண்ட திமுக வில் கலைஞர் குடும்ப வாரிசு என்பதைவிட வேறு என்ன தகுதி இருக்கு உதயநிதி அமைச்சராவதற்கு?

ஒரு சந்தேகம்!

ஒரு சந்தேகம்! வீட்டில் தெலுங்கு பேசுபவர்கள் தமிழ்நாட்டில் அமைச்சராக முடிகிறது. முதலமைச்சராகவும் முடிகிறது. அதேபோல் வீட்டில் தமிழ் பேசும் யாராவது ஆந்திராவில் அமைச்சராகவோ முதலமைச்சராகவோ இருக்கிறார்களா? இல்லை எனில் ஏன் இல்லை என்பதற்கு யாராவது உபிஸ் பதில் தருவீர்களா? இன்னொரு சந்தேகம்! இந்தியாவில் தெலுங்கு பேசும் மக்களுக்கு மூன்று முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு முதலமைச்சர் இருக்கக்கூடாதா என தமிழன் கேட்டால் அது தவறா? அவ்வாறு கேட்பதை இனவெறி என்கிறார்களே?

ஸ்டாலினுக்கு பதவி கொடுக்கப்படுமா

ஸ்டாலினுக்கு பதவி கொடுக்கப்படுமா என்று கேட்டபோது திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை என்றார் கலைஞர் கருணாநிதி. ஆனால் அந்த சங்கரமடத்தில்கூட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இப்படி பதவி கொடுப்பதில்லை. திராவிடம் என்ற பெயரில் எப்படியெல்லாம் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர்?

பெரியார் சுயமரியாதை கற்றுத் தந்தார்

பெரியார் சுயமரியாதை கற்றுத் தந்தார் என்று சொல்லிவிட்டு கடைசியில இன்பநிதிக்கு குடை பிடிக்க வைச்சிட்டாங்களே? ஒருவேளை இது திராவிட குடையாக இருக்குமோ?

இருவரும் அரசியல் வாரிசுகள்

இருவரும் அரசியல் வாரிசுகள் இருவருக்கும் ஒரே துறை அமைச்சு ஒருவரை மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள் இன்னொருவரை மக்கள் எப்போது தூக்கி எறிவார்கள்?

நடிகை நயன்தாராவுடன் நடித்தமைக்கா

நடிகை நயன்தாராவுடன் நடித்தமைக்கா அமைச்சு பதவி என்று ஜெயா டிவி பச்சையாய் கேட்குது நடிகைக்காக பால்டாயில் குடித்த சின்னவர் என்று குமுதம் ரிப்போட்டர் எழுதுகிறது ஒரு இரவு முழுவதும் விளையாடிவிட்டு ஏமாற்றிவிட்டார் என்று நடிகை சிறீரெட்டி பகிரங்கமாக கூறுகிறார். இதற்காகவா “விளையாட்டுதுறை அமைச்சு” பதவி வழங்கப்படுகிறது சேப்பாக்கம் சேகுவாராவுக்கு?

உதயநிதி நிறுவனத்தில்

உதயநிதி நிறுவனத்தில் நபர் ஒருவர் மர்ம மரணம் ஏன் இதுவரை எந்த ஊடகமும் இது பற்றி பேசவில்லை? அந்தளவு பயமா?

அப்துல் ரவூப்!

• அப்துல் ரவூப்! என்றும் நினைவில் கொள்வோம்! 1995ம் ஆண்டு மார்கழி மாதம் 15ம் திகதி. ஈழத் தமிழர்களுக்காக அப்துல் ரவூப் தன்னையே எரித்துக்கொண்ட நாள். சந்திரிக்கா ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழர்கள் இடம்பெயர்ந்த துயரச் செய்தியைக் கேட்டு அப்துல் ரவூப் துடித்த நாள் அது. அது ஜெயா அம்மையாரின் இருண்ட ஆட்சிக் காலம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காலம் அது. அப்துல் ரவூப் மரணம், • ஈழத் தமிழர்களுக்கு தமிழக மக்களின் ஆதரவு உண்டு என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியது • தடா சட்டத்தின் மூலம் தமிழக மக்களின் அதரவுக் குரலை நசுக்க முடியாது என்பதை காட்டியது. • ராஜீவ் மரணத்தால் தமிழக மக்களின் ஈழ ஆதரவு நிலை மாறவில்லை என்பதைக்காட்டியது. • எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காக மரணத்தை தழுவவும் தமிழக இளைஞர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை இந்திய அரசுக்கு காட்டியது. • தமக்காக குரல் கொடுக்க தாய்த் தமிழகம் இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தியது. இத்தனை பயன் உள்ள செய்திகளையும் அப்துல் ரவூப் தன் மரணம் மூலம் உலகத்திற்கு எடுத்துக் கூறினான். அதுமட்டுமன்றி சாத்வீக வழிகளில் போராடுவதால் குறிப்பாக தங்களைத் தாங்களே எரித்துக்கொள்வதால் இலங்கை இந்திய அரசுகள் மனம் இரங்கப்போவதில்லை என்பதையும் அவனது மரணம் காட்டியுள்ளது. நாம் அப்துல் ரவூப்பையும் அவரது தியாகத்தையும் மறந்துவிட்டோம். அதனை நினைவு கூர தவறிவிட்டோம். அப்துல் ரவூப் இறந்தபின்பு ஜெயா அம்மையாரின் பொலிஸ் அவரது தாய் தந்தையரை மிரட்டியது. காதல் தோல்வியில் அப்துல் ரவூப் தற்கொலை செய்தான் என்று கூறும்படி வற்புறுத்தியது. அவ்வாறு கூறினால் பணம் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியது. ஆனால் அந்த ஏழைப் பெற்றோர் எதற்கும் அஞ்சவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மசியவில்லை. ஈழத் தமிழர்களுக்காக தம் மகன் உயிர் விட்டதை எண்ணிப் பெருமைப்படுவதாகவே கூறினார்கள். இன்றும்கூட அவர்கள் அந்த கருத்தையே கொண்டிருக்கிறார்கள். குறிப்பு- 15.12.2022 யன்று அப்துல் ரவூப் அவர்களின் 27வது நினைவு தினம்.

ஒரு அமைச்சரே இப்படி பேசினால்

ஒரு அமைச்சரே இப்படி பேசினால் (200 ரூபா) உபிகளை எப்படி குறை சொல்ல முடியும்? தலைவர் குடும்பத்திற்கு காட்டும் விசுவாசத்தை தன் குடும்பத்து சொந்த தம்பியின் கொலையாளிகளை கண்டு பிடிக்க அமைச்சர் காட்டாதது ஏன்? #திராவிட கொத்தடிமைகள்

காவி கலரில் உள்ளாடை

காவி கலரில் உள்ளாடை அணிந்து நடித்திருப்பது நடிகை தீபிகா படுகோன. ஆனால் நடிகர் ஷாருக்கானின் உருவப்படத்தை எரிக்கிறார்கள். சங்கிகளின் அறிவை என்னவென்பது? #மதம் ஒரு அபின் - கால் மார்க்ஸ்

கருணாநிதியிடம் உள்ள

ிறமைகளில் ஒரு பகுதி உதயநிதியிடம் உள்ளது – நடிகர் பார்த்திபன் வாரிசு பட உரிமையை மிரட்டி வாங்கியதைதான் பார்த்திபன் கூறுகின்றாரா?

நான் பல கடைகளில் டீ குடித்திருக்கிறேன்

நான் பல கடைகளில் டீ குடித்திருக்கிறேன். ஆனால் நெல்லியடியில் “நாணா” கடையில் குடித்த டீ போல் ஒரு டீயை இன்னும் குடிக்கவில்லை. 1980களில் கரவெட்டியில் இளைஞராக இருந்தவர்களுக்கு இந்த கடை நன்கு நினைவில் இருக்கும். ( திருமகள் ஸ்டோருக்கு அருகில் இக் கடை இருந்தது) ஒரு சிறிய பெட்டிக்கடை. நானா என்ற ஒரு முஸ்லிம்தான் கடை ஓனர். அவர்தான் டீ மாஸ்டரும்கூட. அந்த காலத்தில் அரசியல் ஆர்வம் மிக்க இளைஞர்கள் எல்லாம் மாலை நேரத்தில் அவர் கடையடியில் கூடுவார்கள். அவர் கடை வடையும் பிளேன் டீ யும் பேமஸ். அதை சாப்பிட்டுக்கொண்டு அரசியல் பேசுவது எமது வழக்கம். அவர் டீ யில் சிறிதளவு கஞ்சா கலக்கிறார். அபின் கலக்கிறார் என்றெல்லாம்கூட சிலர் கூறினார்கள். நான் இவற்றை நம்பவில்லை. எனினும் இன்றுவரை அவர் டீ யின் ரகசியம் என்ன என்று எனக்கு புரியவில்லை?

பஸ் நடத்துனர் -

பஸ் நடத்துனர் - தம்பி, படியில் நின்று பயணிக்ககூடாது என்று எத்தனை தடவை சொல்லுறது. மேலே வா. பையன் - இல்ல அண்ணே. நான ஐஏஎஸ்; படிக்கிறேன். அதற்காகத்தான் படியில் நின்று பயிற்சி எடுக்கிறேன். பஸ் நடத்துனர் - சரி உனக்கு பின்னாலே ஒரு பொண்ணு ஏன் தொங்கிட்டு வருகுது? பையன் - அவங்க மேயராக பயிற்சி எடுக்கிறாங்க. 😂😂

தன் பெயரையும் கெடுக்காமல்

தன் பெயரையும் கெடுக்காமல் ஈழத் தமிழர் பெயரையும் கெடுக்காமல் விளையாடி வெளியேறியுள்ள ஜனனிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். அதிக வாக்கு பெற்றிருந்தும் ஜனனியை திடீரென்று விஜய் டிவி வெளியேற்றிய மர்மம்தான் ஏன் என்று புரியவில்லை?

ஆண்டவரே!

ஆண்டவரே! நேத்து வந்த பயல் உதயநிதி நாலு படம் நடிச்சு எம்.எல்.ஏ வாகி இப்ப அமைச்சராகியும் விட்டான். நீங்க என்னடா என்றால் பிக்பாஸில் மாமா வேலை பார்த்துக்கொண்டிருக்கிறியள். வெட்கமாய் இல்ல?

கைபர்கணவாய் வழியாக புலம்பெயர்ந்தவர்கள்,

கைபர்கணவாய் வழியாக புலம்பெயர்ந்தவர்கள், ஒங்கோலில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள், ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களை "அகதிகள்" என்றும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்றும் கூறுகின்றார்கள். என்னே கொடுமை இது?

அடேய் இது ரொம்பவும் ஓவரடா!

அடேய் இது ரொம்பவும் ஓவரடா!

ஈழம் வேறு. தமிழீழம் வேறு.

ஈழம் வேறு. தமிழீழம் வேறு. இரண்டும் ஒன்றே என்று சிலர் நினைப்பது தவறு. இலங்கையின் இன்னொரு பெயர் ஈழம். தமிழர் பிரிவினை கோரிய பகுதி தமிழீழம். ஈழ வேந்தன், ஈழ வாணி என்ற பெயர்கள் உண்டு. ஈழநாடு ஈழ முரசு என்று பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. ஆனால் இப்போது சிங்கள அரசும் இந்திய அரசும் ஈழம் என்ற சொல்லை முற்றாக ஒழிக்க முயலுகின்றன.

நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்தால்

நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்தால் அதுக்கு இன்னும் சோறு வைக்கவில்லையோ என எண்ணத்தோன்றும். வைரமுத்து வரிகளை படிக்கும்போது இந்த மனிதருக்கு ஏன் இந்தளவு பசி என்று எரிச்சல் வருகிறது. ஒருவேளை சின்மயி கேஸ் காரணமாக இருக்குமோ?

கோபாலபுரத்தில் சுடப்படும் “திராவிட வடை”

கோபாலபுரத்தில் சுடப்படும் “திராவிட வடை”

விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்

விளையாட்டை விளையாட்டாக பாருங்கள் என்று சிலர் கூறுவார்கள். அவர்கள் விளையாட்டுக்கு பின்னால் உள்ள அரசியலை பார்க்கத் தெரியாதவர்கள். ஒரு வல்லரசு நாட்டின் ஜனாதிபதி தன் நாட்டு வீரரை மைதானத்திற்குள் சென்று ஆறுதல் படுத்துகிறார் எனில் அது காற்பந்து விளையாட்டின் பின்னால் உள்ள அரசியல் பலம்.

விஜய் டிவி சுப்பர் சிங்கரை

விஜய் டிவி சுப்பர் சிங்கரை விட ஜீ தமிழ் சரிகம ப நிகழ்ச்சி நன்றாக இருக்கிறது. தொகுப்பாளர்கள் மகபா வும் பிரியங்காவும் நகைச்சுவை என்னும் பெயரில் செய்யும் கோமாளித்தனங்கள் எரிச்சல் தருகின்றன. நல்லவேளை இம்முறை சுப்பர் சிங்கரில் புலம்பெயர் ஈழத் தமிழர் எவரையும் விஜய் டிவி சேர்த்துக்கொள்ளவில்லை.

எதிரிகளை என் விமர்சனம்

எதிரிகளை என் விமர்சனம் அம்பலப்படுத்தும். நண்பர்களை அரவணைக்கும். அதாவது நண்பர்களாக இருந்தால் பூனை தன் குட்டியை கவ்வுவது போல் இருக்கும். எதிரியாக இருந்தால் புலி தன் இரையை கவ்வுவது போல் இருக்கும்.

சிலர் அவர் மார்க்சிய வழியில்

சிலர் அவர் மார்க்சிய வழியில் திறனாய்வு செய்தவர் என்கிறார்கள். இன்னும் சிலர் அவர் பெரியாரியத்தை ஆதரித்தவர் என்கிறார்கள இவ்வாறு இவர்கள் கூறுவது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு சிறந்த தமிழ் அறிஞர் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்கிறார்கள். அவர் சிறந்த தமிழ் அறிஞர் மட்டுமல்ல சிறந்த தமிழ் இன உணர்வாளரும்கூட அதனால்தான் ஈழத்தில் எமது உறவுகள் கொல்லப்பட்டபோது அவருக்கு வலித்தது. ஈழப் படுகொலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தவர்கள் மீதான எனது ஆத்திரம் உயிர் மூச்சு உள்ளவரை நீடித்திருக்கும் என்று கூறினார். உறக்கமில்லாமல் கழிந்த அந்த இரவுகள் திரும்ப திரும்ப நினைவுக்கு வருகின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார். அதனால்தான் அவர் இறந்துவிட்டார் என்றதும் எமக்கு வலித்தது. எமது குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட உணர்வைத் தந்தது. அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக ஆழ்ந்த அஞ்சலிகள். குறிப்பு - 24.12.2022யன்று தொ.பரமசிவம் அவர்களின் இரண்டாவது நினைவு தினம் ஆகும்.

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்

ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின் 18.12.2022 மகத்தான தோழர் ஸ்டாலின் பிறந்த தினமாகும். தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறுயாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள். மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும், பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும், உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும், கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும், ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது. பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி. தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. (முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது. ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர். ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது. தோழர் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களுக்கு மாவோ தலைமையிலான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியின் பதில்களை கீழ் வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2014/12/blog-post_26.html

மாபெரும் ஆசான் தோழர் மாவோ

•மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2022) மாபெரும் மாக்சிய ஆசான்களில் ஒருவரும் சீனப்புரட்சியின் தலைவருமாகிய தோழர் மாசேதுங் அவர்களின் 129வது பிறந்த நாள் உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது. தூங்கும் பூதம் என வர்ணிக்கப்பட்ட சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் விடிவை ஏற்படுத்திய மாபெரும் தலைவர் அவர். ரஸ்சியாவில் குருசேவ் கும்பலால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட ஆபத்தை சீனாவிலும் எதிர்வு கூறி அதை தடுக்கப் பல கலாச்சாரப் புரட்சிகள் நடக்க வேண்டும் எனக் கூறியவர் . தோழர் ஸ்டாலினுக்கு எதிராக குருசேவ் கும்பல் வைத்த குற்றச்சாட்டுகளை மாபெரும் விவாதம் மூலம் தோற்கடித்து சர்வதேச ரீதியில் ஸ்டாலினையும் மாக்சியத்தையும் காப்பாற்றியவர். மாக்சியம் லெனிசத்தை அடுத்து மாவோ சிந்தனைகள் மூலம் மாக்சியத்தை வளர்த்தெடுத்தவர். சீனாவில் மாவோ மறைவுக்கு பின்னர் டெங்சியாபிங் கும்பல்களால் முதலாளித்துவம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறினாலும் அவர்களால் இன்று வரை மக்கள் மனங்களில் இருந்து மாவோ புகழை நீக்க முடியவில்லை. சீனாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மாவோ சிந்தனைகள் வழங்கிய மகத்தான பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக ஜரோப்பாவில் இருந்து வைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர தத்துவமாகிய பின்நவீனத்துவத்திற்கு எதிராக மாவோசிசத்தின் பங்களிப்பு மகத்தானது. மாக்சிச லெனிசிச மாவோ சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

ஈழத்தில் சாதிப்போராட்டம்,

ஈழத்தில் சாதிப்போராட்டம், தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டம் ஜேவிபி போராட்டம் போன்றவைகள் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தமைக்கு தோழர் சண் முன்வைத்த மாவோயிச சிந்தனைகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

தேசிய இனங்கள் பற்றியும்

தேசிய இனங்கள் பற்றியும் அவற்றின் சுயநிர்ணய உரிமை பற்றியும் உலகிற்கு தெளிவாக முன்வைத்தவர் தோழர் ஸ்டாலின். அவரின் நினைவாகவே கலைஞர் கருணாநிதி தன் மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தார். ஆனால் இன்று, “தமிழ்நாட்டு அரசியல் பேசாதே” என்று உபிஸ் எமக்கு கூறுகின்றனர். என்னே கொடுமை இது?

அடிமைத்தனத்திற்கு எதிராக ஆயுதம்

அடிமைத்தனத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி குருதி சிந்தினாளே, அவளையே “பேரழகி” என்று வரலாறு பதிவு செய்கிறது.

எரிக் சொல்கைம் -

எரிக் சொல்கைம் - சரணடைந்தவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? சம்பந்தர் ஐயா – அவர்கள் சரணடைந்தபோது அவர்களை என்ன செய்ய வேண்டும் என்று நான்தானே கோத்தபாயாவுக்கு கூறியிருந்தேன். எரிக்சொல்கைம் - ?????

இவர் என்ன வேலை செய்கிறார்?

இவர் என்ன வேலை செய்கிறார்? இவரின் வருமானம் என்ன? குறிப்பு – உடன்பிறப்புகளே! கோபம் கொள்ள வேண்டாம். சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். திராவிட மொழியில் திட்ட வேண்டாம். அது பதில் அல்ல.

தம்பி கரிகாலனுக்கு,

தம்பி கரிகாலனுக்கு, சிறப்புமுகாம் எப்போது மூடப்படும் என்பதை கேட்காவிட்டாலும் பரவாயில்லை, கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அந்த அகதிச் சிறுவன் எங்கே என்பதையாவது முதல்வர் ஸ்டாலினிடம் உங்களால் கேட்க முடியுமா?

அம்பேத்காரியம் - கடவுள

அம்பேத்காரியம் - கடவுளை ஏற்றுக்கொள்ளும் கருத்துமுதல்வாதம் பெரியாரியம் - கடவுளை மறுக்கும் பொருள்முதல்வாதம் மார்க்சியம்- இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஒன்றுக்கொன்று எதிரான இந்த மூன்றையும் ஒன்றாக ஏற்றுக்கொள்வதாக கூறுபவர்களை என்னவென்று புரிந்துகொள்வது?

ஒரு எலும்புத்துண்டிற்காக நேர்மையான

“ஒரு எலும்புத்துண்டிற்காக நேர்மையான மனிதன் ஒருபோதும் தன்னை நாயாக மாற்றிக்கொள்ள மாட்டான்.” – வியட்நாமிய பழமொழி

அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக

அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக ஜான்சி ராணிக்கு முன்னரே போராடியவர் வேலுநாச்சியார். ஆனால் இந்திய ஆட்சியாளர் ஜான்சிராணிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேலு நாச்சியாருக்கு கொடுப்பதில்லை. வேலுநாச்சியார் தமிழர் என்பதாலா?

எதிரி எவ்வளவு பெரியவர்

எதிரி எவ்வளவு பெரியவர் என்பது முக்கியமல்ல, எதிர்த்து நிற்கும் திறன் எவ்வளவு பெரியது என்பதே முக்கியமானது. கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய 44 பேரை எரித்துகொலை செய்த நாயுடுவை கொன்ற அமல்ராஜ்பாண்டியன்.

தண்ணீரை திராட்சை ரசமாக

தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய தேவனும் தேவையில்லை தண்ணீரில் நடக்கும் இறைவனும் தேவையில்லை செங்கடலை இரண்டாக பிளந்த ரட்சகரும் தேவையில்லை மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தெய்வமும் தேவையில்லை தன் தேவாலயத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளையாவது செயலிழக்க வைக்கும் கடவுளே தற்போது தேவை.

எருமைக்கும் மனிதனுக்கும்

எருமைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனை எளிதாக எருமை என்று கூப்பிடலாம். ஆனால் எருமையை அவ்வளவு எளிதாக மனிதன் என்று கூப்பிட முடியாது குறிப்பு – இது தங்களையே குறிப்பிடுவதாக (200 ரூபா) உபிஸ் தயவு செய்து நினைக்க வேண்டாம்.

கலைஞர் தத்தெடுத்து வளர்த்த

கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அகதிச் சிறுவன் எங்கே என்று கலைஞர் குடும்பத்தில் யாராவது ஒருவரிடம் கேட்கும் ஊடகவியலாளருக்கு, இந்த ஆண்டின் “சிறந்த ஊடகவியலாளர்” பட்டமும் ஒரு லட்சம் ரூபா பணமும் வழங்கப்படும்.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள்

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மத்தியில் பல வருடங்களாக பாடி வரும் மாதுளானிக்கு ஜீ தமிழ் சரி கம ப நிகழ்வில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். விஜய் டிவி போன்று வியாபார நலனுக்காக புலம்பெயர் ஈழத் தமிழருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதா அல்லது அவரது திறமைக்கு உரிய இடம் வழங்கப்படுமா என்பது இனித்தான் தெரியவரும்.

தமிழ்நாட்டில் ரயிலில் டிக்கட் இன்றி

தமிழ்நாட்டில் ரயிலில் டிக்கட் இன்றி பயணித்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என்று வட இந்தியர்களுக்கும் தெரிந்திருக்கிறது. வாழ்க கலைஞர் புகழ்!

கேப்பாப்புலவு மக்கள்

கேப்பாப்புலவு மக்கள் கேட்பார் அற்ற மக்களா? யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளாகியும் அவர்கள் நிலம் அவர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை? இதைக்கூட பெற்றுக்கொடுக்காத தலைவர்கள் தீர்வு பெற்றுக்கொடுப்பார்கள் என எப்படி நம்புவது?

அவதூறு மூலம் தமிழ்த்தேசிய

அவதூறு மூலம் தமிழ்த்தேசிய வளர்ச்சியை தடுத்து நிறுத்திவிட முடியுமா? ஒருபோதும் முடியாது என்பதை திராவிடம் விரைவில் உணர்ந்துகொள்ளும்.

அகதிகளுக்கும் இது வழங்கப்படுமா?

அகதிகளுக்கும் இது வழங்கப்படுமா? இது குறித்து தமிழ்நாடு அரசின் அறிவித்தல் ஏதும் வந்திருக்கிறதா?

யாழ் கோட்டைக்கு விஜயம் செய்த

யாழ் கோட்டைக்கு விஜயம் செய்த சீன துணைத்தூதுவர் குழுவினர். யாழ் இந்திய துணை தூதரின் இந்தி திணிப்பு போன்ற போன்ற செயல்களால் யாழ் தமிழ் மக்கள் அடைந்துள்ள எரிச்சலை சீன தூதர் பயன்படுத்த முனைகிறாரா?

எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும்

எவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” – பிரபஞ்சன்

சங்கம் அமைத்து தமிழ்

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த மதுரையிலேயே அன்னைத் தமிழுக்கு இடம் இல்லை என்றால் தமிழ் இனி மெல்ல சாகும் என்பது மெய்தானா?

திருச்சி மாவட்ட ஆட்சி தலைவரின்

திருச்சி மாவட்ட ஆட்சி தலைவரின் பொறுப்பில் பல வருடங்களாக சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் சேர்ந்து புலிகள் அமைப்பை கட்ட போதைப் பொருள் கடத்துகிறார்களாம். இந்த கதை எல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது?

செம்மொழி தமிழுக்கு

செம்மொழி தமிழுக்கு வெறும் 74 கோடி ரூபா. செத்தமொழி சமஸ்கிருதத்திற்கு 1488 கோடி ரூபா அதுவும் தமிழன் வரிப் பணத்தில் ??

பசி என்ன அந்தளவு

பசி என்ன அந்தளவு கொடுமையானதா?

அவர்களின் தலைவர் எமக்காக

அவர்களின் தலைவர் எமக்காக உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால் ஏன் உங்கள் தலைவர் எங்களை ஏமாற்றினார் என்று நாங்கள் கேட்டால், ஈழத் தமிழர் தமிழ்நாட்டு அரசியலை பேசக்கூடாது என்று தலைவரின் உடன்பிறப்புகள் கூறுகின்றனர். இது என்ன நியாயம்?