Saturday, April 29, 2023

செய்தி – யாழ் குடத்தனை கடற்கரையில்

செய்தி – யாழ் குடத்தனை கடற்கரையில் திடீரென சிவலிங்கம் தோன்றியுள்ளது. கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறார்கள். அப்படியென்றால் குடத்தனை கடற்கரையில் இருக்கமாட்டாரா என்ன? சரி. பரவாயில்லை. ஆனால் எனது கேள்வி என்னவென்றால் எங்கு சிவலிங்கங்கள் உடைக்கப்படுகின்றனவோ அங்கு ஏன் இந்த சிவலிங்கம் தோன்றுவதில்லை? அல்லது, எங்கு புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றனவோ அங்கு ஏன் சிவலிங்கம் தோன்றுதில்லை? இதற்கு ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா என்ன கூறுவார்?

எம் வாழ்வில் நாம் கண்ட

எம் வாழ்வில் நாம் கண்ட மறக்க முடியாத நாடகம் குறிப்பு – 27.03.2023 உலக நாடக தினத்தை முன்னிட்டு.

தமிழத்தேசிய விடுதலைக்காக போராடிய புலவர்,

தமிழத்தேசிய விடுதலைக்காக போராடிய புலவர், தமிழரசன் போன்றவர்கள் பயங்கரவாதிகள் இல்லை, அவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர்கள் என்பதையும், அவர்களை அழிக்க முனைந்த அரசும் அதன் காவற்துறையும் புரிந்த அராஜகத்தையும் தெளிவாக காட்;டியுள்ளார் வெற்றிமாறன். புலவர் மற்றும் தமிழரசன் பற்றி வெற்றிமாறன் செய்துள்ள இந்த அறிமுகம் இன்றைய சந்ததியினர் நிச்சயம் அவர்களை தேடிப் படிக்க வைக்கும். வெற்றிமாறனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

குரங்குகளால் ஏன் காரை ஓட்ட முடியவில்லை

குரங்குகளால் ஏன் காரை ஓட்ட முடியவில்லை என்பதல்ல கேள்வி குரங்குகளின் கையில் காரை யார் ஒப்படைத்தார்கள் என்பதே கேள்வி. குறிப்பு - இது அரசியல் பதிவு இல்லை. எனவே இதைப் படித்ததும் உங்களுக்கு ரணில் கும்பல் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பு அல்ல.

செய்தி - வங்காள விரிகுடாவில்

செய்தி - வங்காள விரிகுடாவில் பங்களாதேஷின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சீன ஆய்வுக் கப்பல் 760 ஐ இந்திய கடற்படை மற்றும் உளவுப்படைகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜீ தமிழ் "சரிகமப" நிகழ்ச்சியில்

ஜீ தமிழ் "சரிகமப" நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பவதாயினி அவர்கள் தனது தாத்தா தாயக இசைக் கலைஞர் கண்ணன் அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

ஒவ்வொரு வருடமும் தோழர் தமிழரசனை நினைவு

ஒவ்வொரு வருடமும் தோழர் தமிழரசனை நினைவு கூர்வதுடன் தோழர் தமிழரசன் தாயாரை மேடையில் ஏற்றி மதிப்பளித்தவர் சீமான்.

14 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த

14 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை அடைந்துள்ளனர். மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும். இவர்களது விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.

காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங்

காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் இந்த நால்வரின் பல்லை பிடுங்குவாரா? மன்னிக்கவும் இந்த நால்வரும் தவறுதலாக விழுந்து பல் உடைந்துவிட்டது என்று சொல்ல வைப்பாரா? இந்த நால்வர் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவதற்கு இவர்கள் அனைவரும் பார்ப்பணர் என்பதுதான் காரணமா?

இந்த கும்பல் எப்படி ஆசியாவின் பணக்கார குடும்பமாக மாறியது

இந்த கும்பல் எப்படி ஆசியாவின் பணக்கார குடும்பமாக மாறியது என்ற விபரம் ஏப்-14 ம் திகதி வெளிவருகிறது என்கிறார்களே. உண்மையா ?

இந்தியாவில் சீமான் சொன்னால் “இனவெறி”

இந்தியாவில் சீமான் சொன்னால் “இனவெறி” இதையே இத்தாலியில் பிரதமர் கூறினால் “இன உணர்வு” அப்படித்தானே நியாயவான்களே?

விடுதலை படம் வந்த பின்பு பலரும்

விடுதலை படம் வந்த பின்பு பலரும் பொலிஸ் அராஜகம் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். தேவாரம் தலைமையிலான பொலிசார் தர்மபுரி மாவட்டங்களில் சுமார் 40க்கு மேற்பட்ட இளைஞர்களை "நக்சலைட்டுகள்" என்னும் பேரில் கொன்றுள்ளனர். தேவாரம் மட்டுமன்றி அவரின் சிஷ்யன் என்று தன்னை பெருமையாக கூறும் இன்றைய டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் திண்டுக்கல் எஸ்.பி யாக இருந்தபோது 15.08.1995யன்று தமிழத்தேசிய விடுதலைக்காக போராடிய தோழர் நாகராசனை போலி என்கவுண்டரில் சுட்டுக்கொன்றார். இது குறித்து இனியாவது யாராவது பேசுவார்களா?

ஜேவிபி யின் ஏப்ரல் கிளர்ச்சி!

•ஜேவிபி யின் ஏப்ரல் கிளர்ச்சி! 1971ம் ஆண்டு ஜேவிபி அமைப்பு இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தது. பல கிராமங்களை சில மாதங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஏனெனில் இந்தியாவின் இந்திரா காந்தி அரசு இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்தது. அப்போது இலங்கை இந்திய ராணுவத்தால் 6000 ற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் இசைப்பிரியாவை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற அதே சிங்கள ராணுவம்தான் 1971ல் மன்னம்பெரி என்ற சிங்கள யுவதியை பாலியல் வல்லுறவு செய்து கொன்றது. கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமன்றி அவரை நிர்வாணப்படுத்தி ரோட்டில் ஊர்வலமாக இழுத்துச் சென்று கொன்றனர். ஜேவிபி மீண்டும் 1989ல் ஆயுதப் போராட்டம் முன்னெடுத்தது. அப்போது இதே சிங்கள ராணுவம் அறுபதாயிரம் சிங்கள இளைஞர்களை கொன்றது. வேடிக்கை என்னவெனில் அப்போது இந்த படுகொலைகளுக்கு நீதிகோரி ஜ.நா சென்றவர் மகிந்த ராஜபக்சாவே. அதே மகிந்த ராஜபக்சாவே பின்னர் முள்ளிவாயக்காலில் ஒரு லட்சத்து ஜம்பதாயிரம் தமிழ் மக்களை கொன்று குவித்தார். 1989ம் ஆண்டு ஜேவிபி அமைப்பினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அதன் தலைவர் ரோகண விஜேயவீரா உட்பட சுமார் 60000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இன்று ஜேவிபி அமைப்பு பலம் பொருந்திய பெரிய அமைப்பாக மீண்டும் வளர்ந்து இருக்கிறது. இதில் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டியது என்ன? முதலாவது, ஜேவியால் மீண்டும் எழ முடியுமாயின் தமிழ் மக்களால் ஏன் மீண்டும் எழ முடியாது? இரண்டாவது, ஜேவிபி இன்று தேர்தல் பாதையை பயன்படுத்தினாலும் அவர்கள் இதுவரை ஆயுதப் போராட்டம் தவறு என்றோ அல்லது அதை தாம் கைவிட்டதாகவோ அறிவிக்கவில்லை. மூன்றாவதாக, தமது தலைவர் ரோகண விஜயவீரா எப்படி இறந்தார் என்பது தெரியாத நிலையிலும் அவர் உயிருடன் இல்லை என்ற உண்மையை மக்களுக்கு உடன் தெரிவித்தார்கள். நான்காவதாக, தமது தலைவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற முழு உண்மைகளையும் கண்டறிந்தார்கள். அவற்றை ஆதாரங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள். ஜந்தாவதாக ஜேவிபி அமைப்பும் “பயங்கரவாதிகள்” என்று குறிப்பிட்டே இலங்கை அரசு கொன்றது. ஆனால் அவர்கள் அதற்காக பயந்து அடங்கி இருக்கவில்லை. மாறாக தமது கொல்லப்பட்ட மாவீரர்களுக்காக வருடம்தோறும் பகிரங்கமாக நினைவு அஞ்சலி செய்கிறார்கள். தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் சிங்கள மக்கள் மத்தியிலும் அரசுக்கு எதிராக போராடி இழப்புகளை சந்தித்து மீண்டும் எழுந்து நிற்கும் ஒரு அமைப்பு உள்ளது என்பதே.

1971ல் சிங்கள யுவதி மன்னம்பெரியை

1971ல் சிங்கள யுவதி மன்னம்பெரியை பாலியல் வல்லுறவு செய்து சுட்டுக்கொன்ற அதே சிங்கள ராணுவம்தான் 2009ல் தமிழ் யுவதி இசைப்பிரியா போன்றவர்களை கொன்றது. இதே சிங்கள ராணுவத்திற்குதான் 1971லும் இந்திய அரசு உதவி செய்தது. 2009லும் உதவி செய்தது.

திருச்சி சிறப்புமுகாமில் இருந்து

திருச்சி சிறப்புமுகாமில் இருந்து ஏழு ஈழத் தமிழர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதி இருப்பவர்களையும் விரைவில் விடுதலை செய்து சிறப்புமுகாமை மூட வேண்டும். இவர்களின் விடுதலைக்காக குரல் கொடுத்துவரும் சீமான் உட்பட அனைவருக்கும் நன்றிகள்.

ஐயா! உறங்கியது போதும். எழும்புங்கோ

ஐயா! உறங்கியது போதும். எழும்புங்கோ உங்கட தொகுதியிலேயே தமிழ் மக்களை அடிக்கிறாங்களாம். எழும்பி வழக்கம்போல ஒரு அறிக்கையாவது விட்டிட்டு அப்புறம் தூங்குங்கோ

மந்திரம் தெரிந்தவர்களுக்கு

மந்திரம் தெரிந்தவர்களுக்கு நீச்சல் தெரியவில்லையே விளைவு நீரில் மூழ்கி மரணம் நீதி – தண்ணீரில் மந்திரம் பயன்படாது. நீச்சல் மட்டுமே உதவும்.

இச் செய்தியை நீட் தேர்வு ரத்து

இச் செய்தியை நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வைத்திருக்கும் உதயநிதியின் மனசாட்சிக்கு சமர்ப்பிக்கின்றோம். குறிப்பு - 05.04.2023 சர்வதேச மனசாட்சி தினம்

செய்தி – "சுற்றுச்சூழல் பாதுகாவலர்"

செய்தி – "சுற்றுச்சூழல் பாதுகாவலர்" விருது சீமான் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பொதுவாக விருதால் பெறுபவர் பெருமை அடைவர் ஆனால் சிலவேளைகளில் மட்டுமே பெறுபவரால் விருது பெருமை பெறும். சந்தேகமேயில்லை. தகுதியானவருக்கே விருது வழங்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்

இவர்கள் பயங்கரவாதிகளும் இல்லை.

இவர்கள் பயங்கரவாதிகளும் இல்லை. இவர்கள் தீவிரவாதிகளும் இல்லை. ஆனாலும் இந்த 20 கூலி உழைப்பாளிகளும் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இன்றுவரை இவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இவர்களை கொன்றவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள் தமிழ்நாட்டில் “நாம் அனைவரும் திராவிடர்கள்” என்று சொல்லி தமிழரை ஆளும் தெலுங்கர்கள் ஆந்திராவில் இத் தமிழரை திராவிடர்களாக பார்க்கவில்லையே? அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பவர்களும் இவர்களுக்காக குரல் கொடுக்கவில்லையே? மாறாக, இந்த தமிழருக்காக குரல் கொடுப்பவர்களை “தமிழ் இனவெறியர்” என முத்திரை குத்துகின்றனர். என்னே கொடுமை இது? குறிப்பு - இன்று ஆந்திராவில் 20 கூலித் தமிழர்கள் கொல்லப்பட்ட நினைவு தினம் ஆகும்.

மாநிலத்திற்கு வரும் பிரதமரை

மாநிலத்திற்கு வரும் பிரதமரை வரவேற்க செல்லாமல் மாநில முதல்வரால் இருக்க முடியுமா? ஆம் என்று தெலுங்கானா முதல்வர் நிரூபித்துள்ளார். ஆனால் அதற்கு ஊழல் செய்யாத தைரியமான முதல்வராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு அப்படியொரு முதல்வர் எப்ப கிடைப்பார்?

கண்கள் பனித்தன

கண்கள் பனித்தன உதடுகள் சிரித்தன உறவுகள் மலர்ந்தன #திராவிட உருட்டு குறிப்பு – எடப்பாடி காலத்தில் மோடி வந்தபோது கறுப்பு பலூன் பறக்கவிட்ட உடன்பிறப்புகள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

இதைப் படித்ததும்

இதைப் படித்ததும் திராவிட முதல்வர் உன் நினைவுக்கு வந்தால் நீயும் என் தோழனே! 😂😂

டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.

டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.(10.04.1898) இலங்கையில் டாக்டர் கோவூர் அவர்களின் பணி மிகவும் போற்றத்தக்கது. என்றும் நினைவில் கொள்ள வேண்டியது. அவர் இந்தியாவில் சாய்பாபாவின் புட்டபர்த்திக்கே சென்று சவால் விட்டவர். சாய்பாபாவின் புட்டபர்த்தி வாசலில் நின்று அங்கு வந்த பக்தர்களுக்கு பாபா போன்று விபூதி எடுத்துக் கொடுத்தாராம் கோவூர் அவர்கள். அப்பாவி பக்தர்கள் இவர் இன்னொரு பாபா என்று நினைத்து அவரை வழிபட்டார்களாம். அவர்களிடம் கோவூர் தான் செய்தது மந்திரம் அல்ல, வெறும் தந்திரமே என்றும் பாபாவும் இதையே செய்வதாகக் கூறினாராம். பக்தர்களுக்கு தனது மோசடிகள் தெரிந்துவிடுமோ என அஞ்சிய பாபா தனது செல்வாக்கு மூலம் பொலிசாரைக் கொண்டு கோவூரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினாராம். மந்திரத்தால் தாலி வரவழைக்கும் பாபா மந்திரத்தால் “கொண்டா” மோட்டார் சைக்கிள் வரவழைத்துக் காட்டுவாரா? என்பதே கோவூர் பாபாவுக்கு விட்ட சவால். அதை பாபா ஒருபோதும் நிறைவேற்றவில்லை. அவரது “மனக் கோலங்கள்”, “கோர இரவுகள்” என்னும் புத்தகங்களை வீரகேசரி பிரசுரமாக அன்று வெளியிடப்பட்டவை. அதிக அளவில் விற்கப்பட்டவை. இதில் அவர் தான் சிகிச்சை அளித்த நோயாளிகளின் கதைகளைக் கூறியிருக்கிறார். பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நோயாளிகளை அவர் தனது கிப்னோடிச சிகிச்சை மூலம் சுகப்படுத்தியிருக்கிறார். இந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் அயராது பகுத்தறிவு பிரச்சாரம் செய்திருக்கிறார். இன்றும் இலங்கையில் மட்டுமல்ல எம்மவர்களுக்கு லண்டன், கனடாவிலும் பேய் பிசாசு பிடிக்கிறதாம். இங்கும் பில்லி சூனிய கூத்துகள் அரங்கேறுகின்றன. எனவே இதற்கு எதிராக ஆயிரம் கோவூர்களின் பணி அவசியமாகிறது

தோழர் மாறனை நினைவு கூருவோம்!

•தோழர் மாறனை நினைவு கூருவோம்! 11.04.2023 தோழர் மாறனின் 35 வது ஆண்டு நினைவு தினம் ஆகும். தோழர் மாறன் சென்னையில் வாழ்ந்தவர். அவர் ஒரு பட்டதாரி. அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல வேலை பெற்று வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தமிழ் இன விடுதலைக்காக தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் படையில் செயற்பட்டார். இறுதியில் தமிழ் மக்களுக்காக 11.04.1988 யன்று மரணம் அடைந்தார். 1987ல் இலங்கை சென்ற இந்திய இரணுவம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தது. தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசமாக்கியது. இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களை அமைதிப் பணி என இந்திய தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்தது. தோழர் தமிழரசன் அமைத்த தமிழ்நாடு விடுதலைப்படையானது இந்திய அரசின் பொய்ப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்து முகமாகவும் இலங்கையில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறக் கோரியும் கொடைக்கானல் டி.வி டவருக்கு வெடி குண்டு வைத்தது. அந்த சம்பவத்திலேதான் தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார். தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் மாறன் ஈழத் தமிழர்கள் மீது பேரன்பு கொண்டவர். ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இறுதியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குண்டு வைத்த போது வீர மரணம் அடைந்தார். இவ்வாறு தன் உயிரை ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்த தோழர் மாறன் நினைவுகள் ஈழப் போராட்ட வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும். தோழர் மாறன் அவர்களுடன் நான் பழகிய நாட்கள் குறைவு. இருப்பினும் அந்த இறுதி நாட்களில் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. அவருடைய தோழமையான உறவு என்றும் மனதில் இருப்பவை. அவை மறக்க முடியாதவை. தியாகி முத்துக்குமாரை அறிந்த அளவிற்கு தோழர் மாறனை ஈழத் தமிழர்கள் அறியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விடயமே. . இனிமேலாவது தோழர் மாறன் அவர்களின் அர்ப்பணிப்பை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். தோழர் மாறன் நினைவை போற்றுவோம். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது அஞ்சலிகளை செலுத்துகிறோம்

ஹிட்லர் தற்கொலை செய்யும்

ஹிட்லர் தற்கொலை செய்யும் அந்தக் கணம்வரை தான் வெற்றியின் விளிம்பில் நிற்பதாகவே சொல்லிக்கொண்டிருந்தான். எந்த சர்வாதிகாரியும் தான் அழியும்வரை தனது தோல்வியை ஏற்றுக்கொள்வதில்லை ஆனால் வரலாற்றில் மற்ற சர்வாதிகாரிகளுக்கு என்ன முடிவு ஏற்பட்டதோ அதே முடிவு மகிந்தவுக்கும் நிச்சயம் ஏற்படும்.

இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க

•இறந்தவர்களுக்கு நீதி கிடைக்க நாம் உரத்து குரல் எழுப்புவோம்! என்ன செய்தாலும் இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்பது உண்மைதான். குறைந்த பட்சம் அவர்களுக்கான நீதியையாவது நாம் பெற்றுக் கொடுக்க வேண்டும். குண்டுகள் வெடித்து 4 வருடங்களாகிவிட்டன. ஆனால் அதில் கொல்லப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. யாருடைய தலைமையில் குண்டு வெடிப்புகள் நடந்தது என்று இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடி மருந்து எங்கிருந்து வந்தது என்று அறியப்படவில்லை. ஆக மொத்தத்தில் இந்த குண்டு வெடிப்பிற்கான காரணம் என்ன என்பதுகூட இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை . "இது மத பின்புலம் கொண்ட குண்டு வெடிப்பு அல்ல. இது அரசியல் பின்புலம் அதுவும் சர்வதேச அரசியல் பின்புலம் கொண்ட குண்டு வெடிப்பு" என்கிறார் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் டிபர்ணாந்து . அவர் இங்கு சர்வதேச அரசியல் பின்புலம் என்று கூறுவது இந்தியாவையே. இந்த கருத்து கிருத்தவ பேராயருக்கு மட்டுமல்ல பல அரசியல்வாதிகளுக்கும் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ஒருவர் பாராளுமன்றத்தில் நேரிடையாகவே இந்தியாவை குற்றம் சாட்டியிருந்தார். இவர்கள் கூறுவது உண்மைதானோ என்று நம்ப வேண்டியிருக்கிறது. ஏனெனில் இது வெறும் மத நோக்கத்திற்காக செய்யப்பட்ட குண்டு வெடிப்பு எனில் இந் நேரம் விசாரணை மூலம் உண்மைகளை பொலிஸ் அதிகாரிகள் கொண்டு வந்திருப்பர். இது இந்தியா சம்பந்தப்பட்ட குண்டு வெடிப்பு என்பதால்தான் இன்னமும் உண்மைகள் வெளிவரவில்லை. இனியும்கூட இது குறித்த உண்மைகள் வெளிவருமா என்பது சந்தேகமே. இந்நிலையில் கொழும்பு ஆயர் இது குறித்து சர்வதேச விசாரணை கோரப்போவதாக அறிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்கள் கத்தோலிக்க கிருத்தவர்கள் மட்டுமல்ல அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். அதனால்தான் இன்னும் அவர்களுக்குரிய நீதி வழங்கப்படவில்லை

தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய

தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய தேவனும் தேவையில்லை தண்ணீரில் நடக்கும் இறைவனும் தேவையில்லை செங்கடலை இரண்டாக பிளந்த ரட்சகரும் தேவையில்லை மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தெய்வமும் தேவையில்லை தன் தேவாலயத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளையாவது செயலிழக்க வைக்கும் கடவுளே தற்போது தேவை.

படம்-1 தமிழின விடுதலைக்காக

படம்-1 தமிழின விடுதலைக்காக போராடி பல வருடம் சிறையில் வாடிய புலவர் கலியபெருமாள் வீடு. படம் -2 தன்னைத்தானே உலகத் தமிழின தலைவர் என அழைத்துக்கொண்ட கலைஞர் குடும்பத்தின் வீடு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதில் யார் தமிழினத்தவருக்கானவர் என்று.

தோழர் மாறன் எங்கே எம் இனிய தோழர் எங்கே

தோழர் மாறன் எங்கே எம் இனிய தோழர் எங்கே செத்தாரோ மாண்டாரோ எமக்கொரு சேதி தெரியல்லையே செத்த இடத்திலே இரண்டு செங்கொடி நாட்டிருக்கோம் அவர் மாண்ட இடத்திலே சிவப்புமல்லி பூத்து குலுங்கட்டும் குறிப்பு- இந்திய அரசின் செவிட்டு காதுக்கு கேட்பதற்கு உரத்துக் கத்திய தோழர் மாறனின் 35வது நினைவு தினம்.

தோழர் மாறனை சந்தித்த அந்த முதல்

தோழர் மாறனை சந்தித்த அந்த முதல் நாள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. மறக்க முடியாத அனுபவம் அது. திருவல்லிக்கேணியில் இருந்த உதமுக அலுவலகத்தில் தோழர் பொழிலனை சந்தித்தேன். அப்போது அருகில் நின்ற மாறனை அவர் அறிமுகப்படுத்தினார். உடனே மாறன் என் கையை பிடித்து குலுக்கிவிட்டு என்னை கட்டி அணைத்து என் முதுகை இறுக்கி தடவினார். “நம் ஆள்தான்” என மகிழ்ச்சியாக கூறினார். இதைக் கண்ட பொழிலன் முகம் மாறிவிட்டது. மிகவும் கோபத்துடன் மாறனை முறைத்து பார்த்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் என்ன விடயம் என பொழிலனிடம் கேட்டேன். “நீங்கள் பார்ப்பணரா என அறிவதற்கு உங்கள் முதுகில் பூணுல் இருக்கிறதா என தடவிப் பார்த்தார்” என கூறினார். இதைக் கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. “சரி. பரவாயில்லை, எங்கள் நாட்டில் இப்படி பார்ப்பதில்லை” என்றேன். அப்புறம் நாம் பல விடயங்கள் பேசினோம். திரும்பி வரும்போது “ சாந்தி தியேட்டர் பஸ் தரிப்பில் பல பஸ் வரும்” எனக்கூறி அந்த இடத்தைக் காட்டுவதற்காக மாறனை துணைக்கு அனுப்பினார் பொழிலன். அவ்வாறு மாறனுடன் நடந்து வரும்போது எதிரில் இரு அழகான இளம் பெண்கள் சிரித்து பேசிக்கொண்டு வந்தனர். திடீரென்று மாறன் அவர்களை மறித்து கெட்ட வார்த்தைகளால் திட்டினார். மாறன் சென்னை தமிழ் பேசுவார். இது எனக்கு ஆரம்பத்தில் பாதிதான் புரியும். அதனால் கெட்ட வார்த்தையில் ஏதோ திட்டுகிறார் என்று மட்டுமே புரிந்தது. எனக்கு மாறன் திடீரென்று பெண்களை திட்டியது ஆச்சரியம் என்றால் அதைவிட ஆச்சரியம் அந்த பெண்கள் எதுவும் நடக்காததுபோல் சாதாரணமாக கடந்து சென்றது. ஏன் இப்படி நடந்துகொண்டீர்கள் என மாறனிடம் கேட்டேன். அதற்கு அவர் “ இவளுகள் பாப்பாத்திகள். எமது எதிரிகள்” என்றார். அத்தோடு “ பாம்பையும் பார்ப்பாணையும் கண்டால் பாம்பை விட்டுவிடு. பார்ப்பாணை அடி. ஏனெனில் பாம்பைவிட பார்ப்பாண் விஷம் “ என்றார். எனக்கு இது புது அனுபவமாக இருந்தது. “என்ன இருந்தாலும் தயவு செய்து என்னுடன் வரும்போது இப்படி நடந்து கொள்ளாதீர்கள்” என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர் “ தோழர், இது எமது பல நூற்றாண்டு வலி. இதை நீங்கள் ஒருநாள் புரிந்து கொள்வீர்கள்” என்றார்.

நான் விமானம் மூலம் இலங்கை திரும்புவதற்காக

நான் விமானம் மூலம் இலங்கை திரும்புவதற்காக திருச்சியில் சில நாட்கள் தோழர் மாறனுடன் தங்கியிருந்தேன். அப்போது ஒருநாள் திருச்சி வானொலி நிலையத்திற்கு என்னை அழைத்துச் சென்றார் மாறன். அங்கு வானொலியில் அறிவிப்பாளராக பணிபுரியும் வடிவேல் ராவணன் என்ற நபரை எனக்கு அவர் அறிமுகப்படுத்தினார். ஈழத்தில் இந்திய ராணுவம் செய்யும் அராஜகத்தை மூடி மறைத்து இந்திய அரசு தரும் பொய் செய்திகளை படிக்கும்போது தனக்கு கடுங் கோபம் வருவதாகவும் தன் கையில் ஒரு குண்டு கிடைத்தால் இப்பவே இந்த வானொலி நிலையத்தை தகர்ப்பேன் என ஆவேசமாக வடிவேல் ராவணன் கூறினார். ஆனால் இதே ராவணன்தான் பின்னர் அப்ரூவராக மாறி எம்மை எல்லாம் காட்டிக்கொடுக்கப்போகிறார் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. சில வருடங்களின் பின்னர் நான் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் இருந்தபோது மறியல் போராட்டம் ஒன்றில் கைது செய்யப்பட்டு உள்ளே வந்த ராவணன் என்னை சந்தித்தார். பொலிசாரின் சித்திரவதைக்கு பயந்து அப்புரூவராக மாறி வாக்குமூலம் கொடுத்துவிட்டேன். ஆனால் வழக்கு விசாரணை வரும்போது நான் மாற்றி கூறுவேன் என்றார். அதேபோல் பசுபதி பாண்டியனுக்காக மறியல் போராட்டம் செய்து டாக்டர் ராமதாஸ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டபோது என்னை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் “காட்டிக்கொடுக்கும் நபரான வடிவேல் ராவணனை எப்படி உங்கள் கட்சியில் வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் “ராவணன் வாக்குமூலம் கொடுத்தது தவறுதான். ஆனால் விசாரணை வரும்போது யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டார்” என்று உறுதி அளித்தார். ஆனால் வழக்கு விசாரணையின்போதும் வடிவேல் ராவணன் பொலிசாருக்கு ஒத்துழைத்து வாக்குமூலம் கொடுத்தார். இதனால் எமது தோழர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. ஆனால் இங்கு எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் இதே வடிவேல் ராவணன் இப்பவும் பாமக கட்சியில் இருப்பதுடன் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் அளித்து வருகிறார் டாக்டர் ராமதாஸ். ஆனால் நல்லவேளை மக்கள் ஒவ்வொரு முறையும் இந்த வடிவேல் ராவணனை தோற்கடித்தே வருகிறார்கள்.

தோழர் மாறன் ஏன் டிவி டவருக்கு குண்டு வைத்தார்?

• தோழர் மாறன் ஏன் டிவி டவருக்கு குண்டு வைத்தார்? அமைதிப்படை என்னும் பெயரில் ஈழத்திற்கு சென்ற இந்திய ராணுவம் , பத்தாயிரத்திற்கு அதிகமான அப்பாவி தமிழ் மக்களை கொன்றது. 800ற்கு அதிகமான தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் மக்களின் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகளை அழித்தது இத்தனை அராஜகத்தையும் செய்துவிட்டு அதனை மூடி மறைத்து பொய்ப் பிரச்சாரம் செய்தன இந்திய அரசின் வானொலியும் தொலைக்காட்சியும். எனவேதான் எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தொலைக்காட்சி பெட்டியை உடைத்து தன் கண்டனத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் இந்திய அரசு தன் பொய்ப்பிரச்சாரத்தை நிறுத்தவில்லை. அகிம்சை வழியில் தெரிவித்த எந்த குரலையும் அது செவிமடுக்கவில்லை. எனவேதான் இந்திய அரசின் செவிட்டு காதுகளுக்கு கேட்கும் வண்ணம் உரத்துக் கத்த தோழர் மாறனும் அவருடைய தோழர்களும் முடிவு செய்தனர். உயிர் சேதமோ அல்லது பாரிய பொருட்சேதமோ ஏற்படுத்துவது என்ற நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. மாறாக இந்திய அரசுக்கும் முழு இந்திய மக்களுக்கும் தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்துவதே அவர்கள் நோக்கமாக இருந்தது. இதே நோக்கம்தான் பாராளுமன்றத்திற்கு குண்டு வீசிய பகத் சிங்கிற்கும் இருந்தது. ஆனாலும் ஆங்கிலேய அரசு அவரை பயங்கரவாதி என்றது. இந்திய மக்கள் அவரை தியாகி பகத்சிங் என்று அழைக்கின்றனர். அதேபோல் மாறன் மற்றும் அவரது தோழர்களை இந்திய அரசு பயங்கரவாதிகள் என்றாலும் தமிழ் மக்கள் அவர்களை தியாகிகள் என்றே அழைப்பர்.

நான் தோழர் மாறனுடன் திருச்சியில் தங்கியிருந்த

நான் தோழர் மாறனுடன் திருச்சியில் தங்கியிருந்த வேளை ஒரு நாள் பெண்ணாடம் சென்று புலவர் கலியபெருமாளை சந்தித்தேன். நான் ஊர் திரும்பும் விடயத்தை கூறி விடை பெறுவதற்காக சென்றிருந்தேன். என்கூட மாறனும் வந்திருந்தார். அப்போது புலவர் தன் அருகில் இருந்த ஒரு இளைஞரைக் காட்டி அவருக்கு ஊருக்கு போகுமுன் சில பயிற்சிகளை வழங்க முடியுமா எனக் கேட்டார். அந்த இளைஞர் பெயர் இளங்கோ. அவர் கரூரைச் சேர்ந்தவர். கொடைக்கானலில் குண்டு வெடித்து மாறன் இறந்தபோது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர் இந்த இளைஞர் இளங்கோ. புலவர் கேட்டுக்கொண்டபடி தோழர்கள் மாறன், இளங்கோ இருவருக்கும் புலவரின் தோட்டத்திற்கு அருகே உள்ள ஆற்றங்கரையில் பயிற்சி வழங்கினேன். அப்போது எமக்கு காவலுக்கு ஒரு துடிப்பான இளைஞரை புலவர் நியமித்திருந்தார். அவரை அன்று ஒருநாள்தான் நேரில் பார்வையிட்டிருந்தேன். ஆனால் இன்று வரையும் அவர் என் நினைவில் இருக்கிறார். ஏனெனில் அவர் பெயர். ஆம் அவர் பெயர் லெனின். இந்த லெனின்தான் பின்னர் தமிழ்நாடு விடுதலைப்படை தளபதியாகி காவல் நிலையங்களை வெடிகுண்டு வீசி தகர்த்தவர். முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது குண்டு வெடித்து இந்த தோழர் லெனின் மரணமானார்

இந்தியாவில் என் டிவிட்டர் பதிவுகளை

இந்தியாவில் என் டிவிட்டர் பதிவுகளை பார்க்க முடியவில்லை என பலர் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் என் டிவிட்டர் கணக்கை தடை செய்வதன் மூலம் என் குரலை மௌனமாக்க முடியாது. ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்.

விடுதலை படம் வெளிவந்தபின் ச

விடுதலை படம் வெளிவந்தபின் சமூக வலைத் தளங்களில் ஒரு பெரிய தேடலை உருவாக்கியுள்ளது என்றே எண்ணத்தோன்றுகிறது. அந்த படத்தில் காட்டப்பட்ட பொலிஸ் அராஜகத்தை புரிந்த தேவாரத்திடமே ஒரு பேட்டி கண்டு வெளியிட்டுள்ளனர்.( அப் பேட்டி கீழே கொமன்றில் தந்துள்ளேன்) ஒன்றல்ல இரண்டல்ல அறுபது எழுபது பேரை கொன்றோம் என சர்வ சாதாரணமாக கூறுகின்றார் முன்னாள் காவல்துறை அதிகாரி தேவாரம். வேலூர் கோட்டையில் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட ஈழ அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரியபோது அவர்களில் இருவரை சுட்டுக் கொன்றுவிட்டு பிரியாணி கேட்டு கலகம் செய்தார்கள் என் கூறியவர்தான் இந்த தேவாரம். அன்று மட்டுமல்ல இன்றும்கூட அக் கொலைகளுக்காக அவர் துளிகூட வருந்தவில்லை என்பது அவரது பேட்டியில் தெரிய வருகிறது. கொலைகளை ஒத்துக்கொண்ட தேவாரம் ஒரு பெண்கூட பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என மறுக்கிறார். ஆனால் உண்மை என்னவெனில் இவர்மீதுதான் அதிக பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவரது அராஜகம் குறித்து எந்த அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக பாராட்டி பதக்கம் கொடுத்து வந்துள்ளன. மாட்டுக்கும் யானைக்கும் குரல் எழுப்பும் மனிதவுரிமை அமைப்புகள்கூட இந்த அறுபது எழுபது பேர் கொலைக்கு தேவாரத்திற்கு எதிராக குரல் எழுப்பவில்லை. ஆனால் தோழர் தமிழரசன் இக் கொலைகளுக்காக தேவாரத்தை தண்டிக்க வேண்டும் என விரும்பினார். விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பெண் வீட்டிற்கு தேவாரம் வந்து செல்வதை அறிந்த தோழர் தமிழரசன் அங்கு வந்து காத்து நின்றார். இரண்டு தடவை வந்து காத்து நின்றார். ஆனால் அந்த இரண்டு முறையும் தேவாரம் வரவில்லை. தோழர் தமிழரசன் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் தேவாரம் தண்டிக்கப்பட்டிருப்பார். இது அராஜகம் புரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும்.

செய்தி – சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி

செய்தி – சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி

ஓ மை காட்! அப்படியென்றால் ஒரு

ஓ மை காட்! அப்படியென்றால் ஒரு சிறந்த பந்து வீச்சாளரை இந்திய டீம் இழந்துவிட்டதா?😂

ஆஞ்சநேயரை இறைச்சிக்காக

ஆஞ்சநேயரை இறைச்சிக்காக அதுவும் சீனாவுக்கு அனுப்பப்போகிறார்களாம். யாழ் இந்திய தூதரின் ஏஜென்டுகள் ஏன் இன்னும் கண்டன போராட்டம் நடத்தவில்லை? அதிசயம். ஆனால் உண்மை!😂

யார் இந்த தோழர் தமிழரசன்?

•யார் இந்த தோழர் தமிழரசன்? 14.04.1945 யன்று பிறந்த தோழர் தமிழரசன் 01.09.1987 யன்று தனது 42வது வயதில் தமிழக உளவுப்படையினரால் கொல்லப்பட்டார். அவர் உயிரோடு இருந்திருந்தால் 14.04.2023 யன்று தனது 78 பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். பொறியியல் படிப்பை படித்த தமிழரசன் விரும்பியிருந்தால் மற்றவர்கள் போல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரோ மக்களுக்கான போராட்ட வாழ்வை விரும்பி ஏற்றார். அதனாலேயே அவர் அடித்துக் கொல்லப்பட்டார். தன் உயிர் பிரியும் அந்த இறுதிக் கணத்தில்கூட அவர் மக்களை நேசித்தார். அதனாலேயே அவர் தன் கையில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தாமல் மௌனித்தார். அவர் விரும்பியிருந்தால் கையில் இருந்த கிரினைட் குண்டை வீசி தப்பிச் சென்றிருக்க முடியும். அவர் நினைத்திருந்தால் கையில் இருந்த சப் மிசின்கன் மூலம் பலரை சுட்டுக் கொன்றிருக்க முடியும். தன் இறுதிக்கணம்வரை மக்களை நேசித்த அத் தமிழரசனை, சதி செய்து கொன்றவர்கள் அவரை “பயங்கரவாதி” என்றார்கள். தோழர் தமிழரசனைக் கொன்றதன் மூலம் அவர் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையை நசுக்கிவிட முடியும் என அவர்கள் நினைத்தார்கள். இன்று இந்திய அரசுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு தமிழக இளைஞனும் தன்னை தோழர் தமிழரசனாகவே நினைத்துக்கொள்கிறான். இன்று யாரும் தோழர் தமிழரசனை மறுத்து விட்டு தமிழ்த் தேசியம் பேசிவிட முடியாது. இதுதான் தோழர் தமிழரசனுக்கு கிடைத்த வெற்றியாகும். இன்று சிலர் தேர்தல் பாதை மூலம் தமிழ்த் தேசிய விடுதலை அடைய முடியும் என நம்புகிறார்கள். வெகுவிரைவில் இவர்களும் தோழர் தமிழரசன் முன்வைத்த ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதை மட்டுமே தமிழ்த்தேசிய விடுதலையை பெற்றுத் தரும் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

இந்திய அரசு ஏன் தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது?

•இந்திய அரசு ஏன் தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது? தோழர் தமிழரசன் தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைய வேண்டும் என்று கூறியதால் இந்திய அரசு அஞ்சுகிறது என்கிறார்கள். அப்படியென்றால், வேறு பலர் தமிழ்த் தனிநாடு கேட்டிருக்கும்போது தமிழரசன் மீது மட்டும் ஏன் அஞ்சுகிறது? என்று கேட்டால் தமிழரசன் தனிநாடு கேட்டது மட்டுமன்றி அதை அடைய ஆயுதப் போராட்ட பாதையை தேர்ந்தெடுத்தமையே காரணம் என்று பதில் தருகிறார்கள். அப்படியென்றால பல கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறிவரும்போது ஏன் தமிழரசன் மீது மட்டும் அஞ்ச வேண்டும்? என்று கேட்டால், மற்ற கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறினாலும் அவர்கள் தேர்தல் பாதையில் பயணிக்கின்றனர். ஆனால் தமிழரசன் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தை நடைமுறையில் கொண்டிருந்தார். இதுவே தமிழரசன் மீது மத்திய மாநில அரசுகள் அஞ்சுவதற்கு காரணம் என்கிறார்கள். ஆம். உண்மைதான். அதனால்தான் இந்திய அரசு தனது உளவுப்படைகள் மூலம் சதி செய்து தோழர் தமிழரசனைக் கொன்றது. ஆனாலும் தமிழரசன் இறந்து 36 வருடங்களுக்கு பின்னரும் இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது. தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுப்பவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது. சிறையில் அடைத்தவர்களுக்கு ஜாமீன்கூட வழங்க மறுத்து வருகிறது. தோழர் தமிழரசன் போஸ்டர் ஒட்டினால் பொலிசை விட்டு கிழிக்கிறது. கூட்டம் போட அனுமதி கேட்டால் தர மறுக்கிறது. தோழர் தமிழரசன் பற்றி புத்தகம் எழுதினால் மிரட்டுகிறது. புத்தகத்தை வெளியிடுபவர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது. தமிழ்நாடு விடுதலைப்படைப் போராளி காலம்சென்ற தோழர் பசுபதி வீட்டுக்குச்;சென்று அவரின் வயதான தாயாரைக்கூட பொலிசார் மிரட்டியுள்ளனர். தோழர் தமிழரசனுக்கு சிலை வைக்க நிலம் வழங்கக்கூடாதென்று அந்த வயதான தாயாரிடம் மிரட்டி கையொப்பம் வாங்கியுள்ளனர். ஏன் இந்தளவு தூரத்திற்கு இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது? ஏனெனில் தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அவரிலிருந்து ஆயிரக் கணக்கான தமிழரசன்கள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே இந்திய அரசு அஞ்சுவதற்கு காரணமாகும்!

மாமனிதர்” தோழர் தமிழரசன் !

“மாமனிதர்” தோழர் தமிழரசன் ! தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன். ஆனால் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன் என்றார் மாமேதை காரல் மாக்ஸ் அதேபோன்று, தனகென்று வாழாமல் தமிழ் மக்களுக்காக வாழ்ந்தவர் தனக்கென்று உழைக்காமல் தமிழ் மக்களுக்காக உழைத்தவர் இறுதியில் தமிழ் மக்களுக்காவே தன் உயிரை அர்ப்பணித்தவர் ஆம். அவர்தான் "மாமனிதர்" தோழர் தமிழரசன் மூன்று மீற்றர் கயிற்றில் கட்டியிருந்த மாட்டை அவிழ்த்து பத்து மீற்றர் கயிற்றில் கட்டிவிட்டு போனான் ஒருவன். மாடு மா, மா என்று கத்தியது , தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று. தமிழக மாடுகளும் மன்னிக்கவும் மக்களும் தமக்கு கிடைத்த சட்டசபையை வைத்துக்கொண்டு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக கற்பனையில் மிதக்கிறார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட வரித்தொகை ஒரு வருடத்தில் சுமார் 350 கோடி ரூபா. ஆனால் தற்போது கொள்ளைக்கார இந்திய மத்திய அரசு தமிழகத்தில் வசூலிக்கும் வரி கடந்த ஆண்டு மட்டும் 85000கோடி ரூபா. வெள்ளைக்காரன் 350 கோடி ரூபாவை வசூலித்தபோது தம்மை அடிமைகளாக உணர்ந்து விடுதலைக்கு போராடிய தமிழ் இனம் இப்போது 85000 கோடி ரூபா வசூலிக்கப்படும்போது தான் சுதந்திரமாக இருப்பதாக கருதுகிறது. ஆனால் தாங்கள் அடிமையாக இருப்பதால்தான் ஈழத் தமிழின அழிவை தடுக்க முடியவில்லை என்பதை மட்டுமல்ல, தமது காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளைக்கூட தீர்க்க முடியவில்லை என்பதையும் அவர்களால் உணர முடியவில்லை. எனவேதான் "ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்" என்று தோழர் தமிழரசன் கூறினார். தமிழக மக்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்று கூறியதாலேயே தோழர் தமிழரசன் தமிழக காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்டார். தமிழக அரசின் இன்றைய கடன் 5.21லட்சம் கோடி ரூபா. ஒவ்வொரு தமிழன் தலையிலும் 3 லட்சம் ரூபா கடன் சுமத்தப்பட்டுள்ளது ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சம்பளம் 50 ஆயிரம் ரூபா. மாதாந்த சம்பளம் 50 ஆயிரம் ரூபா பெற்றுக்கொண்ட கலைஞர் கருணாநிதியின் குடும்ப சொத்தின் பெறுமதி 45 ஆயிரம் கோடி ரூபாக்கள். மாதாந்த சம்பளம் 1 ரூபா மட்டுமே பெற்றுவந்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாக்கள். இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் இந்த இருவரும் எப்படி கோடிக் கணக்கான ரூபா சொத்துக்கள் சேர்த்தார்கள்? ஏன் இவர்களின் வருமானத்திற்கு மேலான சொத்தை இதுவரை பறிமுதல் செய்ய முடியவில்லை? அப்படியாயின் இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? இந்திய அரசின் கைப் பொம்மைகளாக இவர்கள் செயற்படுவதற்கு சலுகையாகவே இவர்களது ஊழல் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறது. 85000கோடி ரூபா வரியாக வசூலிக்கும் மத்திய அரசு தமிழகத்திற்கு திருப்பி உதவியாக கொடுக்கும் பணம் 28000கோடி ருபா மட்டுமே. இந்திய மத்திய அரசு, நேபாளத்திற்கு 14000 கோடி ருபாவையும், பூட்டானுக்கு 8000 கோடி ரூபாவையும், இலங்கைக்கு 10000கோடி ரூபாவையும், மங்கோலியாவுக்கு 6000 கோடி ரூபாவையும் வழங்கியுள்ளது. ஆனால் 85000கோடி ரூபாவை வரியாக வழங்கும் தமிழ்நாட்டிற்கு மழை வந்தபோது வழங்கிய உதவி தொகை வெறும் 1940 கோடி ரூபா மட்டுமே. புயல் வந்தபோது வழங்கிய தொகை வெறும் 350 கோடி ருபா மட்டுமே. தமிழ்நாடு தனக்குரிய உதவியை பெற முடியாதது மட்டுமல்ல தன்னிடமிருந்து பெறப்படும் பணத்தை இலங்கைக்கு வழங்குவதைக்கூட தடுக்க முடியாத அடிமை நிலையில் உள்ளது. தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தில்தான்; தமிழக மீனவனைக் கொல்லும் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இலங்கை கடற்படைக்கு யுத்த கப்பல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலைக்கும் உதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக தமிழன் அடிமை நிலையில் இருப்பதையும், இந்திய அரசால் தமிழ்நாடு சுரண்டப்படுவதையும் உணர்ந்து சுட்டிக்காட்டியவர் தோழர் தமிழரசன் அவர் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என விரும்பினார். தமிழக தமிழன் தன் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே ஈழத் தமிழனின் விடுதலைக்கும் உதவ முடியும் என நம்பினார். இவ்வாறு அவர் சிந்தித்து, உணர்ந்து செயற்பட்டமையினாலே அவர் இந்திய அரசின் உளவுப்படைகளால் அடித்துக் கொல்லப்பட்டார் (மீள் பதிவு)

மக்களோடு சேர்ந்து உழையுங்கள்!

• மக்களோடு சேர்ந்து உழையுங்கள்! • மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்! • மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்! தோழர்மாஓ சேதுங் சிந்தனையை கற்றுத் தந்த தோழர் தமிழரசன்! 1984ல் தமிழ்நாட்டில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்தார். அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் எமது சில தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார். அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அவர்களது இடத்திற்கு அழைத்து சென்றார். உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் குளத்தில் குளிக்கலாம் என்று தோழர் தமிழரசன் கூறினார். இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள். மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஒடியவர்கள் குளிக்காமல் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவினார். எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் இருக்கவே செய்தது. அந்த குளம் குட்டையாகவே இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. இன்னொரு புறத்தில் பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினர். இதைப் பரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார். மாவோ வின் வரிகளைக் கேட்தும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எமது தோழர்கள் “புரட்சி ஓங்குக” என்று உரத்துக் கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர். பின்பு சாப்பிடுவதற்காக அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது. எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை. இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார். தோழர்கள் புரிந்து கொண்டனர். இம்முறை தோழர் தமிழரசன் கூறுமுன்னரே எமது தோழர்கள் “மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள். என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கியவர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள். உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள். இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள். அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார். குறிப்பு-ஏப்-14 தோழர் தமிழரசன் 78வது பிறந்த தினத்தை முன்னிட்டு இது ஒரு மீள்பதிவு ஆகும்.

புர்கா

• புர்கா திருமணமாகி ஒரு சில நாட்களில் கணவன் இறந்ததும் இஸ்லாமிய மத முறைப்படி நான்கரை மாதம் எந்த ஆண்களையும் பார்க்காமல் தனிமைப்படுத்தப்படும் ஒரு பெண்ணின் உணர்வுகளை சித்தரிக்கும் படம். இந்து, கிருத்தவ மற்றும் பௌத்த மதங்களில் உள்ளவர்கள் தம் மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பேச முடியும். ஆனால் இஸ்லாமிய மதத்தில் உள்ள முற்போக்காளர்கூட தம் மதத்தில் உள்ள பிற்போக்குதனங்கள் பற்றி பேச அஞ்சுகின்றனர். அதனால் இஸ்லாமிய மதத்தில் உள்ள பெண்கள் தமது ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க முடியாமல் உள்ளனர்.

அப்பாவி தமிழன் - ஐயா!

அப்பாவி தமிழன் - ஐயா! இந்த இடத்தில் இருந்த தரமுயர்த்தப்பட்ட கல்முனை பிரதேச சபையைக் காணவில்லை. பொலிஸ்- என்னது? தரமுயர்த்தப்பட்ட பிரதேசசபையைக் காணவில்லையா? அப்பாவி தமிழன் - ஆமா, தரமுயர்த்தப்பட்ட பிரதேசசபை மட்டுமல்ல அதற்கு நியமித்த கணக்காளரையும் காணவில்லை பொலிஸ் - என்னது? கணக்காளரையும் காணவில்லையா? அப்பாவி தமிழன் - ஆமா, நான் சொல்வது பொய் என்றால் கணக்காளரை அனுப்பிவைத்த சுமந்திரன் சேரிடம் கேட்டுப்பாருங்க பொலிஸ் - ????? 😂😂

விடுதலை படம் வெளிவந்த பின்பு

விடுதலை படம் வெளிவந்த பின்பு புலவர் மற்றும் தமிழரசன் பற்றிய தேடல் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனால் அவர்களுடன் தொடர்புகொண்ட இரு ஈழத் தமிழர்கள் பற்றி இங்கு பதிவிட விரும்புகிறேன். ஒருவர் தோழர் நெப்போலியன். இவர் யாழ்ப்பாணத்தில் கரவெட்டியில் பிறந்தவர். இவர் 1983ல் பெண்ணாடத்தில் புலவர் மற்றும் தமிழரசன் நடத்திய மாநாட்டில் பங்குபற்றியிருந்தார். அதன்பின்பு மதுரை அருகில் வாடிப்பட்டியில் தமிழரசன் மற்றும் அவரது தோழர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கினார். அதனால் இந்திய உளவுப்படைகளின் உத்தரவுக்கிணங்க 1986ல் மலையகத்தில் வைத்துக் கொல்லப்பட்டார். இன்னொருவர் தோழர் ராயு. இவர் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர்தான் தமிழரசன் மேற்கொண்ட அரியலூர் மருதையாற்றுப்பால வெடி குண்டிற்கு கூட இருந்து உதவியவர். இவரையும் பொன்பரப்பி சம்பவத்தில் தமிழரசனுடன் சேர்த்துக் கொல்வதற்கு உளவுப்படை திட்டமிட்டிருந்தது. ஆனால் சயிக்கிளில் செல்வதால் தேவையில்லை எனக்கூறி தமிழரசன் இவரை அழைத்துச் செல்லவில்லை. அதனால் உயிர் தப்பினார். இவர் 10.07.2012 யன்று மட்டக்களப்பில் காலமானார். வரலாற்றில் தோழர் தமிழரசன் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் அவருக்கும் அவர் மேற்கொண்ட தமிழ்நாடு விடுதலைக்கும் உதவிய இந்த இரு ஈழத்தமிழர்களும் கூடவே நினைவு கூரப்பட வேண்டும்.

பூமியின் உருவாக்கத்திற்கு தேவையான

பூமியின் உருவாக்கத்திற்கு தேவையான பெருவெடிப்பிற்கு கடவுள் காரணமல்ல- பேராசிரியர்- ஸ்டீபன் கேவ்கிங். 2013 ல் அமெரிக்காவில் “கல்ரெக்” பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்; ஸ்டீபன் உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்க மாணவர்கள் 12 மணி நேரம் வரிசையில் காத்து இருந்தனர். மண்டபத்தில் இடம் போதாமல் வெளியில் நின்று கொண்டும் அவரது பேச்சை செவிமடுத்தனர். உலகில் பல மதங்களும், அவற்றின் கடவுள்களும் இருக்கின்றன. இவை பல இருந்தாலும் அவை எல்லாம் ஒருமித்த குரலில் கூறுவது “கடவுள் பூமியைப் படைத்தார்” என்பதே. ஆனால் ஸ்டீபன் அவர்கள் பெரு வெடிப்பின் மூலமே பூமி உருவானது என்றும் அந்த பெரு வெடிப்பிற்கு கடவுள் தேவையில்லை என்றும் விளக்கியுள்ளார். இது பற்றிய விபரம் அறிய விரும்புவோர் கீழ்வரும் லிங்கை பார்க்கவும். https://www.dailymail.co.uk/.../Stephen-Hawking-says-The... அறியாமையின் இருப்பிடமே கடவுள். அறிவு வளர வளர கடவுள் சுருங்கி வருகிறார். இன்று இல்லா விடினும் என்றாவது ஒரு நாள் அறிவின் வளர்ச்சியானது கடவுளை முற்றாக நீக்கிவிடும் என்பதை வரலாறு காட்டுகிறது. இலங்கை, இந்திய நாடுகளில் பாடசாலைகளைவிட கோயில்களின் எண்ணிக்கை அதிகம். பல்கலைக்கழகங்களைவிட கடவுள்களின் எண்ணிக்கை அதிகம். இதுவே மக்களின் அறியாமைக்கும் மதங்களினது ஆதிக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது. மக்கள் பகுத்தறிவு பெற வைப்பதே இந்த அறியாமையிலிருந்து விடுபட ஒரே வழியாகும்.

இங்கிலாந்து வருத்தம் தெரிவிக்க முடியுமென்றால்

•இங்கிலாந்து வருத்தம் தெரிவிக்க முடியுமென்றால் இந்தியா ஏன் வருத்தம் தெரிவிக்க முடியாது? ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்காக இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். முழு இந்தியர்களும் குறிப்பாக சீக்கியர்கள் உறுதியாக இருந்தமையினால் வேறு வழியின்றி இங்கிலாந்து வருத்தம் தெரிவித்துள்ளது. இப்போது எம் மத்தியில் எழும் கேள்வி என்னவெனில் இதேபோல் ஈழத் தமிழர்களை இந்திய ராணுவம் படுகொலை செய்தமைக்காக இந்தியா வருத்தம் தெரிவிக்குமா என்பதே. இந்தியா தெரிவிக்குதோ இல்லையோ ஆனால் எம்மவர்களே சிலர் ஓடிவந்து “ராஜீவ் காந்தியைக் கொன்றதை மறந்து இந்தியா எப்படி வருத்தம் தெரிவிக்கும்?” என்று எழுதுவார்கள். இவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம். ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை செய்த ஆங்கிலேய அதிகாரியை இங்கிலாந்துக்கே சென்று ஒரு சீக்கியர் படுகொலை செய்தார். அந்த சீக்கியருக்கு இங்கிலாந்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அந்த சீக்கியரின் அஸ்தியை இந்தியாவுக்கு எடுத்து வந்து அவரை “தியாகி” என்று கௌரவப்படுத்தினார். ஆங்கிலேய அதிகாரி கொல்லப்பட்டிருந்தும்கூட இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருந்தாலும் அதனைக் காரணம் காட்டாமல் இந்திய பிரதமரும் ஈழத் தமிழர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். எப்படி இந்திய மக்கள் உறுதியாக இருந்தது இங்கிலாந்து பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைத்ததோ அதேபோன்று தமிழ் மக்களும் உறுதியாக இருந்து இந்திய பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைக்க வேண்டும். 13.04.1919யன்று ஜாலியன்வாலாபாக்கில் ஆங்கிலேய அதிகாரியினால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை சுமார் 400 மட்டுமே. ஆனால் ஈழத்தில் இந்திய ராணுவம் படுகொலை செய்த தமிழ் மக்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேல். குறிப்பு - இப் பதிவு 3 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது. இன்றும் பொருத்தமாகவும் தேவையாகவும் இருப்பதால் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் ஏன் தமது பதவியை

இவர்கள் ஏன் தமது பதவியை இளையவர்களுக்கு வழங்க மறுக்கின்றனர்? கட்டையில் போகும்வரை பதவியில் ஒட்டியிருக்க ஏன் விரும்புகின்றனர்?

சுமந்திரன் - வடை சுடுவாயா?

சுமந்திரன் - வடை சுடுவாயா? கடைகாரர் - ஆமா, நல்லாய் சுடுவேன் சேர் சுமந்திரன் - எண்ணெய் , சட்டி இல்லாம சுடுவாயா? கடைகாரர் - அது எப்படி சேர் முடியும்? சுமந்திரன் - நான் சுடுவேனே. சந்தேகம் இருந்தால் என் தம்பிகளிடம் கேட்டுப் பார். கடைகாரர் - ?????? 😂😂

சம்பந்தர் ஐயா – மேடம்!

சம்பந்தர் ஐயா – மேடம்! இந்த தீர்வு 13ஐ எப்ப வாங்கித் தருவியள்? இந்திய தூதர் - மிஸ்டர் சம்பந்தன்! தீர்வு 13 வேணுமா? அல்லது இன்னொரு குவாட்டர் வேணுமா? சம்பந்தர் ஐயா – எனக்கு இன்னொரு குவாட்டர் தந்தால் போதும் மேடம். 😂😂

அன்னை பூபதியின் மரணம்!

அன்னை பூபதியின் மரணம்! நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? அன்னை பூபதி தனது 56 வயதில் 19.03.1988 யன்று உண்ணாவிரதம் ஆரம்பித்தார். சரியாக ஒரு மாதம் கழித்து 19.04.1988 யன்று அவர் மரணமடைந்தார். அன்னைபூபதி ஒரு சாதாரண தமிழ்பெண். அவர் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடினார். ஆனாலும் காந்தி தேசம் என்று கூறப்பட்ட இந்திய அரசு அவரின் போராட்டத்தை கொஞ்சம்கூட மதிக்கவில்லை. மாறாக அவரின் கணவர் மற்றும் பிள்ளைகளை கைது செய்து மிரட்டியது. இவ்வாறு அன்னை பூபதியைக் கொன்றவர்கள் கொஞ்சம்கூட வெட்கம் இன்றி வடக்கு கிழக்கில் 20 காந்தி சிலைகளை நிறுவுகிறார்கள். ஆனால், அன்னை பூபதி தன் மரணத்தின் மூலம் எமக்கு இரண்டு பாடங்களை கற்பித்துள்ளார். முதலாவது, இந்திய அரசை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்பக்கூடாது. இரண்டாவது, அகிம்சை போராட்டம் தீர்வை பெற்று தராது என்பது. இந்த இரண்டு பாடங்களையும் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. எப்போதும் நினைவில் கொள்ளல் வேண்டும். இதுவே அன்னை பூபதிக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும். குறிப்பு - 19.04.2023 அன்னை பூபதியின் 35வது நினைவு தினம் ஆகும்

நியாயமான கேள்வி.

நியாயமான கேள்வி. ஆனால் பதில் வராது. அதையும் தாண்டிக் கேட்டால் "உஷ்! பாஜக உள்ளே வந்திடும்" என்று உருட்டுவார்கள். திராவிடல் மாடல் ஆட்சி ???

முள்ளிவாய்க்கால் அவலம்!

•முள்ளிவாய்க்கால் அவலம்! பசியை போக்க உயிரை பணயம் வைத்து கஞ்சிக்காக வரிசையில் காத்திருந்த காலம் அது. கஞ்சிக்காக வரிசையில் காத்து நின்ற போது வெடித்து சிதறிய எறிகணையில் சிதறி வீழ்ந்தவர் போக, மிஞ்சியவர் எஞ்சிய கஞ்சிக்காக மீண்டும் வரிசையில் நின்ற காலம் அது.

இருவரும் ஈழத் தமிழர்கள்

இருவரும் ஈழத் தமிழர்கள் ஒருவர் கருணாரட்ணம் அடிகளார். சிங்கள அரசின் மனிதவுரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். அதனால் சிங்கள ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படை அணியால் கொல்லப்பட்டவர். இன்னொருவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள். போர் நடைபெற்றவேளை தமிழ்நாட்டில் மௌனமாக இருந்தவர். பின்னர் இந்திய அரசால் ஈழத்து சிவசேனைத் தலைவராக அனுப்பி வைக்கப்பட்டவர். இந்திய அரசின் விருப்பத்திற்கமைய மத குரோதங்களை விதைத்து தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குபவர். இதில் யார் தமிழ் இனத்திற்கானவர் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். குறிப்பு – 20.04.2023 யன்று கருணாரட்ணம் அடிகளாரின் 15வது நினைவுதினம் ஆகும்.

கருணாரட்ணம் அடிகளார் என்னும் கிளி சேர் !

• கருணாரட்ணம் அடிகளார் என்னும் கிளி சேர் ! கருணாகரன் அடிகளார் ஒரு கிருத்தவ பாதிரியார் என்பதும் அவர் இறுதிக் காலங்களில் வன்னியில் மனிதவுரிமை பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்பதும் அனைவரும் அறிந்த விடயமே. இன்று அவருடைய 15வது நினைவு தினம் ஆகும். 20.04.2008 யன்று ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் இவர் கொல்லப்பட்டார் என்பதும்கூட யாவரும் அறிந்த விடயமே. இங்கு நான் அனைவரும் அறிந்த கருணாரட்ணம்; அடிகளார் பற்றி எழுதப் போவதில்லை. பலரும் அறிந்திராத அவரது இன்னொரு பக்கமான கிளி சேர் பற்றியே எழுதப் போகிறேன். கிளி சேர் எனது கரவெட்டி கிராமத்தை சேர்ந்தவர். அதனால் அவரை எனக்கு சிறுவயது முதல் தெரியும் . 1977 தேர்தலின்போது கிளி சேர் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரித்தார். அவர்களுக்காக மும்முரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். அவருக்கு பின்னர் பருத்தித்துறை இலங்கை வங்கியில் வேலை கிடைத்தது. அவர் ஊரில் லீலாரட்ணம் மாஸ்டரின் ரியூசன் சென்டரில் ஆசிரியராகவும் இருந்தார். அப்போது அவரிடம் ஆங்கிலம் பயின்றேன். அதனால்தான் நாம் அவரை “கிளி சேர்” என்று அழைத்தோம். உண்மையில் பழகுவதற்கு இனிமையானவர். வயது வித்தியாசம் பாராமல் எல்லோருடனும் பழகுவார். அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வார். நாம் கிரிக்கட் விளையாடும்போதெல்லாம் அவர்தான் எமக்கு அம்பயராக (நடுவராக) இருப்பார். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் அவர் தன் வங்கி வேலையையும் விட்டிட்டு கிருத்தவ பாதிரியாவதற்கு படிக்க சென்று விட்டார் என்ற செய்தி அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் அவருடைய தம்பி ஞானம் என்பவர் ஏற்கனவே அவர்களுடைய வீட்டில் இருந்து கிருத்தவ பாதிரியாவதற்கு சென்றிருந்தார். ஒரே வீட்டில் இன்னொருவர் அதுவும் கிளி சேர் சென்றது உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வேளையில் ஒருநாள் இராணுவம் யாழ் நகர வீதியில் சென்ற பலரை சுட்டுக் கொன்றது. அதில் கிளி சேரும் எதிர்பாராத விதமாக சுடப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களின் உடலை ராணுவம் தன் வண்டியில் எடுத்துச் சென்று முகாமில் எரிக்க திட்டம் போட்டிருந்தது. அவ்வாறு எடுத்துச் செல்லும்போது கிளி சேர் உடலில் உயிர் இருப்பதைக் கண்ட ராணுவ வீரன் ஒருவன் அவர் கழுத்தில் தொங்கிய சிலுவை மாலையை கண்டு ( ஒருவேளை அவ் ராணுவ வீரனும் கிருத்தவராக இருக்கக்கூடும்) அவரை இழுத்து வீதியில் எறிந்து விட்டு சென்று விட்டான். கழுத்தில் சூடுபட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த கிளி சேரை ஊர் மக்கள் எடுத்துச் சென்று யாழ் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது இதையறிந்த நான் மருத்துமனை சென்று அவரை பார்வையிட்டேன். தான் கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டதாக அவர் கூறினார். கழுத்தில் சூடு பட்டதால் அவரால் சரியாக பேச முடியவில்லை. மிகவும் கஸ்டப்பட்டே பேசினார். ஆனாலும் அவர் பேசினார். ஏனெனில் நான் அப்போது இயக்கத்தில் சேர்ந்து விட்டதை அவர் அறிந்திருந்தார். அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு “ உனக்கு இயக்கம் வேண்டாம். நீ போராட வேண்டாம். நீ படி. படிப்பை விட்டுவிடாதே” என்று கேட்டார். நான் அவர் மனது வேதனைப்படக்கூடாது என்பதால் “சரி பார்க்கலாம்” என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். ஆனால் இதுதான் எனக்கும் அவருக்குமான கடைசி சந்திப்பாக இருக்கப் போகிறது என்று நான் அப்போது நினைக்கவில்லை. அதன் பிறகு அவரை நான் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவர் வன்னியில் போராட்டத்திற்கு ஆதரவாக மனிதவுரிமை பணிகளில் ஈடுபடுவதாக அறிந்தேன். எனக்கு அவரது பணி ஆச்சரியம் தரவில்லை. எனெனில் அவரது சுபாவமே அதுதான். யாராவது அவர் கண் முன்னால் வேதனைப் பட்டால் அவரால் பொறுக்க முடியாது. அத்தகையவரை ராணுவம் கண்ணிவெடி வைத்து கொன்று விட்டதை அறிந்தபோது உண்மையிலே மிகவும் கவலை அடைந்தேன். எனக்கு அவரிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருந்தது. ஒருவேளை இறுதிக் காலங்களில் அவரை நான் சந்தித்திருந்தால் நான் போராட புறப்பட்டது பற்றி என்ன கூறியிருப்பார்? “சரிதான்” என்று ஒத்துக் கொண்டிருப்பார் என்றே நம்புகிறேன். ( மீள் பதிவு )

வெல்லாத ஆரியர் வென்ற கதை இது

வெல்லாத ஆரியர் வென்ற கதை இது வீரத் தமிழினம் வீழ்ந்த இழிவிதே

சேர்!

சேர்! நள்ளிரவில போய் ஜனாதிபதிக்கு ஆலோசனை சொல்லுறீங்க. அப்புறம் இளைஞர்களை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்ளச் சொல்லுறீங்க. நாங்க போராட்டத்தை ஆதரிக்கிறதா வேணாமா? உறுதியாக சொல்லுங்க சேர். எத்தனை தரம் மாத்தி மாத்தி எழுதுறது? #சுமந்திரன் தம்பிகளின் புலம்பல் 😂😂

மக்களோடு சேர்ந்து உழையுங்கள்

"மக்களோடு சேர்ந்து உழையுங்கள் மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள் மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்" - மா சே துங் இருவரும் இலங்கையர்கள் இருவரும் அரசியல் தலைவர்களும் கூட ஒருவர் சிங்கள தலைவர் இன்னொருவர் தமிழ் தலைவர் இதில் யார் மாசே துங் கூறியபடி மக்களுக்கான தலைவர் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்கள் பிறந்த தினம்

•மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்கள் பிறந்த தினம்! மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்களின் பிறந்த தினம் 22.04.1870 நூலகங்களில் உறங்கி கிடந்த மாக்சியத்தை ருஸ்சியப் புரட்சி மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டியவர் தோழர் லெனின் ருஸ்சிய பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமைதாங்கி ருஸ்சிய புரட்சியை வென்றெடுத்து உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தந்தவர் தோழர் லெனின் முதலாளி வர்க்க கொடுமைகளை ஒழிக்க பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப்பிடிக்க ஆயுதப் போராட்டத்தின் மூலமான புரட்சி அவசியம் என நிரூபித்தவர் தோழர் லெனின் தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று உலகப்புரட்சி பேசிய ரொக்ட்சியை தத்துவார்த்த ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் தோற்கடித்தவர் தோழர் லெனின் தன் வாழ்நாள் முழுவதும் திரிபுவாதிகளை அம்பலப்படுத்தியவர் தோழர் லெனின். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகப் பாட்டாளிவர்க்க ஜக்கியத்திற்கு வழி அமைத்தவர் தோழர் லெனின் தேசிய இனப்பிரச்சனைக்கு சுயநிர்ணய உரிமையை தீர்வாக முன்வைத்து சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவர் தோழர் லெனின் இறந்தும்கூட எதிரிகளுக்கு சிம்ம சொப்பனாக விளங்குகிறார் தோழர் லெனின். அதனால்தான் ருஸ்சிய அருங்காட்சியத்தில் இருக்கும் அவர் உடலை அழித்து புதைக்க வேண்டும் என்று எதிரிகள் கோருகிறார்கள். உலகம் உள்ளவரை தோழர் லெனின் பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமன்றி தேசிய இனங்களினாலும் நன்றியுடன் நினைவு கூரப்படுவார். மாபெரும் ஆசான் தோழர் லெனின் முன்வைத்த புரட்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே -- பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம் இன்று..

விடுதலைப்புலிகளைப் பார்த்து

விடுதலைப்புலிகளைப் பார்த்து தமிழ்த்தேசிய விடுதலைக்காக விடுதலைக்குயில்கள் இயக்கம் கண்டவர் பணப் பறிப்பு நடவடிக்கையில் காவல்துறை கைது செய்யப்போகிறது என்றவுடன் கலைஞர் காலில் ஓடிப் போய் விழுந்தவர் இன்று திராவிடத்திற்காக குரல் கொடுப்பதைப் பார்த்தால் மன்னிக்கவும் வாழ்த்து கூறமுடியவில்லை

கரடியே காரித்துப்பிடிச்சு!

கரடியே காரித்துப்பிடிச்சு!

இன்று உலக புத்தக தினம் (23.04.2023)

•இன்று உலக புத்தக தினம் (23.04.2023) “புரட்சியில் துப்பாக்கிகளைவிடப் பெரிய ஆயுதம் புத்தகங்களே” என்று ரஸ்சிய புரட்சியை மேற்கொண்ட தோழர் லெனின் கூறினார். உண்மைதான். வாசிப்பதன் மூலமே ஒரு மனிதன் பூரணத்துவம் பெறுகின்றான். எனவே அதற்கு புத்தகங்கள் மிகவும் அவசியமாகின்றன. எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் என்றார் தோழர் சே குவாரா அதுவும் உண்மைதான் என்பதை ஈழத்தில் கண்டோம். முதலில் யாழ்ப்பாணம் நூலகம் இலங்கை அரசால் எரிக்கப்பட்டது. பின்னர் தமிழர்கள் எரிக்கப்பட்டார்கள். எமது தமிழ் சமூகத்தில் புத்தகங்களுக்கும் வாசிப்பிற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் புத்தகதினம் வரும்போது இந்த புத்தக வாசிப்பிற்காக நாம் சிறப்புமுகாமில் நடத்திய போராட்டங்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களுக்கு பத்திரிகை வழங்கப்படுகிறது. றேடியோ கேட்க அனுமதிக்கப்படுகிறது. ரிவி பார்க்க அனுமதிக்கப் படுகிறது. புத்தகம் படிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் துறையூரில் இருந்த சிறப்புமுகாமில் இவை எதுவுமே எமக்கு அனுமதிக்கப்படவில்லை. அன்றைய தமிழக அரசு சிறப்புமுகாமில் இவற்றை தராதது மட்டுமன்றி எமது சொந்த செலவில் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளிக்க மறுத்தது . நாம் வேறு வழியின்றி எமக்கு சாப்பாடு பார்சல் கட்டி வரும் பேப்பர்களை படித்தோம். இதனை அறிந்த கியூபிராஞ் அதிகாரிகள் உடனே எமக்கு புரியாத மலையாள பத்திரிகைகளில் சாப்பாடு கட்டி தர ஏற்பாடு செய்தார்கள். இதனால் வேறு வழியின்றி பத்திரிகை படிக்க அனுமதிக்குமாறு கோரி 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அதன் பின்னரே அனுமதி தரப்பட்டது. எமது சொந்த செலவில் புத்தகம் படிப்பதற்கே 14 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தமையை இன்றும் நினைத்து பார்க்கிறேன். ஆனாலும் புத்தகம் படிக்கும் ஆர்வம் மட்டும் இன்னும் குறையவே இல்லை. எமது இளைஞர்கள் மத்தியில் இந்த புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறதோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது. நூல்கள் வெளிவருவது குறைந்து வருகிறது. வெளிவரும் நூல்களும் மிகக் குறைந்தளவே அச்சிடப்படுகின்றது. நூல் வெளியீட்டு விழாக்களிலும்கூட சுமார் இருபது முப்பது பேர்களே கலந்து கொள்கின்றனர். அதுகூட வடையும் தேநீரும் வழங்கியே அழைக்க வேண்டியிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி புத்தகங்களின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது போல் தோன்றுகிறது. எதுவானாலும் வாசிக்கும் பழக்கத்தை நாம் எம் மக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் வாசிப்பதன் மூலமே மனிதன் பூரணத்துவம் அடைகிறான். (கீழே உள்ள எனது படம் 1995ம் ஆண்டு துறையூர் சிறப்புமுகாமில் எடுக்கப்பட்டது.)

தோழர் லெனினும் பிரதமர் மோடியும்

•தோழர் லெனினும் பிரதமர் மோடியும் ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனினை சந்திப்பதற்கு அமெரிக்க பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றிருந்தார். பிரதமர் அலுவலகத்தில் காத்திருந்த ரைஸ் வில்லியமுக்கு அவருக்கான சந்திப்பு நேரம் வந்திருந்தபோதும் கதவு திறக்கப்படவில்லை. இது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நேரம் தவறாமையில் மிகவும் கறாராக இருப்பவர் தோழர் லெனின். சரி, யாரோ மிக மிக முக்கிய பிரமுகர் லெனினுடம் விவாதித்து கொண்டிருக்கிறார் என்று அந்த அமெரிக்க பத்திரிகையாளர் நினைத்தார். அரைமணி, ஒரு மணி, ஒன்றரை மணி ஆயிற்று. கதவு திறக்கவில்லை. லெனினுடன் இவ்வளவு நீண்ட பேட்டிக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் முழு அதிகாரம் பெற்ற அந்த தூதர் யாரோ? என்பதே அப் பத்திரிகையாளரின் கேள்வியாக இருந்தது. கடைசியில் கதவு திறந்தது. அவரது அறையில் இருந்து வெளியே வந்தவரைப் பார்த்ததும் அனைவரும் அசந்து போய்விட்டார்கள். ஏனெனில் வெளியே வந்தவர் பரட்டைத் தலையும் அழுக்கு உடையும் கொண்ட ஒரு ஏழை விவசாயி. லெனினுடைய அறைக்குள் பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றார். அவரிடம் லெனின் சொன்னார், " உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஏழை விவசாயி தம்போவ் பகுதியை சேர்ந்தவர். மின்சாரமயமாக்கல், கூட்டு பண்ணை அமைப்பு, புதிய பொருளாதாரக் கொள்கை ஆகியவை பற்றி அவருடைய கருத்துகளை கேட்டேன். உரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. இதனால் நேரத்தை மறந்துவிட்டேன்." என்று சொன்னார் இவர்தான் ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனின். அதேவேளை இந்திய பிரதமராக இருக்கும் மோடியையும் நினைத்து பார்க்கிறேன். கடந்த வருடம் பல மாதமாக டில்லியில் விவசாயிகள் போராடினார்கள். அதில் என்பதுக்கு மேற்பட்டவர்கள் இறந்துவிட்டார்கள். ஆனாலும் பிரதமர் மோடியின் மனம் இரங்கவில்லை. விவசாயிகளை சந்திப்பதற்கு அவரால் நேரம் ஒதுக்க முடியவில்லை. நடிகைகளுக்கு நேரம் ஒதுக்கி சந்திக்க முடிந்த மோடியால் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லை என்பது கொடுமைதான். முதலாளிகளுக்காக அயராது பாடுபடும் பிரதமர் மோடி விவசாயிகளுக்காக பாடுபடுவார் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்தான். ஆனாலும் லெனின் காட்டிய வழி விவசாயிகளுக்கு இருக்கிறது. அவர்கள் அதில் பயணம் செய்து மோடிகளை தூக்கி எறிவார்கள். இது நிச்சயம்.

ஜீ தமிழ் "சரிகமப" நிகழ்ச்சியில்

ஜீ தமிழ் "சரிகமப" நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பவதாயினி அவர்கள் தனது தாத்தா தாயக இசைக் கலைஞர் கண்ணன் அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஈழத் தமிழர்களே மறந்துவிட்ட ஒரு தாயக கலைஞரை, உயிருடன் இருக்கிறாரா இல்லையா என தெரியாமல் இருந்த ஒரு வயதான கலைஞரை, அவர் பேத்தி எட்டு கோடி தமிழருக்கு முன்னால் அழைத்து வந்து பெருமைப்படுத்த முடியுமா? ஆம் என நிரூபித்துள்ளார் பேத்தி பவதாயினி. இதைவிட அந்த தாத்தாவுக்கு வேறு என்ன வேண்டும்? வாழ்த்துக்கள்

1983ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

1983ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டிற்கு நிதி உதவி கேட்டு சில போராளிகள் சென்றிருந்தனர். அப்போது அவர்களிடம் “ நானே சாப்பாட்டிற்கு காசு இல்லாமல் கஷ்டப்படுகிறேன். உங்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும?;” என சிவாஜி கணேசன் கேட்டார். பெரும் உதவி செய்வார் என நம்பிப்போன அப் போராளிகளுக்கு அவர் தனக்கு சாப்பிடவே காசு இல்லை என்று கூறியது பலத்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பி வரும்போது இதை கவனித்த சிவாஜி கணேசன் மகன் பிரபு அவர்களிடம் பணம் கொடுத்து உதவியதுடன் “அவர் அப்படித்தான். நீங்கள் இனி என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் வாருங்கள்” என கூறினார். சிவாஜி கணேசன் நல்ல நடிகர்தான். ஆனால் அவர் நல்ல தலைவர் இல்லை. அதனால்தான் தமிழக மக்களே அவர் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை நிராகரித்தார்கள். நடிகர் எம்.ஜி.ஆரை சாகும்வரை வெல்ல வைத்த தமிழக மக்கள் சிவாஜி கணேசனை ஒருமுறைகூட வெல்ல வைக்கவில்லை. அப்படிப்பட்ட சிவாஜி கணேசனைப்பற்றி ஆய்வு செய்து நூல் எழுதி அதனை யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிடுகிறார்கள். அதற்கு மகன் ராம்குமாரை அழைத்துள்ளனர். சிவாஜி கணேசன் சொத்துக்கு சண்டைபோட்டு நீதிமன்றத்தில் இருக்கும் பிள்ளைகளை அழைத்து நூல் வெளியீடு செய்யும் நிலைக்கு யாழ் பல்கலைக்கழகம் ஏன் சென்றுள்ளது என்று புரியவில்லை?

பதவிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு

பதவிக்கு வந்ததும் பூரண மதுவிலக்கு என்றார்களே. இப்ப எப்படி திருமண மண்டபங்களில் மதுவுக்கு அனுமதி அளிக்கிறார்கள்? உஷ்! இப்படி கேட்டா அப்புறம் பாஜக உள்ளே வந்திடும். எதிர்க்கட்சியில் இருக்கும்போது 12 மணி நேர வேலை சட்டத்தை எதிர்த்தார்களே, இப்ப எப்படி அதை கொண்டு வருகின்றார்கள்? உஷ்! இப்படி கேட்டா அப்புறம் பாஜக உள்ளே வந்திடும். #திராவிட உருட்டு

ஜீ டிவி “சரிகமப” நிகழ்வில் கிடைத்த

ஜீ டிவி “சரிகமப” நிகழ்வில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தாய் மண்ணை நினைவு கூர்ந்து பெருமை சேர்த்துள்ளார் மாதுளானி. வாழ்த்துகளும் பாராட்டுகளும். தாய் மண்ணின் அருமை புரிய வேண்டுமென்றால் ஒரு நாள் அகதியாக வாழ்ந்து பார் என்பார்கள். பிறந்தது முதல் லண்டனில் வாழ்ந்து வரும் மாதுளானிக்கு எந்தளவு தாய் மண் ஏக்கம் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தாய் மண்ணை நேசிப்பதில் ஈழத் தமிழருக்கு நிகராக உலகில் வேறு எவரும் இல்லை என டி.ஆர்.ராஜேந்தர் பாராட்டியுள்ளார். நன்றிகள்.

தந்தை செல்வா பெரியாரை சந்தித்து

தந்தை செல்வா பெரியாரை சந்தித்து ஈழத் தமிழருக்கு ஆதரவு தருமாறு கோரியபோது தன்னால் முடியாது என்று கூறிவிட்டார். பெரியார் பரவாயில்லை முகத்திற்கு நேரே மறுத்து விட்டார். ஆனால் கலைஞர் ஆதரவு தருவதாக கூறிவிட்டு 2009ல் முதுகில் குத்திவிட்டார்.

மறக்க முடியாத நாள் 27.04.2009

மறக்க முடியாத நாள் 27.04.2009 கடற்கரையில் மனைவி மற்றும் துணைவி சகிதம் கலைஞர் 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்த நாள். போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்று அவர் அறிவித்த பின்னரே நாற்பதாயிரம் ஈழத் தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். இதுபற்றி கேட்டபோது மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றார்

இன்று எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள்.

இன்று எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள். இதே நாளில்தான் கருணாநிதி இடைவேளை உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்தை குறித்து பிரபஞ்சன் "இரண்டு உணவு இடைவெளிக்குள் ஒருவர் உண்ணாவிரதத்தை கடைபிடிக்கிறாரென்றால் இந்தியாவில் அனைவரும் ஒவ்வொரு நாளும் உண்ணாவிரதமிருக்கின்றனர்." என்றார்

ஒரு எலும்பிற்காக ஒரு நேர்மையான மனிதன்

ஒரு எலும்பிற்காக ஒரு நேர்மையான மனிதன் தன்னை ஒருபோதும் நாயாக்கிக் கொள்ளமாட்டான் - வியட்நாம் பழமொழி

கடலில் தூக்கி எறிந்தால்

கடலில் தூக்கி எறிந்தால் கட்டுமரமாகி வந்து காப்பேன் என்றார் உலகத் தமிழின தலைவர். அவர் காப்பாற்ற வரவில்லை. மாறாக டில்லி சென்று தன் பிள்ளைகளுக்கு அமைச்சு பதவி பெற்றார். இது பற்றி கேட்டபோது "சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் மரண ஓலம் கேட்டால் இன்னொரு வீட்டில் மங்கல ஒலி கேட்கும்" என்றார்

பேயைப் பார்த்தேன் என சொல்லிப் பாருங்கள்

பேயைப் பார்த்தேன் என சொல்லிப் பாருங்கள் பலர் நம்புவார்கள். கடவுளைப் பார்த்தேன் என சொல்லிப் பாருங்கள் ஒருத்தனும் நம்பமாட்டான். நல்ல செய்தி வரும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் சம்பந்தர் ஐயா. அதை யாராவது நம்புகிறார்களா?

கச்சதீவு புத்தர் சிலை அகற்றம்

•கச்சதீவு புத்தர் சிலை அகற்றம் நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது என்ன? இரண்டு விடயங்களை நாம் உணர்ந்து கொள்ள முடியும். முதலாவது - தமிழ் மக்கள் அனைவரும் ஒருமித்து குரல் கொடுத்தால் சிங்கள அரசு நிறுவும் புத்தர் சிலைகளை அகற்ற முடியும். இரண்டாவது - புத்தர் சிலையை அகற்ற ஈழத்து சிவசேனை கும்பல் குரல் கொடுக்காது. புத்தர் சிலை அகற்ற யாழ் இந்திய தூதர் உதவ மாட்டார்.

என்னதான் இருந்தாலும் திமுக வில்

என்னதான் இருந்தாலும் திமுக வில் எனக்கு பிடித்த குணம் என்னவென்றால், யார் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினாலும் அவர்கள் அதை ஒருபோதும் மறுத்ததில்லை. மாறாக நிரூபியுங்கள் என்றே கூறுவார்கள். அவர்களின் அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. கலைஞர் குடும்பத்திற்கு 45000கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்டால் அதற்கு பதில் தர மாட்டார்கள். மாறாக, சீமானுக்கு வீட்டு வாடகை கட்ட பணம் எங்கிருந்து வருகின்றது என்று கேட்பார்கள். மூப்பனார் வீட்டு திருமணத்தில் 600 ரூபாய்க்கு டான்ஸ் ஆடிய ஜெயா அம்மையாருக்கு 30000கோடி ரூபா சொத்து எப்படி வந்தது என்று கேட்டால் பதில் வராது. மாறாக, ரயில் டிக்கட் எடுக்காமல் மஞ்சள் பையுடன் வந்த கலைஞர் குடும்பத்திற்கு எப்படி 45000 கோடி ரூபா சொத்து வந்தது என்று கேளுங்கள் என்று ஜெயா அம்மையார் பதில் கூறுவார். மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்த இவர்களின் சொத்து மதிப்பு கோடிக்கணக்காக உள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு 6.5லட்சம் கோடி ரூபா கடனில் உள்ளது. எப்பறடா?

ஒரு போரை நிறுத்த தேவையான பொருட்கள்

ஒரு போரை நிறுத்த தேவையான பொருட்கள் ஒரு கடற்கரை ஒரு கட்டில் ஒரு கூலர் ஒரு மனைவி ஒரு துணைவி என்று உலகிற்கு நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி அது சரி இவற்றை பயன்படுத்தி உக்ரைன் போரை ஏன் திராவிட முதல்வர் ஸ்டாலின் நிறுத்தக்கூடாது?

கலைஞர் உண்ணாவிரதம் இருந்து

கலைஞர் உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்தினார் என்று அவர்கள்தான் எழுதுகிறார்கள். போர் நிறுத்தப்படவில்லை. அதற்கு பிறகுதான் 40ஆயிரம் அப்பாவி தமிழர் கொல்லப்பட்டனர் என்ற உண்மையை நாம் கூறினால் உடனே “அகதி நாயே கலைஞரை ஊ - பாவிட்டால் உனக்கு தூக்கம் வராதா” என கேட்கிறார்கள் அப்புறம் அவர்களே கலைஞர் நான்கு நாட்களில் ஈழத் தமிழருக்கு விடுதலை பெற்றுக்கொடுத்ததாக போஸ்டர் அடிக்கின்றனர் அதற்கு “கலைஞர் பெற்றுக்கொடுத்த விடுதலை எது? அது இப்ப எங்கே இருக்கு?” என நாம் கேட்டால் “அகதி நாயே இன்னொரு நாட்டு அரசியலை ஏன் பேசுகிறாய் உன் நாட்டு மகிந்தவை ஊ-பு” என்கிறார்கள். இதுகூடப் பரவாயில்லை.ஈழத் தமிழரைக் கொன்ற திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கும் அந்த 32 அமைப்புகளிடம் என்ன இப்படி பேசுகிறார்களே என்று கேட்டால் “உஷ்! பாஜக உள்ளே வந்திடும்” என்கிறார்கள். என்ன கொடுமை இது?