Friday, June 30, 2023

யாருக்கும் வெட்கம் இல்லை

• யாருக்கும் வெட்கம் இல்லை லண்டன் வந்த ஈழத் தமிழ் பெண் குடியுரிமை பெற்று உதவி மேயராகியுள்ளார். அவர் அருகில் உட்கார அண்ணாமலை அவர்கள் வெட்கப்படவில்லை. இந்தியா சென்ற ஈழத் தமிழர்கள் 40 வருடங்களாக குடியுரிமை இன்றி அகதிகளாகவே உள்ளனர். அந்த இந்திய அரசின் பிரதிநிதி அண்ணாமலை அவர்களின் அருகில் உட்கார அவ் உதவி மேயர் பெண்ணும் வெட்கப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்குமாறு கோராத அண்ணாமலை, இலங்கையில் தமிழருக்கு தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு இந்திய அரசிடம் கோரப் போகிறாராம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப்போறன் என்றானாம்.

2317வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

2317வது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் தொடர்கிறது. புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடியதால் நசுக்கியதாக கூறும் இலங்கை இந்திய அரசுகள் அகிம்சை வழியில் போராடும் இவர்களுக்கு இதுவரை ஒரு பதில் கூறவில்லை. தமிழ்நாடு பாஜக தலைவராக தமிழிசை இருந்தபோது யாழ்ப்பாணம் வந்திருந்தார். இவ் உறவுகள் உண்ணாவிரதம் இருக்கும் பந்தல் வழியாகவே சென்றார். ஆனால் இவர்களை கண்டுகொள்ளவில்லை. அடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் வந்தார். அவரும் இவ் உறவுகளை கண்டு கொள்ளவில்லை. இவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் இவர்களை சந்தித்து ஒரு ஆறுதலாவது தெரிவித்திருக்கலாம். சுமார் ஆறுவருடங்களாக வீதியில் உட்கார்ந்து அகிம்சை வழியில் போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காதவர் ஒரு ஆறுதல் கூட சொல்ல இரங்காதவர் ஈழத் தமிழருக்கு தீர்வு பெற்றுத் தரப் போகிறார் என்று லண்டனில் சிலர் உறவுப் பாலம் கட்டுகின்றனர். என்னே கொடுமை இது? தமிழனுக்கு மூளை இல்லை என்று நினைக்கின்றனரா அல்லது மூளை முழங்காலில் இருக்கிறது என்று கருதுகின்றனரா?

செய்தி – குஜராத்தில் மோடி அரசு கட்டிய

செய்தி – குஜராத்தில் மோடி அரசு கட்டிய பாலம் இடிந்து விழுந்தது. அங்கிள்! நீங்களும் அண்ணாமலை அங்கிளும் கட்டுற (உறவு) பாலத்திற்கு ஒன்னும் ஆபத்தில்லைதானே? 😂😂

இந்த தாயின் விருப்பம் நிறைவேறுமா?

இந்த தாயின் விருப்பம் நிறைவேறுமா? இந்த தாயின் மீது இந்திய அரசு இரக்கம் காட்டுமா? தன் மகன் வருவான் என்று இன்னும் எத்தனைநாள் இந்த தாய் காத்திருக்க வேண்டும்? இந்த அவல நிலைக்கு ஒரு முடிவு வந்திடாதா? எந்தவொரு நீண்ட இரவுக்கும் ஒரு விடிவு உண்டு. ஆனால் இந்த தாய்க்கு 33 வருடமாகியும் விடிவு வரவில்லையே? அப்படி இந்த தாய் செய்த பாவம் என்ன தமிழினத்தில் பிறந்ததைத் தவிர?

இந்தியாவில் பாபர் மசூதியை இடித்ததுபோல்

இந்தியாவில் பாபர் மசூதியை இடித்ததுபோல் தையிட்டியில் உள்ள புத்த விகாரையை உடைப்போம் என்று ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம் அவர்கள் பேசியுள்ளார். இவ்வாறு பேசிய மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஒரு பௌத்த தலைவர்கூட இதற்கு கண்டனமும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு நன்கு தெரியும் இவர் விகாரையை உடைக்கப்போவதில்லை என்று. விகாரைக்கு ஒரு கல்லுக்கூட எறிய மாட்டார் என்றும் அவர்களுக்கு தெரியும். கச்சதீவில் புத்தர் சிலை வைக்கப்பட்டபோது அதனை உடைப்போம் என்று மன்னார் ஆயர் அறிக்கைவிட வில்லை. மாறாக பேச வேண்டியவர்களுடன் பேசி கமுக்கமாக புத்தர் சிலையை அகற்ற வைத்துவிட்டார். அதுபோல் தையிட்டி விகாரை அகற்ற வேண்டும் என்று உண்மையில் சச்சிதானந்தம் அவர்கள் விரும்பினால் இந்திய அரசிடம் கூறி அகற்ற முடியும். ஏனெனில் இன்று பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சிங்கள அரசுக்கு மிகப் பெரும் உதவி வழங்கிவருவது இந்திய அரசே. எனவே விகாரை அகற்றாவிட்டால் உதவிகள் யாவும் நிறுத்தப்படும் என இந்திய அரசு ஒரு மிரட்டல் விட்டால் போதும், அடுத்த நிமிடம் சிங்கள அரசு ஆடிப் போய்விடும். ஒருவேளை இந்திய அரசு இதில் அக்கறை காட்டவில்லை என்றால் அதை வெளிப்படையாக அறிவித்து இனி இந்திய அரசை ஆதரிப்பதை சச்சிதானந்தம் அவர்கள் நிறுத்த வேண்டும். அதன்பின்பு தையிட்டி விகாரையை உடைக்க சச்சிதானந்தம் அவர்கள் முன்வந்தால் அதற்குரிய அனைத்து செலவையும் ஏற்றுக்கொள்ள நாம் தயார்.

இலங்கையில் பிரிந்து செல்வதற்கான உரிமை

இலங்கையில் பிரிந்து செல்வதற்கான உரிமை மாகாணசபைக்கு இல்லை. இந்தியாவில் பிரிந்து செல்வதற்கான உரிமை மாநிலங்களுக்கு இல்லை. இந்த ஒன்றிணைப்பு சுதந்திரமானது இல்லை என்று லெனின் கூறுகின்றார். இதையே தமிழ்த்தேசியவாதிகள் கூறினால் அவர்களை பிரிவினைவாதிகள் என்று (போலி)கம்யுனிஸ்டுகள் கூறுகின்றனர். சீமான் வைக்கும் தமிழ்த்தேசியம் இனவாத தேசியம் என்றும் அதனால் ஆதரிக்க முடியாது என்று (போலி) கம்யுனிஸ்டுகள் கூறுகின்றனர். அப்படியென்றால் தோழர் தமிழரசன் மார்க்சிய அடிப்படையில் பாட்டாளிகள் தலைமையில் தமிழ்த்தேசிய விடுதலையை முன்வைத்தபோது அவரையும் இனவாதி என்றுதானே முத்திரை குத்தினார்கள்.

Tuesday, June 27, 2023

இந்தியாவுக்காக விளையாடி பதக்கம் வென்றவர்கள்

இந்தியாவுக்காக விளையாடி பதக்கம் வென்றவர்கள் தமக்காக இந்திய அரசுடன் போராடி தோற்றுவிட்டார்கள். ஒருபுறம் புதிய பாராளுமன்றத்தை திறந்து தன் ஜனநாயகம் குறித்து பெருமை பேசுகிறது இந்திய அரசு. மறுபுறத்தில் அந்த அரசின் கீழ் உள்ள பெண்கள் தம்மீதான பாலியல் சீண்டல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி போராட்டம். வெட்கம்!

செய்தி - ஈழத்து சிவசேனைத் தலைவர்

செய்தி - ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு அவுஸ்ரேலியாவில் பாராட்டுவிழா. நாய் நன்றி உள்ள ஒரு மிருகம். நாய்களில் பல வகை இருந்தாலும் எல்லா வகை நாயும் தன் எஜமானுக்கு எப்போதும் விசுவாசமாக இருக்கும் அதற்கு பிஸ்கட் போடுகிற ஒவ்வொரு முறையும் நன்றாக தன் வாலை ஆட்டும். நடுக்கடலில் விட்டாலும் நாய் நக்கியே குடிக்கும் என ஒரு பழமொழி உண்டு.

தான் இறப்பதற்கு முன்னர் தமிழரசுக்கட்சிக்கு தன்னைப்போல்

தான் இறப்பதற்கு முன்னர் தமிழரசுக்கட்சிக்கு தன்னைப்போல் புத்தியுள்ள ஒரு தலைவரை தெரிவு செய்ய சம்பந்தர் ஐயா விரும்பினார். அதனால் தலைவர் பதவிக்கு ஆசைப்படும் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராசாவின் அறிவை சோதிக்க தன் அலுவலகத்திற்கு வரும்படி அழைத்தார். முதலில் வந்த மாவை சேனாதிராசாவிடம் வெறும் பத்து ரூபாவைக் கொடுத்து தனக்கு ஒரு பென்;ஸ் கார் வாங்கி வரும்படி சம்பந்தர் ஐயா கூறினார். மாவை சேனாதிராசாவும் சரி என்று கூறி பத்து ரூபாவை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார். அடுத்து சுமந்திரனிடம் தன் வீட்டுக்கு சென்று தான் அங்கு இருக்கிறேனா என பார்த்து வரும்படி சம்பந்தர் ஐயா கூறினார். சுமந்திரனும் சரி என்று கூறிவிட்டு வெளியே வந்தார். வெளியே வந்த மாவை சேனாதிராசா சுமந்திரனிடம் “ ஐயாவுக்கு வயசாகிவிட்டது. அதனால இன்று ஞாயிற்றுக்கிழமை கடை திறக்காது என்பதுகூட மறந்துவிட்டது” என்றார். அதற்கு சுமந்திரன் “ ஆமாம். ஐயாவுக்கு அறளை பெயர்ந்துவிட்டது. தான் வீட்டில் இருக்கிறேனா என போன் அடித்து கேட்கலாம். அதைவிடுத்து என்னை போய் பார்க்கும்படி கூறுகின்றார்” என்றார். சரி. இதை பொறுமையாய் படித்தவர்களிடம் ஒரு கேள்வி. இந்த இருவரில் யார் புத்திசாலி என்று சம்பந்தர் ஐயா முடிவு செய்திருப்பார்? குறிப்பு - இது ஒரு நகைச்சுவைப் பதிவு. எனவே சுமந்திரன் தம்பிகள் கோபம் கொள்ள வேண்டாம்.😂

வன்மையான கண்டனங்கள்.

• வன்மையான கண்டனங்கள். இந்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று மீண்டும் என் டிவிட்டர் பதிவுகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. நான் சட்டவிரோதமாக ஏதும் எழுதியிருந்தால் தாராளமாக என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதைவிடுத்து என் பதிவுகள் எல்லாவற்றையும் தடை செய்வது என்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.

சீமான் மற்றும் திருமுருகன்காந்தி

சீமான் மற்றும் திருமுருகன்காந்தி உட்பட பலரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டமைக்கு தமிழக அரசு காரணம் இல்லை என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி இவர்களின் டிவிட்டர் கணக்குகளை முடக்கியமைக்கு தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார். கருத்துச் சுதந்திரந்திற்காக குரல் கொடுத்தமைக்கு தமிழக முதல்வருக்கு நன்றிகளும் பாராட்டுகளும். முதலாளித்துவம் வழங்குகின்ற அற்ப ஜனநாயகத்தைக்கூட மறுக்கின்ற இந்திய அரசின் செயல் பாசிசத்திற்கு ஒப்பானதாகும். ஒரு எம்.எல்.ஏ பதவிகூட இல்லாத சீமான் மற்றும் திருமுருகன் காந்தி போன்றவர்களின் கருத்தைக்கூட அனுமதிக்க இந்திய அரசு மறுக்கிறது. ஆனால் சீப்பை ஒளித்துவைத்தால் கல்யாணம் எப்படி நிறுத்த முடியாதோ அதேபோல டிவிட்டரை தடை செய்வதால் இவர்களின் குரலை அடக்க முடியாது என்பதை இந்திய அரசு விரைவில் உணர்ந்து கொள்ளும். அது சரி, சாதாரண தனிநபரான எனக்கு ஏன் இந்திய அரசு அச்சம் கொள்கிறது? என்னுடைய டிவிட்டரை ஏன் தடை செய்கிறது?

அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார்

அவர் தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார் ஆனால் ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டபோது அது இன்னொரு நாட்டு விடயம் என்றார். அவர் தன்னை கடலில் வீசி எறிந்தால் கட்டுமரமாகி வந்து தமிழனுக்கு உதவுவேன் என்றார். ஆனால் ஈழத்தில் தமிழன் தத்தளித்தபோது கட்டு மரமாகி வந்து உதவுவார் என நம்பினோம். கடைசிவரை அவர் வரவேவில்லை. 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்றார். ஆனால் அதன் பின்பும் தமிழர் கொல்லப்படுகிறார்களே என்று கேட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்றார். பொதுவாக பதவி கொடுக்காதவர்களுக்கு தன் இதயத்தில் இடம் கொடுப்பதாக கூறுவார். ஆனால் தத்தெடுத்த அகதிச் சிறுவன் மணிக்கு அந்த இதயத்திலும் இடங்கொடுக்காமல் கொன்று விட்டார். பக்கத்தில் மனைவி, துணைவி என்று இரண்டு பேரை வைத்துக் கொண்டு கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழன் பண்பாடு என்று பேசுவார். ஈழத்தில் பல்லாயிரம் தமிழர் மாண்டிருக்க உங்கள் பிள்ளைகளின் பதவி எற்பு விழா தேவையா என்று கேட்டால் சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் செத்தவீடு நடக்கும்போது பக்கத்து வீட்டில் கலியாணம் நடந்தது என்பார். வரலாறு அவரை பகுத்தறிவு பகலவன் என்று கூட எழுதிச் செல்லலாம். ஆனால் ஈழத்தமிழர் அவரது துரோகத்தை ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். என்ன அவர் இறந்த பின்பும் திட்டுகிறீர்களே என யாராவது கேட்கக்கூடும். என்னசெய்வது மழை விட்டும் தூவானம் விடவில்லையே. குறிப்பு - கலைஞர் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதனால் நாமும் அதிகமாக எழுதமால் சுருக்கமாக திட்டியுள்ளோம்.

இனப் படுகொலையில் கலைஞர் பங்கு என்ன?

இனப் படுகொலையில் கலைஞர் பங்கு என்ன? கலைஞர் வெறும் மாநில முதலமைச்சர்தான். அவருக்கு இன்னொரு நாட்டில் நடக்கும் யுத்தத்தை நிறுத்தும் அதிகாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றார்கள். இன்னும் சிலர், கலைஞர் மட்டுமல்ல இந்திய அரசே நினைத்தாலும் யுத்தத்தை நிறுத்தியிருக்க முடியாது என்கிறார்கள். ஆனால், இந்தியாவுக்காகவே யுத்தத்தை நடத்தினோம் என்று மகிந்த ராஜபக்சா கூறிய போது இந்திய அரசோ அல்லது இந்த இவர்களோ ஏன் அதை மறுக்கவில்லை? சரி. பரவாயில்லை. இந்தியாவின் உதவி இல்லையேல் எம்மால் யுத்தத்தில் வென்றிருக்க முடியாது என்று கோத்தபாயா கூறினாரே. அப்போது அதை ஏன் இந்திய அரசோ அல்லது இவர்களோ மறுக்கவில்லை? சரி. பரவாயில்லை. யுத்தத்தை நிறுத்த இந்தியா விரும்பவில்லை. புலிகள் அழியும்வரை யுத்தம் தொடர வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக இருந்தது என்று ராணுவ தளபதி சரத்பொன்சேகா கூறியிருக்கிறாரே. இதற்கு இவர்கள் என்ன கூறப் போகிறார்கள்? சரி. அதெல்லாவற்றையும் விடுவோம். நாராயணனும் சிவசங்கர்மேனனும் ஒவ்வொரு முறையும் கொழும்பு சென்று திரும்பும்போது சென்னை வந்து கலைஞர் கருணாநிதியை எதற்காக சந்தித்தனர்? எந்த அதிகாரமும் இல்லாத முதலமைச்சரிடம் இவர்கள் சந்தித்து என்ன பேசினார்கள்? கலைஞரிடம் திருக்குறளுக்கு விளக்கம் கேட்க சந்தித்தார்கள் என்று கூறப்போகிறார்களா? பிரபாகரனை கைது செய்யும்போது கௌரவமாக நடத்த வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி அறிக்கை விட்டிருந்தார். பிரபாகரனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்படப்போகின்றது என்பது எந்தவித அதிகாரமும் இல்லாத முதலமைச்சரான கலைஞருக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது? இறுதி நேரத்தில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் கலைஞருடன் பேசக் கேட்டபோது “பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் கூறுங்கள்” என்று கனிமொழி கூறினாரே. அப்போதாவது கலைஞர் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று நடேசனிடம் கூறியிருக்கலாமே ? மாறாக கனிமொழி மூலம் வெள்ளைக் கொடி பிடித்துக்கொண்டு சரண்அடையும்படி எந்த அதிகாரமும் இல்லாத கலைஞர் ஏன் எற்பாடு செய்தார்? குறைந்தபட்சம் சரணடையும்போது கொல்லப்படப் பொகிறீர்கள் என்பதையாவது இந்த எந்த அதிகாரமும் இல்லாத முதலமைச்சர் நடேசனிடம் கூறியிருக்கலாமே? மத்திய அரசுடன் சேர்ந்து இனப்படுகொலைக்கு துணை போனதுடன் தமிழகத்தில் எழுந்த ஈழத் தமிழருக்கான ஆதரவு நிலையினையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கியவர் எந்த அதிகாரமும் இல்லாத இந்த முதலமைச்சர் கருணாநிதி. இந்த விபரங்களை தெரியாத தமிழக அப்பாவி உடன்பிறப்புகள் கலைஞரை ஆதரிப்பது புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் நன்கு விபரம் தெரிந்த சில ஈழத் தமிழர் கலைஞரை நியாயப்படுத்துவதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை

தியாகி சிவகுமாரன் 49வது நினைவு தினம்.

•தியாகி சிவகுமாரன் 49வது நினைவு தினம். (05.06.1974) போராளிகள் புதைக்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். அவர்களின் மரணங்கள் பல புதிய போராளிகளை தோற்றுவிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் தியாகி சிவகுமாரனின் மரணம். ஆம். அவரது மரணம் பல தமிழ் இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடவைத்தது. சிவகுமாரன் தமிழீழத்திற்காக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அதற்காக களப்பலியான முதல் வீரர் எனக் குறிப்பிடக்கூடியவர். சிவகுமாரன் நம்பிய த.வி.கூட்டனி தலைவர்கள் தரப்படுத்தலுக்கு எதிராக இளைஞர்களை போராடும்படி தூண்டினார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். சிவகுமாரன் விரும்பியிருந்தால் நன்கு படித்து பட்டம் வாங்கி நல்ல உத்தியோகத்தையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். அல்லது மற்றவர்கள் போல் வெளிநாட்டுக்கு சென்று பாதுகாப்பாக இருந்திருக்க முடியும். ஆனால் அவரோ ஏற்கனவே பல முறை கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்திருந்தாலும் தொடர்ந்து தமிழ் மக்களுக்காக போராடி மரணித்தார். எனவேதான் அவர் தியாகி சிவகுமாரன் என அழைக்கப்படுகிறார். பொலிசாரின் நெருக்கடியை அடுத்து சிவகுமாரன் சிலகாலம் இந்தியா தப்பிச் செல்ல விரும்பினார் என்றும் ஆனால் வள்ளம் ஓட்டிகள் கேட்ட பணம் கொடுப்பதற்கு அவரிடம் வசதி இருக்கவில்லை என அறியவருகிறது. அவர் நம்பிய த.வி.கூ தலைவர்கள் கூட அவருக்கு இந்த பணத்தை கொடுத்து உதவவில்லை. எனவேதான் அவர் வேறு வழியின்றி வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தார் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது. வங்கியில் பணம் கொள்ளையடிக்க முயற்சி செய்தபோது பொலிசார் சுற்றி வளைத்துவிட்டார்கள். தப்பிக்க முடியாத நிலையில் வேறு வழியின்றி அவர் சயனைட் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். எமது போராட்டத்தில் களப்பலியான முதல் போராளி என்ற பெருமை அவருக்கே சாரும். சிவகுமாரனுக்கு உதவி செய்யாமல் யார் ஏமாற்றினார்களோ அதே தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சியினர் அவர் தியாகத்தை கொஞ்சம்கூட வெட்கம் இன்றி தமது பிரச்சாரத்திற்கு நன்கு பயன் படுத்திக்கொண்டனர். தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றனர். பதவி பெற்றபின் சிவகுமாரின் பெயரை மறந்துவிட்டனர். ஆனால் வரலாறு அவர் பெயரை பொறித்து நிற்கிறது. தியாகி சிவகுமாரனுக்கு வீர வணக்கம்

தியாகி சிவகுமாரனே!

தியாகி சிவகுமாரனே! மீண்டும் வந்து பிறந்துவிடாதே. பிறந்தாலும் தமிழ் இனத்திற்காக போராடிவிடாதே. ஏனெனில் இது தியாகிகள் துரோகிகளாகவும் துரோகிகள் தியாகிகளாகவும் மாறும் காலம் நீ கொல்ல முயன்ற துரையப்பா நல்லவராம் அவரைக் கொன்றவர்கள் வன்முறையாளர்களாம். துரையப்பாவை துரோகி என்று யார் உனக்கு சொல்லி தந்தார்களோ அவர்களே இப்ப கூறுகிறார்கள் துரையப்பாவை சுட்டது தவறாம். தமிழாராய்ச்சி மாநாட்டில் மக்கள் இறப்பதற்கு யார் காரணம் என்று என்று நீ கோவப்பட்டாயோ அவர்களுடன் சேர்ந்து வாழ்வது தான் செய்த பாக்கியம் என்று கூறுபவரே இப்போது தமிழினத்தின் தலைவராக இருக்கிறார். யார் உனது போட்டோவைக் காட்டி தேர்தலில் வென்றார்களோ அவர்களே இப்போது கூறுகிறார்கள் தாங்கள் ஒரு போதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லையாம். எனவே தயவு செய்து மீண்டும் பிறந்துவர எண்ணிவிடாதே

தன்னை தமிழின தலைவர் என்றவர்

தன்னை தமிழின தலைவர் என்றவர் காவல்துறை கைது செய்ய வந்தபோது “ஐயோ என்னை காப்பாத்துங்க” என்று அலறினார். ஆனால் போராளி சிவகுமார் மரணமடையும்போது கூறிய இறுதி வார்த்தை “ நான் மீண்டும் பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்” தமிழினத்திற்கு துரோகம் செய்த அந்த தலைவருக்கு நூற்றாண்டு விழா கொழும்பில் கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழினத்திறந்காக போராடி மடிந்த தியாகி சிவகுமாரனை மறந்துவிட்டார்களே?

அவரை கறுவாக்காட்டு கணவான் என்றார்கள்

அவரை கறுவாக்காட்டு கணவான் என்றார்கள் போராட்ட களத்திற்கு வரமாட்டார் என்றார்கள் தந்தையை பறிகொடுத்த பின்பும் தைரியமாக வந்து மக்களுடன் மக்களுக்காக களத்தில் நிற்கிறார் பூனை கறுப்பா சிவப்பா என்பது முக்கியம் இல்லை. அது எலி பிடிக்கின்றதா என்பதே முக்கியம் மக்கள் பிரதிநிதி எந்த கட்சி என்பது முக்கியம் இல்லை அவர் மக்களுக்காக போராடுகின்ற பிரதிநிதியா என்பதே முக்கியம் குறிப்பு – மக்கள் பிரதிநிதி (எம்.பி) கஜேந்திகுமார் பொன்னம்பலம் சிங்கள பொலிசாரால் அச்சுறுத்தப்;பட்டமை வன்மையான கண்டனத்திற்குரியது.

நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும்

"நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான்" - மாவோ அன்று தந்தை செல்வாவின் அகிம்சை வழிப் போராட்டம் சிங்கள அரசால் நசுக்கப்பட்டதாலே வேறு வழியின்றி ஆயுதப் போராட்டம் பரிணமித்தது. இன்றும் தமிழ் மக்களின் அகிம்சை வழிப் போராட்டங்கள் சிங்கள அரசால் அடக்கி ஒடுக்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களில் முப்பது கைதுகள் நடந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் சுகாஸ் கூறுகின்றார். மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார்கள் எனில் சாதாரண மக்களின் நிலை என்ன? ஒருபுறம் தமிழர் நிலங்களில் உள்ள இந்து ஆலயங்களை அழித்து புத்த விகாரைகள் கட்டுகின்றனர். இன்னொருபுறம் தமிழர் நிலங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிகழ்த்துகின்றனர். இதற்கு எதிராக தமிழ் மக்கள் மேற்கொள்ளும் அகிம்சை வழியிலான போராட்டங்களை நசுக்குகின்றனர். வேறு வழியின்றி மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலையை தமிழ் மக்கள் மீது திணிக்கின்றனர்.

தோசை தமிழரின் உணவு இல்லை

தோசை தமிழரின் உணவு இல்லை என்று சிலர் கூறுகின்றார்கள். ஆனாலும் பல தமிழர்களின் பிடித்த உணவாக தோசை இருக்கிறது. எனக்கு பிடித்த 3 உணவு எவை எனில் முதலாவது தோசை, இரண்டாவது தோசை மூன்றாவதும் தோசையே. அந்தளவுக்கு எனக்கு தோசை பிடிக்கும். நான் பல நாடுகளில் பல கடைகளில் தோசை சாப்பிட்டிருக்கிறேன். ஆனாலும் பருத்தித்துறையில் வட்டப்பாறை கடலில் குளித்துவிட்டு சிவன்கோவிலடியில் உள்ள அந்த வயதான பெண்ணின் கடையில் சாப்பிட்ட தோசைபோல் ருசியான தோசை இன்னும் சாப்பிடவில்லை. பச்சை, சிவப்பு மஞ்சள் என்ற கலரில் விதம்விதமான சம்பலுடன் சுடச்சுட சாப்பிட்ட அந்த தோசையின் ருசி இன்னும் நாக்கில் இருக்கிறது. எனது பலவீனம் - தோசை

விடுதலைப்புலிகள் இயக்கத்தை

விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பார்த்து அதேபோல் விடுதலைக்குயில்கள் என்னும் பெயரில் ஒரு இயக்கத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்தவர் சுபவீ அந்த அமைப்பின் செலவுகளுக்காக ஒரு சேட்டு நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதை ஒரு சாதாரண கொள்ளையாக நினைத்த பொலிசார் அதில் சம்பந்தப்பட்ட சில இளைஞர்களை பிடித்து விசாரணை செய்தபோது இது ஒரு இயக்கத்திற்காக நடத்திய கொள்ளை என்பதும் அதன் தலைவர் சுபவீ என்பதையும் அறிந்தனர். சுபவீயை பொலிசார் கைது செய்ய முயன்றபோது அந்த வழக்கில் இருந்து சுபவீயைக் காப்பாற்றியவர் கலைஞர். தன்னைக் காப்பாற்றிய கலைஞர் மீது சுபவீ விசுவாசமாக இருப்பது தவறில்லை. ஆனால் அதற்காக அவர் கலைஞர் ஈழத் தமிழருக்கு செய்த துரோகத்தை எல்லாம் நியாயப்படுத்த முனைவது தவறு. லண்டனில் ஈழத் தமிழர் அதிகமாக வாழும் ஈஸ்ட்காம் நகரில் வந்து கலைஞர் புகழ் பாட இருக்கும் சுபவீ அவர்களிடம் நாம் கேட்க விரும்புவது, 1990ல் கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமை அவர் மகன் ஸ்டாலின் எப்போது மூடுவார்? அதில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை எப்போது விடுதலை செய்வார்? சிறப்புமுகாம் பற்றி பதில் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, கலைஞர் தத்து எடுத்து வளர்த்த அந்த அப்பாவி அகதிச்சிறுவன் மணி எங்கே என்பதற்காவது மனசாட்சியுடன் சுபவீ பதில் தருவாரா?

Chat GPT4 மற்றும் Bard AI பற்றி

Chat GPT4 மற்றும் Bard AI பற்றி கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்படுகிறது. ஆர்வ மிகுதியில் நானும் இவற்றை பயன்படுத்தி பார்க்க முனைந்தேன். முதலில் கலைஞர் தத்தெடுத்த ஈழ அகதிச் சிறுவன் பற்றி அறிய விரும்பினேன். Bard AI தன்னிடம் இது பற்றிய போதுமான தகவல்கள் இல்லை என்றது Chat GPT4 யானது கலைஞர் ஈரான் சென்று கௌரி என்ற பெண்ணை தத்தெடுத்ததாகவும் அப் பெண் படித்து இப்போது மருத்துவராகியுள்ளதாக என்னென்னவோ கம்பி கட்டுற கதை எல்லாம் கூறுகின்றது. அடுத்து கலைஞர் 1990ல் ஆரம்பித்த சிறப்பு அகதிகள் முகாம் பற்றிய விபரங்கள் அறிய விரும்பினேன். ஏனெனில் அப்போது வேலூர் கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்புமுகாமில் கலைஞரின் உத்தரவின் பேரில் பொலிஸ் கமிஷனர் தேவாரம் சுட்டு இரண்டு ஈழ அகதி இளைஞர்கள் இறந்தனர். Chat GPT4 மற்றும் Bard AI இரண்டுக்குமே சாதாரண அகதிமுகாமிற்கும் சிறப்புமுகாமிற்கும் வித்தியாசம் தெரியவில்லை. Chat GPT4 மற்றும் Bard AI இரண்டுமே சாதாரண அகதிமுகாம் பற்றிய சில விபரங்களை மட்டுமே தெரிவிக்கின்றது. யாராவது இவற்றில் இது பற்றி விசாரித்து தகவல்கள் பெற்றிருந்தால் தயவு செய்து எனக்கு பகிருங்கள். குறிப்பு – புதிய தொழில் நுட்பம் பற்றிய இப் பதிவிலும் லாவகமாக கலைஞரைப் புகுத்திவிட்டேன் என யாருக்காவது தோன்றினால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.😂

முள்ளிவாய்க்காலில் அவலத்தை சந்தித்த

முள்ளிவாய்க்காலில் அவலத்தை சந்தித்த சிறுமி சுவிஸ் நாட்டுக்கு அகதியாக சென்றதால் இப்போது மருத்துவ கல்வி பயில்கிறார். தமிழ்நாட்டிற்கு அகதியாக சென்ற குழந்தை கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தன் தந்தையை பார்வையிடுவதற்காக தாயுடன் சேர்ந்து முகாம் வாசலில் உண்ணாவிரதம் இருக்கும் நிலை. கலைஞர் ஈழத் தமிழருக்கு பல நன்மைகள் செய்துள்ளார் என்று கிளப்கவுசில் கதைச்சவன் எவன்டா?

கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை

• கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை பாண்டிபஜார் துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட போராளிகளை இந்திய அரசு இலங்கையிடம் ஒப்படைக்காமைக்கு கலைஞரே காரணம். இந்த நன்றியை ஈழத் தமிழர் மறக்கக்கூடாது என எழுதப்பட்ட பதிவு ஒன்றை சிலர் கொண்டோடித் திரிகின்றனர். யுத்தத்தை ஏன் கலைஞர் நிறுத்தவில்லை என்று கேட்டால் ஒரு மாநில முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை என்று ஒருபுறம் கூறுகின்றனர். ஆனால் மறுபுறம் போராளிகளை ஒப்படைக்காமைக்கு எதிர்க்கட்சியில் இருந்த கலைஞரே காரணம் என்கின்றனர். அப்படியென்றால் இந்தியாவில் ஒரு மாநில முதல்வரை விட எதிர்க்கட்சியில் இருப்பவருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்கிறார்களா? சரி எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இந்த கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது குட்டி மணியை கைது செய்து இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளாரே. அதற்கு இவர்கள் என்ன பதில் கூறப் போகிறார்கள்? அதுகூடப் பரவாயில்லை. ஆனால் இதை எம்.ஜி.ஆர் சுட்டிக்காட்டி கேட்டபோது “ குட்டிமணி போராளி இல்லை. கடத்தல்காரன்” என்று டெலோ தலைவர் சிறீசபாரட்ணம் மூலம் அறிக்கைவிட வைத்தாரே கலைஞர் அந்த கொடுமையை என்னவென்று அழைப்பது? கலைஞரின் துரோகத்தை மறைத்து அவரை நியாயப்படுத்தும் இந் நபர்களின் முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை. ஏனெனில் கூமுட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை.

கேள்வி – சமூகவலைத்தளங்களில் சில திமுக வினர்

கேள்வி – சமூகவலைத்தளங்களில் சில திமுக வினர் ஏன் புலிகளை இழிவாக விமர்சிக்கின்றனர்? பதில் - ஏனெனில் பூனைகளைவிட புலிகள் பலமிக்கவை என்பதை எலிகள் ஒருபோதும் ஒத்துக்கொள்வதில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் தனது அதிகாரம் மற்றும் பண பலத்தை வைத்து ஈழத் தமிழருக்கு தாம் செய்த துரோகத்தை மறைக்க முயல்கிறது அதனால்தான் தன் பினாமிகளை வைத்து இம்முறை இலங்கையில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் கலைஞர் பிறந்தநாளை அது கொண்டாடுகிறது. ஆனால் ஈழத் தமிழர்கள் தம் துரோகத்தை மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என்பதை தெரிந்துகொண்டதும் ஈழத் தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த அது முனைகிறதோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் லண்டனில் ஈழத் தமிழர் அதிகமாக வாழும் ஈஸ்ட்காம் நகரில் அடுத்தடுத்து இரண்டு கலைஞர் பிறந்தநாள் விழாக்களை அது நடத்துகின்றது. எனவே திமுக வின் சதிக்கு பலியாகாமல் ஈழத் தமிழர்கள் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும்.

வன்மையான கண்டனங்கள்

• வன்மையான கண்டனங்கள் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். கஜேந்திகுமார் பொன்னம்பலத்தை அச்சுறுத்திய பொலிசார் கைது செய்யப்படவில்லை. மாறாக அச்சுறுத்தப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுதான் சிங்கள அரசின் சட்ட நீதி?

கீழே உள்ள படத்தைக்காட்டி

கீழே உள்ள படத்தைக்காட்டி மகிந்த ராஜபக்சாவிடம் கருத்து கேட்டால் “ நீருக்குள் தவித்த மீனுக்கு பாம்பு உதவி செய்கிறது” என்று கூறுவார். ஆம். ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழ் மக்களை ஏன் கொன்றீர்கள் என்று கேட்டதற்கு புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்காக தமிழ் மக்களை கொன்றதாக அவர் கூறினார். அதுபோல இப்போது ஒரு ஊடகவியாபாரிக்கு மக்கள் பிரதிநிதி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டிருப்பது ரணில் மற்றும் கஜேந்திரகுமார் சேர்ந்து நடத்தும் நாடகமாக தெரிகிறது. கஜேந்திகுமார் பொன்னம்பலத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை , எம்.பி சிறீதரன் கண்டித்துள்ளார். எம்.பி விக்கினேஸ்வரன் கண்டித்துள்ளார். எம்.பி சாணக்கியன் கண்டித்தள்ளார். எம்.பி சித்தார்த்தன் கண்டித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து சீமான் கண்டித்துள்ளார். ஆனால் ஊடக வியாபாரிக்கு மட்டும் இது நாடகமாக தெரிகிறது. என்னே கொடுமை இது?

இந்தியாவில் கடந்த 40 வருடங்களாக

இந்தியாவில் கடந்த 40 வருடங்களாக அகதிகளாக இருக்கும் தமிழர்கள் சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளனர். அகதிகளுக்கு “ஏதிலிகள்” என்று பெயர் மாற்றியதைத் தவிர வேறு எதை தமிழக அரசு செய்துள்ளது? இலங்கையிலும் இங்கிலாந்திலும் ஈழத் தமிழர் மத்தியில் ஓடி ஓடி கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோர் இந்த அகதிகளுக்கு செய்தது என்ன?

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதால் ஏழு தமிழரையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் தமிழக அரசு அதில் நாலு பேர் ஈழத் தமிழர் என்பதால் சிறப்புமுகாமில் அடைத்துள்ளது. ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்கு மாற்றப்பட்டிருப்பது எப்படி விடுதலையாகும்? அதுவும் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம் ஆகிய சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்குகூட அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சக ஈழத் தமிழ் அகதிகளுடன் சேர்த்து வைக்காமல் தனித்து ஒரு அறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது அவர்களை பிரித்து தனித்து அடைத்து வைப்பதற்காக சிறப்புமுகாமிற்குள் ஒரு அறையை புதிதாக கட்டிக்கொண்டிருக்கின்றது தமிழக அரசு. சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விரும்பினால் அவர்களின் சொந்த செலவில் நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சாந்தன் இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்தும் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அவரை அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. யாழ்ப்பாணத்தில் இருக்கும் சாந்தனின் தாயார் தான் இறப்பதற்கு முன் தன் மகனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என விரும்புகிறார். ஆனால் சிங்கள மக்களுக்கும் சேர்த்து உணவு அனுப்பும்படி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கேட்ட சுமந்திரன், இந்த தாயாருக்கு இரங்கி சாந்தனை அனுப்பி வைக்கும்படி கேட்கவில்லை. இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என அறிக்கை விடும் காசி அனந்தன் ஐயாவும் இந்த நால்வர் இந்துதானே அவர்களை விடுதலை செய்யும்படி குரல் கொடுக்க வில்லை. ஒருபுறம் கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமில் தொடர்ந்து ஈழத் தமிழரை அடைத்து வைக்கிறார் அவர் மகன் ஸ்டாலின். மறுபுறம் ஈழத் தமிழர் மத்தியில் கலைஞர் ஈழத் தமிழருக்கு செய்த நன்மைகள் என்றுகூறி பிறந்தநாள் விழா கொண்டாடுகிறார். என்னே கொடுமை இது?

தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க!

•தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க! 09.06.2023 தோழர் சுந்தரம் அவர்களின் 6வது நினைவு தினம் ஆகும். தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன்! தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன் - காரல் மார்க்ஸ் ஆம். மறைந்த தோழர் சுந்தரம் அவர்களும் ஒரு மாமனிதர்தான். அவர் தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைத்தவர் அல்ல. மாறாக, இறக்கும் வரையில் தன் வாழ்க்கையையும் தன் உழைப்பையையும் மக்களுக்காக முழுமையாக அர்ப்பணித்த ஒரு புரட்சியாளர். தோழர் சுந்தரம் மாக்சிய லெனிய மாசேதுங் சிந்தனைகளை தனது வழிகாட்டியாக கொண்டவர். அவர் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுத்த ஒரு புரட்சியாளர். தோழர் தமிழரசன் மறைவுக்கு பின்னர் தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்நாடு விடுதலைப்படைக்கு தலைமை ஏற்று பரந்து பட்ட மக்களை அணிதிரட்ட அயராது பாடுபட்டவர். 32 வருட தலைமறைவு வாழ்க்கை. அதில் சுமார் பத்து வருடங்கள் சிறை வாழ்க்கை. எத்தனையோ வழக்குகள். சித்திரவதைகள். இத்தனைக்கும் மத்தியில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமின்றி இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் தோழர் சுந்தரம். தோழர் சுந்தரம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஈழத் தமிழர்களை உறுதியாக ஆதரித்தவர். நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத் தமிழருக்கான தமிழக மக்களின் ஆதரவை வெளிப்படுத்தியவர். அத்தகைய தோழர் சுந்தரத்தின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது அஞ்சலிகளையும் செவ் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். தோழர் சுந்தரம் மரணமடைந்தபோது நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.com/2017/06/blog-post_25.html

எத்தனை கிண்டல்கள்

எத்தனை கிண்டல்கள் எத்தனை அவதூறுகள் அத்தனைக்கு மத்தியிலும் அவர் மக்களுக்காக குரல் கொடுக்கிறார் அதனால்தான் மக்கள் அவரை தாங்கிப் பிடிக்கின்றனர். தமக்காக போராடுபவர்களை மக்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை. மற்ற மக்கள் பிரதிநிதிகளும் மக்களுக்காக போராட வழி பிறக்கட்டும்.

ஒருவன் அயோக்கியன்

"ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனை நியாயப்படுத்த முயல்பவன் அவனைவிட பெரும் அயோக்கியன்" - சே முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் சிந்திய குருதியை “ஒண்டிப்புலி சர்பத்” என்று கிண்டல் கவிதை எழுதியவருக்கு விருதி வழங்கி கௌரவிப்போரை என்னவென்று அழைப்பது? பசி கொடுமையானதுதான். ஆனால் அது இந்தளவு கொடுமையானதா?

கலைஞர்தான் வள்ளுவர்.

“கலைஞர்தான் வள்ளுவர். வள்ளுவர்தான் கலைஞர்” – வைகோ பசி இந்தளவு கொடுமையானதா?

சிங்கப்பூர் சென்ற ஈழத் தமிழர்

சிங்கப்பூர் சென்ற ஈழத் தமிழர் அங்கு குடியுரிமை பெற்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிகிறது. கனடா சென்ற இரண்டு ஈழத் தமிழர் அங்கு குடியுரிமை பெற்று எம்.பி யாக முடிந்திருக்கிறது. நோர்வே சென்ற ஈழத் தமிழர் ஒருவர் அங்கு குடியுரிமை பெற்று நகரபிதா (மேயர்) ஆக முடிந்திருக்கிறது. பிரிட்டன் சென்ற ஈழத் தமிழர் குடியுரிமை பெற்று கவுன்சிலராக வர முடிந்துள்ளது. சுவிஸ் , அவுஸ்ரேலியா சென்ற ஈழத்தமிழர்கள்கூட குடியுரிமை பெற்று தேர்தலில் போட்டியிட முடிகிறது. ஆனால் தொப்புள்கொடி உறவுகள் என்று தமிழ்நாடு சென்ற ஈழத் தமிழர் 40 வருடமாக குடியுரிமை இன்றி அகதியாகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் , பங்களாதேஸ் நாடுகளில் இருந்து அகதியாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் இந்துக்களாக இருந்தும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்காவிடினும் பரவாயில்லை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கும் கொடுமையை என்னவென்பது? இது என்ன நியாயம் என்று கேட்டால் உடனே ஓடிவந்து ராஜீவ் காந்தியைக் கொன்றதால்தான் இப்படி நடத்தப்படுவதாக கூறுகின்றனர். ராஜீவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன்னரே கலைஞர் 1990ல் சிறப்புமுகாமை ஆரம்பித்து அகதிகளை அடைத்துவிட்டார் என்பதை இவர்களுக்கு எப்படி புரியவைப்பது?

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை

•பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை என்றும் நினைவில் கொள்வோம்! 11.06.2023 ஜயா பெரும்சித்திரனார் அவர்களின் 28வது நினைவு தினமாகும். 1983ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்பே தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் ஈழப் பிரச்சனை குறித்து அறிந்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னரே இதனை அறிந்து உதவி செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இருந்தனர். அவர்களுள் மிக முக்கியமானவர் பாவலர் ஜயா பெருஞ்சித்திரனார் அவர்கள். அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் ஈழத்தமிழர்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் செய்த உதவிகளும் என்றும் மறக்க முடியாதவை. நான் ஜயா அவர்களுடன் அதிகம் பழகவில்லை. அவருடைய மகன் தோழர் பொழிலன் அவர்களுடனே அதிகம் பழகியிருக்கிறேன். பொழிலன் அவர்களை சந்திக்க சென்ற வேளைகளில் ஜயா அவர்களுடன் பேசியிருக்கிறேன். உணவு உட்கொண்டிருக்கிறேன். அவ்வேளைகளில் ஈழப் பிரச்சனை குறித்து ஆவலுடன் கேட்பார். அவரை மிகவும் கோபக்காரர் என்று சிலர் சொல்லியிருந்தனர். தூய தமிழில் கதைக்காவிடில் ஏசுவார் என்றெல்லாம் சிலர் என்னிடம் கூறியிருந்தனர். ஆனால் இது தவறான கருத்துகள் என்பதை அவருடன் பேசும்போது கண்டு கொண்டேன். ஏனெனில் அவர் என்னுடன் பேசும்போது சினங்கொள்ளாமல் மிகவும் மென்மையாகவே உரையாடினார். தோழர் தமிழரசன் அவர்கள் சென்னை வரும் வேளைகளில் எமது இருப்பிடத்திலேயே தங்குவார். அப்போது அவர் ஜயா அவர்களை சந்தித்த விபரங்களை என்னிடம் கூறியிருக்கிறார். தமிழ்நாடு விடுதலையில் ஜயா அவர்கள் எவ்வளவு ஆர்வமாகவும் உறுதியுடனும் இருந்தார் என்பதை தோழர் தமிழரசன் அவர்களின் மறைவின் போது அவர் எழுதிய அஞ்சலிக் கவிதையில் இருந்து தெரிந்து கொண்டேன். இன்றும்கூட சிலர் சட்டத்திற்கும் சிறைக்கும் பயந்து தமிழ்நாடு விடுதலை பற்றியோ அல்லது தோழர் தமிழரசன் பற்றியோ பேச தயங்கும் நிலையில் அன்று உறுதியாக ஆதரித்து குரல் கொடுத்தவர் ஜயா பெருஞ்சித்திரனார். அவரிடம் சென்று பழகாத ஈழப்போராளி தலைவர்களே இல்லை என்று கூறுமளவுக்கு ஆரம்பத்தில் அனைத்து போராளிகளும் அவரிடம் பழகியுள்ளனர். அவரும் அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகள் செய்தார் என்பதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாத உண்மைகள். முதல் பெண் போராளி ஊர்மிளாவுக்கு நெருக்கடியான நேரத்தில் ஜயா அவர்களே தனது வீட்டில் நீண்ட நாட்கள் வைத்து பாதுகாத்து அனுப்பினார். ஜயா அவர்கள் ஈழத் தமிழர் மீது கொண்டிருந்த அக்கறை, அனுதாபம, செய்த உதவிகள் மறக்க முடியாதவை. ஈழத் தமிழர்கள் ஜயா அவர்களை என்றும் நினைவில் கொள்வார்கள்

லைக்கா முதலாளியும் ஐபிசி முதலாளியும்

லைக்கா முதலாளியும் ஐபிசி முதலாளியும் இருவரும் ஈழத் தமிழர்கள் இருவரும் புலம்பெயர்ந்த அகதிகள் இருவரிடமும் பல ஊடகங்கள் உண்டு. லைக்கா முதலாளி சிறையில் இருந்து விடுதலையான 28 அரசியல் கைதிகளுக்கு தலா 25லட்சம் ரூபாவீதம் 7 கோடி ரூபா வழங்கியுள்ளார். ஆனால் ஐபிசி முதலாளி கோடிக்கான ரூபா செலவு செய்து முன்னாள் போராளிகள் வறுமையில் இருப்பதாக பிரச்சாரம் செய்கிறார்.

முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட

முட்டி போட்டு உயிர் வாழ்வதை விட எழுந்து நின்று சாவது மேலானது- சேகுவாரா 14.06.23 தோழர் "சே" யின் பிறந்த தினமாகும். அவர் கையில் கிட்டார் இருந்தபோதும் சரி அவர் கையில் துப்பாக்கி இருந்தபோதும் சரி அவை எப்போதும் மக்களுக்காகவே இயங்கின. அவர் பல கருத்துக்களை கூறியிருந்தபோதும் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான கருத்து “ அடிமையாக விழுந்து கிடப்பதைவிட எழுந்து நின்று போராடி மடிவதே மேல்” என்பதாகும். எமக்கு என்று ஒரு தொன்மையான மொழி உண்டு , எமக்கு என்று ஒரு கலை கலாச்சாரம் மற்றும் பண்பாடு உண்டு , எமக்கு என்று நாம் செறிந்து வாழும் ஒரு நிலப் பரப்பு உண்டு , எமக்கென்று பொருளாதார வளமும் இயற்கை வளமும் கூட உண்டு, இருந்தும் எம்மை நாமே தீர்மானிக்கும் ஆட்சி எம்மிடம் இல்லை ஏனெனில் நாம் அடிமையாக வீழ்ந்து கிடக்கிறோம். போர்த்துக்கேயரை எதிர்த்து போராடிய நாம் ஒல்லாந்தரை எதிர்த்து போராடிய நாம் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய நாம் இன்று ஏன் போராடாமல் வீழ்ந்து கிடக்கிறோம்? ஏனெனில் நாம் “அடிமை” என்பதை உணராமல் இருக்கிறோம். எமக்கு தேவை அடுத்த வருடம் தீர்வு வரும் என்று ஏமாற்றும் தலைவர் அல்ல எமக்கு தேவை இந்தியாவின் உதவியுடன் தீர்வு வரும் என்று கூறும் தலைவர் அல்ல. எமக்கு தேவை அடிமையாக கிடக்கிறாய். எழுந்து நின்று போராடு என்று கூறும் ஒரு தோழர் சே

காத்திருப்பு நீள்கிறது

காத்திருப்பு நீள்கிறது தவிப்பு தொடர்கிறது எப்போது விடுதலை ஆவார்கள் இந்த நாலு ஈழத் தமிழரும்? “32 ஆண்டுகளாக அம்மாவை பார்க்கவில்லை. அப்பாவின் கடைசி காலத்தில் அவரின் அருகில் இருந்து கடமைகளை செய்ய முடியவில்லை என்ற உறுத்தல் என்னை உருக்குலைக்கிறது. வயதான அம்மாவுடன் வாழ வேண்டும் என்ற என் ஆசை தவறு என்றால் யாரும் ஆதரவு தர வேண்டாம்;” என சாந்தன் கோரியுள்ளார். அவருக்கு நாம் என்ன பதில் அளிக்கப் போகிறோம்? இந்த நாலு தமிழரும் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டபோது இவர்களால் சிறப்புமுகாம் உலகின் கவனத்தை பெறும் என எதிர் பார்த்தோம். இதனால் அங்கு அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை பெற வழி கிடைக்கும் என நம்பினோம் ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த நால்வரையும் மறந்துவிட்டோம். சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் தமது சொந்த செலவில் தாயகம் திரும்ப விரும்பினால் உடன் அனுப்பி வைக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது. சிறப்புமுகாம் தமிழக முதல்வரின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. ஆனால் தமிழக முதல்வர் சாந்தன் நாடு திரும்ப அனுமதி அளிக்க மறுக்கிறார். இந்திய பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியும் அவரும்கூட சாந்தனுக்கு உதவவில்லை. ஓடி ஓடி ஈழத் தமிழர் மத்தியில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோர் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? பேறறிவாளன் தாயார் அற்புதம்மாவுக்கு இரங்கிய தமிழகம் சாந்தனின் தாயாருக்கு இரங்குமா? சாந்தன் தன் தாயாரை இறப்பதற்கு முன் காண தமிழக மக்கள் வழி சமைப்பார்களா?

சாமி இருக்கு என்று சொல்பவனைக்கூட

சாமி இருக்கு என்று சொல்பவனைக்கூட நம்பலாம். ஆனால் நான்தான் சாமி என்பவனை நம்பவே கூடாது. பக்தி வந்தால் புத்தி போயிடும் போலும். அதனால்தான் இங்கிலாந்தில்கூட ஒரு (ஆ)சாமியால் ஏமாற்ற முடிந்திருக்கிறது. எத்தனையோ (ஆ)சாமி கைது செய்யப்பட்டாலும் மீண்டும் மீண்டும் பக்தர்கள் ஏன் இவர்களிடம் ஏமாறுகின்றனர்? பக்தி ஒரு மனநோய் என்ற அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு உண்மைதான் போலும். உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலே எழும்பவிடாமல் அழுத்திப்பிடிக்கும் ஆயுதங்களே மதமும் கடவுளும் - லெனின் குறிப்பு – நான் பொதுவாக எல்லா மதங்களைப் பற்றியுமே எழுதியுள்ளேன். எனவே இந்து சாமியை எழுதும் நீ கிருத்தவ பாதிரி பற்றி எழுதுவாயா என்றெல்லாம் கேட்டு என் படலையை ஆட்ட வேண்டாம்.

பொதுவாக போட்டி நடத்தி

பொதுவாக போட்டி நடத்தி வெற்றியாளரை தீர்மானிக்கப்படும். ஆனால் விஜய் டிவி மற்றும் ஜீ டிவியில் வெற்றியாளரை தீர்மானித்துவிட்டு போட்டியை நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. வழக்கமாக ரேட்டிங்கிற்காக விஜய் டிவி ஈழத் தமிழரை பைனல்வரை அனுமதித்துவிட்டு இறுதியாக பரிசு வழங்காமல் தவிர்ப்பார்கள். ஆனால் ஜீ டிவி ஒருபடி மேலே சென்று ஈழத் தமிழரை ரேட்டிங்கிற்காக பயன்படுத்திவிட்டு பைனல் வாய்ப்பே வழங்காமல் தவிர்த்துள்ளார்கள். மலடி பிள்ளை பெறும் அதிசயம் நிகழ்ந்திடாதா என எதிர்பார்த்தேன். ஆனால் வழக்கம்போல் இம்முறையும் ஏமாற்றத்தை தந்துள்ளனர். தமிழர் நடத்தாத டிவியில், தமிழர் நடுவராக இல்லாத மேடையில், ஈழத் தமிழர் திறமைக்கு பரிசும் மதிப்பும் கிடைக்கும் என எதிர்பார்ப்பது எம் முட்டாள்தனமே.

எழுத்தாளன் என்பவன் தான் எழுதுவதைவிட

எழுத்தாளன் என்பவன் தான் எழுதுவதைவிட சிறந்தவனாக இருக்க வேண்டும் என்றார் ரஸ்சிய எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கி. ஆம். அவர் அப்படி இருந்தமையினால்தான் இன்று உலகம் போற்றும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார். எதிர்வரும் 18ம் திகதி மார்க்சிம் கார்க்கியின் நினைவு தினமாகும்(18.06.1936). இவர்தான் உலகில் அதிக மொழிகளில் வெளியிடப்பட்ட புரட்சிகர “தாய்” நாவலை எழுதியவர். அன்றைய ரஸ்சிய ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி சுமார் இரண்டாயிரம் மக்கள் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி கார்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது. தப்பிப்பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். இந்நிலையில் ரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு கார்க்கிக்கு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சிக்கு நிதி சேகரிக்க வேண்டி கார்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு தான் உலகப் புகழ்பெற்ற தாய் நாவலை அவர் எழுதினார். இன்று ரஸ்சிய பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்கி பள்ளிக்கூடமே சென்றதில்லை. அப் புகழ் பெற்ற இலக்கியவாதியான கார்க்கி கூறுகிறார் “ போராட துணிந்த ஒருவனுக்கு உதவுவதாகவே இலக்கியவாதியின் எழுத்து இருக்க வேண்டும்” ஆனால் இப்போது சில இலக்கியவாதிகளின் எழுத்துகள் போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு உதவவில்லை. மாறாக போராடியவர்களை இகழ்வு செய்கிறது. அதுவும் 2009ல் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் சிந்திய குருதியை ஒண்டிப்புலி சர்பத் என்று ஒருவர் எழுதுகிறார். அவருக்கு சில ஈழத் தமிழ் இலக்கியவாதிகள் அழைத்து இயல் விருது அளித்து கௌரவிக்கின்றனர். இவர்கள் இலக்கியவாதிகள் அல்லர். இவர்கள் இலக்கிய வியாதிகள்.

செய்தி - தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின்

செய்தி - தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட செயற்பாட்டாளர்கள் மூவரை விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்க்கு வருமாறு பொலிஸ் அழைப்பாணை விடுத்துள்ளது. இராஜதந்திரம் என்பது கல்லு கிடைக்கும்வரை நாயுடன் பேச்சுவார்த்தை செய்வது. போராட்டம் என்பது கல்லு கிடைத்தவுடன் நாயை விரட்டி அடிப்பது. மீண்டும் எம் கையில் கல்லு கிடைக்காமலா போய்விடும்?

சிங்களவர் மீது இரக்கம் கொண்டு

சிங்களவர் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கும் உணவு அனுப்பும்படி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிய சுமந்திரன், சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் மீது இரக்கம் கொண்டு அவர்களை விடுதலை செய்யும்படி ஸ்டாலினிடம் கோருவாரா? இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் ஐயா அவர்கள் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த இந்து அகதிகளுக்கு உதவும்படி இந்திய அரசிடம் கோருவாரா? 13 தீர்வு கேட்டு இந்திய அரசுக்கு கடிதம் அனுப்பிய தமிழ் தலைவர்கள் இந்த அகதிகளை விடுதலை செய்யும்படி ஒரு கடிதம் அனுப்புவார்களா?

எத்தனை ஆயிரம் தமிழர்களை கொன்றாலும்

எத்தனை ஆயிரம் தமிழர்களை கொன்றாலும் பரவாயில்லை. திருப்பதி செல்லுங்கள். பாவ விமோசனம் தரப்படும்.

சம்பந்தர் ஐயா - மேடம்! இந்த சிறப்புமுகாம் அகதிகளை

சம்பந்தர் ஐயா - மேடம்! இந்த சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுங்களேன். இந்திய தூதர் - மிஸ்டர் சம்பந்தன்! இன்னொரு குவாட்டர் தரட்டுமா? சம்பந்தர் ஐயா – மேடம் பிளீஸ் , இந்த சாந்தனையாவது விடுதலை செய்யுங்களேன் இந்திய தூதர் - மிஸ்டர் சம்பந்தன், என்ன புதிதாக மக்களுக்காக கோரிக்கை வைக்கிறீர்கள்? சம்பந்தர் ஐயா - இல்லை மேடம், தீர்வு வரும் என நம்பியிருந்தேன். அது வரவில்லை. இந்த சாந்தனை விடுதலை செய்தால் அதை வைத்தாவது அடுத்த தேர்தலை சந்திக்கலாம் என்றுதான். பேஸ்புக்கில் ரொம்ப டெமேஜ் பண்ணுறாங்கள்.

செய்தி – கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி

செய்தி – கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி. ஒரு சந்தேகம்! அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டதும் அவர்களுக்கு உடனே நெஞ்சுவலி எப்படி ஏற்படுகிறது?

ஆடுகள் எப்போதும் ஓநாயையே நம்புகின்றன!

• ஆடுகள் எப்போதும் ஓநாயையே நம்புகின்றன! இத்தனை அழிவுக்கு பின்னரும் இத்தனை அழிவிற்கும் காரணமான இந்திய அரசு உதவும் என்று இன்னமும் நம்மில் சிலர் நம்புகின்றனர். அதுவும் நாங்கள் இந்து என்று சொன்னால் இந்திய இந்து அரசு உதவும் என்று வேற அவர்கள் நம்புகின்றனர். கடந்த வருடம் இதே நாளில் பாஜக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் வந்தார். அப்போது வடக்கும் கிழக்கும் இந்திய பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார். அவர் குறிப்பிட்ட அந்த பிரதேசத்தில்தான் சிங்கள அரசு இந்து கோயில்களை அழித்துவிட்டு புத்த விகாரைகளைக் கட்டுகிறது. அவர் குறிப்பிட்ட அந்த தமிழர் பிரதேசத்தில்தான் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை சிங்கள அரசு நடத்துகிறது. கச்சதீவில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை பாப்பரசர் மூலம் மன்னார் ஆயரால் நீக்க முடிகிறது. ஆனால் இந்து ஆலயங்களை அழித்துவிட்டு புத்த விகாரை கட்டப்படுவதை இந்திய பிரதமர் மூலம் அண்ணாமலையால் நிறுத்த முடியவில்லை. மாறாக தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிங்கள அரசுக்கு இந்திய அரசானது கடன்களையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந் நிலையில் லண்டனில் சிலர் “ஈழ இந்திய உறவுப்பாலம்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அழைக்கின்றனர். இதுவரை சம்பந்தர் ஐயா கட்டிய ஈழ இந்திய உறவுப்பாலத்தால் ஈழத் தமிழர் பெற்ற நன்மைகள் என்ன? இந்நிலையில் சம்பந்தர் ஐயாவைவிட அப்படி என்ன பெரிய பாலத்தை இந்த லண்டன் தமிழ் அமைப்பினரால் கட்டிவிட முடியும்? குறைந்த பட்சம் இந்தியாவில் 40 வருடங்களாக அகதிகளாக இருப்பவர்களுக்கு இவர்களால் குடியுரிமை பெற்றுக் கொடுக்க முடியுமா? அல்லது சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளையாவது விடுதலை செய்ய முடியுமா? சரி அப்படியென்றால் இந்த சந்திப்பின் மூலம் ஏற்படும் விளைவுகள் என்ன? முதலாவது, தான் ஈழத் தமிழருக்கு உதவுவதாக தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய அண்ணாமலைக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டாவது, தாங்கள் நிராகரித்த பாஜகவை ஈழத் தமிழர் ஏன் நம்புகின்றனர் என்ற எரிச்சல் தமிழக கட்சிகளுக்கும் மக்களுக்கும் ஏற்படப் போகிறது குறிப்பு – அண்ணாமலை யாழ்ப்பாணம் வந்தபோது ராமருக்கு பாலாலயம் நடத்தப்பட்டதால் அந்த இடம் பலாலி என பெயர் பெற்றதாக கூறினார். அதுபோல் ராமர் இங்கிருந்துதான் சீதையை பார்த்தார். அதனால்தான் இங்கிலாந்து என்று பெயர் வந்தது என்று ஏதாவது லண்டனில் உளறிவிடப்போகிறார். பாலம் கட்டும் ஏற்பாட்டாளர்களே! கவனம், அப்புறம் வெள்ளைக்காரன் காறித் துப்புவான். 😂

சம்பந்தர் ஐயா – மேடம்!

சம்பந்தர் ஐயா – மேடம்! எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. ரணிலிடம் கூறுங்கள். தீர்வு தரவில்லை என்றால் வெளியக சுயநிர்ணய உரிமை கோருவோம் சந்திரிகா அம்மையார் - மிஸ்டர் சம்பந்தன் ! தண்ணி அடிச்சா போய் குப்பற படுக்கனும். அதைவிடுத்து தீர்வு அது இது என்று உளறக்கூடாது. சரியா. 😂😂

இருவரும் ஈழத் தமிழர்

இருவரும் ஈழத் தமிழர் ஒருவர் அகதியாக கனடா சென்றதால் குடியுரிமை பெற்று அங்கு எம்.பி யாகி உள்ளார். மற்றவர் அகதியாக இந்தியா சென்றதால் சிறப்புமுகாமில் இருந்து விடுதலை கோரி தீக்குளித்துள்ளார். 1990ல் கலைஞர் ஆட்சியில் ஆரம்பித்த சிறப்புமுகாம் கொடுமை அவர் மகன் ஸ்டாலின் ஆட்சியிலும் தொடர்கிறது. சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் இலங்கை திரும்ப விரும்பினால் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவுள்ளது. ஆனால் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் தமிழக முதல்வர் நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமாக சாந்தனை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறார். சாந்தன் தனது சொந்த செலவில் இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்தும் தமிழக முதல்வர் அனுமதி அளிக்க மறுக்கிறார். இது குறித்து இந்திய பிரதமர் மோடிக்கு சாந்தன் மனு அனுப்பியும் இந்திய அரசும் அக்கறை இன்றி இருக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்ட முனைவோர் குறைந்த பட்சம் இந்த சாந்தன் விடுதலைக்காவது குரல் கொடுப்பார்களா?

அற்புதம்மாவுக்கு பேரறிவாளனை சிறையில்

அற்புதம்மாவுக்கு பேரறிவாளனை சிறையில் சென்று பார்க்கும் வாய்ப்பாவது கிடைத்தது ஆனால் சாந்தனின் தாயாருக்கு அந்த வாய்ப்பும்கூட கடந்த 32 வருடங்களாக கிடைக்கவில்லை. இறப்பதற்கு முன் ஒருமுறையாவது தன் மகன் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்ற அந்த தாயின் விருப்பம் நிறைவேறுமா?

தன்னை "தமிழின தலைவர்" என்றவர்

தன்னை "தமிழின தலைவர்" என்றவர் ஈழத் தமிழர் அழிந்தபோது நடித்தார். ஆனால் ஒரு நடிகர் ஈழத் தமிழர் விடயத்தில் நடிக்கவில்லை. மாறாக தான் இறந்தபின்பு தன் உடலில் புலிக்கொடி போர்த்தப்பட வேண்டும் என விரும்பினார் புலிகள் பலமாக இருந்த காலத்தில் புலிகளுடன் சேர்ந்திருந்து படம் காட்டிய சில தலைவர்கள் நெருக்கடியான இறுதி நேரத்தில் பேச முனைந்தபோது தொலைபேசியை அணைத்துவிட்டு உறங்கினார்கள் ஆனால் அவர்களுக்கு மத்தியில் தான் இறந்தால் தனக்கு புலிக்கொடியை போர்த்த வேண்டும் என தைரியமாக அறிவித்தவர் மணிவண்ணன்

சுமந்திரன் சேர் - ஐயா!

சுமந்திரன் சேர் - ஐயா! நாங்க தீர்வு 13ஐ கேட்பதா அல்லது வெளியக சுயநிர்ணய உரிமையை கேட்பதா? சம்பந்தர் ஐயா - இந்தியா எதைக் கேட்கச் சொல்கிறதோ அதை நாம் கேட்கணும். சுமந்திரன் சேர் - ஐயா! கஜன் அணி போராட்டம் நடத்துவதால் மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கிறது. நாமும் போராட்டம் நடத்தினால் என்ன? சம்பந்தர் ஐயா - இந்திய தூதர் போராடச் சொன்னால் நாமும் போராடலாம். சுமந்திரன் சேர் - விரைவில் தேர்தல் வரப்போகிறது என்கிறார்கள். ரணில், சஜித் ,அனுரா இதில் யாரை நாங்க ஆதரிக்க வேணும் ஐயா? சம்பந்தர் - இந்தியா யாரை ஆதரிக்கிறதோ அவரை நாம் ஆதரிக்க வேண்டும் சுமந்திரன் - இந்தியா யாரை ஆதரிக்கிறது ஐயா? சம்பந்தா - அதுதான் தெரியுதில்லையே. டில்லிக்கு போய் கேட்டால் என்ன?

பாராட்டுகளும் வாழ்த்துகளும்

•பாராட்டுகளும் வாழ்த்துகளும் மலையகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் தயாபரன் மற்றும் விக்னேஸ்வரன் (வயது -31) யாழ்ப்பாணம் கோட்டையில் இருந்து, கொழும்பு காலிமுகத்திடல் நோக்கிய நடைபயணத்தை நிறைவுசெய்து சாதனை படைத்துள்ளனர். சுமார் 400 கிலோமீற்றர் தூரத்தை, 32 மணித்தியாலங்களில், நடைபயணமாக கடந்து அவர்கள் நிறைவு செய்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். 1986ம்’ ஆண்டு நானும் என் தோழர்கள் 20 பேருடன் மட்டக்களப்பு கன்னங்குடாவில் இருந்து காடுகள் வழியாக சுண்டிக்குளம் மருதங்கேணியை நடந்து வந்தடைய 12 நாட்கள் பிடித்தது நினைவுக்கு வருகிறது. எனக்கு சயிக்கிளில் இலங்கையை சுற்றிவர வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. ஆனால் அது நிறைவேறாத ஆசையாகவே போய்விட்டது.

அகதியாக கனடா சென்ற ஈழத் தமிழர்

அகதியாக கனடா சென்ற ஈழத் தமிழர் விதுஷா இலங்கநாதன் மருத்துவம் படித்து இந்த ஆண்டிற்கான சிறந்த இளம் பார்வை மருத்துவருக்கான விருது பெற்றுள்ளார். அகதியாக இந்தியா சென்ற ஈழத் தமிழர் நந்தினி உரிய புள்ளிகள் பெற்றும் அகதி என்பதால் மருத்துவ கல்வி மறுக்கப்பட்டார். ஆனால் சீன அரசு ஈழத் தமிழ அகதி நந்தினிக்கு புலமைப்பரிசிலுடன் மருத்துவ கல்வி கற்க அனுமதி அளித்துள்ளது. கனடா ஈழத் தமிழ் அகதிகள் மீது காட்டும் இரக்கத்தை இந்திய அரசு ஏன் காட்ட மறுக்கிறது என்று கேட்டால், இந்திய பிரதமரைக் கொன்றதுபோல் கனடா பிரதமரையும் கொன்றிருந்தால் தெரிந்திருக்கும் என்று சில நியாயவான்கள் பதில் அளிக்கின்றனர். ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது 1991ல். ஆனால் 1983 முதல் அகதிகள் இப்படித்தான் நடத்தப்படுகின்றனர் என்பதை இந்த நியாவான்களுக்கு எப்படி புரியவைப்பது? சரி. இவர்களது வாதப்படி பார்த்தாலும் இந்திரா காந்தியைக் கொன்றதற்காக முழு சீக்கிய இனமும் பழி வாங்கப்படுகிறதா, இல்லையே?

4பேரை கொல்ல உத்தரவிட்ட

4பேரை கொல்ல உத்தரவிட்ட ஆஷ் துரையைக் கொன்று தானும் மரணமடைந்த வாஞ்சிநாதனை தியாகி என்கிறது இந்திய அரசு. ஜீன் மாதம் 17 திகதி வீரவணக்க நிகழ்வு நடத்துகிறது. ஆனால் 10000 தமிழர்களை கொல்ல உத்தரவிட்ட ராஜிவ் காந்தியை கொன்று தானும் மரணமடைந்த தானுவை பயங்கரவாதி என்கிறது. இது என்ன நியாயம்?

கிணற்று தவளைகளின் அதி உச்ச கனவு

கிணற்று தவளைகளின் அதி உச்ச கனவு எப்போதும் பாம்பு அற்ற கிணறு மட்டுமே

எதுக்கு அண்ணே இவனை அடிக்கிறீங்க?”

“எதுக்கு அண்ணே இவனை அடிக்கிறீங்க?” “வடை வாங்கிட்டு வரச் சொன்னா சுமந்திரன் சேர் சுட்டதா, சம்பந்தர் ஐயா சுட்டதா, என்று கேட்கிறான்” 😂😂 #சிங்களமக்களுக்கும் இரங்கி உணவு அனுப்பும்படி திராவிட முதல்வரிடம் கேட்ட சுமந்திரன், சிறப்புமுகாம் அகதிகளுக்கும் இரங்கும்படி கேட்க மாட்டாரா?

செந்தில் பாலாஜி ஊழல் செய்துவிட்டார்.

செந்தில் பாலாஜி ஊழல் செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கோரியவர்கள் இவர்கள். இப்போது செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் அதனை கண்டிக்கிறார்கள். ஏன் கண்டிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு கைது செய்தவிதம் மனிதவுரிமை மீறல் என்கிறார்கள். சரி. உச்சநீதிமன்றம் விடுதலை செய்தும் ஈழத் தமிழர் என்பதால் நான்கு பேர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் சொந்த செலவில் நாடு திரும்ப விரும்பினால் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது. சாந்தன் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தும் அந்த நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மாநில அரசு அவரை அடைத்து வைத்திருக்கிறது. இது மனிதவுரிமை மீறலாக இவர்களுக்கு தெரியவில்லையா? ஏன் இவர்கள் மாநில அரசை இதற்காக கண்டிக்கவில்லை?

ஒருநாள் சாமியார் ஒருவர் போஸட் ஆபிசுக்கு

ஒருநாள் சாமியார் ஒருவர் போஸட் ஆபிசுக்கு வழி தெரியாமல் வீதியால் வந்த சிறுவன் ஒருவனை மறித்து “ தம்பி! போஸ்ட் ஆபிசுக்கு போகும் வழி தெரியுமா?” என்று கேட்டார். அந்த சிறுவனும் “ஆம் தெரியும்” என்று கூறிவிட்டு சாமியாருக்கு போஸ்ட் ஆபிஸ் போகும் வழியை காண்பித்தான். அதற்கு சாமியார் “ ரொம்ப நன்றி தம்பி! உன்னைப் பார்த்தா நல்ல பையனாக தெரியுது. என் மடத்திற்கு வா உனக்கு சொர்க்கத்திற்கு போகும் வழியை நான் காண்பிக்கிறேன்” என்றார். உடனே அந்த சிறுவன் “ போஸ்ட் ஆபீசுக்கு போகும் வழியே உங்களுக்கு தெரியவில்லை. உங்களால் எப்படி சொர்க்கத்திற்கு போகும் வழியைக் காட்ட முடியும்?” என்று கேட்டான். இதில் வரும் சாமியார் ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா இல்லை. ஆனால் அவரிடம் இதே போன்ற ஒரு கேள்வியை நாம் கேட்க வேண்டியுள்ளது. முருகன் ஒரு இந்து. அதுமட்டுமல்ல அவர் இப்போது ஒரு சாமியார் போல் ஆகிவிட்டார். ஆனாலும் அவரை விடுதலை செய்ய இந்திய அரசு மறுக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஈழ இந்து அகதிகளுக்கு உதவாத இந்திய அரசு, இந்துத் தமிழீழம் எடுக்க உதவும் என எப்படி நம்புவது? மறவன்புலவு சச்pதானந்தம் ஐயா அவர்களே உங்கள் பதில் என்ன?

கடந்த வருடம் பொருளாதார

கடந்த வருடம் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது தம்மீது இரக்கம் காட்டும்படி எந்த சிங்களவரும் சுமந்திரனிடம் கேட்கவில்லை. ஆனாலும் சிங்களவர் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கும் உணவு அனுப்பும்படி தமிழக முதல்வரிடம் கேட்டார் சுமந்திரன். சுமந்திரன் கேட்டபடி தமிழக முதல்வர் சிங்களவர் மீது இரக்கம் கொண்டு அவர்களுக்கும் உணவு அனுப்பி வைத்தார். தம் மீது இரக்கம் கொண்டு தமக்காக குரல் கொடுக்கும்படி முருகன் மற்றும் சாந்தனின் தாய்மார்கள் சம்பந்தர் ஐயாவிடம் கேட்டார்கள். ஆனால் அவர்கள் கேட்டும்கூட சம்பந்தர் ஐயா இதுவரை இரங்கவில்லை. இவர்களுக்காக குரல் கொடுக்கவும் இல்லை. சிங்களவர்களுக்காக இரங்கி தமிழக முதல்வரிட்ம் கோரிய சுமந்திரனும் இந்த நான்கு தமிழர்களுக்காகவும் இரங்கி தமிழக முதல்வரிடம் கோரவில்லை. எந்தவித உறவும் அற்ற செங்கொடி இந்த ஏழு தமிழர் விடுதலைக்காக தீக்குளித்து உயிரை விட்டார். ஆனால் தமிழர் வாக்கில் பதவி பெற்றுள்ள இந்த தலைவர்கள் ஏன் இந்த நான்கு தமிழர் விடுதலைக்கு குரல் கொடுக்க மறுக்கின்றனர்?

பத்மநாபா !

பத்மநாபா ! பத்மநாபா எளிமையானவர் , பத்மநாபா நல்லவர் என்றெல்லாம் எழுதி நாபாவை தெரிய வைப்பதில் எந்த பயனும் இல்லை. மாறாக, நாபாவை தமிழ் மக்கள் எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே எழுத வேண்டும். பத்மநாபா விடுதலையை விரும்பினார் பத்மநாபா புரட்சியை விரும்பினார் பத்மநாபா ஈழத்தை விரும்பினார் ஆதனால்தான் அவர் “ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி”யை நிறுவி போராடினார். ஆனால், நாபா முன்வைத்த விடுதலையை கைவிட்டவர்கள் நாபா முன்னெடுத்த புரட்சியை கைவிட்டவர்கள் நாபா முன்வைத்த ஈழத்தை கைவிட்டவர்கள் இன்று அவருக்கு நினைவு தினம் கொண்டாடுகிறார்கள். இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஏனெனில் நாபாவே தன் இறுதிக் காலத்தில், தான் உச்சரித்த புரட்சியை கைவிட்டார். தான் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார் இந்திய உளவு நிறுவனங்களின் வழிகாட்டலில் தேர்தல் பாதையில் பயணித்தார். தமிழ் மக்களுக்கு எதிரான இந்திய அரசை ஆதரித்தார். அதன் மூலம் அவரை நம்பிய தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தார். இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்களுக்கு துணை போனார். அதனால் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு துரோகியானார். பத்மநாபா புதைக்கப்பட்டார். அவருடைய எலும்புகளை தோண்டியெடுத்து சிலர் ரத்தம் பாய்ச்சுகிறார்கள் அவர் உயிர்த்தெழுவார் என்று ஆனால் அவர்கள் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. எனினும் பத்மநாபா தன் இறுதிக் காலத்தில் கூறிய ஒரு வரியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். “இந்தியாவை பயன்படுத்த நாம் நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது”என்று அவர் கூறினார். எனவே தயவு செய்து இனியாவது இந்திய அரசுக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ளுங்கள்

ஈழத்து சிவசேனைத் தலைவர்

ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்து இந்து முருகன் அவர்களின் விடுதலைக்கு குரல் கொடுப்பாரா என நேற்று ஒரு பதிவில் கேட்;டிருந்தேன். அதற்கு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் பெயரில் ஒரு பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் தன் பிரச்சனைக்கே குரல் கொடுக்கவில்லை என கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான பதில் அல்ல. முதலாவது, சச்சிதானந்தம் அவர்களது பிரச்சனையும் முருகனதும் பிரச்சனையும் ஒன்றல்ல. இரண்டாவது, ஒன்றாக இருந்தாலும்கூட தன் பிரச்சனைக்கு கேட்கவில்லை என்பது முருகனுக்கு ஏன் கேட்கவில்லை என்பதற்கான உரிய பதில் இல்லை. மூன்றாவது , புத்த பிக்கு உட்கார தன் வேட்டியை உரிந்து கொடுத்தவர் இந்து முருகனுக்காக குரல் கொடுக்க ஏன் மறுக்கிறார்? நான்காவது, இந்திய இந்து அரசு ஈழத்து இந்துக்களுக்கு உதவும் என பிரச்சாரம் செய்பவர் ஈழத்து இந்துவான முருகனுக்கு ஏன் இந்திய அரசு உதவவில்லை என்பதற்கு பதில் கூற கடமைப்பட்டிருக்கிறார். ஐந்தாவது, கிருத்தவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து மத வேறுபாடுகளை தமிழ் மக்கள் மத்தியில் விதைக்கும் சச்சிதானந்தம் தன் இந்து மதத்தை சேர்ந்த முருகனுக்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கிறார் என்பதற்கு தகுந்த பதில் தர வேண்டும்.

சர்வதேசம் 20ம் திகதி

சர்வதேசம் 20ம் திகதி உலக அகதிகள் தினம் கொண்டாடுகிறது. ஈழத் தமிழர்களின் அகதி வாழ்வு எப்போது முடிவுக்கு வரும்?

1994ம் ஆண்டு மதுரை சிறையில்

1994ம் ஆண்டு மதுரை சிறையில் வைக்கப்பட்டிருந்த என்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்காக சென்னை அழைத்துச் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுமார் இரண்டு மாதங்கள் சென்னை சிறையில் என்னை அடைத்து வைத்திருந்தனர். அதனால் அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த கௌத்தூர் மணி உட்பட பல தடா சிறைவாசிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வேளையில் பொலிசார் என்னை பலவந்தமாக திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டவேளை சிறைவாசிகள் போராடி தடுத்து நிறுத்தினர். குறிப்பாக மணியண்ணை அவர்கள் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முன்னுக்கு நின்று எனக்காக ஜெயிலருடன் வாக்குவாதப்பட்டது இன்றும் என் நினைவில் இருக்கிறது. தான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும் ஈழத் தமிழனான எனக்கு குரல் கொடுத்த மணியண்ணையின் உணர்வு உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இன்று அவர் வெளியில் இருக்கிறார். அவர் ஆதரித்த திமுக கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. இருந்தும் சிறப்புமுகாமில் இருக்கும் சாந்தன் உட்பட ஈழத் தமிழ் அகதிகளின் விடுதலைக்கு அவர் ஏன் குரல் கொடுக்க தயங்குகிறார் என்பது புரியவில்லை.

இளங் காற்றில் சிட்டுக்குருவிகள்கூட

இளங் காற்றில் சிட்டுக்குருவிகள்கூட பறக்க முடியும். ஆனால் புயல் காற்றில் கழுகுகளால் மட்டுமே பறக்க முடியும். ஒருபுறம் தாயகத்தில் தலைவர்கள் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி காலத்தை கழிக்கின்றனர். மறுபுறத்தில் புலத்தில் ஒரு சில அமைப்பினர் அண்ணாமலையை அழைத்து உறவுப்பாலம் கட்டுவதாக கதை விடுகின்றனர். இந்நிலையில் தலைவர்களை விலைக்கு வாங்கலாம் ஆனால் எம்மை வாங்க முடியாது என்பதை புலம் பெயர்ந்த மக்கள் நிரூபித்து வருகின்றனர். புலம்பெயர்ந்த மக்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. மீண்டும் எழுந்து நிற்க முயலுகின்றனர். அதனால்தான் சிங்கள அரசால் வெற்றியைக் கொண்டாட முடியவில்லை. உலகம் இந்த அதிசயத்தை திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளது. ஏனெனில் இப்போது போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் அடுத்த சந்ததியினர்.

ஒரு கூட்டம் மக்கள் அகதியாகவே

ஒரு கூட்டம் மக்கள் அகதியாகவே பிறந்து அகதியாகவே வாழ்ந்து அகதியாகவே இறந்துவிடும் கொடுமையை என்னவென்பது? அதுவும் ஈழத் தமிழ் இனத்திற்கு இக் கொடுமை வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் நிகழ்வதை என்னவென்பது? அகதியாக சென்ற ஈழத் தமிழரை கனடா வாழ வைக்கிறது, பிரிட்டன் வாழ வைக்கிறது ஐரோப்பா அவுஸ்ரேலியா எல்லாம் வாழ வைக்கிறது. ஆனால் தொப்புள்கொடி உறவுகள் என்று நம்பிச் சென்ற தமிழ்நாடு மட்டும் ஏன் சிறப்பு முகாமில் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறது? இந்தியா சென்ற தீபெத் அகதிகள் நன்றாக வாழ முடியும். பர்மா மற்றும் நேபாள அகதிகள்கூட வாழ முடியும். ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் வாழ முடியாது என்றால் என்ன அர்த்தம்?

இங்கிலாந்தில் ஈழத் தமிழர்

இங்கிலாந்தில் ஈழத் தமிழர் அரவிந்தன் குமாரசுவாமி மருத்துவ துறையில் செய்த ஆராயச்சிக்காக பிரிட்டனின் அதி உயர் விருதுகளில் ஒன்றான OBE வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். இந்தியாவில் ஈழத் தமிழ் மாணவி ஒருவர் சிறந்த புள்ளிகள் பெற்று அமைச்சரின் பாராட்டைப் பெற்றுள்ளார். ஆனால் அவர் தான் மருத்துவம் படிக்க ஆசைப்பட்டதாகவும் அகதிகள் மருத்துவ கல்வி பெற முடியாது என்பதால் வேறு வழியின்றி வர்த்தகம் படித்ததாக கூறுகின்றார். இங்கிலாந்து சென்ற ஈழத் தமிழர் மருத்துவம் படிக்க முடிகிறது. மருத்துவராக பணி புரிந்து உயர் விருது பெற முடிகிறது. ஆனால் இந்தியா சென்ற ஈழத் தமிழர் மருத்துவ கல்வியைக்கூட பெற முடியாத நிலை. ஈழத் தமிழர் மத்தியில் ஓடி ஓடி கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோர் இக் கொடுமைக்கு முடிவு காண்பார்களா? அல்லது, அண்ணாமலையை லண்டனுக்கு அழைத்து உறவுப்பாலம் கட்டுவோர் இந்த கொடுமைக்கு ஒரு தீர்வு காண்பார்களா?

ஒருவேளை மறந்திருப்பாரோ?

ஒருவேளை மறந்திருப்பாரோ? 😂😂 (படித்ததில் பிடித்தது)

ராஜீவ் காந்தி கொலையின் பின்னர்

ராஜீவ் காந்தி கொலையின் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயா அம்மையார் ஈழத் தமிழரை மட்டுமன்றி ஈழத் தமிழரை ஆதரிப்பவர்களையும் பிடித்து சிறையில் அடைத்துக் கொண்டிருந்தார். அவ்வேளையில் தைரியமாக ஈழத் தமிழரை ஆதரித்தவர்களில் ஆனைமுத்து ஐயா அவர்களும் ஒருவர். குறிப்பாக சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து தனது சிந்தனையாளன் இதழில் தவறாமல் பிரசுரித்து வந்தார். நான் சிறப்புமுகாமில் அடைபட்டிருந்தபோது எனக்கு தமது சிந்தனையாளன் இதழை எட்டு வருடங்கள் தவறாமல் அனுப்பி உதவினார். ஒருமுறை அவரை நேரில் சந்தித்தபோது யாழ் தேசவழமை சட்ட நூல் வேண்டும் என்று கூறினார். அது மிகவும் பழமையான நூல். அவர் கேட்ட பிறகே அப்படி ஒரு நூல் இருப்பது எனக்கு தெரிந்தது. கொழும்பில் தேசிய சுவடுகள் கூட்டுத்தாபனத்தில் ஒரு பிரதி இருந்தது. அதுவும் பழுதடைந்து இருந்தது. மிகவும் சிரமப்பட்டு அதனை போட்டோ கொப்பி எடுத்து ஐயாவிடம் கொடுத்தேன். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சி இப்பவும் என் நினைவில் இருக்கிறது.

கருணாநிதியை தட்சனாமூர்த்தி

கருணாநிதியை தட்சனாமூர்த்தி என்று எழுத முடியாதவர்கள் ஜெயலலிதாவை கோமளவல்லி என்று எழுத முடியாதவர்கள் சீமானை சைமன் என்று எழுதி கிண்டல் செய்கின்றனர். சீமான் சினிமாவில் இருந்தபோது பெயர் பிரச்சனை இல்லை சீமான் அரசியல் பேசும்போது பெயர் பிரச்சனையாகிறது என்றால் பிரச்சனை சீமானில் இல்லை அவர் பேசும் அரசியலில் என்று அர்த்தம். சீமானின் தேர்தல் அரசியலை விமர்சிக்க முடியாதவர்கள் சீமானின் ஆமை இறைச்சிக் கதையை விமர்சிக்கின்றார்கள். சீமானை அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிட்டால் தமிழன் இன உணர்வு கொள்வதை தடுத்திட முடியும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் இனிமேல் சீமானே நினைத்தால்கூட தமிழன் இன உணர்வு கொள்வதை தடுத்திட முடியாது என்பதே உண்மை.

செய்தி - ஈழத்து சிவசேனைத் தலைவர்

செய்தி - ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் தமிழக ஆளுநரால் பாராட்டி கௌரவிப்பு “எதிரி உன்னை பாராட்டுகிறான் என்றால் நீ அவனுக்கு சோரம் போய் விட்டாய் என்று அர்த்தம்” - மாவோ

சிறந்த மதிப்பெண்கள் பெற்ற

சிறந்த மதிப்பெண்கள் பெற்ற ஆனையூர் முகாமைச் சேர்ந்த ஈழத் தமிழ் அகதி மாணவிக்கு பாராட்டி விருது வழங்கியுள்ளார் நடிகர் விஜய். விஜய் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். இதேபோன்று நடிகர் சூரியாவும் பல அகதி மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். ஆனால் இவர்களைவிட அதிகம் சம்பாதிக்கும் நடிகர் ரஜனி அகதி மாணவர்களுக்கு உதவியதாக நான் இதுவரை அறியவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்கும்?

பணம் பாதாளம் வரை பாயும்

பணம் பாதாளம் வரை பாயும் என்று தெரியும். ஆனால் அது எம்மைக் கொன்றவருக்கு நாமே விழா எடுக்கும் அளவிற்கு பாயும் என்பதை இப்போதுதான் அறிகிறோம். ஈழத் தமிழருக்கு கலைஞர் துரோகம் இழைத்துவிட்டார் என்று தமிழ்நாட்டில் பல தமிழர்கள் எமக்காக குரல் கொடுக்கின்றனர். ஆனால் ஈழத்தில் நம்மவர் சிலர் கலைஞருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி எம் முகத்தில் மட்டுமன்றி எமக்காக குரல் கொடுக்கும் தமிழ்நாட்டு தமிழர் முகத்திலும் கரியை பூசியுள்ளனர். சீ வெட்கம்!

கேரளாவிலும் சுப்பர்ஸ்டார்கள் உண்டு.

கேரளாவிலும் சுப்பர்ஸ்டார்கள் உண்டு. ஆனால் அவர்கள் முதலமைச்சர் கனவு காண்பதில்லை. தமிழ்நாட்டில் மட்டும் நாலு படம் நடித்ததும் சுப்பர் ஸ்டார் கனவு காண்கிறார்கள். சுப்பர்ஸ்டார் ஆனதும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக கனவு காண்கிறார்கள். தமிழ்நாட்டின் இந்த சாபக்கேடு என்றுதான் மாறும்? இவர்கள் அட்டைக்கத்தி வீரர்கள் என்பதை தமிழ் இனம் எப்போது உணரும்?

ஈழத்து கருணாநிதி ?

• ஈழத்து கருணாநிதி ? தனக்கு வயதாகிவிட்டது. அதனால் அரசியலுக்கு வரவில்லை என்று 70 வயது ரஜனி கூறுகின்றார். ஆனால் “விரைவில் தீர்வு வரும்” என்ற வெறும் மூன்று சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு 90 வயதிலும் அரசியலை விடாமல் இருக்கிறார் சம்பந்தர் ஐயா. பாவம் தமிழ் மக்கள்

15 வருடங்களாக சிறையில் அடைத்து

15 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான தேவதாசன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும். அவரது விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும். மீதி அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்

நாம் எதை அறுவடை செய்ய விரும்புகிறோமோ

நாம் எதை அறுவடை செய்ய விரும்புகிறோமோ நாம் அதை முதலில் விதைக்க வேண்டும் விதைக்கப்படுவது வீண் போவதில்லை அது விளைச்சல் தராமல் விடுவதில்லை.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் 2006ம் ஆண்டு பிரெஞ்சு நிறுவனத்தில் பணிபுரிந்த 17 பேர் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது கொலைக்கு இன்னும் நீதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு நீதி கிடைக்க பிரான்ஸ் சென்றுள்ள சிங்கள ஜனாதிபதி ரணிலிடம் பிரெஞ்சு ஜனாதிபதி வலியுறுத்த வேண்டும். நாம் ஊமையாக இருக்கும்வரை உலகம் செவிடாக இருக்கும். நாம் பேச ஆரம்பித்துவிட்டால் உலகம் கேட்டேதான் ஆக வேண்டும். இனி எந்தவொரு சிங்கள ஜனாதிபதியும் இலங்கையைவிட்டு எந்தவொரு நாட்டுக்கும் செல்ல முடியாத நிலையை உருவாக்குவோம்.

15 வருடங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த

15 வருடங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி தேவதாசனை சிங்கள அரசு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளது. ஆனால் 33 வருடங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சாந்தனை விடுதலை செய்ய இந்திய அரசு மறுக்கிறது. சிங்கள அரசுக்கு இருக்கும் இரக்கம்கூட இந்திய அரசுக்கு இல்லையா? உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பின்பும் சாந்தனை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருப்பது என்ன நியாயம்? சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவர்கள் சொந்த செலவில் இலங்கை திரும்ப விரும்பினால் உடன் அனுமதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது. சாந்தன் நாடு திரும்ப விரும்பம் தெரிவித்தும் அவ் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக சாந்தனை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருப்பது என்ன நியாயம்? 1990ல் கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமில்தான் அவர் மகன் ஸ்டாலின் சாந்தனை அடைத்து வைத்திருக்கிறார் என்பதை ஈழத் தமிழர் மத்தியில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாடுவோர் அறிவார்களா? பிரதமர் மோடிக்கு மனு அனுப்பியும்கூட சாந்தன் விடுதலையை இந்திய அரசு மறுத்து வருகிறது என்பதை அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்டுவோர் அறிவார்களா? இந்தியாவில் இந்துச் சாந்தனை விடுதலைகூட செய்யாத இந்திய அரசு, ஈழத்தில் இந்து தமிழீழம் எடுத்து தரும் என எப்படி நம்பச் சொல்கிறார்கள்?

தமிழரசன் புதைக்கப்படவில்லை

தமிழரசன் புதைக்கப்படவில்லை அவர் விதைக்கப்பட்டுள்ளார். ஆயிரம் ஆயிரம் தமிழரசன்களாக அவர் முளைத்துக் கொண்டிருக்கிறார். ஆம். எத்தனை தடைகள் எத்தனை நெருக்கடிகள் அத்தனைக்கும் நடுவில் ஒரு பூ பூக்கத்தான் செய்கிறது.

மாகாணசபைக்கு ஒரு மேசை கதிரை கூட

மாகாணசபைக்கு ஒரு மேசை கதிரை கூட வாங்க அதிகாரம் இல்லை என்று கூறி தமிழீழம் பிரகடனம் செய்துவிட்டு ஓடியவர்கள், இப்ப வந்து கூறுகின்றார்கள் நாபாவின் தீர்க்கதரிசனத்தை ஏற்றிருந்தால் முள்ளிவாய்க்கால் அவலத்தை தவிர்த்திருக்கலாமாம். சரி, பரவாயில்லை. கடந்த 14 வருடமாக புலிகளும் இல்லை. எந்த ஆயுதக் குழுவும் இல்லை. ஏன் இலங்கை இந்திய ஒப்பந்தப்படி மாகாணசபையை அமுல்படுத்த முடியவில்லை? இலங்கை இந்திய ஒப்பந்தப்படி இந்திய அரசு தனது நலன்களை தொடர்ந்து அனுபவித்து வருகிறது. ஆனால் அந்த ஒப்பந்தப்படி கிடைத்த மாகாணசபை தீர்வை அமுல் படுத்த இந்திய அரசு ஏன் முனையவில்லை?

கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில்

கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் கச்சதீவில் புதிதாக எந்தவொரு கட்டிடமும் கட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிங்கள அரசு கச்சதீவில் புத்தர் சிலையை நிறுவியபோது அவ் ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்திய அரசு தடுத்திருக்க முடியும். தடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசு தடுக்கவில்லை. மாறாக கள்ள மௌனம் காத்தது. குறிப்பாக, ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தத்தின் குரு என அறியப்படும் தமிழக ஆர்எஸ்எஸ் பிரமுகர் குருமூர்த்தி அவர்களிடம் இது குறித்து முறையிடப்பட்டது. அவரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மன்னார் ஆயர் பாப்பரசர் மூலமாக சிங்கள அரசு அந்த புத்தர் சிலையை அகற்றச் செய்துள்ளார். அதாவது கச்சதீவில் மன்னார் ஆயருக்கு இருக்கும் அக்கறைகூட இந்திய அரசுக்கு இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் லண்டன் வந்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கச்சதீவை மீட்போம் என்று கதை விட்டுள்ளார். ஈழத் தமிழினம் இன்னும் என்னென்ன கம்பி கட்டுற கதையெல்லாதம் கேட்டுத் தொலைக்கனுமோ தெரியவில்லை.

சிறப்புமுகாம் தொடர்பான வழக்கொன்றில்

சிறப்புமுகாம் தொடர்பான வழக்கொன்றில் ( WP 15044/91) உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாச்சலம் மற்றும் பிரதாப்சிங் வழங்கிய தீர்ப்பில் நாடு திரும்பிச் செல்ல விரும்பினால் சொந்த செலவிலோ அல்லது அரசு செலவிவோ அனுப்பி வைக்க வேண்டும் என் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சாந்தன் நாடு திரும்ப விரும்பம் தெரிவித்தும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். சிறப்புமுகாமில் உள்ளவர்களை சிறையில் உள்ளது போன்று செல்லில் வைத்து பூட்டி வைக்க முடியாது என்றும் அவர்கள் சிறப்புமுகாமில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஆனால் சாந்தன் உட்பட நான்கு தமிழர் சூரிய வெளிச்சமே படாத அறையில் தனித்து வைக்கப்பட்டுள்ளனர். மற்ற அகதிகளுடன் பழக விடாமல் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். சிறப்புமுகாம் சித்திரவதையை தாங்க முடியாமல் அகதி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் லண்டன் வந்த அண்ணாமலை தாம் இலங்கையை சகோதர நாடாக கருதி உதவுவதாக கூறுகின்றார். உலகில் எந்த சகோதரன் தன் சகோதரனை சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறான்?

லண்டனில் நாலு செம்மறி ஆடுகள்

லண்டனில் நாலு செம்மறி ஆடுகள் உறவுப்பாலம் அமைக்கப்போவதாக கூறி இந்தியாவில் இருந்து ஒரு ஆட்டை அழைத்து வந்தன. வந்திருப்பது ஆடு அல்ல தம்மை கடித்து குதறும் ஓநாய் என்பது புரியாமல் ஆடு பேசும்போது செம்மறி ஆடுகள் தலையை ஆட்டி ஆட்டி கைதட்டின. 2009ல் முள்ளிவாய்க்காலில் இந்திய அரசு நடந்துகொண்ட விதம் தவறு. அதனை நான் கண்டிக்கிறேன் என்று கண்ணீர் விட்டது அந்த ஓநாய். அப்படியென்றால் ஜநாவில் ஏன் இன்னமும் இந்திய அரசு சிங்கள அரசைக் காப்பாற்றுகின்றது என்று ஒரு (செம்மறி) ஆடுகூட எழுந்து கேட்கவில்லை. தன்னைக் கொலை செய்தவன், தன்னைக் கொலை செய்ய உதவி செய்தவன் கண்ணீர் விடும்போது அதனை நம்பிக் கை தட்டும் ஒரே இனம் இந்த செம்மறி ஆடுகள்தான். என்ன செய்வது (செம்மறி) ஆடுகள் எப்போதும் ஓநாயைத்தானே நம்புகின்றன.