Sunday, November 29, 2020
இது 6 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் நான் செய்த பதிவ
குறிப்பு - இது 6 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் நான் செய்த பதிவு ஆகும். இதனை இன்று முகநூல் எனக்கு நினைவூட்டியுள்ளது. அண்மையில் முரளியின் 800 பிரச்சனையின்போது தமிழக ஊடகவியலாளர் ஒருவரும் இன்னும் சிலரும் வடக்கு கிழக்கு தமிழ் தலைவர்கள் ஒருபோதும் மலையக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டிருக்கவில்லை என்று கூறியிருந்தனர். அவர்களுக்காக இதனை மீள்பதிவு செய்கிறேன்.
• தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களின் மலையக விஜயம்
வரலாற்றில் வரவேற்கத்தக்கதொரு மாற்றம்!
மலையத்தில் மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை
தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்து
ஆறுதல் கூறியமை நல்லதொரு மாற்றமாகும்.
இலங்கை அரசு விரும்பாத நிலையிலும்கூட
வடமாகாண முதலைமைசர் விக்கினேஸ்வரன்
அந்த பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து
ஆறுதல் கூறியமை வரவேற்கப்பட வேண்டியதே!
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்
அமெரிக்க, இந்திய உதவிகள் தேவையில்லை என்கிறார்.
வடக்கு கிழக்கில் இருந்து யாரும் வரத் தேவையில்லை என்கிறார்
ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுதுணி கூட வழங்கப்படவில்லை.
மலையக மக்களின் தலைவர் தொண்டமான்
மண் சரிவு வரும் என்று சோதிடம் பார்ப்பதா? எனக் கேட்கிறார்.
ஆனால் இன்னொரு சிங்கள அமைச்சரோ
மண் சரிவு வரும் என்பது தமக்கு தெரியும் என்றும்
மாற்று காணி தோட்ட முதலாளிகள் தராததால்
தம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்.
வட கிழக்கு மாகாண தமிழ் தலைவர்கள்
மலையகத்திற்கு விஜயம் செய்திருப்பது
மலையக மற்றும் பூர்வீக தமிழ் மக்களின்
ஜக்கியத்திற்கும் ஒருமித்த தலைமைக்கும் வழி வகுக்கும்.
தமிழ் இனமாக ஒன்று படுவோம்!
இன ஒடுக்கு முறைக்கு எதிராக ஒன்று திரண்டு போராடுவோம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment