Sunday, November 29, 2020
நுங்கம்பாக்கம்
நுங்கம்பாக்கம்
24.06.2016 யன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட சுவாதி என்ற பெண்ணின் கதை இது.
கொலைகாரன் என்று கைது செய்யப்பட்ட ராம்குமார் என்ற இளைஞன் 10.09.2016 யன்று புழல் சிறையில் தற்கொலை செய்ததாக பொலிஸ் கூறியது.
இன்றுவரை அந்த தற்கொலை ஏன் நடந்தது அல்லது எப்படி நடந்தது என்பது பற்றி பொலிசாரோ அல்லது தமிழக அரசோ மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணை செய்யவில்லை.
இந்நிலையில் இப்படம் பொலிசாரை நியாயப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டதோ என சந்தேகம் கொள்ள வைக்கிறது.
நான் தமிழக சிறையில் எட்டு வருடம் இருந்திருக்கிறேன். அப்போது டவர் மாணிக்கம் என்ற கைதி மரத்தில் எறி விழுந்து இறந்ததைக்கூட கண்ணால் பார்த்திருக்கிறேன்.
ஆனால் சிறையில் ஒரு கைதி சுவரில் தொங்கிய மின்சார வயரை கடித்து தற்கொலை செய்தார் என்று கூறப்படுவதை என்னால் நம்ப முடியவில்லை.
அதுவும் கைது செய்யும்போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் கைதியை சிறையில் எந்தளவு கண்காணிப்பில் வைப்பார்கள்; என்பதை நான் நன்கு அறிவேன்.
எனவே இப் படத்தை தயாரித்தவர்கள் கொஞ்சம் புலனாய்வு செய்திருந்தாலே பொலிசாரால் மூடிமறைக்கப்பட்ட பல உண்மைகளை மக்களுக்கு தெரிவித்திருக்க முடியும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment