Wednesday, April 29, 2020

மே தின வாழ்த்துகள்.

•மே தின வாழ்த்துகள். உழைக்கும் மக்கள் இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் வெல்வதற்கு ஒரு உலகம் காத்திருக்கிறது - கால் மார்க்ஸ் எட்டு மணி நேர வேலை எட்டு மணி நேர ஓய்வு எட்டு மணி நேர உறக்கம் இதற்காகப் போராடி சிக்காக்கோ வீதிகளில் இரத்தம் சிந்தியவர்களின் நினைவே "மே தினம்" எமக்காகப் போராடிய அவர்கள் சிந்திய இரத்தம் தோய்ந்ததே எம் கரங்களில் தவளும் "செங்கொடி". வாழ்வதற்காக உழைக்க ஆரம்பித்த மனிதன் இன்று உழைப்பதற்காக வாழ்கிறான். மாற்றுவோம் இந்த அவல நிலையை. உலகின் பாதி சொத்து வெறும் 62 முதலாளிகளிடம் குவிந்து கிடக்கிறது. இந்த 62 முதலாளிகளின் சொத்து மதிப்பு 119 லட்சம் கோடி ரூபா இது 350 கோடி ஏழை மக்களின் சொத்துக்கு சமமானது. பணக்காரர்களின் சொத்து மதிப்பு 44 சத விகிதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒன்பது பேரில் ஒருவர் இரவு உணவு இன்றி பட்டினியாக உறங்க செல்கிறார். இந்தியாவில் ஒவ்வொரு அரை மணி நேரமும் ஒரு விவசாயி தற்கொலை செய்கிறார். ஏன் இந்த நிலை? உலகில் செல்வம் சமமாக பங்கிடாமல் இருப்பதே காரணம். ஆறு மனி நேர வேலை கேட்போம் எட்டு மணி நேர உறக்கம் கேட்போம் பத்து மணி நேர ஓய்வு கேட்போம். போராடுவோம் எமக்காக மட்டுமல்ல எமது அடுத்த சந்ததிக்காகவும்! •முதலாளி, தொழிலாளி சுரண்டலை ஒழிப்போம் •உடல் உழைப்பிற்கும் மூளை உழைப்பிற்கும் இடைவெளியை நீக்குவோம். •நகரத்திற்கும் கிராமத்திற்கும் வேறுபாட்டை இல்லாது செய்வோம் வாருங்கள் தோழர்களே! ஒன்றாய் அணிதிரள்வோம்! Image may contain: 1 person

நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை!

நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை! இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். பிரதி அமைச்சரும்கூட. தற்போது இவர் பதவியில் இல்லை. ஆனாலும் மக்களுக்கு சேவை செய்வதில் எப்பவும்போல் இருக்கிறார். ஏழை மக்களுக்கு உதவ என்று தானே உணவு சமைத்து எடுத்துச் சென்றார். ஆனால் பொலிசார் அனுமதிக்கவில்லை. இவர் ஜதேக கட்சியை சேர்ந்தவர். எனினும் உடனே இவர் மகிந்தவின் மகன் நாமலுடன் தொடர்பு கொண்டு தன் நிலையை விளக்கி அனுமதி பெறுகிறார். இவர் சிங்கள இனத் தலைவர். இப்படி ஒரு தலைவர் தமிழ் மக்களுக்கு இல்லையே என எம்மை ஏங்க வைக்கிறார். ஏனெனில் எமது தலைவர்கள் பதவி கிடைத்ததும் நீண்ட உறக்கத்திற்கு சென்று விடுகிறார்கள். தேர்தல் அறிவித்தால் மட்டுமே உறக்கத்தில் இருந்து எழுந்து வந்து அறிக்கை விடுகிறார்கள். எமது தலைவர்களும் மகிந்தவுடனும் அவர் மகன் நாமலுடனும் தொடர்பு கொள்கிறார்கள். ஆனால் அது தமக்கு சொகுசு பங்களா மற்றும் வாகனம் பெறுவதற்காகவே தொடர்பு கொள்கிறார்கள். இவர் மக்களுக்கு உதவுவதற்காக பொலிசாரை மீறுகிறார். ஆனால் எம் தலைவர்கள் அந்த பொலிசார் பாதுகாப்பு இல்லை என்றால் மக்கள் மத்தியில் வரமாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். என்ன செய்வது? நாம் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழியில்லை. Image may contain: one or more people and people standing Image may contain: 1 person

• நம்பிக்கை தரும் எம் இளைஞர்கள்!

• நம்பிக்கை தரும் எம் இளைஞர்கள்! கொரோனாவினால் இலங்கையில் நான்காவது மரணம் நிகழ்ந்துள்ளது. மரணம் எமது வீடு வாசல்வரை வந்துவிட்டது. கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அரசு தடுமாறுகிறது. தம்மிடம் இருக்கும் பணத்தை கொரோனாவுக்கு செலவு செய்ய முடியுமா? முடியாதா? என நம் பிரதேச சபைகள் பட்டிமன்றம் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. தேர்தல் என்றவுடன் ஓடி வந்து வேட்புமனு தாக்கல் செய்த எம் தலைவர்கள் பலர் கொரோனா என்றவுடன் ஓடி ஒளிந்துவிட்டார்கள். கொரோனாவினால் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள்தான். ஆனால் அன்றாடம் உழைத்து சாப்பிடுகிறவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக புதுக்குடியிருப்பில் ஒரு தாய் தன் தோட்டத்தில் விளைந்த வத்தக பழங்களை விற்பனை செய்ய முடியாமல் இருந்திருக்கிறார். இவ் ஏழைத்தாய் தன் மகனை முள்ளிவாய்க்காலில் பறி கொடுத்தவர். பழங்களை விற்பனை செய்யாவிடில் பழுதடைந்தவிடும். இதையறிந்த ஒரு இளைஞர் இத் தாயின் நிலையை தன் முகநூலில் பதிவு செய்திருக்கிறார். இதை முகநூலில் பார்த்த பெண் ஒருவர் உடனே 100 கிலோ வத்தக பழங்களை வாங்கி முள்ளியவளை பாரதி இல்ல சிறுவர்களுக்கு தனது பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். இவ்வாறு அந்த ஏழைத் தாயின் அனைத்து வத்க பழங்களும் விற்று தீர்ந்துள்ளன. இந்த இளைஞர் தன் முகநூலில் போட்ட ஒரு பதிவானது சாதாரணமானதுதான். ஆனால் அது, •ஏழைத் தாயின் பழங்கள் யாவும் விற்று அவருக்கு வருமானம் கிடைக்க வழி செய்தள்ளது. •ஒரு பெண் உட்பட சிலர் இந்த பழங்களை வாங்கி வறுமையில் உள்ளவர்களுக்கு வழங்கும் மனோபாவத்தை கொடுத்துள்ளது. •சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு மகிழ்வுடன் வத்தக பழம் உண்பதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆம். இவ்வாறான இளைஞர்கள் நம்பிக்கை தருகிறார்கள். கொரோனாவை மட்டுமல்ல அதைவிடக் கொடிய எது வந்தாலும் எம்மால் எதிர் கொள்வதற்கு. குறிப்பு - இவ் இளைஞர்போல் பலர் செய்து வருகின்றனர். இதனை ஊக்குவிப்பதற்காகவே இதை ஒரு உதாரணமாவே பதிவு செய்துள்ளேன். Image may contain: one or more people, grass, plant, outdoor and nature

லூசுப்பயல்!

லூசுப்பயல்! போருக்கு உதவிய நாடுகளே கொரோனாவை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றன. ஆனால் இவரோ போரை வென்றதுபோல் கொரோனோவையும் வெல்வோம் என முட்டாள்தனமாக அறிக்கைவிடுகிறார். வல்லரசு நாடான பிரான்சில் நேற்றைய தினம் ஒரேநாளில் மட்டும் 1355பேர் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர். இலங்கையில்கூட நேற்றைய தினம் நான்காவது நபர் மரணமடைந்துள்ளார். கண்டியில் மக்கள் கோபத்தில் கொரோனோ தாக்கிய நபரை ஏற்றிவந்த வானை தீயிட்:டுக் கொளுத்தியுள்ளனர். போகிற போக்கைப் பார்த்தால் மக்கள் மத்தியில் சக மனிதரைக்கூட தீயிட்டு:க் கொளுத்தும் நிலை வந்துவிடுமோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது. ஆனால் மக்களுக்கு தெளிவு ஏற்படுத்தி வழி நடத்தவேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவர் பையித்தியக்காரத்தனமாக அறிக்கை விடுகிறார். இந்த லூசுப்பயல் அமைச்சராக இருப்பது எனக்கு ஆச்சரியம் தரவில்லை. ஆனால் இவர் எப்படி நீண்ட காலம் ஜேவிபி யில் பிரச்சாரப் பீரங்கியாக இருந்தார்? Image may contain: one or more people

து மோடியின் தோல்வி இல்லை

இது மோடியின் தோல்வி இல்லை இது முதலாளித்துவத்தின் தோல்வி! இனி பாகிஸ்தான் படை எடுத்து வந்தால் உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்ற நாடே இருக்காது என்று முழங்கினார். அருணாச்சல பிரதேசத்தில் இனி சீனா வாலாட்டினால் ஒட்ட நறுக்குவோம் என தன் 52 இன்ஞ் நெஞ்சை நிமிர்த்தி வீரம் காட்டினார். ஆனால் கொரோனா நோய் வந்ததும் “மக்களே கை தட்டுங்கள்” என்கிறார். அப்புறம் இப்போது “விளக்கு ஏற்றுங்கள்” என்கிறார். எந்தவித திட்டமும் இன்றி திடீரென நீண்டகால ஊரடங்கை அமுல்படுத்தினார். இதனால் பல உழைக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாகிறார்கள் ஒரு தமிழர் மகாராஸ்ரா மாநிலத்தில் இருந்து நடந்து வந்தமையினால் இறந்துள்ளார். போருக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை கொட்டி ஆயத்தம் செய்த மோடி அவர்கள் ஒரு நோயை எதிர்கொள்ள எந்த திட்டமும் இல்லாமல் இருதிருக்கிறார் என்பதே உண்மை. அதுமட்டுமல்ல முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை வழங்கிய பிரதமர் மோடி இப்போது கொரோனா நோய்க்கு கொஞ்சம்கூட வெட்கம் இன்றி மக்களிடம் பணம் கேட்கிறார். சீனா நான்காயிரம்பேர் சிகிச்சை பெறக்கூடிய இரண்டு மருத்துவமனைகளைக் இரண்டே வாரத்தில் கட்டியுள்ளது. ஆனால் மோடியோ 3200 கோடி ரூபாயில் பட்டேலுக்கு சிலை கட்டிவிட்டு இப்போhது நோய் வந்ததும் கை தட்டுங்கள் விளக்கு ஏற்றுங்கள் என்கிறார். இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளிலும் காணப்படுகிறது. எனவே இது மோடியின் தோல்வி இல்லை. மாறாக நவ தாராளவாத முதலாளித்தவத்தின் தோல்வி என்பதே உண்மை. Image may contain: 1 person, text

கொரோனோவும் முகநூல் பதிவுகளும்!

•கொரோனோவும் முகநூல் பதிவுகளும்! நேற்றையதினம் கரவெட்டியில் இருந்து ஒருவர் என்னுடன் முகநூலில் தொடர்பு கொண்டார். அவர் ஒரு பெயரைக் குறிப்பிட்டு அந்த நபரைத் தெரியுமா எனக் கேட்டார். நான் “தெரியவில்லை. ஏன் ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டேன். “நான் குடும்பத்துடன் அவுஸ்ரேலியாவில் இருந்து வந்து இருக்கிறேன். அந்த நபர் எனக்கும் குடும்பத்தவர்களுக்கும் கரோனோ என்றும் நான் நல்லூரில் ஒளிந்திருப்பதாகவும் செய்தி பரப்பி வருகிறார்” என்றார். அந்த நபர் யாழ் மருத்துவ அதிகாரி, ராணுவ அதிகாரி, பொலிஸ் அதிகாரி எல்லோருக்கும் அறிவிக்கிறார். இதனால் அவர்கள் மாறிமாறி என்னுடன் தொடர்பு கொண்டு கரைச்சல் தருகிறார்கள் என்று வருத்தத்துடன் கூறினார். “அந்த நபர் யார் என்று தெரியவில்லை. ஏன் இப்படி செய்கிறார் என்றும் எனக்குப் புரியவில்லை” என்றும் அவர் கூறினார். இந்தப் பிரச்சனையை உற்று நோக்கும்போது சம்பந்தப்பட்ட நபர் ஏதோ தனிப்பட்ட கோபத்தில் இப்படி பழி வாங்கிறார் அல்லது வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்ற எரிச்சலில் செய்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. பல இளைஞர்கள் முகநூலை இந்த நேரத்தில் நல்லவிதமாக பயன் உள்ள வகையில் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது இவ்வாறு சிலர் இப்படி பேக் ஜடிகளில் குரூர சிந்தனைகளுடன் செயற்படுகின்றார்கள் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது. கடந்தவாரம் தமிழகத்தில் இருந்து “மள்ளர் பேரவை”யில் இருந்து ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டார். கொரோனா பிரச்சனையால் கடைகளில் பொருட்கள் அதிக விலைக்கு விற்கிறார்கள். இதை கண்டித்து ஒரு பதிவு போடுங்கள் என்று அவர் என்னிடம் கேட்டார். இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனெனில் பொதுவாக தமிழகத்தில் அகதிமுகாம்களில் இருக்கும் எம் அகதிகளே இப்படி தமக்காக பதிவு போடும்படி என்னிடம் கேட்பார்கள். “உங்கள் பதிவுகள் இங்கு பலராலும் கவனிக்கப்படுகிறது. அதனால் நீங்கள் பதிவு போட்டால் நிச்சயம் பயன் அளிக்கும்” என்று அவர் என்னிடம் வலியுறுத்தினார். எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். அப்படியான பதிவுகள் செய்யவே ஆசை. ஆனால் இப்படியானவர்களின் வற்புறுத்தலால் தொடர்ந்து சீரியஸ்சான அரசியல் பதிவுகளையே செய்து வருகிறேன். என் விருப்பப்படி எழுதும் காலம் வருமா? அதற்காக காத்திருக்கிறேன். Image may contain: plant, outdoor and nature

அகிம்சைப் போராட்டம் பயன்தராது என்பது

•அகிம்சைப் போராட்டம் பயன்தராது என்பது மீண்டும் ஒருதடவை நிரூபிக்கப்பட்டுள்ளது! துருக்கியைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஹெலின் போலக் துருக்கி அரசுக்கு எதிராக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று மரணமடைந்தார். 28 வயதேயான இந்த இளம் இசைக்கலைஞர் கடந்த 288 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளார். அவர் ஒன்றும் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை. அவர் கேட்டதெல்லாம் தனது இசைக்குழுவிற்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்கக்கோரியும் சிறைப்பிடிக்கப்பட்ட தனது சக கலைஞர்கள் ஏழு பேரை விடுவிக்குமாறும் மட்டுமே. ஆனால் துருக்கி சர்வாதிகார அரசு அவர் கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை. அவர் உயிரையும் காப்பாற்றவில்லை. காந்தியின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதை ஈழத்தில் திலீபன், அன்னைபூபதி உண்ணாவிரதங்களின்போது கண்டோம். இந்தியா மட்டுமல்ல துருக்கியும் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காது என்பதை இன்று காண்கிறோம். ஹெலின் மரணம் அவர் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் அகிம்சை வழிப் போராட்டம் பயன்தாராது என்பதை மீண்டும் ஒரு தடவை அது உலகிற்கு நிரூபித்துள்ளது. குறிப்பு - பட்டினிப்போரின் முன்னும் பின்னும் அவர் எவ்வாறிருந்தாரென்பதைக்காட்டும் படம் கீழே தரப்பட்டுள்ளது. Image may contain: 2 people

மீண்டும் மீண்டும் எம்மை பெருமூச்சு விட வைக்கிறாரே!

மீண்டும் மீண்டும் எம்மை பெருமூச்சு விட வைக்கிறாரே! எந்தவித திட்டமும் இன்றி அரசு தொடர்ந்து ஊரடங்கை அமுல்படுத்தி வருகிறது. எந்த சட்டத்தின்கீழ் ஊரடங்கை அமுல்படுத்துகிறீர்கள் என்று சுமந்திரன் போன்று இவர் கேட்கவில்லை. மாறாக, தொடர்ந்து ஊரடங்கு சட்டம் போட்டால் தன் மக்கள் உணவிற்கு என்ன செய்வார்கள் என்றே இவர் சிந்தித்தார். உடனே தானே சமைத்து தானே அவற்றை தேடி தேடி ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறார். ஒருநாள் அல்ல இரண்டு நாள் அல்ல, தொடர்ந்து பல நாட்களாக செய்து வருகிறார். உண்மையில் இப்படி ஒரு தலைவர் எமது தமிழ் இனத்திற்கு இல்லையே என ஏக்கத்துடன் பெருமூச்சுவிட வைக்கிறார். கிளிநொச்சியில் வெள்ளம் வந்தபோது தானே வந்து கிணற்றில் இறங்கி சுத்தம் செய்து கொடுத்தவர். அதுமட்டுமல்ல கடந்தவருடம் ஒரு தமிழரின் உடலை மயானத்தில் எரித்தமைக்காக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் சிறை வைக்கப்பட்டவர். இவர் விளம்பரத்திற்காக இப்படி செய்வதாக சிலர் கூறுகிறார்கள். இருக்கட்டுமே. அப்படியாவது எமது தமிழ் தலைவர்கள் ஏன் செய்ய மறுக்கிறார்கள்? Image may contain: one or more people Image may contain: one or more people and close-up Image may contain: one or more people and close-up Image may contain: 1 person

ஜே.வி.பி ( மக்கள் விடுதலை முன்னணி)

ஜே.வி.பி ( மக்கள் விடுதலை முன்னணி) தமிழ் மக்கள் கவனிக்க வேண்டியது என்ன? இன்று ஜேவிபி யின் 49வது ஏப்பரல் நினைவு தினம் ஆகும். 1971ம் ஆண்டு ஏப்பரல் மாதம் ஜேவிபி அமைப்பினர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அரசின் உதவியுடன் அவர்களது போராட்டம் நசுக்கப்பட்டது. அதில் சுமார் 6000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் 1989ம் ஆண்டு ஜேவிபி அமைப்பினர் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதன் தலைவர் ரோகண விஜேயவீரா உட்பட சுமார் 60000 சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். சோமவம்ச மட்டுமே தப்பி சென்றார். அவர் பிரான்சில் இருந்துகொண்டு மீண்டும் ஜேவிபி அமைப்பை கட்டினார். இன்று ஜேவிபி அமைப்பு பலம் பொருந்திய பெரிய அமைப்பாக இருக்கிறது. இதில் தமிழ் மக்கள் கவனிக்க வேண்டியது என்ன? முதலாவது, ஜேவியால் மீண்டும் எழு முடியுமாயின் தமிழ் மக்களால் ஏன் மீண்டும் எழ முடியாது? இரண்டாவது, ஜேவிபி இன்று தேர்தல் பாதையை பயன்படுத்தினாலும் அவர்கள் இதுவரை ஆயுதப் போராட்டம் தவறு என்றோ அல்லது அதை தாம் கைவிட்டதாகவோ அறிவிக்கவில்லை. மூன்றாவதாக, தமது தலைவர் ரோகண விஜயவீரா எப்படி இறந்தார் என்பது தெரியாத நிலையிலும் அவர் உயிருடன் இல்லை என்ற உண்மையை மக்களுக்கு உடன் தெரிவித்தார்கள். நான்காவதாக, தமது தலைவர் எப்படி கொல்லப்பட்டார் என்ற முழு உண்மைகளையும் கண்டறிந்தார்கள். அவற்றை ஆதாரங்களுடன் மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள். ஜந்தாவதாக ஜேவிபி அமைப்பும் “பயங்கரவாதிகள்” என்று குறிப்பிட்டே இலங்கை அரசு கொன்றது. ஆனால் அவர்கள் அதற்காக பயந்து அடங்கி இருக்கவில்லை. மாறாக தமது கொல்லப்பட்ட மாவீரர்களுக்காக வருடம்தோறும் பகிரங்கமாக நினைவு அஞ்சலி செய்கிறார்கள். • தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் சிங்கள மக்கள் மத்தியிலும் அரசுக்கு எதிராக போராடி இழப்புகளை சந்தித்து மீண்டும் எழுந்து நிற்கும் ஒரு அமைப்பு உள்ளது என்பதே. Image may contain: crowd, sky and outdoor Image may contain: 3 people, crowd and outdoor Image may contain: 1 person, outdoor Image may contain: 1 person, standing

தமிழ் தலைவர்கள் எப்போது

•தமிழ் தலைவர்கள் எப்போது தமிழ் மக்களை நேசிக்கப் போகிறார்கள்? இலங்கையில் உள்ள இரண்டு மக்கள் பிரதிநிதிகள் இவர்கள். ஒருவர் சிங்கள மக்களின் பிரதிநிதியான பாலிததெவரப்பெருமா இன்னொருவர் தமிழ் மக்களின் பிரதிநிதியான மாவை சேனாதிராசா. பாலித தெவரப்பெருமா தனக்கு வாக்களித்த மக்களை தேடிச் சென்று உதவி வருகின்றார். ஏழைத் தாய்க்கு உணவு அளித்துவிட்டு மகிழ்ச்சியுடன் அந்த தாயின் தலையை தடவிக் கொடுக்கிறார். ஆனால் மாவை சேனாதிராசா தன்னை தேடிவரும் தமிழ் தாயிடம்கூட பேசுவதற்கு விருப்பமின்றி இருக்கிறார். தனக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகளை தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கு நாலு ஆறுதல் வார்த்தையாவது கூறலாம் அல்லவா? ஒருகாலத்தில் “ஈழத்து சேகுவாரா” என்று அழைக்கப்பட்ட இந்த மாவை சேனாதிராசா இப்போது எங்கே? என்று கேட்டால், அவர் ஜந்து லட்சம் ரூபா பணம் கொடுத்துள்ளார் என விசுவாசிகள் எழுதுகிறார்கள். சரி. ஜந்து லட்சம் ரூபா யாருக்கு கொடுத்தார்? அது அவருடைய சொந்த பணமா? அல்லது கட்சி பணமா? விபரங்கள் கூறுங்கள் என்று கேட்டால் இதுவரை பதில் இல்லை. தமிழ் மக்கள் வீட்டுச்சின்னத்திற்கு வாக்கு போட்டதால் மாவிட்டபுரத்தில் மாவை சேனாதிராசாவுக்கு வீடு கட்ட முடிந்தது. சம்பந்தர் ஐயாவுக்கு இரண்டு சொகுசு வீடுகள் கிடைத்தன. தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்தது? Image may contain: 2 people, people sitting Image may contain: 2 people, people standing and outdoor

ஒரு விஞ்ஞானியும் ஒரு பிரதமரும்!

ஒரு விஞ்ஞானியும் ஒரு பிரதமரும்! ஒரு விஞ்ஞானி தவளை ஒன்றின் ஒரு காலை வெட்டிவிட்டு கை தட்டினார். தவளை துள்ளி பாய்ந்தது. இப்படி அதன் நான்கு கால்களையும் ஒவ்வொன்றாக வெட்டிவிட்டு கைதட்டினார். ஒவ்வொரு காலையும் வெட்டும்போது பாய்ந்த தவளை நான்கு காலையும் வெட்டிய பின்பு பாயவில்லை. உடனே அந்த விஞ்ஞானி நான்கு காலையும் வெட்டினால் தவளைக்கு காது கேட்காது முடிவு செய்தார். இது ஒரு கற்பனைக் கதைதான். ஆனால் இந்தக் கதையை சொல்லும்போது குழந்தைப்பிள்ளைக்கூட “முட்டாள் விஞ்ஞானி” என்று சொல்லி கை தட்டிச் சிரிக்கும். இப்போது ஒரு நிஜக்கதை கூறுகின்றேன். கேளுங்கள். ஒரு நாட்டில் கொரோனா நோயினால் மக்கள் வருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த நாட்டின் பிரதமர் மக்களை கை தட்டுங்கள் என்று முதலில் கூறினார். பின்பு சில நாட்கள் கழித்து வீட்டுக்குள் விளக்கை அணைத்துவிட்டு வெளியே வந்து விளக்கை பிடியுங்கள் என்றார். இப்போது அந்த பிரதமர் கொரோனாவுக்கு “காது கேட்காது” “கண் தெரியாது” என்ற முடிவை எட்டியிருக்கக்கூடும். நன்றாக கவனியுங்கள். நான் இங்கு அந்த பிரதமர் “மோடி” என்றோ அல்லது அவரை “முட்டாள்” என்றோ கூறவில்லை. ஆனால் எனக்கு இதுகூட சிரிப்பைத் தரவில்லை. இந்த மோடியிடம் மருந்து பொருட்களை அனுப்பி வைக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கேட்டதை நினைக்கும்போதுதான் சிரிப்பை அடக்க முடியவில்லை. கொஞ்சம் மெழுகுதிரியும் அகல் விளக்கும் மோடி அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்? பாவம் மக்கள்! இவனுகள் கையில மாட்டுப்பட்டுவிட்டார்களே? Image may contain: 1 person, standing Image may contain: 1 person, baby and close-up

நாய்களுக்கு உணவு அளித்த பாலித தெவரப் பெருமா!

நாய்களுக்கு உணவு அளித்த பாலித தெவரப் பெருமா! சம்பந்தர் ஐயா - தம்பி சுமந்திரன்! இந்த ஆள் நாய்க்கு சாப்பாடு வைக்கிறாரா? அல்லது எங்களுக்கு வைக்கிறாரா? சுமந்திரன் - ஆமாம் ஐயா! இந்த மனுசனால் எங்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் இந்தாளின் படத்தை போட்டு அது போல் எங்களை ஏன் செய்யவில்லை என்று கேட்கிறாங்கள். மாவை சேனாதிராசா - நம்ம ஜனாதிபதியிட்ட சொல்லி ஏதாவது வழக்கில இந்த ஆளை கொஞ்ச நாளைக்கு உள்ளே போட ஏலாதா? சுமந்திரன் - ஆமாம் ஐயா! போற போக்கைப் பார்த்தால் இந்த ஆள் கிளிநொச்சியில் லெக்சன் கேட்டால் வென்றுவிடுவார் போல் இருக்கு. Image may contain: one or more people Image may contain: 3 people

இன்று டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.(10.04.1898)

இன்று டாக்டர் கோவூர் அவர்களின் பிறந்த தினம்.(10.04.1898) என்றும் அவரை நினைவில் கொள்வோம்! தமிழகத்தில் தந்தை பெரியார் போன்று இலங்கையில் டாக்டர் கோவூர் அவர்களின் பணி மிகவும் போற்றத்தக்கது. என்றும் நினைவில் கொள்ள வேண்டியது. டாக்டர் கோவூர் அவர்களை நான் 1975களில் நெல்லியடி மத்திய மாகாவித்தியாலய மைதானத்தில் நடந்த “மனோ இரவு” என்னும் நிகழ்வில் கண்டேன். மேடையில் நின்ற அவர் ஏதோ சில வார்த்தைகளை கூறினார். அப்போது கீழே நிகழ்வு பார்த்தக்கொண்டிருந்த சிலர் மயங்கினார்கள். அவர்களை மேடைக்கு அழைத்து மயக்க நிலையிலேயே அவர்கள் ஆடவும் பாடவும் செய்தார். பின்னர் அவர்களின் மயக்க நிலையை போக்கினார். இதன் மூலம் “கிப்னோடிச” முறையை அவர் எமக்கு அறிமுகப்படுத்தினார். அவரது இந்த செய்கை அவரைப் பற்றி அறியும் ஆர்வத்தை எனக்கு கொடுத்தது. அப்போது அவர் இந்தியாவில் சாய்பாபாவின் புட்டபர்த்திக்கே சென்று சவால் விட்டவர் என்று எனது தந்தையார் கூறியது எனக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. சாய்பாபாவின் புட்டபர்த்தி வாசலில் நின்று அங்கு வந்த பக்தர்களுக்கு பாபா போன்று விபூதி எடுத்துக் கொடுத்தாராம் கோவூர் அவர்கள். அப்பாவி பக்தர்கள் இவர் இன்னொரு பாபா என்று நினைத்து அவரை வழிபட்டார்களாம். அவர்களிடம் கோவூர் தான் செய்தது மந்திரம் அல்ல, வெறும் தந்திரமே என்றும் பாபாவும் இதையே செய்வதாகக் கூறினாராம். பக்தர்களுக்கு தனது மோசடிகள் தெரிந்துவிடுமோ என அஞ்சிய பாபா தனது செல்வாக்கு மூலம் பொலிசாரைக் கொண்டு கோவூரை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினாராம். மந்திரத்தால் தாலி வரவழைக்கும் பாபா மந்திரத்தால் “கொண்டா” மோட்டார் சைக்கிள் வரவழைத்துக் காட்டுவாரா? என்பதே கோவூர் பாபாவுக்கு விட்ட சவால். அதை பாபா ஒருபோதும் நிறைவேற்றவில்லை. கோவூர் பற்றி மேலும் அறியும் எனது ஆர்வம் அவரது “மனக் கோலங்கள்”, “கோர இரவுகள்” என்னும் புத்தகங்களைப் படிக்க வைத்தன. இவை வீரகேசரி பிரசுரமாக அன்று வெளியிடப்பட்டவை. அதிக அளவில் விற்கப்பட்டவை. இதில் அவர் தான் சிகிச்சை அளித்த நோயாளிகளின் கதைகளைக் கூறியிருக்கிறார். பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நோயாளிகளை அவர் தனது கிப்னோடிச சிகிச்சை மூலம் சுகப்படுத்தியிருக்கிறார். இந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அவர் அயராது பகுத்தறிவு பிரச்சாரம் செய்திருக்கிறார். இன்றும் இலங்கையில் மட்டுமல்ல எம்மவர்களுக்கு லண்டன், கனடாவிலும் பேய் பிசாசு பிடிக்கிறதாம். இங்கும் பில்லி சூனிய கூத்துகள் அரங்கேறுகின்றன. எனவே இதற்கு எதிராக ஆயிரம் கோவூர்களின் பணி அவசியமாகிறது. Image may contain: one or more people, beard and sunglasses

ஒருவன் திருடினால் அவன் கைகள் வெட்டப்பட வேண்டும்.

ஒருவன் திருடினால் அவன் கைகள் வெட்டப்பட வேண்டும். அதுவே அவன் பசிக்காக திருடியிருந்தால் வெட்டப்பட வேண்டியது அவன் கைகள் அல்ல, ஆட்சியாளர்களி-ன் கைகள் . இந்த நபர் தன் நோயாளி மனைவிக்காகவும் பிள்ளைகளுக்காகவும் பசியைப் போக்குவதற்காக பத்து தேங்காய்களை திருடியிருக்கிறார். அதற்காக லைற் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தப்பட்டது மட்டுமல்ல அவர் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது. இந்த இலங்கை அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு சட்டத்தைப் போடுகிறதேயொழிய ஏழை மக்களின் பசியைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவெனில் இந்த திருடர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். சிங்களப் பிரதேசத்தில் இது நடைபெற்றுள்ளது. அதாவது சிங்கள இனத்திற்காக ஆட்சி அமைத்திருப்பதாக கூறிய கோத்தபாயாவினால் சிங்கள மக்களுக்குகூட எதுவுமே செய்யவில்லை என்பதுதான். எநத இன மக்கள் தங்கள் மீட்பனாக இந்த ராஜபக்ச கும்பலை நினைத்தார்களோ அந்த சிங்கள இன மக்களே விரைவில் இவர்களை விரட்டி அடிப்பார்கள். இது உறுதி. Image may contain: one or more people and people standing

கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி

கான மயில் ஆட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் - தானும்தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலுமே பாலித பெருமாவைப் பார்த்து மாவையார் செய்த உதவி. •தேர்தலுக்காக இந்த உதவிகளை மாவையார் செய்யவில்லை என்று நம்புவோம் •இனியும் தொடர்ந்து இவ்வாறு உதவிளை மாவையார் செய்வார் என்று நம்புவோம் •மாவையார் செய்யும் இவ் உதவிகள் மற்ற தமிழ் தலைவர்களுக்கு ஒரு உந்துதலைக் கொடுக்கும் என்று நம்புவோம். நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை! குறிப்பு - மாவையாரின் விசுவாசி ஒருவர் மாவையாரின் இப் படத்தை அனுப்பி பதிவு போட முடியுமா என கேட்டிருந்தார். அவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக எழுதப்பட்ட பதிவு இது. இனி என்னிடம் இப்படி கேட்கமாட்டார் என நம்புகிறேன். Image may contain: 2 people, people standing and outdoor Image may contain: 2 people, people sitting

கோத்தாவின் இனவாத கொரோனா!

கோத்தாவின் இனவாத கொரோனா! கொரோனா தொற்று ஏற்டபட்டுவிடும் என்ற அச்சத்தில் கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதில் ஒரு தமிழ் கைதிகூட விடுதலை செய்யப்படவில்லை என தெரிய வருகிறது. கொரோனாவில்கூட இனவாத அரசியல் செய்யும் கோத்தாவிடம் இருந்து தமிழ் மக்களுக்கு தீர்வு வரும் என நம்புவர்களை என்னவென்று அழைப்பது? அல்லது, இந்த கோத்தாவிடமிருந்து தமிழ் மக்களுக்குரிய தீர்வை பிரதமர் மோடி பெற்று தருவார் என்று கூறுபவர்களை என்னவென்று அழைப்பது? Image may contain: one or more people and people standing

தோழர் மாறனை நினைவு கூருவோம்!

•தோழர் மாறனை நினைவு கூருவோம்! 11.04.2020 தோழர் மாறனின் 32 வது ஆண்டு நினைவு தினம் ஆகும். தோழர் மாறன் சென்னையில் பிறந்தவர். அவர் ஒரு பட்டதாரி. அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல வேலை பெற்று வசதியாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தமிழ் இன விடுதலைக்காக தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்நாடு விடுதலைப் படையில் செயற்பட்டார். இறுதியில் தமிழ் மக்களுக்காக 11.04.1988 யன்று மரணம் அடைந்தார். 1987ல் இலங்கை சென்ற இந்திய இரணுவம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தது. தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தது. தமிழ் மக்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை நாசமாக்கியது. இந்திய ராணுவத்தின் இந்த அக்கிரமங்களை அமைதிப் பணி என இந்திய தொலைக்காட்சி பொய்ப் பிரச்சாரம் செய்தது. தோழர் தமிழரசன் அமைத்த தமிழ்நாடு விடுதலைப்படையானது இந்திய அரசின் பொயப் பிரச்சாரத்தை அம்பலப்படுத்து முகமாகவும் இலங்கையில் இருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெறக் கோரியும் கொடைக்கானல் டி.வி டவருக்கு வெடி குண்டு வைத்தது. அந்த சம்பவத்திலேதான் தோழர் மாறன் வீர மரணம் அடைந்தார். தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் மாறன் ஈழத் தமிழர்கள் மீது பேரன்பு கொண்டவர். ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இறுதியாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குண்டு வைத்த போது வீர மரணம் அடைந்தார். இவ்வாறு தன் உயிரை ஈழத் தமிழர்களுக்காக அர்ப்பணித்த தோழர் மாறன் நினைவுகள் ஈழப் போராட்ட வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும். தோழர் மாறன் அவர்களுடன் நான் பழகிய நாட்கள் குறைவு. இருப்பினும் அந்த இறுதி நாட்களில் அவருடன் அதிகம் பழகும் வாய்ப்பு எனக்கு கிட்டியிருந்தது. அவருடைய தோழமையான உறவு என்றும் மனதில் இருப்பவை. அவை மறக்க முடியாதவை. தியாகி முத்துக்குமாரை அறிந்த அளவிற்கு தோழர் மாறனை ஈழத் தமிழர்கள் அறியாமல் இருப்பது வருத்தத்திற்குரிய விடயமே. .இனிமேலாவது தோழர் மாறன் அவர்களின் அர்ப்பணிப்பை ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். தோழர் மாறன் நினைவை போற்றுவோம். அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எமது அஞ்சலிகளை செலுத்துகிறோம். Image may contain: 3 people, including தமிழ்நேயன் தமிழ், text

• முட்டாள் அரசு!

• முட்டாள் அரசு! இலங்கை அரசு தேர்தலை இலக்கு வைத்து செயற்படுகிறதேயொழிய உண்மையில் மக்கள் நலன் கொண்டு செயற்படவில்லை. கொரோனாவுக்கு 7 பேர் மட்டுமே இறந்துள்ளதாகவும் 19ம் திகதி யாவும் சுமூக நிலைக்கு வந்தவிடும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவிக்கிறார். ஆனால் உண்மையில் 45000பேர் கொரோனா தொற்று சந்தேக நபர்கள் இருப்பதாக ராணுவ புலனாய்வு தகவல்கள் கூறுகின்றன. இதில் ஒருநாளைக்கு 350 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. அந்தளவில்தான் வசதிகள் இருக்கின்றன. இப்போதுதான் இந்த கோரோனா தொற்றை பரிசோதிக்கும் 4000 கருவிகளை சீனா வழங்கியுள்ளது. அதிலும் 2000 கருவிகள்தான் இன்று வந்துள்ளன. ஏற்கனவே கொரோனா தொற்று பரிசோதிக்கப்பட்ட சிலருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே ஒருவருக்கே இரண்டு அல்லது மூன்று தடவை பரிசோதனை செய்யப்பட வேண்டியுள்ளது. இதுதான் உண்மை நிலை. ஆனால் இந்த உண்மையை மறைத்து தான் கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்கிறது இலங்கை அரசு. பருப்பும் மீன் ரின்னும் கட்டப்பாட்டு விலையில் விற்க வேண்டும் என இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் கடைகளில் பருப்பும் மீன் ரின்னும் இல்லை. ஏனெனில் கடைக்காரர்கள் இவற்றை பதுக்கி விட்டார்கள். ஏனெனில் அவர்கள் கொள்முதல் செய்த விலையிலும் பார்க்க குறைந்த விலையில் விற்கும்படி அரசு சட்டம் போட்டுள்ளது. அதுபோல் இப்போது அரிசியை 90 ரூபாவுக்கு விற்கும்படி அரசு கூறுகிறது. இனி கடைகளில் அரிசியும்; இருக்காது. ஏனெனில் அவர்கள் அரிசியை 92 ரூபாவுக்கு கொள்முதல் செய்துள்ளார்கள். கிலோவுக்கு எந்த லாபமும் இன்றி இரண்டு ரூபா நட்டத்திற்கு விற்பனை செய்ய எந்த கடைக்காரர் முன்வருவார்கள்? எனவே அவர்கள் அரிசியை விற்காமல் பதுக்கவே செய்வார்கள். ஒருபோதும் நட்டத்திற்கு விற்பனை செய்யமாட்டார்கள். அரசு தானே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். இல்லையேல் கடைகாரர்களுக்கு மானியம் ஏதாவது வழங்க வேண்டும். ஆனால் அரசோ வெறும் சட்டத்தின் மூலம் யாவற்றையும் செய்துவிட முடியும் என முட்டாள்தனமாக நினைக்கிறது. ஒருபக்கத்தில் கொரோனா கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னொரு பக்கத்தில் பசிக் கொடுமையில் களவு, கொள்ளை , கொலைகள் அதிகரிக்கப் போகின்றன. நேற்று மட்டும் தமிழ் பகுதிகளில் மூன்று தற்கொலைகள், இரண்டு கொள்ளைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் அரசுக்கு இதுபற்றி எதுவும் கவலை இல்லை. அரசின் அக்கறை எல்லாம் தேர்தலை விரைவில் நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற வேண்டும் என்பது மட்டுமே. அரசை விமர்சிக்க வேண்டிய எதிர்க்கட்சிகள் உயிருடன் இருக்கின்றனவா என்றுகூட தெரியவில்லை. பாவம் மக்கள்! Image may contain: 1 person, standing

மார்க்ஸ் !

மார்க்ஸ் ! நீங்கள் உயிரோடு இருந்த போது ஊர் ஊராக துரத்தப்பட்டீர் நாடு நாடாக கடத்தப்பட்டீர் இன்று ஒரு புயலைப் போல வெளிப்படையாகவும் ஒரு பூகம்பத்தை போல தலைமறைவாகவும் நீங்கள் கடந்து செல்லாத ஊரேது? நாடேது? - மக்கள் பாவலர் இன்குலாப். Image may contain: தென்னரசு தென்னரசு, beard and text

•இலங்கை ஜனாதிபதி இரக்கம் காட்டுவாரா?

•இலங்கை ஜனாதிபதி இரக்கம் காட்டுவாரா? இன்று குவைத் நாட்டில் இருந்து தமிழர் ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டார். விசா இன்றி இருந்தவர்களுக்கு குவைத் அரசு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது என்றும் அவ்வாறு இருந்த இலங்கையர்கள் நாடு திரும்ப இலங்கை அரசு உதவி செய்யுமா என்று கேட்டிருந்தார். அண்மையில் கப்பல் ஒன்றில் இருந்து சிங்களவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை மீட்க ஜனாதிபதி உதவியிருந்தார். அதுமட்டுமல்ல அக் கப்பலில் இருந்த ஜேர்மன் பெண் ஒருவருக்கு சிகிச்சையளிக்கவும் மனிதாபிமானத்துடன் ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். அதற்கு முன்னர் சீனாவில் படித்துக்கொண்டிருந்த அமைச்சர் விமல் வீரவம்சவின் மகன் நாடு திரும்ப ஜனாதிபதி உதவியுள்ளார். எனவே குவைத் நாட்டில் இருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப ஜனாதிபதி மனிதாபிமானத்துடன் உதவிட வேண்டும். யாராவது தலைவர்கள் இதில் அக்கறை காட்டுவார்களா? குறிப்பு - குவைத்தில் யாராவது சிங்களவர் இருந்தால் மட்டுமே ஜனாதிபதி உதவ முன்வருவார். எனவே அங்கிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப வேறு ஏதாவது வழி தெரிந்தவர்கள் அதனை தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். Image may contain: 1 person, glasses and close-up

கடந்த வருடம் இதே நாளில் இப் பதிவை எழுதியிருந்தேன்

குறிப்பு - கடந்த வருடம் இதே நாளில் இப் பதிவை எழுதியிருந்தேன். இது இப்போதும் பொருத்தமாக இருப்பதால் மீள்பதிவு செய்கிறேன். •இங்கிலாந்து வருத்தம் தெரிவிக்க முடியுமென்றால் இந்தியா ஏன் வருத்தம் தெரிவிக்க முடியாது? ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்காக இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். முழு இந்தியர்களும் குறிப்பாக சீக்கியர்கள் உறுதியாக இருந்தமையினால் வேறு வழியின்றி இங்கிலாந்து வருத்தம் தெரிவித்துள்ளது. இப்போது எம் மத்தியில் எழும் கேள்வி என்னவெனில் இதேபோல் ஈழத் தமிழர்களை இந்திய ராணவம் படுகொலை செய்தமைக்காக இந்தியா வருத்தம் தெரிவிக்குமா? என்பதே. இந்தியா தெரிவிக்குதோ இல்லையோ ஆனால் எம்மவர்களே சிலர் ஓடிவந்து “ராஜீவ் காந்தியைக் கொன்றதை மறந்து இந்தியா எப்படி வருத்தம் தெரிவிக்கும்? என்று எழுதுவார்கள். இவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறோம். ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை செய்த ஆங்கிலேய அதிகாரியை; இங்கிலாந்துக்கே சென்று ஒரு சீக்கியா படுகொலை செய்தார். அந்த சீக்கியருக்கு இங்கிலாந்தில் மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திராகாந்தி அந்த சீக்கியரின் அஸ்தியை இந்தியாவுக்கு எடுத்து வந்து அவரை “தியாகி” என்று கௌரவப்படுத்தினார். ஆங்கிலேய அதிகாரி கொல்லப்பட்டிருந்தும்கூட இங்கிலாந்து பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருந்தாலும் அதனைக் காரணம் காட்டாமல் இந்திய பிரதமரும் ஈழத் தமிழர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். எப்படி இந்திய மக்கள் உறுதியாக இருந்தது இங்கிலாந்து பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைத்ததோ அதேபோன்று தமிழ் மக்களும் உறுதியாக இருந்து இந்திய பிரதமரை வருத்தம் தெரிவிக்க வைக்க வேண்டும். தமிழ் மக்கள் உறுதியாக இருக்க வேண்டிய அதே நேரத்தில் செய்ய வேண்டிய இன்னொரு விடயம் ராஜீவ் காந்தியைக் கொன்ற தானுவின் அஸ்தியை எடுத்து வந்து அவரைக் “தியாகி” என்று கௌரவப்படுத்த வேண்டும். இந்திராகாந்தி எப்படி ஆங்கிலேய அதிகாரியைக் கொன்ற சீக்கியரை கௌரவப்படுத்தினாரோ அதே போன்று தமிழ் மக்களும் தானுவைக் கௌரவப்படுத்த வேண்டும். Image may contain: 1 person, text

•யார் இந்த தோழர் தமிழரசன்?

•யார் இந்த தோழர் தமிழரசன்? 14.04.1945 யன்று பிறந்த தோழர் தமிழரசன் 01.09.1987 யன்று தனது 42வது வயதில் தமிழக உளவுப்படையினரால் கொல்லப்பட்டார். அவர் உயிரோடு இருந்திருந்தால் 14.04.2020 யன்று தனது 75 பிறந்தநாளைக் கொண்டாடியிருப்பார். பொறியியல் படிப்பை படித்த தமிழரசன் விரும்பியிருந்தால் மற்றவர்கள் போல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரோ மக்களுக்கான போராட்ட வாழ்வை விரும்பி ஏற்றார். அதனாலேயே அவர் அடித்துக் கொல்லப்பட்டார். தன் உயிர் பிரியும் அந்த இறுதிக் கணத்தில்கூட அவர் மக்களை நேசித்தார். அதனாலேயே அவர் தன் கையில் இருந்த ஆயுதங்களை பயன்படுத்தாமல் மௌனித்தார். அவர் விரும்பியிருந்தால் கையில் இருந்த கிரினைட் குண்டை வீசி தப்பிச் சென்றிருக்க முடியும். அவர் நினைத்திருந்தால் கையில் இருந்த சப் மிசின்கன் மூலம் பலரை சுட்டுக் கொன்றிருக்க முடியும். தன் இறுதிக்கணம்வரை மக்களை நேசித்த அத் தமிழரசனை, சதி செய்து கொன்றவர்கள் அவரை “பயங்கரவாதி” என்றார்கள். தோழர் தமிழரசனைக் கொன்றதன் மூலம் அவர் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையை நசுக்கிவிட முடியும் என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் 30 ஆண்டுக்குள் தமிழக மக்களே தோழர் தமிழரசனையும் அவர் முன்வைத்த தமிழ்நாடு விடுதலையையும் உணர்ந்து கொள்வார்கள் என்று அவர்கள் நினைத்திருக்கமாட்டார்கள். இன்று இந்திய அரசுக்கு எதிராக போராடும் ஒவ்வொரு தமிழக இளைஞனும் தன்னை தோழர் தமிழரசனாகவே நினைத்துக்கொள்கிறான். இன்று யாரும் தோழர் தமிழரசனை மறுத்து விட்டு தமிழ்த் தேசியம் பேசிவிட முடியாது. இதுதான் தோழர் தமிழரசனுக்கு கிடைத்த வெற்றியாகும். இன்று சிலர் தேர்தல் பாதை மூலம் தமிழ்த் தேசிய விடுதலை அடைய முடியும் என நம்புகிறார்கள். இன்னும் சிலர் தமிழன் ஒருவர் முதலமைச்சரானால் தமிழ்த் தேசிய விடுதலை பெற முடியும் என நம்புகிறார்கள். வெகுவிரைவில் இவர்களும் தோழர் தமிழரசன் முன்வைத்த ஆயுதம் ஏந்திய மக்கள் யுத்தப்பாதை மட்டுமே தமிழ்த்தேசிய விடுதலையை பெற்றுத் தரும் என்பதை உணர்ந்து கொள்வார்கள். குறிப்பு- தோழர் தமிழரசன் பற்றி மேலதிக விபரம் அறிந்துகொள்ள விரும்புவோர் நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்ற நூலைப் படியுங்கள் Image may contain: தமிழ்நேயன் தமிழ், text

இந்திய அரசு ஏன் தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது?

இந்திய அரசு ஏன் தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது? தோழர் தமிழரசன் தமிழ்நாடு தனிநாடாக விடுதலை அடைய வேண்டும் என்று கூறியதால் இந்திய அரசு அஞ்சுகிறது என்கிறார்கள். அப்படியென்றால், வேறு பலர் தமிழ்த் தனிநாடு கேட்டிருக்கும்போது தமிழரசன் மீது மட்டும் ஏன் அஞ்சுகிறது? என்று கேட்டால் தமிழரசன் தனிநாடு கேட்டது மட்டுமன்றி அதை அடைய ஆயுதப் போராட்ட பாதையை தேர்ந்தெடுத்தமையே காரணம் என்று பதில் தருகிறார்கள். அப்படியென்றால,; பல கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறிவரும்போது ஏன் தமிழரசன் மீது மட்டும் அஞ்ச வேண்டும்? என்று கேட்டால், மற்ற கம்யுனிஸ்ட் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே புரட்சி என்று கூறினாலும் அவர்கள் தேர்தல் பாதையில் பயணிக்கின்றனர். ஆனால் தமிழரசன் தேர்தல் பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டத்தை நடைமுறையில் கொண்டிருந்தார். இதுவே தமிழரசன் மீது மத்திய மாநில அரசுகள் அஞ்சுவதற்கு காரணம் என்கிறார்கள். ஆம். உண்மைதான். அதனால்தான் இந்திய அரசு தனது உளவுப்படைகள் மூலம் சதி செய்து தோழர் தமிழரசனைக் கொன்றது. ஆனாலும் தமிழரசன் இறந்து 30 வருடங்களுக்கு பின்னரும் இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது. தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுப்பவர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது. சிறையில் அடைத்தவர்களுக்கு 5 வருடங்களாகியும் ஜாமீன்கூட வழங்க மறுத்து வருகிறது. தோழர் தமிழரசன் போஸ்டர் ஒட்டினால் பொலிசை விட்டு கிழிக்கிறது. கூட்டம் போட அனுமதி கேட்டால் தர மறுக்கிறது. தோழர் தமிழரசன் பற்றி புத்தகம் எழுதினால் மிரட்டுகிறது. புத்தகத்தை வெளியிடுபவர்களை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது. தமிழ்நாடு விடுதலைப்படைப் போராளி காலம்சென்ற தோழர் பசுபதி வீட்டுக்குச்;சென்று அவரின் வயதான தாயாரைக்கூட பொலிசார் மிரட்டியுள்ளனர். தோழர் தமிழரசனுக்கு சிலை வைக்க நிலம் வழங்கக்கூடாதென்று அந்த வயதான தாயாரிடம் மிரட்டி கையொப்பம் வாங்கியுள்ளனர். ஏன் இந்தளவு தூரத்திற்கு இந்திய அரசு தோழர் தமிழரசனுக்கு அஞ்சுகிறது? ஏனெனில் தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார். அவரிலிருந்து ஆயிரக் கணக்கான தமிழரசன்கள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவே இந்திய அரசு அஞ்சுவதற்கு காரணமாகும்! Image may contain: தமிழ்நேயன் தமிழ்

•கிருத்தவ போதகர் சற்குணமும்

•கிருத்தவ போதகர் சற்குணமும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனும்! இருவரும் கிறிஸ்தவர்கள். இருவரும் கொரோணா நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்றவர்கள். போரிஸ் ஜோன்சன் தன்னை மருத்துவர்களே காப்பாற்றினார்கள் என்றும் தான் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் போதகர் சற்குணம் தன்னை கடவுள் இயேசு காப்பாற்றியதாகவும் அதனால் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். உண்மைதான். மருத்துவர்கள் சிகிச்சை வழங்கும் அத்தனை பேரும் பிழைப்பதில்லையே. எந்தளவு மருத்துவம் வழங்கினாலும் சிலர் சாகிறார்கள்தானே. எனவே தன்னை கடவுள்தான் காப்பாற்றினார் என்று கூறுவதற்கு போதகர் சற்குணத்திற்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் இங்கு எழும் கேள்வி என்னவெனில் இந்த போதகர் சற்குணம் உண்மையில் கடவுள் இயேசுவை நம்பகிறாரா என்பதே. ஏனெனில் கடவுள் தன்னை காப்பாற்றுவார் என்று உண்மையில் இவருக்கு நம்பிக்கை இருக்குமெனில் இவர் மருத்தவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்க வேண்டியதில்லை. அதுவும் நோய்களுக்கு ஆவிகளே காரணம் என்றும் அதற்கு சிகிச்சை தேவையில்லை ஜெபம் போதும் என்று மற்றவர்களுக்கு போதித்து வந்த போதகரே தனக்கு நோய் வந்தவுடன் மருத்துவமனை ஓடிச்சென்று சிகிச்சை பெற்றிருப்பது ஆச்சரியமே. இந்த போதகர் மட்டுமல்ல அனைத்து மத கடவுள் நம்பிக்கையாளர்கள் எல்லோரும் நடைமுறையில் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவே செயற்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் கடவுள் எழுதிய விதிதான் காரணம் என்று நம்புவர்கள்கூட றோட்டைக் கடக்கும்போது கடவுள் விதியை நம்பி கடப்பதில்லை. மாறாக றோட்டு விதிப்படி சிக்னல் லைற்றை நம்பியே கடக்கிறார்கள். தனக்கு நோய் வந்தவுடன் ஒடீச் சென்று மருத்தவமனையில் சிகிச்சை பெற்ற போதகர் சற்குணம் மீண்டும் என்ன நம்பிக்கையில் மக்களை ஜெபம் செய்ய அழைக்கிறார்? கிளியை வைத்து சம்பாதித்தவனுக்குத்தான் தெரியும் அவனின் மூலதனம் கிளி அல்ல மக்களின் மூடத்தனமென்பது. அது போல போதகர் சற்குணத்திற்கு நன்கு தெரியும் ஜெபம் செய்வதால் நோய் மாறாது என்றாலும் மக்களை மூடநம்பிக்கையில் இருந்து வெளிவர விடாமல் அவர்களை முட்டாளாக வைத்திருக்க உதவும் என்று. மீண்டும் சொல்கிறோம் போதகர் சற்குணம் முட்டாள் அல்ல அயோக்கியன். அவர் மக்கள் மத்தியில் முட்டாள்தனத்தை பரப்புவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. Image may contain: 1 person, beard, glasses and close-up Image may contain: 1 person, suit and close-up

அன்பான தமிழ் மக்களே!

அன்பான தமிழ் மக்களே! சித்திரையல்ல தமிழர் புத்தாண்டு. தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு. இதையே இனி வழக்கமாக்கி கொள்வோம். Image may contain: one or more people and text

க்களோடு சேர்ந்து உண்ணுங்கள்

மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள் மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் மக்களோடு சேர்ந்து உழையுங்கள் என்றார் மாபெரும் ஆசான் தோழர் மா சேதுங் ஆனால் நீங்களோ, சொகுசு பங்களாவில் உறங்குகிறீர்கள் இந்திய தூதுவருடன் சேர்ந்து குடிக்கிறீர்கள் ரணிலை ஆட்சியில் அமர்த்த உழைக்கிறீர்கள். பரவாயில்லை. பாலிதபெரும தமிழர்களின் தலைவராக வேண்டும் என்று நாம் விரும்பவில்லை. நீங்கள் அவரைப் போல் தமிழருக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதானே விரும்புகிறோம். அவ்வாறு உங்களுக்கு வோட்டு போட்ட மக்கள் விரும்புவது தவறு இல்லைத்தானே ஐயா? ஜனாதிபதி அறிவித்த தனிமைப்படுத்தலை ஒழுங்காக கடைப்பிடிக்கும் ஒரே தலைவர் நீங்கள்தான் ஐயா. இதற்காக ஜனாதிபதி உங்களை சிலவேளை பாராட்டக்கூடும் ஆனால் தமிழ் மக்கள் “ கொரோனாவில் கூட இந்த கிழடு செத்து தொலையவில்லையே” என்றல்லவா திட்டப் போகிறார்கள். பாலித பெருமா போல் உங்களால் சமைக்க முடியாது பாலித பெருமா போல் உங்களால் பசியால் வாடும் மக்களை தேடிச் சென்று உணவு வழங்க முடியாது முக்கியமாக பாலித பெருமா போன்று உங்களால் தரையில் நுளம்புக்கடிகளுக்கு மத்தியில் உறங்க முடியாது. ஆனால் பாலித செய்யாத ஒன்றை உங்களால் சிறப்பாக செய்ய முடியும். ஆம். உங்களால் சிறப்பாக அறிக்கை விட முடியும். அதைக்கூட இந்த நேரத்தில் ஏன் உங்களால் செய்ய முடியவில்லை ஐயா? கொரோனாவை முன்னிட்டு கைதிகளை ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார். அதில் ஒருவர்கூட தமிழர் இல்லை. கப்பலில் தவித்த சிங்கள இளைஞரை மட்டுமன்றி ஜெர்மானிய பெண் ஒருவரைக்கூட ஜனாதிபதி மீட்டு உதவுகிறார். ஆனால் கொழும்பில் தவிக்கும் மலையக தமிழர்கள் ஊர் திரும்ப உதவ மறுக்கிறார். அதுமட்டுமல்ல, குவைத் நாட்டில் இருக்கும் தமிழர்கள் எத்தனையோ தடவை கெஞ்சிக் கேட்டும் உதவ மறுக்கிறார். ஆனால் அமைசர் விமல் வீரவம்சவின் மகனள் சீனாவில் இருந்து திரும்ப உதவுகிறார். இந்தியா, சீனா நாடுகள் பல உதவிகள் வழங்கியுள்ளன. இதில் தமிழருக்குரிய பங்கை ஜனாதிபதி வழங்க மறுக்கிறார். இவ்வாறு கொரோனோவில்கூட ஜனாதிபதி இனவெறியுடனேயே செயற்படுகின்றார். இதனை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டியது அவசியம் என்றோ அல்லது அது உங்கள் கடமை என்றோ உங்களுக்கு ஏன் தோன்றவில்லை ஐயா? சரி. பரவாயில்லை. ஜனாதிபதியைக் கண்டிக்க உங்களுக்கு தைரியம் இல்லை என்றால் இந்திய தூதுவரிடம் கூறி தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவாவது வழி செய்திருக்கலாமே ஐயா? இதை எதையுமே செய்யாமல் இருந்துவிட்டு அப்புறம் எந்த முகத்தோடு வந்து தேர்தலில் வோட்டு கேட்கப் போகின்றீர்கள் ஐயா? Image may contain: one or more people and beard Image may contain: 1 person

அன்னை பூபதியின் மரணம்!

•அன்னை பூபதியின் மரணம்! நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? அன்னை பூபதி தனது 56 வயதில் 19.03.1988 யன்று உண்ணாவிரதம் ஆரம்பித்தார். சரியாக ஒரு மாதம் கழித்து 19.04.1988 யன்று அவர் மரணமடைந்தார். அன்னைபூபதி ஒரு சாதாரண தமிழ்பெண். அவர் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. காந்தி காட்டிய அகிம்சை வழியில் போராடினார். ஆனாலும் காந்தி தேசம் என்று கூறப்பட்ட இந்திய அரசு அவரின் போராட்டத்தை கொஞ்சம்கூட மதிக்கவில்லை. மாறாக அவரின் கணவர் மற்றும் பிள்ளைகளை கைது செய்து மிரட்டியது. இவ்வாறு அன்னை பூபதியைக் கொன்றவர்கள் இப்போது கொஞ்சம்கூட வெட்கம் இன்றி வடக்கு கிழக்கில் 20 காந்தி சிலைகளை நிறுவுகிறார்கள். ஆனால், அன்னை பூபதி தன் மரணத்தின் மூலம் எமக்கு இரண்டு பாடங்களை கற்பித்துள்ளார். முதலாவது, இந்திய அரசை ஈழத் தமிழர்கள் ஒருபோதும் நம்பக்கூடாது. இரண்டாவது, அகிம்சை போராட்டம் தீர்வை பெற்று தராது என்பது. இந்த இரண்டு பாடங்களையும் நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. எப்போதும் நினைவில் கொள்ளல் வேண்டும். இதுவே அன்னை பூபதிக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும். குறிப்பு - இன்று (19.04.2020) அன்னை பூபதியின் 32வது நினைவு தினம் ஆகும். Image may contain: 1 person, possible text that says 'தியாகி அன்னை பூபதி 19.04.1988 காந்திதேசத்திடம் சாகும் வரை உண்ணாநிலையிலிருந்து உயிர்நீத்தவர்'

•கொரோனோவும் கடவுளும்!

•கொரோனோவும் கடவுளும்! கொரோனோ பல கேள்விகளை எம் மத்தியில் எழுப்பியுள்ளது. அதில் முக்கியமானது “கடவுள் எங்கே?” என்பது. ஆம். உலகில் பல கடவுள்களும் மதங்களும் இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு கடவுள்கூட மக்களை காக்க ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது. கொரோனா வந்ததும் கடவுள் வரவில்லை. மாறாக சக மனிதனே வந்தான். தம் உயிரை கொடுத்து மனிதர்களை காப்பாற்றிய உயர்ந்த மனிதர்களை இந் நாட்களில் கண்டு வருகிறோம். ஆனால் சிலர், கிருத்தவ போதகரினால்தான் யாழ்ப்பாணத்தில் கொரோனோ வந்தது என்றும் இந்தியாவில் முஸ்லிம்களால்தான் கொரோனோ பரவியது என்றும் மாறிமாறி பழி போடுகின்றனர். இவர்கள் மற்ற மதத்தவர் மீது பழி போடுவதில் குறியாக இருக்கின்றனரேயொழிய தங்களின் எல்லாம் வல்ல கடவுள் ஏன் தங்களைக் காப்பாற்ற வரவில்லை என்பதை கேள்வி எழுப்ப தயாராக இல்லை. 2013ல் அமெரிக்காவில் “கல்ரெக்” பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்; ஸ்டீபன் உரையாற்றினார். அவரது பேச்சைக் கேட்க மாணவர்கள் 12 மணி நேரம் வரிசையில் காத்து இருந்தனர். உலகில் பல மதங்களும், அவற்றின் கடவுள்களும் இருக்கின்றன. இவை பல இருந்தாலும் அவை எல்லாம் ஒருமித்த குரலில் கூறுவது “கடவுள் பூமியைப் படைத்தார்” என்பதே. ஆனால் ஸ்டீபன் அவர்கள் பெரு வெடிப்பின் மூலமே பூமி உருவானது என்றும் அந்த பெரு வெடிப்பிற்கு கடவுள் தேவையில்லை என்றும் விளக்கியுள்ளார். இது பற்றிய விபரம் அறிய விரும்புவோர் கீழ்வரும் லிங்கை பார்க்கவும். http://www.dailymail.co.uk/…/Stephen-Hawking-says-The-Big-B… அறியாமையின் இருப்பிடமே கடவுள். அறிவு வளர வளர கடவுள் சுருங்கி வருகிறார். இன்று இல்லாவிடினும் என்றாவது ஒரு நாள் அறிவின் வளர்ச்சியானது கடவுளை முற்றாக நீக்கிவிடும் என்பதை வரலாறு காட்டுகிறது. இலங்கை, இந்திய நாடுகளில் பாடசாலைகளைவிட கோயில்களின் எண்ணிக்கை அதிகம். பல்கலைக்கழகங்களைவிட கடவுள்களின் எண்ணிக்கை அதிகம். இதுவே மக்களின் அறியாமைக்கும் மதங்களினது ஆதிக்கத்திற்கும் காரணமாக இருக்கிறது. மக்கள் பகுத்தறிவு பெற வைப்பதே இந்த அறியாமையிலிருந்து விடுபட ஒரே வழியாகும். ஆனால் இந் நாடுகளின் அரசுகள் மக்களின் இந்த அறியாமையைப் போக்குவதற்கு தயாராக இல்லை. ஏனெனில், உழைத்து உழைத்து உருக்குலைந்து போயுள்ள ஏழை மக்கள் மேலெழும்ப விடாமல் நசுக்குவதற்கு இந்த மதமும் கடவுளும் அரசுகளுக்கு நன்கு உதவுகின்றன. Image may contain: 1 person, sitting

•கருணாரட்ணம் அடிகளார் என்னும் கிளி சேர் !

•கருணாரட்ணம் அடிகளார் என்னும் கிளி சேர் ! கருணாரட்ணம் அடிகளார் ஒரு கிருத்தவ பாதிரியார் என்பதும் அவர் இறுதிக் காலங்களில் வன்னியில் மனிதவுரிமை பணிகளில் ஈடுபட்டு வந்தார் என்பதும் அனைவரும் அறிந்த விடயமே. இன்று அவருடைய நினைவு தினம் ஆகும். 20.04.2008 யன்று ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரால் இவர் கொல்லப்பட்டார் என்பதும்கூட யாவரும் அறிந்த விடயமே. இங்கு நான் அனைவரும் அறிந்த கருணாகரன் அடிகளார் பற்றி எழுதப் போவதில்லை. பலரும் அறிந்திராத அவரது இன்னொரு பக்கமான கிளி சேர் பற்றியே எழுதப் போகிறேன். கிளி சேர் எனது கரவெட்டி கிராமத்தை சேர்ந்தவர். எனது அண்ணாவுடன் படித்தவர். அண்ணாவின் நண்பர். அதனால் அவரை எனக்கு சிறுவயது முதல் தெரியும். 1977 தேர்தலின்போது கிளி சேர் தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆதரித்தார். அவர்களுக்காக மும்முரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதனால் அவருக்கு பின்னர் பருத்தித்துறை இலங்கை வங்கியில் வேலை கிடைத்தது. அவர் ஊரில் லீலாரட்ணம் மாஸ்டரின் ரியூசன் சென்டரில் ஆசிரியராகவும் இருந்தார். அப்போது அவரிடம் ஆங்கிலம் பயின்றேன். அதனால்தான் நாம் அவரை “கிளி சேர்” என்று அழைத்தோம். உண்மையில் பழகுவதற்கு இனிமையானவர். வயது வித்தியாசம் பாராமல் எல்லோருடனும் பழகுவார். அனைவருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்வார். நாம் கிரிக்கட் விளையாடும்போதெல்லாம் அவர்தான் எமக்கு அம்பயராக (நடுவராக) இருப்பார். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் அவர் தன் வங்கி வேலையையும் விட்டிட்டு கிருத்தவ பாதிரியாவதற்கு படிக்க சென்று விட்டார் என்ற செய்தி அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் அவருடைய தம்பி ஞானம் என்பவர் ஏற்கனவே அவர்களுடைய வீட்டில் இருந்து கிருத்தவ பாதிரியாவதற்கு சென்றிருந்தார். ஒரே வீட்டில் இன்னொருவர் அதுவும் கிளி சேர் சென்றது உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வேளையில் ஒருநாள் இராணுவம் யாழ் நகர வீதியில் சென்ற பலரை சுட்டுக் கொன்றது. அதில் கிளி சேரும் எதிர்பாராத விதமாக சுடப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களின் உடலை ராணுவம் தன் வண்டியில் எடுத்துச் சென்று முகாமில் எரிக்க திட்டம் போட்டிருந்தது. அவ்வாறு எடுத்துச் செல்லும்போது கிளி சேர் உடலில் உயிர் இருப்பதைக் கண்ட ராணுவ வீரன் ஒருவன் அவர் கழுத்தில் தொங்கிய சிலுவை மாலையை கண்டு ( ஒருவேளை அவ் ராணுவ வீரனும் கிருத்தவராக இருக்கக்கூடும்) அவரை இழுத்து வீதியில் எறிந்து விட்டு சென்று விட்டான். கழுத்தில் சூடுபட்டு உயிருக்காக போராடிக் கொண்டிருந்த கிளி சேரை ஊர் மக்கள் எடுத்துச் சென்று யாழ் மருத்தவ மனையில் சேர்த்தனர். அப்போது இதையறிந்த நான் மருத்துமனை சென்று அவரை பார்வையிட்டேன். தான் கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டதாக அவர் கூறினார். கழுத்தில் சூடு பட்டதால் அவரால் சரியாக பேச முடியவில்லை. மிகவும் கஸ்டப்பட்டே பேசினார். ஆனாலும் அவர் பேசினார். ஏனெனில் நான் அப்போது இயக்கத்தில் சேர்ந்து விட்டதை அவர் அறிந்திருந்தார். அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு “ உனக்கு இயக்கம் வேண்டாம். நீ போராட வேண்டாம். நீ படி. படிப்பை விட்டுவிடாதே” என்று கேட்டார். நான் அவர் மனது வேதனைப்படக்கூடாது என்பதால் “சரி பார்க்கலாம்” என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். ஆனால் இதுதான் எனக்கும் அவருக்குமான கடைசி சந்திப்பாக இருக்கப் போகிறது என்று நான் அப்போது நினைக்கவில்லை. அதன் பிறகு அவரை நான் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவர் வன்னியில் போராட்டத்திற்கு ஆதரவாக மனிதவுரிமை பணிகளில் ஈடுபடுவதாக அறிந்தேன். எனக்கு அவரது பணி ஆச்சரியம் தரவில்லை. எனெனில் அவரது சுபாவமே அதுதான். யாராவது அவர் கண் முன்னால் வேதனைப் பட்டால் அவரால் பொறுக்க முடியாது. அத்தகையவரை ராணுவம் கண்ணிவெடி வைத்து கொன்று விட்டதை அறிந்தபோது உண்மையிலே மிகவும் கவலை அடைந்தேன். எனக்கு அவரிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருந்தது. ஒருவேளை இறுதிக் காலங்களில் அவரை நான் சந்தித்திருந்தால் நான் போராட புறப்பட்டது பற்றி என்ன கூறியிருப்பார்? “சரிதான்” என்று ஒத்துக் கொண்டிருப்பார் என்றே நம்புகிறேன். குறிப்பு - கருணாரட்ணம் அடிகளார் ஒரு பயங்கரவாதி என்றும் அவரை ராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி குண்டு வைத்து கொன்றது சரிதான் என்றும் இலங்கை அரசு கூறுகிறது. அது சரி, “பயங்கரவாதி” என்றால் என்ன? (மீள் பதிவு) Image may contain: Thamarai Shelvaraajah, sitting

சொன்னா கேளு தம்பி!

சொன்னா கேளு தம்பி! ஊரடங்கு சட்டம் நீக்கினாலும் வெளியில வராத தம்பி அடுத்த தெருவில சுமந்திரனின் ஆட்கள் நிற்கிறாங்கள் சம்பந்தர் ஐயா வந்து பத்து லட்சம் ரூபாவுக்கு நிவாரணம் வழங்கியதாக படம் காட்டிக்கொண்டு நிற்கிறாங்கள். அதைக் கேட்டா உனக்கு கார்ட் அற்றாக் வந்துவிடும் . அப்புறம் நீ உயிரோட வீடு போய் சேர முடியாது. Image may contain: 1 person, standing and outdoor Image may contain: 1 person

தோழர் தீரன் திருமுருகனை உடனே விடுதலை செய்!

•தமிழக அரசே! தோழர் தீரன் திருமுருகனை உடனே விடுதலை செய்! தோழர் தீரன் திருமுருகன் ஒரு வழக்கறிஞர். ஆனாலும் அவரை எந்தவித முன்னறிவித்;தலும் இன்றி தமிழக காவல்துறை பிடித்துச் சென்றுள்ளது. தோழர் தீரன் திருமுருகன் ஒரு சிறந்த தமிழ்த்தேசிய உணர்வாளர். தஞ்சையில் குடமுழுக்கு தமிழில் நடைபெறக் காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். தோழர் தமிழரசன் பிறந்தநாளில் முகநூல் நேரலையில் பேசியதற்காக இவரை சிறையில் அடைக்க முயல்கிறது தமிழக அரசு. தோழர் தமிழரசன் பெயரால் மூச்சுவிட்டால்கூட அதைத் தாங்கிக்கொள்ள தமிழக அரசு தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது. அந்தளவு தூரத்திற்கு தோழர் தமிழரசன் பெயரைக் கேட்டாலே தமிழக அரசும் இந்திய அரசும் அஞ்சுகின்றன. ஆம். யாருடைய பெயரைக் கேட்டால் எதிரி அஞ்சுகிறானோ அவனே உன் இனத்தின் தலைவனாக இருப்பதற்கு தகுதியானவன். தமிழக தமிழர்களின் தலைவராக தோழர் தமிழரசன் உருவாகிறார். Image may contain: 2 people, including தமிழ்நேயன் தமிழ், possible text that says 'காவல்துறையே தோழரை விடுதலை செய்! வழக்கறிஞர் தீரன் திருமுருகன் பொதுச்செயலாளர் தமிழர் கட்சி தமிழ்த்தேச மக்கள் கட்சி'

சுமந்திரனும் சயந்தனும்

•சுமந்திரனும் சயந்தனும் பூனைக்கு மணி கட்டிய எலிகள்! மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள ராணுவவீரரின் விடுதலைக்கு எதிராக பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களின் சார்பில் சயந்தன் வழக்கு தாக்கல் செய்துள்ளார். உயர்நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள இவ் வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களின் சார்பில் சுமந்திரன் ஆஜராகவுள்ளார் எனவும் அறிய வருகிறது. உண்மையில் வழக்கறிஞர் சயந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் இப் பணி பாராட்டுக்குரியது. சர்வ அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோத்தாவுக்கு எதிராக நீதி கிடைக்கும் என நம்ப முடியாதுதான். அதுவும் சிங்கள பிரதேசத்தில் இருக்கும் நீதிமன்றில் சிங்கள நீதிபதியிடமிருந்து ஒரு சிங்கள ராணுவ வீரருக்கு எதிராக தமிழருக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகவே இருக்கும். ஆனாலும் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்திருப்பது இரண்டு விடயங்களில் முக்கியமானது. முதலாவது, கோத்தபாயாவுக்கு எதிராக அதுவும் இலங்கையில் இருந்துகொண்டே அவரை எதிர்க்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது. இரண்டாவது, கோத்தபாயாவின் முடிவுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சர்வதேசத்திற்கு காட்டப்பட்டுள்ளது. ஆம். கோத்தபாயாவுக்கு துணிந்து மணி கட்டியுள்ளார்கள் சயந்தனும் சுமந்திரனும். அவர்களுக்கு எமது பாராட்டுகள். குறிப்பு - தேர்தலில் போட்டியிடுவதற்காக ரவிராஜ் மனைவி தற்போது ஊரில் வந்து நிற்கின்றார். அவர் மூலம் அவர் கணவர் ரவிராஜ் கொலை வழக்கையும் சுமந்திரன் மேன்முறையீடு செய்ய வேண்டும். Image may contain: 4 people, people standing

ஈழத்து பெண் போராளியின் பெயரை

•ஈழத்து பெண் போராளியின் பெயரை தன் மகளுக்கு சூட்டிய தோழர் வள்ளுவன்! இங்கிலாந்தில் பெர்மிங்காம் நகரில் இருக்கும் தோழர் சாந்தன் சில தினங்களுக்கு முன்னர் எனது நலன் அறிவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது நான் அவரிடம் “தோழர் வள்ளுவன் மகள் முகநூல் வழியாக என்னுடன் தொடர்பு கொண்டுள்ளார்” என்ற விபரத்தை தெரிவித்தேன். உடனே அவர் “யார் ஊர்மிளாவா?” என்று கேட்டார். எனக்கு ஆச்சரியம். எப்படி இத்தனை வருடம் கழித்தும் கிட்டத்தட்ட 35 வருடம் கழித்தும் அப்போது மிகவும் சிறிய குழந்தையாக இருந்தவரின் பெயரை ஞாபகமாக வைத்திருக்கிறார் என்று. புலவர் கலியபெருமாளுடன் மட்டுமல்ல அவர் மகன் வள்ளுவனுடன் நானும் பழகியிருக்கிறேன். ஆனால் வள்ளுவன் மகள் பெயர் எனக்கு நினைவில் இருக்கவில்லை. அதனால் எப்படி அந்த பெயர் மறக்காமல் நினைவில் இருக்கிறது என்று சாந்தனிடம் கேட்டேன். “ஈழத்து பெண் போராளியான ஊர்மிளாவின் நினைவாகவே மகளுக்கு அப் பெயரை வைத்தேன்” என்று தோழர் வள்ளுவன் தன்னிடம் தெரிவித்ததாகவும் அதனால்தான் அப் பெயர் மறக்காமல் நினைவில் இருக்கிறது என்றும் சாந்தன் கூறினார். ஈழத் தமிழர்கள் பலருக்கே ஊர்மிளாவை தெரியாத நிலையில் தோழர் வள்ளுவன் அவர் நினைவாக தன் மகளுக்கு அந்த பெயரை சூட்டியிருப்பது உண்மையில் அவர் எந்தளவுக்கு ஈழத் தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்திருக்கின்றார் என்பதை காட்டுகிறது. ஈழத்தில் முழு நேரமாக இயக்கத்திற்கு போராடச் சென்ற முதல் பெண் போராளி என்ற பெருமை ஊர்மிளாவுக்கு உண்டு. சென்னையில் அவர் இருந்த காலத்தில் பாவலலேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் தன் வீட்டில் வைத்து பாதுகாத்துள்ளார். இந்தியாவில் இருந்து திரும்பிய சில நாட்களில் அவர் வவுனியாவில் நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்று அறிந்திருந்தேன். அவருக்கு புளட் இயக்கம் மட்டும் அந்நாளில் நினைவு முத்திரை வெளியிட்டிருந்தது. தோழர் வள்ளுவன் ஊர்மிளாவை நேரில் சந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அவர் ஊர்மிளாவின் நினைவாக தன் மகளுக்கு அப் பெயரை சூட்டியிருக்கிறார் என்பது அவர் எந்தளவு ஆழமாக ஈழப் போராட்டத்தை நேசித்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. தோழர் வள்ளுவன் அவர்களை என்றும் நினைவில் கொள்வோம். குறிப்பு - இன்று தோழர் வள்ளுவன் அவர்களின் பிறந்த தினம் ஆகும். Image may contain: 2 people, glasses

•மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்கள் பிறந்த தினம்! (22.04.1870)

•மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்கள் பிறந்த தினம்! (22.04.1870) நூலகங்களில் உறங்கி கிடந்த மாக்சியத்தை ருஸ்சியப் புரட்சி மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டியவர்; தோழர் லெனின் ருஸ்சிய பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமைதாங்கி ருஸ்சிய புரட்சியை வென்றெடுத்து உலகப் பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தந்தவர் தோழர் லெனின் முதலாளி வர்க்க கொடுமைகளை ஒழிக்க பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப்பிடிக்க ஆயுதப் போராட்டத்தின் மூலமான புரட்சி அவசியம் என நிரூபித்தவர் தோழர் லெனின் தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று உலகப்புரட்சி பேசிய ரொக்ட்சியை தத்துவார்த்த ரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் தோற்கடித்தவர் தோழர் லெனின் தன் வாழ்நாள் முழுவதும் திரிபுவாதிகளை அம்பலப்படுத்தியவர் தோழர் லெனின். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகப் பாட்டாளிவர்க்க ஜக்கியத்திற்கு வழி அமைத்தவர் தோழர் லெனின் தேசிய இனப்பிரச்சனைக்கு சுயநிர்ணய உரிமையை தீர்வாக முன்வைத்து சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவர் தோழர் லெனின் இறந்தும்கூட எதிரிகளுக்கு சிம்ம சொப்பனாக விளங்குகிறார் தோழர் லெனின். அதனால்தான் ருஸ்சிய அருங்காட்சியத்தில் இருக்கும் அவர் உடலை அழித்து புதைக்க வேண்டும் என்று எதிரிகள் கோருகிறார்கள். உலகம் உள்ளவரை தோழர் லெனின் பாட்டாளி வர்க்கத்தால் மட்டுமன்றி தேசிய இனங்களினாலும் நன்றியுடன் நினைவு கூரப்படுவார். மாபெரும் ஆசான் தோழர் லெனின் முன்வைத்த புரட்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படும். Image may contain: 1 person

தோழர் லெனினும் பிரதமர் மோடியும்

தோழர் லெனினும் பிரதமர் மோடியும் ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனினை சந்திப்பதற்கு அமெரிக்க பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றிருந்தார். பிரதமர் அலுவலகத்தில் காத்திருந்த ரைஸ் வில்லியமுக்கு அவருக்கான சந்திப்பு நேரம் வந்திருந்தபோதும் கதவு திறக்கப்படவில்லை. இது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நேரம் தவறாமையில் மிகவும் கறாராக இருப்பவர் தோழர் லெனின். சரி, யாரோ மிக மிக முக்கிய பிரமுகர் லெனினுடம் விவாதித்து கொண்டிருக்கிறார் என்று அந்த அமெரிக்க பத்திரிகையாளர் நினைத்தார். அரைமணி, ஒரு மணி, ஒன்றரை மணி ஆயிற்று. கதவு திறக்கவில்லை. லெனினுடன் இவ்வளவு நீண்ட பேட்டிக்கு அனுமதிக்கப்பட்டு இருக்கும் முழு அதிகாரம் பெற்ற அந்த தூதர் யாரோ? என்பதே அப் பத்திரிகையாளரின் கேள்வியாக இருந்தது. கடைசியில் கதவு திறந்தது. அவரது அறையில் இருந்து வெளியே வந்தவரைப் பார்த்ததும் அனைவரும் அசந்து போய்விட்டார்கள். ஏனெனில் வெளியே வந்தவர் பரட்டைத் தலையும் அழுக்கு உடையும் கொண்ட ஒரு ஏழை விவசாயி. லெனினுடைய அறைக்குள் பத்திரிகையாளர் ரைஸ் வில்லியம் சென்றார். அவரிடம் லெனின் சொன்னார், " உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த ஏழை விவசாயி தம்போவ் பகுதியை சேர்ந்தவர். மின்சாரமயமாக்கல், கூட்டு பண்ணை அமைப்பு, புதிய பொருளாதாரக் கொள்கை ஆகியவை பற்றி அவருடைய கருத்துகளை கேட்டேன். உரையாடல் மிகவும் சுவையாக இருந்தது. இதனால் நேரத்தை மறந்துவிட்டேன்." என்று சொன்னார் இவர்தான் ரஸ்சியப் பிரதமராக இருந்த தோழர் லெனின். அதேவேளை இந்திய பிரதமராக இருக்கும் மோடியையும் நினைத்து பார்க்கிறேன். தமிழக விவசாயிகள் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க எத்தனையோ வழிகளில் எத்தனையோ போராட்டங்களை செய்தும் சந்திக்க முடியவில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமரை சந்திப்பதற்கே விவசாயிகள் போராட்டம் நடத்தும் துரதிருஷ்டவசமான நிலை இந்தியாவில்தான் உண்டு. நடிகைகளுக்கு நேரம் ஒதுக்கி சந்திக்க முடிந்த மோடியால் விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியவில்லை என்பது கொடுமைதான். முதலாளிகளுக்காக அயராது பாடுபடும் பிரதமர் மோடி விவசாயிகளுக்காக பாடுபடுவார் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்தான். ஆனாலும் லெனின் காட்டிய வழி விவசாயிகளுக்கு இருக்கிறது. அவர்கள் அதில் பயணம் செய்து மோடிகளை தூக்கி எறிவார்கள். இது நிச்சயம். அது சரி இப்போது ரஸ்சிய பிரதமராக லெனின் இருந்திருந்தால் கொரோனாவுக்கு என்ன செய்திருப்பார் என்று நினைத்துப் பார்த்தேன். நிச்சயமாக “விளக்கு பிடியுங்கள். கை தட்டுங்கள்” என்று அவர் மக்களுக்கு சொல்லியிருக்கமாட்டார். தோழர் லெனினுடன் இந்திய பிரதமரை ஒப்பிட்டுள்ளீர்கள். அப்படியே இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சாவையும் ஒப்பிட்டு இரண்டு வரிகள் கூறுங்களேன் என்று நீங்கள் சிலர் என்னிடம் கேட்க நினைக்கக்கூடும். “ம். ஒரு பெரிய பெருமூச்சு விடுகிறேன்.” எனது இந்த பதிலின் அர்த்தம் உங்களுக்கு புரியும் என நம்புகிறேன். குறிப்பு - லெனின் பிறந்த தினத்திற்கான பதிவு இது. Image may contain: 1 person, beard and close-up Image may contain: 1 person, close-up

• இன்று உலக புத்தக தினம் (23.04.2020)

• இன்று உலக புத்தக தினம் (23.04.2020) “புரட்சியில் துப்பாக்கிகளைவிடப் பெரிய ஆயுதம் புத்தகங்களே” என்று ரஸ்சிய புரட்சியை மேற்கொண்ட தோழர் லெனின் கூறினார். உண்மைதான். வாசிப்பதன் மூலமே ஒரு மனிதன் பூரணத்துவம் பெறுகின்றான். எனவே அதற்கு புத்தகங்கள் மிகவும் அவசியமாகின்றன. எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் என்றார் தோழர் சே குவாரா அதுவும் உண்மைதான் என்பதை ஈழத்தில் கண்டோம். முதலில் யாழ்ப்பாணம் நூலகம் இலங்கை அரசால் எரிக்கப்பட்டது. பின்னர் தமிழர்கள் எரிக்கப்பட்டார்கள். எமது தமிழ் சமூகத்தில் புத்தகங்களுக்கும் வாசிப்பிற்கும் கொடுக்கும் முக்கியத்துவம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் புத்தகதினம் வரும்போது இந்த புத்தக வாசிப்பிற்காக நாம் சிறப்புமுகாமில்; நடத்திய போராட்டங்களும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிறையில் அடைத்து வைத்திருப்பவர்களுக்கு பத்திரிகை வழங்கப்படுகிறது. றேடியோ கேட்க அனுமதிக்கப்படுகிறது. ரிவி பார்க்க அனுமதிக்கப் படுகிறது. புத்தகம் படிக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் துறையூரில் இருந்த சிறப்புமுகாமில் இவை எதுவுமே எமக்கு அனுமதிக்கப்படவில்லை. அன்றைய தமிழக அரசு சிறப்புமுகாமில் இவற்றை தராதது மட்டுமன்றி எமது சொந்த செலவில் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளிக்க மறுத்தது. நாம் வேறு வழியின்றி எமக்கு சாப்பாடு பார்சல் கட்டி வரும் பேப்பர்களை படித்தோம். இதனை அறிந்த கியூபிராஞ் அதிகாரிகள் உடனே எமக்கு புரியாத மலையாள பத்திரிகைகளில் சாப்பாடு கட்டித்தர ஏற்பாடு செய்தார்கள். இதனால் வேறு வழியின்றி பத்திரிகை படிக்க அனுமதிக்குமாறு கோரி 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தோம். அதன் பின்னரே அனுமதி தரப்பட்டது. எமது சொந்த செலவில் புத்தகம் படிப்பதற்கே 14 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க நேர்ந்தமையை இன்றும் நினைத்து பார்க்கிறேன். ஆனாலும் புத்தகம் படிக்கும் ஆர்வம் மட்டும் இன்னும் குறையவே இல்லை. எமது இளைஞர்கள் மத்தியில் இந்த புத்தகம் படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறதோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது. நூல்கள் வெளிவருவது குறைந்து வருகிறது. வெளிவரும் நூல்களும் மிகக் குறைந்தளவே அச்சிடப்படுகின்றது. நூல் வெளியீட்டு விழாக்களிலும்கூட சுமார் இருபது முப்பது பேர்களே கலந்து கொள்கின்றனர். அதுகூட வடையும் தேநீரும் வழங்கியே அழைக்க வேண்டியிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி புத்தகங்களின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டது போல் தோன்றுகிறது. எதுவானாலும் வாசிக்கும் பழக்கத்தை நாம் எம் மக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் வாசிப்பதன் மூலமே மனிதன் பூரணத்துவம் அடைகிறான். குறிப்பு - 1995ல் நான் துறையூர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ கீழே இணைத்துள்ளேன். Image may contain: 1 person, standing

ஜோதிகா சொன்னதில் என்ன தவறு?

•ஜோதிகா சொன்னதில் என்ன தவறு? கோயில்கள் பராமரிப்பதுபோல் பாடசாலைகள், மருத்துவமனைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்று ஜோதிகா கூறியுள்ளார். கோயில்களுக்கு நிதி உதவி அளிப்பதுபோல் பாடசாலைகள், மருத்துவமனைகளுக்கும் நிதி உதவி அளியுங்கள் என்று அவர் கேட்டுள்ளார். அவர் கோயில்கள் தேவையில்லை என்றோ அல்லது கோயில்கள் பராமரிக்கக்கூடாது என்றோ கூறவில்லை. ஆனால் வெறி பிடித்த சங்கிகள் அவர் கோயில்களுக்கு எதிராக கருத்து கூறியதுபோல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதை உணராது சில ஈழத் தமிழர்களும் இந்த சங்கிகளின் கருத்துகளை பரப்பி வருகின்றனர். ஜோதிகா இக் கருத்தைக் கூறுவதற்கு முழு தகுதியுடையவர். ஏனெனில் அவரும் அவர் கணவர் நடிகர் சூரியாவும் ஆயிரக் கணக்கான ஏழை மாணவர்கள் கல்வி கற்ற உதவி வருகின்றனர். அதுவும் தமிழகத்தில் உள்ள ஈழ அகதி மாணவர்களுககு;கூட அவர்கள் உதவி வருகின்றனர். Image may contain: 2 people

• நாம் ஏன் கடவுளை மறுக்க வேண்டும்?

• நாம் ஏன் கடவுளை மறுக்க வேண்டும்? ஏடறிந்தளவில் 2500 வருடங்களுக்கு முன்னர் கடவுள் இல்லை என்று கூறிய முதல் பகுத்தறிவுவாதி புத்தர். ஆனால் அவரையே கடவுளாக்கினது மட்டுமன்றி இப்போது அவரின் பெயரால் இலங்கையில் எம்மை அழிக்கிறார்கள். நாம் அழிக்கப்படும்போது எமது கடவுள்கள் ஒருவர்கூட எம்மைக் காப்பாற்ற வரவில்லை. எம்மைக் காப்பாற்ற வரவில்லை என்பது மட்டுமன்றி இக் கடவுள்களால் தங்கள் ஆலயங்களைக்கூட காக்க முடியவில்லை. அதுமட்டுமன்றி, வீழ்ந்து கிடக்கும் நாம் மீண்டும் எழுந்து நிற்பதற்குகூட எமது கடவுள்கள் உதவவில்லை. மாறாக, இலங்கை இந்திய அரசுகள் மேலும் எம்மை அடக்கி ஒடுக்குவதற்கே அவை உதவுகின்றன. எனவே நாம் வீடுதலை பெற்று முன்னேற வேண்டும் என்றால் அதற்கு கடவுளை மறுப்பது முன்நிபந்தனையாக இருக்கிறது. • சில கேள்விகளும் பதில்களும் (1)இந்துக் கடவுள் இல்லை என்று கூறும் நடுநிலை நக்கிகள் இயேசு இல்லை, அல்லா இல்லை என்று கூறுவார்களா? நாம், இந்துக் கடவுள் இல்லை. அல்லா இயேசு இருக்கிறார்கள் என்று சொல்லவில்லையே. மாறாக எந்தக் கடவுளும் இல்லை என்றுதானே கூறுகின்றோம். (2) எப்போதும் இந்து மதத்தையே கண்டிக்கிறீர்கள். அதுபோல் ஏன் கிருத்தவ மதத்தையோ அல்லது இஸ்லாமிய மதத்தையோ கண்டிப்பதில்லை? முதலாவது, இந்து மதத்தை கண்டிப்பதற்கு மற்ற மதங்களை எல்லாம் கண்டித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. இரண்டாவது, நாம் எம்முடைய நோய்க்குத்தான் மருந்து சாப்பிட வேண்டுமேயொழிய மற்றவர்களின் நோய்க்கு நாம் சாப்பிட முடியாது. நான் உட்பட தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். எனவேதான் அதற்கு எதிராக அதிக கண்டனங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது. (3) இந்து சமயத்திற்கு மாற்றாக சைவ சமயத்தை தமிழர்கள் உயர்த்திப் பிடிக்கலாம்தானே? மாற்றுக் கருத்து என்பது ஒரு கருத்துக்கு பதிலாக இன்னொரு கருத்தைக் கூறுவது அல்ல. மாறாக இருக்கும் தவறான கருத்துக்கு மாற்றாக சரியான கருத்தை முன்வைப்பது. இதன் மூலமே சமூகம் முன்னோக்கி இயங்க வைக்க முடியும். எனவே இந்து சமயம் என்னும் தவறான கருத்துக்கு சைவசமயம் உரிய சரியான மாற்று இல்லை. கடவள் இருக்கிறார் என்பதற்கு இன்னொரு கடவுள் இருக்கிறார் என்பது மாற்று கருத்து இல்லை. மாறாக கடவுள் இல்லை என்பதே சரியான மாற்று ஆகும். ஆதலால், முருகன் எமது பாட்டன் என்றோ அல்லது சிவன் எமது முப்பாட்டன் என்றோ உயர்த்திப்பிடிப்பது தமிழ்தேசிய விடுதலைக்கு உதவப் போவதில்லை. மாறாக இந்திய அரசுக்கே அவை மறைமுகமாக உதவப் போகின்றன. Image may contain: 3 people, text

இவர் ஏன் சிறையில் அடைக்கப்பட்டார்?

இவர் ஏன் சிறையில் அடைக்கப்பட்டார்? பஹ்ருளியில் பிறந்து குமரியில் குருத்தாகி பொதுகையில் குழந்தையாகி மதுரையில் மடந்தையாகி காவேரிக் கரையில் காலாற நடந்து கங்கைக்கரைவரை தோளோடு நிமிர்ந்து விந்திய மலைவரை வாளால் அளந்து பெருமையுடன் வாழ்ந்த எம் தமிழ் இனம் இன்று அடிமையாக வீழ்ந்து கிடக்கலாமா? என்று கேட்டார் தமிழர் தீரன் திருமுருகன் உடனே அவரைப் பிடித்து சிறையில் அடைத்துள்ளார் இன்னொரு தமிழரான எடப்பாடி. இந்தியா ஜனநாயகநாடு என்கிறார்கள். இங்கு பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்கிறார்கள் ஆனால் தமிழன் விடுதலை பெற வேண்டும் என்று பேசினால் உடனே கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். அதுவும் தோழர் தமிழரசன் பெயரை உச்சரித்தாலே இந்திய அரசும் தமிழக அரசும் அச்சம் கொள்கின்றன. முகநூலில் தமிழரசன் பெயரை உச்சரித்தமையினால் தோழர் தீரன் திருமுருகனை சிறையில் அடைத்துள்ளனர். எரிமலையை கைகளினால் தடுத்தவிட முடியுமா? தமிழரசன் பெயரை கைது மூலம் தடுத்தவிட முடியுமா? எடப்பாடிக்கு தோழர் தீரன் பதில் சொல்லியிருக்கிறார் போடா மயிரு ! Image may contain: 2 people, including தமிழ்நேயன் தமிழ், possible text that says 'காவல்துறையே தோழரை விடுதலை செய்! வழக்கறிஞர் தீரன் திருமுருகன் பொதுச்செயலாளர் தமிழர் கட்சி தமிழ்த்தேச மக்கள் கட்சி'

அகிம்சைப் போராட்டம் பயன்தராது என்பது

•அகிம்சைப் போராட்டம் பயன்தராது என்பது மீண்டும் ஒருதடவை நிரூபிக்கப்பட்டுள்ளது! துருக்கியைச் சேர்ந்த கலைஞர் முஸ்தபா கோஹக் துருக்கி அரசுக்கு எதிராக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று மரணமடைந்தார். 28 வயதேயான இந்த இளம் இசைக்கலைஞர் கடந்த 297 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளார். அவர் ஒன்றும் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை. அவர் கேட்டதெல்லாம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மீது சித்திரவதை செய்வதை நிறுத்துமாறு மட்டுமே. ஆனால் துருக்கி சர்வாதிகார அரசு அவர் கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை. அவர் உயிரையும் காப்பாற்றவில்லை. காந்தியின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதை ஈழத்தில் திலீபன், அன்னைபூபதி உண்ணாவிரதங்களின்போது கண்டோம். இந்தியா மட்டுமல்ல துருக்கியும் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காது என்பதை இன்று காண்கிறோம். முஸ்தபா கோஹக மரணம் அவர் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் அகிம்சை வழிப் போராட்டம் பயன்தராது என்பதை மீண்டும் ஒரு தடவை அது உலகிற்கு நிரூபித்துள்ளது. கடந்த 03.04.20 யன்று துருக்கியில் இதேபோன்று ஹெலின் போலக் என்ற பெண் 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார். எத்தனை பேர் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தாலும் அகிம்சைப் போராட்டத்தை துருக்கிய அரசு மதிக்கப்போவதில்லை என்பதும் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் ஒருபோதும் தீர்வு பெற முடியாது என்பதும் நிரூபணமாகியுள்ளது. குறிப்பு - ஈழத்தில் போராளிகள் ஆயுதம் எந்திப் போராடியது தவறு என்றும் அகிம்சைப் வழியில் போராடினால் தீர்வு பெறலாம் எனக் கூறிவரும் சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் இதற்கு என்ன கூறப் போகிறார்கள்? Image may contain: 1 person, flower and plant Image may contain: 1 person, standing and shoes

•என்னே அவலம் இது?

•என்னே அவலம் இது? பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அடிக்கடி கைகளைக் கழுவுங்கள் என்றார். இந்தியப் பிரதமர் மோடி கை தட்டுங்கள் விளக்கு பிடியுங்கள் என்றார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கிருமிநாசினியை செலுத்தலாம் என்கிறார். மாட்டு மூத்திரம் குடியுங்கள் என்று கூறிய இந்திய அமைச்சர் பரவாயில்லை என்று நினைக்கும் அளவிற்கு அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு இருக்கிறது. மக்கள் முட்டாள்களாக இருந்தால் அதிகாரத்திற்கு வருபவர்கள் அயோக்கியர்களாகவே இருப்பார்கள். Image may contain: 1 person, text

• என்ன நடக்கிறது யாழ்ப்பாணத்தில்?

• என்ன நடக்கிறது யாழ்ப்பாணத்தில்? நேற்று ஒரு பிரதேசசபை உறுப்பினர் அகால மரணம் என்று செய்தி வந்தது. இன்று இளம் பெண் ஒருவர் ஆகால மரணம் என்று செய்தி வந்திருக்கிறது. கடந்த மாதம்கூட ஓரே நாளில் 3 பேர் அகால மரணம் அடைந்த செய்தி வந்திருந்தது. போர் நடைபெற்ற காலத்தில்கூட இந்தளவு அகால மரண செய்தி வந்ததில்லை. இப்போது அதுவும் இளம் வயதினர் அகால மரணமடைவது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருபுறம் கொரோனோ . மறுபுறம் இவ்வாறான அகால மரணம். என்ன நடக்கிறது யாழ்ப்பாணத்தில்? சமூக தனிமைப்படுத்தல் மக்கள் மத்தியில் மன அழுத்தத்தை அதிகரிக்கிறதா? அதனால்தான் இவ்வாறான தற்கொலை முடிவுகளை எடுக்கிறார்களா? குறிப்பு - மனநல மருத்துவர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். Image may contain: 1 person, text

தொடரும் தற்கொலைகள்?

• தொடரும் தற்கொலைகள்? யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் தற்கொலைகள் பற்றிய செய்திகள் மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கின்றன. இதோ மேலும் இரண்டு முதியவர்களின் தற்கொலைச் செய்திகள் வந்துள்ளன. ஏழாலையில் ஒரு முதியவர் தனக்கு தீமூட்டி தற்கொலை செய்தள்ளார். அதேபோன்று அல்வாயில் ஒரு முதியவர் அதுவும் ஏழு பிள்ளைகளின் தந்தை தற்கொலை செய்துள்ளார். இளையவர்கள் மட்டுமன்றி முதியவர்கள்கூட தற்கொலை செய்வது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது. லண்டனில் தினமும் கொரோனாவினால் சுமார் 800 பேர் மரணமடைகின்றனர். இதுவரை இருபதாயிரம் பேர் இவ்வாறு மரணமடைந்துள்ளனர். ஆனால் இதுவரை ஒருவர்கூட லண்டனில் தற்கொலை செய்ததாக செய்தி வரவில்லை. லண்டனில் மட்டுமல்ல பிரான்ஸ் சுவிஸ் கனடா போன்ற நாடுகளில் தமிழர்களும் கொரோனாவினால் இறந்துள்ளனர். ஆனால் இங்கு வாழும் ஒரு தமிழர்கூட தற்கொலை செய்யவில்லை. இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் ஏன் இந்தளவு அதிக தற்கொலைகள் இடம்பெறுகின்றன? லண்டனில் கறுப்பர்கள் அதிகளவு இறப்பது குறித்து லண்டன் மேயர் கருத்து தெரிவித்துள்ளார். அரசும் அதுகுறித்து பொறுப்புகூட முன்வந்திருக்கிறது. அதேபோன்று இலங்கையில் தமிழர்களின் இம் மரணம் குறித்து பொறுப்புகூற இலங்கை அரசு முன்வருமா? குறைந்தபட்சம் யாராவது தமிழ் அரசியல்வாதியாவது இதன் மீது அக்கறை காட்டுவாரா? Image may contain: 1 person, standing

தமிழ்நாட்டில் படித்தவர்

தமிழ்நாட்டில் படித்தவர் தமிழ்நாட்டில் வளர்ந்தவர் தமிழ் படங்களில்கூட நடித்து வருகிறார். இருந்தும் தமிழர்களை அவமதிக்க எப்படி தைரியம் வந்தது? தமிழர்களின் உணர்வுகளை சீண்டினால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது தெரியாதா? இவர் தந்தை மம்முட்டி தமிழர் மீது மதிப்பு கொண்டவர். ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். அப்படியிருக்க இவர் என் இப்படி? குறிப்பு- இவர் செய்தது தவறுதான். ஆனால் அதற்காக சிலர் மொத்த மலையாள மக்களை; மீதும் அவதூறு செய்கிறார்கள். அதுவும் தவுறுதான். Image may contain: 1 person, dog and indoor

ஆழ்ந்த இரங்கல்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில்

ஆழ்ந்த இரங்கல்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான முருகனின் தந்தை மரணமடைந்துள்ளார். அவர் உயிருடன் இருக்கும்போது பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இப்போது இறந்த பின்பு இறுதிக் கிரியைகள் செய்வதற்கும்கூட அனுமதிக்கப்படவில்லை. தந்தையை மட்டுமல்ல லண்டனில் இருக்கும் மகளைக்கூட பார்க்க முருகனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. முருகன் ஒரு இந்து. முருகனின் தந்தை ஒரு இந்து. ஆனாலும் இந்துக்களுக்காக இருப்பதாக கூறும் இந்திய பிரதமர் மோடி முருகனுக்கு இரங்க மறுக்கிறார். ஏனெனில் முருகன் தமிழன். அதுவும் ஈழத் தமிழன். அதனால்தான் ஈழத்து தமிழ் தலைவர் சம்பந்தர் ஐயாவும் இரங்க மறுக்கிறார். சில வருடங்களுக்கு முன்னர் முருகனின் தாயார் சிறீதரன் எம்.பி மூலம் சம்பந்தர் ஐயாவை சந்தித்து முருகன் விடுதலைக்கு உதவும்படி கேட்டார். ஆனால் ஒவ்வொரு வாரமும் இந்திய தூதருடன் தண்ணியடிக்கும் சம்பந்தர் ஐயா ஒருமுறைகூட முருகனுக்காக குரல் எழுப்பவில்லை. அடுத்த தலைவராக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயாவும் இந்தியா சென்றபோது முருகனை விடுதலை செய்யும்படி கோரவில்லை. மாறாக, கொலை மற்றும் கற்பழிப்பு குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த தனது குரு பிரேமானந்த சுவாமிகளை விடுதலை செய்யும்படி கேட்டார். தனது இரு மகள்களுக்கும் இந்திய அரசின் மூலம் மருத்துவ கல்வி பெற்றுக்கொண்ட காசி அனந்தன் ஐயாவும் முருகனின் மகள் தந்தையை சந்திப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பதைக்கூட இதுவரை கோரவில்லை. ஆனால் கொஞ்சம்கூட கூச்சம் இன்றி இந்துத் தமிழீழம் கேட்டால் இந்துப் பிரதமர் மோடி உதவி செய்வார் என்று கூறிக் கொண்டிருக்கிறார். முருகன் மட்டுமல்ல மொத்த ஈழத் தமிழர்களும் பாவம். இவர்கள் கையில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். முருகனுக்கும் அவருடைய குடும்பத்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதைத் தவிர வேறு வழி தெரியாமல் பரிதவிக்கிறோம். No photo description available. Image may contain: 1 person, beard and close-up Image may contain: 1 person, close-up Image may contain: 1 person

•ஆழ்ந்த இரங்கல்கள்!

•ஆழ்ந்த இரங்கல்கள்! இப்போதெல்லாம் முகநூலுக்கு வரவே அச்சமாக இருக்கிறது. மரணமடைந்தவர்களின் பெயர்களை படிக்கும்போது பதட்டமாக இருக்கிறது. ஜெர்மனியில் வாழ்ந்துவந்த கரவெட்டியைச் சேர்ந்த கந்தசாமி மரணமடைந்தார் என்று செய்தி வந்துள்ளது. எனது ஊர் நண்பர்களில் ஒருவரான கந்தசாமியை இழந்துள்ளேன். அவருடன் அத்துளு வயல்வெளிகளில் கிரிக்கட் விளையாடியது, நெல்லியடி தியேட்டரில் படம் பார்த்தது, அம்மன் கோயிலில் காத்தவராயன் கூத்து பார்த்தது எல்லாம் மறக்க முடியாத நினைவுகள். முக்கியமாக நாம் இருவரும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். ரசிகர்கள் என்பதைவிட வெறியர்கள் என்றே கூறலாம். எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காகவே மதுரையில் நடந்த தமிழாராய்ச்ச்p மகாநாட்டிற்கு இருவரும் சென்று வந்தோம். இவ்வாறு பல நினைவுகள் இருக்கிறது. ஆனால் இவ் நினைவுகளைத் தந்த கந்தசாமி இப்போது இல்லை என்பதை நினைக்கும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது. கந்தசாமியை இழந்து தவிக்கும் குடும்பத்தவர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். Image may contain: 1 person, text

சஹ்ரான் அம்பு என்றால் அவரை எய்தவர்கள் யார்?

•சஹ்ரான் அம்பு என்றால் அவரை எய்தவர்கள் யார்? கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இலங்கையில் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதில் 250க்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணம் சஹ்ரான் என்றும் அவரும் அவருடைய கூட்டாளிகளும் இறந்துவிட்டனர் என பொலிஸ் கூறியது. ஆனால் இப்போது வெளிவரும் செய்திகள் சஹ்ரான் வெறும் அம்புதான் என்பதையும் அவரை எய்தவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகின்றன. ஒருபுறம் முன்னாள் அமைச்சர் ரிசாத்தின் பங்கு பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. இன்னொரு பக்கம் சஹ்ரானை இயக்கியவர் லண்டனில் இருக்கும் பாயிஸ் என்று செய்திகள் வெளிவருகின்றன. இவை எந்தளவுக்கு உண்மை என்று உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அது “உண்மைகள் உறங்குவதில்லை” குறிப்பு - இது பற்றிய செய்தி இணைப்பு கீழே பின்னூட்டத்தில் தந்துள்ளேன். Image may contain: 30 people, including SK Rajen

ஜோதிகா மன்னிப்பு கேட்காவிட்டால்

ஜோதிகா மன்னிப்பு கேட்காவிட்டால் தீக்குளிக்கப்போவதாக ஜீயர் அறிவித்துள்ளார். ஆனால், ஜோதிகாவின் கருத்தில் தானும் தன் குடும்பமும் உறுதியாக இருப்பதாக நடிகர் சூரியா தெரிவித்துள்ளார். எனவே ஜீயர் அவர்கள், தான் கூறியபடி நிச்சயம் தீக்குளிப்பார் என நம்புகிறோம். இவர் இதேபோன்று வயிரமுத்து ஆண்டாள் பிரச்சனையின் போதும் தீக்குளிக்கப்போவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அப்போது இவர் தீக்குளிக்கவில்லை. ஒருவேளை தீக்குளிக்க தேவையான பெற்றோல் வாங்க காசு இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே இம்முறை பெற்றோலுக்குரிய பணத்தை அனுப்பி அவர் விரும்பம் நிறைவேற உதவ வேண்டும் என நினைக்கிறோம். குறிப்பு - இம்முறை இன்னும் நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் கெட்ட வார்த்தையால் திட்டி வீடியோ விடவில்லையா? வந்தால் நல்லாய் பொழுது போகும் அல்லவா? Image may contain: 1 person, sitting and beard Image may contain: 1 person

இவர்கள் உடலில் ஊனம் இருக்கலாம்

இவர்கள் உடலில் ஊனம் இருக்கலாம் ஆனால் உள்ளத்தில் உருக்கு போன்ற உறுதி இருக்கிறது. அதனால்தான் எத்தனை இடர்கள் எத்தனை இழப்புகள் அத்தனையும் தாண்டி சாதித்து காட்டியிருக்கிறார்கள். ஒரு ஆண் ஊனமுற்றாலே ஒரு மூலையில் குந்த வைக்கும் சமூகத்தில் இந்த இரண்டு பெண்களும் துணிந்து நின்று சாதித்து காட்டியிருக்கிறார்கள். ஆம். எப்போதுமே ஈழத் தமிழ் இனத்திற்கு நம்பிக்கை தருபவர்களாக பெண்களே இருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். Image may contain: 2 people, people standing

•ஈழத்து திருநாவுக்கரசு நாயனார்

•ஈழத்து திருநாவுக்கரசு நாயனார் அல்லது, மறவன்புலவு சச்சிதானந்தம் நாயனார்! 63 நாயன்மார்களின் வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் எனக்குள் இரண்டு கேள்விகள் எழுவதுண்டு. அதாவது முதலாவது கேள்வி , இப்போதெல்லாம் ஏன் நாயன்மார் தோன்றுவதில்லை? இரண்டாவது, இந்த 63 பேரில் ஏன் ஒருவர்கூட ஈழத்தில் பிறக்கவில்லை? என் மனதிற்குள் இந்தக் கேள்விகள் இருப்பது எமது எல்லாம் வல்ல ஆண்டவருக்கு தெரிந்து விட்டதுபோலும். அதனால்தான் அதற்கு விடையாக மறவன்புலவு சச்சிதானந்தம் நாயனாரை அனுப்பி வைத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. 3வயதில் பிராமனரான ஞானசம்பந்த நாயனாரை ஆட்கொண்ட எமது ஆண்டவர் 80 வயதிலும் திருநாவுக்கரசு நாயனாரை ஆட்கொள்ளாமல் சோதித்ததாக கூறுகின்றார்கள். அதுபோல் எமது மறவன்புலவு சச்சிதானந்தம் நாயனாரையும் எமது ஆண்டவர் இந்த 80 வயதிலும் அவரை ஆட்கொள்ளாமல் மிகவும் சோதிக்கிறார். ஆனாலும் எமது ஆண்டவர் இப்போது மிகவும் இரக்கமானவராக இருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் திருநாவுக்கரசு நாயனாருக்கு சூலநோயைக் கொடுத்து சோதித்த ஆண்டவர் சச்சிதானந்தம் நாயனாருக்கு கொரோனா நோயைக் கொடுத்து சோதிக்க முனையவில்லை அல்லவா? எல்லோரும் கொரோனோவுக்கு பயந்து வீட்டுக்குள் பதுங்கியிருக்கும்வேளையில், கொரோனோவினால் இந்து மத மக்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அல்லது அக்கறை கொள்ளாமல் மத மாற்றம் குறித்து எமது சச்சிதானந்தம் நாயனாரை போராட வைத்த எமது ஆண்டவரை எப்படி புரிந்து கொள்வது? எனக்கு ஒருவிடயம் புரியமாட்டேங்குது! போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் எல்லாம் மதமாற்றம் செய்தபோதெல்லாம் அஞ்சாத எமது ஆண்டவர் இப்போது இந்த சுவிஸ் அலுலோயாக் கூறுப்புக்கு மட்டும் ஏன் அஞ்சுகிறார்? எதற்காக இந்த தள்ளாத வயதிலும் எமது சச்சிதானந்தம் நாயனாரை இந்த அலுலோயாக் கூறுப்புக்கு எதிராக போராட வைக்கிறார்? இந்த அலுலோயக் குறூப் 2 லட்சம் கொடுத்து மதமாற்றம் செய்வதாக சச்சிதானந்தம் நாயனார் கூறகிறார். அப்படியென்றால் இவர் 5 லட்சம் கொடுத்து தடுக்க வேண்டியதுதானே? அதாவது கடவுள் இயேசுவுக்கு 2 லட்சம் கொடுக்கும் சக்தி இருக்குமாயின் எமது எல்லாம் வல்ல ஆண்டவருக்கு 5 லட்சம் கொடுக்கும் சக்தி இல்லையா? அதைவிட முக்கியம், இந்த பணம் வரும் விடயத்தை விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று சச்சிதானந்தம் நாயனார் அடம் பிடிக்கிறார். இவர் கேட்டக்கொள்கின்றபடி கமிஷன் அமைத்தால் அது இவருக்கு இந்திய தூதரிடம் இருந்து பணம் வருவதையும் விசாரிக்கும் அல்லவா? இதுதான் பொல்லைக் கொடுத்து அடி வாங்குவது என்பது. இறுதியாக எமது ஆண்டவரிடம் நாம் தயவாக கேட்டுக்கொள்வது, எமது சச்சிதானந்தம் நாயனாரை சோதித்தது போதும். அவரை விரைந்து ஆட்கொள்ளுங்கள். 64வது நாயனாராக வரலாற்றில் இடம்பிடித்து ஈழத் தமிழருக்கு பெருமை சேர்க்கப்போகும்; சச்சிதானந்தம் நாயனார் புகழ் ஓங்குக! Image may contain: one or more people, people standing and outdoor