Wednesday, April 29, 2020
க்களோடு சேர்ந்து உண்ணுங்கள்
மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்
மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்
மக்களோடு சேர்ந்து உழையுங்கள்
என்றார் மாபெரும் ஆசான் தோழர் மா சேதுங்
ஆனால் நீங்களோ,
சொகுசு பங்களாவில் உறங்குகிறீர்கள்
இந்திய தூதுவருடன் சேர்ந்து குடிக்கிறீர்கள்
ரணிலை ஆட்சியில் அமர்த்த உழைக்கிறீர்கள்.
பரவாயில்லை.
பாலிதபெரும தமிழர்களின் தலைவராக வேண்டும் என்று நாம் விரும்பவில்லை.
நீங்கள் அவரைப் போல் தமிழருக்கு சேவை செய்ய வேண்டும் என்றுதானே விரும்புகிறோம்.
அவ்வாறு உங்களுக்கு வோட்டு போட்ட மக்கள் விரும்புவது தவறு இல்லைத்தானே ஐயா?
ஜனாதிபதி அறிவித்த தனிமைப்படுத்தலை ஒழுங்காக கடைப்பிடிக்கும் ஒரே தலைவர் நீங்கள்தான் ஐயா.
இதற்காக ஜனாதிபதி உங்களை சிலவேளை பாராட்டக்கூடும்
ஆனால் தமிழ் மக்கள் “ கொரோனாவில் கூட இந்த கிழடு செத்து தொலையவில்லையே” என்றல்லவா திட்டப் போகிறார்கள்.
பாலித பெருமா போல் உங்களால் சமைக்க முடியாது
பாலித பெருமா போல் உங்களால் பசியால் வாடும் மக்களை தேடிச் சென்று உணவு வழங்க முடியாது
முக்கியமாக பாலித பெருமா போன்று உங்களால் தரையில் நுளம்புக்கடிகளுக்கு மத்தியில் உறங்க முடியாது.
ஆனால் பாலித செய்யாத ஒன்றை உங்களால் சிறப்பாக செய்ய முடியும்.
ஆம். உங்களால் சிறப்பாக அறிக்கை விட முடியும். அதைக்கூட இந்த நேரத்தில் ஏன் உங்களால் செய்ய முடியவில்லை ஐயா?
கொரோனாவை முன்னிட்டு கைதிகளை ஜனாதிபதி விடுதலை செய்துள்ளார். அதில் ஒருவர்கூட தமிழர் இல்லை.
கப்பலில் தவித்த சிங்கள இளைஞரை மட்டுமன்றி ஜெர்மானிய பெண் ஒருவரைக்கூட ஜனாதிபதி மீட்டு உதவுகிறார்.
ஆனால் கொழும்பில் தவிக்கும் மலையக தமிழர்கள் ஊர் திரும்ப உதவ மறுக்கிறார்.
அதுமட்டுமல்ல, குவைத் நாட்டில் இருக்கும் தமிழர்கள் எத்தனையோ தடவை கெஞ்சிக் கேட்டும் உதவ மறுக்கிறார்.
ஆனால் அமைசர் விமல் வீரவம்சவின் மகனள் சீனாவில் இருந்து திரும்ப உதவுகிறார்.
இந்தியா, சீனா நாடுகள் பல உதவிகள் வழங்கியுள்ளன. இதில் தமிழருக்குரிய பங்கை ஜனாதிபதி வழங்க மறுக்கிறார்.
இவ்வாறு கொரோனோவில்கூட ஜனாதிபதி இனவெறியுடனேயே செயற்படுகின்றார்.
இதனை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டியது அவசியம் என்றோ அல்லது அது உங்கள் கடமை என்றோ உங்களுக்கு ஏன் தோன்றவில்லை ஐயா?
சரி. பரவாயில்லை. ஜனாதிபதியைக் கண்டிக்க உங்களுக்கு தைரியம் இல்லை என்றால் இந்திய தூதுவரிடம் கூறி தமிழ் மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவாவது வழி செய்திருக்கலாமே ஐயா?
இதை எதையுமே செய்யாமல் இருந்துவிட்டு அப்புறம் எந்த முகத்தோடு வந்து தேர்தலில் வோட்டு கேட்கப் போகின்றீர்கள் ஐயா?
Image may contain: one or more people and beard
Image may contain: 1 person
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment